Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 02:18, ஏராளன் said:

ஆலயத்துடன் தொடர்புப்படாது வெளிநபர்களே இதனை செய்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன்

திட்டமிட்டு தமிழரிடையே மத கலவரத்தை ஏற்படுத்தவும் அந்த இடைவெளியில் புத்தரை வைத்து நிலம் பறிக்கும்செயற்திட்டம்.

On 30/3/2023 at 02:18, ஏராளன் said:

தொல்பொருள் திணைக்களத்திற்கு அதனை செய்ய வேண்டும் என்றால், பல இடங்களை அவ்வாறு செய்ய முடியும்.

ஒவ்வொரு இடமாக அதைத்தானே செய்து கொண்டு வருகிறார்கள். அப்பாவி போல் கதையளக்கிறார் பச்சைத்திருடன்! மக்கள் தங்கள் ஆலயங்களில் தங்கள் வழிபாடுகளை நிறைவேற்ற விடாமல் தடுத்து தொல்பொருள் திணைக்களமும் போலீசாரும் காவல் செய்யும் போது வெளிநபர்கள் எப்படி அங்கு சென்று இந்த அழிவு வேலைகளை செய்திருக்க முடியும்? அதை தடுத்து நிறுத்த முடியாதவர்கள் இன்னும் ஏன் அங்கு நிலைத்து நிற்க வேண்டும்? இந்த நாச வேலையை தொல்பொருள் திணைக்களமோ போலீசாரோ செய்யவில்லையென்றால் மக்களை அங்கு செல்லாமல் ஏன் தடுத்து நிறுத்த வேண்டும்?

 

On 28/3/2023 at 23:42, island said:

ஈழத்தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார்.

தமிழரை காப்பாற்ற கடவுளையும் அனுமதிக்காது சிங்களம். ஆனால் அவர் வெகுண்டெழுந்தால் தாங்காது சிங்களம். ஒரு ஞானியை வைத்து உலகை ஏமாற்றும் சிங்களம் தமிழரின் கடவுளரையும் அவ்வாறே நினைத்து சீண்டிப்பாக்குது. பலனை வெகுவிரைவில் அனுபவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேலையை கோயிலோடு சம்மந்தப்பட்டவர்கள் யாராவது செய்து இருக்க வேண்டும் அல்லது ஆமி செய்து இருக்க வேண்டும் ...இந்த இடத்திற்கு ஆமியின் அனுமதி இல்லாமல் போக முடியாது 
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த வேலையை கோயிலோடு சம்மந்தப்பட்டவர்கள் யாராவது செய்து இருக்க வேண்டும் அல்லது ஆமி செய்து இருக்க வேண்டும் ...இந்த இடத்திற்கு ஆமியின் அனுமதி இல்லாமல் போக முடியாது 
 

வெளியார் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாமே, அப்படியிருக்க யார் செய்தது என்று தடுத்தவர்கள் தான் கூறவேண்டும், அந்த பொறுப்பும் அவர்களுக்குரியதே! 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசியல் வாதிகள் வளர்த்த இனவாத பூதத்துக்கு நேரத்துக்கு நேரம் இப்படியான உணவு அளிக்கபடனும் இல்லியோ அவர்களை விழுங்கி விடும் எனும் பயம் குள்ள நரி ரணிலுக்கும் உண்டு அங்கை கை வைத்து இங்கை கை வைத்து ஆதி சிவனில் கை வைக்கிறார்கள் நடப்பது நல்லதுக்கே .

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பெருமாள் said:

சிங்கள அரசியல் வாதிகள் வளர்த்த இனவாத பூதத்துக்கு நேரத்துக்கு நேரம் இப்படியான உணவு அளிக்கபடனும் இல்லியோ அவர்களை விழுங்கி விடும் எனும் பயம் குள்ள நரி ரணிலுக்கும் உண்டு அங்கை கை வைத்து இங்கை கை வைத்து ஆதி சிவனில் கை வைக்கிறார்கள் நடப்பது நல்லதுக்கே .

இனவாதத்தை வளர்க்காமல் நாலு கோழியை வளர்த்தால் பிரயோசனமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நாலு முட்டையோடு கோழி அடைபடுத்துவிடும் அதைவைத்து மிகுதி அரசியலை எப்படி சமாளிப்பது? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு

Published By: T. SARANYA

01 APR, 2023 | 09:55 AM
image

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான  கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது.

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால்  பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள்  வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/151878

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வர கடவுளை தமிழ் மக்கள் போராடி காப்பாற்றி விட்டார்கள். கும்பாபிஷேகம் இன்று ஞாயிறு நடைபெறுகின்றது என்று சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் படையெடுப்பை தடுத்து, தன் பூர்வீகத்தை கைப்பற்றி, மீண்டும் முடிசூடுகிறார். இனி புத்தர் வேறிடம் நோக்கி நகருவார்!

