Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை - பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

23 JUN, 2023 | 11:16 AM
image
 

விசேட மருத்துவநிபுணர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்துள்ளதாலும் ஏனைய சிலரை சர்வதேச பல்கலைகழகங்கள் உள்வாங்குவதாலும் இலங்கையின்சுகாதார துறை நெருக்கடிகளை எதிர்கொள்ளநேரிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை சமீபத்தில் வைத்தியர்களின் ஓய்வுவயது எல்லையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் இதற்கு காரணமாக உள்ளது எனவும் கருத்துக்கள்வெளியாகியுள்ளன.

2024 இல் நாட்டிற்கு 4229 விசேட வைத்திய நிபுணர்கள் தேவை என சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது எனினும் இடமாற்றம் அடிப்படையிலான புள்ளிவிபரங்கள் 750 வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவேண்டியுள்ளதை புலப்படுத்தியுள்ளன.

இருதயநோய் நிபுணர்கள் நுண்ணுயிரியல் நிபுணர்கள் தோல்நோய் நிபுணர்கள் அவசரகால மருத்துவர்கள் மயக்கவியல் நிபுணர்கள் போன்றவர்களிற்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அதிகாரிகள் உடனடி நடவடிக்களை எடுக்காவிட்டால் அடுத்த ஆண்டு 1000க்கும் மேற்பட்ட வைத்தியர்களிற்கான தேவை ஏற்படலாம் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகின்றன.

இலங்கையில் தற்போது 2007 விசேட வைத்திய நிபுணர்களே உள்ளனர் இது பொதுமக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/158389

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சுகாதாரத் துறைக்கு கடுமையான அச்சுறுத்தல் – மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு பாரிய வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இது நாட்டின் சுகாதாரத் துறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் புலம்பெயர்வை தெரிவு செய்துள்ளனர். சில நிபுணர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை, இலங்கையின் நலிவடைந்த சுகாதாரத் துறைக்கு மேலும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் திருத்தப்பட்ட மருத்துவர்களின் 60 வயதிற்குள் ஓய்வுபெறும் வயதும் பிரச்சினையை தீவிரமாக்கியுள்ளது. இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டிற்கு 4,299 மருத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதாக சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

இடமாறுதல் பட்டியலின்படி, இருதயநோய் நிபுணர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள், தோல்நோய் நிபுணர்கள், அவசரகால மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட 750 பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் அவசரமாக நிரப்பப்பட வேண்டியுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிகள் உடனடியாகச் செயற்படத் தவறினால், அடுத்த ஆண்டுக்குள் தேவைப்படும் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டும் என்று இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது சுமார் 2,007 நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை பொது மக்களின் மருத்துவத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை.

60 முதல் 63 வயதுக்குட்பட்ட 300 மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் உடனடி ஓய்வு பெறுவார்கள் என்பது பிரச்சினையை மேலும் அதிகரிக்க செய்யும்.

இதேவேளை, நாட்டில் உள்ள 18 இருதய சத்திரசிகிச்சை நிபுணர்களில் ஒன்பது பேர் சேவையை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல இதய அறுவை சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம் உள்ளது. கொழும்பு, காலி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில சிறப்புப் பிரிவுகளும் இதில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/259620

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? 😁

இது… ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனித்தான் வரும். 😂

விமானிகளும், ஆசிரியர்களும் பற்றாக்குறையாம்.
ஆக புத்த பிக்குகள் மட்டும் தாராளமாக இருக்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இது… ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனித்தான் வரும். 😂

மெயின் பிக்ஸரில எங்களுக்கும் ஆப்பு இருக்கிறது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

மெயின் பிக்ஸரில எங்களுக்கும் ஆப்பு இருக்கிறது. 😁

நாங்கள் காலம், காலமாக ஆப்பு வாங்கி பழகிப் போச்சு.
சிங்களவன்…. ஆப்பை, எப்படி கையாளுகின்றான் என்று பார்க்க ஆசை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் காலம், காலமாக ஆப்பு வாங்கி பழகிப் போச்சு.
சிங்களவன்…. ஆப்பை, எப்படி கையாளுகின்றான் என்று பார்க்க ஆசை. 😂

