Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


 

123296200_114908317082159_3918758951704959641_n.jpg

ஓகஸ்ட் 29, 1995 அன்று 'ஐரிஸ் மோனா' பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை அன்று காலையில் கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் வோட்டர் ஜெட் படகு

 

"... வல்வையில் முதன்முதல் எடித்தாராவை
வல்லவர் கடற்புலி இடித்தார் இவை
வண்டியில் போனது சக்கையடி,
வந்த பகைப்படை புக்கையடி!"

--> போர்க்கால இலக்கியப் பாடல்

இவை தமிழீழத் தேசப்பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் கரும்புலிகள் பற்றிப் பாடப்பட்ட போரிலக்கியப் பாடலொன்றின் வரிகளின் நடுவிலுள்ள கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலையும் சிங்களக் கடற்படையின் கலமொன்று முதன்முதலில் சேதமானதையும் குறித்த வரிகளாகும்.

கடற்புலிகளால் 1990 ஆம் ஆண்டு தொட்டு சிங்களக் கடற்படையின் பல்வேறு கடற்கலங்கள் கைப்பற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் மூழ்கடிக்கப்பட்டும் வந்தன என்பது பலரும் அறிந்த ஒன்று.

இத்திரட்டான ஆவணத்தில் தமிழீழ விடுதலைக்காக நடந்த ஈழப்போரின் காலத்தில் தமிழீழக் கடற்பரப்பிலும் சிறிலங்காக் கடற்பரப்பிலும் சிங்களக் கடற்படையுடன் தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் மிண்டிய போது பகைவர் தரப்பில் சேதப்பட்ட, மூழ்கடிக்கப்பட்ட மற்றும் அவர்களிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள் பற்றியும் மோதல்களின் நிகழ்வு விரிப்பும் அதனால் இரு அடிபாட்டுக் கன்னைகளின் ஆளணியினரில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன், தமிழர் தரப்புத் தகவல்களாக.

இவ்வாவணத்தில் 1991ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19ம் நாள் வரை, அதாவது “கடற்புறா” அணி “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்” என்ற பெயரோடு தமிழீழக் கடற்படையாகப் பரிணாமம் பெற்றது வரை (கடற்புலிகள் மகளிர் பிரிவு 1992.03.01 அன்று தோற்றம் பெற்றது), கடலில் நடைபெற்ற சமர்கள் எல்லாம் கடற்புறா என்ற பெயரின் கீழ் பதிவிடப்பட்டுள்ளன. 'கடற்புலிகள்' என்ற பிடாரச்சொல்லானது 1986 நவம்பரிற்கு முன்னரே பாவனையிலிருந்தது குறிப்பிடத்தக்கது (நவம்பர், குரல் 11, விடுதலைப்புலிகள் இதழ்)..

சிறிலங்காவின் வான்படையிடமிருந்த மூன்று அவ்ரோ வழங்கல் வானூர்திகளில் இரண்டு 1995 ஆம் ஆண்டு ஏப்பிரல் 28 மற்றும் 29ம் திகதிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் யாழில் வன்வளைப்பிற்காக நிலைகொண்டுள்ள சிறிலங்கா படைத்துறைக்கு வான்வழி வழங்கல் செய்யும் திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த அடியால் யாழிற்கு வான்வழி வழங்கல் இனிமேல் நடைபெறாது என்று அப்போதைய சிறிலங்கா அதிபர் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இவ்வான்வழி வழங்கல் பாதை நிறுத்தப்பட்டதன் விளைவாக யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் வழங்கல் பாதையானது கடல் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடலில் மக்களின் பயன்பாட்டிற்கும் இடருதவிப் பொருட்களைக் கொணர்வதற்குமென யாழ் மாவட்ட அரச அதிபரால் அமர்த்தப்பட்ட கப்பல்கள் எல்லாம் படையினரால் கையகப்படுத்தப்பட்டு அவற்றில் இடருதவிப்பொருட்கள் என்ற பெயரில் படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் யாழிற்கு கொணர்ப்படுவது வாடிக்கையானது (உதயன்: 24/10/1995). ஆகையால் 1996 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான லோரன்ஸ் திலகர் அவர்கள், சிறிலங்கா படைத்துறையின் வழங்கல் பாதையை சிறிலங்காவின் நிலப்பரப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் புலிகள் குறிவைப்பார்கள் என்று பறைந்தார் (தமிழ்நெற்: Tigers target sea bridge, 11/07/1997). மேலும்,

