Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration

No photo description available.

நாடாளுமன்ற உறுப்பினர், அலி சப்ரி ரஹீமின் கள்ளக் கடத்தலை பிரதி பலிக்கும் கருத்தோவியம்.
மேலே சிங்களத்தில் என்ன எழுதி உள்ளது என்பதனை, யாராவது மொழி பெயர்த்து சொல்லுங்களேன்.🙂

@satan, @Cruso, @ஏராளன், @suvy, @நிழலி

அது தங்க பிஸ்கட்அல்லவா?  இல்லை அது சொக்கலேட் பிஸ்கட்.

  • Replies 54
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, karu said:

அது தங்க பிஸ்கட்அல்லவா?  இல்லை அது சொக்கலேட் பிஸ்கட்.

மொழி பெயர்ப்புக்கு நன்றி கரு. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ஒருவரின் செயலை கண்டிப்பதற்கு அவரது மதத்தை இழுத்தால்

முஸ்லிம்கள் தான் தங்களது  செயல்களுக்கு தங்கள் மதத்தை இழுத்து கொண்டு வருகிறார்கள்.ஒரு சொக்கிலேட் சாப்பிடுவதானாலும் தங்கள் மதம் அனுமதிக்காத பொருட்களில் அது செய்யபட்டு இருக்குமோ என்று பார்க்கிறார்கள்.  நித்திரை கொள்ளும் நேரம் தவிர பிரார்த்தனைகள் , மதம் பற்றியே பெருமை பேசும்,  மதம் சொல்லிவிட்டது மறு பேச்சு கிடையாது என்கின்ற முஸ்லிம்களை மற்றய மதத்தவர்களோடு ஒப்பிட முடியாமல் உள்ளது. மதம் பெண்களை மூடி வைத்திருக்க சொல்லிவிட்டது ஆகவே மூடி தான் எங்கள் பெண்களை அனுப்புவோம் என்று மற்றவர்களின் நாடுகளிலும் பொது கல்லூரிகளிலும் பிரச்சனைகளை உண்டாக்குவது  திருகோணமலை தமிழ்பாடசாலைக்கு பாடம் சொல்லி கொடுக்க வந்த முஸ்லிம் ரீச்சருக்கே பார்தா போட்டு அனுப்பிவைத்தது ,மதம் சொல்லிவிட்டது  என்று இவர்கள் உலகம் முழுவதும் செய்துவரும் அட்டூழியம் மோசம்.
ஆனால் பாவ செயல்கள் மட்டும் தாரளமாக செய்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நிழலி said:

ஒருவரின் செயலை கண்டிப்பதற்கு அவரது மதத்தை இழுத்தால், உலகில் உள்ள எல்லா மதங்களும் மோசமானவையாகவே தெரியும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் முஸ்லீம் மதத்தவர்கள் தமிழர்களாக இருந்தும்......இனப்பிரச்சனை என்று வரும் போது முஸ்லீம்களுக்கென தனி அலகு கேட்கின்றார்களே? அங்கே அவர்கள் தங்கள் மதத்தை தானே முன்னிலைப்படுத்துகின்றார்கள். எனவே மதத்தை கையிலெடுப்பவர்கள் அதற்கேற்ப வாழ்ந்து காட்டவேண்டும். அது சிங்கள பௌத்தர்களாக இருந்தாலும் சரி....

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

''குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும், சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் விசேடமாக நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்க வேண்டும். சட்டத்தை சரியான முறையிலும், சமமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

 ஹஹ்....ஹஹாஹா..... இவர் தங்கம் கடத்தியது இதுதான் முதல் தடவையுமல்ல, இவர் மட்டுந்தான் கடத்துபவருமல்ல. கோத்தா புலிகளிடமிருந்து அபகரித்த தங்கத்தை வெளிநாடு ஒன்றிற்கு கடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது, நாட்டு மக்களின் பணத்தை சுருட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதோடு அந்நாட்டு அரசுகள் அதை தடுத்து வைத்திருப்பதாகவும் செய்திகள் உள்ளன. அவை எப்படி நாட்டைக்கடந்து, இந்த அதிகாரிகளை கடந்து  சென்றன? அவைகள் அவர்கள் செல்லும்போது இந்த அதிகாரிகள் என்ன தூங்கிக்கொண்டு இருந்தார்களா? அல்லது அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாதா? ஏதோ.. அவருக்கு காலம் சரியில்லாமல் போய் விட்டது மாட்டுப்பட்டுவிட்டார். அதற்காக சட்டம், சமம் என்றெல்லாம் படம் காட்டக்கூடாது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பது இந்த நாட்டுத்தலைவர்கள், மக்களின் பிரதிநிதிகள் நிரூபித்துள்ளனர்.     

