Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, vasee said:

நீங்கள் கூறுவதும் சரிதான்.

ஆனால் இந்திய நிர்வாகம் செய்த மைதான குளறுபடியால் ( பழைய மைதானம் பாவித்ததால்) இங்குள்ளவர்கள் நாணய சுழற்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயமும் மோசடி செய்யப்பட்டது என கூறி இந்தியர்களை மிகவும் இழிமைப்படுத்துகிறார்கள்.

இதுவரை எட்டியும் பார்த்ததில்லை இப்போது நீங்கள் கூறிய பின்புதான் எட்டிப்பார்க்கும் ஆர்வம் வந்துள்ளது ஆனால் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு ஆர்வம் இருக்குமா எனத்தெரியவில்லை.

எனது இந்திய நண்பர் ஒருவர் இதனை முன்னர் முழநேர தொழிலாக செய்துவந்ததாக கூறினார், ஆர்வம் இல்லாததால் அதன் சூட்சுமங்களை காதில் வாங்கவில்லை அடுத்தமுறை அவர் அது பற்றி கூறினால் கவனமாக செவிமடுப்பேன்.

பெய‌ர் சொல்ல‌ விரும்ப‌ வில்லை
13வ‌ருட‌த்துக்கு முத‌ல் நானும் யாழ்க‌ள‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சும்மா ப‌ண்ணுக்கு ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கி நாங்க‌ள்...........இங்லாந் நாட்டில் இய‌ங்கும் www.bet365.com  Unibet.com இப்ப‌டியான‌ சூதாட்ட‌  இணைய‌த்தில் . cricket . rugby. Basketball. Handball . Australia AFL . NBA Basketball . United State of America NHL . American NFL . Baseball .சுறுக்க‌மாய் சொல்ல‌ப் போனால் உல‌கில் உள்ள‌ புக‌ழ் பெற்ற‌ அத்த‌னை விளையாட்டுக்கும் க‌ட்டி வெல்லுற‌து தோக்கிறது

உப்ப‌டி விளையாடி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 5ல‌ச்ச‌ம் குரோன் காசு தோத்த‌ நான்.........இல‌ங்கை காசுக்கு பார்த்தால் 2கோடிக்கு மேல் வ‌ருது🙈.............என‌து ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் 3மில்லிய‌ன் குரோன் காசு தோத்த‌வ‌ன்😯.............ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர் தோத்த‌வ‌ர்🙈.............நான் க‌ற்றுக் கொண்ட‌ அனுப‌வ‌த்தில் தான் சொன்னேன்............அண்ணா உந்த‌ சூதாட்ட‌ இணைய‌ த‌ள‌ங்க‌ளை எட்டியும் பார்க்க‌ வேண்டாம் என்று................உங்க‌ட‌ ந‌ண்ப‌ன் ஆசைய‌ காட்டி அதுக்கை உங்க‌ளை மூழ்க‌டித்தால் அதில் இருந்து மீண்டு வ‌ர‌ ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ஆன‌ ப‌டியால் சூதாட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை எட்டியும் பாராம‌ இருங்கோ உழைக்கும் காசே போதும் வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்த‌ அண்ணா 🙏

  • Replies 546
  • Views 32.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

ஆனால் இந்திய நிர்வாகம் செய்த மைதான குளறுபடியால் ( பழைய மைதானம் பாவித்ததால்) இங்குள்ளவர்கள் நாணய சுழற்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயமும் மோசடி செய்யப்பட்டது என கூறி இந்தியர்களை மிகவும் இழிமைப்படுத்துகிறார்கள்.

எப்படி அடித்தாலும் இந்தியா தாங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி அடித்தாலும் இந்தியா தாங்கும்.

கோப்பை இந்தியாவுக்கு தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

அவுஸ்ரேலியா 2003 . 2007க‌ளில் இருந்த‌ அவுஸ்ரேலியா அணி இப்ப‌ கிடையாது 

முந்தி உட‌ன‌ சொல்ல‌லாம் பின‌லில் அவுஸ்ரேலியா தான் வெல்லும் என்று............ந‌ர‌ந்திர‌ மோடியின் மைதான‌த்தில் பின‌ல் ந‌ட‌க்குது ஜ‌பிஎல்ல‌ இருந்த‌ போல‌ பிச் இருக்குமோ தெரியாது.............

இந்தியா நாளைக்கு தோத்தா வெக்க‌க் கேடு............இந்தியா வென்றால் ஒரு கிழ‌மைக்கு யூடுப் ப‌க்க‌ம் போக‌ கூடாது...............மூன்றாம் உல‌க‌ போரில் வென்று இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆகி விட்ட‌ ரேஞ்சில் இந்த‌ வெற்றிய‌ கொண்டாடுவாங்க‌ள்..............😂😁😁

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆடினால் அவுஸ் 250 ஓட்டங்களினுள் அமத்த வேண்டும். அவுஸ் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் முன்னூறுக்கு மேல் அடிக்க வேண்டும். இது நடந்தால் இறுதி ஆட்டம் சுவாரசியமாக போகும். 

இலங்கையை ஆசியா கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா துவம்சம் செய்தது போல் அவுஸை துவம்சம் செய்யாது என எதிர்பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

WorldCup2023: உலகக்கோப்பை யாருக்கு? வெற்றியை தீர்மானிக்க போகும் டாப் 5 பிளேயர்கள்!

ManjulaNov 18, 2023 14:08PM
50Wkc3Se-Rohit-Sharma.jpg

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (நவம்பர் 19) நடைபெற போகும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யார் கோப்பை வெல்ல போகிறார்கள்? என்பது தான் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி.

இதற்கான விடை நாளை இரவு தெரிந்து விடும். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 4-வது முறையும் ஆஸ்திரேலியா 8-வது முறையுமாக நாளை (நவம்பர் 19) விளையாட உள்ளன. இதில் இந்தியாவின் முக்கிய பிளேயர்களாக கோலி, ஷமியும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பிளேயர்களாக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் 5 வீரர்களும், இந்தியா தரப்பில் 5 வீரர்களும் போட்டியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என விமர்சகர்கள் கணித்துள்ளனர். இதுவரை இரண்டு அணிகளும் நேருக்கு நேராக விளையாடிய போட்டிகளில் இவர்கள் என்ன ரெக்கார்டுகள் வைத்திருக்கிறார்கள்? என்பதை இங்கே பார்க்கலாம்.

1. ரோஹித் சர்மா Vs மிட்செல் ஸ்டார்க்

கடந்த அக்டோபர் 8-ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை முதல்முறையாக ஜோஷ் ஹேசல்வுட் எடுத்தார். அந்த போட்டியில் ரோஹித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதேபோல பேட் கம்மின்ஸும், ரோஹித்தை அதிகளவு வீழ்த்தியது இல்லை. 16 போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே கம்மின்ஸ், ரோஹித் விக்கெட்டை எடுத்துள்ளார்.

