Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியான்மர் ராணுவ ஆட்சியை எதிர்த்த மக்கள் மீது விமான தாக்குதல்: 100க்கு மேற்பட்டோர் பலி என அச்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மியான்மரில் விமான தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப் படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜோதனாத்தன் ஹெட் & நிகோலஸ் யாங்
  • பதவி,.
  • இருந்துபாங்காக் & சிங்கப்பூரில் இருந்து
  • 12 ஏப்ரல் 2023, 06:03 GMT
    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது அந்த ராணுவ ஆட்சியாளர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தாங்கள் 80க்கும் மேற்பட்ட உடல்களை கண்டெடுத்துள்ளதாக கூறும் உயிர் பிழைத்த மக்கள், ஆனால் உயிர்ப் பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

உயிரிழந்தவர்களில் 15 பெண்கள் உள்பட பல சிறுவர்களும் அடக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பிபிசியால் தனிப்பட்ட முறையில் அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை.

மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமம் ஒன்றை குறிவைத்து செவ்வாய்க்கிழமை விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆட்சியைப் பிடித்த பிறகு எதிர்ப்பாளர்கள் மீது ராணுவ ஆட்சியாளர்கள் விமான தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.

சாகெய்ங் பிராந்தியத்தில் வாழும் மக்கள் ராணுவ ஆட்சியைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். கிளர்ச்சிக் குழுக்களை அமைத்துக் கொண்டுள்ள அந்த மக்கள், தாங்களே பள்ளிகள், மருத்துவமனைகளை சொந்தமாக நடத்துகின்றனர்.

பிபிசியிடம் பேசிய கிராமவாசி ஒருவர், உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு பறந்து வந்த ராணுவ விமானம் ஒன்று குண்டு வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் சுமார் 20 நிமிடங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

கிராமத்தில் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிவதையும், உயிரிழந்தவர்களின் உடல்கள் தரையில் சிதறிக் கிடப்பதையும் சிலர் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

சிதறிக் கிடக்கும் துணிகள், எரிந்த மோட்டார் சைக்கிள்களுக்கு நடுவே உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களும் கிடப்பதால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை துல்லியமாக எண்ண முடியவில்லை என்று அவர்கள் கூறியுளள்னர்.

பா ஸி கிய் என்ற அந்த கிராமத்தினர், அண்மையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மக்கள் தற்காப்புப் படை (PDF) என்ற கிளர்ச்சிக் குழு அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

தன்னார்வலர்களைக் கொண்ட மக்கள் தற்காப்புப் படையினர், மியான்மரின் பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

மியான்மரில் விமான தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் வொல்கர் துர்க், சர்வதேச சட்டங்களை மீறி நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் அச்சமூட்டுவதாக இருப்பதாக கூறியுள்ளார்.

"நான் முன்பே கூறியபடி, 2021-ம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின்னர் மியான்மர் ராணுவமும், அதன் ஆதரவுக் குழுக்களும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நா. தகவல்படி, மியான்மர் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் 14 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்; மியான்மரின் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

ரஷ்யாவும், சீனாவும் வழங்கிய போர் விமானங்களைக் கொண்டே, கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏனெனில், சாலை மார்க்கமாக செல்ல முயலும் போது கிளர்ச்சிக் குழுக்கள் ஆங்காங்கே வைக்கும் கண்ணி வெடிகளுக்கு ராணுவத்தினர் இலக்காக நேரிடுகிறது. மியான்மர் ராணுவத்தின் விமான தாக்குதலால், எதிர் தரப்பில் படையினர் அல்லாத அப்பாவி பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுகின்றனர்.

2021-ம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த ஜனவரி மாதம் முடிய மியான்மர் ராணுவம் குறைந்தது 600 விமான தாக்குதல்களை நடத்தியிருப்பதாக, சண்டை நடக்கும் இடங்கள் மற்றும் நிகழ்வுகள் தரவுகளை (ACLED) பிபிசி ஆய்வு செய்த போது தெரியவந்தது.

