Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோழர்காலத்தில் கட்டப்பட்ட உருத்திரபுரீஸ்வரர் சிவாலயக் காணியிலும் தொல்பொருட்களாம் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

எமது மதத்தை சீர் திருத்துவதே இதை தடுக்க ஒரே வழி நிழலி. அதை செய்ய கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் மத மாற்றம் எனலறு ஒப்பாரி வைப்பதில் அர்ததம் இல்லை என்பது எனது கருத்து.  தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலில் படம் எடுப்பதையே தீட்டு என்று இன்றும் கூறும் அதை பேண முற்நிபடும் நிலையில் அதை விட மத மாற்றம் ஒன்றும் தப்பானதாக எனக்கு படவில்லை. வினைக்கு எதிர்வினை உண்டு. 

எங்க திருந்திறது..

சிவனை முதற் கடவுளாகக் கொண்ட ராவணனுக்கு தரமான இடம் இல்லை…

ராவண பக்தனை படையெடுத்து வந்து கொன்ற ஹனுமாருக்கு பிரம்மாண்ட இடம் உண்டு…

சக தமிழன் கோவில் உள்ள போக முடியாது.. சிங்களவன் கோயில் தேர் இழுக்கலாம்..

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2023 at 08:07, satan said:

பேதங்களை உருவாக்காமல், பிரித்து பேசாமல் தமிழர் எல்லோரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

தமிழர்களாக ஒன்றினைவதை தடுப்பது மதமல்ல சாதிதான்.. நீ நல்ல வசதியாக பாதுகாப்பாக இருக்கும்போது என்னை தீண்டத்தகாதவனாக நடத்திக்கொண்டு உனது இருப்புக்கும் சேர்த்து அச்சுறுத்தல் வரும்போது மட்டும் என்னையும் தமிழனாக வா போராடு என்றால் நான் என்ன கேணையனா உன் கதையை கேட்க.. நான் என்னை பேதமின்றி தன்னுடன் எவன்  அரவணைக்கிறானோ அவனிடம்தானே போவேன்.. அவன் கிறிஸ்தவனாக இருந்தால் என்ன முஸ்லீமாக இருந்தால் என்ன பெளத்தனாக இருந்தால் என்ன.. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று தானே தமிழ்மொழி சொல்லித்தருகிறது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழர்களாக ஒன்றினைவதை தடுப்பது மதமல்ல சாதிதான்.. நீ நல்ல வசதியாக பாதுகாப்பாக இருக்கும்போது என்னை தீண்டத்தகாதவனாக நடத்திக்கொண்டு உனது இருப்புக்கும் சேர்த்து அச்சுறுத்தல் வரும்போது மட்டும் என்னையும் தமிழனாக வா போராடு என்றால் நான் என்ன கேணையனா உன் கதையை கேட்க.. நான் என்னை பேதமின்றி தன்னுடன் எவன்  அரவணைக்கிறானோ அவனிடம்தானே போவேன்.. அவன் கிறிஸ்தவனாக இருந்தால் என்ன முஸ்லீமாக இருந்தால் என்ன பெளத்தனாக இருந்தால் என்ன.. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று தானே தமிழ்மொழி சொல்லித்தருகிறது..

என்ன ஓணாண்டியர் 🤔

விடுதலைப் போராட்டகாலமட்டுமல்ல, எப்போதுமே பொது எதிரி வரும் போதே இனம் ஒன்றாகும், ஓர்மமடையும்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே.

இலங்கையில் விடுதலைப்போராட்டத்தின் காரணம் என்ன? அதில் இருந்த நியாயம் என்ன என்பதை பிரபாகரன் தலையால் கிடங்கு கிண்டிணாலும் முடியாததை, இன்று பெளத்த சிங்களவன் உலகுக்கு புரிய வைக்கிறான்.

அது ஒரு தெளிவான முடிவுக்கு செல்லும். இலங்கைத்தீவில் மதவெறியே அரசுகளை தூக்கி வீசி இருக்கிறது. போர்த்துக்கேயன் போனது மத வெறியால்... 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

தமிழனுக்கு விடுதலையா…? 

