Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்குவரத்து பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் 17 வயது இளைஞன் பலி - பிரான்ஸ் தலைநகரில் கலவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான குடிவரவு கொள்கையால் அவதிப்படும் பிரான்ஸ் நாடு

  • Replies 184
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி!
எல்லா நாட்டு அகதிகளையும் ஒரே தராசில் வைக்க முடியாது.

தற்போது இஸ்லாமிய நாடுகளிலிருந்தே அதிகமாக அகதிகளாக வருகின்றார்கள். அந்த அகதிகள் வரும் நாடுகளை கவனித்து பார்த்தால் .......அந்த நாடுகள் அனைத்தும் இனி இல்லையென்ற மத/சட்டம் ஒழுங்கு நடவடிக்கை கட்டுப்பாடு உள்ள நாடுகளாக இருக்கும். ஏனென்றால் அந்த இன மக்களின் இயல்பான குணாதிசயங்களே விகாரமானதாக இருக்கும். அதனால் தான் அந்த நாடுகளில் கடுமையான சட்டங்களை வைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு கசையடி,விரல் எடுத்தல்,மரண தண்டனை உட்பட.....
அப்படிப்பட்ட நாடுகளில் இருந்து மேற்குலகிற்கு அகதிகளாக வருபவர்கள்  திறந்த வெளி கலாச்சார/மனித உரிமை நாடுகளுக்கு வந்ததும் தலைகால் தெரியாமல் செய்யும் அநியாங்களே இவைகள்.

ஐரோப்பிய சட்டங்கள் ஐரோப்பிய மண் மக்களுக்குரியது.அவர்கள் சட்டங்களை மதிப்பவர்கள். ஆசிய,அரேபிய ஆபிரிக்க  மண்ணின் சட்டங்களை பார்த்தால் புரியும் அந்தந்த நாட்டு  மக்கள் என்னென்ன குணாதிசயங்கள் உடையவர்கள் என......?

சருகு ஆமையை மெத்தையில் வைத்தாலும் அது சருகை தேடித்தான் போகுமாம். அதே போல் தான் அந்தந்த நாட்டு மக்களின் குணாதிசயங்களும்.

சரியான கணிப்பு, குமாரசாமி அண்ணை.
அல்ஜீரியனின் கொள்ளையடிப்புக்குள்… கறுவலும் நிற்பது கவலையாக உள்ளது.
எத்தனை நாடுகள் இவர்களின் வருகையை விரும்பாமல். கடலில் கிடந்து சாகுங்கோ
என கண்டும் காணாமல் விட.. அவர்களை அரவணைத்த நாட்டுக்கு செய்யும் செயலைப் பாருங்கள்.
நம்மடை ஆட்களும் இதில் அடக்கமாம் என்று, விசுகர் மேலே சொன்னதை வாசித்த போது…
இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

இதைத்தான் நானும் இணையவனும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். வீட்டில் இருந்து தான் இவற்றிற்கான நற்பாதை தொடங்கப்படணும்.

அவரும் நிங்களும் அல்ல இங்கு கருத்து எழுதுபவர்கள் எல்லோருமே ஒருமித்த கருத்து உடையவர்கள் தான் ஏனென்றால் சிங்கள இனவெறியை அனுபவித்து வந்தவர்கள் அனைவரும் ஆனால் அற்பனுக்கு பவிசு வந்தால் தலைகால் தெரியாமல் ஆடுவது போல் சிலர் நடந்து கொள்வதால் பிளவு ஆரம்பிக்குது அந்த பிளவை ஆரம்பத்திலே சரி செய்யலாம் பெருந்தன்மையுடன் அதுக்கு தலயில் உள்ள ஈகோ விடாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, nunavilan said:

மோசமான குடிவரவு கொள்கையால் அவதிப்படும் பிரான்ஸ் நாடு

நான் அப்போதே சொன்னேன் கேட்டீர்களா? :rolling_on_the_floor_laughing:

Jung und rechts: Wahlkämpfer für Marine Le Pen - Politik - FAZ

நான் இப்பவும் சொல்கின்றேன். ஆனால்  ஐரோப்பிய ஒன்றியம் எனும் போர்வையில் என் வாயை மூடுகின்றீர்கள்.:rolling_on_the_floor_laughing:

Italien: Postfaschistin Giorgia Meloni beliebter als Salvini

ஜேர்மனியில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது நாங்கள் தான்....:rolling_on_the_floor_laughing:

Kommentar: Alice Weidel, die AfD und das Lachen im Halse

நான் அகதிகளுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அந்த அகதிகள் செய்யும் துர்பிரயோகத்திற்கு எதிரானவன்.