"தமிழ் ஆட்புல கடற்பரப்பில் - வெளிநாட்டிற்குச் சொந்தமான அல்லது மறுவளமானது - சிறிலங்கா படைத்துறையுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் மிண்டும் எந்தவொரு கடற்கலமும் முறையான படைத்துறை இலக்குகளாக கருதப்படும் என புலிகள் ஏற்கனவே எழுதருகையிட்டுள்ளனர்."

என்றார். எனவே யாழிற்கான கடல்வழி வழங்கலை அறவே துண்டிப்பதற்காக 1997 ஜூலை 15 அன்று விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முறையான படைய இலக்குகளாகக் கருதப்படும் என்று அறிவித்ததோடு 

“மக்களுக்கான உணவு மற்றும் தேவைகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்திற்கு போர்த் தளவாடங்களை சிறிலங்கா படைத்துறை அனுப்புகிறது”

- உதயன்: 17/07/1997

என்றும் குற்றம் சாட்டினர். எவ்வாறெயினும் 1996 ஆம் ஆண்டு முதலே புலிகள் வழங்கல் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டனர்.

மேலும், 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி முதல் சிங்கள அரசால் மூடப்பட்ட ஏ9 வீதி வழியே முன்னர் யாழிற்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பொருட்கள் பின்னர் கடல் வழியாக எடுத்துச் செல்லப்படுமென்று - 12 ஆயிரம் தொன் உணவுப்பொருட்களாம் - சிறிலாங்கா அரசு பரப்புரை செய்தது. இவ்வீதி மூடப்பட்டதற்கான காரணமாக சிங்கள அரசு கூறிய சாட்டுகளில் ஒன்று புலிகளின் யாழ் மீதான (விடுவிப்புப்) படையெடுப்பு தொடங்கியதால் - ஓகஸ்ட் 11ம் திகதி - என்பதாகும். ஆனால் அது தொடங்கிய கையோடு அதையே சாட்டாக வைத்து மூடிவிட்டு படையெடுப்பு கைவிடப்பட்ட பின்னரும் - ஓகஸ்ட் 19ம் திகதி மட்டில் - மூடல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடல்வழியே உணவுப்பொருட்களும் மக்களின் கடல் போக்குவரவும் என்ற போர்வையின் கீழ் சில பொதுமக்களோடு கப்பல்களில் சிங்களப் படைகளுக்கான படைக்கலன்கள், போர்த்தளவாடங்கள் மற்றும் படையினரே திருமலையிலிருந்து யாழிற்கும் யாழிலிருந்து திருமலைக்குமென மெய்யில் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று பொதுமக்கள் வழங்கிய நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தனர் (உதயன்: 21/02/2007) என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு 1996 அம் ஆண்டு முதல் உண்மைக்குப் புறம்பான போர்வையின் கீழ் பயணித்த போது கடற்புலிகளால் குறிவைக்கப்பட்ட மற்றும் அதனால் அழிபட்ட சில கப்பல்களையும் கைப்பற்றப்பட்டு பின்னர் ஒப்படைக்கப்பட்டவற்றையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளேன். 

ஆவணத்தை வாசகர் வாசிக்கத் தொடங்கு முன்னர் இன்னுமொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.

பொதுவாக ஈழப்போர்க் காலத்தில் பாதுகாப்புச் சிக்கலாலும் தமது ஆளணி எண்ணிக்கையினை பகைவர் எடைபோடக்கூடும் என்பதாலும் தவிபு எந்தவொரு சமரிலும் தம் தரப்பில் காயப்பட்டோரின் எண்ணிக்கையினை அறிவித்ததில்லை. ஆகையால் கடற்சமர்களிலும் கடற்புலிகள் தரப்பில் காயப்பட்ட போராளிகளின் விரிப்பானது அறியப்பெறவில்லை. 

