Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி

Published By: Rajeeban

05 Mar, 2023 | 12:37 PM
image

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான  வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என  தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன்  காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/149744

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  ஒருவரினதும் மூச்சுப் பேச்சைக் காணோம்…பிசி போல ??

😉

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கம்  வந்தால் சனநாயகத்தின் காவலர்களை முகம் சுழிக்க வைத்துவிடும் எனப் பலருக்கு கலக்கம். 

(நாங்கள் தமிழர் அரசியல் நலனுக்காக அனுசரித்துப் போக வேண்டும் என நினைக்கிறார்களோ 🤣)

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின

15 hours ago, கிருபன் said:

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என  தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விளங்க நினைப்பவர் எல்லோரும் இதை வாசித்து விளங்கிக்கொள்வர் என நினைக்கிறன்.

இன்று இவர் கூறும் கருத்துகளைகளை ஒருநாள் மறுபரிசீலனை செய்வார். அது இருக்க ..... ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்களை எப்படி அழைப்பார் இவர்? அவர்களை அழிக்க சர்வதேசத்தின் உதவியை நாடாதது ஏன்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு உதவின - அவர்களின் ஒன்பது ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணம் - அலி சப்ரி

அமெரிக்கா ஜனநாயகத்துக்கு உதாரண புருஷ நாடு.
போற்றுவோம் புகழ் பாடுவோம்.
தஞ்சம் தந்ததிற்கு நன்றிக்கடனாக கழுவ வேண்டியதை கழுவுவோம்.மனிதாபிமானம் என எங்களுக்குள் உரக்க உரைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களுண்டு தங்கள் பாடுண்டு என்று தங்கள் வளங்களோடு வாழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பூந்து இது ஆடிய கோரத்தாண்டவம், அது செய்யாத அழிவையா நாம் செய்தோம் என்று கேள்வி கேட்டு தான் செய்ததை சமநிலைப்படுத்தியது சிங்களம். இரண்டும் சேர்ந்தால் பூமி தாங்காது இலங்கை எம்மாத்திரம்? இன்று உறவென்று கூடிக்குதூகலிக்கும் சிங்களம் ஒருநாள் இவர்களை விரட்ட தெருவில் நின்று தமிழரை அழைக்கும். அப்போ நாங்கள் சொல்லுவோம்; எங்களை அழிக்க நீங்கள்  அழைத்து, அணைத்த உங்கள் உறவுகளை நாங்கள் விரட்டியடிக்க முடியாது என.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சிறப்புப் படைப்பிரிவிற்குப் பயிற்சி வழங்கியதே அமெரிக்காவின் கிரீன் பெரெட் எனப்படும் சிறப்புப்படைப்பிரிவு. அதுமட்டுமல்லாமல் புலிகளின் கடற்கலங்களின் தாக்குதல் திறனுக்கு நிகராக, அல்லது மேம்படுத்த டோராக்களில் 30 மி மீ கனொன் ரக பீரங்கியைப் பொருத்தும்படி ஆலோசனை வழங்கியது மட்டுமல்லாமல், தானே இலவசமாகவும் பொருத்திக்கொடுத்தது. புலிகளைத் தடைசெய்தது முதல் தனது வால்பிடிக்கும் நாடுகளையும் தடைசெய்ய வைத்தது. புலிகளின் உதவியாளர்களை ஆயுதம் விற்கும் தரகர்கள் என்கிற போர்வையில் சிக்கவைத்துக் கைதுசெய்ததுடன் புலிகளின் வெளிநாட்டு வங்கிக் கணக்குளையும் முடக்கிப் போட்டது. இன்றுவரை புலிகளை பயங்கரவாதிகளாக தடைசெய்து வைத்திருப்பது. இவை எல்லாமே அமெரிக்கதான். இதில் புலநாய்வுத்தகவல்களை வழங்காது விட்டதென்று எதிர்பார்த்தால் அது முட்டாள்த்தனம். அமெரிக்காவிற்கும் மனிதவுரிமைக்கும் சம்பந்தமில்லை. 

சோசலிசம் குறித்த புலிகளின் ஆரம்பகால நிலைப்பாடும், இந்தியாவின் தயவில் தமிழ் ஆயுதக் குழுக்கள் அப்போது இயங்கியதும் தமிழ்ப் போராளிகளை அமெரிக்கா தனது எதிரிகளாகப் பார்கக் காரணமாக இருந்திருக்கலாம். அலன் தம்பதிகளின் கடத்தல் இதனை உறுதிப்படுத்தியிருக்கலாம். 

