Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

IMG-8082.jpg

 

IMG-8323.jpg

 

IMG-8313.jpg

 

IMG-8327.jpg

IMG-8307.jpg

 

IMG-8318.jpg

 

IMG-8297.jpg

 

IMG-8329.jpg

 

IMG-8331.jpg

 

IMG-8522.jpg

 

👆1569´ம் ஆண்டு கட்டப் பட்ட...  
454 வருடங்கள் பழமையான 👆 மருந்தகம் (Apotheke)  (Dispensary) 
இது, இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. 🙂
👇 கீழே உள்ள படம் 👇 அதன் முழுமையான நான்கு மாடி கட்டிடம்.
454 வருடங்களுக்கு முன், மரத்தால்….  நான்கு மாடியில் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. 🙂

IMG-8317.jpg

ஜேர்மனியின் பழைய கால 🏚️ கட்டிடக் கலை மிகவும் அழகானது. 🥰
இரும்பை விட, மரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
அப்படியான கட்டிடங்கள் 600 - 700 வருடங்கள் தாண்டியும், இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 👍

இப்படியான கட்டிடங்களை... வீட்டின் உரிமையாளர் நினைத்தாலும், 
வெளியில் எந்தப்  புதிய  மாற்றத்தையும் செய்ய முடியாது.

வெளியே உள்ள  மரங்களோ, சீமெந்து பூச்சுக்களோ பழுதாகி இருந்தால்....
அதனை அகற்றி மீண்டும் அதே மாதிரி புதியவை வைக்கப் பட வேண்டும்.
இதனை அந்தந்த இடத்து நகரசபை, கண்காணித்துக் கொண்டு இருக்கும். 😎

இப்படியான கட்டிடங்கள் ஜேர்மனியின் எல்லா இடங்களிலும் 
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும்...
சில இடங்களில்... மிக நெருக்கமாகவும், அதிகமாகவும் காணப்படும். 🏚️

இங்கே உள்ள படங்கள் அண்மையில் நான் (Reha)  தெரப்பி செய்வதற்காக சென்ற 
(Tübingen) என்ற  நகரத்தில் காணப்படும் கட்டிடங்களே இவை.

ஒரு குறுகிய இடத்தில், பல ஆயிரம் கட்டிடங்களை கண்டு பிரமிப்பாக இருந்தது. 🤗
அவர்கள்... அந்தக் காலத்து  வீதிகளை கூட  மாற்றம் செய்யாமல் 
பழைய நிலையிலேயே பேணி, பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். 👍

இந்த நகரத்தில் மக்கள் அதிகரிக்க, அதற்கு அருகிலேயே நவீன கட்டிடங்களுடன் 🏥
புதிய நகரத்தை உருவாக்கி, பழைய நகரத்தின் அழகு கெடாமல் வைத்திருப்பது... 
பல உள்நாட்டு உல்லாசப்  பயணிகளை மட்டுமல்லாது 👯‍♂️
✈️ வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஆயிரக் கணக்கில் 
வர வைத்துக் கொண்டு இருக்கின்றது. 

இந்தப் படங்கள்... இந்த வருடம் 📆 தை, மாசி மாதங்களில் எடுக்கப் பட்டவை. 
படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சரியான பதில் சொல்பவருக்கு... "கெட்டிக்காரன் / காறி" என்ற பட்டம் வழங்கப் படும்.  😂


💖 யாழ். களத்திற்காக... 💖
செய்தியும், படப் பிடிப்பும்: தமிழ் சிறி.
 😂

animiertes-fotograf-bild-0006.gifபடங்கள்  இன்னும் வரும்....   🙂animiertes-fotograf-bild-0048

Edited by தமிழ் சிறி
  • Like 11
  • Thanks 1
  • தமிழ் சிறி changed the title to ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறப்பான படங்களும் தகவல்களும்.

