Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம்

IMG-20230507-112824.jpg

யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.”

– இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது. இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இத்தோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்டவிரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது.” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2023/05/193055/

  • கருத்துக்கள உறவுகள்

கதம் கதம்.....

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம்- சவேந்திர சில்வா

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2023/1331500

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட விரோதமாக காரணமில்லாமல் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்துக்கு மிகப்பிரமாண்டமான அளவில் விகாரை கட்டும் பிச்சைக்கார நாடு இலங்கை ஒன்றுதான். அதற்கு முகாமில் வைத்து வழிபடமுடியாதாக்கும். இதுவே வடபகுதி முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் இருக்கிறது என்பதற்கு சான்றாகும். என்ன செய்வது? எங்களுக்கு தலைவர்களாக வாய்த்திருக்கும் ஓநாய்களை சொல்லவேண்டும். இவர்களை விட்டு புலம்பெயர்ந்தோர், இது சம்பந்தமான ஸ்தாபனங்களோடு தொடர்பு கொண்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். யஸ்மின் சூகாவிற்கு என்றாலும் அறிவிக்கலாம், அவர் அது சம்பந்தமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். ஐ .நாவில் ஒரு உறுதி மொழி, இங்கு வேறு செயற்பாடு. காரணம் ஐ. நாவால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். ஒரு போர்க்குற்றவாளி, இதுக்கு மேல என்னத்தை எதிர்பார்க்க முடியும். தனிப்பட்ட மக்களின் காணியில் விகாரை அமைத்து வீம்பு பேசுது புத்தம். இதையும் மதம் என்று வாதிடும் கூட்டம்.

6 minutes ago, தமிழ் சிறி said:

இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இங்கு இனவாதம் மதவாதம் பேசுவது சிங்களம். பவுத்தம், சிங்களம் இல்லாத இடத்தில விகாரை கட்டி வீரம் பேசுவது சிங்கள பவுத்தம். நாங்கள் கேட்பது நாங்கள் குடியிருந்த காணி எங்களுக்கு வேண்டும். நாங்கள் வீதியில், இந்த நிலத்துக்கு அறிமுகமில்லாத புத்தர் எங்களை விரட்டுவது எந்த வகையில் நிஞாயம்?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

இங்கு இனவாதம் மதவாதம் பேசுவது சிங்களம். பவுத்தம், சிங்களம் இல்லாத இடத்தில விகாரை கட்டி வீரம் பேசுவது சிங்கள பவுத்தம். நாங்கள் கேட்பது நாங்கள் குடியிருந்த காணி எங்களுக்கு வேண்டும். நாங்கள் வீதியில், இந்த நிலத்துக்கு அறிமுகமில்லாத புத்தர் எங்களை விரட்டுவது எந்த வகையில் நிஞாயம்?

சாத்தான்.... இதனைத்தான் ஊர் வழக்கில்,
"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்  பாக்கிற்கு விலை சொல்கிறார்கள்" என்பார்கள்.
அதனைத்தான்... சிங்களம் நாங்கள் கேட்பதை புரியாத மாதிரியே... 
பதில் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்பாவித் தமிழனிடம் ... அடாத்தாகவும், அதிகாரத்தை கொண்டு மிரட்டியும் பிடித்த  காணியில், 
புத்தர் வந்து குடியிருந்து, இவர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்.... இதனைத்தான் ஊர் வழக்கில்,
"வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்  பாக்கிற்கு விலை சொல்கிறார்கள்" என்பார்கள்.
அதனைத்தான்... சிங்களம் நாங்கள் கேட்பதை புரியாத மாதிரியே 
பதில் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்பாவித் தமிழனிடம் ... அடாத்தாகவும், அதிகாரத்தை கொண்டு மிரட்டியும் பிடித்த  காணியில், 
புத்தர் வந்து குடியிருந்து, இவர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல்.