இராணுவம் இருக்கிறது...வெள்ளை உடுப்பைப் போட்டு ஆஸ்பத்திரியில்  இருத்தி விடுவார்கள்......பிரச்சனை தீர்ந்தது.  நோயாளிகளுக்கு அவங்கள்  வைத்தியர்கள் தான்     🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

இராணுவம் இருக்கிறது...வெள்ளை உடுப்பைப் போட்டு ஆஸ்பத்திரியில்  இருத்தி விடுவார்கள்......பிரச்சனை தீர்ந்தது.  நோயாளிகளுக்கு அவங்கள்  வைத்தியர்கள் தான்     🤣😂

இதனால்… “நேர்ஸ்”மாருக்கு பாதிப்பு ஏற்படாதா. 😂 

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

இதனால்… “நேர்ஸ்”மாருக்கு பாதிப்பு ஏற்படாதா. 😂 

 

ஆமாம் நல்ல கேள்வி.......நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பு டன். ஒப்பிடும் போது  ....மிகவும் குறைவு......எனவே… அதனை  புறக்கணிக்கலாம்   ....அதாவது பாதிப்பு இல்லை எனலாம்..

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதனால்… “நேர்ஸ்”மாருக்கு பாதிப்பு ஏற்படாதா. 😂 

அண்ணை ஆங்கிலம் எழுத, வாசிக்க, கதைக்க தெரிந்த எல்லோரும் தகுதிக்கேற்ப வெளிநாடு போக முயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அண்ணை ஆங்கிலம் எழுத, வாசிக்க, கதைக்க தெரிந்த எல்லோரும் தகுதிக்கேற்ப வெளிநாடு போக முயல்கிறார்கள்.

ஏராளன்… இதன் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கப் போகுது.
இலங்கையில்…. அரச அதிகாரிகள் மிக அதிகமாம்.
இங்கு எட்டு பொது மக்களுக்கு ஒரு அரச அதிகாரியாம். தமிழ் நாட்டில்… 16 பொது மக்களுக்கு ஒரு அரச அதிகாரி என்று ஒரு கட்டுரையில் வாசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

ஏராளன்… இதன் பின் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கப் போகுது.
இலங்கையில்…. அரச அதிகாரிகள் மிக அதிகமாம்.
இங்கு எட்டு பொது மக்களுக்கு ஒரு அரச அதிகாரியாம். தமிழ் நாட்டில்… 16 பொது மக்களுக்கு ஒரு அரச அதிகாரி என்று ஒரு கட்டுரையில் வாசித்தேன்.

அண்ணை உண்மையான நெருக்கடி உள்நாட்டுக்கடன் மறுசீரமைப்போட வரலாம் என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதனால்… “நேர்ஸ்”மாருக்கு பாதிப்பு ஏற்படாதா. 😂 

 

யாருசொன்னாங்க அப்பிடி....நீயின்றி நானில்லை...என்பதுதான் சிறிலங்காவின் ஆசுப்பத்திரி நிலை...(பி. கு ...என்னை விட்டுடுங்க சிறீயர்)

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானிகளால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் -  சஜித் சபையில் எச்சரிக்கை

Published By: VISHNU

23 JUN, 2023 | 03:18 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் விமான ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது விமான பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  அபாயம் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெளிக்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 6மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் விமான ஓட்டுனர்கள் 70பேர் நீங்கியுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் தற்போது 260பேருக்கும் குறைவான விமான ஓட்டுனர்களே இருக்கின்றனர்.

இந்த வருடத்தில் மேலும் 18பேர் செல்ல இருக்கின்றனர்.  நாட்டுக்கு 330 விமான ஓட்டுனர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது இருப்பது 260பர்,

அதனால் சேவையில் இருக்கும் விமான ஓட்டுனர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் விமானம் செலுத்துவது என்பது மிகவும் அழுத்தம் கூடியதாகும். அதனால் விமான ஓட்டுனர் ஒருவர் விமானத்தை செலுத்திய பின்னர் சர்வதேச விதிமுறைக்கு அமைய அவருக்கு ஓய்வு நேரம் இருக்கிறது.

