Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரை மேட்டுக்குடி என்று சொல்ல அவர்களுக்கு உள்ளுக்குள் ஆனந்த பரவசம் கொள்வது எமக்கு தெரியும் உண்மையில் மேட்டுக்குடி என்பது அருவருப்பான இனம் அவர்கள் நியுமொல்டன் பக்கம் போனால் வண்டவாளம் தெரியும் தாங்கள் ஊரில் ஏழு நாளும் சைவம் என்பார்கள் பிள்ளைகள் மச்சம் உண்டு பழகி  விட்டார்கள் என்று கடையின் பின் பகுதியில் பிரோசின் நண்டை சதைப் பகுதிகளை மட்டும் ஒரு பெட்டிக்குள் திணித்து எடுத்து கொண்டு செல்வார்கள் இந்த செய்கைககளை வீடியோ வில் பதிவது பற்றி கவலை கொள்ளமாட்டார்கள் இப்படி நிறைய கதைகள் உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ஒருவன் பணத்துக்கு ஆசைப் பட்டு, தனது காணியை... பிக்குவிற்கு விற்பதால்..
அயலில்... நீண்ட காலமாக வசித்து வந்த பலரும், நிம்மதியை இழக்கப் போகின்றார்கள்.

எமக்கும் ஊரில் காணி இருக்கிறது. கடட்படை முகம் அருகில் இருப்பதால் எங்கள் இடத்தை விலைக்கு எடுப்பதட்கு முயட்சித்தார்கள். நாம் மறுத்துவிட்டொம். இன்றும் அந்த காணியை நாங்கள் கொடுக்கவில்லை. இருந்தாலும் அருகில் உள்ளவர்கள் கொடுத்துவிடடார்கள். அவர்களின் நிலைமை அப்படி. நான் அந்த ஊரில் இல்லாதபடியால் பின்னர் அறிந்து கொண்டேன். அவர்களின் இயலாமையை பயன்படுத்தி எடுத்துக்கொண்டார்கள்.

எனவே அவர்களின் ஏழ்மை நிலைமையை கவனத்தில் கருத்தில்கொண்டு  மற்றவர்கள் உதவி செய்தால் அப்படி நடக்க சந்தர்ப்பம் உருவாகாது. சில வேளைகளில் பணத்துக்காகவும் இருக்கலாம். இங்கு எப்படியோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

முன்பு ஒரு திரியில் @குமாரசாமி அண்ணா கூறியது ஞாபகம் வருகிறது. தமிழர்கள் சிலர் பெளத்த பிக்குகளாக மாறி  விகாரைகளை தமது பொறுப்பில் எடுத்தால் பெளத்தம் என்றால் சிங்களம் என்ற நிலையை மாற்றலாம்.  என்ன செய்ய இப்படியெல்லாம் கிறுக்கு தனமாக சிந்திக்க வேண்டி இருக்கு. 😂 