உண்மையில் புத்தரை அவர்கள் தங்கள் இனவாதத்திற்கு, நில அபகரிப்புக்கு பயன்படுத்துகிறார்களே ஒழிய, அவரை கடவுளாக வழிபடுவதுமில்லை, அவரில் பயமுமில்லை, பக்தியுமில்லை, அவரது போதனைகளை கடைப்பிடிப்பதுமில்லை. அவர்களது பேச்சு, செயற்பாடு அதை தெளிவாக உணர்த்தியிருக்கிறது. இராணுவ முகாம் தனிப்பட்ட மக்களின் காணியில்  ஏக்கர் கணக்கில், இதில விகாரைக்கு வேறாக காணி பிடிப்பு, அடுக்குமா புத்தருக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விவகாரம் குறித்து மனோ சந்தேகம்

 

தையிட்டி விகாரை ஒரே நாளில் கட்டப்பட்டதா என்ற கேள்வி தனக்கு எழுவதாக  பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது சமூக ஊடகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

யாழ் தையிட்டியில் கட்டப்பட்டுள்ள விகாரையைப் பாரக்கும் போது அந்த விகாரையை இராணுவம் ஒரே நாளில் கட்டி முடித்து விட்டதா? அல்லது பல வருடங்களாக இந்தக் கட்டுமானப் பணிகளை இராணுவம் திரை போட்டு மூடி வைத்திருந்ததா என்ற சந்தேகம் தனக்கு எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/தயடட-வவகரம-கறதத-மன-சநதகம/175-316874

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

தையிட்டி விவகாரம் குறித்து மனோ சந்தேகம்

இந்த விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி 
அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நாட்டிருந்ததாகவும்
அந்தப் பகுதி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையால்,
பொது மக்களுக்கோ, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ... 
விகாரை கட்டி வருவதைப் பற்றி எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும்,
அண்மையில் விகாரைக்கு  கலசம் வைக்கும் போது தான்...
அப்படி ஒரு பெரிய விகாரை கட்டி முடிக்கப் பட்டிருப்பது 
வெளியே தெரிய வந்ததாகவும் சொல்கிறார்கள்.   

வேறு ஒரு திரியில்.... இந்த விகாரை அமைப்பு சம்பந்தமாக 
கள  உறவு @Cruso எழுதி இருந்தது அதிர்ச்சியாக இருந்தது.

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் உறுப்பினர் சஜீவன் என நினைக்கிறன், இது பற்றி ஆரம்பத்திலேயே முறைப்பாடு அளித்துள்ளார் என்று தெரிய வருகிறது. நம் தலைவர்களின் அசமந்தப்போக்கே இதற்கு காரணம். இப்போ மக்கள் களத்தில் இற்ங்கியபடியால் ஒப்புக்கு சப்பாய் அறிக்கை விடுகினம். இப்போ இராணுவத்துக்கு வைத்தியசாலை அமைப்பதற்காவும் அவரே அறிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏலவே சொல்லிட்டம்... தமிழர் தாயக பூமியில் இருந்து சொறீலங்கா முப்படைகளின் வெளியேற்றம் சாத்தியப்படாத வரை புத்த விகாரைகளின் பெருக்கத்துக்கு அவ்வளவு இலகுவாக முடிவெழுத முடியாது. எம்மவர்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படை வெளியேற்றம் பற்றி பேசவே தயங்குவதால்.. பேச முடியாமல் ஏதோ காரணத்திற்காக போர் முடிந்தும் இத்தனை ஆண்டுகள் அதனை சகித்துக் கொண்டிருப்பதால் தான்.. இந்த நிலை தீவிரமடைந்திருக்கிறது. இதற்கு எம்மவர்களே முழுப்பொறுப்பாவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/5/2023 at 08:00, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம்

சிங்களவர்கள் விகாரை கட்ட ஆரம்பிக்கும் போதே நமது அரசியல்வாதிகள் அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இப்போது மட்டும்  தங்கள் அரசியலுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதால்  இவர்களும் இனவாத புத்த பிக்குகளுக்கு சமமானவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களவர்கள் விகாரை கட்ட ஆரம்பிக்கும் போதே நமது அரசியல்வாதிகள் அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இப்போது மட்டும்  தங்கள் அரசியலுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதால்  இவர்களும் இனவாத புத்த பிக்குகளுக்கு சமமானவர்களே.