5 hours ago, தமிழ் சிறி said:

படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அது இந்தியா இல்லை 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழைய கட்டடங்களும் தகவல்களும் மிகவும் பிரமிப்பாகவும் உள்ளது.

இன்னும் இணையுங்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூயோர்க்கிலும் இபு;படியான கட்டடங்கள் உள்ளன.

வீதிகள் கூட செங்கல் மாதிரியான கல்லுகளால்த் தான் வீதியைப் போடுவார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்சிலும் கிராமங்களில் இதுபோன்ற வீடுகள், வீதிகள் நிறைய உண்டு......பழமையை பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள்.......!   😁

இணைப்புக்கு நன்றி சிறியர்......!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் படங்கள்... இந்த வருடம் 📆 தை, மாசி மாதங்களில் எடுக்கப் பட்டவை. 
படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சரியான பதில் சொல்பவருக்கு... "கெட்டிக்காரன் / காறி" என்ற பட்டம் வழங்கப் படும்.  😂


💖 யாழ். களத்திற்காக... 💖
செய்தியும், படப் பிடிப்பும்: தமிழ் சிறி.
 😂

animiertes-fotograf-bild-0006.gifபடங்கள்  இன்னும் வரும்....   🙂animiertes-fotograf-bild-0048

உங்கட வீட்டுக்கு கிட்ட இந்தப்படங்களை எடுத்தீர்களா சிறி? எனக்கும் இப்படி முந்திய காலத்து மர, செங்கல், கருங்கல் கட்டிடங்களை பார்க்க நல்ல விருப்பம். நல்ல அழகான படங்கள் சிறி.

படங்களை விடிய வெள்ளண  எடுத்திருப்பீர்கள். சரியா?

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள். மிகவும் குளிர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மினசோட்டா மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அங்கு உள்ளமாதிரியே கட்டிடங்கள் வீடுகளை கட்டி, தமது தனிப்பட்ட பண்டிகைகள், கலாச்சாரங்களை தொடர்ந்து வந்தார்கள். 75 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களை பார்த்தே அவர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்று சொல்ல முடியுமாம். இப்ப எல்லாமே மாறிவிட்டது. ஆனால் பழைய கட்டிடங்களை பார்த்து ஓரளவுக்கு சொல்லலாம். இன்று வழமையை விட கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வந்தேன். இந்த மாதிரி வீடுகள் ( மூன்றாவது படம்) வீடுகளை பார்த்துவிட்டு மிகவும் அழகாக மற்ற வீடுகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என்று யோசித்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன். 

Edited by nilmini
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிறப்பான படங்களும் தகவல்களும்.

அது இந்தியா இல்லை 😂

விளங்க நினைப்பவன்... உங்களது  நகைச்சுவையான பதிலை ரசித்தேன். 👍 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, ஈழப்பிரியன் said:

பழைய கட்டடங்களும் தகவல்களும் மிகவும் பிரமிப்பாகவும் உள்ளது.

இன்னும் இணையுங்கள்.

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கிலும் இபு;படியான கட்டடங்கள் உள்ளன.

வீதிகள் கூட செங்கல் மாதிரியான கல்லுகளால்த் தான் வீதியைப் போடுவார்கள்.

ஈழப்பிரியன், எனக்கும் நியூயோர்க்கில் உள்ள இப்படியான 
கட்டிடங்களை பார்க்க ஆசையாக உள்ளது.
நீங்கள் இந்த மாதம் நியூயோர்க் செல்வதாக முன்பு குறிப்பிட்ட  நினைவு.
அப்படி சென்றால்.. நேரம் ஒதுக்கி சில படங்களை இணைத்து விடுங்களேன். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

பிரான்சிலும் கிராமங்களில் இதுபோன்ற வீடுகள், வீதிகள் நிறைய உண்டு......பழமையை பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள்.......!   😁

இணைப்புக்கு நன்றி சிறியர்......!

