Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நிழலி யாழில் இந் நூலினை அறிமுகம் செய்தார்......பாரிஸில் தேடினேன் கிடைக்கவில்லை......எஒருவேளை லண்டனில் கிடைக்கலாம்..... நானும் அதைத் தேடி எப்படியோ அது என்னிடம் வந்து சேர்ந்தது.....படிக்க படிக்க வைக்கவே மனம் வரவில்லை.  அவ்வளவு சிறப்பான எழுத்தின் வீச்சு......!

வன்னியில் ஒரு சிறுகிராமமும் அங்கு வாழும் மக்கள் அவர்கள் வழிபாடும் நகுலாத்தை என்னும் தெய்வம்......மற்றும் கடைசி வன்னிப்போரில் அந்த மக்கள் படும் அவலங்கள் எல்லாம் நல்ல முறையில் சொல்லப் பட்டிருக்கு.....விறுவிறுப்பான நிகழ்வுகள்.......!  👍 

  • 6 months later...

நகுலாத்தை 

ஒரு நாவலை வாசிக்க தொடங்கி, முதல் 200 பக்கங்கள் வாசிச்சு முடிச்ச பின், அது கொடுத்த லயிப்பிலும், அது உருவாக்கிய வாழ்வியலையும் மீண்டும் அனுபவிக்க, திருப்பி முதலாம் பக்கத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கி  300 பக்கங்களை கடந்து சென்று மீண்டும் 200 ஆவது பக்கத்திற்கு திரும்பி வந்து மீண்டும் வாசிச்சு.... இப்படியே திருப்பி திருப்பி வாசித்து முடித்த நாவல் இது.

வட இலங்கையில், நகுலாத்தை எனும் பெண் தெய்வத்தை ஒட்டிய தொன்மங்களின் நம்பிக்கைகளில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் கீரிப்பிள்ளை எனும் கிராமத்தில் வாழும் மனிதர்களின் (இறுதிப்) போருக்கு முந்திய வாழ்வையும், போர் தீவிரமாகும் போது அரசாலும் புலிகளாலும் கிழித்தெறியப்படும் வாழ்வையும், காடும், காடு சார்ந்து வாழ்க்கையை வாழும் மாந்தர்களின் உணர்வுகளினூடாக நகர்த்தி செல்கின்றது நாவல்.

கீரிக்கும் பாம்புக்கும் நடக்கும் சண்டை, நாட்டார் தெய்வங்களின் தொன்ம வழிபாடு, கலை வந்து ஆடும் பெண்கள், குழுமாடு பிடித்தல், கூளைக்கிடா வேட்டை, சன்னாசி வைரவர், கண்ணி வெடிகளால் முகம் சிதைந்த குரங்கின் அகங்காரம், இரு பெண் நண்பிகளுக்கிடையிலான காதலும் உடல் சார்ந்த தகிப்புகளும், அம்மான் கண், கீரிக்குளத்தின் வனப்பும், பின் உடைப்பும், புலிகளுக்கு தெரியாமல் கசிப்பு காச்சும் பெண், மாவீரர் நாளின் புனிதத் தன்மை என பக்கம் பக்கமாக நீளும் நாவலின் ஒவ்வொரு பக்கமும் அதி உச்ச வாசிப்புக்குரிய அனுபவங்களை தருவன.

புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான அன்பு நிறைந்த உறவு, அவர்களின் தியாகங்கள், பின் அதே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பால் நிகழும் துயரங்கள், அவ்வாறு சென்ற பின் அப் பிள்ளைகளின் பெற்றோர்கள் படும் பாடுகள்,  பாலியல் வல்லுறவு செய்த முக்கிய தளபதியை மன்னித்து வல்லுறவுக்குள்ளான பெண்ணை நோக்கி அவனையே திருமணம் செய்ய சொல்லும் புலிகளின் தலைமை, முன்னால் பகையை வைத்து பழிவாங்கும் புலிகளின் பொறுப்பாளர், இறுதி நாட்களில் கூட மண்டையில் போடுதலை கை விடாத போராளிகள் என்று அன்று நடந்த, நாம் கேட்க விரும்பாத விடயங்களையும் அந்த மண்ணில் வாழ்ந்த யதார்த்தன் எழுதிச் செல்கின்றார்.