Rohit-Vs-Starc-768x427.jpg

ஆனால் மிட்செல் ஸ்டார்க்கிடம் ரோஹித் 3 முறை தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். 141 பந்துகளை சந்தித்து 146 ரன்கள் எடுத்திருக்கும் ரோஹித், மிட்செல்க்கு எதிராக 48.7 சராசரி வைத்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியிலும் மிட்செல், ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வார். அவரிடம் தன்னுடைய விக்கெட்டை ரோஹித் அவசரப்பட்டு இழக்காமல் நிதானமாக ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

2. விராட் கோலி Vs ஜோஷ் ஹேசல்வுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு கோலி & ராகுல் பார்ட்னர்ஷிப்பில் அடித்த 165 ரன்களும் முக்கிய காரணமாகும். அதோடு கோலி 12 ரன்களில் கொடுத்த கேட்சை மிட்செல் மார்ஷ் தவற விட்டதும் ஒரு பெரிய திருப்பமாக அமைந்து. அதேபோல இந்த போட்டியிலும் கோலி ரன்களை குவிக்க வேண்டும் என்றால் அவர் நிதானமாக ஆட வேண்டும்.

Virat-768x445.jpg

குறிப்பாக ஹேசல்வுட் பந்துவீச்சை கோலி எப்படி சமாளித்து ஆடுகிறார் என்பதை பொறுத்தே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இருக்கும். இதுவரை ஜோஷ் ஹேசல்வுட்டின் 88 பந்துகளை சந்தித்துள்ள கோலி அதில் 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதோடு 5 முறை அவரின் பந்தில் அவுட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஹேசல்வுட்டை வைத்து கோலி விக்கெட்டை எடுக்க கம்மின்ஸ் முயற்சிப்பார். இந்த சூழ்ச்சி வலையில் கோலி சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

3. கே.எல்.ராகுல் Vs ஆடம் ஜாம்பா

லீக் சுற்று போட்டியில் ஆடம் ஜாம்பாவின் 25 பந்துகளை எதிர்கொண்டு அவருக்கு எதிராக 29 ரன்களை ராகுல் அடித்தார். இது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்துக்கு உள்ளானது. ஏனெனில் ஜாம்பாவின் 138 பந்துகளை எதிர்கொண்டு 133 ரன்களை எடுத்துள்ள ராகுல், 4 முறை அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து இருக்கிறார்.

Kl-Rahul-768x392.jpg

இதனால் தான் லீக் போட்டியில் அவர் ஜாம்பாவின் பந்துகளை அடித்து ஆடியது கவனத்துக்கு உள்ளானது. இதேபோல இறுதிப்போட்டியிலும் ராகுல் விளையாடினால் வெற்றிக்கோப்பையில் இந்தியாவின் பெயரை எழுதி விடலாம்.

4.முகமது ஷமி Vs டேவிட் வார்னர்

நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமி நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார். ஏனெனில் இந்த தொடரில் 550 ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருக்கும் வார்னர் நாளையும் இதேபோல பேட்டிங் செய்தால் அது இந்திய அணிக்கு பெரும் சிக்கலாக மாறி விடும்.

Shami-768x590.jpg

அதே நேரம் இந்தியாவின் மற்ற பவுலர்களை அடித்து ஆடும் வார்னர், ஷமி பந்துகளை கவனத்துடன் தான் எதிர்கொள்வார். ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஷமியின் பந்துவீச்சில் அவர் 3 முறை தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். ஷமிக்கு எதிரான வார்னரின் பேட்டிங் ஆவரேஜ் 34.3 ஆக உள்ளது.

5. கிளென் மேக்ஸ்வெல் Vs குல்தீப் யாதவ்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் மீண்டும் ஒருமுறை அதுபோல தனது அதிரடி பேட்டிங்கை காட்டிட முயற்சி செய்வார். களத்தில் நிலைத்து நின்று விட்டால் பின்னர் அவரை அவுட் ஆக்குவது பெரும் சிரமமாக இருக்கும். அதனால் ரோஹித் அவருக்கு எதிராக குல்தீப் யாதவை தான் பந்து வீச சொல்வார்.

Kuldeep-768x466.jpg

இதுவரை ஒருநாள் போட்டிகளில் குல்தீப்பின் 69 பந்துகளை எதிர்கொண்டு அவருக்கு எதிராக 99 ரன்களை மேக்ஸ்வெல் அடித்துள்ளார். பேட்டிங் ஆவரேஜும் 33 ஆக உள்ளது. என்றாலும் குல்தீப்பின் சுழலில் சிக்கி இதுவரை 3 முறை தன்னுடைய விக்கெட்டை மேக்ஸ்வெல் பறிகொடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரை ரோஹித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல், ஷமி, குல்தீப் ஆகிய ஐவரும் எப்படி ஆடுகிறார்கள்? என்பதை பொறுத்தே நம்முடைய வெற்றி வாய்ப்பு அமையும். இறுதிப்போட்டியில் வென்று எந்த அணி கோப்பையை கையில் ஏந்த போகிறார்கள்? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

https://minnambalam.com/sports/indvsaus-these-5-player-battles-that-could-decide-winner-on-world-cup-final/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆடினால் அவுஸ் 250 ஓட்டங்களினுள் அமத்த வேண்டும். அவுஸ் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் முன்னூறுக்கு மேல் அடிக்க வேண்டும். இது நடந்தால் இறுதி ஆட்டம் சுவாரசியமாக போகும். 

இலங்கையை ஆசியா கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா துவம்சம் செய்தது போல் அவுஸை துவம்சம் செய்யாது என எதிர்பார்ப்போம். 

அண்ணா உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ம‌ன‌சு..........எப்ப‌டியாவ‌து அவுஸ்ரேலியா வென்றால் ச‌ரி உங்க‌ளுக்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2003 உலகக்கோப்பை: 90ஸ் கிட்ஸை கண்ணீர் விட்டு அழ வைத்த ரிக்கி பாண்டிங் - இறுதிப்போட்டி நினைவுகள்

காணொளிக் குறிப்பு,

IND vs AUS - 2003 உலகக்கோப்பை: ரிக்கி பாண்டிங்கின் வெறியாட்டம் நினைவிருக்கிறதா?

5 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2003 ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 90ஸ் கிட்ஸ் உள்பட பலரையும் அழ வைத்த போட்டி அது.

ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியது. ரிக்கி பாண்டிங்கின் பேட்டில் ஸ்பிரிங் இருக்கிறது என்பன போன்ற பல கதைகள் உலா வந்தன. அந்தளவுக்கு இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார் ரிக்கி பாண்டிங்.

அவர் சேர்த்த 140 ரன்கள் இந்திய ரசிகர்களுக்குத் தீராத வலியைத் தந்தது. கிரிக்கெட்டில் ஊறிப்போன இந்திய ரசிகர்கள் அன்று இரவு தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். காரணம், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றது இந்தியா.

ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா.

2003 இறுதிப்போட்டியில் அப்படி என்ன நடந்தது?

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்ச் 23, 2003 தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்தது ஒருநாள் உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தம். 1987, 1999 என இரு முறை தொடர்ச்சியாக உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் உச்சத்தில் இருந்தது ஆஸ்திரேலியா.

மறுபுறம், இந்திய அணி 1983இல் கோப்பையை வென்று, சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தது. வீரர்கள் யாருக்குமே அவ்வளவு பெரிய களத்தில் ஆடிய அனுபவம் இருக்கவில்லை.

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாஸில் வென்றது என்னவோ இந்தியாதான். கேப்டனாக இருந்த செளரவ் கங்குலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இந்த முடிவு அப்போது பரவலாக விமர்சனத்திற்குள்ளானது.

கங்குலியின் முடிவை சாதகமாக்கிக்கொண்டது ஆஸ்திரேலியா. ஆடன் கில்கிறிஸ்டும் மேத்யூ ஹேய்டனும் ஓபனிங்காக களம் இறங்கினர். தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு துளியும் எடுபடவில்லை.