2009 இல் செட்டிக்குளம் முகாமுக்குள் போய் மதமாற்றம் செய்த கள்ளக் கூட்டம்.

 

 

யாழ் கள நிர்வாகத்தினருக்கு இது உவப்பானதாக இருக்கிறதா 👆

மத மாற்றத்திற்குட்படும் நிலையில் அந்த மக்களை வைத்திருப்பது உங்கள் திறமை

😏

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

இனப்பிரச்சனை தொடர்பாக குரலெழுப்பும் தமிழர்களை மிக சாதுரியமாக மத பிரச்சனைகள் பக்கம் இழுத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

சரியாகச்சொன்னீர்கள்! இப்போ வடக்கில் சாதியையும், சமயத்தையும் பூதாகாரமாக்கி விகாரைகளாலும் மாற்று இனத்தாராலும் வடக்கை நிரப்பவேண்டும் அவர்களோடு கைகுலுக்க வேண்டும். அப்பாவி இளைஞர் இது தெரியாமல் போராடி மாண்டனர். கிறிஸ்தவர்கள் காணியை பிடிச்சு, வேலியை பிரிச்சு பலவந்தப்படுத்தி யாரையும் மதம் மாற்றவில்லை. இது சரியாக தெரியாதவரின் கூற்று; வறுமையை, சாதியை பயன்டுத்தி அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதெல்லாம் நாம் உருவாக்குபவை. அவர்கள் வந்து நம் வீட்டு வாசலை தட்டுகிறார்கள் நாமாக விரும்பி அனுமதியளித்து நம் வாசலை திறந்து வரவேற்றால் போதிக்கிறார்கள், ஏற்றுக்கொண்டவர்கள் தொடருகிறார்கள், விரும்பாதோர் அவர்களை அழைப்பதில்லை. அவர்களை யாரும் வற்புறுத்துவதுமில்லை. விரும்பினால் தொடர்பு கொள்வதற்கு முகவரி, அழைப்பெண்ணை கொடுத்து விட்டு போகிறார்கள். அவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாம் வசைபாடாமல் இருக்க முடியவில்லை நம்மால். வழிபட யாருமேயில்லாத இடத்தில, இன்னொரு வழிபாட்டுத்தலத்தை இடித்து, அந்த மக்களின் வழிபடும் உரிமையை மறுத்து, அந்தப்பிரதேசத்தின் தன்மையை அழித்து, தனி மனிதனின் குடியுரிமையை மிதித்து, உரிய அனுமதியின்றி, நடைமுறைகள் பின்பற்றப்படாது, அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்து, அச்சுறுத்தி கட்டப்படும் ஆக்கிரமிப்பு விகாரைகளை நல்லிணக்கம், ஒற்றுமை என்று விளக்கப்படுத்தும் நாம். நம்மைவிட நலிந்தவர்களை அச்சுறுத்தி, நம்மை பெரியவர்களாக, நீதிமான்களாக காட்டுவோம். இதற்காகவே எதிரி பதவிகளையும், பணத்தையும் கொடுத்து, மதமாற்றுவோரையும் ஊக்குவித்து தன் திட்டத்தை சுலபமாக்கிவிடுவான்.

9 hours ago, valavan said:

வெள்ளைக்காரன் நாடுகளிலேயே பெரிய பெரிய கோவில்களை கட்டும் நம்மவர்கள் எமது தாயகத்தில் மத ஆக்கிரமிப்பு என்று சர்வதேசத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டுபோய் நீதியும் கேட்க முடியாது.

