Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் யாழ்ப்பாண குடும்பப் பெண் தீபாவைக் கூலிப்படையை வைத்துக் கொன்ற கணவன்!! விசாரணைகள் ஆரம்பம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான மனைவி தீபா சீவரத்தினத்தை வீட்டிற்குள் துஷ்பிரயோகம் செய்தது, மனைவியின் இளைய உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பின்னர், மனைவியை கொல்ல வாடகை கொலையாளியை ஒப்பந்தம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் தீபா சீவரத்தினம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பிரதிவாதிகளின் விசாரணைகள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்தது. வழக்கறிஞர் பென் ஸ்னோ, “இந்த வழக்கு காட்டிக்கொடுப்பு மற்றும் திட்டமிட்ட கொலையின் சோகமான கதையை உள்ளடக்கியது என் கோட்பாடு.” உடையது என்றார்.

அவரது கணவர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (45) முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றமற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஸ்டெட்லி கெர் என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கேரி சாமுவேல், தப்பிச் செல்லும் காரை ஓட்டியதாகவும் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்

தீபாவின் தாயாரான லீலாவதி சீவரத்தினம் என்பவரை கொலை செய்ய முயன்றதாகவும் கேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் படுகாயமடைந்து உயிர்பிழைத்திருந்தார்.

ஆஷ்லே ஓவன், கெர்ரின் முன்னாள் துணை மற்றும் அவரது குழந்தையின் தாயார், கொலைக்குப் பிறகு துணையாக இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

Theepa Seevaratnam

மார்ச் 13, 2020 அன்று இந்த கொலைச்சம்பவம் நடந்தது.

புதன்கிழமையன்று, 74 வயதான லீலாவதி சீவரத்தினம் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

காலை 9:40 மணியளவில் அஜின்கோர்ட்டில் உள்ள 36 முர்ரே அவேவில் உள்ள குடும்பத்தின் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீட்டைத் துடைக்கத் தயாராகிக்கொண்டிருந்த போது சம்பவம் நடந்ததாக சாட்சியமளித்தார்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, முன் கதவைத் திறந்ததாகவும், ஒரு மனிதன் ஒரு சிறிய பழுப்பு நிற பெட்டியை வைத்திருந்து கையெழுத்து கேட்டதாகவும் குறிப்பிட்டார்.

இரவு ஷிப்ட் வேலை செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தீபா, வாசலில் பேச்சு சத்தம் கேட்டு, படுக்கையறையிலிருந்த கீழே இறங்கி வந்தார். அவரது இரண்டு குழந்தைகளும் பாடசாலைக்கு சென்றிருந்தனர். தீபாவின் அத்தை அடித்தளத்தில் இருந்தார், ஆனால் அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய போது, சம்பவ இடத்திற்கு சரியான நேரத்தில் வந்தார்.

“அவர் முதலில் தீபாவைச் சுட்டார், பின்னர் என்னைச் சுட்டார்” என்று லீலாவதி சீவரத்தினம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் மூலம் நடுவர் மன்றத்தில் கூறினார்.

தீபா தரையில் சரிந்தார், அங்கு அவர் காயமடைந்த தாய்க்கு அருகில் இறந்தார், அவரது இடது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.

அரச வழக்கறிஞர் சில்வானா கபோக்ரேகோ லீலாவதியின் சாட்சியத்தை நெறிப்படுத்தினார்.

அவரது மகள் தீபாவுக்கும், கணவர் விஜேந்திரனுக்கும் இடையிலான திருமண நிலை குறித்து கேட்டறிந்தார்.

இருவரும் காதல் திருமணம் செய்ததாக லீலாவதி தமிழில் பதிலளித்தார். ஆனால் காலப்போக்கில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தம்பதியினர் தனித்தனி அறைகளில் தூங்கத் தொடங்கினர். மூடிய கதவுகளுக்குப் பின்னால் விஜேந்திரன் தன்னை அடிப்பதாக தீபா கண்ணீருடன் கூறியதாக தாயார் சாட்சியமளித்தார்.