இதே போன்று கடற்சமர்களில் கடற்புலிகளின் படகுகள் (வழங்கல் வண்டிகளாயினும் சரி, சண்டைவண்டிகளாயினும் சரி) ஏதேனும் மூழ்கடிக்கப்பட்டால் அது தொடர்பான தமிழர் தரப்பின் தகவல்கள் எங்கேனும் பெறக்கூடியவாறு உள்ளது. அவ்வாறு 1995 ஆம் ஆண்டின் இறுதிவரை மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் படகுகள் பற்றிய தகவல் முற்றாக எடுத்துவிட்டேன். ஆனால் அதற்குப் பிந்தைய காலத்தியவையில் சிலதே கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் தமிழரின் கட்டளையாளர்களோ அல்லது முக்கியமானவர்களோ வீரச்சாவடைந்திருந்தால் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. வீரச்சாவுகள் நிகழாமல் மூழ்கடிக்கப்பட்ட எந்தவிதமான படகுகள் பற்றிய செய்தியும் கிடைக்கப்பெறவில்லை. சிறு குறிப்புக்கூட இல்லை. 

கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்பட்ட கடற்சமர்களின் போது கடற்புலிகளின் வண்டிகள் (கடற்புலிகளின் படகுகள் வண்டிகள் என்றே அழைக்கப்படும்) ஏதேனும் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பான தகவல்உயிராயுதம்நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது; அதாவது கடற்புலிகளே தம் இழப்பினை அறிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறான கடற்சமர்களின் போதுகூட சேதப்பட்ட படகுகளின் விரிப்பு அங்குகூட அறிவிக்கப்பட்டதில்லை. 

தமிழர் தரப்பில் சேதப்பட்ட அ மூழ்கடிக்கப்பட்ட படகுகளின் எண்ணிக்கையை சிங்களப் படைத்தரப்புச் செய்திகள் யாவும் நம்பவியலாத அளவிற்கு அள்ளுகொள்ளையாக ஏற்றிக் காட்டியுள்ளன, குறிப்பாக 2006ம் ஆண்டில் பல தடவைகள்; 14 படகுகளை தாம் ஒரே கடற்சமரில் மூழ்கடித்ததாக சிறிலங்கா தேசிய ஊடகமொன்று 10/11/2006 (உதயன் வழியாக) அன்று செய்திவெளியிட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும். இதுபோன்ற சிங்களப் படைத்துறையின் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவலைப் பற்றி பரவலறியான சிங்களச் சார்புக் கொழும்புப் படையப் பகுப்பாய்வாளர் திரு. இக்பால் அத்தாஸ் அவர்கள் பம்பலாகப் பின்வருமாறு கூறியிருந்தார்.

"கடந்த காலத்தில், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலைமையகம் அதிகமான பகை இழப்புகளை வெளியிட்டதாக அறியப்படுகிறது. இந்தப் புள்ளி விரிப்புகளைச் சேர்த்தால், பிரிவினைவாதப் போரின் முழுக் காலத்திலுமானதை, அது புலிகளின் ஆளணி வலுவை விட அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாது யாழ்ப்பாணக் குடாநாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியையும் கொண்டிருக்கும் என்ற கருத்துக்குறிப்புகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தது."

- சன்டே ரைம்ஸ், மார்ச் 30, 1997 (Navy's moment of glory in Mullaitivu seas)

ஆகவே  சிங்களக் கடற்படைக்கு இழப்புக்கள் ஏற்பட்ட கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் வண்டிகள் பற்றிய தகவலை - என்னால் உறுதிப்படுத்தப்பட்டவை - மட்டுமே இவ்வாவணத்தில் வெளியிட்டுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் கிடக்குமாயின் இவ்வாவணத்தில் இற்றைப்படுத்துகிறேன் (update). இல்லையேல் அதை தனியான ஒரு ஆவணமாக வெளியிட முயற்சிக்கிறேன்.



