Jump to content

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிற்கு அதிகாரத்தை கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது – செல்வம் ஆதங்கம்

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது.

தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாணய நிதியம் விசேட நிபந்தனை முன்வைத்துள்ளது.

ஆட்சியாளர்கள் ஊழலை முதன்மையாக நிலை நிறுத்தி செயற்பட்டதால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

ஊழல் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் தான் நாட்டின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1328343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி 13 ஐ நிறைவேற்றச் சொல்லி இந்தியாவுக்கு எழுதின கடிதம் என்னாச்சு?பதில் வந்ததா?சுதந்திரத்தினத்திற்கிடையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று சொன்ன ரணிலுடன் நடத்திய பேச்சுவார்ததை என்னாச்சு. பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாதவர்கள் தீர்வுக்கு விரோதமானவர்கள் என்று அரசியல் கட்சிகளும் பத்தி எழுத்தாளர்களும் எழுதினார்களே என்னாச்சு?கொங்சக் காலமாக சுமத்திரனின் அறிக்கைகள் ஒன்றையும் காணவில்லை. அவரும் சம்பந்தர் போல தூக்கத்திற்குப் போய் விட்டாரோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இதை பற்றி எல்லாம் சிலாகித்து ஒரு ஆறுமாதம் ஓடி இருக்கும்.

இதுவரை எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இப்போ, முதல் கட்ட பணமும் கொடுத்த பின், அதுவும் இலங்கை பாராளுமன்றில் இப்படி பேசுவதுக்கு பெயர்தான் ஏமாற்று அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவதேச நாணய நிதியம் இப்படி நேரடியான நிபந்தனைகளை விதிக்காது,  அது பொருளாதார ரீதியான நிபந்தனைகளை மட்டுமே நேரடியாக விதிக்கும் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி அரசியலையே தமிழ் அரசியல் கடந்த 70 வருடங்களாக கொண்டுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியலுமே இவ்வாறானது தான்.

Smart politic க்கும் தமிழருக்கும் எப்போதுமே பல லட்சக்கணக்கான ஒளியாண்டு தூரம் உள்ளது. அந்த தூரத்தை பேணியபடியே தமிழ் அரசியல்  கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறது. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பேசிப்பேசியே சாக வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சரவதேச நாணய நிதியம் இப்படி நேரடியான நிபந்தனைகளை விதிக்காது,  அது பொருளாதார ரீதியான நிபந்தனைகளை மட்டுமே நேரடியாக விதிக்கும் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவி அரசியலையே தமிழ் அரசியல் கடந்த 70 வருடங்களாக கொண்டுள்ளது. செல்வம் அடைக்கலநாதன் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் அரசியலுமே இவ்வாறானது தான்.

Smart politic க்கும் தமிழருக்கும் எப்போதுமே பல லட்சக்கணக்கான ஒளியாண்டு தூரம் உள்ளது. அந்த தூரத்தை பேணியபடியே தமிழ் அரசியல்  கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து பயணிக்கிறது. 

இதையேதான் Gary ஆனந்தசங்கரியும் சொல்கிறார். அப்ப அவரும் 70 ஆண்டுகால stupid politics செய்கிறாரா?

எல்லாமுமே எப்படி பொதி செய்யப்படுகிறது என்பதில்தான் உள்ளது. How it’s being presented.

ஒரு நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் கோடு கீறி பிரிக்க முடியாது.

உதாரணமாக:

படைகளை வடக்கு கிழக்கில் இருந்து விலக்கி கொள்ளுங்கள் - அரசியல் நிபந்தனை.

அதீத செலவீனத்தை குறைக்கும் முகமாக இராணுவ பட்ஜெட்டை 40% குறைத்து, மாவட்டத்துக்கு ஒன்று என்ற வகையில் மூன்று படைகளின் பிரசன்னத்தையும் மட்டுப்படுத்தி - செலவீனத்தை குறையுங்கள்- பொருளாதார நிபந்தனை.