என்றாலும் எதிர்வரும் சுற்றுலா சமயத்தில் தற்பாேது இருக்கும் விமானிகளின் ஓய்வு நேரத்தை சுருக்கி, அவர்களை இந்த சேவைக்கு ஈடுபடுத்துவார்கள்.

இதனால் இவர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்துவார்கள். அதன் காரணமாக விமான பயணிகளின் உயிர் ஆபத்துக்கும் இடமிருக்கிறது. அதனால் விமான ஓட்டுனர்களின் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/158430

  • கருத்துக்கள உறவுகள்
  2 hours ago, Kapithan said:

மெயின் பிக்ஸரில எங்களுக்கும் ஆப்பு இருக்கிறது. 😁

நாங்கள் காலம், காலமாக ஆப்பு வாங்கி பழகிப் போச்சு.
சிங்களவன்…. ஆப்பை, எப்படி கையாளுகின்றான் என்று பார்க்க ஆசை. 😂

 

கிட்டி விளையாட கிரவுண்டுக்கு வரலாம்...அது தெண்டல் கிட்டியாகவும் இருகலாம்....எழுப்பக் கிட்டியாகவும்  இருக்கலாம்...இரண்டும் கலந்து அடிக்கக்கூடாது....அது கிட்டியா இருக்காது..இதுபோலைதான் யாழிலும் நடக்குது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் காலம், காலமாக ஆப்பு வாங்கி பழகிப் போச்சு.
சிங்களவன்…. ஆப்பை, எப்படி கையாளுகின்றான் என்று பார்க்க ஆசை. 😂

சிறித்தம்பி!
ஈழத்தமிழினம் என்பது சிங்களவனுக்கு கிடைத்த பொன்வாத்து.
அரசியல் அல்லது பொருளியல் இல்லையேல் இனவாதம் எதுவானாலும் தமிழினத்தை வைத்தே சிங்களவன் வாழ்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

"முற்பகல் செயின் பிற்பகல் விளையும்." தங்களது பயங்கரவாதத்தையும் அடக்குமுறையையும் மறைக்க அதிலிருந்து விடுபட முயன்றவர்களை பயங்கரவாதிகளாக்கி சர்வதேசத்துடன் கூடி அழித்த முட்டாள்தனத்தை இனித்தான் சிங்களம் அறுவடை செய்யப்போகிறது. ஒரு இனத்தோடு  நாட்டை பகிர்ந்து வாழ மறுத்து இவர்களே நாடோடிகளாக போகிறார்கள். போனவர்கள் திரும்பி வரப்போவதில்லை, இனி இறக்குமதி செய்ய வேண்டியது தொழிலாளர்களை.

10 hours ago, தமிழ் சிறி said:

இதனால்… “நேர்ஸ்”மாருக்கு பாதிப்பு ஏற்படாதா. 😂 

 

என்ன சிறியர்... ஒரே நேஷ்மாரின் பாதுகாப்பில் கவனமாயிருக்கிறார்? என்ன விஷயம்?

8 hours ago, ஏராளன் said:

இவர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்துவார்கள். அதன் காரணமாக விமான பயணிகளின் உயிர் ஆபத்துக்கும் இடமிருக்கிறது.

 

8 hours ago, ஏராளன் said:

இவர்கள் சர்வதேச விதிமுறைகளை மீறி விமானத்தை செலுத்துவார்கள். அதன் காரணமாக விமான பயணிகளின் உயிர் ஆபத்துக்கும் இடமிருக்கிறது. அதனால் விமான ஓட்டுனர்களின் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அண்மையில் நடந்த பல விமான விபத்துகளுக்கு, விமானிகளின் மன அழுத்தமே காரணம் என்று சொல்கிறார்கள். உண்மையாக இருக்குமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, satan said:

"முற்பகல் செயின் பிற்பகல் விளையும்." தங்களது பயங்கரவாதத்தையும் அடக்குமுறையையும் மறைக்க அதிலிருந்து விடுபட முயன்றவர்களை பயங்கரவாதிகளாக்கி சர்வதேசத்துடன் கூடி அழித்த முட்டாள்தனத்தை இனித்தான் சிங்களம் அறுவடை செய்யப்போகிறது. ஒரு இனத்தோடு  நாட்டை பகிர்ந்து வாழ மறுத்து இவர்களே நாடோடிகளாக போகிறார்கள். போனவர்கள் திரும்பி வரப்போவதில்லை, இனி இறக்குமதி செய்ய வேண்டியது தொழிலாளர்களை.

