Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பகுதியில் பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்!

Vhg ஏப்ரல் 07, 2023
Photo_1680838106060.jpg

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பௌத்த விகாரையின் தேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் 64ஆம் கட்டையிலுள்ள மலையடி பிள்ளையார் ஆலயம் அந்த வீதியால் பயணிக்கும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும்.

இந்த ஆலயப் பகுதிக்கு கடந்த 2021 டிசெம்பர் மாதம் பிக்குகள் குழு ஒன்று இரவு வேளை சென்றிருந்தது. அங்கு புத்தர் சிலை ஒன்றை அவர்கள் வைத்துச் சென்றனர்.

மறுநாள் காலை இதை அவதானித்த அப்பகுதி மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் தலையீட்டில் அங்கிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டது.

எனினும், சில நாட்களின் பின்னர் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆலயத்தை அண்மித்து - ஆலய வளாகத்திலேயே மீண்டும் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து மலைப்பகுதியில் "கெட்டியாராமை சிறீ பத்ர தாது ரஜ மகா விகாரை” க்கான நிர்மாணப் பணிகள் நடை பெற்றன.

இராணுவமும் கடற்படையும் இணைந்து இரவு - பகலாக இந்த விகாரையின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.

திருகோணமலையில் ஏற்கனவே இந்துக்களின் முக்கியத்துவம் பெற்ற கன்னியா வெந்நீரூற்று முழுமையாக பௌத்த மயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழர் தாயகத்தின் முல்லைத்தீவு - குருந்தூர்மலை, வவுனியா - வெடுக்குநாறி மலை என இந்து ஆலயங்கள் பல பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

https://www.battinatham.com/2023/04/blog-post_38.html

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியர், சச்சியர்.....எங்க அந்த மானஸ்தன்?

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாகும் 200 வருட பழமையான பிள்ளையார் ஆலயம் !

Published By: VISHNU

07 APR, 2023 | 04:39 PM
image

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64 ஆம் கட்டை மலையில் (பச்சனுார் மலை) அமைத்து வரும் பௌத்த விகாரைகள், அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு பகுதியும் இன்று (07) பௌத்த துறவிகளால் விசேட பூசைகள் நடைபெற்றதாக மூதூர் இந்து மத குருமார் சங்கத் தலைவர் பாஸ்கர சர்மா தெரிவித்தார்.

WhatsApp_Image_2023-04-07_at_3.39.20_PM.

 

200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைத்து அங்கு அம்பாள் வழிபாடுகள் நடைபெற்றதற்கான எச்சங்கள் காணப்பட்ட இடத்தை இந்துக்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே ஒப்புக்கொண்ட பௌத்த துறவிகள் இன்று அப்பகுதியை சுத்தம் செய்து கிரியைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

 

WhatsApp_Image_2023-04-07_at_3.17.27_PM_

 

மேலும் 2 வருடத்திற்கு முன் இவ்விடத்திற்கு வந்தவர்களுக்கு அனுமதி வழங்கி விகாரை அமைக்கப்படுகிறது.

200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயத்தை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் விசனம் தெரிவித்தார்.

 

WhatsApp_Image_2023-04-07_at_3.39.02_PM.

WhatsApp_Image_2023-04-07_at_3.17.28_PM.

https://www.virakesari.lk/article/152374

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சச்சியர், சச்சியர்.....எங்க அந்த மானஸ்தன்?

வேட்டி வரும் வரை வெளியில் வரமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சச்சியர், சச்சியர்.....எங்க அந்த மானஸ்தன்?

அந்தாள் பிள்ளையாரைப் பற்றி கவலைப்படமாட்டார்...சிவலிங்கம்தான் வைப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அந்தாள் பிள்ளையாரைப் பற்றி கவலைப்படமாட்டார்...சிவலிங்கம்தான் வைப்பார்

 

4 hours ago, உடையார் said:

வேட்டி வரும் வரை வெளியில் வரமாட்டார்

இந்த  விடயத்தில் இந்தியாவின் இந்தியாவின் த்யவைப் பெறலாமே ? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் பாதுகாப்புக் கேடயத்தை பயங்கரவாதிகள் என்று அழிந்தவர்கள் தான் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு. இந்த சிங்கள பெளத்த பயங்கரவாதத்தை எப்படி கட்டுப்படுத்தப் போகிறார்கள். அவை ஏன் கட்டுப்படுத்தனும்.. எப்படி வளர்த்துவிடப் போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு ஐடியா சொல்லவா. புத்தர்தான் இலங்கையில் பவர்புல்லான கடவுள் போல. என்றபடியால் எல்லாரும் புத்த மதத்துக்கு மாறிடுங்கோ பிரச்சனை இல்லை. 

