Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா

March 19, 2023
 
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் எதிர்காலத்தில் சீனாவுடன் ஏற்படப்போகும் போர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் முகமாக அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனத்தை இந்த வருடம் 886 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பில் படையினருக்கான ஊதியத்தையும் 5.2 விகிதம் அதிகரித்துள்ளதுடன், புதிய ஆயுதங்களின் உற்பத்திக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 28 பில்லியன் அதிகமாகும். புதிய ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யவும் முதல் தடவையாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

உக்ரைன் சமரில் அமெரிக்கா தன்னிடம் உள்ள அதிகளவான ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், சீனாவுடன் மோதல் ஒன்று ஏற்பட்டால் அதிகளவு ஆயுதங்கள் தேவைப்படும் என்பதாலும் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜவலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பல்குழல் உந்துகளை செலுத்திகள், ஸ்ரிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என 36 பில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது ஆயுதங்களை 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருந்தது.

https://www.ilakku.org/us-earmarked-886-billion-for-future-war/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா

Got the below explanation from a quora: 

உலகின் வர்த்தகம் எல்லாமே அமெரிக்கா நாணயத்தில் தான் நடை பெறுகிறது. அதன் மதிப்பு சரிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அமெரிக்கா அரசாங்கத்தின் கடமை. அதனால் அனைத்து நாட்டு பிரச்சன்னையிலும் தலையிட்டு கொண்டே இருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை அதற்க்கு அதன் எதிர்காலம் மற்றும் பொருளாதார நலன்கள் தான் முக்கியம் அதற்காக என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்கின்றது.

1970களில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்தது "அரபு மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான யுத்தத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் (OPEC- Organization of the Petroleum Exporting Countries )அமெரிக்காவுக்கு எதிராக எண்ணெய் ஆயுதத்தை எடுத்தது ".

அதன் பிறகு அதே மாதரி ஒரு ஆயுதம் தமக்கு எதிராக பயன்படுத்தப்படாமல் இருக்க அமெரிக்கா எல்லா வழிகளையும் கையாண்டது. இந்த ஒபெக் நாடுகள் ஒன்று அமெரிக்காவுக்கு கீழ் இருக்கணும் இல்லையென்றால் அழிந்துவிடனும். சௌதிஅரேபியா , குவைத், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள் அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் வந்தது அதன் நலன்களையெல்லாம் அமெரிக்கா பாதுகாத்துகொண்டு இருக்கிறது

ஈராக் , ஈரான் , வெனிசுலா, லிபியா , சிரியா, ஓமன் நாடுகள் அமெரிக்காவின் எதிரணியில் இருந்தது அதனால் அழிக்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பில் 2வது பெரிய நாடு உக்ரைனுக்கு நடந்த நிலைமை, ரஷ்யா சீனாவின் போக்குகளால் பலநாடுகள் தங்கள் பாதுகாப்பில் கவனம் எடுக்க தொடங்கியுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, nilmini said:

ஈராக் , ஈரான் , வெனிசுலா, லிபியா , சிரியா, ஓமன் நாடுகள் அமெரிக்காவின் எதிரணியில் இருந்தது அதனால் அழிக்கப்பட்டது. 

தொடர் வெற்றிவாகை நிலைக்கும் என்று சொல்ல முடியாது தானே. :rolling_on_the_floor_laughing:

அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதியும் கடந்த 2 வருடங்களாக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவும் குறிப்பாக பிரான்சும் ஆயுத ஏற்றுமதியையும் இராணுவச் செலவுகளையும் அதிகரித்துள்ளது. அமெரிக்க அவுஸ்திரேலிய நீர்மூழ்க்கிக் கப்பல் ஒப்பந்தத்தின் பின் சீனாவும் தன் பங்குக்கு காய்களை நகர்த்தி வருகிறது. பொருளாதார மோதல்களை மீறி வல்லரசுகள் நேரடியாகவே உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

1 hour ago, குமாரசாமி said:

தொடர் வெற்றிவாகை நிலைக்கும் என்று சொல்ல முடியாது தானே. :rolling_on_the_floor_laughing:

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, nilmini said:

ஆர்ப்பாட்டம்,அகங்காரம்,அதிகப் பிரசங்கித்தனம் இல்லாத அமைதியான நறுக்கென சொல்லும் கருத்துக்கள்.