ஐயோ சாமி இந்த பேத்தைக்கு  பிறந்தது போல் ஒரு அரசியல் விலங்கு இருக்குமே அதன் பெயர் அடிக்கடி மறக்குது அந்த விலங்கு தான் புத்தர் கோவில் கட்ட யாழில் பல  இடம் பார்த்து கொடுத்து குறிப்பாய் மஞ்சள் பெயிண்டும் கொடுத்து வைத்து இருக்குது  ஆனால் அந்த விலங்கும்  இதே விகாரை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்குது படத்தில் பார்த்தேன். நித்திரை கண்ணை சுழட்டுது நாளை சந்திப்பம் சாமியார் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஐயோ சாமி இந்த பேத்தைக்கு  பிறந்தது போல் ஒரு அரசியல் விலங்கு இருக்குமே அதன் பெயர் அடிக்கடி மறக்குது அந்த விலங்கு தான் புத்தர் கோவில் கட்ட யாழில் பல  இடம் பார்த்து கொடுத்து குறிப்பாய் மஞ்சள் பெயிண்டும் கொடுத்து வைத்து இருக்குது  ஆனால் அந்த விலங்கும்  இதே விகாரை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்குது படத்தில் பார்த்தேன். நித்திரை கண்ணை சுழட்டுது நாளை சந்திப்பம் சாமியார் . 

அங்கஜன் இராமநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

அங்கஜன் இராமநாதன்.

அதேதான் நன்றி ஸ்ரீயண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

ஐயோ சாமி இந்த பேத்தைக்கு  பிறந்தது போல் ஒரு அரசியல் விலங்கு இருக்குமே அதன் பெயர் அடிக்கடி மறக்குது அந்த விலங்கு தான் புத்தர் கோவில் கட்ட யாழில் பல  இடம் பார்த்து கொடுத்து குறிப்பாய் மஞ்சள் பெயிண்டும் கொடுத்து வைத்து இருக்குது  ஆனால் அந்த விலங்கும்  இதே விகாரை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்குது படத்தில் பார்த்தேன். நித்திரை கண்ணை சுழட்டுது நாளை சந்திப்பம் சாமியார் . 

பெருமாள்…  இரண்டு நாட்களுக்கு முன், அங்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடியிருந்த மக்களுக்கு  
அங்கஜன்…. உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள் கொண்டு சென்றவராம்.
விகாரைக்கு… மஞ்சள் பெயின்ற் வாங்கிக் கொடுத்த செய்தியை இப்போதான் அறிகின்றேன்.
எங்கள் அரசியல் வாதிகளின்… இரட்டை வேடத்தை பார்க்க, வெறுப்பாக உள்ளது.

சிறீதரனும்… அங்கு நின்ற  மக்களுடன் முரண் பட்டதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

@பெருமாள் இயலும் என்றால்… “அரசியல் அலசல்” பகுதியில் உள்ள,
//கையாலாகாத தமிழ் கட்சிகள்// என்னும் தலைப்பில், நிலாந்தன் எழுதிய கட்டுரையை
வாசித்துப் பாருங்கள். உள்ளூர் நிலவரத்தை பார்க்க அதிர்ச்சியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிறீதரனும்… அங்கு நின்ற  மக்களுடன் முரண் பட்டதாக சொல்கிறார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு பொதுமகன், சிறிதரனிடம் முன்பு நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி, அதன் பிறகு அரசியல்வாதிகள் நீங்கள் இன்றுதானே இங்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிறிதரன் அவரை நோக்கி, நீர் போய் உம்முடைய கட்சிக்காரரிடம் கேளும், நான் தெரிந்துதான் வந்திருக்கிறேன் என்று அதட்டுகிறார். அதோடு அந்த நபர் மேலும் ஏதோ சொல்ல வருகிறார், ஆனால் சிறிதரன் அவரை அதட்டி அடக்குகிறார். அப்போ, இவர்கள் வேண்டுமென்று வாளா இருந்துவிட்டு கேள்வி கேட்பவரை அதட்டி வேறு பக்கம் விரட்டுவது, பிறகு மக்கள் வாக்கு போடவில்லை அதனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை என மக்களை குறைகூறுவது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

எம்மவர்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படை வெளியேற்றம் பற்றி பேசவே தயங்குவதால்..