இலங்கை அரசின் கொடூர வான் வெளித்தாக்குதல்கள், அரச படையினர் பெண் போராளிகளின் உடலை கைப்பற்றி செய்யும் மிலேச்சதனங்கள், இறந்த ஆண் போராளிகளின் உடலை சுட்டு விளையாடும் இராணுவத்தினர், மருத்துவமனைகள் மீதான குண்டு வீச்சுகள், பாதுகாப்பு வலயங்களின் தாக்குதல்கள் என்று நாம் கேட்ட இறுதி யுத்தத்தின் அகோரங்களை மீண்டும் கண்ணுக்கு முன் கொண்டு வந்து விடுகின்றார் யதார்த்தன்.

இந்த நாவலில் வந்த தாமைரையையும், வெரோனிக்காவையும், சின்ராசையும்,ஆத்தையையும் வாசிக்கின்ற எவராலும் எக்காலத்திலும் மறந்து போக முடியாது.

நான் இது வரை வாசித்த, ஈழ எழுத்தாளர்களின் எழுத்துகளில் மிகச் சிறந்த படைப்பாக நான் உண்ர்ந்த அற்புதமான நாவல்.

image.pngimage.png

  • கருத்துக்கள உறவுகள்+

எனக்கும் வாசிக்க வேணும் போலை கிடக்குது... விமர்சனங்கள் நல்லாத்தான் இருக்குது. 

வாங்கி உள்ளுக்கு என்ன கிடக்குது என்டு பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பாலியல் வல்லுறவு செய்த முக்கிய தளபதியை மன்னித்து வல்லுறவுக்குள்ளான பெண்ணை நோக்கி அவனையே திருமணம் செய்ய சொல்லும் புலிகளின் தலைமை,

இப்படி உண்மையில் நடந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, பிரபா said:

இப்படி உண்மையில் நடந்ததா?

எனக்கும் இந்த ஐயம் உண்டு.

கதை சுவாரஸ்யத்திற்காக இது போன்ற இழிவுகள் சேர்க்கப்பட்டிருக்கலாமோ என்னவோ! (உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்)

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிரபா said:
18 hours ago, நிழலி said:

பாலியல் வல்லுறவு செய்த முக்கிய தளபதியை மன்னித்து வல்லுறவுக்குள்ளான பெண்ணை நோக்கி அவனையே திருமணம் செய்ய சொல்லும் புலிகளின் தலைமை,

இப்படி உண்மையில் நடந்ததா

எமது ஊரில் இப்படி புலிகளால் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள்.

இப்போதும் பேரப்பிள்ளைகளுடன் வாழ்கிறார்கள்.

17 hours ago, பிரபா said:

இப்படி உண்மையில் நடந்ததா?

நீங்கள் இந்தக் நாவலை வாசிக்கும் போது, இவ் நிகழ்வு இடம்பெற்ற காலம், பிரதேசம், அதற்கு பொறுப்பாக இருந்தவர்(கள்) பற்றிய பிம்பங்கள் உங்களுக்குள் ஏற்படும். அவற்றினூடாக இந்த நிகழ்வு இடம்பெற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அங்கு இருந்திருக்கும் என நான் ஊகித்தது போன்று நீங்களும் ஊகிப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

எனக்கும் இந்த ஐயம் உண்டு.

கதை சுவாரஸ்யத்திற்காக இது போன்ற இழிவுகள் சேர்க்கப்பட்டிருக்கலாமோ என்னவோ! (உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்)

என்ன கேள்வி நன்னியர்?

புலிகள் குறித்து எழுதும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

கருணா அம்மான் கதை என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்+
13 minutes ago, Nathamuni said:

என்ன கேள்வி நன்னியர்?