உங்கள் கருத்தை மனதார முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படியான கருத்துக்கள் தான் யாழ்களத்திற்கு தேவை.
தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்களிடையிலான ஜாதி  ரீதியான ஒடுக்குமுறை ஏற்பட்டு அதற்கெதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 

அப்படியானால் பிராமணர்கள் அதிகம் அங்கு குடியேறி உள்ளார்கள் என்பது சரியாக தான் இருக்கும்.  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஆர்ப்பாட்டம்,அகங்காரம்,அதிகப் பிரசங்கித்தனம் இல்லாத அமைதியான நறுக்கென சொல்லும் கருத்துக்கள்.

உங்கள் கருத்தை மனதார முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படியான கருத்துக்கள் தான் யாழ்களத்திற்கு தேவை.
தொடருங்கள்.

நன்றி அண்ணா. தொடர்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்களிடையிலான ஜாதி  ரீதியான ஒடுக்குமுறை ஏற்பட்டு அதற்கெதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 

அப்படியானால் பிராமணர்கள் அதிகம் அங்கு குடியேறி உள்ளார்கள் என்பது சரியாக தான் இருக்கும்.  

இப்பவும் நடந்து கொண்டுதான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்களிடையிலான ஜாதி  ரீதியான ஒடுக்குமுறை ஏற்பட்டு அதற்கெதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 

அப்படியானால் பிராமணர்கள் அதிகம் அங்கு குடியேறி உள்ளார்கள் என்பது சரியாக தான் இருக்கும்.  

காலம் காலமான வெளிநாடுகளில் படித்தவர்கள் என்றால் ஐயர்மாரே.

இப்போ ஐரி துறை வந்தது தான் அவர்களுக்கு பிரச்சனை.

கண்டவன் நின்றவன் என்று சகலரும் படித்து சரிசமமாக முன்னேறுகிறார்கள்.

இந்திய ரத்தமல்லோ சும்மா அடங்கியிருக்குமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

உலகிலேயே அதிக வளம் கொண்ட நாடுகள் எனறால் ஆபிரிக்க நாடுகள்தான், ஆனால் மிகவும் வறிய நாடுகள் என்றால் அந்த ஆபிரிக்க நாடுகள்தான் முன்னிற்கின்றன.

பெரும்பாலும் செல்வந்த நாடுகளாக உள்ள மேற்கு அடிப்படையில் காலனித்துவ நாடுகளாக உள்ளன, தற்காலத்தில் நேரடியாக ஆக்கிரப்பு என்றில்லாமால் ஏதோ ஒரு வகையில் சுரண்டல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதற்கு பலம் வேண்டும், அதற்காக பாதுகாப்பு செலவீனத்தினை அதிகரித்து செல்கிறார்கள், மறுவளமாக அந்த நாடுகளின் சுரண்டல்களுக்கு ஆளாகும்  நாட்டில் உணவில்லாமல் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

உணவுச்சங்கிலியில் பலமானது பலமற்றத்தினை கொன்று சாப்பிட்டுவிடும்.

9 hours ago, nilmini said:

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

நீங்கள் கூறிய கருத்து 100% சரியானதாகவே  என்னளவில் உணருகிறேன்.

நல்ல கருத்துக்கள்.

அமெரிக்கா வந்தாரை வாழவைத்த வந்தேறிகள் தேசம் என்பதும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார குடியேறிகளின் கனவு தேசம் மட்டும் அல்ல, ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களின் (லூதரன் ஜேர்மானியர் உட்பட) தஞ்ச தேசம் என்பதும் கூட உண்மையே.

ஆனால் இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அமெரிக்காவின் மக்களாட்சி அரசும், அரசியலமைப்பும், சட்டத்தின் ஆளுமையும், கிட்டதட்ட confederal அளவில் பகிரப்பட்டுள்ள மாநில அதிகார கட்டமைப்புமே.

