Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்திரவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 5

06 MAY, 2023 | 11:13 AM
image

யாழ்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் வெள்ளிக்கிழமை (05) இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.

இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.

இதில் முக்கிய வீதிகளிலும் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் இடம்பெற்று இன்று அதிகாலையில் முத்துமாரி அம்மன்,சமேதராக ஆலயத்தின் வந்தடைந்தனர்.

இதில் லந்துகொண்ட பக்தர்கள் முத்துமாரியம்மனின் அருட்காடச்சத்தினை பெற்றுச் சென்றனர்.

FB_IMG_1683336057410.jpg

FB_IMG_1683336049847.jpg

FB_IMG_1683335857303.jpg

FB_IMG_1683335843488.jpg

FB_IMG_1683333759756.jpg

FB_IMG_1683333763558.jpg

FB_IMG_1683333756457.jpg

FB_IMG_1683333741247.jpg

20230506_065638.jpg

20230506_065624.jpg

20230506_065547.jpg

20230506_065611.jpg

20230506_065510.jpg

20230506_065510.jpg

20230506_065533.jpg

20230506_065450.jpg

20230506_065442.jpg

https://www.virakesari.lk/article/154618

  • கருத்துக்கள உறவுகள்

இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து விபத்து !

இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீட்டின் மீது வீழ்ந்து விபத்து !

நேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது

யாழ் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது.

இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.

இதன்போது வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

https://athavannews.com/2023/1331456

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வாயில அடிங்க…. தும்பளை இப்போது பருத்தித்துறையில் இல்லை அது யாழ்ப்பாணத்துடன் இணைந்துவிட்டது…. அதேபோல் ஆத்தியடியும் பருத்தித்துறையில் இருந்து தன்னை விடுவித்து புலோலியுடன் இணைந்து விட்டது.

எல்லாம் சாதி…… 

மேலதிக விபரங்கள் @Kavi arunasalam அவர்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

தும்பளை இப்போது பருத்தித்துறையில் இல்லை அது யாழ்ப்பாணத்துடன் இணைந்துவிட்டது…. அதேபோல் ஆத்தியடியும் பருத்தித்துறையில் இருந்து தன்னை விடுவித்து புலோலியுடன் இணைந்து விட்டது.

கடந்த கோடையில் போனபோது தும்பளை, ஆத்தியடி இரண்டும் பருத்தித்துறையில்தானே இருந்தன! வெட்டி எடுத்து மாற்றிவிட்டார்களா?🧐

  • கருத்துக்கள உறவுகள்

வர்ண விளக்குகளுடன் அலங்காரங்கள் அருமையாக இருக்கின்றன.......!  🙏

நன்றி ஏராளன் .....!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

கடந்த கோடையில் போனபோது தும்பளை, ஆத்தியடி இரண்டும் பருத்தித்துறையில்தானே இருந்தன! வெட்டி எடுத்து மாற்றிவிட்டார்களா?🧐

இப்படி ஆளுக்காள் ஒவ்வொரு ஊராக வெட்டி எடுத்து வங்காள விரிகுடாவில் தனி தனி தீவுகளாக ஆக்கிவிட்டால் இனப் பிரச்சனை தானாக தீர்ந்துவிடும். ஒவ்வொரு தீவையும் ஒவ்வொரு மாநிலமாக்கி United States of tamil eelam  islands என்று  ஆக்கி அங்கு நம் பஞ்சாயத்தை தொடரலாம். 😂😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

ஒவ்வொரு தீவையும் ஒவ்வொரு மாநிலமாக்கி United States of tamil eelam  islands என்று  ஆக்கி அங்கு நம் பஞ்சாயத்தை தொடரலாம். 😂😂😂😂

மேற்குலகநாடுகளில் உள்ள ஈழதமிழர்கள் ரஷ்ய மாதிரி Tamil eelam Federation   என்று தான் பெயர் வைத்து பஞ்சாயத்து பண்ண ஆசைபடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  தலைவரை நினைவு கூருகின்றார்கள்.:thumbs_up:  :folded_hands:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2023 at 10:15, MEERA said:

ஆத்தியடியும் பருத்தித்துறையில் இருந்து தன்னை விடுவித்து புலோலியுடன் இணைந்து விட்டது.

ஆத்தியடி, தம்பசெட்டி இரண்டுமே அப்போதில் இருந்தே புலோலி மேற்குதானே. அதுபோல் தும்பளை புலோலி கிழக்குப் பகுதியில் வருகிறது. இதில் ஆத்தியடியாரும் தம்பசெட்டியாரும் தங்கள் முகவரிகளைக் குறிப்பிடும் போது ஏனோ புலோலி என்று குறிப்பிடுவதில்லை. புலோலி என்பது ஒரு பரந்த பரப்பளவைக் கொண்டது. அதற்கு வடக்கு கடல் பகுதியாக இருக்கிறது. கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் ‘புல்எலிய’ என்ற என்ற சிங்களப் பெயர்தான் புலோலி எனபது மருவியதாக சொல்லப்படுகிறது. இத்தோடு விட்டு விடுவோம். சண்டைக்கு வந்து நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.. இடைஇடையே வர்ண சாலங்களை காட்டுங்கள். ரசிக்க காத்துள்ளோம்..😊

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு தொடர்பில் வெளியான தகவல் !

வட தமிழீழம் ;- 

யாழ்ப்பாண மாவட்டம் - வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திர விழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்த செய்தி தொடர்பில் உண்மை தன்மை வெளியாகியுள்ளது.

விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீடொன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் சில நபர்களால் வெளியிடப்பட்ட புரளி என தற்போது தெரியவந்துள்ளது.  

மேலும் மேற்குறித்த புகைக் குண்டு எரியாமல் பாதுகாப்பாக ஒரு வீட்டின் முன்புறமாக வீழ்ந்துள்ளமை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

https://www.thaarakam.com/news/960e6a1b-74a7-4fcb-9a7c-886aabf7c657

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.