விளைவு ஒன்றுதான்.

இதை IMF கேட்டொருக்கலாம் (small print இல் கேட்ககூடும்) - ஆனால் இப்படி எந்த நகர்வையும் எந்த ஈழ தமிழ் எம்பியும் முன்னெடுக்கவில்லை.

Gary இன்னும் சில புலம்பெயர் அமைப்புகள் மட்டுமே கோரின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. 

2009 இன் பின்னர் புலம் பெயர் அரசியல் அமைப்புக்கள் அரசியலை முன்னெடுக்க  பாரிய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நீங்கள் கூறியபடியான மறைமுக அழுத்தத்தினை IMF  மேற்கொள்ள எம்மால் Lobby செய்திருக்க முடிந்திருக்கும்.  புலம் பெயர் மக்களின் பொருளாதார பலமும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும்.

ஆனால்,  புலம் பெயர் அரசியல் நடத்தியவர்கள்  ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து இருந்த வளங்களையும் பங்கு பிரித்துக் கொண்டு  உதிரிகளாகி நானா, நீயா என்று சில்லறைத்தனமான  அரசியல் செய்து தமிழ் மக்களாலேயே ஏளனமாக பார்ககப்படும் நிலையில் இருக்கும் நிலையில்  சர்வதேச நாணய நிதியத்திடம்  கோரிக்கைகளை வைப்பது எடுபடாது. தாயகத்திலும் அதே நிலைதான். இரு பகுதியும் ஒரே அரசியலையே செய்தார்கள், செய்கிறார்கள். அதுவே தமிழர் மரபு போலும். 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

முரண்பட எதுவமில்லை.

6 minutes ago, island said:

அதுவே தமிழர் மரபு போலும். 

யாழை பார்த்தாலே தெரியவில்லையா? வெறும் கருத்து களத்திலேயே இப்படி என்றால்? பெயர், புகழ், அதிகாரம், பணம் கிடைக்கும் பொதுவெளியில் ?

#ஒரு சோறு பதம்

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, island said:

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. 

2009 இன் பின்னர் புலம் பெயர் அரசியல் அமைப்புக்கள் அரசியலை முன்னெடுக்க  பாரிய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தால் நீங்கள் கூறியபடியான மறைமுக அழுத்தத்தினை IMF  மேற்கொள்ள எம்மால் Lobby செய்திருக்க முடிந்திருக்கும்.  புலம் பெயர் மக்களின் பொருளாதார பலமும் அதற்கு உறுதுணையாக இருந்திருக்கும்.

ஆனால்,  புலம் பெயர் அரசியல் நடத்தியவர்கள்  ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து இருந்த வளங்களையும் பங்கு பிரித்துக் கொண்டு  உதிரிகளாகி நானா, நீயா என்று சில்லறைத்தனமான  அரசியல் செய்து தமிழ் மக்களாலேயே ஏளனமாக பார்ககப்படும் நிலையில் இருக்கும் நிலையில்  சர்வதேச நாணய நிதியத்திடம்  கோரிக்கைகளை வைப்பது எடுபடாது. தாயகத்திலும் அதே நிலைதான். இரு பகுதியும் ஒரே அரசியலையே செய்தார்கள், செய்கிறார்கள். அதுவே தமிழர் மரபு போலும். 

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

ஆனால் இதிலும் எதிரி தான் வென்றான் 

எவ்வளவு மன்றாடி கெஞ்சி நின்றபோதும் எதிரி எம்மின துரோகிகளின் துணையுடன் பலமாக நின்று பலவீனப் படுத்தினான். ஆனால் இன்னமும் காலம் தாழ்த்தி விடவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

ஆனால் இதிலும் எதிரி தான் வென்றான் 

எவ்வளவு மன்றாடி கெஞ்சி நின்றபோதும் எதிரி எம்மின துரோகிகளின் துணையுடன் பலமாக நின்று பலவீனப் படுத்தினான். ஆனால் இன்னமும் காலம் தாழ்த்தி விடவில்லை. 