சதம் விளாசிய பாண்டிங்

சஹீர் கான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா. 40 பந்துகளில் அரைசதம் விளாசினார் கில்கிறிஸ்ட். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கில்கிறிஸ்டை ஒரு வழியாக ஹர்பஜன் சிங்கின் சுழல் கட்டுப்படுத்தியது.

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கில்கிறிஸ்ட் 57 ரன்களிலும் ஹெய்டன் 37 ரன்களிலும் விடைபெற்றனர். அடுத்து வந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார். அவருக்குப் பக்கபலமாய் நின்றது டமின் மார்டின்.

இருவரும் சேர்ந்து மீதமிருந்த 30.1 ஓவர்களில் 234 ரன்கள் சேர்த்தனர். 121 பந்துகளில் 8 சிக்சர், 4 பவுண்டர் என இறுதி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன்களை சேர்த்திருந்தார் பாண்டிங்.

மார்டின் தன் பங்கிற்கு 84 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 359 ரன்களை குவித்திருந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருந்தது?

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவிடம் துளியும் எடுபடவில்லை. குறிப்பாக ஜவகல் ஸ்ரீநாத் 10 ஓவர்கள் வீசி 87 ரன்களை விட்டுக் கொடுத்தார். சேவாக், சச்சின், யுவராஜ் சிங்கை பந்துவீச வைத்தார், கங்குலி. ஆனால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

எக்ஸ்டிராஸ் மட்டுமே 37 ரன்களை இந்தியா வழங்கியிருந்தது. பாயிண்டிங்கின் ஆட்டம் ஆஸ்திரேலியாவை வலுவான நிலையில் வைத்திருந்தாலும் 40களில் அவர் இருந்தபோதே நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பித்திருந்தார்.

தினேஷ் மோங்கியா வீசிய பந்தில் பாண்டிங் எல்பிடபுள்யூ ஆகிவிட்டதாகவும் கள நடுவர் அவுட் தராததால்தான் ஆஸ்திரேலியாவால் ரன்களை குவிக்க முடிந்ததாகவும் அப்போது சர்ச்சைகள் எழுந்தன.

கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா உலகக்கோப்பையை வெல்ல 360 ரன்கள் எடுத்தாக வேண்டும். கடினமான இலக்குடன் களமிறங்கியது இந்தியா. முழு கவனமும் சச்சின் பக்கமே இருந்தது. காரணம், 2003 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சச்சின் பிரமாதமாக ஆடினார்.

அந்த தொடரிலேயே அதிக ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருந்தார். தொடர் நாயகன் விருதும் சச்சினுக்கே கிடைத்தது.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சச்சின், சேவாகுடன் இணைந்து ஓபனிங் ஆடினார். மெக் கிராத் வீசிய முதல் 3 பந்துகள் டாட் பால். 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சச்சின். ஆரங்கம் ஆர்ப்பரித்தது. ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை.

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த பந்தே சச்சின் ஆட்டமிழந்தார். இந்தியாவின் சரிவு ஆரம்பமானது. ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து வந்த கங்குலியாலும் பெரிதாக மாயம் செய்ய முடியவில்லை. அந்த தொடரில் கங்குலியும் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் கங்குலி. 3 சதங்களையும் அவர் பதிவு செய்திருந்தார்.

கங்குலியைத் தொடர்ந்து வந்த கைஃபும் டக் அவுட்டாக ஆட்டம் முற்றிலுமாக ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இந்தியா 59 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. தனி ஆளாக போராடிக்கொண்டிருந்த சேவாக், முடிந்தளவு ரன்களை சேர்க்கத் தொடக்கினார். மோசமான தவறால் சேவாக்கின் ஆட்டமும் ஒரு ரன் அவுட்டால் முடிவுக்கு வந்தது.

அது ஒரு தற்கொலைக்கு நிகரான ரன் அவுட் என அப்போது வர்ணிகப்பட்டது. சேவாக் 81 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார். இதுதான் அந்தப்போட்டியில் இந்திய அணியில் தனிநபர் விளாசிய அதிகபட்ச ஸ்கோர்.

டிராவிட்டை தவிர்த்து அடுத்து வந்த வீரர்கள் யாராலும் களத்தில் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2003க்கும் 2023க்கும் உள்ள ஒற்றுமை என்ன?

2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரசிகர்கள் பலர் அழுகையில் மூழ்கினர். ஆஸ்திரேலியாவின் மாபெரும் வெற்றியால் 3வது முறையாக உலகக்கோப்பை அவர்கள் வசமானது.

தற்போது அதே பாணியில் நவம்பர் 19ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றன. இந்திய ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில், இந்தியா 2003 தோல்விக்காக ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.

2003-ல் ஒரு போட்டியில் கூட தோற்காமல் உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா அந்த சமயம் 2 ஆட்டங்களில் தோற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 2003 தொடரில் சச்சின் டெண்டுல்கர் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்தார். நடப்புத் தொடரில் விராட் கோலி டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார்.

இப்படியாக 2003 தொடருக்கும் நடப்புத் தொடருக்கும் இடையே சில ஒற்றுமைகளும் இருக்கத் தான் செய்கின்றன. 2003-க்குப் பிறகும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடவில்லை.

2007,2015 என இரு முறை ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நவம்பர் 19ம் தேதி எதிர்கொள்கிறது இந்தியா. அன்று கங்குலியால் முடியாததை இன்று ரோஹித் முடித்துக் காட்டுவாரா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/c2v2njy46d0o

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா வெல்லவேண்டும்.எனக்குப் பொதுலாக அவுஸ் வெல்வது பிடிக்காது. ஆனால் இந்திய அணியோடு யார் விளையாடினாலும் அவர்கள்பக்கம்தான் நிற்பேன். i சப்போட் அவுஸ்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

அவுஸ்திரேலியா வெல்லவேண்டும்.எனக்குப் பொதுலாக அவுஸ் வெல்வது பிடிக்காது. ஆனால் இந்திய அணியோடு யார் விளையாடினாலும் அவர்கள்பக்கம்தான் நிற்பேன். i சப்போட் அவுஸ்

வெல்லாத‌ அணிக‌ளில் ஒன்று வென்று இருந்தால் ம‌கிழ்ச்சி

இர‌ண்டு அணிக‌ளும் ஏற்க‌ன‌வே கோப்பை தூக்கிட்டின‌ம்

அவுஸ்ரேலியா 5 முறை

இந்தியா 2 முறை

கோப்பை இந்தியாவுக்கு தான் புல‌வ‌ர் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

பெய‌ர் சொல்ல‌ விரும்ப‌ வில்லை
13வ‌ருட‌த்துக்கு முத‌ல் நானும் யாழ்க‌ள‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சும்மா ப‌ண்ணுக்கு ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கி நாங்க‌ள்...........இங்லாந் நாட்டில் இய‌ங்கும் www.bet365.com  Unibet.com இப்ப‌டியான‌ சூதாட்ட‌  இணைய‌த்தில் . cricket . rugby. Basketball. Handball . Australia AFL . NBA Basketball . United State of America NHL . American NFL . Baseball .சுறுக்க‌மாய் சொல்ல‌ப் போனால் உல‌கில் உள்ள‌ புக‌ழ் பெற்ற‌ அத்த‌னை விளையாட்டுக்கும் க‌ட்டி வெல்லுற‌து தோக்கிறது