புலிகள் குறித்து எழுதும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

கருணா அம்மான் கதை என்ன?

ஐயனே, நூல் வன்னி பற்றியது...

கும்மாளம் செய்தவை மட்டுவில்...

ஆகையால் இங்கு வன்னியில் நடந்த நிகழ்வுகளே விரிக்கப்பட்டிருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையிலேயே அதை எழுதியுள்ளேன்.

வன்னி பற்றிய நூலில் மட்டுவில் நடந்த நிகழ்வுகள் பற்றி விரிக்கப்பட்டிருக்குமா?

1 hour ago, ஈழப்பிரியன் said:

எமது ஊரில் இப்படி புலிகளால் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தார்கள்.

இப்போதும் பேரப்பிள்ளைகளுடன் வாழ்கிறார்கள்.

பொதுமகன் செய்தமைக்கா இல்லை, புலிவீரன் ஒருவன் செய்தமைக்கா?

1 hour ago, நிழலி said:

நீங்கள் இந்தக் நாவலை வாசிக்கும் போது, இவ் நிகழ்வு இடம்பெற்ற காலம், பிரதேசம், அதற்கு பொறுப்பாக இருந்தவர்(கள்) பற்றிய பிம்பங்கள் உங்களுக்குள் ஏற்படும். அவற்றினூடாக இந்த நிகழ்வு இடம்பெற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அங்கு இருந்திருக்கும் என நான் ஊகித்தது போன்று நீங்களும் ஊகிப்பீர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, நூல் வன்னி பற்றியது...

கும்மாளம் செய்தவை மட்டுவில்...

கலியாணம் நடந்த்து வன்னியில் 😎 

தலைவரும், தேத்தின் குரலும் சபையோர் சமூகத்தில் இருந்தார்கள் 🙄

வன்னி, மட்டு பிரிவினை தேவையில்லை என்பது தாழ்மையான கருத்து

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பிரபா said:

இப்படி உண்மையில் நடந்ததா?

எழுத்தாளர் இவ்வகை எழுத்தின் ஊடாக தன் அரிப்பையும் தீர்த்துக்கொண்டார் 

  • கருத்துக்கள உறவுகள்+
43 minutes ago, Nathamuni said:

கலியாணம் நடந்த்து வன்னியில் 😎 

தலைவரும், தேத்தின் குரலும் சபையோர் சமூகத்தில் இருந்தார்கள் 🙄

வன்னி, மட்டு பிரிவினை தேவையில்லை என்பது தாழ்மையான கருத்து

மன்னிக்கவும், இரண்டு விடையங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன் (நான் இன்னும் புத்தகத்தை வாங்கவில்லை).

1) நான் பிரிவினை எழுதவில்லை. நீங்கள் கும்மாளத்தை இழுத்தபடியால், கும்மாளம் நடைபெற்ற இடமான மட்டுவை உங்களுக்கு சுட்டிக் காட்டி, நூல் வன்னி தொடர்பிலானது என்று கூறியிருந்தேன். அவ்வளவே! 

2) நிழலி ஐயன் எந்தவொரு இடத்திலும் வன்னியில் தான் அவ்வாறு நடைபெற்றது என்று எழுதவில்லை. நிழலி அவர்கள் பிரபா அவர்களுக்கு வழங்கிய மறுமொழியிலிருந்து எழுத்தாளரும் இடத்தை குறிப்பிடவில்லை என்பது அறியக்கூடியதாக உள்ளது. 

மொத்தத்தில், இத்திரியில் தாங்கள் தான் வன்னியில் நடைபெற்றதாக கூறியுள்ளீர்கள், வேறு யாருமல்ல. மட்டுவை இழுத்ததும் நீங்கள் தான். 🥲 இப்ப என்ர தலையிலை கட்டி விடுறியள் பாருங்கோ. 🫣😒 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2023 at 04:30, suvy said:

சமீபத்தில் நிழலி யாழில் இந் நூலினை அறிமுகம் செய்தார்......பாரிஸில் தேடினேன் கிடைக்கவில்லை......எஒருவேளை லண்டனில் கிடைக்கலாம்..... நானும் அதைத் தேடி எப்படியோ அது என்னிடம் வந்து சேர்ந்தது.....படிக்க படிக்க வைக்கவே மனம் வரவில்லை.  அவ்வளவு சிறப்பான எழுத்தின் வீச்சு......!