ராணுவப் புரட்சிக்குப் பின்னர், மியான்மருக்கு வெளியே அமைக்கப்பட்ட, அந்நாட்டின் ஒருங்கிணைந்த தேசிய அரசு, 2021 அக்டோபர் முதல் 2022 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் மட்டும் இதுபோன்ற தாக்குதல்களில் 155 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

பா ஸி கிய் கிராமத்தில் ராணுவ தாக்குதலில் 55 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதுவே மியான்மர் உள்நாட்டுப் போரில் ஒரு தாக்குதலில் நேரிட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cqqzxyz3nq3o

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு நாங்கள் (அமெரிக்காவும், மேற்கும்) வாயையும் திறக்க மாட்டம். ஏனென்றால் அங்குதான் சுரண்டுவதற்கு ஒன்றுமில்லையே. இதுவே ஈராக், லிபியா, ஈரான் என்றால் வரிஞ்சுக்கட்டிக்கொண்டு கிளம்பீடுவம்.

9 minutes ago, Eppothum Thamizhan said:

இதுக்கு நாங்கள் (அமெரிக்காவும், மேற்கும்) வாயையும் திறக்க மாட்டம். ஏனென்றால் அங்குதான் சுரண்டுவதற்கு ஒன்றுமில்லையே. இதுவே ஈராக், லிபியா, ஈரான் என்றால் வரிஞ்சுக்கட்டிக்கொண்டு கிளம்பீடுவம்.

பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது : 
https://www.diplomatie.gouv.fr/en/country-files/myanmar/news/article/myanmar-france-condemns-the-air-strike-on-the-village-of-pa-zi-gyi-in-the

UN இன் கண்டனம் (செய்தி பிரெஞ்சில் உள்ளது) : https://news.un.org/fr/story/2023/04/1134132

ஏனைய நாடுகளின் அறிக்கைகளை கூகிளில் தேடி அறியலாம். 

18 hours ago, ஏராளன் said:
 
ரஷ்யாவும், சீனாவும் வழங்கிய போர் விமானங்களைக் கொண்டே, கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த மக்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏, மியான்மாரின் இராணுவ ஆட்சியை இந்த மேற்குலகு கண்டனத்தைவிட்டுவிட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வரமாட்டார்களா? இதே மியன்மார் இராணுவம் & பிக்குகள் சிங்களத்திற்கு உதவி செய்தவர்கள் எமது விடுதலை போராட்டத்தை ஒடுக்க

1 hour ago, உடையார் said:

முடிவுக்கு வர முடியாது. ரஸ்யாவும் சீனாவும் இராணுவத்துக்குப் போர் உதவி செய்வதாகச் செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. நுனியை மட்டும் வாசித்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

முடிவுக்கு வர முடியாது. ரஸ்யாவும் சீனாவும் இராணுவத்துக்குப் போர் உதவி செய்வதாகச் செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. நுனியை மட்டும் வாசித்துள்ளீர்கள்.

நுனி மேய்யவில்லை அடிவரை வாசித்துள்ளேன்ன, ஏன் நீங்கள் மட்டும் இப்படி அடிக்கடி நுனிபுல்லென் தனிமனித தக்குல் தொடரலாமா? அப்ப மேற்குலகு ரசியா சீனாவிடம் மண்டியிட்டுள்ளது????

5 minutes ago, உடையார் said:

அடிவரை வாசித்துள்ளேன்ன.

ரஷ்யாவும், சீனாவும் வழங்கிய போர் விமானங்களைக் கொண்டே, கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

அப்படியா ? இது செய்தியின் இடையில் உள்ளது. 😂

6 minutes ago, உடையார் said:

நுனி மேய்யவில்லை 

நன்றாக வாசியுங்கள், நான் செய்தியின் நுனியை வாசித்ததாக எழுதியுள்ளேன். நீங்கள் நுனிப் புல் மேய்வதாக கற்பனை செய்துள்ளீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

ரஷ்யாவும், சீனாவும் வழங்கிய போர் விமானங்களைக் கொண்டே, கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

அப்படியா ? இது செய்தியின் இடையில் உள்ளது. 😂

ஷ்யாவும், சீனாவும் வழங்கிய போர் விமானங்களைக் கொண்டே, கிளர்ச்சிக் குழுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது, ஏன் அவர்கள் பணகொடுத்து வாங்கியிருக்க முடியாதா? இலவசமாக வழங்கியுள்ளார்களா????