உப்ப‌டி விளையாடி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 5ல‌ச்ச‌ம் குரோன் காசு தோத்த‌ நான்.........இல‌ங்கை காசுக்கு பார்த்தால் 2கோடிக்கு மேல் வ‌ருது🙈.............என‌து ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் 3மில்லிய‌ன் குரோன் காசு தோத்த‌வ‌ன்😯.............ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர் தோத்த‌வ‌ர்🙈.............நான் க‌ற்றுக் கொண்ட‌ அனுப‌வ‌த்தில் தான் சொன்னேன்............அண்ணா உந்த‌ சூதாட்ட‌ இணைய‌ த‌ள‌ங்க‌ளை எட்டியும் பார்க்க‌ வேண்டாம் என்று................உங்க‌ட‌ ந‌ண்ப‌ன் ஆசைய‌ காட்டி அதுக்கை உங்க‌ளை மூழ்க‌டித்தால் அதில் இருந்து மீண்டு வ‌ர‌ ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ஆன‌ ப‌டியால் சூதாட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை எட்டியும் பாராம‌ இருங்கோ உழைக்கும் காசே போதும் வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்த‌ அண்ணா 🙏

தம்பியவை உங்களுக்கு அதிஸ்டத்தில் நம்பிக்கை இருந்தால் லொட்டோ ஒரு வரிசை வெட்டுங்கோ. ஆனால் தொடர்ந்து உழைப்பை மட்டும் செய்து கொண்டே இருக்க வேணும். உழைப்பு ஏமாற்றாது.நான் கிழமைக்கு 2 ஈயூரோ மில்லியனும் 2 லொட்டோவும் வெட்டுவென்.9 பவுண்களோட அலுவல் முடியும் அதிஸ்டம் இருந்தால் விழும். மயிரில கட்டி மலையை இழுக்க வேணும் வந்தால் மலை போனா மயிர். அதை விட்டுட்டு இந்த சூதாட்டக் கிளப்புகளில் விளையாடினால் ஒண்ணும் மிஞ்சாது. ஆசை காட்டி மோசம் செய்வார்கள். கண்ணுக்குத் தெரியாத நிபந்தனைகள் எல்லாம் இருக்கு. 

9 minutes ago, பையன்26 said:

வெல்லாத‌ அணிக‌ளில் ஒன்று வென்று இருந்தால் ம‌கிழ்ச்சி

இர‌ண்டு அணிக‌ளும் ஏற்க‌ன‌வே கோப்பை தூக்கிட்டின‌ம்

அவுஸ்ரேலியா 5 முறை

இந்தியா 2 முறை

கோப்பை இந்தியாவுக்கு தான் புல‌வ‌ர் அண்ணா 

இந்தியா வென்றால் அவங்கட அலப்பறை தாங்க முடியாதே

11 minutes ago, பையன்26 said:

வெல்லாத‌ அணிக‌ளில் ஒன்று வென்று இருந்தால் ம‌கிழ்ச்சி

உண்மை தென் ஆபிரிக்காவுக்காவுக்கு எப்போதுமே கடைசி நேரங்களில் சொதப்பி விடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

தம்பியவை உங்களுக்கு அதிஸ்டத்தில் நம்பிக்கை இருந்தால் லொட்டோ ஒரு வரிசை வெட்டுங்கோ. ஆனால் தொடர்ந்து உழைப்பை மட்டும் செய்து கொண்டே இருக்க வேணும். உழைப்பு ஏமாற்றாது.நான் கிழமைக்கு 2 ஈயூரோ மில்லியனும் 2 லொட்டோவும் வெட்டுவென்.9 பவுண்களோட அலுவல் முடியும் அதிஸ்டம் இருந்தால் விழும். மயிரில கட்டி மலையை இழுக்க வேணும் வந்தால் மலை போனா மயிர். அதை விட்டுட்டு இந்த சூதாட்டக் கிளப்புகளில் விளையாடினால் ஒண்ணும் மிஞ்சாது. ஆசை காட்டி மோசம் செய்வார்கள். கண்ணுக்குத் தெரியாத நிபந்தனைகள் எல்லாம் இருக்கு. 

நூற்றுக்கு நூறு உண்மை புல‌வ‌ர் அண்ணா..........இது க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில்

மூன்று மில்லிய‌ன் குரோன் காசு தோத்த‌வ‌ர் உதுக‌ளை நிப்பாட்டி போட்டு இப்ப‌ வீடுக‌ள் எல்லாம் வேண்டி ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம்.............ம‌ற்ற‌ ந‌ண்ப‌னும் நிப்பாட்டிட்டான்..........நான் இப்ப‌ கூட‌ ச‌ம்முக‌ சேவ்வை செய்ய‌ தொட‌ங்கிட்டேன் புல‌வ‌ர் அண்ணா............மாத‌க் க‌ட‌சியில் ஊரில் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளுக்கு உத‌வுவ‌து...............

நான் உந்த‌ லொத்த‌ர் வேண்டுவ‌து கிடையாது.........உங்க‌ளுக்கு அதிஷ்ட‌ம் இருந்தால் அடிக்கும் பெரிய‌ ஜ‌க்போட் 

அப்ப‌டி அடிச்சா போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளுக்கு முன்னாள் போராளிக‌ளுக்கு வீடுக‌ள் க‌ட்டி கொடுங்கோ புன்னிய‌மாய் போகும்🥰🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் டிராவிட்: ஷமி, லோகேஷ் ராகுலை ஆதரித்து சிறந்த இந்திய அணியை கட்டமைத்தது எப்படி?

ராகுல் டிராவிட்டின் ‘மேஜிக் டச்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் ராகுல் டிராவிட் பெரும் பங்கை எடுத்துக்கொண்டுள்ளார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விகாஸ் பாண்டே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

2003 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும், அவரது அணியினரும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதுவரையிலும் தோற்கடிக்கப்படாத ஆஸ்திரேலியாவுடன் விளையாடினர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு அப்போது சென்றதால் மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

ஆனால் இந்த ஆட்டம் இந்தியர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது என்பதுடன், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணிக்கு மோசமான தோல்வியை அளித்தனர்.

2007 ஆம் ஆண்டில், மீண்டும் ஒரு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அவர் தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்கள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறத் தவறினர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திறமையான பேட்ஸ்மேன் தற்போது மீண்டும் களத்தில் உள்ளார். இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

இப்போது அவர் இந்த மதிப்புமிக்க உலகக் கோப்பையைப் பெற முடியுமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் சிறந்த பயிற்சியாளர்கள் பட்டியலில் டிராவிட்டின் பெயர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் ராகுல் டிராவிட்டின் 'மேஜிக் டச்' இருக்கிறது.

ஆனால் அவர் எப்படி ஒரு பழம்பெரும் பேட்ஸ்மேன் என்ற நிலையிலிருந்து தன்னை ஒரு பயிற்சியாளராக மாற்றிக் கொண்டார். அவர் திரைக்குப் பின்னால் இருக்க விரும்புகிறாரா, அல்லது அவரது அணியின் வலுவான செயல்திறன் மூலம் தனது இருப்பை உணர்த்துகிறாரா?

பதில் அவரது புத்திசாலித்தனமான விளையாட்டு நிர்வாகத்தில் உள்ளது.