உண்மை…..

அவன் ஒரு நாடாக நின்று பேசும் போது…..

அங்கே இருக்கும் எம் எம்பிக்கள் வாய்பேசா மடந்தைகளாக இருக்கும் போது…

இன்னும் கொஞ்சபேர் அவனுக்கே வேலை செய்யும் போது….

புலம்பெயர் சக்தி, அப்படி ஒன்று இருக்கிறதா? என கேட்கும் அளவில் இருக்கும் போது….

ஒரு ஐந்து மொட்டைகள் சொல்லியது அம்பலம் ஏறவில்லை என்பதே…

உண்மை.

9 minutes ago, விசுகு said:

ஆனால் இன்னமும் காலம் தாழ்த்தி விடவில்லை. 

இதுவும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

உண்மை…..

அவன் ஒரு நாடாக நின்று பேசும் போது…..

அங்கே இருக்கும் எம் எம்பிக்கள் வாய்பேசா மடந்தைகளாக இருக்கும் போது…

இன்னும் கொஞ்சபேர் அவனுக்கே வேலை செய்யும் போது….

புலம்பெயர் சக்தி, அப்படி ஒன்று இருக்கிறதா? என கேட்கும் அளவில் இருக்கும் போது….

ஒரு ஐந்து மொட்டைகள் சொல்லியது அம்பலம் ஏறவில்லை என்பதே…

உண்மை.

இதுவும் உண்மை.

நன்றி  ஐயா

இந்த  உண்மையை  முதலில்  நாம்  தரிசிக்கணும்

அதை விடுத்து

ஆளையாள்  குற்றம்  சாட்டுவதோ

அல்லது முயலாதிருப்பதோ

ஒரு வகையில்  எதிரிக்கு துணைபோகுலே.

அவன்  ஏத்தி விட்டு விட்டு சும்மா  இருந்து தான்  செய:யவேண்டியவை  அனைத்தையும்  நாம் செய்வதை வேடிக்கை  பார்க்கின்றான்

உண்மையில்  இந்த  பொருளாதார நெருக்கடி நேரத்தில்

நாம்  புலத்தில்  பலமானதொரு அணியாக  இருந்திருப்போமாயின்

மிகவம்  இலகுவாக வேரோடு சாய்த்திருக்கலாம்

தலைவர் அதைத்தான் சொல்லி  நம்பி  சென்றார்

ஆனால்  சந்தர்ப்பம்  எம்மிடம்  வந்தபோதும்?????

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம்!

இவ்வளவு நாளா ஆளைஆள் காலை வாரினதைத் தவிர சேர்ந்து செய்த வேலைகள் தான் என்ன?

சம்பந்தரும் சுமந்திரனும் எல்லா நாட்டு தூதரக அதிகாரிகளுடனும் அடிக்கடி பேச்சுவார்த்தை நடாத்தினார்களே என்ன தான் பேசினார்கள் என்றாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதையேதான் Gary ஆனந்தசங்கரியும் சொல்கிறார். அப்ப அவரும் 70 ஆண்டுகால stupid politics செய்கிறாரா?

கொடை வழங்கும் நாடுகளில் கனடா இல்லையா?

இருக்கு என்றால் அவர்களால் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்க முடியவில்லை.

கரி சங்கரி போன்றவர்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொடை வழங்கும் நாடுகளில் கனடா இல்லையா?

இருக்கு என்றால் அவர்களால் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்க முடியவில்லை.

கரி சங்கரி போன்றவர்கள் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?

பொறுப்பு துறப்பு : நான் Gary யின் வால்பிடி அல்ல. பத்திரிகை செய்தி தவிர எனக்கு அவரிடம் பரிச்சயமும் இல்லை.