ஏதிலிகளாக சென்றபோதும், என் மதத்திற்க்கு வா குடியுரிமை, தொழிலுரிமை, சலுகை என்று யாரையும் விலைபேசவில்லை வற்புறுத்தவுமில்லை மேற்குலகம். அங்கே எங்கள்  ஆலயங்களை கட்டவும், எங்கள் மொழிகளில் வழிபாடுகளை செய்யவும், எங்கள் பண்பாட்டு விழாக்களை கொண்டாடவும், துயரங்களை எதிர்ப்புகளை வெளியிடவும் அனுமதியளிக்கிறது. அத்தனையையும் அனுபவித்துக்கொண்டு அங்கேயும், நீ பெரிசு நான் பெரிசு என்று விழாக்களில் பிரச்சினை செய்து கொண்டு,  மேற்குலகு அச்சுறுத்தி மதமாற்றம் செய்தது என்று சந்தர்பத்திற்கேற்றமாதிரி பழிபோட்டு, தீட்டிய மரத்தில் கூர் பாப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இன்னல்கள் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவது தான் தவறு. இந்த முரணை நீங்கள் ஏற்காத வரை இது இப்படியே தொடரும்.

மேற்குலகம் எமது நாட்டை கையகப்படுத்தி தமது மத நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டவர்கள் எமது நாட்டு மக்களின் முதிகில் ஏறி சவாரி செய்தவர்கள் தமது நாடுகளில் தற்போது எமக்கு இடம் தருவதில் வியப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, valavan said:

இனப்பிரச்சனை தொடர்பாக குரலெழுப்பும் தமிழர்களை மிக சாதுரியமாக மத பிரச்சனைகள் பக்கம் இழுத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.

வெள்ளைக்காரன் நாடுகளிலேயே பெரிய பெரிய கோவில்களை கட்டும் நம்மவர்கள் எமது தாயகத்தில் மத ஆக்கிரமிப்பு என்று சர்வதேசத்துக்கு இந்த பிரச்சனையை கொண்டுபோய் நீதியும் கேட்க முடியாது.

மிகச்சரியாகச் சொன்னீர்கள். மெல்லவும் முடியாது விழுங்கவும் வழியில்லை என்ற நிலைமை.
வெள்ளைகரநாடு ஒன்றில் ஒரு சிற்றியில் அமைதியே உருவான மதத்தை  சேர்ந்தவர்கள்  சேர்ச் மணி காலையில் தங்களுக்கு இடையூறு செய்கின்றது அதை நிறுத்த முடியுமா என்று கேட்டார்களாம். அப்படி தான் இவர்களையும் நினைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதிலிகளாக சென்றபோதும், என் மதத்திற்க்கு வா குடியுரிமை, தொழிலுரிமை, சலுகை என்று யாரையும் விலைபேசவில்லை வற்புறுத்தவுமில்லை மேற்குலகம். அங்கே எங்கள்  ஆலயங்களை கட்டவும், எங்கள் மொழிகளில் வழிபாடுகளை செய்யவும், எங்கள் பண்பாட்டு விழாக்களை கொண்டாடவும், துயரங்களை எதிர்ப்புகளை வெளியிடவும் அனுமதியளிக்கிறது. அத்தனையையும் அனுபவித்துக்கொண்டு அங்கேயும், நீ பெரிசு நான் பெரிசு என்று விழாக்களில் பிரச்சினை செய்து கொண்டு   மேற்குலகு அச்சுறுத்தி மதமாற்றம் செய்தது என்று சந்தர்பத்திற்கேற்றமாதிரி பழிபோட்டு, தீட்டிய மரத்தில் கூர் பாப்போம்! ]

நூறு வீதம் உண்மை.
அப்படி வந்த கணேசன் முருகனில் சிலர் தாங்களாகவே தங்கள் பெயரை யோசப்பாக மாற்றி கொண்டார்களாம். அந்த நாட்டவர்களுக்கு நாங்கள் இலங்கையிலேயே யோசப்பாக தான் இருந்தோம் என்று சொன்னார்களாம்.
இந்த இலட்சணத்தில் சைவம் தான் தமிழர்களின் அடையாளம் என்று மதத்தை தலையில் கட்டும் முயற்சி வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

1) உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இன்னல்கள் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவது தான் தவறு. இந்த முரணை நீங்கள் ஏற்காத வரை இது இப்படியே தொடரும்.

2) மேற்குலகம் எமது நாட்டை கையகப்படுத்தி தமது மத நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டவர்கள் எமது நாட்டு மக்களின் முதிகில் ஏறி சவாரி செய்தவர்கள் தமது நாடுகளில் தற்போது எமக்கு இடம் தருவதில் வியப்பில்லை. 