வன்னியில் ஒரு சிறுகிராமமும் அங்கு வாழும் மக்கள் அவர்கள் வழிபாடும் நகுலாத்தை என்னும் தெய்வம்......மற்றும் கடைசி வன்னிப்போரில் அந்த மக்கள் படும் அவலங்கள் எல்லாம் நல்ல முறையில் சொல்லப் பட்டிருக்கு.....விறுவிறுப்பான நிகழ்வுகள்.......!  👍 

வாசிக்க வேண்டும்..எங்கு வாங்கினீர்கள் சுவியண்ண..✍️🖐️
கடந்த மே மாதம் பதிவிட்டு இருக்கிறீர்கள்..இப்போது தான் விவாதிக்கப்படுகிறது..எது எப்படி இருப்பினும்..கனடாவில் எங்கு வாங்கலாம் என்பதையும் யாராவது அறியத் தாருங்கள்....

17 minutes ago, யாயினி said:

வாசிக்க வேண்டும்..எங்கு வாங்கினீர்கள் சுவியண்ண..✍️🖐️
கடந்த மே மாதம் பதிவிட்டு இருக்கிறீர்கள்..இப்போது தான் விவாதிக்கப்படுகிறது..எது எப்படி இருப்பினும்..கனடாவில் எங்கு வாங்கலாம் என்பதையும் யாராவது அறியத் தாருங்கள்....

FB_IMG_1702667693093.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

FB_IMG_1702667693093.jpg

உடனயே அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, யாயினி said:

வாசிக்க வேண்டும்..எங்கு வாங்கினீர்கள் சுவியண்ண..✍️🖐️
கடந்த மே மாதம் பதிவிட்டு இருக்கிறீர்கள்..இப்போது தான் விவாதிக்கப்படுகிறது..எது எப்படி இருப்பினும்..கனடாவில் எங்கு வாங்கலாம் என்பதையும் யாராவது அறியத் தாருங்கள்....

மேலே நிழலி கூறியிருக்கிறார் சகோதரி......நான் ஊரில் இருந்து வந்த ஒருவர் தந்தவர்......!

1 hour ago, நந்தன் said:

எழுத்தாளர் இவ்வகை எழுத்தின் ஊடாக தன் அரிப்பையும் தீர்த்துக்கொண்டார் 

நந்தன் இது ஒரு சிறு சம்பவம் அதையும் கடந்து அந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள்....லண்டனில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.......அங்கு கற்பனைகள் இருக்கு ஆனால்  அதிகம் இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை.......அங்குள்ள ஒரு கிராமத்தில் நடந்த சம்பவங்கள் மட்டுமே......!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நீங்கள் இந்தக் நாவலை வாசிக்கும் போது, இவ் நிகழ்வு இடம்பெற்ற காலம், பிரதேசம், அதற்கு பொறுப்பாக இருந்தவர்(கள்) பற்றிய பிம்பங்கள் உங்களுக்குள் ஏற்படும். அவற்றினூடாக இந்த நிகழ்வு இடம்பெற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அங்கு இருந்திருக்கும் என நான் ஊகித்தது போன்று நீங்களும் ஊகிப்பீர்கள்.

உண்மை.
ஒருவர் சகல பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபட்டு நெடுங்கேனி காட்டில் கொடரியுடன் விடப்பட்டார். இச்சைக்குள்ளான பெண்கள் குடும்பத்தவர்களாகவும், தவறு தங்கள் மீதும் உள்ளதை புலப்படுத்தி இருந்தார்கள். இறுதியில், வேவுக்காக வந்த சிங்கள படையினா் கழுத்தை வெட்டி கொண்டுபோனார்கள்.  அவரது தண்டனை காலத்தில் தானாகவே அந்த சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தார். இதன் பின், அவரின் தம்பிகள் இருவர் புலிகள்  அமைப்பில் இருந்து விலகினார்கள்.

