Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

நேற்று மழை பெய்தது

நான் பெய்யச் சொல்லும் 
போது வந்த மழை அல்ல அது

யாருக்காகவோ
எவருக்காகவோ பெய்த மழை அது

நான்
துயர் ஊறிய கண்களும்
வெப்பம் மிகுந்த மூச்சும் 
வெறுப்பேறிய பொழுதும்
கொண்ட நேரத்தில்
மழையை பெய்யக் கேட்டிருந்தேன்

அது பெய்யவில்லை

பொய்மையின் வீச்சில்
மனம் பொசுங்கிய
போது
வெறுமையின் அடர் இருள்
மனம் சூழ்ந்த போது
எல்லாவற்றிலும் வெப்பம்
படர்ந்த போது
இந்த மழையை வா எனக்
கேட்டேன்

வரவில்லை

நேற்று எவருக்காகவோ பெய்தது
எவர் நிலத்தையோ நனைத்தது

வீதி ஒன்றில்
எவருமற்ற பூங்காவில்
தனித்திருந்த ஒரு
நிழற் குடையை
சரித்துச் சென்றது

யாருமற்ற இரவொன்றை
நனைத்துச் சென்றது.
பறவையின் கூடு புகுந்து
சிறகுகளை ஈரப்படுத்தி
தன் வெக்கையை
தணித்துக் கொண்டது

யாரும் கேட்காத போதும்
எவரும் விரும்பாத போதும்
யாருக்காகவோ
எதற்காகவோ
கொட்டித் தீர்த்தது

ஆயினும்
நான் வா 
எனக் கேட்ட மழை அல்ல
அது
எவருக்காகவோ
எதற்காகவோ
பெய்த மழை அது

இன்று
மீண்டும் மழை கேட்கின்றேன்

தகித்து சிதைத்து கருக்கிச்
செல்லும் இந்த நாட்களை
குளிர்வித்து கொள்ள
மழை கேட்கின்றேன்

நான் கேட்கும்
மழை இன்னும்
எனக்காக பெய்யவில்லை

எவருக்காகவோ
எங்கோ 
பெய்து கொண்டே
இருக்கின்றது...

May 24 2023

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, நிழலி said:

நான் கேட்கும்
மழை இன்னும்
எனக்காக பெய்யவில்லை

 

நன்றி கவிதை பகிர்வுக்கு நிழலி, ஆழ் மனதால் கேளுங்கள், கட்டாயம் இயற்கை தரும்👍

நான் என் ஆழ் மனதால் என்ன நினைத்து கேட்டேனோ இயற்கையிடம், அது இயற்கை தந்தது🙏, இனி கேட்பதிற்கு ஒன்றுமில்லை, இயற்கைக்கு நான் திருப்பி செய்கின்றேன் நன்றி கடனாக

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, நிழலி said:

நான் கேட்கும்
மழை இன்னும்
எனக்காக பெய்யவில்லை

மழையை பெய்யும்படி கேட்பதற்கு ஒரு தகுதி வேண்டும்....  தமது முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.    நான் சொல்லவில்லை    அதாவது கற்புடைய மாந்தர் பெய்யெனப் பெய்யும் மழை என்று     🤣.  

மேலும் ஜேர்மனியில் ஒவ்வொரு கிழமையும்.  ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள்  மழைவீழ்ச்சி உண்டு”    நாங்கள் பெய்யுமாறு கேட்பதில்லை     நெடுக குடையுடன்.  திரியணும் என்று புறுபுறுத்தபடி.  .......மழைவீழ்ச்சி வேண்டும் என்றால் வாருங்கள்… ஜேர்மனிக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனகாலத்தின் பின் நிழலியின் ஒரு குறியீட்டுக் கவிதை, சிறப்பு!👍

குறியீட்டுக் கவிதையின் சிறப்பு, கவிஞரின் அதே மன அதிர்வெண்ணில் இருப்போர் தங்கள் அனுபவத்தில் பொருத்தி விளங்கிக் கொள்வர்! இது "வான் பொழியும் தண்ணீர் மழை" பற்றியதல்ல என எனக்குப் புரிகிறது!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்காக மழை பெய்யும்போது எனக்காகவும் கொஞ்சம் வேண்டும்.......!  