அதைத்தான் மாற்றுகருத்து அரசியல்வாதிகளும் சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, தமிழ் சிறி said:

சரியான கணிப்பு, குமாரசாமி அண்ணை.
அல்ஜீரியனின் கொள்ளையடிப்புக்குள்… கறுவலும் நிற்பது கவலையாக உள்ளது.
எத்தனை நாடுகள் இவர்களின் வருகையை விரும்பாமல். கடலில் கிடந்து சாகுங்கோ
என கண்டும் காணாமல் விட.. அவர்களை அரவணைத்த நாட்டுக்கு செய்யும் செயலைப் பாருங்கள்.
நம்மடை ஆட்களும் இதில் அடக்கமாம் என்று, விசுகர் மேலே சொன்னதை வாசித்த போது…
இன்னும் அதிர்ச்சியாக உள்ளது.

உண்மைதான்.....ஆனால் கடையுடைப்பு, கொள்ளை என வந்தால் கறுப்பர் மற்றும் தமக்கு ஆகாதவர்களை படம்பிடித்து  காட்டுவது மேற்குலக ஊடகங்களின் தர்மம். ஆனால் வெள்ளைகளும் இந்த கொள்ளை களவெடுப்பதில் அடக்கம். :beaming_face_with_smiling_eyes:

⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳⨳

இந்த பெருமளவு  அகதிகள் வருகைக்கும் இந்த மேற்குலகுதான் காரணம். முக்கியமாக அமெரிக்கா.

பல விடயங்களில் மேற்குலகிற்கு அரணாக இருந்தவர்களை அழித்து தள்ளியதுதான். அரபு வசந்தம் என ஆரம்பித்து கட்டுக்கோப்பாக இருந்த நாடுகளை சீரழித்து இன்று நனைச்சு சுமக்கின்றார்கள்.

ஒரு கேள்வி?  இந்த அமெரிக்கா சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா நாடுகளுடன் தனகாமல் இருந்திருந்தால் இவ்வளவு அகதிகள் உருவாகியிருப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இஸ்லாமிய அகதி பிரச்சினைக்கு… அமெரிக்கா காரணம் என்பதை,
நம்மடை ஆட்களும்… விசுவாசம் காரணமாக ஏற்க மறுக்காமல்,
உப்புச் சப்பு இல்லாத காரணங்களை சொல்லிக் கொண்டு திரிவது கொடுமையிலும் கொடுமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, தமிழ் சிறி said:

இஸ்லாமிய அகதி பிரச்சினைக்கு… அமெரிக்கா காரணம் என்பதை,
நம்மடை ஆட்களும்… விசுவாசம் காரணமாக ஏற்க மறுக்காமல்,
உப்புச் சப்பு இல்லாத காரணங்களை சொல்லிக் கொண்டு திரிவது கொடுமையிலும் கொடுமை.

அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் அன்று இன்றும் செய்த/ செய்யும் தவறுகள் தான் ......
இன்று எதிர்வினையாகி வளர்ந்து விருட்சமாகி ஐரோப்பாவை அச்சுறுத்துகின்றது. 

இந்த அகதிகள் விடயத்தில் ஈழத்தமிழினம் ஒரு சிறிய புள்ளி மட்டுமே....அகதிகள் விடயத்தில் ஒவ்வொரு புலம்பெயர் ஈழத்தமிழனும் தான்  வாழும் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பது  மண் சார்ந்த பிறவிக்குணம்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது நாங்கள் தான்....:rolling_on_the_floor_laughing:

எதுக்கும் இலண்டன் மச்சாளோடு அதிகம் முண்ட வேண்டாம். இது நடந்தால்…பாய் தலையாணியோட…ஓடி வர ஒரு உறவு வேணும்தானே.

42 minutes ago, குமாரசாமி said:

இந்த பெருமளவு  அகதிகள் வருகைக்கும் இந்த மேற்குலகுதான் காரணம். முக்கியமாக அமெரிக்கா.

பல விடயங்களில் மேற்குலகிற்கு அரணாக இருந்தவர்களை அழித்து தள்ளியதுதான். அரபு வசந்தம் என ஆரம்பித்து கட்டுக்கோப்பாக இருந்த நாடுகளை சீரழித்து இன்று நனைச்சு சுமக்கின்றார்கள்.