தீபாவின் திருமணத்தின் மகிழ்ச்சியற்ற நிலை மற்றும் அவர் அனுபவித்த துஷ்பிரயோகம் பற்றி மற்ற குடும்ப உறுப்பினர்கள் சாட்சியமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக செவ்வாயன்று ஸ்னோ தனது தொடக்க அறிக்கையின் போது கூறினார்.

அத்துடன், தீபாவின் இளைய உறவினருடனான விஜேந்திரனின் உறவு விவகாரம் குறித்தும் அவர்கள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாப அவர் ஜூரிகளிடம் கூறினார்.

அவர்கள் வசித்த வீடு விஜேந்திரனுக்கு சொந்தமானது. முன்பு மார்க்கம் ரோடு மற்றும் எக்ளிண்டன் அவென்யூ அருகே ஒரு கடை வைத்திருந்தார்.

செல்போன் ஆதாரம் “இந்த வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும்,” ஸ்னோ தொடர்ந்தார்.

அதில் விஜேந்திரனின் காதல் குறுஞ்செய்திகள் மற்றும் தீபாவின் உறவினருடன் அவர் பரிமாறிக் கொண்ட பாலியல் படங்கள் பற்றிய விபரங்களை அறியலாம் என்றார்.

“தீபாவின் மரணத்திற்கு முந்தைய மாதத்தில் அந்த தொடர்பு தீவிரமடைந்தது” எள்றார்.

அத்துடன் அவர்களது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் பதிவாவதை நிறுத்திவிட்டதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.

விஜேந்திரன், கெர் மற்றும் திருமதி ஓவனுடன் தொடர்புடைய தொலைபேசி எண்களில் எவ்வாறு தொடர்பு கொள்ளத் தொடங்கினார் என்பதை ஜூரிகள் கேட்க வேண்டும் என்றார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபரின் காரின் வழியைக் கண்காணிக்கும் கண்காணிப்பு காட்சிகளையும் ஜூரிகள் பார்ப்பார்கள். மற்ற மூன்று பிரதிவாதிகள் கொலையில் தொடர்புபட்டதற்கான ஆதாரத்தை இதில் கண்டறியலாம்.

இந்த காட்சிகள் விஜேந்திரனின் மினி மார்க்கெட் அமைந்துள்ள அருகிலுள்ள பிளாசாவில் வாகனம் இருப்பதைக் காட்டுகிறது. போலீசார் உரிமத் தகடு எண்ணைப் பெற்று, ஆய்வு செய்ததில், துப்பாக்கிச் சூடு நடந்த அன்று காலையில் சாமுவேல் வாடகைக்கு எடுத்த கருப்பு செவர்லே க்ரூஸ் ஹேட்ச்பேக் என்று அடையாளம் கண்டதாக ஸ்னோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி Andras Schreck முன் விசாரணை பல வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் யாழ்ப்பாண குடும்பப் பெண் தீபாவைக் கூலிப்படையை வைத்துக் கொன்ற கணவன்!! விசாரணைகள் ஆரம்பம்!! - Vampan

இதன் ஆங்கில வடிவம்  Scarborough businessman hired hitman to kill wife, Crown says | The Star

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மனுசரப்பா.... காதலித்து கலியாணம் செய்து விட்டு...
மனைவியின் உறவினருடன் தொடர்பு, மனைவியை துன்புறுத்தல்.... 
பின் கொலையும் செய்கிறார்கள்.

பிரச்சினை  ஆரம்பிக்கும் போதே... அந்த அப்பாவி மனைவி விவாகரத்து பெற்று விலகியிருக்கலாம்.
பாவம் இவ்வளவிற்கும்... இரண்டு பிள்ளைகளின் தாய்...
இரவு ஷிப்ட் வேலை செய்து விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தவரை 
எழுப்பி கொன்றிருக்கிறார்கள்.