1 hour ago, உடையார் said:

இறந்த மக்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏, மியான்மாரின் இராணுவ ஆட்சியை இந்த மேற்குலகு கண்டனத்தைவிட்டுவிட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வரமாட்டார்களா? இதே மியன்மார் இராணுவம் & பிக்குகள் சிங்களத்திற்கு உதவி செய்தவர்கள் எமது விடுதலை போராட்டத்தை ஒடுக்க

நான் கேட்ட கேள்வி 

அப்ப நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள்  ரசியா சீனாவை இந்த மேற்குலகாள் ஒன்றும் சொய்ய முடியாதென்று, 👍

7 minutes ago, இணையவன் said:

நன்றாக வாசியுங்கள், நான் செய்தியின் நுனியை வாசித்ததாக எழுதியுள்ளேன். நீங்கள் நுனிப் புல் மேய்வதாக கற்பனை செய்துள்ளீர்கள். 🤣

நன்றி இப்படியும் எழுதாலமென அறிய தந்த திற்கு😎

9 minutes ago, இணையவன் said:

, நான் செய்தியின் நுனியை வாசித்ததாக எழுதியுள்ளேன். நீங்கள் நுனிப் புல் மேய்வதாக கற்பனை செய்துள்ளீர்கள்🤣

இப்படி எழுதுவதிற்கு ஒரு திறைமை வேண்டும், அது உங்களிடம் நன்றாகவேயிக்கு👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, ஏராளன் said:

ஐ.நா. தகவல்படி, மியான்மர் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் 14 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்; மியான்மரின் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.

இவர்களுக்கு அமெரிக்க அண்ணாவும் ஐரோப்பிய அண்ணியும் உதவி செய்ய மாட்டார்களா? 😎

அடக்குமுறை,அத்துமீறல்களை கண்டால் பொங்கி எழுபவர்கள் அல்லவா?🙃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இவர்களுக்கு அமெரிக்க அண்ணாவும் ஐரோப்பிய அண்ணியும் உதவி செய்ய மாட்டார்களா? 😎

அமெரிக்கா, ஐரோப்பாவை விடுவம், அவர்கள் ஏற்கனவே ஐ.நா வழியாக ஏதோ செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த மியன்மார் இராணுவமும், பௌத்த குருக்களும் சேர்ந்து அகதிகளாக்கிய  றொகிங்கியா மக்களை "காணி பிடிக்க அலையும் மக்கள்" என்று நக்கலடித்த  ஆக்களும் எங்களிடையே இருக்கீனம்!

இந்த லட்சணத்தில், தமிழர் இனப்படுகொலையை அமெரிக்கா கேக்க வேணும், ஐ.நா தட்டிக் கேட்க வேணுமென்ற அழுகையை யாராவது கேட்பார்களா?

6 hours ago, Eppothum Thamizhan said:

இதுக்கு நாங்கள் (அமெரிக்காவும், மேற்கும்) வாயையும் திறக்க மாட்டம். ஏனென்றால் அங்குதான் சுரண்டுவதற்கு ஒன்றுமில்லையே. இதுவே ஈராக், லிபியா, ஈரான் என்றால் வரிஞ்சுக்கட்டிக்கொண்டு கிளம்பீடுவம்.

5 hours ago, உடையார் said:

மியான்மாரின் இராணுவ ஆட்சியை இந்த மேற்குலகு கண்டனத்தைவிட்டுவிட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வரமாட்டார்களா? 

2 hours ago, குமாரசாமி said:

இவர்களுக்கு அமெரிக்க அண்ணாவும் ஐரோப்பிய அண்ணியும் உதவி செய்ய மாட்டார்களா? 😎

அடக்குமுறை,அத்துமீறல்களை கண்டால் பொங்கி எழுபவர்கள் அல்லவா?🙃

இந்தத் திதியில் மூவரும் செய்தியை வாசிக்காமலே கருத்து வைத்துள்ளனர். எந்தத் திரியைக் கண்டாலும் மேற்கை எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டே செய்திப் பகுதிக்கு வருவதுபோல் உள்ளது. 

