Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு! | Good News For Sri Lankans Settle In Canada

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு!

தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் சுகாதார துறை,விஞ்ஞான,தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள் தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்போக்குவரத்து விவசாயம் மற்றும் விவாசய உணவு ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியாற்றல் காணப்பட்டால் அதுவும் விசேட தகைமையாகக் கருத்திற் கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரதான ஐந்து துறைகளைச் சேர்ந்த 82 தொழில்களுக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ப்ரேசர் அறிவித்துள்ளார்.

நாட்டில் தொழிற்சந்தையில் சில துறைகளில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்; கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு! | Good News For Sri Lankans Settle In Canada

மேலும் துறைசார் சிறப்புத் தேர்ச்சியுடைய தகுதியான பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://jvpnews.com/article/good-news-for-sri-lankans-settle-in-canada-1686022972

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டபிள் 35 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா சார்.......!  😎

GIF down - animated GIF on GIFER - by Cordarne

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

டபிள் 35 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா சார்.......!  😎

GIF down - animated GIF on GIFER - by Cordarne

உத கனடா போய்த்தான் செய்யோணுமெண்டில்லையே....
பாரிஸ்ல இருந்தும் செய்யலாம்
ஜேர்மனிக்கு வந்து போகேக்கையும் செய்யலாம்.....ஏனெண்டால் டபுள் 35 எல்லோ :beaming_face_with_smiling_eyes:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலையங்கம்.....இலங்கையர்களுக்கு..

இலங்கையில் யாரப்பா வேலை செய்யினம்...

🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன மகிழ்ச்சித்தகவலானாலும், சிஸ்டம் புரியாதவர்களை சுத்தி பணம் பறிக்க ஒரு கூட்டமும், பணம் துழைக்க ஒரு கூட்டமும் இருக்கவே செய்யும். 

5 சதம் செலவே இல்லாத விசாவுக்கு £65,000 கொடுத்து வந்து அழும் நபரைப் பார்த்தோமே

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

சிஸ்டம் புரியாதவர்களை சுத்தி பணம் பறிக்க ஒரு கூட்டமும்

5 சதம் செலவே இல்லாத விசாவுக்கு £65,000 கொடுத்து வந்து

இந்த அநீதிகளை என்ன செய்வது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/6/2023 at 02:19, விளங்க நினைப்பவன் said:

இந்த அநீதிகளை என்ன செய்வது.

 

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/6/2023 at 17:17, Nathamuni said:

 

தகுதியுள்ளவர் மொழி பிரச்சனையற்றவர் முறைபடி யுகே செல்வதற்கு தரகரிடம் சென்று 23 ஆயிரம் பவுண்ஸ் கொடுத்த அவரின் செயல் தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/6/2023 at 16:17, Nathamuni said:

 

விசா வழங்கும் போது பிரித்தானிய தூதரகம் நிறுவனப் பதிவுகளை பரிசோதிக்காமலா.. விசா வழங்குது.. எங்கேயோ இடிக்குதே..??!

இப்படியான விசா.. வேலை விசா.. படிப்பு விசா எடுத்து பிரித்தானியாவுக்கு வாறவை..பிரித்தானிய அரச இணையத்தில்.. யார் யாருக்கு.. இந்த விசா எடுத்த ஆக்களை அழைக்க அனுமதி இருக்கு என்ற லிஸ்ட் இருக்குது.

அதனை பயன்படுத்தினால்.. ஏமாற்றம் வராதே.

https://www.gov.uk/government/publications/tier-2-employers-in-the-health-care-sector/list-of-tier-2-employers-in-the-health-care-sector-categorised-by-region-and-the-industry-sectors

https://www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-workers

https://www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-students

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, nedukkalapoovan said:

விசா வழங்கும் போது பிரித்தானிய தூதரகம் நிறுவனப் பதிவுகளை பரிசோதிக்காமலா.. விசா வழங்குது.. எங்கேயோ இடிக்குதே..??!

இப்படியான விசா.. வேலை விசா.. படிப்பு விசா எடுத்து பிரித்தானியாவுக்கு வாறவை..பிரித்தானிய அரச இணையத்தில்.. யார் யாருக்கு.. இந்த விசா எடுத்த ஆக்களை அழைக்க அனுமதி இருக்கு என்ற லிஸ்ட் இருக்குது.

அதனை பயன்படுத்தினால்.. ஏமாற்றம் வராதே.

https://www.gov.uk/government/publications/tier-2-employers-in-the-health-care-sector/list-of-tier-2-employers-in-the-health-care-sector-categorised-by-region-and-the-industry-sectors

https://www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-workers

https://www.gov.uk/government/publications/register-of-licensed-sponsors-students

இங்கே ஒரு வித்தியாசமான மோசடி நடக்கிறது. சட்ட ரீதியாக பிழை பிடிக்க முடியாத ஒரு  வேலை.

விசா ஸ்பான்சர் பண்ண ஒரு நிறுவனம் லைசென்ஸ் எடுக்க வேண்டும். கொரோனா காலத்தின் பின்னர், அரசு கொடுத்த லோனை செலுத்த வழியில்லை என்று, துண்டை போட்டுக் கொண்டு, திவாலாகின்றன. இப்படி திவாலாக முன்னர், விசாக்களை ஸ்பொன்சார் பண்ணி, காசை வாங்கிக் கொண்டு திவாலாக்குகிறார்கள் போல தெரிகிறது.

அவர்கள் காசு வாங்குவதை உறுதிப்படுத்த முடியாததால், உள்ளே வந்தவர்கள், கொம்பனி இல்லை என்று நிக்கும் போது, சட்ட ரீதியாக ஒன்றுமே செய்ய முடியாது. அப்படி உள்ளே வந்தவர்கள் வேறு கொம்பனிக்கு விசாவை மாத்த வேண்டியது தான். ஆனால் விபரம் இல்லாவிடில், நம்ம புரோகிராசி மாருக்கு கொடுக்க பணம் வேணுமே.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
    • இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.