உண்மைதான் சுவியர், 
பழமையை பேணுவதில்.... வெள்ளைக்காரனை அடிக்க ஆளில்லை. 
நம்ம நாட்டில், இதனை கண்காணிக்கவோ, 
இதன்... அருமை பெருமைகளை விளங்கிக் கொள்ளவோ ஆட்கள்  இல்லை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nilmini said:

உங்கட வீட்டுக்கு கிட்ட இந்தப்படங்களை எடுத்தீர்களா சிறி? எனக்கும் இப்படி முந்திய காலத்து மர, செங்கல், கருங்கல் கட்டிடங்களை பார்க்க நல்ல விருப்பம். நல்ல அழகான படங்கள் சிறி.

படங்களை விடிய வெள்ளண  எடுத்திருப்பீர்கள். சரியா?

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள். மிகவும் குளிர் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மினசோட்டா மாதிரியான இடங்களை தேர்ந்தெடுத்தார்கள். அத்துடன் அங்கு உள்ளமாதிரியே கட்டிடங்கள் வீடுகளை கட்டி, தமது தனிப்பட்ட பண்டிகைகள், கலாச்சாரங்களை தொடர்ந்து வந்தார்கள். 75 வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களை பார்த்தே அவர்கள் எங்கிருந்து வந்து குடியேறினார்கள் என்று சொல்ல முடியுமாம். இப்ப எல்லாமே மாறிவிட்டது. ஆனால் பழைய கட்டிடங்களை பார்த்து ஓரளவுக்கு சொல்லலாம். இன்று வழமையை விட கொஞ்சம் தூரம் நடந்துவிட்டு வந்தேன். இந்த மாதிரி வீடுகள் ( மூன்றாவது படம்) வீடுகளை பார்த்துவிட்டு மிகவும் அழகாக மற்ற வீடுகளில் இருந்து வேறுபட்டு இருக்கிறதே என்று யோசித்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன். 

நில்மினி, இந்த இடம் எங்கள் வீட்டில் இருந்து  70 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நகரம். 

இதனை மருத்துவ நகரம் என்றே சொல்லலாம்.
அவ்வளவிற்கு அதிக பிரத்தியேக தேவைக்குரிய  வைத்திய சாலைகளும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், வைத்தியசாலை ஊழியர்களின் பயிற்சி கல்லூரிகளும் நிறைந்து உள்ளது.
மிக அதிகமான வெளிநாட்டு மாணவர்களை எங்கும் காணலாம்.

நீங்கள், கெட்டிக்காறி நில்மினி. 😁
இந்தப் படங்களை ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் எடுத்தேன். அந்த நேரத்தில் மக்கள் எல்லோரும் விடுமுறை நாள் என்ற படியால்,  தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை. அனேகமாக இந்த நாளில்… மதியம் 11 மணிக்குப் பின் தான் நகரம் உயிர்புடன் இயங்கத் தொடங்கும். வேலை நாட்களில் காலை 5 மணிக்கே மக்கள் மெதுவாக நடமாட தொடங்கி விடுவார்கள்.   இங்குள்ள அனேகமான நகரங்களிலும் இது தான் நிலை. பிரதான நகரங்கள் விதி விலக்கு. அமெரிக்காவிலும் இது தான் நிலை என ஊகிக்கின்றேன்.

அமெரிக்காவின் 75 வருடத்துக்கு முற்பட்ட மக்களின் வதிவிட முறையை அறிய சுவராசியமாக இருந்தது. 👍🏼

நில்மினி,   நீங்கள் நேற்றுப் பார்த்த வீட்டின் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.
நேரம் கிடைக்கும் போது, படம் எடுத்து இணைத்து விடுங்கள். 🙂

Posted

பொன்னில் (Bonn)நிறைய பழைய கட்டிடங்கள் உள்ளன. பேர்லின் தலைநகரம் ஆக முதல் பொன் தான் தலைநகரமாக இருந்தது என நினைக்கிறேன். ஜேர்மனின்  பழைய கட்டிடங்களை ஒரு நினைவுக்காக அரசு வைத்துள்ளது என ஒரு ஜேர்மன்காரர் கூறினார். 
படங்களுக்கு நன்றி, தமிழ் சிறி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