ஐ நா வை தனது எண்ணத்திற்கேற்ப இழுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டொவும், தம்பக்கத்திற்கு இழுக்கும் ரஸ்ஸிய சீனத் தரப்பும், அதனை ஒரு பலமற்ற வெற்று சம்பிரதாய அமைப்பாக மாற்றியிருக்கின்றன. 

அமெரிக்கா ஜனநாயக விரோதி, விடுதலைக்குப் போராடும் மக்களின் விரோதி என்பதுபோன்றே ரஸ்ஸியாவினதும் சீனாவினதும் செயற்பாடுகளும். இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

முடிவாக, அலி சப்ரி சொல்ல மறந்த கதை ஒன்றிருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்தகவல்களால் மட்டுமே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்படவில்லை. இந்திய கடற்படையும், விமானப்படையும் இதில் ஆற்றியிருக்கும் பங்கு மிகப்பெரியது. இதனை ஏனோ சப்ரி சொல்ல மறுத்துவிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

சிவபூசையில் கரடி புகுந்தது போல் பேச்சுவார்த்தையை குழப்ப உள்ளே புகுந்ததும் அமெரிக்கா. புலிகள் படங்கரவாத பட்டியலில் உள்ளதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு  அமரிக்காவுக்கு அழைக்க முடியாதாம். ஆனால் தலபான் கேட்ட இடமெல்லால் பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சிவபூசையில் கரடி புகுந்தது போல் பேச்சுவார்த்தையை குழப்ப உள்ளே புகுந்ததும் அமெரிக்கா. புலிகள் படங்கரவாத பட்டியலில் உள்ளதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு  அமரிக்காவுக்கு அழைக்க முடியாதாம். ஆனால் தலபான் கேட்ட இடமெல்லால் பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள்.

பேசுவார்தையை குழப்பிய முக்கியமான தரப்பு இந்தியா என்பது எனது அபிப்பிராயம். சமாதான காலத்தில் இந்திய தூதுவர் எப்படி செயற்பட்டார், அவர் பத்திரிகைகளுக்கு வழங்கிய பேட்டிகள் என்பதை உற்று நோக்கினால் இது தெளிவாக விளங்கும்.

பேச்சுவார்ததை ஆரம்பிக்கும் போது விடுதலை புலிகள் தமது கடும்போக்கால் பேச்சுவார்தையை குழப்பி தாமே தன்னிச்சையாக  சண்டையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்தத இந்தியா,  முதலில் இதில் தலையிடாமல் அமைதி காப்பது போல் நடித்தது.  ஒஸ்லோவில் ரிச்சர்ட் எமிரேஜ், கலநிதி அன்ரட் பாலசிங்கம் ஆகியோர் ஒரே கூட்டதில் கலந்து கொண்டதும், அதில் பாலசிங்கத்தின் உரை அதை தொடர்ந்த அவரின் நகர்வுகளையும்,  சமஸ்டியை பரீசிலனை செய்ய தயார் என்ற அறிவிப்பையும் பார்த்து பேச்சுவார்ததை இப்படியே முன்னேற்ற பாதையில் சென்றுவிடுமோ இந்திய மாநிலங்கை விட அதிக அதிகாரங்களை தமிழர்கள் பெற்றுவிடுவார்களோ  என்று அஞ்சிய இந்திய அரசு அதன் பின்னர்( 2003) தனது குழப்ப நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. ஒஸ்லோ அறிவிப்பை தொடர ந்து கனேடிய அரசியல் அமைப்பு வல்லுனர்கள் குழுவனது உத்தேச சமஸ்டி  தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதாக தெரிவித்த விடயம் இந்தியாவின் அச்சத்தை அதிகரித்தது.  உண்மையான சமஸ்டி அரசியல் அமைப்பை கொண்டிருக்கும் மேற்கு நாடுகள் இதில் உதவ முன்வரும் போது நியாயமான முறையில் அதிகார பகிர்வு நடந்து இலங்கை ஒரு சமஸ்டி அரசியல் அமைப்பை கொண்ட நாடாகிவிடுமோ  என்று இந்தியா அஞ்சியது. 