14 hours ago, ஏராளன் said:

விசேட பிரமுகர்களின் நுழைவாயிலின் ஊடாக வருகைத் தருவோர், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

14 hours ago, ஏராளன் said:

நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார்

 எத்தனைபேர், எத்தனைதடவை இந்த வாயிலை பயன்படுத்தியுள்ளனர். போதைப்பொருள் எவ்வாறு நாட்டுக்குள் நுழைந்தது யார் கடத்தியது என்பதற்கான விடையும் இதிலுள்ளது. வெள்ளை வேட்டி திருடருக்கான வாயிலது! சாதாரண மக்களை சோதனை என்கிற பெயரில் பின்னி எடுத்து, தடை செய்யப்பட்ட பொருட்கள் என அச்சுறுத்தி, அவர்களின் சாப்பாட்டு பொருட்களை  அதிகாரிகள் திருடுவது, அங்கும் திருட்டு. அங்கு அவர்கள் திருடர், இங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவலர் என பாராட்டு!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஒருவரின் செயலை கண்டிப்பதற்கு அவரது மதத்தை இழுத்தால், உலகில் உள்ள எல்லா மதங்களும் மோசமானவையாகவே தெரியும்.
 
ஒருவர் செய்யும் தவறுக்காக அந்த மதத்தை இழுப்பது தவறுதான். 

அதட்காக இஸ்லாமிய தாட்கொலை  போராளியாக மாறினால் சொர்க்கத்தில் ஏழு அழகான கன்னிப்பெண்களுடன் மாட மாளிகை கிடைக்கும் எண்டு பீத்திக்கொண்டு திரியக்கூடாதுதானே. காபிர்களை , அதாவது பிற மதத்தவரை கொலை செய்ய வேண்டுமென்று கூறக்கூடாதுதானே.

அவரது மதத்தைப்பற்றி இங்கு கருத்து பரிமாறப்பட்ட்தால் இதனை எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

இவரை மத்திய கிழக்கில் உள்ள நாடு இவ்வளவு பணத்துடனும , கைத்தொலைபேசிகளுடனும் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்துள்ளார்கள்.

19 hours ago, ஏராளன் said:

விசேட பிரமுகர்களின் நுழைவாயிலின் ஊடாக வருகைத் தருவோர், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை

19 hours ago, ஏராளன் said:

இந்த நிலையில், கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலொன்றை அடுத்து, கொழும்பு சுங்க அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்தை நோக்கி விரைந்துள்ளது.

வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்திலுண்டு! ஒருவேளை இவருக்கு உதவி செய்யும் அதிகாரி அன்று பணியில் இல்லாமலிருந்திருக்கலாம், பேரம் பிழைத்து காட்டிகொடுத்திருக்கலாம், இல்லை இவர் புறப்பட்ட விமான நிலையத்திலிருந்து தகவல்  கொடுக்கப்பட்டிருக்கலாம்.

12 hours ago, குமாரசாமி said:

உணவு விடயத்தில் கூட பன்றி இறைச்சி உண்பவனை கேவலமாக பார்பதும்

நமக்குள்ளும் இந்த பாரபட்ஷம் இன்னும் இருக்கிறது.  மாட்டிறைச்சி சாப்பிடுவோரை, மாட்டிறைச்சி தின்னும் ப..... ! என்று விழிப்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்திலுண்டு! ஒருவேளை இவருக்கு உதவி செய்யும் அதிகாரி அன்று பணியில் இல்லாமலிருந்திருக்கலாம், பேரம் பிழைத்து காட்டிகொடுத்திருக்கலாம், இல்லை இவர் புறப்பட்ட விமான நிலையத்திலிருந்து தகவல்  கொடுக்கப்பட்டிருக்கலாம்.

