Jump to content

பாலசிங்கம் நந்தபாலன் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கந்தர்மடத்தை சேர்ந்தவரும் எமது உறவினருமான பாலசிங்கம் நந்தபாலன் லண்டனில் தமது 74 ஆவாது வயதில் காலமானார். மிகவும் செல்வந்தரான (பரம்பரை பணக்காரனான அவர் லண்டனில் பல சேர்விஸ் ஸ்டேஷன்கள் வைத்திருந்தவர்)  இவர் விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இருந்தே நிறைய பண உதவி செய்திருந்தார். 2009 இற்கு பிறகு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், வறிய மக்கள், விதவையான பெண்கள் என்று பலருக்கும் பல விதமான வாழ்வாதார நிதி உதவிகளை செய்து வந்தார்.

அண்மையில் ஒரு திருமணத்தின்போது அருகில் இருந்தவர்கள் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கஷ்டத்தை கேட்டுவிட்டு, அவர்களை தொடரபு கொண்டு தேவையான உதவிகளை செய்துள்ளார். அவரது பல உதவிகளும் இப்படி நடந்தவை தான்.  சரியாகத்தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை வேண்டி போராளிகுடும்பங்களுக்கு அண்மையில் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலாக  ஒருவருக்கும் தெரியாது. அவரின் அக்கா (எமது மாமி) சொல்லித்தான் எமக்கே சிலது தெரியவரும்.  எமது தமிழ் மக்கள் நல்லாக இருக்கவேண்டும், தமிழ் பிள்ளைகள் நன்றாக முன்னேறவேண்டும், தமிழ் மக்களுக்கு நல்ல மருத்துவ உதவி கிடைக்கவேணும் என எண்ணிய நல்ல உள்ளத்தை யாழ் கள உறவுகளும் அறிந்து அவரது ஆன்மா சமாதியடைய வேண்டுகிறேன். சிவராத்திரி அன்று சிவனடி சேர்ந்த தமிழன்.

அமரர் நந்தபாலன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலிகள்: எப்போதும் கலகலப்பாக இருந்தது எல்லோருடனும் அன்பாக பழகுவார்.யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட CT Scan இயந்திரத்திற்கான பிரதான நன்கொடையளர்களில் அமரர் நந்தபாலனும் ஒருவர். வடபகுதியில் பல உதவிகளை செய்தவர். நேற்று முன்தினம் இலண்டனில் இறைவனடி சேர்ந்தார். - Dr.Thangamuthu Sathiyamoorthy, Director of the Jaffna Teaching Hospital

332407910-591764732449864-52405461228379
 
Edited by nilmini
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு உதவிய ஐயா பாலசிங்கம் நந்தபாலன் அவர்களுக்கு அஞ்சலியைச் செலுத்துகிறேன். அவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......! 

Link to comment
Share on other sites

  • நியானி changed the title to பாலசிங்கம் நந்தபாலன் காலமானார்
  • கருத்துக்கள உறவுகள்

பாலசிங்கம் நந்தபாலனின் மறைவால் துயருற்று இருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும்,
 உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தில் ஒருவர் தான் இவ்வாறு பிறப்பதுண்டு..!

கண்ணீர் அஞ்சலிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
    • ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்    ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார்.  இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.   1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.  அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.  https://www.virakesari.lk/article/198112
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.