இல்லை...

இந்திய ஒன்றியம் இருக்கும் வரை சிங்களம் எதுக்குமே கவலைப்படத் தேவையில்லை.

போர்க்குற்ற விசாரணை என வந்தால்   சிறிலங்கா குற்றவாளி கூண்டில் அல்ல.....சாட்சிக்கூண்டில்.

குற்றவாளி தன்னை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வான்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இல்லை...

இந்திய ஒன்றியம் இருக்கும் வரை சிங்களம் எதுக்குமே கவலைப்படத் தேவையில்லை.

போர்க்குற்ற விசாரணை என வந்தால்   சிறிலங்கா குற்றவாளி கூண்டில் அல்ல.....சாட்சிக்கூண்டில்.

குற்றவாளி தன்னை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வான்.

அது இந்தியாவுக்கு நன்றாக  தெரியும். ஆகவே தன்னை பாதுகாத்துக்கொள்ள அது சிங்களத்தின் எல்லா அக்கிரமங்களையும் கண்டும்காணாமல் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் ஆனால் அது இலங்கையில் தமிழருக்கு செய்த கொடுமைகளுக்காக அந்த குடிமக்கள் இந்தியாவின் மாநிலங்கள்  விலையாக வேண்டி வரும்போது இந்தியா தன்னால் விலகிக்கொள்ளும். இல்லை, இந்தியாவே நிர்வாகம் செலுத்த வேண்டியும் வரலாம் இலங்கையில். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, satan said:

அது இந்தியாவுக்கு நன்றாக  தெரியும். ஆகவே தன்னை பாதுகாத்துக்கொள்ள அது சிங்களத்தின் எல்லா அக்கிரமங்களையும் கண்டும்காணாமல் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் ஆனால் அது இலங்கையில் தமிழருக்கு செய்த கொடுமைகளுக்காக அந்த குடிமக்கள் இந்தியாவின் மாநிலங்கள்  விலையாக வேண்டி வரும்போது இந்தியா தன்னால் விலகிக்கொள்ளும். இல்லை, இந்தியாவே நிர்வாகம் செலுத்த வேண்டியும் வரலாம் இலங்கையில். 

கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுற சிறிலங்கா.....இந்தியா இறுக்கினால் சீனாவிட்ட ஓடும்.....சீனா இறுக்கினால் இந்தியாவிட்ட ஓடும்.....இரண்டு பேரும் இறுக்கினால் இருக்கவே இருக்கு அம்ம....அம்ம.....அம்மெரிக்கா :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிழுத்த குரங்குமாதிரி ஒருநாள் சிக்காமலா போகும்?

14 minutes ago, குமாரசாமி said:

கள்ளன் பொலிஸ் விளையாட்டு விளையாடுற சிறிலங்கா.....இந்தியா இறுக்கினால் சீனாவிட்ட ஓடும்.....சீனா இறுக்கினால் இந்தியாவிட்ட ஓடும்.....இரண்டு பேரும் இறுக்கினால் இருக்கவே இருக்கு அம்ம....அம்ம.....அம்மெரிக்கா :face_with_tears_of_joy:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை!

இந்த வருட இறுதிக்குள் அறுபது வயதை எட்டிய அறுநூற்று நான்கு (614) மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் ஓய்வு பெறுவது சுகாதாரத் துறைக்கு பாரிய சிக்கலை உருவாக்கலாம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

15 மூத்த மருத்துவ நிர்வாகிகள், 7 துணை மருத்துவ நிர்வாகிகள், 5 துணை இயக்குநர் ஜெனரல்கள், 2 மருத்துவத் துறை கூடுதல் செயலாளர்கள், 250 சிறப்பு மருத்துவர்கள், 340 வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர்.
அறுபது வயதுக்கு மேற்பட்ட அரச ஊழியர்களின் ஓய்வுக்கான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இவர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

தற்போது சுமார் 750 சிறப்பு மருத்துவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. (இடமாற்றப் பதிவேடு 2023 இன் படி) மற்றும் சுமார் 350 மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ளனர்.