விகாரை காட்டியதற்கு கூறும் காரணம்; அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவாம். நாங்களே கேட்டோம்  இராணுவத்தினரை இங்கு நிலை கொள்ளும்படி? பிரமாண்டமான அளவில் விகாரை தேவைப்படுவதென்றால், அங்கே வகை தொகையின்றி இராணுவம் நிலைகொண்டுள்ளது என்பதுதானே அர்த்தம். போர் முடிந்த கையோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேசம் கொடுத்த உதவிகளை விகாரை கட்டுவதற்கே சிங்களம் பயன்படுத்தியது. அதிகாரத்தை நம் கையில் தராமல் வைத்திருப்பது இதற்காகவே. எமக்கு வரும் உதவிகளை சுருட்டி இராணுவ முகாம்களும் விகாரைகளும் எங்கள் நிலத்தில் அமைத்து எங்களை அச்சுறுத்துகிறது. இது நல்ல சந்தர்ப்பம், புலிகள் இல்லை அவர்களே ஒத்துக்கொண்டு சர்வதேசத்திடம் பாராட்டுகளும் பெற்றுள்ளார்கள். இவர்கள் செய்த போர் பொதுமக்களை கொன்று குவித்து அவர்களின் நிலங்களில் விகாரைகளை, இராணுவ முகாம்களும் அமைத்து அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள் வந்து பாருங்கள் என்று அழைக்க மாட்டார்கள். இலங்கைக்கு கால அவகாசம், பாராட்டு வாங்கிக்கொடுக்க நாடு நாடாய் பறப்பார்கள், அவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வேண்டும், கைகுலுக்க வேண்டும், பிறகு எப்படி அவர்களை அகற்றுமாறு கேட்ப்பார்கள்? எங்கள் பிரச்சனையை சொல்ல நாங்கள் போகத்தேவையில்லை, அது அமெரிக்கா பாத்துக்கொள்ளும், ஆனால் இலங்கைக்கு அவகாசம் கொடுக்க அமெரிக்காவால் முடியவில்லை சட்டாம்பி வேணுமாம் உறுதிப்படுத்த. எது முக்கியம் அவர்களுக்கு? ஓநாய்களை வரவேற்க கூடாது என்பதற்காக இவர்களை மக்கள் தெரித்தெடுத்தால், இவர்களோ மக்களை அங்கே தள்ளுவதோடு ஓநாய்கள் பெருகவும் வழி அமைத்துக்கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மஞ்சள் பெயின்ற் வாங்கிக் கொடுத்த செய்தியை இப்போதான் அறிகின்றேன்.

யாழில் அநேக முக்கிய இடங்களில் இவர் கட்டிடம் கட்டுறம் என்று சொல்லி கூடவே ஒரு கட்டிடம் கட்டி அவற்றுக்கு எல்லாம் மஞ்சள் பெயிண்டு கொடுத்து வைத்து இருக்கும் அந்த மேலதிக கட்டிடம் பிக்குகள் தங்குமிடம் அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

யாழில் அநேக முக்கிய இடங்களில் இவர் கட்டிடம் கட்டுறம் என்று சொல்லி கூடவே ஒரு கட்டிடம் கட்டி அவற்றுக்கு எல்லாம் மஞ்சள் பெயிண்டு கொடுத்து வைத்து இருக்கும் அந்த மேலதிக கட்டிடம் பிக்குகள் தங்குமிடம் அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார்கள் .

ஓ… கடவுளே.
நம் அரசியல்வாதிகளே… நம் நிலத்தை சிங்களவனுக்கு பங்கு போட்டு கொடுக்கிறார்கள் போலுள்ளது.
ஆனால்… சென்ற பொதுத்தேர்தலில் மிக அதிகப் படியான வாக்குகளை செலுத்தி,
தமிழ் மக்கள்  அங்கஜனை வெற்றி பெற செய்தவர்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

சென்ற பொதுத்தேர்தலில் மிக அதிகப் படியான வாக்குகளை செலுத்தி,
தமிழ் மக்கள்  அங்கஜனை வெற்றி பெற செய்தவர்கள் என நினைக்கின்றேன்