அதனால் தனது நாசகார நடவடிக்கைகளை ஆரம்பித்தது.  விடுதலை புலிகளுக்குள் ஊடுருவி  அவர்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தியதோடு மறு புறத்தில் சிங்கள இனவாதிகளையும் உசுப்பேற்றி பேச்சுவார்தைகளுக்கு எதிரான வேலைகளை செய்ய வைத்தது . அக்கால பத்திரிகை செய்திகளை உற்று நோக்கினால்  இது புலப்படும். 

இந்தியாவின் இலங்கை தொடர்பான  கொள்கை மத்தியில் ஆளும்  கட்சிகளுக்கு அப்பால் ஒரே நிலையிலேயே இன்றும் தொடர்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

முடிவாக, அலி சப்ரி சொல்ல மறந்த கதை ஒன்றிருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்தகவல்களால் மட்டுமே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்படவில்லை. இந்திய கடற்படையும், விமானப்படையும் இதில் ஆற்றியிருக்கும் பங்கு மிகப்பெரியது. இதனை ஏனோ சப்ரி சொல்ல மறுத்துவிட்டார். 

அமெரிக்கா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தகவல் கொடுக்க இந்தியா கண்ணுக்குள் எண்ணை விட்டிருந்து காவல் காத்து தாக்குதல்களையும் ஒருங்கிணைத்து செய்தது.

இப்படியான செய்திகளை எண்ணி மனம் நோகலாமே தவிர வேறெதுவும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இந்தியா இராணுவ ரீதியில் தனது நரித்தனங்களை இறுதி போராளி கொல்லப்படும் வரை காட்டியது.
பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு அசைவும் நோர்வேயால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அ(ழி)றிவுரை நோர்வேக்கு நிச்சயமாக வழங்கப்பட்டிருக்கும். 
ஆனால் இடையில் புகுந்து விளையாடியது அமெரிக்காவும், யப்பானும் என்பது எனது அவதானிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

அலி சப்ரி சொல்ல மறந்த கதை ஒன்றிருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்தகவல்களால் மட்டுமே புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்படவில்லை. இந்திய கடற்படையும், விமானப்படையும் இதில் ஆற்றியிருக்கும் பங்கு மிகப்பெரியது. இதனை ஏனோ சப்ரி சொல்ல மறுத்துவிட்டார். 

அவர் மறுக்கவில்லை, இது அமெரிக்காவுக்கான நேரம்! ஒவ்வொரு நாடும் உள்நுழையும்போதும் அவர்களிடம் கைநீட்டும்போதும் அதை நிஞாயப்படுத்த புலிகளும் அவர்களை அழிக்க  இவர்களின் (இந்த நாடுகளின்) உதவியும் கைகொடுக்கும். அதை பல தடவை, போரை தாமே முடித்து வைத்தோம் என்று சொல்லிக்கொள்பவர்கள் சொல்லிப்பாராட்டியுள்ளனரே! வெகு விரைவில் இவரும் தொடர்வார், பிறகு அவர்களே தங்களுக்குள் யார் அதிக உதவி செய்தது என்று வெளிப்படுத்தக்கூடும் நாடு பிடிக்கையில் பிரிக்கையில். அப்போ சிங்களம் இந்தியாவை கைகழுவ தமிழரை அணங்குபோல பற்றிக்கொள்ளும் இந்தியா அணைக்கவல்ல, மீண்டும் எங்களை வைத்து சூதாட!

  • கருத்துக்கள உறவுகள்

@nunavilan இதி ல் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியவுக்கும்  உள்ள பாரிய வேறுபாடு என்னவென்றால், விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தால் அவர்கள் தலைமையில் ஒரு நாடு அமைவதை அமெரிக்காவும் மேற்குநாடுகளும் விரும்பவில்லை என்பது உண்மையே. ஆனால் இலங்கையில் ஒரு சமஸ்டி அரசியலைப்பு மூலம் தீர்வு வருவதை அவை எதிர்ககவில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. தமது கேந்திர பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியம் 