ஒரு கேள்வி?  இந்த அமெரிக்கா சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா நாடுகளுடன் தனகாமல் இருந்திருந்தால் இவ்வளவு அகதிகள் உருவாகியிருப்பார்களா??

இது நியாயமான நிலைப்பாடு.

ஆனால் பிரான்சிற்கு இது பொருந்தாது. காரணம் அங்கே இருக்கும் வட ஆபிரிக்கர்கள் - கிட்டதட்ட ஒரு நூற்றாண்டாக குடியேறியுள்ள பிரான்சின் காலனிய காலத்து சீதனம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை ஐரோப்பா + யூகே விரைவில் கீழ் கண்ட இரு வழிகளில் ஒன்றை தேர்ந்து எடுக்க நிர்பந்திக்கப்படும்.

1. இனிமேல் வெளிநாட்டவர் வருகைகை  இல்லாது ஆக்கல்.

2. மேலே உள்ளதை செய்வதோடு - இப்போ வந்து உள்ளோரையும் (நாம் எல்லோரும்) நாடு திருப்பல்.

மிதவாத வலது, இடது சாரிகள் 1ம் தீர்வை இறுக்கமாக அமல் படுத்தினால் 2 நடைமுறைக்கு வராமல் தடுக்கலாம்.

இது தவறின்,

AfD, லெபென், Britain First போன்ற கட்சிகள் ஆட்சி ஏறி 2ம் தீர்வை நடைமுறைப்படுத்தும்.

இது - நடக்காது, சாத்தியமில்லை என நாம் வாழாவிருக்க முடியாது. பிரெக்சிற் எல்லாருக்கும் ஒரு நல்ல wake-up call.

தீவிரவாத கட்டிசிகள் சட்டம் இயற்றும் இயலுமையை பெற்று விட்டால் - எதுவும் சாத்தியமே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

எதுக்கும் இலண்டன் மச்சாளோடு அதிகம் முண்ட வேண்டாம். இது நடந்தால்…பாய் தலையாணியோட…ஓடி வர ஒரு உறவு வேணும்தானே.

இது நியாயமான நிலைப்பாடு.

ஆனால் பிரான்சிற்கு இது பொருந்தாது. காரணம் அங்கே இருக்கும் வட ஆபிரிக்கர்கள் - கிட்டதட்ட ஒரு நூற்றாண்டாக குடியேறியுள்ள பிரான்சின் காலனிய காலத்து சீதனம்.

கொண்ட கோலத்தை குருவாலும் மாற்றேலாது என்பது போல் பிறவிக்குணம்,இன,மண் குணம் ஒன்று உள்ளது என்பதை இனிமேலும் நம்புவோமாக.

கடவுள் இருக்கான் கோஷான்  :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை ஐரோப்பா + யூகே விரைவில் கீழ் கண்ட இரு வழிகளில் ஒன்றை தேர்ந்து எடுக்க நிர்பந்திக்கப்படும்.

1. இனிமேல் வெளிநாட்டவர் வருகைகை  இல்லாது ஆக்கல்.

2. மேலே உள்ளதை செய்வதோடு - இப்போ வந்து உள்ளோரையும் (நாம் எல்லோரும்) நாடு திருப்பல்.

மிதவாத வலது, இடது சாரிகள் 1ம் தீர்வை இறுக்கமாக அமல் படுத்தினால் 2 நடைமுறைக்கு வராமல் தடுக்கலாம்.

இது தவறின்,

AfD, லெபென், Britain First போன்ற கட்சிகள் ஆட்சி ஏறி 2ம் தீர்வை நடைமுறைப்படுத்தும்.

இது - நடக்காது, சாத்தியமில்லை என நாம் வாழாவிருக்க முடியாது. பிரெக்சிற் எல்லாருக்கும் ஒரு நல்ல wake-up call.

தீவிரவாத கட்டிசிகள் சட்டம் இயற்றும் இயலுமையை பெற்று விட்டால் - எதுவும் சாத்தியமே.

குப்பன் சுப்பன்ரை கிணத்திலை தண்ணி அள்ள வாறான் எண்டால்......குப்பனுக்கும் ஒரு கிணத்தை கட்டி குடுத்தால் என்ன? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

கொண்ட கோலத்தை குருவாலும் மாற்றேலாது என்பது போல் பிறவிக்குணம்,இன,மண் குணம் ஒன்று உள்ளது என்பதை இனிமேலும் நம்புவோமாக.