கிறுக்குத் தனமான சிந்தனை இல்லை. இது தான் சரியான சிந்தனை 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ ஓர் மூலையில், சுன்னாகத்தில் காணி வாங்க பிக்குவுக்கு எப்படி முடிந்தது?தரகர் அங்கயன், இன்னும் பலர் இதன் பின்னணியில் உள்ளனர். இந்தக்காணியை சுற்றி வர இந்துக்களோ கிறிஸ்தவர்களோதான் வசிக்கிறார்கள். இங்கே பிக்குவுக்கு விகாரை கட்டத்தேவையென்ன? மக்களை மதம் மாற்றப்போகிறாரா? சுற்ற உள்ள மக்களுக்கு குடைச்சல் கொடுத்து இராணுவ அச்சுறுத்தல் விட்டு அவர்களை விரட்டி விட்டு அபகரிக்கப்படப்போகிறது. இந்த இடத்தில் விகாரை கட்ட அனுமதி கொடுக்க முடியுமா? விகாரையில் வழிபட அந்த மதம் சாராதோர் இல்லாத இடத்தில விகாரை அமைப்பதால் சுற்றியிருக்கும் மக்களுக்கு ஏற்படும்  பாதிப்பை காரணம் காட்டி அனுமதி மறுக்கலாம். தொல்பொருளியலுக்கு கட்டிடம் கட்டும் அனுமதி வழங்க அனுமதியிருக்கிறதா? புலம்பெயர்ந்தோர் இப்படிப்பட்ட காணிகளை வாங்குவதன் மூலம் இவற்றை தடுக்கலாம். ஆனால் திட்டமிட்டு இரகசியமான முறையிலேயே இவை நடைபெறுகின்றன. ஒருகாலத்தில் கண்டிப்பாக இதற்கு ஒரு எதிர்ப்பு கிளம்பும் என்பதனால் விகாரைகளை பிரமாண்டமாக கட்டி, பெருமளவில் சிங்களவரை குடியேற்றினால் இது சிங்கள நாடாகிவிடும் அல்லது அவர்களது பூர்வீகம், மனித உரிமை  என அவர்களை குடிபெயர வைக்கமுடியாதென நினைக்கிறார்கள் போலுள்ளது. ஏன் வந்த ஐ. நா. உறுப்பினர்களை கூட்டிகொண்டுபோய் மக்களின் நிலம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இராணுவம் ஆக்கிரமித்து அந்த நிலத்துக்கு சம்பந்தமில்லாத வழிபடும் மக்கள் இல்லாத விகாரைகள் பிரமாண்டமான அளவில் பொருளாதார நெருக்கடியான நேரத்தில் ஏன் இங்கு எழுப்பப்படுகின்றன என காட்டி கேள்வி எழுப்ப தலைவர்கள் இல்லையா? இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை  இருக்கிறது இவர்களுக்கு  அல்லது இரண்டுபக்கமும்  நடிக்கிறார்களா. போர்குற்றவாளிகளை வெளிநாட்டுத்தூதுவர்களாக்கி போர்க்குற்றம் பகிரங்கப்படுத்தப்பட்டதுபோல்  இந்தப்பிரமாண்ட விகாரைகளை இவர்களின் அடாவடியை வெளிக்கொண்டுவர உதவலாம், பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும். எங்கள் நிலப்பரம்பலை, அதிகாரப்பரம்பலை தங்கள் சுகத்துக்காக மாற்றியமைத்த பிரித்தானியா தாம் போகும்போது  நமது அதிகாரங்களை நம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், சட்ட மாற்றம் இயற்றம் செய்யும்போது தமிழரையும் ஆலோசித்திருக்க வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். எங்களின் இந்த நிலைக்கு முழுப்பொறுப்பு பிரித்தானியாவையே சேரும். இதற்கு பொறுப்புக்கூற பிரித்தானியாவையும் வலியுறுத்த வேண்டும்.      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 ஏற்கனவே அமைக்கப்பட்ட வணக்ஸ்தலங்களே இலங்கையில் செயற்படலாம் புதிதாக யாரும் எதையும் ஸ்தாபிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப் பட வேண்டும்.

புதிதாக கிறிஸ்தவ சபைகளைக் கட்ட விடாமல் இப்படி ஒரு நடை முறை மாகாண சபைகளால் ஏற்கனவே பயன்படுத்தப் படுகின்றது 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பழக்கமான  ஒரு முன்னாள் போராளி இருக்கிறார். நீண்டகாலத்தின் முன்னர் துணிகரமான  காவலரண்கள் ஊடறுப்பு தாக்குதலில் ஒரு  குழுவாக சென்று அனைவரும் மாண்டுபோக காயத்துடன் தப்பி வந்த ஓரிரு போராளிகளில் அவரும் ஒருவர். முதுகில் ஏழு தழும்புகள், இன்றும் உணவருந்தி முடிந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓரிரு நிமிடங்கள் மெளனமாக இருப்பார் உணவு இறங்கும்போது உள்ளே வலி என்கிறார்.

அவர்போன்ற போராளிகளின் அர்ப்பணிப்பை நினைத்தால் உள்ளூர நடுங்கும். ஒருநாள் பேசிகொண்டிருந்தார் உடம்பும் அவ்வளவா ஏலாது ஊரில உள்ள வீடு காணியை வித்து இங்க ஏதாவது செய்யவேணும் எண்டார், ஏனண்ணை சொல்லிக்கொண்டிருக்கிறியள்  விக்க வேண்டியதுதானே, எண்டால்... 