ஆனால் இந்தியவை பொறுத்தவரை அப்படியல்ல.  இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதையே அவர்கள் விரும்பவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள பல சம்பவங்கள்  உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு என்று ஒரு நாடு அமைந்தால் இலங்கைக்குள் தாம் மூக்கை நுழைக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் அதனால் இந்த சோம்பேறிக் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டது. ஆனால் நாடு ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு பலம், வளம் என்பதை இந்தபஞ்சப் பரதேசிகள் அறிந்திருக்கவில்லை, இந்தியாவும் அது தன் நாட்டுக்கு  பாதுகாப்பான அரண் என புரிந்து வைத்திருக்கவில்லை, ஏன் நாமே உணரவில்லை? குரங்கின் கைப்பூமாலையாய் நாடு சிதறுது. இந்தியாவுக்கு தன் நாடு அழிந்தாலும் பரவாயில்லை இலங்கையில் தமிழர் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காக அது தூங்காமல் காத்திருக்குது, சிங்களத்தின் முட்டாள்த்தனம் அதற்கு கைகொடுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, island said:

@nunavilan இதி ல் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியவுக்கும்  உள்ள பாரிய வேறுபாடு என்னவென்றால், விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தால் அவர்கள் தலைமையில் ஒரு நாடு அமைவதை அமெரிக்காவும் மேற்குநாடுகளும் விரும்பவில்லை என்பது உண்மையே. ஆனால் இலங்கையில் ஒரு சமஸ்டி அரசியலைப்பு மூலம் தீர்வு வருவதை அவை எதிர்ககவில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. தமது கேந்திர பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியம் 

ஆனால் இந்தியவை பொறுத்தவரை அப்படியல்ல.  இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்படுவதையே அவர்கள் விரும்பவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள பல சம்பவங்கள்  உண்டு. 

உண்மை தான்.

இலங்கை ஒரு கொதிநிலையில் இருந்தாலே இந்தியா கால் பதிக்கலாம்.

இந்தியா இலங்கையை மட்டுமல்ல தன்னைச் சுற்றிவர உள்ள நாடுகளையும் தனது காலடியில் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

இலங்கை ஒரு கொதிநிலையில் இருந்தாலே இந்தியா கால் பதிக்கலாம்.

இந்தியா இலங்கையை மட்டுமல்ல தன்னைச் சுற்றிவர உள்ள நாடுகளையும் தனது காலடியில் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது.

இதையே அமெரிக்காவும் செய்கின்றது. ரஷ்யாவும் செய்கின்றது. இந்தியாவும் செய்கின்றது. சீனாவும் செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சுரண்டிவாழும் நாடுகள் சுயமாக வாழும் நாடுகளை, இனத்தை உய்ய விடமாட்டா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியவுக்கும்  உள்ள பாரிய வேறுபாடு என்னவென்றால்

நல்ல விளக்கம்.

11 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை ஒரு கொதிநிலையில் இருந்தாலே இந்தியா கால் பதிக்கலாம்.

இந்தியா இலங்கையை மட்டுமல்ல தன்னைச் சுற்றிவர உள்ள நாடுகளையும் தனது காலடியில் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது.

றூறுவீதம் உண்மை.
ரஷ்யாவும் சீனாவும் அதே தீயவை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

சோசலிசம் குறித்த புலிகளின் ஆரம்பகால நிலைப்பாடும், இந்தியாவின் தயவில் தமிழ் ஆயுதக் குழுக்கள் அப்போது இயங்கியதும் தமிழ்ப் போராளிகளை அமெரிக்கா தனது எதிரிகளாகப் பார்கக் காரணமாக இருந்திருக்கலாம். அலன் தம்பதிகளின் கடத்தல் இதனை உறுதிப்படுத்தியிருக்கலாம். 

அது தான்  உண்மை.
தமிழ் ஆயுதக் குழுக்களின் பெயர்களை பார்த்தால் ஈழமக்களின் Revolutionary + Liberation  என்று எல்லாம் வரும்.நான் தெரிந்து கொண்டபடி தமிழர்களின் நியாயமான உரிமைகள் கேட்பதை தமிழர் கூட்டமைப்பை அமெரிக்காவின் சதிதிட்டபடி (சதி கோட்பாடுபடி)இலங்கையை பிரிக்க முயலும் சக்திகள் என்று எல்லாம் குற்றம் சாட்டி வந்த தமிழ் புரச்சியாளர்கள் பின்பு எப்படி தமிழீழம் கேட்பவர்களாக மாறினார்கள்🤔

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.