Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமீழத்தின் தலைநகராம் திருகோணமலைக்கு நான் சென்றிருந்தபோது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமீழத்தின் தலைநகரம் திருகோணமலைக்கு நான் சென்றிருந்தபோது எனது ஒளிக்கருவியினுள் அகப்பட்ட சில காட்சிகள்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் பல காட்சிகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே புதிய டைகர் வானொலிப்பகுதியில் இணைத்திருந்தாலும் பலரின் வேண்டுதலுக்கமைய இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

97% கோயில் மட்டும் தான் பதிவு செய்திருக்கிறியள் போல கிடக்கு :lol:

I could not see a single army , navy or even a policeman ?????

WHAT A PEACEFUL PLACE TRINCO IS !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

I could not see a single army , navy or even a policeman ?????

WHAT A PEACEFUL PLACE TRINCO IS !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தேவகி,

தமிழில் எப்படி எழுதுவது என்பது பற்றி கீழுள்ள திரியில் விபரிக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரம் தேவகி!

உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது, நீங்கள் தமிழை அறியாதவரா அல்லது தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாதவரா என்று எனக்குத்தெரியாது. இருந்தும் இந்தத்தளத்தில் உங்களால் கேட்கப்பட்ட மொழியில் பதில் கொடுப்பதில்லை என்ற கொள்கையில் உறுதிகொண்டவன் நான்.

ஆனாலும் உங்கள் கேள்விக்குரிய விளக்கத்தை கொடுக்கவேண்டிய கடப்பாடு எனக்குண்டு. என்னால் பதியப்பட்ட ஒளிப்படத்தின் கீழ் கொடுக்கப்பட்ட அறிமுகவுரையை பார்த்தீர்கள் என்றால் புரியும்.(தவிர்க்க முடியாத காரணத்தினால் பல காட்சிகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளன.)அதாவது உங்களால் எதிர்பார்ப்பவர்கள் எனது ஒளிக்கருவியினுள் புகுத்த எனது மனம் சம்மதிக்கவில்லை, இருந்தாலும் எமது மக்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் ஒளித்துண்டுகள் நிறைய உண்டு, எனது சுயவிளம்பரத்திற்காக அதை இங்கு பதிவு செய்யவில்லை என்பது தான் உண்மை.

வல்வைமைந்தன் நன்றிகள்! நன்றிகள்! நன்றிகள்!

இவை நான் சிறுவயதில் தவழ்ந்து திரிந்த இடங்கள்... இப்போது பல மாற்றங்கள் காணப்படுகின்றன. முன்பு இராவணன்வெட்டுக்கு அருகில் உள்ள கோயிலுடன் அண்டிய பிரதேசத்தில் ஓர் சிறிய குன்று இருந்தது. இப்போது அதை காணவில்லை. அதை அகற்றி வீதி செய்து உள்ளார்கள். நாங்கள் இராவணன் வெட்டுக்கு கீழ் உள்ள கடல்பகுதிக்கு கல் எறிந்து விளையாடுவோம். குரங்குகள், மான்கள், மயில்கள் என்று அது ஓர் அற்புதமான அனுபவம்..

இவற்றை பார்க்க பல நினைவுகள் வருகின்றன. மீண்டும் எனது குழந்தைப் பருவத்தை மீளவும் நினைவூட்டிப் பார்க்க உதவியமைக்கு மிக்க நன்றிகள்! :)

வல்வை மைந்தன் அண்ணா!!

வானொலியில் இணைத்திருந்தீர்கள் பார்த்தனான் கருத்து எழுத நினைத்து விட்டு சில வேளை பளூ மற்றும் படிப்பால் எழுத முடியாமல் போய்விட்டது மன்னிகவும்......மிகவும் நன்றாக இருகிறது ஒரு 4 வருசதிற்கு முந்தி இங்கே சென்றனான் இந்த அழகை கண்டு ஆனந்தம் அவ்வளதிற்கு ஒரு அழகான பிரதேசம்...... :D

கடற்கரைகளும்,துள்ளிதிரியும் மான்களும் என்று ஒரு இயற்கை அழகே அதை எங்களுக்கு மறுபடி காண்பித்த உங்களுக்கு நன்றிகள்.......... :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு ரசிக்கக் கிடைத்ததில் சந்தோசம் வல்வை மைந்தன்

திருகோணமலையில் சிங்கள அரசின் பிரசன்னம் இல்லையா எனகேட்ட தேவகி அவர்களே திருமலை முழுக்க முழுக்க இராணுவமயப்படுத்தபட்ட இடம்.திருமலை பிரதான வீதியில் விக்னேச்வரா பாடசாலைக்கு முன் 2 காவல்கரன்கள் இதில் சன்முக வித்தியாலத்துக்கு அருகில் 2 காவலரன் காளி கோயிலுகு முன்னால் 2 காவலரன் என ஒரு பெட்டி வடிவான[250 மீற்றர்] ரோட்டிலேயே 6 காவலரன் இது 96- இருந்து 2004 வரையிலான காலப்பகுதியில் இன்று இந்த பிரதேசம் எப்படி இருக்கும் என தெரியவில்லை.நான் பிறந்த இடம் எனது சொந்த ஊரும் திருமலைதான் என்ன அருமையான இடம் அருமையான கடற்கரைகள் இயற்கை அழகு மிக்க கோணமாமலை இன்று முழுக்க முழுக்க இராணுவமயம் நிலாவளி கடற்கரை புறாமலை முழுக்க முழுக்க சிங்கள இராணுவத்தின் பிரசண்னம் கோணேஸ்வரர் கோயில் தீர்த்த உற்சவம் அன்று இராணுவ உடையுடன் இராணுவத்தினரே தண்ணீர் தெளிபார்கள்.அதுமட்டுமல்ல கோணேஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டுமாயின் முதல்நாளே போய் பதிய வேண்டிய துர்பாக்கிய காலம் 95 இல் இருந்தது இன்று எப்படியோ தெரியவில்லை.கிண்ணியா வெந்நீர் ஊற்றுக்கு செல்கையில் நான் நினைகின்ரேன் 4 அல்லது 6 இடத்தில் இறங்கி ஏற வேண்டும் என அதுமட்டுமல்ல வெந்நீர் ஊற்றை சூழ இராணுவ பிரசன்னம் இருக்கும்.

