Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் 

Published By: VISHNU

15 MAR, 2023 | 08:44 PM
image

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர். இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம். 

மேலும்   யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். 

மேலும் யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/150633

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Nathamuni said:

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 
என்ன முனியர் அனியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறீங்கள்.விமான நிலைய உரிமையாளர் தானே தீர்மானிப்பார் எங்கை விமானத்தை ஓட்டுறது என்டு.மற்றது கொழும்புக்கு விடுறது என்டால் கட்டுநாயக்குவுக்கு விட்டால் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Nathamuni said:

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 
உந்தக்கேள்விக்கு முதல்,  நீங்கள் இலங்கைக்கு வரும்போது இந்திய நாணயமாக மாற்றிக்கொண்டு வாருங்கள், வந்தபின் உந்தக்கேள்விக்கான விடை தெரியவரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Nathamuni said:

யாழ்பாணம் - திருச்சி, யாழ்ப்பாணம் - டெல்லி என்று பேசினால் புரியும்....

யாழ்பாணம் - கொழும்பு .... இது உள்ளூர் விவகாரம்...

இவர் எப்படி கருத்து சொல்லுவார்?
 
நாதம், சென்னை - கொழும்பு  அல்லது டெல்லி - கொழும்பு ( யாழில் அரை மணித்தியாலம் தரை தட்டி செல்லுதல்) 

இது வழமை தானே எமிரேட்ஸ் மாலேயில் தரை தட்டி கொழும்பு செல்வது போல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டுநாயக்க-பலாலி சேவை (இந்தியாவுக்கு போகாட்டிலும் கூட) அவசியம்.

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

கட்டுநாயக்க-பலாலி சேவை (இந்தியாவுக்கு போகாட்டிலும் கூட) அவசியம்.

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

வாற சீனாக்காரனும், ரசியா காரனும் செலவளிக்காத பிசினாறிப் பயலுக எண்டு சிங்களவர் திட்டுகினம்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில இருந்து போற நீங்களும், கொழும்பு பக்கம் தலை வைக்காமல் நேர யாழ்ப்பாணம் போனா... அவன் அழுதிருவான்.....😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

2015,2017 களில் ஊர் போயிருந்தேன்.
இரு தடவைகளும் கட்டுநாயக்காவில் இறங்கி நேரா ஊர் தான்.

அந்தநேரம் 14000-15000 எடுத்தார்கள்.

1 minute ago, Nathamuni said:

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில இருந்து போற நீங்களும், கொழும்பு பக்கம் தலை வைக்காமல் நேர யாழ்ப்பாணம் போனா... அவன் அழுதிருவான்

நம்மவர்கள் கொழும்பு போனாலும் உறவினர் வீடுகளிலேயே கூடுதலாக தங்குவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

வாற சீனாக்காரனும், ரசியா காரனும் செலவளிக்காத பிசினாறிப் பயலுக எண்டு சிங்களவர் திட்டுகினம்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாவில இருந்து போற நீங்களும், கொழும்பு பக்கம் தலை வைக்காமல் நேர யாழ்ப்பாணம் போனா... அவன் அழுதிருவான்.....😎

டு ஐ லூக் லைக் ஐ கேர்🤣.

ஊருக்கு நேரடியா லகேஜோட போய்ட்டு, பிறகு ஒரு சின்ன பாக்கோட தெற்கு டூர் போடுறவை போடலாம்.

7 minutes ago, ஈழப்பிரியன் said:

2015,2017 களில் ஊர் போயிருந்தேன்.
இரு தடவைகளும் கட்டுநாயக்காவில் இறங்கி நேரா ஊர் தான்.

அந்தநேரம் 14000-15000 எடுத்தார்கள்.

நான் ரத்மனலானையில் இருந்துதான் போயுள்ளேன்.  ஆனால் அதுக்கு எப்படியும் கொழும்புக்குள் போகவேண்டும்.

உங்களுக்கு லகேஜ் டிரான்ஸ்பர் எல்லாம் சுமூகமாக நடந்தததா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, goshan_che said:

உங்களுக்கு லகேஜ் டிரான்ஸ்பர் எல்லாம் சுமூகமாக நடந்தததா?

உங்கள் கேள்வி தான் என்ன?

வானை ஒழுங்கு செய்திருந்தோம்.தூக்கி போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே.

1 hour ago, goshan_che said:

கட்டுநாயக்க-பலாலி சேவை (இந்தியாவுக்கு போகாட்டிலும் கூட) அவசியம்.

கொழும்பில் அநாவசிய தங்கலை தவிர்த்து நேரா ஊருக்கு போய்விடலாம்

இதுகும் இங்கிருந்து நேராக யாழுக்கு ரிக்கட் போட முடியமென்றால்த் தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் கேள்வி தான் என்ன?

வானை ஒழுங்கு செய்திருந்தோம்.தூக்கி போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே.

1 hour ago, goshan_che said:

நான்தான் பிழையாக விளங்கி கொண்டேன். நீங்கள் கட்டுநாயக்கா-ஊர் (பலாலி) விமானத்தில் போனதாக சொன்னதாக நான் தவறாக விளங்கி கொண்டேன்.

ஓம் வானில் நேரடியா ஊருக்கு போகலாம். அதை விட கனெக்டிங் பிளைட் இருக்கும், டிக்கெட் அதிக விலை வித்தியாசம் இல்லை எண்டால் வசதி கூட.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.