வெற்றி பெறச் செய்ததற்குபிரதியுபகாரம்! த. தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளால் விரக்தியுற்ற மக்கள் புதிதாக வருபவர் எதிரிக்கு எம்மை விற்கப்போகும் ஓநாய் என்று தெரியாமல் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பி அவரை தங்கள் பிரதிநிதியாக அனுப்பிவைத்து விட்டு காத்திருக்கிறார்கள். இந்த ஓநாய் மக்களுக்காக பேரம் பேசுவதற்கு பதிலாக, கதிரை ஏறியதும் மக்கள் பிரதிநிதி என்றால்; என்ன? அதன் பொறுப்பு என்ன? என்று தெரியாமல் பணம், பதவிக்கு சோரம் போய் மக்களை இருந்த இடங்களை விட்டு கலைக்குது. மக்களின் நலன் கருதாமல், நன்றி இல்லாமல், தூர நோக்கில்லாமல் சுயலாபத்திற்காக சிங்களத்துக்கு குடை பிடிப்போரை நம்பியதன் பலன் கையோடு. இவர்கள் பெருகுவதற்கு இடம் விட்டுக்கொடுத்து மக்களின் ஏகபிரதிநிதிகள் நாங்கள்தான் என்று எக்காளமிடும் கூட்டம் இன்னொரு புறம். மக்கள் எங்கே போவது? யாரை மனம் நோவது? சொல்லுங்கள்! ஒரே வழி, தேர்தலை பகிஸ்கரித்து, சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தி இவர்களுக்கு பாடம் புகட்டுவது. சட்ட வல்லுநர்கள் இதற்கு ஒரு வழி கண்டு பிடித்து மக்களை தெளிவு படுத்த வேண்டும். எதற்கும் ஒரு மாற்று வழி உண்டு கண்டு பிடித்து முயற்சி செய்து பார்க்கலாம். மக்களை முட்டாள்கள் என்று நினைத்து பலபக்கம் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டுமானால் மக்கள் களமிறங்கி தங்களுக்காக போராடி வழிகளை திறக்கவேண்டும். சுயநலவாதிகளை நம்பி இழந்தது போக இருப்பதை காப்பாற்றுவதற்காகவாவது. அதிலும் பெரிய அநிஞாயம்; தானே துரோகத்தை செய்துவிட்டு, அவர்களோடு போராட்டக்களத்திற்கு வந்து உணவு கொடுக்கிறாராம். மக்கள் தங்களைப்போல் அற்பத்துக்கு விலை போவார்கள், தனது துரோகத்தை கண்டுபிடிக்க மாட்டார்கள், தனக்கு பின்னால அணிதிரண்டு மீண்டும் அனுப்பி வைப்பார்கள் என்பது இவரது எண்ணம். மற்றொருவரோ; சதா சிங்களத்துக்கு ஏவல் செய்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு, ஏதோ தமிழ் மக்களுக்காக பாடுபடுவது போல அறிக்கை. இவர்களின் மனதில் நீதி, நிஞாயம், உண்மை, நேர்மை என்பது இல்லையா? பெற்றோரிடம் இருந்து கற்றது இதுதானா? ஒரு இனத்தையே சுருட்டுதுகள் என்றால் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? அண்மையில், பயங்கரவாத சட்டத்தை எதிர்த்து மக்கள் கடையடைப்பு செய்தபோது, இதே பேத்தை மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதிக்கும் செயல் என அழுது அறிக்கை விட்டார், இப்போ எப்படி மக்களின் போராட்டத்திற்கு தான் வந்தார்? இது மக்களை பாதிக்காதா? இது மக்களின் நாளாந்த வாழ்க்கை அல்ல, முழு வாழ்வையும் நாசமாக்கிப்போட்டு நேரம் ஒரு அறிக்கை. மக்களின் வாழ்வை பாதிப்பது, அதற்கு துணைபோவது அவர்களாலேயே தெரிவு செய்யப்பட்டவர்கள் பிறகு மக்களுக்காக அழுவதுபோல் அறிக்கை விடுவதும் குறை கூறுவதும் மக்கள் முட்டாள்கள் என நினைத்து தங்கள் ஈனச்செயலை மறைப்பது. உதுக்கு பிச்சை எடுப்பதுமேல்!                      