————

ஆனால் ஒரு வருடத்துக்கு முதலே ஐ எம் எவ் வை இராணுவ அளவை குறைக்கும் படி கோரும் படி, கரி கோரிக்கை வைத்தார். தொடர்ந்தும் அழுத்தினார் என அறிகிறேன்.

https://www.newscutter.lk/sri-lanka-news/canadian-parliamentarian-writes-to-imf-on-sri-lanka-bailout-21032022-28074/

கனடாவில் இன்னொரு அமைப்பும் அறிக்கை விட்டது, ஐ எம் எவ்வை தொடர்பும் கொண்டது.

மிச்சம் யாரும் எதுவும் செய்ததாக தெரியவில்லை.

இப்போ குதிரைகள் ஓடிய பின் லாயத்தை பூட்டுவதாக நடிக்கிறார்கள்.

இது தனி மனிதர்களால் சாதிக்க கூடியவிடயம் அல்ல. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பொறுப்பு துறப்பு : நான் Gary யின் வால்பிடி அல்ல. பத்திரிகை செய்தி தவிர எனக்கு அவரிடம் பரிச்சயமும் இல்லை.

————

ஆனால் ஒரு வருடத்துக்கு முதலே ஐ எம் எவ் வை இராணுவ அளவை குறைக்கும் படி கோரும் படி, கரி கோரிக்கை வைத்தார். தொடர்ந்தும் அழுத்தினார் என அறிகிறேன்.

https://www.newscutter.lk/sri-lanka-news/canadian-parliamentarian-writes-to-imf-on-sri-lanka-bailout-21032022-28074/

கனடாவில் இன்னொரு அமைப்பும் அறிக்கை விட்டது, ஐ எம் எவ்வை தொடர்பும் கொண்டது.

மிச்சம் யாரும் எதுவும் செய்ததாக தெரியவில்லை.

இப்போ குதிரைகள் ஓடிய பின் லாயத்தை பூட்டுவதாக நடிக்கிறார்கள்.

கனடாவும் இலங்கைக்கு பணம் கொடுக்குதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தனிமனிர்கள், சமூகத்தின் பிரதிநிதிகள் என வலம் வருவோர், அமைப்புகள் கூடி செய்ய வேண்டியது.

1 minute ago, ஈழப்பிரியன் said:

கனடாவும் இலங்கைக்கு பணம் கொடுக்குதா?

ஐ எம் எவ் என்பது ஒரு கூட்டுறவு சங்கம் போல. எல்லா உறுப்பு நாடுகளும் அவரவர் பொருளாதாரத்தின் வலுவுக்கு ஏற்ப பணத்தை ஐ எம் எவ் விடம் கொடுக்கும்.  சிக்கல் வந்தால் இதில் இருந்து எடுத்து அந்த நாட்டுக்கு கொடுக்கப்படும்.

கனடா ஒரு ஜி7 நாடு - எனவே அதன் பங்களிப்பு கணிசமானது.

நேரடியாகவும் இலங்கைக்கு கனடா bilateral aid கொடுக்கிறது என நினைக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 07:48, புலவர் said:

கொங்சக் காலமாக சுமத்திரனின் அறிக்கைகள் ஒன்றையும் காணவில்லை. அவரும் சம்பந்தர் போல தூக்கத்திற்குப் போய் விட்டாரோ?

புலவர்... இப்ப தான், கொஞ்சம் நிம்மதியாயிருக்கிறம். அதை கெடுத்துப் போடாதீங்க. 😂
வேலியிலை போற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடாதீங்க. 🤣

"சிலர் வாயை திறந்தால்... வெள்ளி குடுக்கலாம்.
சிலர் வாயை மூடியிருந்தால்...
பவுண்  கொடுக்கலாம்."   🤣

சுமந்திரன், பவுணுக்கு பெறுமதியான... இரண்டாவது ரகம். 😁

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.