அருமையான கவிதை .....நீங்கள் தொடர்ந்தும் கவிதைகள் எழுதவேண்டும்.....!   👍

Posted

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்   என  ஒளவையார்  சொன்னது நிழலியின் கவிதையோடு சமாந்தரமாக செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கவிஞனின் எதிர் பார்ப்பும், அது நிறைவேறாத போது அதனால் ஏற்படும் ஆற்றாமையையும் கவிதை அழகாகச் சொல்லி நிற்கின்றது...!

பருவத்தே பெய்யாத மழையால் எந்தப் பயனுமில்லைத் தான்..!

நான் சுவைத்த நல்ல கவிதைகளுள் இதுவும் ஒன்று...!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி எதை  எதிர்பார்த்து

எதில்  ஆழ்க  மழை கேட்டாரோ  தெரியாது

கவிதையின் நோக்கம்  நம்மை அதை  தேடவிடுவது

அதில் கவிஞர் வெற்றியடைந்திருக்கிறர்

வாழ்த்துக்கள் தம்பி

இன்னும்  நனைய  ஆசை...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலியின் மழைக் கவிதை மிக அருமை. கவிதை அவரவர் தேடலில் பதில் தருவதாய் அமைந்துள்ளது . இக் கவிதையைப் படித்தபோது நான் சில காலத்தின்முன் எழுதிய மழைக்கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக..
அந்த மழைநாளுக்காய் காத்திருந்தேன்
கடைசிவரை அந்த மழை எனக்காகப் பொழிய மறுத்து விட்டது
மழை பொழியும் மனம் குளிரும் என்று காத்திருந்த
ஒவ்வொரு வினாடியும் ஏமாற்றம்தான் எனக்காகக் காத்திருந்தது
வானம் கருக்கொண்டு மேகம் கறுத்துக் கிடந்தது
இடி இடித்தது மின்னல் மின்னியது 
காற்றும் பலமாகத்தான் வீசியது ஆனாலும்
அந்த மழை மட்டும் வரவேயில்லை
வானம் வசப்படுமென்று காத்துக் காத்து 
மனம் காய்த்துப் போனது
வானம் வெளுத்து மேகம் கலைந்து பூமி காய்ந்து கிடந்தது
கடைசி வரை அந்த மழை
எனக்காக மண்ணில் பொழிய மறுத்து விட்டது

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2023 at 19:26, Kavallur Kanmani said:

நிழலியின் மழைக் கவிதை மிக அருமை. கவிதை அவரவர் தேடலில் பதில் தருவதாய் அமைந்துள்ளது . இக் கவிதையைப் படித்தபோது நான் சில காலத்தின்முன் எழுதிய மழைக்கவிதை ஞாபகம் வந்தது. தேடி எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக..
அந்த மழைநாளுக்காய் காத்திருந்தேன்
கடைசிவரை அந்த மழை எனக்காகப் பொழிய மறுத்து விட்டது
மழை பொழியும் மனம் குளிரும் என்று காத்திருந்த
ஒவ்வொரு வினாடியும் ஏமாற்றம்தான் எனக்காகக் காத்திருந்தது
வானம் கருக்கொண்டு மேகம் கறுத்துக் கிடந்தது
இடி இடித்தது மின்னல் மின்னியது 
காற்றும் பலமாகத்தான் வீசியது ஆனாலும்
அந்த மழை மட்டும் வரவேயில்லை
வானம் வசப்படுமென்று காத்துக் காத்து 
மனம் காய்த்துப் போனது
வானம் வெளுத்து மேகம் கலைந்து பூமி காய்ந்து கிடந்தது
கடைசி வரை அந்த மழை
எனக்காக மண்ணில் பொழிய மறுத்து விட்டது

உங்களின் கவிதையும் அருமையாய் இருக்கு சகோதரி......!   👍

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.