ழப்பிரியன், எனக்கும் நியூயோர்க்கில் உள்ள இப்படியான 
கட்டிடங்களை பார்க்க ஆசையாக உள்ளது.
நீங்கள் இந்த மாதம் நியூயோர்க் செல்வதாக முன்பு குறிப்பிட்ட  நினைவு.
அப்படி சென்றால்.. நேரம் ஒதுக்கி சில படங்களை இணைத்து விடுங்களேன். 🙂

சிறி சனி இரவு நியூயொர்க் வந்துவிட்டோம்.

இனி அடுத்த பயணம் லொஸ்அங்கிலசும் சன்பிரான்சிஸ்கோவும் 18 புறப்பட்டு அடுத்த 18 வருவோம்.

பழைய கட்டடங்கள் முழுவதும் மன்கற்றனில் கிறீன்விச் வில்லேச் எனும் இடத்திலேயே உள்ளது.இப்போதைக்கு அந்த பக்கம் போகமாட்டேன்.
போனால் நிச்சயம் படம் எடுத்து போடுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, nilmini said:

வீட்டுக்கு வந்து பார்த்தால் சிறி போட்ட படங்களில் அதே மாதிரி இருக்கு. ஒரு coincidence மாதிரி இருந்தது. நாளைக்கு ஒரு படம் எடுத்து இணைக்கிறேன். 

தெரியாதவர்களின் வீடுகளை படம் எடுக்க குவக்கோடு வாறாங்களோ தெரியாது.கவனம்.

14 hours ago, nilmini said:

ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆரம்ப காலத்தில் யூரோப்பில் அல்லது அவரவர் இடங்களின் காலநிலை எப்படியோ அந்தமாதிரியான இடங்களை தெரிந்தெடுத்து குடியேறினார்கள்.

அமெரிக்காவுக்கு காலநிலை ஒரு கொடை.

எந்த காலநிலை ஒத்துக் கொள்கிறதோ அங்கு போய் வசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nunavilan said:

பொன்னில் (Bonn)நிறைய பழைய கட்டிடங்கள் உள்ளன. பேர்லின் தலைநகரம் ஆக முதல் பொன் தான் தலைநகரமாக இருந்தது என நினைக்கிறேன். ஜேர்மனின்  பழைய கட்டிடங்களை ஒரு நினைவுக்காக அரசு வைத்துள்ளது என ஒரு ஜேர்மன்காரர் கூறினார். 
படங்களுக்கு நன்றி, தமிழ் சிறி.

ஓம் நுணாவிலான். பேர்லினுக்கு முன்பு, பொன்  (Bonn) தான் தலைநகரமாக இருந்தது.
இந்தக் கட்டிடங்களை... நினைவுச் சின்னமாக பாதுகாக்கின்றார்கள்.
சில வருடங்களுக்கு முன், இப்படியான பராமரிப்புக்காக ஒரு வீட்டின் நிலத்தை இடித்த போது
பல சாடிகளில் லட்சக் கணக்கான பழைய  அரிய நாணயக் குற்றிகளை கண்டெடுத்தார்கள். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி சனி இரவு நியூயொர்க் வந்துவிட்டோம்.

இனி அடுத்த பயணம் லொஸ்அங்கிலசும் சன்பிரான்சிஸ்கோவும் 18 புறப்பட்டு அடுத்த 18 வருவோம்.

பழைய கட்டடங்கள் முழுவதும் மன்கற்றனில் கிறீன்விச் வில்லேச் எனும் இடத்திலேயே உள்ளது.இப்போதைக்கு அந்த பக்கம் போகமாட்டேன்.
போனால் நிச்சயம் படம் எடுத்து போடுகிறேன்.