கனபேர் கேட்டு வந்து கொண்டிருக்கினம், ஆனால் வாறது எல்லாம் அதுகள், இதுகள் நல்ல ஆக்களா எம்பிடுது இல்லையென்றார், நான் சிங்களவனோ முஸ்லீமோ என்று நினைத்து கேட்டால் இல்லை வேற சாதி ஆக்கள் அதுகளை கொண்டுவந்து நடுவில இருத்தினால் பிறகு அயல், சொந்தங்களுக்குள்ள பிரச்சனை என்றார்.

பொறுக்காமல் கேட்டே விட்டேன் நீங்களே இதெல்லாம் பாக்கலாமோ அண்ணை? அவர் சொன்னார் நான் பாக்கல்ல ஆனால் அங்கிருக்கும் உறவினர்களை மீறி இருத்தினால் இருதரப்பு நிம்மதியும் போய்விடும், காணி வாங்கினவர்களையும் காலம் எல்லாம் நிம்மதியா இருக்க விடமாட்டார்கள் என்றார், அவர் கருத்தும் ஒருவகையில் தற்கால போக்கில் புரிந்து கொள்ள கூடியதுதான், 

நிச்சயமாக இவர்போன்ற நிலையில் உள்ளவர்கள் நல்ல காசு கிடைத்தால் சிங்களவர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சொத்துக்களை விற்பனை செய்யும் அனைத்து வாய்ப்புக்களும் உண்டு.

நிகழ்காலத்தில் சமூகம் சமூகமாக பிரிந்து கிடக்கிறது தாயகம், உங்களிடம் நூற்றுக்கணக்கான கோடி பணம் இருந்தாலும் நீங்கள் வேறு சமூகமாக இருந்தால் விரும்பிய இடத்தில் நிலபுலன்களோ சொத்துக்களோ வாங்க முடியாது.

என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஒன்றுதான், தற்போது இனம் என்பது வேறு சமூகம் என்பது வேறு. இனத்திற்குள் சமூகம் வருகிறது ஆனால் சமூகத்திற்குள் இனம் வரவில்லை அதனால்தான் சொந்த அலுவல்களை பார்க்கும்போது இனம்பற்றி அங்குள்ள சமூகம் சிந்திப்பதே இல்லை.

ஆயுதம் ஏந்திவிட்டால் அனைத்து போராளிகளும் மக்களும் இந்த இழிநிலையிலிருந்து வெளிவந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது ஒட்டுமொத்த இயக்கத்தையும் இனத்தையும் வழி நடத்தி இருந்தவனின் கொள்கைகளால்தான் பலர் கட்டுண்டு கிடந்தார்கள் மீதம் எல்லாம் நீறுபூத்த நெருப்புபோல் கிடந்தது என்பதே யதார்த்தம்.

ஒரு கட்டத்தில் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டு அவமானபடுத்தப்படும் சக தமிழர்கள்   இந்த இனத்துடன் வாழ்வதைவிட சிங்களவர்களுடன் வாழலாம் என்ற நிலைக்கு வருவார்கள்,

மறுபக்கம் இதுகளுக்கு சொத்துக்களை விக்கிறதவிட சிங்களவர்களுக்கு வித்தால் கெளரவமாக அயலுக்க இருக்கலாம் என்று சிங்களவர்களை நோக்கி போவார்கள், ஆக மொத்தம் தமிழர்களின் இருபகுதியுமே காலம் முழுவதும் எந்த இனங்களுடன் எமது வாழ்வாதார உரிமைக்காக போராடினோமோ அவர்களையே பாய்விரித்து பந்தி வைத்து கொல்லைபுறத்தில் குடியேற்றும் நிகழ்வுகள் அரங்கேறும்

அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள முஸ்லீம் மக்களை யாழில் குடியேற்ற வேண்டியதில்லை அந்த வேலையை தமிழர்களே. சீக்கிரம் செய்வார்கள் .