குமாரசாமியிடம் ஒரு கேள்வி. ஈழத்தில் உக்ரெயின் தமிழரை அழிக்க உதவியதால் (அல்லது மேற்குடன் நட்புக் கொண்டாடியதால் ரஸ்யாவின் கோபத்துக்கு ஆளானதால்) நீங்கள் உக்ரெயினை எதிர்க்கிறீர்கள். அதேபோல் எனக்கு இச் செய்தியிலிருந்து விளங்கியதன்படி ரஸ்யாவின் இராணுவ உதவியுடன் சிறுபான்மை இன மக்களைக் கொன்று குவிப்பதை (தவறாக இருக்கலாம்) எவ்வாறு நோக்குகிறீர்கள் ? 

பெரியண்ணன் செய்தான் சின்னண்ணனும் செய்வான் என்ற வழக்கமான பல்லவியை விட்டுப் பதிலளியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Myanmar's arms trade, defence drills and energy deals with Russia show  steady pace of ties | South China Morning Post

ரஷ்ய சர்வாதிகாரியுடன் மியான்மர்  சர்வாதிகாரி.

மக்கள் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளை தாக்கி அழிப்பதில், மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதில் ஸ்பெஷலிஸ்ட்டான ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளான சீனா,  இந்தியாவும் மியான்மர் இராணுவ அரசை ஆதரித்து வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

Myanmar's arms trade, defence drills and energy deals with Russia show  steady pace of ties | South China Morning Post

ரஷ்ய சர்வாதிகாரியுடன் மியான்மர்  சர்வாதிகாரி.

மக்கள் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளை தாக்கி அழிப்பதில், மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதில் ஸ்பெஷலிஸ்ட்டான ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளான சீனா,  இந்தியாவும் மியான்மர் இராணுவ அரசை ஆதரித்து வருகின்றனர்.

மியன்மார் மக்களின் வாய்க்கொழுப்பால் வந்தது இது. பொத்திக்கொண்டு இருந்து இருந்தால் அரசு ஏன் குண்டு போடப்படுகிறது?😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, விசுகு said:

மியன்மார் மக்களின் வாய்க்கொழுப்பால் வந்தது இது. பொத்திக்கொண்டு இருந்து இருந்தால் அரசு ஏன் குண்டு போடப்படுகிறது?😭

எதை எங்கு திணித்து வெற்றிவாகை சூடலாம் என நினைக்கின்றீர்கள்.

3 hours ago, இணையவன் said:

குமாரசாமியிடம் ஒரு கேள்வி. ஈழத்தில் உக்ரெயின் தமிழரை அழிக்க உதவியதால் (அல்லது மேற்குடன் நட்புக் கொண்டாடியதால் ரஸ்யாவின் கோபத்துக்கு ஆளானதால்) நீங்கள் உக்ரெயினை எதிர்க்கிறீர்கள்.

இல்லை. இதை நான் முற்று முழுதாக மறுக்கின்றேன். ஏனெனில் உக்ரேனை விட மேற்குலகு ஈழ விடுதலை போராட்டத்தை அடக்க/அழிக்க உதவியது. ஒத்தாசைகள் புரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

எதை எங்கு திணித்து வெற்றிவாகை சூடலாம் என நினைக்கின்றீர்கள்.

அப்போ வெற்றியா?

அண்ணைக்கு காணிக்கையாக்குகிறேன் 👏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, இணையவன் said:

ரஸ்யாவின் இராணுவ உதவியுடன் சிறுபான்மை இன மக்களைக் கொன்று குவிப்பதை (தவறாக இருக்கலாம்) எவ்வாறு நோக்குகிறீர்கள் ? 

சிறுபான்மை இனமோ அல்லது பெரும்பான்மை இனமோ நான் பொதுமக்கள் அழிவை ஏற்பவன் அல்ல.ரஷ்யாவோ அல்லது அமெரிக்காவோ எல்லாம் ஆயுத வியாபார நாடுகள். அங்கே மனிதாபிமானமோ அல்லது  உயிர் இழப்புகளோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. ரஷ்ய சீன ஆயுதம் இல்லையேல் அமெரிக்க ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் மூலம்  அந்த சிறுபான்மையினர் ஆயுதங்களை பெற்றுக்கொள்வர். 

இணையவன்? ஆயுதங்கள் விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாடுகளால் நேரடியாக வழங்கப்படுகின்றது என நினைக்கின்றீர்களா? ஆயுத வியாபாரிகள்,இடைத்தரகர்கள் என நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? 

ஆயுதம் சம்பந்தமாக இன்னொரு விடயம் எழுதலாம். அது இப்போது இங்கு தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, விசுகு said:

அப்போ வெற்றியா?