மற்றயவர், விசாரனைக்கு விசாரனை நடைபெற போவது தெரியாமல் முல்லைதீவில் இருந்து இருபாலைக்கு வந்து இருந்தார். கேள்விகள் தொடங்கிய சிறு வினாடிகளில், இன்னுமோர் அழைப்புக்காக திரும்பிய தறுவாயில் தனது நஞ்சை அருந்தி மாண்டார். ஒரு பாடம் கற்றுக் கொள்ளபட்டது. பின்னணி, சமூக ஏற்ற தாழ்வினால் உந்தபட்டு குடும்ப பெண்ணையும், போராளியாக இருந்தவரின் சகோதரியையும் படையல் போட்டு இருந்தார்.
சடலம் முல்லைதீவுக்கு கொண்டுவரபட்டு, அவரது தாயாருக்கும், சகோதரிக்கும்  குற்றம் பற்றி அறிவிக்கபட்டு, சடலத்துக்குரிய அடிபடை மரியாைதயுடன் கையளிக்கபட்டது. ஊரவர்கள் அற்ற, உறவுகளும்,புதினம் பார்க்க வந்தவர்களுடன் உறவுகளால் எரியூட்டபட்டார்.

சம்பவங்கள் நிறைய உள்ளது, தண்டணைகளும் பல நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே,

1. புலிகள் ஆண், பெண் உறுப்புக்களை பூட்டு போட்டு வைக்கும் பழக்கத்தை வைத்திருக்கவில்லை.

2. ஒவ்வொரு மனித மனத்தின் சிந்தனை போக்கையும் கட்டுப்படுத்தும் மனோதத்துவ ஆயுதமும் அவர்களிடம் இருக்கவில்லை.

3. எல்லா அழுக்கும் நிறைந்த இன்னொரு மனிதக்கூட்டத்தில் இருந்து, அந்த கூட்டத்தின் இன விடுதலைக்கு அவர்கள் போராடினார்கள்.

4. மிக கடுமையான, உலகில் வேறெந்த விடுதலை இயக்கம், இராணுவத்திலும் இல்லாத ஒழுக்கத்தை அவர்கள் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள்.

5. ஆனால் அவர்களிடம் கறுப்பாடுகளே இருக்கவில்லை என சொல்ல முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் நடைமுறைச்சாத்தியம் அற்றது.

6. ஆனால் பாலியல் வன் கொடுமைக்கு (rape) இற்கு தண்டனையாக அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் என்பதை நான் அறியவில்லை. ஆதாரத்தோடு கூறினால் அறிந்துகொள்கிறேன்.

7. ஒழுக்ககேட்டின் விளைவாக, ஏற்பட்ட திருமணத்துக்கு முந்திய உறவுகளை, திருமணத்தில் முடித்து வைத்தார்கள்.

ஆனால் இதுவும் ரேப்பிஸ்ட்டுக்கே, விக்டிமை கட்டிவைப்பதும் ஒன்றல்ல.

* மேலே 7இல் சொன்னதை ஒரே ஒரு சந்தர்பத்தில் செய்திருக்கலாம். பாலியல் வன்கொடுமையின் பின், பாதிக்கப்பட்ட பெண்ணோ, குடும்பமோ, சமூக ஒப்பனைக்கு பயந்து, குற்றவாளியையே கட்டித்தருமாறு இயக்கத்தை கோரும் சந்தர்பங்களில் இதை செய்திருக்கலாம்.

இப்படி இந்தியன் ஆமிகாரனை கட்டிய ஒரு பெண் எங்கள் ஊரில் இருக்கிறா.