கடவுள் இருக்கான் கோஷான்  :rolling_on_the_floor_laughing:

🤣 அப்படி எண்டால் அதே வரிசையில் பிறவி, இன, மண் குணம் போல …சமயம்…சாதிக்கும் ஒரு குணம் இருக்கும் என்பதை ஏற்க வேண்டி வரும்.

ஆகவே இதில் எனக்கு உடன்பாடில்லை.

அவர்கள் 100 வருடம் குடியேறிகளாக இருந்தாலும், பல விடயங்களில் இரெண்டாம் தர குடிகளாகவே நடத்தபடுகிறார்கள்.

நம்மை போல - ஊரிலேயே கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கும் சமூகங்களும் அல்ல. ஆகவே நாம் முன்னேறியது போல அன்றி…இந்த நாடுகளில் அவர்கள் வந்த காலத்தில் இருந்து ghetto களிலேயே தங்கி விட்டார்கள்.

அடுத்த, அடுத்த சந்ததிகள்…இவர்கள் இன்னொரு நாட்டில் வாழ்கிறோம் என்ற எண்ணம் இல்லை. இருக்கதுதானே. ஆகவே அதிகாரத்தின் மீதான பயம் விலகியதும்…பணம் பார்க்கும் தொழிலாக போதை வியாபாரம் போன்றவற்றில் இறங்குகிறார்கள். கூடவே பொருளாதார மந்த நிலை, சேவை வெட்டு போன்றவர்றால் பாதிக்கபடுவதும் இந்த நிலை மக்களே எனும் போது— ஒரு சின்ன நிகழ்வு - பெரிய அளவில் வெடித்து கிளம்பிவிடுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

🤣 அப்படி எண்டால் அதே வரிசையில் பிறவி, இன, மண் குணம் போல …சமயம்…சாதிக்கும் ஒரு குணம் இருக்கும் என்பதை ஏற்க வேண்டி வரும்.

இல்லை.
சாதி என்பது இன்னொரு இனத்தால் உருவாக்கப்பட்டது. மண்ணின் மகிமையால் அல்ல.
முதலில் பார்ப்பனியரை அடித்து துரத்துங்கள் மிகுதி சுபமே.

10 minutes ago, goshan_che said:

அவர்கள் 100 வருடம் குடியேறிகளாக இருந்தாலும், பல விடயங்களில் இரெண்டாம் தர குடிகளாகவே நடத்தபடுகிறார்கள்.

நம்மை போல - ஊரிலேயே கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கும் சமூகங்களும் அல்ல. ஆகவே நாம் முன்னேறியது போல அன்றி…இந்த நாடுகளில் அவர்கள் வந்த காலத்தில் இருந்து ghetto களிலேயே தங்கி விட்டார்கள்.

இரண்டாம் தர குடிகளுக்கு படிப்பறிவை போதிக்க அன்றைய இன்றைய பிரான்ஸ் அரசுகள் தவறி விட்டதாகவே  நான் கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

குப்பன் சுப்பன்ரை கிணத்திலை தண்ணி அள்ள வாறான் எண்டால்......குப்பனுக்கும் ஒரு கிணத்தை கட்டி குடுத்தால் என்ன? :cool:

இதைதான் மனித குலத்தின் மிக பெரும் சிந்தனையாளன் என கூறப்படும் ஜேர்மானியன் மாக்ஸ் கூறினார்.

ஆனால் மனித இயல்பு இந்த சிந்தனைக்கு இடம் கொடாது.

ஏழையும், பணக்காரனும், ஏழை நாடும், பணக்கார நாடும் - மனித இனம் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும்.

இது கூர்ர்பு சம்பந்த பட்ட விடயம் என நான் கருதுகிறேன். 

தக்கன பிழைக்கும். ஆனால் தக்கன பிழைக்க, அல்லன மடிய வேண்டும் இல்லையா.

ஆகவே எப்போதும், தக்கனவும், அல்லனவும் இருந்து கொண்டே இருக்கும்.

நாம் மனிதர்களின், நாடுகளின் சுயநலம்சார் நடவடிக்கை என மேலோட்டமாக பார்ப்பது - இந்த அடிப்படையில் அமைந்த ஒன்றையே.