அண்ணைக்கு காணிக்கையாக்குகிறேன் 👏

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, இணையவன் said:

இந்தத் திதியில் மூவரும் செய்தியை வாசிக்காமலே கருத்து வைத்துள்ளனர். எந்தத் திரியைக் கண்டாலும் மேற்கை எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டே செய்திப் பகுதிக்கு வருவதுபோல் உள்ளது. 

குமாரசாமியிடம் ஒரு கேள்வி. ஈழத்தில் உக்ரெயின் தமிழரை அழிக்க உதவியதால் (அல்லது மேற்குடன் நட்புக் கொண்டாடியதால் ரஸ்யாவின் கோபத்துக்கு ஆளானதால்) நீங்கள் உக்ரெயினை எதிர்க்கிறீர்கள். அதேபோல் எனக்கு இச் செய்தியிலிருந்து விளங்கியதன்படி ரஸ்யாவின் இராணுவ உதவியுடன் சிறுபான்மை இன மக்களைக் கொன்று குவிப்பதை (தவறாக இருக்கலாம்) எவ்வாறு நோக்குகிறீர்கள்

பெரியண்ணன் செய்தான் சின்னண்ணனும் செய்வான் என்ற வழக்கமான பல்லவியை விட்டுப் பதிலளியுங்கள்.

உங்களை போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம் நுனிபுல் மேய்வதாக, அடுத்து எமது போராட்டத்தில் இழப்புகள் பல சந்தித்து வந்த நாங்கள் எந்த உயிரிழப்பையும் சரியென சொல்லவில்லை,

யார் பொரியண்ணர் சின்ன அண்ணார் அப்படியுமிருக்கின்றார்களா?, இதை விளக்கமாக சொல்ல முடியுமா உங்களால், இனிமேல் நாங்களும் பொரிண்ணா யார் சின்ன அண்ணா யாரென அறிய முடியும்,

மழுப்பாமல் வழக்கமான பல்லவியை விட்டுப் பதிலளியுங்கள் பதிலை தாருங்கள் உங்கள் மனதில் குடியிருக்கம் பெரியண்ணா பற்றி, 

45 minutes ago, உடையார் said:

யார் பொரியண்ணர் சின்ன அண்ணார் அப்படியுமிருக்கின்றார்களா?, இதை விளக்கமாக சொல்ல முடியுமா உங்களால்

21 hours ago, குமாரசாமி said:

இவர்களுக்கு அமெரிக்க அண்ணாவும் ஐரோப்பிய அண்ணியும் உதவி செய்ய மாட்டார்களா? 😎

45 minutes ago, உடையார் said:

உங்களை போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம் நுனிபுல் மேய்வதாக

கேள்வி கேட்கமுன் குறைந்தபட்சம் இந்தத் திரியிலுள்ள கருத்துகளையாவது வாசித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

கேள்வி கேட்கமுன் குறைந்தபட்சம் இந்தத் திரியிலுள்ள கருத்துகளையாவது வாசித்திருக்கலாம்.

மீண்டும் மீண்டும் மழுப்பும் கருத்துதான் , நாங்கள் வாசித்து கருத்தும் பதிந்துவிட்டோன், ரசியாவின் உதவியுடன் மியான் மாரில் மக்கள் கொள்ளப்படுவது கண்டிக்கபட வேண்டியது, நான் கேட்ட கேள்விக்கு உங்களின் பதில்

50 minutes ago, உடையார் said:

உங்களை போல் மற்றவர்களையும் நினைக்க வேண்டாம் நுனிபுல் மேய்வதாக, அடுத்து எமது போராட்டத்தில் இழப்புகள் பல சந்தித்து வந்த நாங்கள் எந்த உயிரிழப்பையும் சரியென சொல்லவில்லை,

யார் பொரியண்ணர் சின்ன அண்ணார் அப்படியுமிருக்கின்றார்களா?, இதை விளக்கமாக சொல்ல முடியுமா உங்களால், இனிமேல் நாங்களும் பொரிண்ணா யார் சின்ன அண்ணா யாரென அறிய முடியும்,

மழுப்பாமல் வழக்கமான பல்லவியை விட்டுப் பதிலளியுங்கள் பதிலை தாருங்கள் உங்கள் மனதில் குடியிருக்கம் பெரியண்ணா பற்றி, 

