Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது ; அகில இலங்கை இந்துமா மன்றம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவரும் சிவபூமியின் அறக்கட்டளைத் தலைவருமான கலாநிதி ஆறு திருமுருகன் கருத்துத் தெரிவிக்கின்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும்தெரிவிக்கையில்,

தமிழர் பகுதிகளிலுள்ள ஆலயங்கள் தெய்வ விக்கிரகங்கள் அழிக்கப்படுவது சேதமாக்கப்படுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது மனவேதனை வருகின்ற விடையமாகும் குறிப்பாக சைவ மக்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணமுள்ளது.

வெடுக்குநாறி மட்டுமன்றி கீரி மலையில் ஆதிச்சிவன்கோவில் இருந்த இடம் தெரியாது சிதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சைவ ஆலயங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி பௌத்த அடையாளங்களாக மாற்றி வருகின்றார்கள்.

இந்தவார அதிர்ச்சியான செய்தியாக வவுனியா வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் இடித்தழிப்பு முழு இந்து மக்களையும் சீற்றமடைய வைத்துள்ளது. இலங்கையின் ஜனாதிபதி இந்த விடையத்தில் உரிய நடவடிக்கை எடுத்து யார் இதனை செய்தார்கள் என்பதை அறிந்து உரிய தண்டணை வழங்கவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை சமாளிப்பார்கள் என்றால் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறப்போகிறது என்ற சந்தேகமே எழுகின்றது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணை வழங்கவேண்டும் இது இந்து மக்களுக்கு ஆறுதல் தரும் விடையமாக இருக்கும் சமீபத்தில் குறுந்தூர் மலை விவகாரத்தில் நீதித்துறையை மக்கள் நம்பி இருந்தார்கள்.

ஆனால் நீதித்துறை நடவடிக்கை எடுத்தும் பௌத்த விகாரை கட்டப்பட்டமையானது இலங்கையில் நீதி நியாயம் இல்லை என்பதை எடுத்துக்காட்டி நிற்கின்றது.

உலக அரங்கில் இலங்கை எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் பொருளாதாரத்தில் வழிமை இழந்து பிற நாடுகளை நம்பியுள்ள நிலையில் இத்தகைய அசம்பாவிதங்கள் மதங்களை இனங்களை தூண்டி மக்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும். இடித்தழிக்கப்பட்ட ஆலயங்கள் உடனடியாக மீள்நிர்மாணம் செய்யப்பட்டு சைவமக்கள் வழிபடக்கூடிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பொலிஸார் இதற்கு காவல் கடமையில் ஈடுபட்டு இத்தகைய சம்வங்கள் நடைபெறாது இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.  அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்கள் ஆளுநர்கள் இத்தகைய நடவடிக்கைகள் இனிமேல் இடம்பெறாத வகையிலும் ஆலயங்களைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.

போர்க்காலத்தை காரணம் காட்டி பல ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டுள்ளது சைவ மக்களின் வறுமையை அடையாளம் கண்டு மதமாற்றங்கள் இடம் பெற்றுள்ளது.

சைவ மக்கள் என்றுமில்லாத வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். சைவ மக்கள் விக்கிரகங்கள் ஏதாவது வைத்தால் அதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள் பிற மதங்களின் அடையாளச் சின்னங்கள் வைத்தால் அது தொடர்பில் எவரும் வாய் திறப்பதில்லை.

நாவற்குழியில் காங்கேசன்துறையில் தையிட்டியில் எத்தனையே பௌத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கேட்பார் கிடையாது சைவ மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏதாவது வைத்தால் விதண்டாவாதமும் கேள்விகளும் எழுகின்றது.

சமயத்தலைவர்களைப் பொறுத்த வரையில் யாரும் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல சைவ மக்களுக்கு பிரச்சினைகள் வரும் போது ஒரு சில சைவ பாராளுமன்ற உறுப்பினரக்ள் குரல் கொடுக்கின்றார்கள். ஏனையவர்கள் பேசாதிருக்கின்றார்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரச்சினை என்றால் கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் இருவர் குரல் கொடுக்கின்றார்கள் ஆனால் ஒட்டுமொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுப்பதில்லை.

மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றுபோது அதனைத் தீர்த்து வைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்துக் குரல் கொடுப்பதில்லை. இது கவலையான விடையமாகும். ஆலயங்கள் சேதமாக்கப்படுகின்றபோது இடித்தழிக்கும் போது குரல் கொடுப்பதும் ஊர்வலங்கள் செய்வதும் ஏற்புடையதல்ல அவை இனி இடம்பெறாது இருப்பதற்கான நடவடிக்கைகள் ஒருமித்து எடுக்கப்படவேண்டும்.