அமெரிக்கன் கட்டத்துரை, ஒரே.... உலாத்துப்  போலை கிடக்கு.  😂
எப்பவாவது "மன்ஹற்றன்" போனால், மறக்காமல் படங்களை எடுங்கள்.
அவசர காரியமில்லை... ஈழப்பிரியன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி சனி இரவு நியூயொர்க் வந்துவிட்டோம்.

இனி அடுத்த பயணம் லொஸ்அங்கிலசும் சன்பிரான்சிஸ்கோவும் 18 புறப்பட்டு அடுத்த 18 வருவோம்.

பழைய கட்டடங்கள் முழுவதும் மன்கற்றனில் கிறீன்விச் வில்லேச் எனும் இடத்திலேயே உள்ளது.இப்போதைக்கு அந்த பக்கம் போகமாட்டேன்.
போனால் நிச்சயம் படம் எடுத்து போடுகிறேன்.

அங்கை எங்கே பழைய கட்டிடங்கள்?

நாடே 18ம் நூறாண்டுக்கு பிறகு உருவானது. முன்னம், மன்ஹட்டன் பகுதி, டச்சுக்காரர்களினால் 17ம் நூறாண்டு ஆரம்பத்திலும், பிரிட்டிஷ்காரர்களால் 17ம் நூறாண்டு பின்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது. 

18 நூறாண்டு பின்பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட யுத்தத்தின் பின்னே, 19ம் நூறாண்டில் கட்டிடங்கள் உருவானது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Nathamuni said:

அங்கை எங்கே பழைய கட்டிடங்கள்?

நாடே 18ம் நூறாண்டுக்கு பிறகு உருவானது. முன்னம், மன்ஹட்டன் பகுதி, டச்சுக்காரர்களினால் 17ம் நூறாண்டு ஆரம்பத்திலும், பிரிட்டிஷ்காரர்களால் 17ம் நூறாண்டு பின்பகுதியில் கையகப்படுத்தப்பட்டது. 

18 நூறாண்டு பின்பகுதியில் நடந்த சுதந்திர போராட்ட யுத்தத்தின் பின்னே, 19ம் நூறாண்டில் கட்டிடங்கள் உருவானது.

என்ன நாதம் அமெரிக்க சரித்திரம் சப்பி துப்பியுள்ளீர்கள்.

உள்ளதுக்குள் பழசு இந்த இடங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, ஈழப்பிரியன் said:

தெரியாதவர்களின் வீடுகளை படம் எடுக்க குவக்கோடு வாறாங்களோ தெரியாது.கவனம்.

அமெரிக்காவுக்கு காலநிலை ஒரு கொடை.

எந்த காலநிலை ஒத்துக் கொள்கிறதோ அங்கு போய் வசிக்கலாம்.

எல்லாம் பெரிய வீடுகளும் ஆள் நடமாட்டமும் அவ்வளவு இல்லை. யூனிவெர்சிட்டிக்கு அண்மையில் என்பதால் அநேகமானவை மாணவர்கள் தான் இருக்கிறார்கள். என்றபடியால் துவக்கோட வரமாட்டார்கள் என்று நினைக்கிறன். 

உண்மைதான் இந்த பெரிய நிலப்பரப்பில் இல்லாத சுவாத்தியங்களே இல்லை. புளோரிடா, ஹவாய் போனால் எங்கட சனம் பனை, தென்னை, பாக்கு, வாழை என்று வச்சிருக்கினம்

 
 
 
 
 
 

எங்க ரதியை காணவில்லை?

Edited by nilmini
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 hours ago, தமிழ் சிறி said:

 

உண்மையில் ஞாயிறுக்கிழமை காலமய் என்று எழுதிவிட்டு பிறகு எந்த விடிய வெள்ளனவும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். இங்கு ஒவ்வொரு ஊர்,சிற்றி என்று சன நடமாட்டம் மாறுபடும்.மெம்பிஸில் காலை 6.30  மணிக்கு மேல் தான் கொஞ்ச நடமாட்டம் தொடங்கி 9  மணிவரை ஒரே திருவிழாதான். 