அமெரிக்கா, ஈயூ, யூகே, அவுஸ்-நியூசி, ஜப்பான் - செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் - வேறு ஏதோ நாடுகள் பல வறுமையில் உழன்றே ஆக வேண்டும். 

சுப்பனுக்கு கிணறு இருக்க வேண்டும் என்றால், குப்பனுக்கு கிணறு இருக்க முடியாது.

இருவருக்கும் கிணறு கிண்டும் அளவுக்கு நிலத்தில் நீர் இருந்தாலும், மனித இயல்பு, அதை அனுமதிக்காது. சுப்பன் இரெண்டு கிணறு கிண்டாலாமே ஒழிய சுப்பன் ஒரு கிணறு கிண்ட முடியாது.

ஆங்கிலத்தில் greed என்பார்கள். பேராசை என்பது அதன் முழு பரிமாணத்தையும் சொல்லாது.

மனித குலமே இந்த greed இல்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதனால்தான் வழி நடத்தபடுகிறது. 

6 minutes ago, குமாரசாமி said:

இரண்டாம் தர குடிகளுக்கு படிப்பறிவை போதிக்க அன்றைய இன்றைய பிரான்ஸ் அரசுகள் தவறி விட்டதாகவே  நான் கருதுகின்றேன்.

ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் கலவரத்தின் போது பிரான்ஸில் தற்காலிக குடியிருப்பு தேடி நுழைந்த இஸ்லாமியர்களால் குடியிருப்பு கட்டிடம் முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

பிரான்சில் குழப்பம் மற்றும் அழிவு.

கலவரக்காரர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர், கார்கள் மற்றும் கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.

தெற்கு பாரிஸ் புறநகர் பகுதியில், உள்ளூர் மேயரின் வீட்டிற்கு தீ வைக்க முயன்ற தாக்குதல்காரர்கள் தப்பியோடிய அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மீது ராக்கெட்டுகளை வீசினர்.

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம்!! இந்த கலகக்காரர்களுக்கு மரங்களாலும் பிரச்சனையா?? 😡

அகதிகள் வரவேற்கப் படுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைகளை நிறுத்துங்கள் -பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி வேண்டுகோள்

03 JUL, 2023 | 12:07 PM
image
 
பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி தனது பேரனின் உயிரிழப்பை தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலைகளை சேதப்படுத்தவேண்டாம்,பேருந்துகளை சேதப்படுத்தவேண்டாம் தாய்மார்களே பேருந்தினை பயன்படுத்துகின்றனர் என பிரான்ஸ் தலைநகரில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் மேர்சூக்கின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

nahel1.jpg

நடியா என தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவர் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜன்னல்களை பேருந்துகளை பாடசாலைகளை சேதப்படுத்தாதீர்கள் எங்களிற்கு அமைதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பேரனை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து மீது தான் கடும்கோபத்தில் உள்ளதாகவும் எனினும் பொலிஸார் மீது பொதுவாக எந்த கோபமும் இல்லை என தெரிவித்துள்ள அவர் பிரான்சின் நீதிஅமைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159101

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இரண்டாம் தர குடிகளுக்கு படிப்பறிவை போதிக்க அன்றைய இன்றைய பிரான்ஸ் அரசுகள் தவறி விட்டதாகவே  நான் கருதுகின்றேன்.

தவறு

அப்படியானால் எமது அடுத்த தலைமுறை எப்படி படித்தது????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வன்முறைகளை நிறுத்துங்கள் -பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி வேண்டுகோள்

03 JUL, 2023 | 12:07 PM
image
 
பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது இளைஞனின் பாட்டி தனது பேரனின் உயிரிழப்பை தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலைகளை சேதப்படுத்தவேண்டாம்,பேருந்துகளை சேதப்படுத்தவேண்டாம் தாய்மார்களே பேருந்தினை பயன்படுத்துகின்றனர் என பிரான்ஸ் தலைநகரில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் மேர்சூக்கின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்

nahel1.jpg

நடியா என தன்னை அடையாளப்படுத்தியுள்ள அவர் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜன்னல்களை பேருந்துகளை பாடசாலைகளை சேதப்படுத்தாதீர்கள் எங்களிற்கு அமைதி வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பேரனை கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து மீது தான் கடும்கோபத்தில் உள்ளதாகவும் எனினும் பொலிஸார் மீது பொதுவாக எந்த கோபமும் இல்லை என தெரிவித்துள்ள அவர் பிரான்சின் நீதிஅமைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159101

ஆனால் இறந்த பையனின் தாய்…
பல போராட்டக்காரர்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களை உற்சாகப் படுத்தும்
காணொளிகள் இணையத்தில் உள்ளதை பார்த்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

தவறு

அப்படியானால் எமது அடுத்த தலைமுறை எப்படி படித்தது????