இதனால்தான் ஒரு உள்ளக ஸ்திரத்தன்மையை அமெரிக்காவால் உருவாக்கி பேண முடிகிறது.

ஆனால் அமெரிக்காவின் உள்ளே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டல் முதலாளித்துவமும், சுதேசிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், right to bear arms, abortion போன்ற விடயங்களும், தற்போது அமெரிக்காவில் ஒரு உள் பிளவை ஏற்படுத்தி வருகிறது.

இது நகர், கிராமம். வெள்ளை காலர், நீலக்காலர், வெள்ளை, லத்தினோ, கறுப்பு, சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் என பல மட்டங்களில் பிளவாக தெரிகிறது.

இந்த வேற்றுமைகள் ஜனநாயக நாட்டில் சகஜம்தான் என்பது உண்மையே,

கெட்டிஸ்பேர்க் உரை நிகழும் போது நாடு இதைவிட துருவப்பட்டிருந்தது என்பதும் உண்மையே,

அதேபோல் இதை சிலர் இலகுவாக culture wars என கடந்து போனாலும், இது அமெரிக்காவின் அடித்தளத்தை அசைத்துப்பார்க்கும் ஒரு பிளவாக அமைய வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

சோழ, கிரேக்க, ரோம, மொகலாய என பல பேரரசுகள் அழிந்தது உள்நாட்டில் ஸ்த்திரத்தன்மை குலைந்தமையாலே.

எனது கணிப்பில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் உடையுமாயின், அது உள்ளே இருந்தே ஆரம்பிக்கும்.

9 hours ago, island said:

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

இன அழிப்பு என்பது மிகவும் பெரிய வார்த்தை.

ஆனால் இந்தியாவின் இட ஒதுக்கீடு, பல்லாயிரம் வருடமாக பிராமணர் அனுபவித்த unfair advantage ஐ இல்லாமல் செய்தது (ஓரளவு). அதனால் பலர், IT போன்ற இட ஒதுக்கீட்டை bypass பண்ணி படிக்க கூடிய துறைகளில் புகுந்து, அதன் மூலம் அமெரிக்கா/மேற்கிக்கு இடம்பெயர்ந்து - தம் மேலாண்மையை தக்க வைக்கிறார்கள்.

இதே போல் தென்னாபிரிகா வெள்ளை இனத்தவரும் கூட செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஆர்ப்பாட்டம்,அகங்காரம்,அதிகப் பிரசங்கித்தனம் இல்லாத அமைதியான நறுக்கென சொல்லும் கருத்துக்கள்.

உங்கள் கருத்தை மனதார முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படியான கருத்துக்கள் தான் யாழ்களத்திற்கு தேவை.
தொடருங்கள்.

🤣

ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்……

இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣.

இதை விட குறைவாக அமேரிக்காவின் நல்ல பக்கத்தையும் எழுதிய பல உறவுகளுக்கு நீங்கள், வெள்ளையின விசுவாசி, மேற்கின் அடிமை, அமெரிக்கன் அடிமை என பல இளமானி, முதுமானி, ஏன் முனைவர் பட்டங்கள் கூட வழங்கி உள்ளீர்கள்🤣

பலர் நமுட்டு சிரிப்போடு கடந்து போயிருப்பார்கள். 

எனக்கு வாய் சும்மா இராதே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்……

இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣.

அப்படியல்ல.
இங்கே பல இடங்களில் நகைச்சுவைகளை தவிர்த்து உண்மையாக விவாதிக்கும் போது எதிர்க்கருத்து வைப்பவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்து கருத்து எழுதுவதாலேயே பல பிரச்சனைகள் வருகின்றது. நீங்கள் கூட மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற பாணியிலேயே கருத்தெழுதுபவர்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

அப்படியல்ல.
இங்கே பல இடங்களில் நகைச்சுவைகளை தவிர்த்து உண்மையாக விவாதிக்கும் போது எதிர்க்கருத்து வைப்பவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்து கருத்து எழுதுவதாலேயே பல பிரச்சனைகள் வருகின்றது. நீங்கள் கூட மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற பாணியிலேயே கருத்தெழுதுபவர்.