எமது தலைநகரின் இயற்கை அழகையும் சுதந்திரத்தையும் சிங்களவனிடம் அடகு வைத்திருக்கும் போது நீங்கள் இப்படி சொல்லுவது சின்னப்பிள்ளைத்தனமானது

எமது தலைநகரின் இயற்கை அழகையும் சுதந்திரத்தையும் சிங்களவனிடம் அடகு வைத்திருக்கும் போது நீங்கள் இப்படி சொல்லுவது சின்னப்பிள்ளைத்தனமானது

தேவகி அக்கா,

நீங்கள் ரெண்டு வசனத்தில் சொன்ன இந்த கருத்து..

I could not see a single army , navy or even a policeman ?????

WHAT A PEACEFUL PLACE TRINCO IS !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பலரின் நித்திரையை குழப்பி கோவம் கொள்ள வைத்து உள்ளது போல் தெரிகின்றது. :lol:

நாம்ஆகக்குறைந்தது காணொளியை காணும்போதாவது சந்தோசமாக, மனநிறைவுடன் இருப்போம் எனும் நோக்கிலேயே வல்வைமைந்தன் யதார்த்தத்தை மறைத்து உள்ளார் என நினைக்கின்றேன். அவரது இந்த சிந்தனை பிழையாக தெரியவில்லை.

நான் பிறந்து வளர்ந்து, ஓடித்திரிந்த இடங்களை ஞாபகத்திற்கு கொண்டு வந்த வல்வை மைந்தனிற்கு எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வல்வை! மிகவும் நன்றாகவுள்ளது. :mellow::lol:

கிண்ணியா வெந்நீர் ஊற்றுக்கு செல்கையில் நான் நினைகின்ரேன் 4 அல்லது 6 இடத்தில் இறங்கி ஏற வேண்டும் என அதுமட்டுமல்ல வெந்நீர் ஊற்றை சூழ இராணுவ பிரசன்னம் இருக்கும்.

கிண்ணியா அல்ல கன்னியா.. :angry:

கிண்ணியா அல்ல கன்னியா.. :angry:

குட்டிமாமா எங்கே கனநாளா ஆளை காணவில்லை ஒரு சொல் மிஸ் ஆகினதிற்கு இவ்வளவு கோபம்........... ;) :P

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைமைந்தன் ஆமியையும் நேவியையும் படங்கள் பிடித்திருந்தால் சிலவேளை திரும்பி வருவதற்கு சந்தர்ப்பமே இருந்திருக்காது

கிண்ணியா அல்ல கன்னியா.. :angry:

மன்னியுங்கள் இருபெயரும் எனக்கு அடிக்கடி குழப்பம் வரும் கன்னியா என்பதே சரி

சகோதரர்களே, எங்களை எரிச்சல் படுத்தவே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாதீர்கள். பதில் சொல்வதை விட, ஒதுக்கி விடுவதே சிறந்த பதிலாகா இருக்கும்.

வல்வை மைந்தன், எனக்கும் அத்தை திருகோணமலையில் தான் இருக்கின்றார்கள். சில தடவைகள் சென்றுள்ளேன். கோவிலில் இராவணன் வெட்டு என அழைக்கப்படும் இடம் நன்றாக நினைவில் இருக்கு. மற்றப்படி கடலுக்குள்ள பழைய கோவில் தெரியும் என சொல்லி, எட்டி எட்டி பார்த்தேன்.. நீர் கொஞம் வற்றும் நேரத்தில் தெரியுமாமே, உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு தரம் சின்ன வயதில் திருகோணமலையில் கந்தளாய்க்கு போனதாக ஞாபகம்.மட்டக்களப்பும் ,திரிகோணமலையும் என்னால் பார்க்க முடியாதது எனது துரதிஸ்டம்.என்றாலும் திரிகோணமலையை அப்படியே கொப்பி அடித்தது போல எனது இடத்தில்( (place called Santa Cruz) எனது திரிகோணமலை நண்பர் பற்றி(பின்பு ஒரு சம்பவத்தில் அவர் பற்றியும் விபரிக்க முடியும் அப்படி ஒரு பிரபலம் போங்க) நிறையவே சொல்லியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இடம். கோடை காலத்தில் வெக்கயோ வெக்கை.எனது திருகோணமலை நண்பர் கூறுவார் நான் இருக்கும் இடத்தை( (place called Santa Cruz) ஞாபகப்படுத்துவதாக.சின்ன வயதில் மாமாவோடு மோட்டசைக்கிளில் கந்தளாய் வந்ததாக ஞாபகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.