1)  இலங்கை இந்தியாவில் சாதியால் தாழ்த்தப்பட்டு, அவர்களை உயர விடாமல் தடுப்பது  இன்னல் அல்ல. அது அநீதி. சொந்த இனத்திற்குச் செய்யும் துரோகம், வஞ்சனை. சொந்த ஊரில், சொந்த இனத்தில் உள்ள மக்களையே கோவிலுக்குள் அனுமதிக்காது, கிணற்றில் நீர் அள்ள விடாது, கல்வி கற்க விடாமல் தடுக்கும்போது வராத அக்கறை, அவர்கள் சமயம் மாறும்போது மட்டும் வருவது ஏன்? 

2) இப்பவும் திண்ணையில் உற்கார வைத்து வெற்றுடம்போடு சேவகம் செய்விக்க முடியவில்லை என்று கவலையோ ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

மேற்குலகம் எமது நாட்டை கையகப்படுத்தி தமது மத நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டவர்கள் எமது நாட்டு மக்களின் முதிகில் ஏறி சவாரி செய்தவர்கள் தமது நாடுகளில் தற்போது எமக்கு இடம் தருவதில் வியப்பில்லை.

எமது இனத்துக்குள் மதத்தின் பெயரால் சாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி “தீண்டத தகாதவர்கள்” என்ற ஒரு பிரிவையே எம்முள் ஏற்படுத்திய அட்டூழியங்கள் பாதகங்களை விட  விட மேற்குலக காலணித்துவம் எமக்கு பெரிதாக எதுவும்  அநியாயம் செய்யவில்லை. சைவத்தை வளர்த்ததாக கூறப்படும் ஆறுமுகத்தாரே ஒரு பழுத்த சாதி வெறியையே சைவத்துடன் சேர்தது பரப்பினார் என்பதே வரலாறு. ஆகவே மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை எமது இந்து/ சைவ மதத்துக்குள் முழு மனதுடன் ஏற்று அதை  நடைமுறை படுத்துவது ஒன்றே தீர்வு.  அதை எம்மால் செய்ய முடியாமை என்பதால்  தான் எமக்கு  அடுத்த மதத்தை கண்டதும் வயிற்றில் புளியை கரைக்கிறது. 

அதை விட மதம் ஒவ்வொருவருனதும் தனிப்பட்ட நம்பிக்கை மட்டுமே. எனவே  அடுத்தவன் தனது நம்பிக்கையை மாற்றிக்கொண்டால்  எவரும் அதனால் பாதிக்கப்படப் போவதில்லை. 

மதத்தை  ஒரு கட்சியாக அல்லது கும்பலாக நினைப்பகளுக்கு மட்டுமே மத மாற்றம் ஒரு பிரச்சனை. 

எமது இனத்தின் அரசியல் சமூக பொருளாதார, தொழில்நுடப வளச்சிக்கு    மதம் உதவப்போவதில்லை என்ற தெளிவை மக்களுக்கு உருவாக்கினால் அதற்கான அறிவூட்டலை உருவாக்கினால்  இங்கு எவரும் மதம்மாறப்போவதில்லை. மத மாற்ற கும்பலை அவர்களே நிராகரிப்பார்கள்.  அடித்து விரட்டுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2023 at 08:55, MEERA said:

தமிழனுக்கு விடுதலையா…? 

2009 இல் செட்டிக்குளம் முகாமுக்குள் போய் மதமாற்றம் செய்த கள்ளக் கூட்டம்.

மதம் மாறியவர்களுக்கிடையில் சாதிப் பாகுபாடு இல்லையா? அல்லது அவர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு இல்லையா? மதம் மாறி அவர்கள் கண்டது என்ன?