GIF gold bullion golden - animated GIF on GIFER

Gold Coins GIFs | Tenor

இவ்வளவு பெருந் தொகையாக, பொருட்களை கொண்டு வந்தமையால்...
இவர் இதற்கு முன்பும் பல தடவைகள், தங்கம்  கடத்தியவர்  என்பது தெரிகின்றது. 

அலி சப்ரியின்....  ஆசன வாயிலை சோதனை போட்டிருந்தால்,  
போதைப் பொருளும் வந்திருக்கும்.  😎 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

நமது பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் அதி உத்தம.... 
மரியாதைக்குரிய ஜோக்கர்,  மரியாதைக்குரிய சாராயக்கடை உரிமையாளர், 
மரியாதைக்குரிய  போதை மருந்து வியாபாரி, மரியாதைக்குரிய குற்றவாளி, 
மரியாதைக்குரிய கள்ளக் கடத்தல்காரன்,  மரியாதைக்குரிய மோசடி செய்பவர்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of text

நமது பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் அதி உத்தம.... 
மரியாதைக்குரிய ஜோக்கர்,  மரியாதைக்குரிய சாராயக்கடை உரிமையாளர், 
மரியாதைக்குரிய  போதை மருந்து வியாபாரி, மரியாதைக்குரிய குற்றவாளி, 
மரியாதைக்குரிய கள்ளக் கடத்தல்காரன்,  மரியாதைக்குரிய மோசடி செய்பவர்...

ஒரு சிறைச்சாலையை பாராளுமன்றம் என்று அழைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அலி சப்ரி ரஹீமிற்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Published By: VISHNU

26 MAY, 2023 | 06:26 PM
image
Placehoder--_22.jpg

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தங்கம் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு,தண்டப்பணம் விதிக்கபபட்டு விடுதலையான பாராளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீம் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் வெள்ளிக்கிழமை (26) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது இரு தரப்பினரும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டுக்குள் சட்டவிரோமாக தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வந்து குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தண்டப்பணம் செலுத்தி விடுதலையாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமால் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளதால் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், அவர் மீது கடும் ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளதுடன்,தேவையேற்படின் அலி சப்ரி ரஹீம் மீதான  கடும் நடவடிக்கை கோரி 223 பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும்,அவர் கட்சி தலைவர் கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்கேற்காததால் அவரிடம் இவ்விடயத்தை கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சபை முதல்வரான,அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆளும் மற்றும் எதிர் கட்சிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/156233

  • கருத்துக்கள உறவுகள்

குடுமிப்பிடி பிடியுங்கோ! அப்போதான், கூப்பாடு போடுபவர்களின் குட்டுகளும் வெளிப்படும். இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்! இதற்கு எதிர்ப்பு, ஆதரவு தெரிவித்து கிழக்கிலிருந்து இன்னும் குரல் எழும்பாததேனோ? எல்லோரும் தமிழரை முடிச்சுப்போட்டு தப்பிவிடுவதுதான் வழக்கம். ஆலோசைனையில் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும்,அவர் கட்சி தலைவர் கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்கேற்காததால் அவரிடம் இவ்விடயத்தை கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சபை முதல்வரான,அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆளும் மற்றும் எதிர் கட்சிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

அவரை பாரளுமன்றத்தில் இருந்து அகற்ற முடியாது என்றும் , அவராகவே விலக வேண்டுமென்றும் கூறப்படுகின்றது. இருந்தாலும் பாராளுமன்றத்தால் இவருக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்கப்படும். எனவே  இவர் விலகுவதட்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

இருந்தாலும், இவரது நடவடிக்கை சம்பந்தமாக இவரது ஞான தந்தையான ரிசார்ட் பதியுதீன் இதுவரை எந்த கருத்துமே கூறவில்லை. இவர்கள் எல்லோருமே ஒரே குடடயில் ஊறிய மடடைகள்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text

நமது பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் அதி உத்தம.... 
மரியாதைக்குரிய ஜோக்கர்,  மரியாதைக்குரிய சாராயக்கடை உரிமையாளர், 
மரியாதைக்குரிய  போதை மருந்து வியாபாரி, மரியாதைக்குரிய குற்றவாளி, 
மரியாதைக்குரிய கள்ளக் கடத்தல்காரன்,  மரியாதைக்குரிய மோசடி செய்பவர்...