மிகவும் வேதனையான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இவர்களை போல முழு முட்டாள்கள் தமிழகத்தில், இலங்கையில் இருப்பது குறித்து கேள்விப்படுகிறோம். இப்படி ஒரு கிறுக்கு கனடாவில், அதுவும் ரியல் எஸ்டேட் வியாபாரியாக இருந்திருக்கிறது.

இப்போ, பிள்ளைகளுக்கு தாயும் இல்லை, தகப்பனும் இல்லை.

உந்தாளுக்கு இனி கள்ள பொம்பிளையும் இல்லை, வியாபாரமும் இல்லை. உள்ள இருந்து, யாருமே சீண்டாமல் செத்து துளைக்க வேண்டியதுதான். கொலை ஒன்றை செய்துவிட்டு, கள்ள உறவை தொடர முடியும் என்று நினைத்திருக்கிற இந்த அடி முட்டாளை என்னவென்பது?

இவர் மனைவி கொலை செய்தி கேட்டு வீடு ஓடி வந்து போலீசாரை சந்தித்த போது, அவரது பொக்கெட்டினுள் பெரும் தொகையான காசு வெளியே தெரியும் படியாக இருந்தது என்று போலீஸ் அதிகாரி சொல்கிறார். போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்று நினைத்தாரோ என்று தோன்றுகிறது.

கொலைக்கு திட்டம் போட முடிந்தவர்கள், அதன் விளைவுகள் குறித்து சிந்திக்க கூடிய நேரம் இருந்தும் அவ்வாறு செய்ய விளையாமல் இருப்பதால் தான், இதனை கைமோச கொலையில் இருந்து வித்தியாசப் படுத்தி இருக்கிறார்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இவர்களை போல முழு முட்டாள்கள் தமிழகத்தில், இலங்கையில் இருப்பது குறித்து கேள்விப்படுகிறோம். இப்படி ஒரு கிறுக்கு கனடாவில், அதுவும் ரியல் எஸ்டேட் வியாபாரியாக இருந்திருக்கிறது.

இப்போ, பிள்ளைகளுக்கு தாயும் இல்லை, தகப்பனும் இல்லை.

தகப்பனுக்கு கள்ள பொம்பிளையும் இல்லை, வியாபாரமும் இல்லை. உள்ள இருந்து, யாருமே சீண்டாமல் செத்து துளைக்க வேண்டியதுதான். கொலை ஒன்றை செய்துவிட்டு, கள்ள உறவை தொடர முடியும் என்று நினைத்திருக்கிற இந்த அடி முட்டாளை என்னவென்பது?

இவர் மனைவி கொலை செய்தி கேட்டு வீடு ஓடி வந்து போலீசாரை சந்தித்த போது, அவரது பொக்கெட்டினுள் பெரும் தொகையான காசு வெளியே தெரியும் படியாக இருந்தது என்று போலீஸ் அதிகாரி சொல்கிறார். போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்று நினைத்தாரோ என்று தோன்றுகிறது.

கொலைக்கு திட்டம் போட முடிந்தவர்கள், அதன் விளைவுகள் குறித்து சிந்திக்க கூடிய நேரம் இருந்தும் அவ்வாறு செய்ய விளையாமல் இருப்பதால் தான், இதனை கைமோச கொலையில் இருந்து வித்தியாசப் படுத்தி இருக்கிறார்கள்.

இப்ப கொலை செய்ய தூண்டியவர், கொலை செய்தவர் என்று ஒரு கூட்டமே 
தங்கள் வாழ்க்கையை கெடுத்து சிறையில் இருக்கப் போகுது.

நாதம்...  உங்கள் ஜூரி அனுபவத்தில்.... துப்பாக்கியால் சுட்டவருக்கா,
அல்லது இந்தக் கொலையை செய்ய தூண்டிய கணவருக்கா அதிக பட்ச   தண்டனை கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இப்ப கொலை செய்ய தூண்டியவர், கொலை செய்தவர் என்று ஒரு கூட்டமே 
தங்கள் வாழ்க்கையை கெடுத்து சிறையில் இருக்கப் போகுது.