கள்ளர் களவெடுக்கிறார்கள் என்றால் களவெடுக்க விட்டுவிட்டு என்ன செய்கிறீர்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

மேற்குலகம் எமது நாட்டை கையகப்படுத்தி தமது மத நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டவர்கள் எமது நாட்டு மக்களின் முதிகில் ஏறி சவாரி செய்தவர்கள் தமது நாடுகளில் தற்போது எமக்கு இடம் தருவதில் வியப்பில்லை. 

மீரா! நான் உங்களுடன் வாதாட வரவில்லை, நட்புடன் சிலவற்றை சொல்கிறேன். விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள், வெறுப்பு ஏற்பட்டால் கடந்து போங்கள். அவர்கள் நம்நாட்டை கையகப்படுத்தினார்கள், அதனால் நாம் பல பலன்களை பெற்றோம். கல்வியறிவைப்பெற்றோம், அதிலும் பல முன்னேற்றங்களைப்பெற்றோம், பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றோம். மதத்தைப்பொறுத்தவரை விரும்பியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் யாரையும், எதிலும் முன்னேற விடாமல் அவர்கள் தடுக்கவில்லை. சைவத்துக்கு தொண்டாற்றிய பெரியார்களுள் பலர் கிறிஸ்தவ கல்லூரிகளில் கல்வி கற்றவர்களே. அவர்களை யாரும் மதம் மாற்றவில்லை, தடுக்கவில்லையே. ஆறுமுகநாவலர், தாமோதரம்பிள்ளை, விபுலானந்தர், பெரிய சட்ட வல்லுனர்கள், நிபுணர்களை உருவாக்கியவர்கள் அவர்கள். சரி உங்கள் வழிக்கே வருகிறேன்! இவர்களை அவர்கள் மதம் மாற்றித்தான் கல்வியறிவை கொடுத்தார்கள் என்றால்; அந்த திறமைகளை பெற்றவுடன் அவர்கள் மீண்டும் சைவத்துக்கு வந்துவிட்டார்கள் என்று கொள்ளலாமா? அப்போ அவர்களை அந்த மதமாற்றிகள் தடுக்கவோ தண்டிக்கவோ இல்லையே? இன்றும் சில கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் அன்றாடக்காய்ச்சிகளாக அல்லலுறும் மக்கள் கிறிஸ்தவர்கள் இருகிறார்கள். அவர்கள் எதற்காக மதம் மாறினார்கள், மதம் மாற்றப்பட்டார்கள்? படிப்பு பட்டம் பதவி இவையெல்லாம் எதற்காக? உயிருக்கு மிஞ்சியவையா? உயிருக்கும் மேலாக மதத்தை காத்தவர்களும்அன்றும் இன்றும் இருந்தார்கள் இருக்கிறார்கள். எத்தனை கிறிஸ்தவ மக்கள், பாதிரிமார் மதத்தைவிட தமிழுக்காக, உண்மையை பேசியதற்காக கொடூரமாக கொல்லப்பட்டனர். அவர்கள் தமிழ் வேறு, மதம்வேறு என்று பிரித்துப்பார்க்கவில்லை. இன்றும் பல போராட்டங்களை பாருங்கள்! பாதிரிமார் மக்களோடு மக்களாக மக்களுக்காக போராடுகிறார்கள். அங்கே சைவம், கிறிஸ்தவம் என்ற பேதம் பார்க்கவில்லை. அன்று பிரித்தானிய பிரதமர் வந்தபோது, மக்களின் பிரச்சனைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய அவர்களின் பிரதிநிதிகள் யாழ் நூல்நிலையத்திலிருந்து பின்கதவால் வெளியேறிய போதும், சிங்கள காவற்துறையின் இரும்பு கரங்களின் தடுப்பை உடைத்து, மக்களோடு மக்களாக இடித்து தள்ளி, விழுத்தி எழும்பி அவர்களின் நிலையை வெளிப்படுத்தியவர்கள் பாதிரிமார். முள்ளிவாய்க்காலில் தங்கள் உணவுகளஞ்சியங்களில் இருந்து மக்களுக்கு உணவளிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, அங்கே குண்டுகளை வீசி அழித்து மக்களை பட்டினியால் அழித்தது சிங்களம். இருந்தும் அவர்களை விட்டு விலகாமல் அவர்களோடு துன்பங்களை சுமந்தவர்கள் பாதிரிமார். மறைந்த மன்னார் ஆயர் உண்மையை பேசியதற்காக புலி என்றும் பயங்கரவாதி என்றும் சிங்கள இனவாதிகளால் அழைக்கப்பட்டார் இருந்தும் சோர்ந்துபோகாமல் தன் அறிவுள்ளவரை தமிழுக்காக உழைத்தவர். கடைசியாக தமிழரின் இன்னல்களை முழுவதையும் உலகத்துக்கு வெளிப்படுத்திவிட வேண்டும் என புறப்பட்டவர், அது நிறைவேறாமல் பாதியில் உடல் நோயுற்று, படுத்த படுக்கையாக திரும்பி வந்து இறந்தார். கிறிஸ்தவர்கள் பணத்தை, படிப்பை, பதவியை குடுத்து அச்சுறுத்தி மதம் மாற்றினார்கள் என்று குற்றம் சாடும் மேட்டுக்குடிகள், தாங்கள் எவ்வாறு அவற்றை பெற்றனர், ஏமாற்றினார்,  மக்களை எவ்வாறு ஏமாற்றினார் என்பதை சொல்வதில்லை. ஏமாற்றியவர்கள் தங்கள் காரியம் நிறைவேறியதும் திரும்பிவிட்டனர். ஆனால் எதுவும் எதிர்பாராமல், கிறிஸ்தவர்களது வாழ்வாலும், போதனையாலும் கவரப்பட்டுப்போனவர்கள், மேல் நாட்டார் போன பின்னும் இன்றும் நிலையாயிருந்து, தங்கள் உயிரைக்கொடுத்து தம் மதத்தையும், தமிழையும் காக்கிறார்கள். உண்மை தெரிந்தும் அதை வெறுப்பவர்களுக்கு ஏதோ ஒரு பயம் இருக்கிறது. அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களை குற்றம்சொல்லி ஒதுக்கிக்கொண்டே இருப்பார்கள். இதனால் லாபம் அடைவது எதிரியே!