ராகுல் டிராவிட்டின் ‘மேஜிக் டச்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிராவிட் தனது வாழ்க்கையில் கடின உழைப்பாளி என்று அறியப்படுவதுடன் பெரும் புகழையும் பெற்றுள்ளார். மிக எளிதாக அவர் விக்கெட்டுகளை இழந்த அரிதான சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால்தான் அவர் 'தி வால்' அல்லது 'மிஸ்டர் டிபெண்டபிள்' என்றும் அழைக்கப்பட்டார்.

2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியாத நிலை ஏறக்குறைய உறுதியாகிவிட்ட போது, டிராவிட், வி.வி.எஸ்.லக்ஷ்மண் உடன் இணைந்து 376 ரன்கள் எடுத்த மறக்க முடியாத இன்னிங்ஸுடன் ஆட்டத்தை மாற்றியபோது அவரது மிக முக்கியமான பேட்டிங் திறன் வெளிப்பட்டது.

2004-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 12 மணி நேர இன்னிங்ஸ் இன்றும் சிறந்த விளையாட்டுத் திறன்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது.

2011 இல் இந்தியாவின் மோசமான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டிராவிட் தனது சக வீரர்கள் மத்தியில் உறுதியாக இருந்தார். இந்தப் போட்டியில் இந்தியா 4-0 என்ற அவமானகரமான தோல்வியை சந்தித்தாலும், டிராவிட் அப்போதும் 602 ரன்கள் எடுத்தார்.

கடைசி வரை களத்தில் இருக்கும் அவரது ஸ்டைல் அவரது பயிற்சி பாணியிலும் தெரிகிறது.

ஆனால் நீங்கள் இன்னும் நெருக்கமாகப் பார்க்கும் போது, இந்த பதவிக்காலமும் அவருக்கு மிகவும் எளிதானது அல்ல என்பதை நீங்கள் காணலாம். விளையாடிய நாட்களைப் போலவே, டிராவிட் ஒரு பயிற்சியாளராக கடினமாக உழைத்தார், விமர்சனங்களை எப்போதும் புறக்கணித்தார் என்பதுடன் அவரது தனி அடையாள பாணியை கைவிடவில்லை.

ராகுல் டிராவிட்டின் ‘மேஜிக் டச்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழப்பத்தில் இருந்து மீட்டு உச்சத்திற்கு...

அவரது வெற்றி வெற்றிடத்திலிருந்து வந்தது அல்ல. சர்வதேச அளவில் செயல்படத் தயாராக இருக்கும் இந்தியாவின் மூத்த அணியின் திறமை எங்கிருந்து வருகிறதோ அந்த அடித்தளத்திலிருந்தே அவர் தொடங்கினார்.

அவர் 2016 இல் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட மற்றும் A (ஜூனியர் நேஷனல் சைட்) அணிகளின் தலைமை பயிற்சியாளராக ஆனார். இது தேசிய அளவிலான கவர்ச்சியைப் பெற்றிராத பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் இதில் அவர் சிறப்பாக செயல்பட்டு தனது அணியை 2018-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை எடுத்துச் சென்றார். மூன்று ஆண்டுகள் ஜூனியர் நிலை வரை திறமைகளை வளர்த்த பிறகு, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

நேஷனல் கிரிக்கெட் அகாடமி ஒரு பிரீமியம் மையமாகும். அங்கு வீரர்கள் தங்களுடைய உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்கின்றனர். அல்லது காயங்களில் இருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையைப் பெறுகிறார்கள்.

அவர் என்சிஏவில் இருந்த போது, இந்திய கிரிக்கெட் பெரும் கொந்தளிப்பான கால கட்டத்தை கடந்து கொண்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோப்பைக்காக நாடு காத்திருக்கும் நிலை நீண்டு கொண்டே இருந்தது. இந்தியா கடைசியாக 2013ல் ஐசிசி போட்டியில் வென்றது.

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்த பின்னணியில், 2021ல் டிராவிட்டிடம் அணியின் பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போதைய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே ஜூனியர் மட்டத்தில் டிராவிட்டிடம் இருந்து பயிற்சி அல்லது வழிகாட்டுதலை பெற்றுள்ளனர் என்பதே உண்மை.

எனவே, அது அப்படி இல்லாவிட்டாலும், டிராவிட்டிற்கு மிகவும் எளிதாகத் தோன்றியது. அதன் பின் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டன, 2022 இல் விராட் கோலி கேப்டன் பதவியை விட்டு வெளியேறியபோது, பிரச்னைகள் மேல் மட்டத்திற்கு வந்தன.

ராகுல் டிராவிட்டின் ‘மேஜிக் டச்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷமி, லோகேஷ் ராகுலுக்கு ஆதரவு

டிராவிட் தனது வழக்கமான பாணிக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சலசலப்பை விட்டு, தோல்வியால் வருத்தப்படாமல், செயல்முறையை நம்பும்படி தனது அணிக்குக் கூறினார்.

2023ல் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் அவரது கவனம் நிலைத்திருந்தது. இப்போட்டிக்காக அவர்கள் பலவிதமான வீரர் தேர்வுகளை முயற்சிக்க வேண்டியிருந்தது - அணி இழப்புகளைச் சந்தித்தாலும் கூட.

அவர் தனது வீரர்களை பெரிதும் ஆதரித்தார். கே.எல்.ராகுலை அணியில் சேர்ப்பது குறித்து விமர்சகர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் இந்த பேட்ஸ்மேனுக்கு ஆதரவாகவே நின்றார்.

இன்றைக்கு ராகுல் அவரது பேட்டிங்கால் மட்டுமல்ல, விக்கெட் கீப்பிங் திறமையாலும் இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்.

2003 போட்டியில் ராகுல் டிராவிட் தன்னலமின்றி விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதனால் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் அணியில் விளையாட முடியும்.

லோகேஷ் ராகுல் ஒரு விக்கெட் கீப்பர் இல்லை. ஆனால் அவர் மற்ற விக்கெட் கீப்பரைப் போல் சிறந்த வேலையைச் செய்து வருகிறார்.

பலர் ஷ்ரேயாஸ் ஐயரின் இடம் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் இந்தியாவுக்காக விளையாடும் முதல் நான்காவது பேட்ஸ்மேன் ஆவார்.

டிராவிட் தனது பந்துவீச்சாளர்களில், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் நிறைய கவனம எடுத்துக் கொண்டார். இதில் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடங்குவர்.

ராகுல் டிராவிட்டின் ‘மேஜிக் டச்’

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிகச் சிறந்த இந்திய அணியை கட்டமைத்தது எப்படி?

உண்மையில், ராகுல் டிராவிட்டின் செயல்பாட்டில் இந்திய அணி சரியான வீரர் தேர்வைக் கொண்டிருப்பதையும், ஒரு பெரிய போட்டிக்குச் செல்வதற்கு முன்பு சரியான நேரத்தில் ஃபார்மில் இருப்பதையும் உறுதி செய்வதை உள்ளடக்கியது.

அவர் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் நம்பகமான உறவை உருவாக்கினார். அவர் இந்த போட்டியில் தனது வியூக ரீதியான முடிவுகள் மற்றும் தைரியமான பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்துவருகிறார்.

அணியை மேம்படுத்துவதில் டிராவிட் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவுகள் இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்தியா, பாகிஸ்தானையும், இலங்கையையும் மோசமாக தோற்கடித்து, ஆசிய கோப்பையை வென்றது.

மேலும் இந்த போட்டியில் இதுவரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார். இந்த லெஜண்ட் தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான கடைசி தடை மட்டுமே உள்ளது. அது இதுவரை ஒரு வீரராக அவரது எல்லைக்கு அப்பாற்பட்டது.