சரி நான் அப்படியே மற்றவருக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எழுதுகிறேன் என்றே வைப்போம் (இதை பற்றி கீழே எழுதுகிறேன்), அதற்காக நான் சூரியன் கிழக்கில் எழும், சூரிய சக்தியால் பயிர் வளரும் என எழுதினால்….இல்லவே இல்லை, அது சூரியனே இல்லை, 60 வாட்ஸ் பல்பு, அது எழுவது மேற்கில், அதனால் பயிர் அழியும் என்று எழுதி, எனக்கு சூரிய அடிமை, என பட்டம் தருவது முறையான செயலா?

பிறகு அதையே உங்கள் அபிமான கருத்தாளர் சொன்னால்…ஓமோம் அது சரிதான்…நீங்கள் தன்மையாக சொல்கிறீர்கள் என்றால்?

அப்போ நீங்கள் ஒரு கருத்தை ஏற்பதும், ஆதரிப்பதும் யார் சொல்கிறார்கள்? அவரின் அணுகுமுறையையில்தான் தங்கியுள்ளது? கருத்தில் அல்ல?

—————

நான் எடுத்தவுடன் எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு எதுவும் தெரியாது என எழுதுவதில்லை. ஆனால் சிலதை நக்கல், மற்றும் அழுத்தம் திருத்தமாக, ஆதாரபூர்வமாக எழுதுவேன்.

அது பின்வரும் வகையில் கருத்து எழுதுவோர்க்கு.

1. தரவு பிழைகளை தரவு என எழுந்தமானமாக அடித்து விடுவோர், தம் மனதில் உதித்த கற்பனைகளை வரலாறு என பதிய விளைவோர்.

2. சதி கோட்பாட்டை காவுவோர்

3. குறித்த ஒரு கட்சிக்கு வாழ்க்கைபட்டு விட்டு, அதன் அஜெண்டாவை யாழில் நகர்த்த முனைவோர்

4. அப்பட்டமான இந்திய கையாட்கள்

5. மேலே சொன்னது போல் கோஷான் (அல்லது அவர் போல இன்னொருவர்) வடக்கே இழுத்தால், நாம் தெற்கே இழுத்தே ஆக வேண்டும் என விஷமம் செய்யும் குதர்கவாதிகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இன அழிப்பு என்பது மிகவும் பெரிய வார்த்தை.

ஆனால் இந்தியாவின் இட ஒதுக்கீடு, பல்லாயிரம் வருடமாக பிராமணர் அனுபவித்த unfair advantage ஐ இல்லாமல் செய்தது (ஓரளவு). அதனால் பலர், IT போன்ற இட ஒதுக்கீட்டை bypass பண்ணி படிக்க கூடிய துறைகளில் புகுந்து, அதன் மூலம் அமெரிக்கா/மேற்கிக்கு இடம்பெயர்ந்து - தம் மேலாண்மையை தக்க வைக்கிறார்கள்.

இதே போல் தென்னாபிரிகா வெள்ளை இனத்தவரும் கூட செய்கிறார்கள். 

அதாவது காலம் காலமாக தம்மை தாமே உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களை தீண்ட தகாதவர்கள் என்று தாழ்ததி அவர்களின் கல்வியை மறுத்த பிராமண வர்ககத்தினர் காலப்போக்கில் மற்றவர்களும் படித்து முன்னேறுவதை பொறுக்கமாட்டாமல் மனம் புழுங்குவறகு பெயர் இன அழிப்பா?  அமெரிக்கா சென்று அங்கும் நமது கேவலமான ஜாதி  ஒடுக்கு முறைகளை கட்டவிழ்தது விடும் செயலை என்னவென்பது? 

நான் அறிந்த வரையில்,  ஈழத்தில் நடந்த தமிழ் இன அழிப்பிற்கு நீண்ட காலமாக உறுதுணையாக இருந்தவர்கள் இந்திய பார்பனர்களே!