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

 ஒரே வழி, தேர்தலை பகிஸ்கரித்து, சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தி இவர்களுக்கு பாடம் புகட்டுவது. சட்ட வல்லுநர்கள் இதற்கு ஒரு வழி கண்டு பிடித்து மக்களை தெளிவு படுத்த வேண்டும். எதற்கும் ஒரு மாற்று வழி உண்டு கண்டு பிடித்து முயற்சி செய்து பார்க்கலாம். மக்களை முட்டாள்கள் என்று நினைத்து பலபக்கம் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வேண்டுமானால் மக்கள் களமிறங்கி தங்களுக்காக போராடி வழிகளை திறக்கவேண்டும். சுயநலவாதிகளை நம்பி இழந்தது போக இருப்பதை காப்பாற்றுவதற்காகவாவது. அதிலும் பெரிய அநிஞாயம்; தானே துரோகத்தை செய்துவிட்டு, அவர்களோடு போராட்டக்களத்திற்கு வந்து உணவு கொடுக்கிறாராம். மக்கள் தங்களைப்போல் அற்பத்துக்கு விலை போவார்கள், தனது துரோகத்தை கண்டுபிடிக்க மாட்டார்கள், தனக்கு பின்னால அணிதிரண்டு மீண்டும் அனுப்பி வைப்பார்கள் என்பது இவரது எண்ணம். மற்றொருவரோ; சதா சிங்களத்துக்கு ஏவல் செய்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு, ஏதோ தமிழ் மக்களுக்காக பாடுபடுவது போல அறிக்கை. இவர்களின் மனதில் நீதி, நிஞாயம், உண்மை, நேர்மை என்பது இல்லையா? பெற்றோரிடம் இருந்து கற்றது இதுதானா? ஒரு இனத்தையே சுருட்டுதுகள் என்றால் இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? அண்மையில், பயங்கரவாத சட்டத்தை எதிர்த்து மக்கள் கடையடைப்பு செய்தபோது, இதே பேத்தை மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதிக்கும் செயல் என அழுது அறிக்கை விட்டார், இப்போ எப்படி மக்களின் போராட்டத்திற்கு தான் வந்தார்? இது மக்களை பாதிக்காதா? இது மக்களின் நாளாந்த வாழ்க்கை அல்ல, முழு வாழ்வையும் நாசமாக்கிப்போட்டு நேரம் ஒரு அறிக்கை. மக்களின் வாழ்வை பாதிப்பது, அதற்கு துணைபோவது அவர்களாலேயே தெரிவு செய்யப்பட்டவர்கள் பிறகு மக்களுக்காக அழுவதுபோல் அறிக்கை விடுவதும் குறை கூறுவதும் மக்கள் முட்டாள்கள் என நினைத்து தங்கள் ஈனச்செயலை மறைப்பது. உதுக்கு பிச்சை எடுப்பதுமேல்!                      

தேர்தலை புறக்கணிப்பது என்பது நடை முறைக்கு சாத்தியம் அற்றது.
தேர்தல் புறக்கணிப்பிற்கு, மக்களின் 100 % ஆதரவு இருக்க வேண்டும்.
அது தற்போது இல்லை என்பதே.. யதார்த்தம்.
போதாக் குறைக்கு… ஊரில் சிங்களவரும், சோனகரும் பெருகி விட்டார்கள்

புலிகள் காலத்தில் ஒரு முறை தேர்தல் புறக்கணிக்கப் பட்ட போது,
ஓட்டுக் குழுக்கள் போட்டியிட்டு… டக்ளஸ் தேவானந்தா 150 வாக்குகள் பெற்று,
பாராளுமன்றம் சென்று அமைச்சராகிய காட்சியையும் பார்த்தோம். 😁

நாங்கள் இப்போ தேர்தலை புறக்கணித்தால்…. தமிழ்ப் பகுதிகளில் இருந்து,
சிங்களவனும், சோனகனும் தெரிவு பெறக் கூடிய சந்தர்ப்பங்களே மிக அதிகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