யார் பொரியண்ணர் சின்ன அண்ணார் அப்படியுமிருக்கின்றார்களா?, இதை விளக்கமாக சொல்ல முடியுமா உங்களால், இனிமேல் நாங்களும் பொரிண்ணா யார் சின்ன அண்ணா யாரென அறிய முடியும்,

மழுப்பாமல் வழக்கமான பல்லவியை விட்டுப் பதிலளியுங்கள் பதிலை தாருங்கள் உங்கள் மனதில் குடியிருக்கம் பெரியண்ணா பற்றி, 

4 minutes ago, இணையவன் said:

கேள்வி கேட்கமுன் குறைந்தபட்சம் இந்தத் திரியிலுள்ள கருத்துகளையாவது வாசித்திருக்கலாம்.

21 hours ago, குமாரசாமி said:

இவர்களுக்கு அமெரிக்க அண்ணாவும் ஐரோப்பிய அண்ணியும் உதவி செய்ய மாட்டார்களா? 😎

அடக்குமுறை,அத்துமீறல்களை கண்டால் பொங்கி எழுபவர்கள் அல்லவா?🙃

அவர் சொன்னது அண்ணாவென்று, இதில யார் பெரியண்ணா சின்ன அண்ணா

பெரியண்ணாவை நான் கொண்டு வரவில்லை.

முடிந்தால் கீழுள்ள திரியில் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அதில யாரும் பெரியண்ணா யாரென கேட்கவில்லையே😄 அதைவிட்டு தள்ளுங்கள், , நான் கேட்ட கேள்வி யார் பெரியண்ணா உங்கள் மனதில்???????????  உங்கள் மனதில் உள்ளவரை தெரிந்தால் நாமும் அதை பயன்படுத்தலாம் அல்லவா😎

3 minutes ago, இணையவன் said:

பெரியண்ணாவை நான் கொண்டு வரவில்லை.

முடிந்தால் கீழுள்ள திரியில் வாசித்து அறிந்து கொள்ளுங்கள். 🤣

15 hours ago, குமாரசாமி said:

இல்லை. இதை நான் முற்று முழுதாக மறுக்கின்றேன். ஏனெனில் உக்ரேனை விட மேற்குலகு ஈழ விடுதலை போராட்டத்தை அடக்க/அழிக்க உதவியது. ஒத்தாசைகள் புரிந்தது.

முற்று முழுதாக மறுக்க வேண்டியதில்லை. நான் அடைப்புக் குறிக்குள் எழுதியதையே வேறு விதமாக எழுதியுள்ளீர்கள்.

15 hours ago, குமாரசாமி said:

 ரஷ்ய சீன ஆயுதம் இல்லையேல் அமெரிக்க ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் மூலம்  அந்த சிறுபான்மையினர் ஆயுதங்களை பெற்றுக்கொள்வர். 

நேரடியாகப் பதில் வழங்காமல் உங்களால் வழக்கமான பல்லவியையே பாட முடியும் என்பதை மறுபடி புரிய வைத்தமைக்கு நன்றி. வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

முற்று முழுதாக மறுக்க வேண்டியதில்லை. நான் அடைப்புக் குறிக்குள் எழுதியதையே வேறு விதமாக எழுதியுள்ளீர்கள்.

இணையவன் அடைப்பு குறிக்குள் எழுதுவது மேலதிக தரவிற்காக, இது உங்களுக்கு தெரியுமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2023 at 19:20, உடையார் said:

இறந்த மக்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

19 hours ago, இணையவன் said:

இந்தத் திதியில் மூவரும் செய்தியை வாசிக்காமலே கருத்து வைத்துள்ளனர். எந்தத் திரியைக் கண்டாலும் மேற்கை எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டே செய்திப் பகுதிக்கு வருவதுபோல் உள்ளது. 

இணையவன் எனக்கும் மேற்குலகிற்கும் எந்த கொடுக்கல் வாங்கலுமில்லை, சந்தியமா நம்புங்கள்🙏, அதனால் நான் கங்கணம் கட்டிக்கொண்டு வருவதுமில்லை😎, வந்தபின்புதான் சிலரின் கருத்தை பார்த்து கங்கணம் கண்டுவது🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.