நல்ல தகவல் சிறி. அப்ப ஒரு மெடிக்கல் டிஸ்ட்ரிக்ட் என்று அழைக்கலாம். நிச்சயம் இங்க உள்ள வீட்டை படம் எடுத்து பதிவிடுகிறேன். அது தனி வீடில்லை. என்றபடியால் கிருபா அண்ணா பயப்படுத்தினமாறி துவக்கு வராது😂

Edited by nilmini
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/3/2023 at 16:31, தமிழ் சிறி said:

ஜேர்மனியின் பழைய கால 🏚️ கட்டிடக் கலை மிகவும் அழகானது. 🥰
இரும்பை விட, மரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
அப்படியான கட்டிடங்கள் 600 - 700 வருடங்கள் தாண்டியும், இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 👍

கட்டக்கலை சம்பந்தமான ஒரு சிறந்த திரியை ஆரம்பித்துள்ளீர்கள்.
நான் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் இதே மாதிரி வீடுகளும் வீதிகளும் உண்டு. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்படாத இடங்கள் என பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றார்கள். இப்படியான இடங்களில் அரசு அனுமதியின்றி ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது.

இது நான் வசிக்கும் இடத்தின் மறு பகுதியில் உள்ள இடம்.படம் நான் எடுத்ததல்ல. உபயம் கூகிள் .

Altstadt - GOSLAR am Harz, UNESCO-Weltkulturerbe

Goslar - Sehenswürdigkeiten & die schönsten Ecken [mit Josef Seibel]

Goslar: Sehenswürdigkeiten in der Welterbestadt | NDR.de - Ratgeber - Reise  - Harz

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

 

இந்த வீடுகள் ஆகக்கூடியது 200வருடங்கள்தான் இருக்கும்.ஏனென்றால் அமெரிக்காவுக்கு வெள்ளையர்கள் குடியேறியது 245 வருடங்கள் முதல்தானே. ஜெர்மன்கார்கள் குடியேறிய இடங்களில் டென்னெர்சியும் ஒன்று.

523c33231b84dd2056c9489a80b8a1d4-cc-ft-9

 

Presentation1.jpg

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

கட்டக்கலை சம்பந்தமான ஒரு சிறந்த திரியை ஆரம்பித்துள்ளீர்கள்.
நான் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் இதே மாதிரி வீடுகளும் வீதிகளும் உண்டு. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்படாத இடங்கள் என பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றார்கள். இப்படியான இடங்களில் அரசு அனுமதியின்றி ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது.

இது நான் வசிக்கும் இடத்தின் மறு பகுதியில் உள்ள இடம்.படம் நான் எடுத்ததல்ல. உபயம் கூகிள் .

 

கு சா அண்ணா மிகவும் அழகான வீடுகள். ரோடுகளை பார்த்தால் ஜப்பான் போல இருக்கு என்று மகன் சொன்னார்.நானும் மகனும் 2018 இல் ஜெர்மனி வந்து ஒரு காரை எடுத்துக்கொண்டு பிராங்பேர்ட், முன்சின். பாவேரியா என்று ஜேர்மன் கிராமங்களுக்கூடாக பிரயாணித்தோம்.மகன் ஜேர்மன் மொழி கற்றுள்ளபடியால் ஓரளவு கதைப்பார். அழகான இடம். ஒரே ஒரு இலங்கை நண்பியை தான் பார்த்தேன். சிறி, நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தால் வந்து நல்ல மீன் குழம்பும் புட்டும் சாப்பிட்டிருக்கலாம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@குமாரசாமி @nilmini பழைய வீட்டுப் படங்களைப் பார்க்க ஒரு கிளுகிளுப்பாக உள்ளது.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
    • தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது. இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார். இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 – நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார். இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/313627
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.