 ஈழத்தில் யுத்தம் நடந்த 30 வருடங்களிலும் ஐரோப்பிய பத்திரிகைகளில் தமிழர் போராட்டத்தையும் அதன்ன் தலைமையான விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதமாக சித்தரித்து  வெளிவந்த அத்தனை கட்டுரைகளுக்குமான  செய்தி மூலம் யார் என்று கட்டுரையின் இறுதியில் பார்ததால் அங்கு சிங்களவர்களின் பெயரை விட அதிகமாகவே சர்மா, ஜோஷி, ராவ், பட்டேல், ஷ்ஷ்ரி, செளத்ரி என்று பார்ப்பனப் பெயர்களாகவே இருந்ததை பலரும் அவதானித்திருப்போம். எமது  இனத்தின் அழிவுக்கு முக்கிய கால் கோளாக இருந்தவர்களுக்கு, இன்றும் எமக்கான நியாயத்தினை அடைவதற்கு தடையாக இருக்கும் ஒரு வர்ககத்தினருக்கு   இனவழிப்பு நடந்ததாக நீலிக் கண்ணீருடன் ஒரு வரலாற்று பொய்யை யாழில் கருத்தோடு கருத்தாக தூவி விட்டு செல்வது முற்றிலும் நியாயமற்ற அறமற்ற செயல். அதையே சுட்டிக்காட்டினேன். 

ஈழத்தமிழர்களின் மாபெரும் பலவீனம் என்ன என்பதை இந்திய பார்பபனவர்ககமும் அதன் அடிமைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அது பலவீனம் என்று கூட உணராது அதை பலமாக நினைத்து விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாக பலியாகிறது எமது தமிழ்இனம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, goshan_che said:

சரி நான் அப்படியே மற்றவருக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எழுதுகிறேன் என்றே வைப்போம் (இதை பற்றி கீழே எழுதுகிறேன்), அதற்காக நான் சூரியன் கிழக்கில் எழும், சூரிய சக்தியால் பயிர் வளரும் என எழுதினால்….இல்லவே இல்லை, அது சூரியனே இல்லை, 60 வாட்ஸ் பல்பு, அது எழுவது மேற்கில், அதனால் பயிர் அழியும் என்று எழுதி, எனக்கு சூரிய அடிமை, என பட்டம் தருவது முறையான செயலா?

நான் என்ன நினைத்தேனோ அது சரியாகவே நடக்கின்றது.....:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் என்ன நினைத்தேனோ அது சரியாகவே நடக்கின்றது.....:face_with_tears_of_joy:

பதில் இல்லை என்றால் வெறும் வாயை மெல்லுவதற்கு ஒரு சிகரெட்ட பத்த வைக்கலாம்?🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி Goshen.

அமெரிக்கா சுதேசிகளுக்கு இழைத்த கொடுமைகள், ஆபிரிக்கர்களை மிருகங்கள் போல நடத்தியமை இன்று பெரும்பாலான அமெரிக்கர்களினால் வெறுக்கப்பட்டு வருகிறது. தாம் செய்தது, செய்வதில் நிறைய தவறுகள், அநீதிகள் இருப்பதை உணராமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் இல்லை.

ஆனால் இன்று உலகத்தில் பல நாடுகளும் காலனித்துவம் அற்று, கொடுங்கோல் ஆட்சி இல்லாமல் சுதந்திரம் பெற்ற நாடுகளாக இருப்பதற்கும் பொருளாதாரமற்றும் பொதுவான ஸ்தரநிலைமை நிலவுவதற்கு அமெரிக்காவின் சீரான அரசியல், ஆளுமை மற்றும் இருப்பும் தான் காரணம்.

இதை பற்றி விரிவாக ஒரு பதிவை இன்னொருமுறை போடுகிறேன். எவ்வளவுதான் உள்ளக பிரச்சனைகள் இருந்தாலும், நாட்டின் ஒருமைப்பாடு, வளர்ச்சி என்று வரும்போது எல்லா மாநில ஆட்சியாளர்களும் ஒன்று கூடி ஒன்றையே செய்வார்கள். எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை மாறுவது கடினம்.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

🤣

ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்……

இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣.