நாதம்...  உங்கள் ஜூரி அனுபவத்தில்.... துப்பாக்கியால் சுட்டவருக்கா,
அல்லது இந்தக் கொலையை செய்ய தூண்டிய கணவருக்கா அதிக பட்ச   தண்டனை கிடைக்கும்.

இரண்டு பார்ட்டிக்கும் ஒரே கடுமேயான தண்டணை தான். கணவன் புறக்கிராசியார், மணைவிக்கும் சுட்டவருக்கும் தொடர்பு, அதனால் நடந்தது, எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். சுட்டதுக்கு தண்டணை நிச்சயம் என்பதால், காசை வாங்கிக் கொண்டு பொய் சொல்லவும் முணையலாம்.

ஆக.....

காசு பேசலாம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருக்கிறவைக்கு.. கனடாவில்.. ஹிந்தியாவில்.. சொறீலங்காவில் எல்லாம் கொலைக்கூலிப்படை இருக்குது.

இவர்களுக்கு இவற்றை எப்படி பராமரிக்க முடியுது.. அதற்கான பணப்பரிவர்த்தனை எப்படி நடக்குது.. இவர்களின் செயற்பாட்டுப் பின்னணி என்ன.. இப்படியானவர்களின் கனடா பிரஜா உரிமையை ரத்துச் செய்து.. நாடு கடத்தி.. நாடு கடத்தப்படும் நாட்டில் அதி உச்ச தண்டனை வழங்க ஏன் கனடா முடிவெடுக்காது இருக்கிறது??!

இந்த வழக்கில்.. ஒரு மொழிபெயர்ப்பாளரின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. ஆனால்.. சிங்கப்பூரில் அந்த தூக்கில் இடப்பட்ட தமிழ் இளைஞனுக்கு.. மொழிபெயர்ப்பாளர் கூட வழங்காது.. விசாரணைகளை தமக்கு சாதகமாக்கி தூக்கிலிட்டிருக்கிறது சிங்கப்பூர். அந்த நிலைக்கு கனடா போகாது.. கனடாவில் இருந்து இயங்கும் இந்த கும்பல்களையும் அதன் உதவி பெறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது.. கனடாவின் மதிப்புக்கும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அதன் உயரிய கோட்பாட்டுக்கும் நன்மையாகும். 

1 hour ago, பிழம்பு said:

“அவர் முதலில் தீபாவைச் சுட்டார், பின்னர் என்னைச் சுட்டார்” என்று லீலாவதி சீவரத்தினம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் மூலம் நடுவர் மன்றத்தில் கூறினார்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

என்ன மனுசரப்பா.... காதலித்து கலியாணம் செய்து விட்டு...
மனைவியின் உறவினருடன் தொடர்பு, மனைவியை துன்புறுத்தல்.... 
பின் கொலையும் செய்கிறார்கள்.

பிரச்சினை  ஆரம்பிக்கும் போதே... அந்த அப்பாவி மனைவி விவாகரத்து பெற்று விலகியிருக்கலாம்.
பாவம் இவ்வளவிற்கும்... இரண்டு பிள்ளைகளின் தாய்...
இரவு ஷிப்ட் வேலை செய்து விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தவரை 
எழுப்பி கொன்றிருக்கிறார்கள்.

மிகவும் வேதனையான செய்தி.

இப்படி எழுதும் நீங்களே அந்தப் பெண் தனக்கு பாதுகாப்பான முடிவை எடுத்திருந்தால் அதற்கு இன்னொரு பதில் எழுதியிருப்பீங்கள். இது பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. சம்பந்தப்பட்ட பெண் வருடக்கணக்கில் தொல்லையை அனுபவித்திருப்பாள். அந்த வலி வெளியே இருந்து புரிந்து கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, shanthy said:

இப்படி எழுதும் நீங்களே அந்தப் பெண் தனக்கு பாதுகாப்பான முடிவை எடுத்திருந்தால் அதற்கு இன்னொரு பதில் எழுதியிருப்பீங்கள். இது பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி. சம்பந்தப்பட்ட பெண் வருடக்கணக்கில் தொல்லையை அனுபவித்திருப்பாள். அந்த வலி வெளியே இருந்து புரிந்து கொள்ள முடியாது. 