ஆணித்தரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மணித்தியலக்கணக்கில் பேசிப் பிரயோசம் இல்லை இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு ஏற்ற வகையில்; பாராளுமன்றத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

சத்திய வழியில் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் நீங்கள் ஒற்றுமை இல்லாத நிலையில் காணப்படுகின்றீர்கள் இனியாவது இதனை கைவிட்டு இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறாத வகையில் ஒருமித்து செயற்படுங்கள். இலங்கையில் எத்தனையோ ஆதிசிவன்கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன இதன் வலியை தற்போது இலங்கை அரசாங்கம் உணர்ந்து கொண்டிருக்கின்றது.

இனியும் ஆலயங்கள் இடித்தழிக்கப்படுமேயானால் இந்த நாடு வறுமையையும் துன்பத்தையும் சந்திக்கப்போகும் இதிலிருந்து தப்புவதற்கு நீதி தேவன் நிமிர்ந்து நிற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் மௌனம் காக்கக்கூடாது இந்திய அரசாங்கம் இலங்கை விடையத்தில் அக்கறை இருப்பதென்றால் இந்த விடையத்தில் ஏன் மௌமாக இருக்கின்றீர்கள் என்பதை உங்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது ; அகில இலங்கை இந்துமா மன்றம் கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தமும் இந்து மதத்தின் ஒரு அங்கம் என நினைக்கினம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்...

அண்ணன் தம்பிக்குள் இப்படி குடும்ப சண்டை வருவது சகஜம் என அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.....ஆனால் தமிழன் சிங்களவனை அடிச்சால் சிங்களவனுக்காக தமிழனை அழிக்க முன் நிற்பார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைகள் கட்டுவதற்கும் புத்தத்தை வளர்ப்பதற்கும் ஆலோசனைகளையும் நிதியுதவியும் அளித்துக்கொண்டு தமிழரிடையே சைவ, கிறிஸ்தவ குரோதத்தையும் வளர்த்து குளிர் காய காத்திருக்கும் ஓணான் இந்தியாவை எதுக்கு அழைக்கிறீர்கள்? அது மவுனம் காக்கவில்லை ரசிக்க காத்திருக்கு தூண்டிவிட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் ஒரே இந்துமத நாடு .. நேப்பாள்காரணுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தால் அவனாவது குரல் கொடுத்து இருப்பான்..😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத கண்ணோட்டத்தை விட இன கண்ணோட்டம் வலிமையானது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 18:18, பிழம்பு said:

இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கின்றது என்றால் ஏன் இந்து ஆலயங்கள் அழித்தொழிக்கப்படும்போது மௌனமாக இருக்கிறீர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்திற்கு அளுத்தத்தை பிரயோகியுங்கள் என அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை இந்துமாமன்றம் என்ற பெயர் வைத்தால் சரியா ? வட இந்திய பிராமணர்கள் தாங்கள் தான் பிராமணியத்தில் உயர் சாதி பஞ்ச கவுடா என்கிறார்கள் அதிலும் தென் இந்திய பிராமணியர் பஞ்ச திராவிட என்கிற சாதியாக பிரிகின்றனர் அதிலும் பஞ்ச திராவிட ஐந்தாக பிரிகின்றது அவை கர்நாடகர்கள், தெலுங்கர்கள், திராவிடர்கள், மகாராஷ்டிரர்கள் மற்றும் குர்ஜரர்கள்.

அதில் உயர் சாதிய பஞ்ச கவுடா சரஸ்வத், கண்யாகுப்ஜா, கவுடா, உத்கல, மைதில் என்று ஐந்து வகை இவர்கள் வட இந்தியர்கள் இந்த உயர் சாதி கூட்டம் தென்னிந்திய பஞ்ச திராவிட பிராமணரை தங்களுக்கு சரி சமமாக இருக்க விடமாட்டார்கள் இப்படியான அவங்கட உயர் சாதி என்கிற பிரமனர் கூட்டத்துக்குள் அவங்கடை நாட்டிலேயே பல பிரிவுகள் இந்த கேவலத்தில் இந்துமாமன்றம் நாங்களும் பிராமணர் என்று நீங்களே உங்களை சொன்னால் பஞ்ச கவுடா பிராமணன் ஒத்துகொள்வானா ?  வட இந்திய பிராமணரை பொறுத்தவரை இலன்கையில் இந்து என்பது இல்லை அப்படி ஒரு எண்ணம் இருந்து இருந்தால் மோடி யாழ் வந்தபோது நல்லூர் கோவிலுக்கு போகாமல்  ஏன் தட்டி கழித்தார் ?