இதை விட குறைவாக அமேரிக்காவின் நல்ல பக்கத்தையும் எழுதிய பல உறவுகளுக்கு நீங்கள், வெள்ளையின விசுவாசி, மேற்கின் அடிமை, அமெரிக்கன் அடிமை என பல இளமானி, முதுமானி, ஏன் முனைவர் பட்டங்கள் கூட வழங்கி உள்ளீர்கள்🤣

பலர் நமுட்டு சிரிப்போடு கடந்து போயிருப்பார்கள். 

எனக்கு வாய் சும்மா இராதே🤣

Goshen னுக்கு எத்தனை வயது நான் அறிவுரை சொல்லலாமா என்று தெரியவில்லை. எந்த ஒரு களத்திலும் எம்மோடு நேராக விவாதிப்பர்வர்களுடன் நாமும் விட்டுக்கொடுக்காமல் சுவாரசியமாகவும் வாதிடலாம், தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

ஆனால் ஒருவர் இன்னொருவர் கருத்தை ஆமோதிக்கும்போது, அவரை மற்ற கருத்துப்பரிமாற்றங்களில் எப்படி இருந்தார், இருப்பார் என்று எமது கணிப்புகளை தெரிவிப்பது, அந்த திரியின் பாதையில் இருந்து, பார்வையாளர்கள், பங்காளர்களை திசை திருப்பவதாகவும், சந்தர்ப்பத்தை பாவித்து இன்னொருவரை குறை கூறுவதாகவும் இருக்கும்.

பொதுவாக, எமக்கு யாருடனும் நேரடி பிரச்சனை பிரச்னை இருந்தாலே ஒழிய மற்ற விடயங்களை பார்த்தும் பார்க்காமலும் கடந்து போவதே நல்லது.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி Goshen.

ஆனால் இன்று உலகத்தில் பல நாடுகளும் காலனித்துவம் அற்று, கொடுங்கோல் ஆட்சி இல்லாமல் சுதந்திரம் பெற்ற நாடுகளாக இருப்பதற்கும் பொருளாதாரமற்றும் பொதுவான ஸ்தரநிலைமை நிலவுவதற்கு அமெரிக்காவின் சீரான அரசியல், ஆளுமை மற்றும் இருப்பும் தான் காரணம்.

நிச்சயமாக,

உண்மையில் பிரித்தானியா தனது காலனித்துவத்தை விலக்கி கொண்டதில் அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியது.

2ம் உலக யுத்த முடிவில், 1ம் உலக யுத்தத்தை முடிவை போல் மீண்டும் காலனிய ஆட்சி முறையை தொடரலாம் என்பதே பிரித்தானியாவின் நப்பாசையக இருந்தது. ஆனால் மறைமுகமான அழுத்தம் மூலம் படிபடியாக பிரித்தானிய காலனிய வலையமைப்பை dismantle பண்ணி, பல நாடுகள் இன்று சுதந்திர நாடுகளாக இருக்கவும், ஆளுடன் ஆள் அடிபடுவதையே வரலாறாக கொண்ட ஐரோப்பியர் 2ம் உலக யுத்தத்தின் பின் அமைதியாக இருக்கவும் அமெரிக்காவே காரணம்.

எந்த ஒரு முதன்மை நாட்டின் தலைமையும் 100% சரியானதல்ல. அமெரிக்கா பல பிழைகளை விட்டு உள்ளது.

ஈராக்கின் 2ம் யுத்தம் ஒரு யுத்த குற்றமே.

ஆனாலும் அமெரிக்காவல் விளைந்த பல நல்லதும் உண்டு.

37 minutes ago, nilmini said:

இதை பற்றி விரிவாக ஒரு பதிவை இன்னொருமுறை போடுகிறேன். எவ்வளவுதான் உள்ளக பிரச்சனைகள் இருந்தாலும், நாட்டின் ஒருமைப்பாடு, வளர்ச்சி என்று வரும்போது எல்லா மாநில ஆட்சியாளர்களும் ஒன்று கூடி ஒன்றையே செய்வார்கள். எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை மாறுவது கடினம்.