விசுகர்! இஞ்சை ஜேமனியிலை பிள்ளை பள்ளிக்கூடம் போகாட்டில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் வந்து கதவை தட்டுவார்கள் அல்லது பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து கொண்டு போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! இஞ்சை ஜேமனியிலை பிள்ளை பள்ளிக்கூடம் போகாட்டில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் வந்து கதவை தட்டுவார்கள் அல்லது பிள்ளையை பெற்றோரிடமிருந்து பிரித்து கொண்டு போய் விடுவார்கள்.

இங்கேயும் அப்படி தான் அண்ணா

ஆனால் படிப்பு என்பது அவ்வளவு இலகுவானது அல்லவே?

அப்படியே படிப்பு சரி வராது விட்டாலும் தொழிற்கல்வி பயிற்சி விளையாட்டு கலை இசை அது இது என்று ஏராளமான விடயங்கள் அத்தனையும் இலவசம். வயசு எத்தனை ஆனாலும்......

இன்று உலக பந்து கதாநாயகனாக இருக்கும் Kylian Mbappé  இந்த பகுதியில் பிறந்த இரண்டு இன கலவை தானே. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் ஆண்டு 12 வரை (K12) கல்வி இலவசம். அதுவும், வறுமை, பசி குடும்பத்தில் இருந்தால் இலவசமாக உணவும், கல்வி உபகரணங்களும் கொடுப்பார்கள். மாணவர்கள் செய்ய வேண்டியது பள்ளிக்கூடம் போக வேண்டியது தான். விசுகர் சொல்வது போல எல்லாருக்கும் முறைசார் கல்வி (aka விசுக்கோத்துப் படிப்பு?😎) ஒத்துவராது, வெற்றி பெற இயலாது தான். ஆனால், பள்ளிக்கூடங்களில் இருக்கும் ஆலோசனைத் திட்டங்கள் இதைக் கண்டறிந்து மாணவர்களை உரிய வழியில் நகர்த்துகின்றன. 

இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் ஒருவன் பள்ளிக்கூடத்திற்குக் கிரமமாகப் போக வேண்டும். இந்த அடிப்படை விடயத்தில் ஒருவர் ஒழுக்கத்தைப் பேண முடியவில்லையென்றால் இந்த இளைஞன் போல உயிரை இழக்கும் ஆபத்துக்கள் பல மடங்காக அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

இங்கே பல்கலைக்கழகம்

அதனைத்தொடர்ந்து எந்த உயர்திறன் படிப்பும் (Spécialité)  இலவசம்

அது  மட்டுமல்ல செலவுக்கு  பணமும்  மாதாமாதம்  தருவார்கள்

அல்லது  படிப்பை  பொறுத்து 

அரை நாள்  வேலை அரை  நாள் படிப்பு

இதற்கு  வயதெல்லையே  கிடையாது

நான் மக்களுக்கு  அடிக்கடி  சொல்வதுண்டு

இதனை  பயன்படுத்தி  நீங்கள் படிக்கவில்லை  என்றால்  உங்களைப்போல்  முட்டாள்கள்  எவருமில்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கேயும் அப்படி தான் அண்ணா

ஆனால் படிப்பு என்பது அவ்வளவு இலகுவானது அல்லவே?

அப்படியே படிப்பு சரி வராது விட்டாலும் தொழிற்கல்வி பயிற்சி விளையாட்டு கலை இசை அது இது என்று ஏராளமான விடயங்கள் அத்தனையும் இலவசம். வயசு எத்தனை ஆனாலும்......

இன்று உலக பந்து கதாநாயகனாக இருக்கும் Kylian Mbappé  இந்த பகுதியில் பிறந்த இரண்டு இன கலவை தானே. 

ஆமாம் உண்மை பெற்றோர்  அரசாங்கம்   ஆல்  மட்டும்   கல்வியை கொடுத்து விட முடியாது   படிப்பவரும். ஆர்வத்துடன் படித்தால் மட்டுமே படிக்க முடியும்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.