இன்னொரு ஐடியாவும் உள்ளது என்ன என்றால் விகாரையில் கும்பிடும்போது தலையில் குட்டி தோப்புகரணம் போடுங்கோ. 

எல்லாரும் வெளிநாட்டுக்கு ஓடிவந்துவிட்டு அவன் அது செய்யிறான் இது செய்யிறான் என்று புலம்பிக்கொண்டு உள்ளோம். 

எங்கள் சாமிகள் ஒன்றும் பவர் புல்ல்லானது இல்லை போல. இல்லாட்டி எங்களுக்கு ஏன் இவ்வளவு அவலம். அல்லது ஐயருக்குத்தான் ஒழுங்காய் பூசை செய்ய தெரியவில்லையோ. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நான் ஒரு ஐடியா சொல்லவா. புத்தர்தான் இலங்கையில் பவர்புல்லான கடவுள் போல. என்றபடியால் எல்லாரும் புத்த மதத்துக்கு மாறிடுங்கோ பிரச்சனை இல்லை. 

இன்னொரு ஐடியாவும் உள்ளது என்ன என்றால் விகாரையில் கும்பிடும்போது தலையில் குட்டி தோப்புகரணம் போடுங்கோ. 

மணி ஐடியா......
ஒவ்வொரு விகாரைக்கு முன்னாலை பூசணிக்காய் வெட்டி கழிப்பு கழிச்சு  கையோட இரண்டு ஆட்டை பலியெடுக்கவும் வேணும். அதோடை புத்தருக்கு வடைமாலையும் சாத்தவேணும்.:rolling_on_the_floor_laughing:

சிங்களவன் திகைச்சு போவான்.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

வேட்டி வரும் வரை வெளியில் வரமாட்டார்

அவர் வேட்டியை களட்டிக்கொடுத்ததே அவர்களை மறைத்து தன்னை அம்மணமாக்குவதற்கே, தான் அன்பளிப்பாக மனமுவந்து கொடுத்ததை ஏன் திருப்பிகேக்கபோகிறார்? அந்த இடத்தில வெக்கம் இல்லாமல் பொத்திக்கொண்டு இருந்தவர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பிக்குகளுக்கு ஆசனம் ஒதுக்கி அவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களுக்கு தமது பாரம்பரியம் தெரியாதா பிக்குவின் ஆசனத்துக்கு வெள்ளைத்துண்டு விரிக்க வேண்டுமென்று? இல்லையாயின் பிக்கு, மற்றவர்கள் போல் ஆசனத்தில் அமர்ந்தாற்தான் என்ன குறைந்து போய்விடும்? இவருக்கு என்ன அவசரம், தான் கட்டியிருந்த துண்டைக்களட்டிக்கொடுக்க? அப்பவே அவர் புத்தருக்கு அதிகாரம் கொடுத்துவிட்டார், இப்போ யேசுவையும் துரத்தி அவரின் இடத்தையும் சேர்த்து கொடுக்க திட்டம் தீட்டுகிறார்.

தமிழரின் கடவுள் இருக்கும் இடத்தை அழித்து, அவர்களை அடாத்தாக துரத்தி, புத்தர் எழுந்தருள்வதிலிருந்து  தெரிகிறது புத்தர் வந்தேறுகுடி என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியருக்கு தன்மானத்தையும், மதத்தையும் பாதுகாக்க தெரியவில்லை, உள்நுழையும் புத்தரை தடுக்க முடியவில்லை  அதில கிறிஸ்துவை துரத்தப்போகிறாராம். எல்லாம், உள்நுழையும் புத்தரை மற்றவர் கண்டுகொள்ளாமல் திசை திருப்பும் கைங்கரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and tree

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.