கும்பாவிஷேக வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்பொலிஸாரால் கைது! இது சொல்லும் செய்தியென்ன? யார் சிலைகளை உடைத்தவர் என கண்டுபிடிக்க முடியாது ஊகம் வெளியிட்டவர்கள் அல்லது ஒப்புக்கொள்ள மறுத்தவர்கள் இந்த இளைஞரை கைது செய்வதன் உள்நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலை விவகாரம்: உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்

வெடுக்குநாறி மலை விவகாரம்: உரிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஒப்படைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர், விக்கிரகங்கள் ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துவைக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அத்துடன், வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜீவன் தொண்டமான் பிரஸ்தாபிக்கவுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலைக்கு களப் பயணம் மேற்கொண்ட இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் முதலில் வழிபாகளில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் ஆலய நிர்வாகத்துடன் கலந்துரையாடினார். ஆலய நிர்வாகத்திடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை. அவற்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் கோரினார்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் இருப்பதால், சட்டத்துக்கு மதிப்பளித்து, தீர்ப்பு வெளியான பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

https://athavannews.com/2023/1329224

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் அதிரடி : லிங்கத்துடன் வெடுக்குநாறி விரைந்தார்

சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சற்றுமுன்னர் சென்றிருந்தார்.

அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே அங்கு சென்றிருந்தனர்.

சேதமாக்கப்பட்ட ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும் நிர்மாணிப்பேன் என்று தெரிவித்திருந்த அமைச்சர் ஜீவன், லிங்கம் உள்ளிட்ட இன்னும் சில சிலைகளையும் எடுத்துச் சென்றிருந்தார். 

எனினும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரையிலும் எவ்விதமான நடவடிக்கையையும் முன்னெடுக்காது, ஆசீர்வாத பூஜை மட்டுமே இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதியின் இந்துசமய ஆலோசகர் பாபு சர்மா தெரிவித்தார்.

image_b9e8eba971.jpgimage_3c9f90ad58.jpgimage_fa7b27ef3f.jpgimage_661deb1c90.jpgimage_4cf08d583f.jpgimage_0300314512.jpgimage_461c2ff721.jpgimage_0ed75be246.jpg
 

 

https://www.tamilmirror.lk/வன்னி/ஜீவன்-அதிரடி-லிங்கத்துடன்-வெடுக்குநாறி-விரைந்தார்/72-315117

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and text that says "வெடுக்குநாறிமலை விவகாரம் குற்றவாளிகள் சிக்கவில்லை கைவிரிக்கின்றனர் பொலிஸார் வவுனியா வெடுக்குநா நிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆதிலிங்கம் உள்ளிட்ட சிலைகள் சேதமாக் கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவரும் அடையாளம் காணப் படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில், வவு னியா நீதிமன்றத்திற்கு சமர்ப் பணம் முன்வைக்கப்பட்டது. அத்துடன். இந்தவிடயம் தொடர்பான பக்கம் 02"May be an image of outdoors and text that says "அழிக்கப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யத் தடையா? ஆரம்ப பணிகளை முன்னெடுத்த 3 பேர் கைது வவுனியா வெடுக் குநாறி மலையில் சி தைக்கப்பட்ட சிவலிங் கத்தை பிரதிஷ்டை செய்வதற்காக அப்ப குதியில் சிரமதானத் தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் பக்கம் 02"2 செய்திகளையும் வாசித்தாலே யார்குற்றவாளிகள் என்பது தெளிவாகத் தெரியவரும்.குற்றத்றத்தை செய்தவர் மட்டுமல்ல அதை மறைப்பவரும் குற்றவாளியே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்  

Published By: NANTHINI

02 APR, 2023 | 04:08 PM
image

 

வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.

அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தன.  

இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது. 

IMG_20230402_12193653.jpg

இந்நிலையில் கடந்த வாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது. 

அதன் பிரகாரம், முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட சேதப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று (2) அதிகாலை விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

IMG_20230402_12204898.jpg 

எனினும், நேற்று (1) ஆலய நிர்வாகத்தினரை மீறி ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது. 

இதேவேளை இன்று விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்புக்கும் உறுதிபட தெரிவித்திருந்தனர்.  

அந்த வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன், ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.

எனினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி, இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். 

அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

IMG_20230402_12203704.jpg

நீங்கள் 'சிலைகளை வைப்போம்' என்று அறிக்கை விட்டபோது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்குரிய பதில் அவர்களால் வழங்கப்படவில்லை. 

ஆகவே, இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர். 

அத்துடன் நேற்று ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருக்கிறது என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

IMG_20230402_12203251.jpg

IMG_20230402_12201276.jpg

IMG_20230402_12193653.jpg

https://www.virakesari.lk/article/151954

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர். 

அரசாங்கத்துக்கு இன்றைய காலத்துக்கு தேவையான கதாநாயகர்கள் இவர்கள் தாம். மக்களின் உணர்வுகளை புரிந்து வழிகாட்டத்தெரியாத, நடைமுறை தெரியாத, எதிர்த்து கேள்வி கேட்க்காத, கட்டியிருந்த துண்டை கழற்றி சிங்களத்தை மூடுகிற பொம்மைகளை முடிசூட்டி அவர்கள் பின் மக்களை வளைத்து பிடிக்கும் தந்திரம். இவர்கள் வெறும் வாய்பேசா அமைச்சர்கள்தாம், ஆனால் மக்களிடையே இத்தகைய படம் காட்டல், அறிக்கை விடல் போன்றவற்றை செய்து தாம் ஏதோ இயங்குவது போலவும் அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது போலவும் மாதிரி செய்வது இவர்களது தொழில். சிங்களம் இவர்களை வெறும் நகைச்சுவை நடிகர்களாக கையாளுவது இவர்களுக்கு புரிந்து கொள்ள அறிவுமில்லை, தாங்களாக செயற்பட தைரியமுமில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.