நிச்சயம் எழுதுங்கள்.

அமெரிக்க மக்களின் சுதந்திர வேட்கையையும், அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பபட்ட, American Dream ஐ பற்றியும் தமிழில் அதிகம் யாரும் எழுதுவதில்லை.

எமது விடயத்தில் அமெரிக்கா எடுத்த மோசமான முடிவு என்ற ஒன்றை மட்டும் வைத்து - 200 வருட வரலாற்றை எடை போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அமெரிக்கர்களின் ஒற்றுமை மாறக்கூடாது என்பதுதான் எனது விருப்பும். ஆனால் MAGA பேர்வழிகள் அதை சிறுக, சிறுக துண்டாடி விடக்கூடும் என அஞ்சுகிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

Goshen னுக்கு எத்தனை வயது நான் அறிவுரை சொல்லலாமா என்று தெரியவில்லை. எந்த ஒரு களத்திலும் எம்மோடு நேராக விவாதிப்பர்வர்களுடன் நாமும் விட்டுக்கொடுக்காமல் சுவாரசியமாகவும் வாதிடலாம், தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

ஆனால் ஒருவர் இன்னொருவர் கருத்தை ஆமோதிக்கும்போது, அவரை மற்ற கருத்துப்பரிமாற்றங்களில் எப்படி இருந்தார், இருப்பார் என்று எமது கணிப்புகளை தெரிவிப்பது, அந்த திரியின் பாதையில் இருந்து, பார்வையாளர்கள், பங்காளர்களை திசை திருப்பவதாகவும், சந்தர்ப்பத்தை பாவித்து இன்னொருவரை குறை கூறுவதாகவும் இருக்கும்.

பொதுவாக, எமக்கு யாருடனும் நேரடி பிரச்சனை பிரச்னை இருந்தாலே ஒழிய மற்ற விடயங்களை பார்த்தும் பார்க்காமலும் கடந்து போவதே நல்லது.

நமக்கு இடையான வயது இடை வெளி 15 க்கு கிட்ட வரும் என நினைக்கிறேன். நீங்கள் நிச்சயம் எனக்கு அறிவுரை கூறலாம். நானும் ஏற்றுக்கொள்வேன்.

திரி திசைமாறும் என்பதை ஏற்று கொள்கிறேன். சில சமயங்களில் சில இரெட்டை நிலைப்பாடுகளை அப்படியே போட்டுடைத்து விடுவது - தவிர்க்க கூடிய அசெளகரியம்தான்.

ஆனால் இப்படி போட்டுடைப்பது என் இயல்பிலேயே அமைந்த சுவாபம்.  நான் மேலே சொன்னது போல் “ நான் சும்மா இருந்தாலும், வாய் சும்மா இராது 🤣”.

உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்🙏🏾.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

பதில் இல்லை என்றால் வெறும் வாயை மெல்லுவதற்கு ஒரு சிகரெட்ட பத்த வைக்கலாம்?🤣

பற்ற வைத்த தீ ஒரு வருடமாக  பற்றி எரிவதில் எனக்கு பெரிய சந்தோசம். உங்களைப்போன்றோரின் அருமை பெருமை,திறமைகளை வெளிக்காட்டும் தளமாகவும் அமைந்ததையிட்டும் மகா சந்தோசம். :rolling_on_the_floor_laughing:

வாழ்க வளர்க :tatsch: :grinning_squinting_face:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பற்ற வைத்த தீ ஒரு வருடமாக  பற்றி எரிவதில் எனக்கு பெரிய சந்தோசம். உங்களைப்போன்றோரின் அருமை பெருமை,திறமைகளை வெளிக்காட்டும் தளமாகவும் அமைந்ததையிட்டும் மகா சந்தோசம். :rolling_on_the_floor_laughing:

வாழ்க வளர்க :tatsch: :grinning_squinting_face:

ஒரு வருடத்தில்தான் எத்தனை மாற்றம் இல்லையா அண்ணை?

உங்களிடத்தில் இலங்கை விடயத்தில், இந்தியா விடயத்தில்  ஏற்பட்ட நிலை மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.