உங்களுக்கென்று தனித்துவமான பிரதேசம் என்று ஒன்றுமில்லை என்பதே சிங்களவர்களின் வாதம், எங்களுக்கென்று தனித்துவமான பிரதேசம் தேவையில்லை என்பதே இன்றைய எம் சமூகத்தின் இழிநிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, valavan said:

ஒரு கட்டத்தில் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டு அவமானபடுத்தப்படும் சக தமிழர்கள்   இந்த இனத்துடன் வாழ்வதைவிட சிங்களவர்களுடன் வாழலாம் என்ற நிலைக்கு வருவார்கள்,

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உள்ள மத மாற்றங்களுக்கும் சாதியும் ஒரு காரணம்.
சாதி கருவறுப்பிற்காவது ஆயிரம் பிரபாகரன்கள் உருவாக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

அங்கிருக்கும் உறவினர்களை மீறி இருத்தினால் இருதரப்பு நிம்மதியும் போய்விடும், காணி வாங்கினவர்களையும் காலம் எல்லாம் நிம்மதியா இருக்க விடமாட்டார்கள் என்றார்,

ஒன்று வாங்குகிறவர்கள் பலவான்களாக இருந்தால்; தம்மைபலப்படுத்துவதற்காக இருப்பவர்களுக்கு குடைச்சல் கொடுப்பார்கள் அல்லது இருப்பவர்கள் கொடுக்கும் குடைச்சலில் வாங்கியவர் விற்பார் அல்லது விட்டு விட்டு ஓடுவார். அயலவருக்காகவே காணியை விற்காமல் இக்கட்டான நிலையில் இருப்போருமுண்டு, ஆனால் இவற்றையெல்லாம் கடந்து தாய் பிள்ளைபோல் பழகுவோரும் உண்டு. பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிலர் வேண்டுமென்றே, அயலவரின் நிம்மதியை கெடுப்பதற்காகவென்றே விற்போரும்,வாங்குவோருமுண்டு. ஊறிப்போன சமுதாய பழக்க வழக்கங்கள் மாற்றுவது கடினம். அதுவே எதிரிக்கு சாதகமாய் போய்விடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2023 at 01:29, Nathamuni said:

கொள்பிட்டி முதல், கல்கிசை வரை நம்மாட்கள் வாங்கிக் குவித்துள்ளனர். 

ஆகவே, உது பிழை எண்டு சொல்ல ஏலாது.

நம்மாட்கள் தமது வழிபாட்டுக்காக,  சொந்தப்பணத்தில் நிலம் வாங்கி, உரிய திணைக்களத்தில் அனுமதிபெற்று, அந்த வரைமுறைகளுக்கமைய கட்டி வழிபடுகிறார்கள். காரணம்; அங்கே வழிபட அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். யாரையும் அச்சுறுத்தி நிலம் பறித்து, களவாக, விதிமுறைகளை மறுத்து செய்யவில்லை. இங்கு தமிழர் பின்பற்றும், அல்லது நாட்டின் சட்டதிட்டங்கள் பேணப்பட்டிருக்கிறதா? அல்லது அவர்களது தேவை இவர்களுக்கு இங்கு இருக்கிறதா? அங்கு தேவை கருதி செய்கிறார்கள் இங்கு நிலப்பறிப்பு, அதிகார துஷ்பிரயோகம் நாட்டின் வள  துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

On 1/5/2023 at 03:54, Nathamuni said:

வெள்ளவத்தைல, காணி வாங்குறது சரி... கோவில் கட்ட கூடாது தானே...

On 1/5/2023 at 01:29, Nathamuni said:

ஆனால் விகாரை அமைப்பது தவறுதான்.

On 1/5/2023 at 01:29, Nathamuni said:

பெளத்த தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், சிங்கள பெளத்தர் வாழ்ந்த இடங்களாக, கதை மாறாமல் இருக்க வேண்டும்.

அதற்காகவே தமிழரை விரட்டிவிட்டு, அவர்களின்  நிலங்களை பறிக்கிறார்கள். இல்லையென்றால் வேறுஎன்ன தேவையிருக்கிறது அவர்களுக்கு எங்கள் நிலங்களில் விகாரை எழுப்ப அதுவும் பிரமாண்டமாக?  இன்னுமா நம்புகிறீர்கள்?    

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பகிடி said:

 ஏற்கனவே அமைக்கப்பட்ட வணக்ஸ்தலங்களே இலங்கையில் செயற்படலாம் புதிதாக யாரும் எதையும் ஸ்தாபிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப் பட வேண்டும்.