 மேற்குலகம் எமது நாட்டை கையகப்படுத்தி தமது மத நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டவர்கள் எமது நாட்டு மக்களின் முதிகில் ஏறி சவாரி செய்தவர்கள் 

சிங்களம் சுதந்திரம் பெற்றதிலிருந்து நமக்கு என்ன செய்து வருகிறது? எங்கள் பிரதேசங்களில், எங்களுக்கு சம்பந்தமில்லாத செயற்பாடுகளை, எங்கள் அனுமதியில்லாமல் தமது நடவடிக்கைகளை ஆக்கிரமிப்பாக  செய்துவருகிறது. எங்களை ஏதிலிகளாக துரதியடித்ததாலேயே நாம் அவர்களிடம் போக வேண்டிய நிலையேற்பட்டது. அவர்கள் நம்மை நாட்டை விட்டு துரத்தவில்லையே அவர்கள் நாடுகளுக்கு போனபோதும். இந்த காரணமில்லாத வெறுப்பு மாறாதவரை நமக்கு விடுதலை வரப்போவதில்லை. காரணம் நாம் அவர்களை துரத்தியடிப்பதற்கு, நம்மை நிலைநிறுத்துவதற்கு அவர்களை பயன்படுத்துவோம். என்ன..? நம்மைப்போன்ற மனநிலை உள்ளவர்கள் கிறிஸ்தவம் இல்லையென்றால், வேறொன்றை கண்டுபிடிப்போம் மற்றவரை ஒடுக்குவதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இன்னல்கள் துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

அப்போ....! எங்கள் துன்பங்களை மட்டும் பெரிது படுத்த தேவையில்லை என்கிறீர்களா?

19 hours ago, MEERA said:

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவது தான் தவறு.

நானும் அதை தவறு என்றேதான் சொல்வேன்.

 

19 hours ago, MEERA said:

இந்த முரணை நீங்கள் ஏற்காத வரை இது இப்படியே தொடரும்.