இவ்வாறு செய்வது தனிப்பட்டு எனக்கு ஏற்புடையதல்ல - ஆனால் எதைவிடவும் ஒரு குமரின் வாழ்க்கை முக்கியம் என கருதும், எமது சமூகத்தில், பாதிக்கப்பட்ட தரப்பே கோரும் போது, புலிகள் அதை செய்திருப்பின் - அதை ஏற்க முடியாவிட்டாலும், நான் புரிந்துகொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 பாலியல் வல்லுறவு செய்த முக்கிய தளபதியை மன்னித்து வல்லுறவுக்குள்ளான பெண்ணை நோக்கி அவனையே திருமணம் செய்ய சொல்லும் புலிகளின் தலைமை,]

பாலியல் வன்கொடுமை செய்தவனையே திருமணம் செய்யும்படி பாதிக்கபட்ட பெண்ணிடம் சொல்லும் கொடுமை இந்தியாவில் நடைபெறுகின்ற கொடூரம் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

மன்னிக்கவும், இரண்டு விடையங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன் (நான் இன்னும் புத்தகத்தை வாங்கவில்லை).

1) நான் பிரிவினை எழுதவில்லை. நீங்கள் கும்மாளத்தை இழுத்தபடியால், கும்மாளம் நடைபெற்ற இடமான மட்டுவை உங்களுக்கு சுட்டிக் காட்டி, நூல் வன்னி தொடர்பிலானது என்று கூறியிருந்தேன். அவ்வளவே! 

2) நிழலி ஐயன் எந்தவொரு இடத்திலும் வன்னியில் தான் அவ்வாறு நடைபெற்றது என்று எழுதவில்லை. நிழலி அவர்கள் பிரபா அவர்களுக்கு வழங்கிய மறுமொழியிலிருந்து எழுத்தாளரும் இடத்தை குறிப்பிடவில்லை என்பது அறியக்கூடியதாக உள்ளது. 

மொத்தத்தில், இத்திரியில் தாங்கள் தான் வன்னியில் நடைபெற்றதாக கூறியுள்ளீர்கள், வேறு யாருமல்ல. மட்டுவை இழுத்ததும் நீங்கள் தான். 🥲 இப்ப என்ர தலையிலை கட்டி விடுறியள் பாருங்கோ. 🫣😒 

நன்னியர்,

நான் பொதுவாக இந்த விவாதங்களை தவிர்க்கிறேன்.

இங்கே ‘மட்டுவில் நடந்தது’ என்றது நானல்ல நீங்கள். 

'எனக்கும் இந்த ஐயம் உண்டு' என்ற உங்கள் கருத்து ஒன்று அப்பாவித்தனமானது அல்லது விசமத்தனமானது.

கருணா அம்மான் பலவீனம், பாயைப் போட்டு மூடும் ஒன்றல்ல.

தாய்லாந்து சம்பவங்கள் குறித்து தேசத்தின் குரலே பேசியிருக்கிறார். தாய்லாந்து பயணமே புலிகள் அழிவின் ஆரம்பம் என்பது பலர் கருத்து. அங்கே தான் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின், 'திருவிளையாடல்கள்' ஆரம்பமாகியது. இன்றுவரை சிங்களத்தின் கைப்பாவையாக அம்மான் மாறிய நிகழ்வின் விதை அங்கேயே போடப்பட்டது.

அம்மாணை வெளியே அனுப்பியது பெரும் தவறு என்ற கருத்து இன்றும் உண்டு.

புலிகளில் இருந்து பிரிந்த பின், அம்மான் நடத்தை, புலிகளில் இருந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை கட்டியம் கூறுகிறது.

ஆனல், கையின் 5 விரல்களும் ஒன்று போலவே இருக்காது என்பதை ஏற்று நகர்வோம்.

திருமணம் செய்வது இயக்க கொள்கையல்ல என்று இருந்த தலமை அதனை மாற்ற, காரணங்கள் இருந்தன.