தேர்தலை புறக்கணிப்பது என்பது நடை முறைக்கு சாத்தியம் அற்றது.
தேர்தல் புறக்கணிப்பிற்கு, மக்களின் 100 % ஆதரவு இருக்க வேண்டும்.
அது தற்போது இல்லை என்பதே.. யதார்த்தம்.
போதாக் குறைக்கு… ஊரில் சிங்களவரும், சோனகரும் பெருகி விட்டார்கள்

புலிகள் காலத்தில் ஒரு முறை தேர்தல் புறக்கணிக்கப் பட்ட போது,
ஓட்டுக் குழுக்கள் போட்டியிட்டு… டக்ளஸ் தேவானந்தா 150 வாக்குகள் பெற்று,
பாராளுமன்றம் சென்று அமைச்சராகிய காட்சியையும் பார்த்தோம். 😁

 

24 minutes ago, satan said:

தேர்தலை பகிஸ்கரித்து, சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தி இவர்களுக்கு பாடம் புகட்டுவது.

சர்வதேச மேற்பார்வை அவசியம்! இல்லாவிடத்து அது எமக்கே பாதகம். இது எடுத்தவுடன் செய்யும் காரியமல்ல, அரசாங்கம் அதற்கு உடன்பாடாது. காரணம்; தனது தேர்தல் தில்லு முல்லுகளுக்கு இடைஞ்சசல். நிறைய கடின உழைப்பு தேவை. நீண்ட காலமாக எவ்வளவோ முயன்று இழந்து விட்டோம், இன்னும் கூடுதல் உழைப்பு, ஆலோசனை, சாதக பாதகங்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். முன்பு ஒருதடவை சர்வேதேச கண்காணிப்பில் தேர்தல் நடைபெற்றும் அது சரியான பலனை தரவில்லை என அறிந்துள்ளேன். இலங்கை என்பது ஏமாற்றிலேயே பிறந்து, வளர்ந்து, ஊறியது. அதனை கண்டுபிடிப்பது கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல. அது விழும்போது அடிக்க வேண்டும். ஆனால் எதிர்பார்ப்பில்லாமல், கேள்வியில்லாமல் உதவ சர்வதேசம் துடிக்குது. அதன் எதிர்பார்ப்பு, இந்த சிறிய இனம் இந்த நாட்டிலிருந்து அழிய வேண்டுமென்பதோ?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

 

சர்வதேச மேற்பார்வை அவசியம்! இல்லாவிடத்து அது எமக்கே பாதகம். இது எடுத்தவுடன் செய்யும் காரியமல்ல, அரசாங்கம் அதற்கு உடன்பாடாது. காரணம்; தனது தேர்தல் தில்லு முல்லுகளுக்கு இடைஞ்சசல். நிறைய கடின உழைப்பு தேவை. நீண்ட காலமாக எவ்வளவோ முயன்று இழந்து விட்டோம், இன்னும் கூடுதல் உழைப்பு, ஆலோசனை, சாதக பாதகங்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். முன்பு ஒருதடவை சர்வேதேச கண்காணிப்பில் தேர்தல் நடைபெற்றும் அது சரியான பலனை தரவில்லை என அறிந்துள்ளேன். இலங்கை என்பது ஏமாற்றிலேயே பிறந்து, வளர்ந்து, ஊறியது. அதனை கண்டுபிடிப்பது கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல. அது விழும்போது அடிக்க வேண்டும். ஆனால் எதிர்பார்ப்பில்லாமல், கேள்வியில்லாமல் உதவ சர்வதேசம் துடிக்குது. அதன் எதிர்பார்ப்பு, இந்த சிறிய இனம் இந்த நாட்டிலிருந்து அழிய வேண்டுமென்பதோ?

உண்மைதான்… சாத்தான். எமது அரசியல் தலைமைகளும்
இதய சுத்தியுடன் செயல் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்தை அகற்றிவிட்டால், அவர்கள் வழிபடுவதற்கு விகாரை தேவையில்லை அல்லவா? 

ராணுவத்திற்கான விகாரையா அல்லது பெளத்த மயமாக்கலின் அங்கமான விகாரையினை  காக்க ராணுவமா? 

பலத்தினால் அன்றி இந்த இனவாத மிருகங்களை எமது தாயகத்திலிருந்து அகற்ற முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.