டிசம்பர் 2022 இல் சுமார் 250 சிறப்பு மருத்துவர்கள்
வெளிநாடுகளில் பயிற்சி முடித்து நாடு திரும்பி னர், ஆனால் அவர்களில் 120 பேர் இலங்கையில் மருத்துவ சேவையில் இணையவில்லை.
இதன்படி, எழுநூற்று ஐம்பது விசேட வைத்தியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எஞ்சிய 150 விசேட வைத்தியர்கள் போதுமானதாக இல்லை என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலைமையின் அடிப்படையில், அடுத்த வருடத்திற்குள் விசேட வைத்தியர்களின் வெற்றிடங்கள் 1000ஐ தாண்டும் என அதிகாரிகள் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

63 வயதுக்கு மேற்பட்ட சுமார் 50 விசேட வைத்தியர்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கான யோசனையொன்றையும் சுகாதார அமைச்சு நிதியமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

https://thinakkural.lk/article/259876

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

 

May be a doodle of text

 

May be an illustration of slow loris

 

May be an image of road and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் 63 வயது வரை நீடிக்கிறது!

28 JUN, 2023 | 11:53 AM
image
 

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே  சார்பில் ஆஜரான சட்ட மா அதிபர், அமைச்சின் தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

விசேட வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்துக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே  இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

176 வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

ஜூன் 30 ஆம் திகதிக்குள் பிரேரணையின் மூலம் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/158755

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருந்த ஒரேயொரு குழந்தை கதிரியக்க நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்

குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு மருத்துவ நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறைக்கு குறைந்தது 4,000 நிபுணத்துவ மருத்துவர்கள் தேவைப்படுவார்கள் என முன்னர் மதிப்பிடப்பட்டதாக தெரிவித்தார்.

“தற்போது, எங்களிடம் 50 சதவீதம் (2,000) மட்டுமே உள்ளது. விசேட மருத்துவர்களின் ஓய்வு வயதை 60 ஆக நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முடிவால், மீதமுள்ள 50 சதவீதத்தில் இருந்து சுமார் 250 மருத்துவர்கள் இத்துறைக்கு இழக்கப்படுவார்கள், மொத்த விசேட மருத்துவர்களின் எண்ணிக்கையை கொண்டு வரும். 1,750. அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இணைக்கப்பட்ட 30 மருத்துவர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து விசேட மருத்துவர்களாக நியமித்தோம். ஆனால் அவர்களில் 20 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 289 மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டது, ஆனால் இந்த ஆண்டு 155 பேர் மட்டுமே உள்ளனர், அவர்களில் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீதமுள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால், சுகாதாரத் துறை மேலும் 20 மயக்க மருந்து நிபுணர்களை இழக்கும்.

புலம்பெயர்ந்த பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் 100 விசேட மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் மட்டுமே இருப்பார்கள் என கூறுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாட்டில் குழந்தை கதிரியக்க மருத்துவத்தில் ஒரே ஒரு நிபுணர் மட்டுமே இருந்தார், அவர் ஏற்கனவே இடம்பெயர்ந்தார். விசேட மருத்துவர்கள் குறைந்த வசதிகளைப் பெறுவதால் முதுகலை படிப்பைத் தொடரவில்லை,” என்றும் குறிப்பிட்டார்.

பெரும்பாலான விசேட மருத்துவர்கள் தங்களிடம் உள்ள சில வசதிகள், குடியிருப்புகள் இல்லாததால், தங்கள் குழந்தைகளை பாடசாலைகளில் சேர்க்க வழியில்லாததால் இடம்பெயர்ந்து வந்தனர்.

எனவே, மருத்துவர்கள் இடம்பெயர்வதை நிறுத்த வேண்டுமானால், அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/260701

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.