இது நூல் பற்றிய திரி. நானும், நீங்களும், கோசனும் விவாதிப்பது சரியல்ல. நகர்வோம். நன்றி 🙏

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

உங்களது பதிவுகளை activity ல் தான் பார்க்க முடிகின்றது.கருத்துக்களத்தில் பார்க்க முடியவில்லை. செக் பண்ணுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்+
5 minutes ago, Nathamuni said:

நன்னியர்,

நான் பொதுவாக இந்த விவாதங்களை தவிர்கிறேன்.

இங்கே ‘மட்டுவில் நடந்தது’ என்றது நானல்ல நீங்கள். 

'எனக்கும் இந்த ஐயம் உண்டு' என்ற உங்கள் கருத்து ஒன்று அப்பாவித்தனமானது அல்லது விசமத்தனமானது.

கருணா அம்மான் பலவீனம், பாயைப் போட்டு மூடும் ஒன்றல்ல.

தாய்லாந்து சம்பவங்கள் குறித்து தேசத்தின் குரலே பேசியிருக்கிறார். தாய்லாந்து பயணமே புலிகள் அழிவின் ஆரம்பம் என்பது பலர் கருத்து.

புலிகளில் இருந்து பிரிந்த பின், அம்மான் நடத்தை, புலிகளளில் இருந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை கட்டியம் கூறுகிறது.

ஆனல், கையின் 5 விரல்களும் ஒன்று போலவே இருக்காது என்பதை ஏற்று நகர்வோம்.

இது நூல் பற்றிய திரி. நானும், நீங்களும், கோசனும் விவாதிப்பது சரியல்ல. நகர்வோம். நன்றி 🙏

முனிவரே, இஞ்சே... இஞ்சே... எனக்கு மேலை பழியைப் போட்டுட்டு தப்புவதெல்லாம் சரியில்லை கண்டியளோ... 🤣🤣 

நீங்கள் இப்ப செய்வது என்டால் என்னைச் சுற்றி சட்டம் அடிக்கும் வேலை... நான் கும்மாளம் இருந்த & செயல் செய்த இடத்தின் பெயரை மட்டுமே கூறினேன். கொலை தமிழ்நாட்டில் மதுரையில் நடந்தால், என்ன சென்னை என்றோ சொல்வது கொலை நடந்த இடத்தை? அது போலத்தான் இதுவும். 

நான் சொன்னதுக்கும் பிரதேசவாதத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. 

மேலும், இத்திரியில் நான் கும்மான் பேச்சிற்கோ இல்லை மட்டுவைப் பற்றியோ கதைக்கவில்லை. ஆனால், நீங்கள் தான் வன்புணர்சி என்டவுடன் கும்மானை🤣 இழுத்தது. பேந்து ஏதோ நான் தான் பிரதேசவாதி என்ட மாதிரி எனக்கு மாலை சூடுகிறியள். 

இப்ப ஏதேதோ கதைக்கிறியள்.

இத்திரியுள் மட்டு சார்ந்த ஒருவரை இழுத்தது தாங்களே. நானல்ல. 

//'எனக்கும் இந்த ஐயம் உண்டு' என்ற உங்கள் கருத்து ஒன்று அப்பாவித்தனமானது அல்லது விசமத்தனமானது.//

வன்னியில் இவ்வாறு நடந்தது சத்தியமாக எனக்குத் தெரியாது. 

//நான் பொதுவாக இந்த விவாதங்களை தவிர்கிறேன்.//
நல்லம் நல்லம் 🤣 அப்படியே ஆகட்டும்.

நீங்கள் எழுப்பிய கேள்வி:

6 hours ago, Nathamuni said:

என்ன கேள்வி நன்னியர்?

புலிகள் குறித்து எழுதும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

கருணா அம்மான் கதை என்ன?

நான் அளித்த மறுமொழி:

5 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே, நூல் வன்னி பற்றியது...

கும்மாளம் செய்தவை மட்டுவில்...