புதிதாக கிறிஸ்தவ சபைகளைக் கட்ட விடாமல் இப்படி ஒரு நடை முறை மாகாண சபைகளால் ஏற்கனவே பயன்படுத்தப் படுகின்றது 

சரியாக சொன்னீர்கள். தனக்கு தனக்கு என்றால் படக்கு படக்கு என்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2023 at 22:33, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உள்ள மத மாற்றங்களுக்கும் சாதியும் ஒரு காரணம்.
சாதி கருவறுப்பிற்காவது ஆயிரம் பிரபாகரன்கள் உருவாக வேண்டும்.

முக்கியமான விடயம் ஆப்ரிக்கர்களுக்கு இலவச கல்வியை கொடுக்க பின்நின்ற ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை போன்ற நாடுகளுக்கு இலவச கல்வியை கொடுக்கிறம்  என்ற போர்வையில் இப்படியான லூசுத்தனத்தை விதைத்து சென்றனர் இதுதான் உண்மை படித்து சித்தி எய்தினால்  மட்டும் காணாது முழுமையடையனும் என்றால் பல தேசம்களையும் நேரில் சென்று அறிந்து வா என்று அப்போதைய குருகுல கல்வி அறிவுறுத்தும் .நம்மாட்களில் சோதனையில் பாஸ் பண்ணியதுகள்  ஆனால் இன  மொழி பற்றில் வாழ்வியலில் பெயில் அப்படியானவர்களை  இலகுவில் அடையாளம் காணலாம் உலகின் ஊடகங்கள் என்று கொள்கை பரப்பும் ஊடகங்கள் சொல்வதை அச்சு  பிசகாமல் நம்புவர்கள்  .

  • கருத்துக்கள உறவுகள்
On 30/4/2023 at 23:24, Nathamuni said:

நான் தெளிவாக சொன்னேனே....

காணி வாங்குவதில் தவறு சொல்ல முடியாது. தலைநகர் என்று சாட்டு சொல்ல முடியாதே!

சமய நிலையங்கள் கட்டுவது தவறு. வெள்ளவத்தைல, காணி வாங்குறது சரி... கோவில் கட்ட கூடாது தானே...

ஆனாலும் இலண்டணில், சின்ன இடத்தில கோயில் தொடங்கி... உண்டியலில காசு சேர... புறுபுறுக்கிற பக்கத்து வீடுகளை வாங்கி....

சரியாக சொன்னீர்கள். வெள்ளவத்தையில் விசா பிள்ளையார் எண்டு கோவில் ஒன்று உருவாக்கி படிப்படியாக வளர்ந்து கொண்டு வருவது தெரியும் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2023 at 06:42, Cruso said:

சரியாக சொன்னீர்கள். வெள்ளவத்தையில் விசா பிள்ளையார் எண்டு கோவில் ஒன்று உருவாக்கி படிப்படியாக வளர்ந்து கொண்டு வருவது தெரியும் தானே. 

விசாப் பிள்ளாயாருக்குப் பக்கத்தில புத்தரிண்ட விகாரை.

பிள்ளையாரிண்ட விசா மவுசு கேள்விப்பட்டு, சிங்களச்சனம், புத்தரை கையை விட்டுட்டு பிள்ளையாரிட்டை விழுந்தடிச்சுக் கொண்டு வருகினமாம்... 😁

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2023 at 03:12, Cruso said:

சரியாக சொன்னீர்கள். வெள்ளவத்தையில் விசா பிள்ளையார் எண்டு கோவில் ஒன்று உருவாக்கி படிப்படியாக வளர்ந்து கொண்டு வருவது தெரியும் தானே. 

2 hours ago, Nathamuni said:

விசாப் பிள்ளாயாருக்குப் பக்கத்தில புத்தரிண்ட விகாரை.

பிள்ளையாரிண்ட விசா மவுசு கேள்விப்பட்டு, சிங்களச்சனம், புத்தரை கையை விட்டுட்டு பிள்ளையாரிட்டை விழுந்தடிச்சுக் கொண்டு வருகினமாம்... 😁

விசா பிள்ளையார் வெள்ளவத்தை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.