எனது அனுபவத்தில்

இது  போன்ற  சம்பவங்களுக்கு பெண்களின் அமைதியும் ஆறப்போடுதலும் சகிப்புத்தன்மையுமே காரணம்  என்பேன். வளர்ந்த  நாடுகளின் பெண்கள்  உடனடி முடிவுகளை  எடுப்பது  போல  எமது பெண்கள்  முடிவுகளை  எடுக்க  தாமதமாவதால்  தான் அவை  வளர்ந்து இவ்வாறான சம்பவங்கள்வரை  வளர்ந்து  விடுகிறது?

ஆனால்  அவ்வாறான ஒரு முடிவை  பெண்கள்  அதிலும் பிள்ளைகளின் தாய்மார்கள்  எடுக்காதிருக்க எமது  சமுதாயம் மீதான நீங்கள்  மேலே குறிப்பிடும் பதில்களும்  ஒரு  காரணம்.

ஆனால் அந்த வலி வெளியே இருந்து அதிலும் ஆண்கள் புரிந்து கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ""யாழ்ப்பாண " குடும்பப் பெண் 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2023 at 15:50, விசுகு said:

எனது அனுபவத்தில்

இது  போன்ற  சம்பவங்களுக்கு பெண்களின் அமைதியும் ஆறப்போடுதலும் சகிப்புத்தன்மையுமே காரணம்  என்பேன். வளர்ந்த  நாடுகளின் பெண்கள்  உடனடி முடிவுகளை  எடுப்பது  போல  எமது பெண்கள்  முடிவுகளை  எடுக்க  தாமதமாவதால்  தான் அவை  வளர்ந்து இவ்வாறான சம்பவங்கள்வரை  வளர்ந்து  விடுகிறது?

ஆனால்  அவ்வாறான ஒரு முடிவை  பெண்கள்  அதிலும் பிள்ளைகளின் தாய்மார்கள்  எடுக்காதிருக்க எமது  சமுதாயம் மீதான நீங்கள்  மேலே குறிப்பிடும் பதில்களும்  ஒரு  காரணம்.

ஆனால் அந்த வலி வெளியே இருந்து அதிலும் ஆண்கள் புரிந்து கொள்ள முடியாது. 

ஒரு பக்க நியாயத்தினை வைத்து, பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

இரு பக்க வாதமும் கேட்டு தான், முடிவுக்கு வரமுடியும் என்பது எனது அபிப்பிராயம்.

உதாரணமாக, domestic violence என்பது பெண்களே பாதிப்பாளர்கள் என்ற கருத்து அண்மையில் தவறு என்று நிரூபிக்கப்பட்டு, பாதிப்பாளர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆகவே, தான் இருபக்க விளக்கமும் கேட்க்காமல் முடிவுக்கு வரமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ரஞ்சித் மத்திய வயது பிரச்சினை தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியதாக நினைவுள்ளது, இந்த வகை பிரச்சினைகளுக்கான மூலகாரணமாக இந்த மத்திய வயது பிரச்சினை இருக்குமா? என்பது தொடர்பான யாழ்கள துறைசார் நிபுணர்களது கருத்தினை எதிர்பார்க்கிறேன்.

What Are the Signs of a Midlife Crisis?

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாமாம் என்றால் உறவை நிறுத்திவிட்டு ( தற்கலிக பிரிவு), மனையின் உறவினருடன்  உறவை வளர்த்து இருக்கலாம்.

நான் நினைக்கிறன், இதில் காப்புறுதி காசும் தேறும் என்றதும் இருக்கலாமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.