துரதிஷ்ட வசமாகா தென் ஆசியாவில் தமிழர்களை ஆள்வது இந்த கும்பல் தான் அதை வெளிப்படையாக எழுதினால் பிழை என்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

துரதிஷ்ட வசமாகா தென் ஆசியாவில் தமிழர்களை ஆள்வது இந்த கும்பல் தான் அதை வெளிப்படையாக எழுதினால் பிழை என்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம் ?

மரியாதைக்குரிய  அப்பாவி கோவிந்தன்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை மறைக்க முயல்கிறார்கள்.....?

அவர்களுக்கும் வலிக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

தங்களை மறைக்க முயல்கிறார்கள்.....?

அவர்களுக்கும் வலிக்கும்?

ஏதோ ஒரு காரணத்துக்காக… போலி முகமூடியை போட்டிருக்கின்றார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றிரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய்க்கு புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களையும் 91 கையடக்கத் தொலை பேசிகளையும் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இத்தனியா தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 75 இலட்சம் ரூபாய் அபராதத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1332886

👉 @satan, @Cruso, @ஏராளன், @suvy, @நிழலி, @nunavilan, @குமாரசாமி, @karu, @விளங்க நினைப்பவன், @பெருமாள்👈 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

விட்டதைப் பிடிக்கப் போறாரோ?!

  • கருத்துக்கள உறவுகள்

சட்ட நடவடிக்கை என்றதும் பாதிரியாரை தொடர்ந்து இவர் ஓட்டம்! அங்குள்ள சொத்துக்களை பாதுகாக்க சென்றாரோ? இதுதான் இலங்கையின் சட்டம். பயணத்தடை விதித்திருக்க வேண்டாமோ? கடவுச்சீட்டை தடுத்திருக்க வேண்டாமோ என்னோ? ஓட விட்டிட்டு வீரம் பேசுறது, இப்போ எங்கே போனது அந்த சட்டமும் அதிகாரிகளும்?

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ருசி கண்டுட்டுது.....  திருப்பியும் அள்ளிக்கொண்டு வரப்போறான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ருசி கண்டுட்டுது.....  திருப்பியும் அள்ளிக்கொண்டு வரப்போறான்.

அள்ளிக்கொண்டு வரவிட்டுத்தான் அமர்த்தப்போகிறார்கள். இனி எந்தவழியைப்பாவித்து வெளியேறுவார்? ஒருவழியுமில்லை டுபாயிலிருந்துதான் மற்ற கடத்தல், சுரண்டல்காரரை வெளிப்படுத்தப்போறாரோ? முன்பும் றிசாத்தை கைது செய்து படம் காட்டிவிட்டு பின் சத்தமில்லாமல் விடுதலை செய்தவர்கள். அவ்வாறே பேரம் படிந்தால் கைது விசாரணை எல்லாம் புஷ்வாணம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றிரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய்க்கு புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏழரை கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களையும் 91 கையடக்கத் தொலை பேசிகளையும் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இத்தனியா தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 75 இலட்சம் ரூபாய் அபராதத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1332886

👉 @satan, @Cruso, @ஏராளன், @suvy, @நிழலி, @nunavilan, @குமாரசாமி, @karu, @விளங்க நினைப்பவன், @பெருமாள்👈 

இந்த கள்ளனை மக்கள் சபையில் இருந்து துரத்தப்போகிறார்கள் கண்டியளோ. அதுக்கு முன்னாடி முடியுமான வரைக்கும் VIP lounge உள்ளால் போய் அள்ளக்கூடியதை அள்ளப்போகிறான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள். யா அல்லா. 

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது! அது நேற்றைய செய்தி. மீண்டும் டுபாய் பறந்தார் அலி சப்ரி ரஹீம்! இது இன்றைய செய்தி. இது எப்படி சாத்தியமானது? இருந்தாலும் இலங்கை சட்டம், நீதி, குடிவரவுத்துறையை, அதன் அதிகாரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு ஒரு பெரிய கைதட்டு! நேற்றுதான் ஒருவர் சட்டத்தைப்பற்றியும் அதிகாரிகளைப்பற்றியும் சமம் பற்றியும் வியந்துரைத்திருந்தா, இன்று அவரை காணவில்லை! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.