ஆகையால் இங்கு வன்னியில் நடந்த நிகழ்வுகளே விரிக்கப்பட்டிருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையிலேயே அதை எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நன்னிச் சோழன் said:

முனிவரே, இஞ்சே... இஞ்சே... எனக்கு மேலை பழியைப் போட்டுட்டு தப்புவதெல்லாம் சரியில்லை கண்டியளோ... 🤣🤣 

நீங்கள் இப்ப செய்வது என்டால் என்னைச் சுற்றி சட்டம் அடிக்கும் வேலை... நான் கும்மாளம் இருந்த & செயல் செய்த இடத்தின் பெயரை மட்டுமே கூறினேன். கொலை தமிழ்நாட்டில் மதுரையில் நடந்தால், என்ன சென்னை என்றோ சொல்வது கொலை நடந்த இடத்தை? அது போலத்தான் இதுவும். 

நான் சொன்னதுக்கும் பிரதேசவாதத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. 

மேலும், இத்திரியில் நான் கும்மான் பேச்சிற்கோ இல்லை மட்டுவைப் பற்றியோ கதைக்கவில்லை. ஆனால், நீங்கள் தான் வன்புணர்சி என்டவுடன் கும்மானை🤣 இழுத்தது. பேந்து ஏதோ நான் தான் பிரதேசவாதி என்ட மாதிரி எனக்கு மாலை சூடுகிறியள். 

இப்ப ஏதேதோ கதைக்கிறியள்.

இத்திரியுள் மட்டு சார்ந்த ஒருவரை இழுத்தது தாங்களே. நானல்ல. 

//'எனக்கும் இந்த ஐயம் உண்டு' என்ற உங்கள் கருத்து ஒன்று அப்பாவித்தனமானது அல்லது விசமத்தனமானது.//

வன்னியில் இவ்வாறு நடந்தது சத்தியமாக எனக்குத் தெரியாது. 

//நான் பொதுவாக இந்த விவாதங்களை தவிர்கிறேன்.//
நல்லம் நல்லம் 🤣 அப்படியே ஆகட்டும்.

நீங்கள் எழுப்பிய கேள்வி:

நான் அளித்த மறுமொழி:

நான் கோசனுடன் மட்டுமே விவாதிக்க விரும்ப ஒரு காரணம் உண்டு, நன்னியர்.

உங்கள் பதிவு அதனை உறுதி செய்கிறது.

விவாதங்களில், நேர்மை, தரம் இருக்க வேண்டும்!!!

நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

என்ன கேள்வி நன்னியர்?

புலிகள் குறித்து எழுதும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

கருணா அம்மான் கதை என்ன?

ஒன்று ஊரில்புலிகள் காலத்தில் என்ன நடந்தது என்று நன்றாக தெரிந்து கொண்டு எழுதுங்கோ.
அல்லது அந்த காலத்தில் அந்த அமைப்பிலிருந்தவர்கள், அங்கு வாழ்ந்த விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு எழுதுங்கோ.
அட்லீஸ்ட் இப்படியான புத்தகங்களையாவது வாசித்து போட்டு எழுதுங்கோ....அல்லது நிழலி என்ன எழுதியிருக்கிறார் என்று வடிவாய் வாசித்து விட்டாவது எழுதியிருக்கலாம்.
ஏதோ வன்னி ,யாழ் புலிகள் தப்பே செய்யாத சுத்த பத்தரைமாத்து தங்கங்கள் என்ட மாதிரி இருக்குது உங்கட கதைகள்...தேவையில்லாமல் கருணாவை இழுத்து பிரதேசவாதத்தை தொடங்கியவர்கள் நீங்கள் ...உங்கட முதுகில் உள்ள ஊத்தையை முதலில் துடையுங்கோ பிறகு அடுத்தவன் முதுகை பார்க்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அம்மானின் தங்கை, அண்ணணுக்கு வக்காலத்தா?

நான், பிரதேச வாதத்தை எதிர்த்து எழுதியதை முதலில் புரிந்து எழுதுங்கள்! 

அப்புறம், அண்ணியும், பிள்ளைகளும் இன்னும் பிரிட்டன் ஸ்காட்லாந்து தானே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.