இதில் எந்த முரணுமில்லை. கிறிஸ்தவ தமிழர் என்பதால் சிங்களம் அவர்களை தூக்கி வைக்கவில்லை, அவர்களும் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்கவுமில்லை. தமிழ்க் கிறிஸ்தவ பாதிரிமார் சிங்களத்துக்கு பெரிய தலையிடி! வன்னியில் மக்களோடு இருந்த பாதிரிமாருக்கு விசேட ஏற்பாடு செய்து அவர்களை வெளியேற்ற முயற்சித்தது. அவர்கள் அங்கிருந்து உண்மைகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது தலைமையகம் விரும்பியவர்களை வருமாறு அழைத்ததது, யாரும் துன்பத்திலிருக்கும் மக்களை விட்டு வெளியேற மறுத்து விட்டனர், அவர்கள் துன்பத்தோடு தங்களையும் இணைத்து ஒன்றுபட முடிவு செய்தனர். ஒரு பாதிரியாருக்கு மட்டும் விசேட வைத்திய உதவி தேவைப்பட்டதனால் அவரை வருமாறு கேட்கப்பட்டார். தலைமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் வெளியேற முடிவு செய்த அவர், அந்த மக்களை விட்டு வெளியேறும்போது, அந்த இடத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அதனாற்தான் அவர்களின் தலைமைப்பீடத்தை வைத்து அவர்களின் கருத்துக்களுக்கு மறுப்பளித்து வருகிறது. அதையும் அவர்கள் கடந்தே மக்களின்  உரிமைக்காக போராடுகிறார்கள், அதனாலேயே இப்போது நம்மை வைத்தே களமாடுகிறது.                        

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களம் முன்னெடுக்கவிருந்த நில அளவை முயற்சி டக்ளஸின் தலையீட்டால் இடைநிறுத்தம் 

Published By: NANTHINI

22 MAY, 2023 | 08:12 PM
image

கிளிநொச்சி, உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் அமைச்சரிடம் முறையிட்டிருந்த நிலையில், அதனை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று நிலைமைகளை தெளிவுபடுத்தியதன் விளைவாக நில அளவைப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளருமான கோ.றுஷாங்கன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களை சந்தித்து, அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்ற அமைச்சரின் செய்தியை தெரிவித்தார்.

இதன்போது ஆலய பரிபாலன சபைத் தலைவர் பசுபதிப்பிள்ளை, உப தலைவர் சிவஞானசுந்தரம், செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சரின் இணைப்பாளருடன் நீண்ட நேரம் கலந்துரையாடி, நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/155893

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

கிளிநொச்சி, உருத்திரபுர ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நில அளவை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளது.

 

6 hours ago, ஏராளன் said:

ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களை சந்தித்து, அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்ற அமைச்சரின் செய்தியை தெரிவித்தார்.

ஆஹா.... ஒரு ஓநாய் உருவாக்கப்படுகிறது மந்தையை சத்தமில்லாமல் விழுங்க. அப்போ..... குடும்பிமலை, தையிட்டி, கன்னியாய் ஊற்று இன்ன பிற தொல்பொருள்  விகாரை கட்டுமானங்களை தாடியார் தடுத்து நிறுத்தாததேனோ? அல்லது அது அவர் கண்களுக்குத் தெரியவில்லையோ? நல்ல நாடகம், கைதட்டி வரவேருங்கோ, மறக்காமல் வாக்கும் போடுங்கோ! ஆமா ..... நம்தலைவர்கள் இதுபற்றி கதைப்பதில்லையோ? அல்லது அவர்களது குரலுக்கு செவிசாய்ப்பதில்லை என்கிற சபதமோ? அவர்கள் சொன்னால்; இனவாதம், மதவாதம், அரசியல்வாதம். இவர் சொன்னால் எப்படி தெரியுது? வாசல் வழியாக வருபவன் சொந்தக்காரன், பின்வழியாக வருபவன் திருடன்.