அவர் நிச்சயமாக கோப்பையைப் பெற ஆர்வமாக இருப்பார். ஆனால் போட்டி தொடங்கிய பிறகும், பெரும்பாலும் போட்டி முடிந்த பிறகும் அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார் என்பதை உறுதியாகக் கூறலாம்.

விண்டேஜ் ராகுல் டிராவிட் அப்படிப்பட்டவர் தான். அவர் எப்போதும் தனது வேலையை அமைதியாக செய்ய விரும்புகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cd1pglz6353o

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2023 at 08:23, பையன்26 said:

பெய‌ர் சொல்ல‌ விரும்ப‌ வில்லை
13வ‌ருட‌த்துக்கு முத‌ல் நானும் யாழ்க‌ள‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சும்மா ப‌ண்ணுக்கு ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கி நாங்க‌ள்...........இங்லாந் நாட்டில் இய‌ங்கும் www.bet365.com  Unibet.com இப்ப‌டியான‌ சூதாட்ட‌  இணைய‌த்தில் . cricket . rugby. Basketball. Handball . Australia AFL . NBA Basketball . United State of America NHL . American NFL . Baseball .சுறுக்க‌மாய் சொல்ல‌ப் போனால் உல‌கில் உள்ள‌ புக‌ழ் பெற்ற‌ அத்த‌னை விளையாட்டுக்கும் க‌ட்டி வெல்லுற‌து தோக்கிறது

உப்ப‌டி விளையாடி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 5ல‌ச்ச‌ம் குரோன் காசு தோத்த‌ நான்.........இல‌ங்கை காசுக்கு பார்த்தால் 2கோடிக்கு மேல் வ‌ருது🙈.............என‌து ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் 3மில்லிய‌ன் குரோன் காசு தோத்த‌வ‌ன்😯.............ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர் தோத்த‌வ‌ர்🙈.............நான் க‌ற்றுக் கொண்ட‌ அனுப‌வ‌த்தில் தான் சொன்னேன்............அண்ணா உந்த‌ சூதாட்ட‌ இணைய‌ த‌ள‌ங்க‌ளை எட்டியும் பார்க்க‌ வேண்டாம் என்று................உங்க‌ட‌ ந‌ண்ப‌ன் ஆசைய‌ காட்டி அதுக்கை உங்க‌ளை மூழ்க‌டித்தால் அதில் இருந்து மீண்டு வ‌ர‌ ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ஆன‌ ப‌டியால் சூதாட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை எட்டியும் பாராம‌ இருங்கோ உழைக்கும் காசே போதும் வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்த‌ அண்ணா 🙏

உங்கள் கரிசனைக்கு நன்றி, இந்த வகை சூதாட்டங்களில் house always win என்பார்கள், இதில் வீடு என்பது சூதாட்ட நிறுவனம் இதனை மறுவளமாக பார்த்தால் சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எபோதும் தோற்பார்கள்.

உதாரணமக இந்திய அவுஸ்ரேலிய ஆட்டத்திற்கான வெற்றி இலாபம்

அவுஸ் 2.75
இந்தியா 1.50

3 டொலரில் 2 டொலரை இந்தியாவில் பந்தயம் வைத்தால் இலாபம் 3 டொலர் மறுவளமாக இந்தியா தோற்பதால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய (Hedge) அவுஸில் மிகுதி 1 டொலரினை இட்டால் வரும் பெறுமதி 2.75.

இந்த 3 டொலருக்கும் 2.75 இடையே உள்ள இடைவெளி 0.25 (இழப்பு), இது House edge இந்த ஆட்டங்களில் அவர்கள் எப்போதும் வெல்வதற்கான காரணம் இந்த சாதக நிலைதான்(Edge).

இந்த நிலைஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்பவர்களுக்கு சாதகமாக வரப்போவதில்லை, ஆனால் இதனை புரிந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இழப்பு என தெரிந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு உளவியல் ரீதியான வேறு காரணங்கள் (trigger) இருக்கலாம்(Self destruction).

நீங்கள் கூறிய காலப்பகுதி 2010, உங்கள் விடயத்தில் 2009 தாக்கம் இருக்கலாமோ என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்).

அல்லது இதனை வெளியில் இருந்து பார்க்கும் என்னால் புரிந்து கொள்ளமுடியாமலும் இருக்கலாம்.

மற்றது நான் இந்த சூதாட்டத்தில் ஈடுபடமாட்டேன் எனவே கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

கோப்பை இந்தியாவுக்கு தான் புல‌வ‌ர் அண்ணா 

நீங்கள் அவுஸினை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் எப்போதும் இந்த வகை முக்கிய ஆட்டங்களுக்கு ஒரு திட்டத்துடன் வருவார்கள்.

உதாரணமாக ஒரு உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதுவரை இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளரான வாஸ் அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்த வீரராக இறுதிப்போட்டியில் அவுஸினை எதிர்கொண்டார் அவரது பந்தினை ஆரம்ப ஓவர்களில் ஏற்படுதும் (பந்து உறுதியாக இருக்கும் போது) சாதகங்கலை இல்லாமல் செய்வதற்காக ஆரம்ப ஓவர்களில் கில் கிறிஸ்ட் பந்தினை அடித்தாடினார், அதற்காக தனது கீழ் கையில் (மட்டையின் மெதுவான கையில்) உறையினுள்ளே கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறப்படுகிறது (அது ஒன்றும் விதிமுறையற்ற செயல் அல்ல கீழ் கை ஆதிக்கம் செலுத்தும் போது மட்டை கட்டுப்பாட்டினை இழந்து உயர்த்தி அடித்து ஆட்டமிழக்கலாம்).

இந்த ஆடுகளத்தில் (வழமையான) சடுதியான மாற்றம் ஏதாவதினை இந்திய நிர்வாகம் செய்யாவிட்டால், பொதுவாக இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாகும்.

குறிப்பாக இந்தியணியில் இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர் அது அவுஸிற்கு பெரும் தலையிடியாக இருக்கும் அவர்களை இந்த போட்டியில் துவம்சம் செய்வதற்கான திட்டத்துடனே அவுஸ் களத்தில் இறங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

வேகப்பந்து வீச்சாளர்களில் அளவுகளையும் திசைகளையும் குழப்புவதுதான் அவுஸ் ஆரம்ப ஆட்டக்காரர்களின் திட்டமாக இருக்கும் அத்துடன் முதல் 10 ஓவருக்குள் விரைவாக ஓட்டத்தினை குவிக்க முற்படுவர் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

2010க்கு முத‌லும் தெரியும் ஆனால் பெரிய‌ ஆர்வ‌ம் இல்லை அத‌ற்கு முத‌ல்  ஒரு போதும் விளையாடின‌து கிடையாது

தென் ஆபிரிக்காவில் ந‌ட‌ந்த‌ கால்ப‌ந்து உல‌க‌ கோப்பையில் தான் ஆர‌ம்பிச்ச‌து.............அதுக்கு பிற‌க்கு மெது மெதுவாய் விளையாட‌ தொட‌ங்கி ஒரு க‌ட்ட‌த்தில் ஏன் கோதாரிய‌ விளையாட‌ தொட‌ங்கினேன் என்று யோசிச்ச‌தும் உண்டு............bet365 சூதாட்ட‌ இணைத்தை ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளுக்கு ஒரு வ‌ருட‌த்துக்கு எத்த‌னையோ மில்லிய‌ல் டொல‌ர் அவ‌ங்க‌ளுக்கு லாப‌மாம்

ஆனால் என‌து ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் இலங்கை காசுக்கு 12கோடிக்கு மேல் தோத்த‌வ‌ன்...............30குரோன் காசு போட்டு 30000ஆயிர‌ம் குரோன் ஆர‌ம்ப‌த்தில் அடிச்சார் அந்த‌ ருசியால் அவ‌ன் சூதாட்ட‌த்துக்குள் மூழ்கி விட்டான்..........இப்போது எல்லாத்தையும் நிப்பாட்டி ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் வீடு எல்லாம் வேண்டி............