சிலர் சொல்வது போல் மேல் சட்டை கழட்டனும் அதனால் போகவில்லை  என்ற கதை அல்ல கதை இங்கு வேறு 

ஆதாரம் https://archive.org/details/RajataranginiOfKalhana-English-JogeshChunderDuttVolumes12/Rajatarangini-JogeshChunderDuttVol1/page/n11/mode/2up

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2023 at 06:46, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உலகின் ஒரே இந்துமத நாடு .. நேப்பாள்காரணுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தால் அவனாவது குரல் கொடுத்து இருப்பான்..😢

இவங்கள் சிங்கள அரசு அங்கேயும் போய் கடன் வாங்கி எங்கட மானத்தை வித்திடுவாங்கள்…

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படும் போது அதை ஊக்குவித்த இந்தியா இந்து கடவுள்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று கேட்பது எதிர்பார்ப்பது மடமை. இந்து என்றால் அது வட இந்திய உயர் சாதியினர் தான் என்ற தெளிவு வட இந்திய ஆதிக்க வர்ககத்துக்கு உள்ளது.  இது கூட புரியாத அப்பிராணிகளாக இருக்கிறார்களே. 

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்கும் ஆகாசவாணி..!

ஆகாசவாணி…

டெல்லியின் குரலாய்

தமிழ் ஈழ மண்ணில்

ஒளிவு மறைவு வாழ்வில்

சந்துபொந்தில்

நடந்த அந்த

ஓரிரு நிகழ்வுகள் கூட

ஒளிப்பு மறைப்பின்றிச்

சொன்னது ஓர் காலம்..!

 

காலை மதியம் மாலை என்று

முறுக்கிவிட்ட

வானொலிகள்

மத்திய மாநிலச் செய்திகள் காவி வர

களத்தில் நின்ற வீரனும்

நிகழ்வின் விளைவறிவது

அங்கு தான்..!

 

அமைதிப் படை என்று

அரக்கர் படை ஒன்று வந்து சேர

ஆகாசவாணியும்

அண்டப்புளுகிற்கு

அடிபணிந்து கொண்டது.

லங்காபுவத்தோடு

காதலொடு கூடலும் கண்டு கொண்டது..!

 

அன்று தொற்றிய வியாதி

இன்றும் ஆறவில்லை.

இத்தனை ஆயிரம்..

தமிழர் சாவுகள் கண்டும்

இரங்கவில்லை…

அண்டப்புளுகொடுதான்

அதன்

அந்தியக்காலம் என்று

அடம்பிடிக்குது..!

 

இந்தியாவின்

இந்துக்கள் கட்சியாம்

ஈழ மண்ணில்..

தமிழ் பேசும்

இந்துக்கள் அழிவை

சிங்களம் செய்தால்

மன்னிக்குமாம்.. மறக்குமாம்..!

ஹிந்தி பேசும்

இஸ்லாம் செய்தால்

கொலைக் கருவி ஏந்துமாம்…!

சரத்பவாராம்

அன்னை இந்திராவோடு

ஒட்டிய போது

ஈழத்தமிழருக்காய்

ஓர் விரதம்

அன்னை சோனியாவோடு

ஒட்டிய பிறகு

விரதமும் தாபமாச்சு..!

 

ஆகாசவாணிகளே

ஆகாயம் விட்டு வர வேண்டாம்

இடையில்

இனிப்பாய் அமைந்திட்ட

சிங்கள உறவுகள்

அறுக்க வேண்டாம்.

அண்டை அயலில்

நடந்த இன அழிப்புக்கு

ஓர் ஒப்பாரி…

மனிதாபிமானம்

இருந்தால்

காட்டுங்கள்..!

 

கலைஞரும்

கழன்றுவிட்ட பிறகு

கட்சிகள் சாட்டி

கழுத்தறுப்பது

தொடர வேண்டுமா..??!

ஆகாசவாணிக்கு

ஈழத்தமிழன் 

தந்த ஆதரவுக்கு

நன்றிக்கடன் வேண்டாமோ..??!

 

கொடுஞ் சிங்களத்திற்கு

கொடுத்தது போக..

நன்றி

மிச்ச சொச்சம்

எஞ்சி இருந்தால்……

பாரதத்தில் கீதை சொன்னபடி..

ஐநாவில் அதை

அழிந்து போன

தமிழருக்கு.. காட்டி நிற்க..!!!

 

2013 இல் எழுதியது.. அப்பவே இதுக்கு விடை சொல்லியாச்சு. 

https://kuruvikal.wordpress.com/page/16/

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.