முந்தி உப்பிடித்தான்... இராணுவம் காணி பிடிக்குது என்று செய்தி! அங்கு தாடியர் சேனையாக போவார், படம் பிடிக்கப்படும், இராணுவம் பின்வாங்கிவிடும். மறுநாள் தலைப்புச்செய்தி! நிவாரணம், இலவசம் என்று மக்கள் அழைத்து வரப்படுவார்கள், தயார்நிலையில் தலைக்கீழாய் பதாதைகள், அதில் என்ன எழுதி இருக்கிறது, அதை எப்படி தாங்குவது என்று தெரியாத திகைப்பில் மக்கள். அதை படம்பிடித்து செய்தி போட ஒரு கூட்டம். ஏமாற்றி பிழைக்கும் கூத்தாடிகள் உலகம் அப்படி! 

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் - அமைச்சர் விதுர உறுதி : குருந்தூர் மலையில் மேலதிக காணிகள் கையகப்படுத்தப்படாதாம்!

Published By: NANTHINI

25 MAY, 2023 | 05:15 PM
image

 

உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார். 

வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கும் இடையில் பத்தரமுல்லயில் அமைந்துள்ள அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு உறுதி அளித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன் மற்றும் குலசிங்கம் திலீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோவில், வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, குச்சவெளி விகாரைகள், தையிட்டி விகாரை, ஆனையிறவிலும் கிளிநொச்சி நகரிலும் புதிய விகாரை அமைப்பதற்கான முன்னெடுப்புகள், பரந்தன் சந்தி புத்தர் சிலை, கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் விகாரை அமைத்தல் மற்றும் பூநகரி விகாரை உள்ளிட்ட விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

download.jpg

இச்சமயத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் தன்னால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அமைச்சரிடத்தில் கையளித்தார்.

இதன்போது புனித பூமிகளுக்குரிய காணிகளை பொதுமக்கள் கையகப்படுத்த முனைவதாலேயே அவ்விடங்களை தாம் அளவீடு செய்வதாக தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டதை உடனடியாகவே மறுத்துரைத்த சிறீதரன் எம்.பி., எங்கள் மக்கள் அத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை எனவும் பொய்யுரைகளை பரப்பி மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல், எமது மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மிகக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

நீண்ட நேர விவாதத்தின் பின்னர் உருத்திரபுரம் சிவாலயத்தில் தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதற்கு, இது தொடர்புடைய திணைக்களங்களுக்கு உத்தரவு பிறப்பிப்பதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்தார்.

குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை விவகாரங்கள் தொடர்பில் அவற்றின் வழக்குத் தீர்ப்புகளின் பின்னர், விசேட கலந்துரையாடலை ஒழுங்குசெய்து தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தையிட்டி விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதேயன்றி, அதற்கும் தொல்லியல் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். 

அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் குருந்தூர் மலை ஆக்கிரமிப்புக்கு அப்பால் அப்பகுதியில் உள்ள காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதற்கு தொல்பொருளியல் பணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு உரித்தான காணிகளையே கையகப்படுத்துவதாக கூறிய பணிப்பாளர் பின்னர், அதற்குள் தொல்பொருள்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் கூறினார். 

அச்சமயத்தில் குறுக்கீடு செய்த சார்ள்ஸ் எம்.பி, நீங்களும் பொலிஸார் போன்று தொல்பொருட்களை வைத்து காணிகளைப் பிடிக்கப்போகின்றீர்களா என கேட்டார்.

அப்போது, குருந்தூர் மலையில் கட்டப்பட்டது விகாரை அல்ல என்ற தொனிப்பட பணிப்பாளர் கருத்துக்களை வெளியிட முற்பட்டபோது, குறுக்கீடு செய்த சார்ள்ஸ், அப்படியென்றால், வெடுக்குநாறி மலையில் சொந்த பணத்தில் கோவிலைக் கட்டவா என்றும் கேள்வி எழுப்பினார்.

அச்சமயத்தில், அமைச்சர் விதுர பணிப்பாளருக்கு கடுமையான தொனியில், அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட பணிகளை செய்ய வேண்டாம் என கூறினார்.

https://www.virakesari.lk/article/156155

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.