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் டென்மார்க்கில் சின்ன‌ பிள்ளைக‌ளும் சூதாட்ட‌ம் விளையாட‌லாம் த‌டை இல்லை..........முந்தி 8.10.12 வ‌ய‌து சிறுவ‌ர்க‌ளும் க‌டைக்கு போய் சின்ன‌ காசு குடுத்து வேண்டுவின‌ம்..........இப்ப‌ 18 வ‌ய‌துக்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் விளையாட‌ முடியும்.........இது புது ச‌ட்ட‌ம்..........

என்ற‌ அனுப‌வ‌த்தில் தான் சொன்னேன் இந்த‌ சூதாட்ட‌ இணைய‌த்தை விட்டு வில‌கி இருக்க‌ சொல்லி..........உங்க‌ட‌ நண்ப‌ன் ஆசைய‌ காட்டுவான் அதுக்கை போய் விழுந்து விட‌ வேண்டாம்🥰🙏....................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vasee said:

நீங்கள் அவுஸினை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் எப்போதும் இந்த வகை முக்கிய ஆட்டங்களுக்கு ஒரு திட்டத்துடன் வருவார்கள்.

உதாரணமாக ஒரு உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதுவரை இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளரான வாஸ் அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்த வீரராக இறுதிப்போட்டியில் அவுஸினை எதிர்கொண்டார் அவரது பந்தினை ஆரம்ப ஓவர்களில் ஏற்படுதும் (பந்து உறுதியாக இருக்கும் போது) சாதகங்கலை இல்லாமல் செய்வதற்காக ஆரம்ப ஓவர்களில் கில் கிறிஸ்ட் பந்தினை அடித்தாடினார், அதற்காக தனது கீழ் கையில் (மட்டையின் மெதுவான கையில்) உறையினுள்ளே கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறப்படுகிறது (அது ஒன்றும் விதிமுறையற்ற செயல் அல்ல கீழ் கை ஆதிக்கம் செலுத்தும் போது மட்டை கட்டுப்பாட்டினை இழந்து உயர்த்தி அடித்து ஆட்டமிழக்கலாம்).

இந்த ஆடுகளத்தில் (வழமையான) சடுதியான மாற்றம் ஏதாவதினை இந்திய நிர்வாகம் செய்யாவிட்டால், பொதுவாக இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாகும்.

குறிப்பாக இந்தியணியில் இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர் அது அவுஸிற்கு பெரும் தலையிடியாக இருக்கும் அவர்களை இந்த போட்டியில் துவம்சம் செய்வதற்கான திட்டத்துடனே அவுஸ் களத்தில் இறங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

வேகப்பந்து வீச்சாளர்களில் அளவுகளையும் திசைகளையும் குழப்புவதுதான் அவுஸ் ஆரம்ப ஆட்டக்காரர்களின் திட்டமாக இருக்கும் அத்துடன் முதல் 10 ஓவருக்குள் விரைவாக ஓட்டத்தினை குவிக்க முற்படுவர் என கருதுகிறேன்.

அவுஸ் வெல்ல‌னும் என்றால் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தால் தான் பெரிய‌ ஸ்கோர் அடிக்க‌லாம்

ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கிடைச்ச‌ ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌க் கூடும்

நாண‌ய‌த்தில் வெல்வ‌து முக்கிய‌ம் இரு  க‌ப்ட‌ன் மாருக்கும் பிச்சின் த‌ன்மை தெரியும் அவையே முடிவு ப‌ண்ணுவின‌ம் ப‌ந்து வீச்சை தெரிவு செய்வ‌தா அல்ல‌து ம‌ட்டைய‌ தெரிவு செய்வ‌தா என்று

ஆனால் இந்தியா வீர‌ர்க‌ளின் வேக‌ ப‌ந்து வீச்சு சூப்ப‌ர்............இண்டைக்கு ந‌ட‌க்கும் விளையாட்டு குஜ‌ராத்தில் ந‌ரேந்திர‌மோடி மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் உந்த‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து சிர‌ம‌ம்.........நாளை இந்திய‌ன் க‌ப்ட‌ன் ஒரு வீர‌ரை மாற்ற‌ம் செய்ய‌லாம்.........

இந்தியா அணி வீர‌ர் சூரிய‌ குமார் ஜ‌டாவ் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு

அதே போல் அவுஸ்ரேலியா தொட‌க்க‌ வீர‌ர் Travis Head இவ‌ரும் சீக்கிர‌ம் அவுட் ஆகிறார் 

இவ‌ர் தொட‌க்க‌ வீர‌ருக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்...........

கோலி ம‌லை போல் நின்று தொட‌ர்ந்து ர‌ன்ஸ்ச‌ குவிக்கிறார் அதே போல் Shreyas Iyer ரும் மைதான‌த்துக்கு வ‌ந்த‌தும் அதிர‌டியா ஆடி குறைந்த‌ ப‌ந்தில் கூடின‌ ர‌ன்ஸ் அடிக்கிறார்🙈

என‌து க‌ணிப்பு இந்தியா ச‌கோ

இண்டைக்கு தெரியும் தானே யார் கோப்பை தூக்குவின‌ம் என்று 

காலை பாப்போம் விளையாட்டை👍🙏...........

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உலகக்கோப்பை கனவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியாவின் உலகக்கோப்பை கனவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆமதாபாத்தில் இன்று (நவ. 19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது.

அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் காரணமாக, தங்களை யாராலும் வெற்றி பெற முடியாது என்கிற இந்திய அணியின் நம்பிக்கை உச்சத்தில் இருப்பது போல் தெரிகிறது.

அதேபோன்று எதிரணியான ஆஸ்திரேலிய அணியும் லீக் போட்டிகளிலும், அரையிறுதியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல ‘ஃபார்மில்’ இருக்கிறது.

இந்திய அணிதான் “நிச்சயமாக வெற்றி பெறும்” என கிரிக்கெட் ரசிகர்களும் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கடந்த சில போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் வெளிப்படுத்திய திறமையான ஆட்டத்தால், இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பைச் சிதைத்து, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் இருப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நான்காவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கூ இது எட்டாவது முறை.

இந்தியாவுக்கு சவாலான ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையே அவர்களின் திறமைக்குச் சான்றாக உள்ளதைக் காணலாம்.

கடும் அழுத்தத்திற்கு இடையிலும் முன்னெப்போதும் இல்லாத ஆக்ரோஷத்துடன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற கிளென் மேக்ஸ்வெல், ஆரம்பத்திலேயே தனது பேட்டிங்கால் எதிரணியின் மன உறுதியைக் குலைத்த டேவிட் வார்னர் என, ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்கோர்களை குவித்தது மட்டுமின்றி சேஸிங்கின் அழுத்தத்தைக் கையாளும் திறனையும் நிரூபித்துள்ளனர்.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முதல் 12 பேட்ஸ்மேன்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது அபாரமான பேட்டிங் காரணமாக இந்த உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட் வார்னர் தான் விளையாடிய பத்து போட்டிகளில் 52.80 என்ற சராசரியில் 528 ரன்கள் எடுத்துள்ளார்.

இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரைசதங்களும் அடங்கும். ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற வார்னர், உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.

போட்டியை புரட்டிப் போடும் திறமை

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மிச்செல் மார்ஷ் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் விளையாடிய 9 போட்டிகளில் 53.25 என்ற சராசரியில் 426 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

இது தவிர, கிளென் மேக்ஸ்வெல் இந்தப் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் இறுதி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, கடினமான சூழலிலும் அணிக்கு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

இந்த மறக்க முடியாத ஆட்டத்தைக் கொடுத்த மேக்ஸ்வெல், இந்தப் போட்டியில் இதுவரை 66 என்ற சராசரியுடன் 398 ரன்கள் எடுத்துள்ளார். தனது ஆக்ரோஷமான பேட்டிங்கின் மூலம் எந்த நேரத்திலும் போட்டியை புரட்டிப் போடும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் எந்த அணியும் மேக்ஸ்வெல்லுடன் வார்னர் மற்றும் மார்ஷ் ஆடுகளத்தில் அதிக நேரம் இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். இந்த அனைத்து வீரர்களும் எந்த எதிரணியின் பந்துவீச்சுத் தாக்குதலையும் அழிக்கும் திறன் உடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கிளென் மேக்ஸ்வெல்

மேலும், ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, இந்தத் தொடரில் வெல்ல முடியாத பேட்ஸ்மேன்களை தனது சுழல் வலையில் சிக்க வைத்து பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார்.

அவர் பத்து போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் உலகக்கோப்பைத் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இறுதிப்போட்டியில் ஜம்பாவின் மேஜிக் ஆட்டத்தால், இந்திய பேட்டிங் வரிசைக்கு சிக்கல் ஏற்படலாம்.

சளைக்காத இந்திய அணி

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆடம் ஜம்பா

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு பலத்த சவாலை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைப் பற்றிப் பேசும்போது, இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களின் சாதனைகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

மேலே குறிப்பிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரண்டிலும் முதலிடத்தில் உள்ளனர். இதுவே இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தை நிரூபிக்கிறது.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 50 சதங்கள் அடித்த விராட் கோலி முதல் கேப்டன் ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் வரை, ரன் சேஸாக இருக்கட்டும் அல்லது அதிக ஸ்கோர்களாக இருக்கட்டும் இரண்டிலும் எதிரணியின் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி எல்லா சூழ்நிலைகளிலும் ரன்களை குவித்துள்ளனர்.

உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 101.57 என்ற சராசரியுடன் 711 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி, இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும், அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் முறையே 550 மற்றும் 526 ரன்களுடன் ஐந்தாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளனர். இந்த சாதனை இந்திய பேட்டிங் வரிசையின் வலிமையை துல்லியமாகச் சித்தரிக்கிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உலகக்கோப்பைத் தொடரில் தனது மேஜிக் ஆட்டத்தின் மூலம் 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவரது பந்துவீச்சை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் மட்டுமல்லாமல், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பாராட்டியுள்ளனர். முகமது ஷமியின் பந்துவீச்சு 'மறக்க முடியாதது' என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.

அவரது சிறப்பான பந்துவீச்சுக்காக அவர் விளையாடிய 6 போட்டிகளில் மூன்றில் 'ஆட்ட நாயகனாகவும்' தேர்வு செய்யப்பட்டார். முகமது ஷமி தவிர, பும்ரா, சிராஜ், ஜடேஜா மற்றும் யாதவ் ஆகியோரும் உலகக்கோப்பை தொடரில் அவர்களின் அற்புதமான பந்துவீச்சுக்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c1v2nw4pg5lo

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணிப்பின்படி அவுசுக்கு சாதகமான சூழல் குறைவாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவுஸ் வெல்லும், வெல்லவேணும்.......!  🦘 👍

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று போயிட்டு.  விரைவில் கோழியும் ஆட்டம் இழந்தால் விறுவிறுப்பாக போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டத்துரைக்கு கட்டம் சரியிலலை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

நீங்கள் அவுஸினை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் எப்போதும் இந்த வகை முக்கிய ஆட்டங்களுக்கு ஒரு திட்டத்துடன் வருவார்கள்.

உதாரணமாக ஒரு உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதுவரை இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளரான வாஸ் அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்த வீரராக இறுதிப்போட்டியில் அவுஸினை எதிர்கொண்டார் அவரது பந்தினை ஆரம்ப ஓவர்களில் ஏற்படுதும் (பந்து உறுதியாக இருக்கும் போது) சாதகங்கலை இல்லாமல் செய்வதற்காக ஆரம்ப ஓவர்களில் கில் கிறிஸ்ட் பந்தினை அடித்தாடினார், அதற்காக தனது கீழ் கையில் (மட்டையின் மெதுவான கையில்) உறையினுள்ளே கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறப்படுகிறது (அது ஒன்றும் விதிமுறையற்ற செயல் அல்ல கீழ் கை ஆதிக்கம் செலுத்தும் போது மட்டை கட்டுப்பாட்டினை இழந்து உயர்த்தி அடித்து ஆட்டமிழக்கலாம்).

இந்த ஆடுகளத்தில் (வழமையான) சடுதியான மாற்றம் ஏதாவதினை இந்திய நிர்வாகம் செய்யாவிட்டால், பொதுவாக இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாகும்.

குறிப்பாக இந்தியணியில் இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர் அது அவுஸிற்கு பெரும் தலையிடியாக இருக்கும் அவர்களை இந்த போட்டியில் துவம்சம் செய்வதற்கான திட்டத்துடனே அவுஸ் களத்தில் இறங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

வேகப்பந்து வீச்சாளர்களில் அளவுகளையும் திசைகளையும் குழப்புவதுதான் அவுஸ் ஆரம்ப ஆட்டக்காரர்களின் திட்டமாக இருக்கும் அத்துடன் முதல் 10 ஓவருக்குள் விரைவாக ஓட்டத்தினை குவிக்க முற்படுவர் என கருதுகிறேன்.

ச‌கோ பார்த்திங்க‌ளா இந்தியா வீர‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிச்சு ஆட‌ முடியாம‌ திணறுகினம்
இந்தியா க‌ப்ட‌ன் பெரிய‌ த‌வ‌று செய்து விட்டார் இர‌ண்டு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுட‌ன் க‌ள‌ம் இற‌ங்கி இருக்கிறார்..........நேற்று சொன்னான் தானே இது சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்
ஆனால் இர‌வு ஆன‌தும் சுழ‌ல் ப‌ந்து பெரிசா எடுப‌டாது பாப்போம்.................

  • கருத்துக்கள உறவுகள்

கோழியையும் தூக்கி விட்டார்கள். 250 இனுள் இந்தியாவை அவுஸ் மடக்குமா பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

கபிலதேவ், மகேந்திரசிங் தோணி வரிசையில் இம்முறை ரோகித்சர்மாவுக்கு இராணுவ மரியாதை கிடைக்குமா .......பொறுத்திருந்து பார்க்கலாம்........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் களத் தடுப்பில் கலக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெற்றி சந்தேகமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.