Jump to content

ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர நடராஜர் சிலை பிரதிஷ்டை

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்துக்கு அமைவாக நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

Nada.pngஆனையிறவுப் பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிரப்பு நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம், கடற்கரை, உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்டப் பணிகள் நிறைவுபெற்று அங்கு நிறுவப்பட்ட சுமார் 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

nada2.pngஇந்த நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள்,பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராசா,செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

https://thinakkural.lk/article/244488

 

  • Like 1
Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

சிலையில் காகம் இருக்கவிட்டால் சரி. சமயப் பற்று வேணும்தான் ஆனால் நாங்களும் இந்தியா மாதிரி சமயத்தால் அடிபடாவிட்ட்தால் சரி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை வடக்கு கிழக்கில் நிறுவப்பட்ட சிலைகளில் அழகானது இதுவாகவே தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவில் வர்ததக மையம் என்றால் அந்த வர்தக மையத்தில் வணக்கத்திற்குரிய சிலை அமைக்க வேண்டுமா? வர்த்தக  மையம் என்றால் வர்த்தகத்தை பலப்படுத்துவதற்காக பலவேறு நிறுவனங்கள், கடைகள் வியாபாரத்தை விருத்தி செய்து மக்களுக்கு வேலை வாய்பபுகளை  ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கும். அதற்கு தடையாக இந்த வணக்கத்துக்குரிய நடராஜர் சிலை இருக்காதா?  சிலை அமையும் போது அதற்கான சமய விடயங்கள் வர்தக மைய விருத்திக்கு எதிர் காலத்தில் தடையாக அமையுமே? 

முறி கண்டி போல கச்சான் கடையும் தோசை கடையை தாண்டி வர்தக மையம் வளர்சசி அடையுமா? 

தமிழ்பகுதியின்  பொருளாதார முன்னேற்றங்களை அவர்களின் பலவீனத்தை கொண்டே மட்டுப்படுத்தும் திட்டமாக இருக்குமோ? இதற்கு பின்னால்  அயல் நாட்டு மேலதிக்க கரங்கள் இருக்குமோ? 

ஒரு சந்தேகம் தான். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் சைவ அடையாளங்கள் பெருகுவதில் எந்த தவறும் இல்லை. சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் தேசம் அது. புத்தர் பெருகுவதுதான் ஆபத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமான பிரதேசங்களில் புத்தர் அடவாடித்தனம் பண்ணி குடியேறுகிறார் உதாரணம் கிண்ணிய வென்னீர் ஊற்று நிலாவரை கிணறு போன்ற இடங்கள் .

ஒன்றை மறைக்க ஒரு புனையல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nada.png

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

4 hours ago, Hana said:

சிலையில் காகம் இருக்கவிட்டால் சரி. சமயப் பற்று வேணும்தான் ஆனால் நாங்களும் இந்தியா மாதிரி சமயத்தால் அடிபடாவிட்ட்தால் சரி.

அரச மரத்தை கண்டவுடன் புத்தர் சிலை தோன்றுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?


சிவனும்,வைரவரும்,காளியம்மனும்,ஊர்க்காவலன் இடும்பனும் மூலைக்கு மூலை தோன்ற வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

Nada.png

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

அரச மரத்தை கண்டவுடன் புத்தர் சிலை தோன்றுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?


சிவனும்,வைரவரும்,காளியம்மனும்,ஊர்க்காவலன் இடும்பனும் மூலைக்கு மூலை தோன்ற வேண்டும்.

 நீங்கள் சொல்வது போல் வைக்கட்டும் ஆனால் முன்னர் வழிப்பிள்ளையார்கள் இருப்பது போல். பராமரிப்பு இதுக்கு எப்படி இருக்கும் என்று போகத்தான் தெரியும்.  எனக்கும் எங்கள் நிலத்தில் புத்தர் சிலை வைப்பது கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால் கொழும்பில் பார்க்கும் போது வரவில்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

வடக்குக் கிழக்கில் சைவ அடையாளங்கள் பெருகுவதில் எந்த தவறும் இல்லை. சைவர்கள் பெரும்பான்மையாக வாழும் தேசம் அது. புத்தர் பெருகுவதுதான் ஆபத்து. 

 

11 hours ago, குமாரசாமி said:

Nada.png

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

அரச மரத்தை கண்டவுடன் புத்தர் சிலை தோன்றுவதை எப்படி பார்க்கின்றீர்கள்?


சிவனும்,வைரவரும்,காளியம்மனும்,ஊர்க்காவலன் இடும்பனும் மூலைக்கு மூலை தோன்ற வேண்டும்.

 

அதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing, outdoors and monument

May be an image of sculpture and outdoors

May be an image of 1 person, sculpture, outdoors and monument

Shiva's 'Nataraj' statue infront of the world's largest particle physics lab CERN (The European Organization for Nuclear Research) in Switzerland.

na-2004-122_0406040_01.jpg

 

https://cds.cern.ch/record/745737?ln=en

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2023 at 18:01, கிருபன் said:

நடராஜர் பணிக் குழுவினால் ஆனையிறவுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை நேற்று முற்பகல் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

 

On 14/3/2023 at 05:06, island said:

தமிழ்பகுதியின்  பொருளாதார முன்னேற்றங்களை அவர்களின் பலவீனத்தை கொண்டே மட்டுப்படுத்தும் திட்டமாக இருக்குமோ? இதற்கு பின்னால்  அயல் நாட்டு மேலதிக்க கரங்கள் இருக்குமோ? 

ஒரு சந்தேகம் தான். 

நடராஜர் சிலை என்ற செய்தியைப் பாத்ததும் எனக்கும் இந்தச் சந்தேகம் வந்தது. எமது இயலாத்தன்மையை பாவித்து சிங்களம் ஒருபுறம் நுழைந்து எமது கலாச்சாரம், பண்பாடு, நிலம் எல்லாவற்றையும் இல்லாதொழித்து ஓரங்கட்டுது நம்மை.  நாட்டின் வங்குரோத்து தன்மையை பயன்படுத்தி அயல் நாடும் மற்றைய நாடுகளும் மிஞ்சியவற்றை தாமதாக்குது. கேட்பதற்கும் தடுப்பதற்கும் யார் இருக்கிறார்கள் நமக்கு? நடப்பதை கைதட்டி வேடிக்கை பாக்க மட்டுமே முடியும் நமக்கு இப்போதைக்கு. நடராஜர் பணிக்குழு என்று ஒன்றை இப்போதான் கேள்விப்படுகிறேன். அது செய்ய நிறைய எத்தனையோ அவசரப்பணிகள் இருக்கின்றன, கோவிக்க வேண்டாம் நடராஜ தொண்டர்களே! மூலைக்கு மூலை, தெருவுக்கு தெரு சிலை நிறுவினோம், இன்று அதே முறையில் நம் நிலத்தில் புத்தர் தோன்றுகிறார், தடுக்க முடிந்ததா நம்மால்? புத்தரை தட்டு வைத்து அழைப்பதுபோல் தோன்றுகிறது இந்தச் சிலை பிரதிஷ்டை. முதலில் அதை தடுக்கும் வழிமுறையை தொடரலாம்.         

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.