******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிறிலங்காக் கடற்படையின் கடற்கலங்கள்

 

ஈழப்போரின் கடற்சமர்களில் சிங்களவரின் பல வகுப்பைச் சேர்ந்த பல கடற்கலங்கள் தொடர்ந்து மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் ஒரே கடற்கலத்தின் படிமத்தை மீளப் பதிவிடும் போது பதிவு நீளமாகும் என்பதால் பொதுவாக அனைத்து உட்கரைச் சுற்றுக்காவல் படகுள் மற்றும் விரைவுத் தாக்குதல் கலங்கள் ஆகியவற்றின் வகுப்புப் பெயர்களையும் படிமங்களையும் இம் மறுமொழிப் பெட்டிக்குள் பதிவிட்டுள்ளேன். இங்கே ஈழப்போரின் போது பயன்படுத்தப்பட்டவை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன. இதனை ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு மேற்சென்று வாசிப்பது தகவல்களை வாசிக்கும் போது படகுகளின் படிமங்களை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்த உதவும் என்று நம்புகிறேன்.

 

 

உட்கரைச் சுற்றுக்காவல் கலங்கள் (Inshore Patrol Crafts):-

 

  • வோட்டர் ஜெட் (Water Jet) 

Water Jet class

படிமப்புரவு: Unknown

Water Jet class boat (Captured by Sea Tigers from Mandaitivu)

இப்படிமத்தில் நீங்கள் காணும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மண்டைதீவிலிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும் | படிமப்புரவு: Tamil Tigers

 

  • சீ கார்ட் (Sea Guard)

Sea Guard class boat

படிமப்புரவு: navy.lk

 

  • கே-71 (K-71)

main-qimg-776c36a5c694875ebf2cb8b5c31c04fe.jpg

இது சிறிலங்காக் கடற்படையிடமிருந்து கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட படகாகும். படிமம் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்டது ஆகும். | படிமப்புரவு: Youtube.com

 

  • கே-72 (K-72)

class name unkown boat of Sri Lankan navy

படிமப்புரவு: CharithMania.Blogspot.Com

 

  • வேவ் ரைடர் (Wave Rider)

இவை பருத்தித்துறை துறைமுகத்தில் 2007 மே மாதம் மூழ்கிப் பின்னர் சிங்களக் கடற்படையால் மீட்டெடுக்கப்பட்ட கடற்புலிகளின் 'இந்துமதி' என்ற கலப்பெயரைக் கொண்ட வேவ் ரைடர் (கல்லப்படாதது) வகுப்புச் சண்டைப்படகினை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. 2008 முதல் சமரிற்கு கொண்டுவரப்பட்டது .

SLN's Wave Rider class - improvised copy version of TEN's Wave Rider class

படிமப்புரவு: prokerala.com

 

  • கூகர் (Couger)

Cooger top view.png

Cooger class boat.jpg

படிமப்புரவு: Youtube.com

 

 


கரையோரச் சுற்றுக்காவல் கலங்கள் (Coastal Patrol crafts):

  • சவட்டன் (Cheverton) 

Cheverton class boat

படிமப்புரவு: Navypedia.org

 

  • கொழும்பு டொக்யார்ட் சவட்டன் (Colombo Dockyard Cheverton)

1994  p-201 - Colombo Cheverton class

படிமப்புரவு: Navypedia.org

Colombo Cheverton class boat - copy

படிமப்புரவு: Navypedia.orgColombo Cheverton class - Copy of Cheverton class boat

படிமப்புரவு: Unknown

 


வேகத் தாக்குதல் கலங்கள் (Fast Attack Crafts):-

 

  • சீ சென்ரினெல் (Sea Sentinel)

இவை போன்ற தோற்றமுடிய கடற்கலங்கள் உள்நாட்டிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை கொழும்பு டொக்யார்ட் சீ சென்ரினெல்கள் எனப்படும்.

Simonneau Class.jpg

படிமப்புரவு: Unknown

 

  • றினிட்டி மரைன் (Trinity Marine)

Trinity Marine

படிமப்புரவு: theguardian.com

 

  • சால்டாக் விதம் 2 (Shaldaq Mk-2)

shaldag class boat sri lankan navy

படிமப்புரவு: navy.lk

 

  • கொழும்பு டொக்யார்ட் டோறா எ பேபி டோறா (Colombo Dockyard Dvora/ Baby Dvora) : 
  • விதம்-1, 2, 3, 4, 5 (Mark-1, 2, 3, 4, 5)

இவை இசுரேலியர்களின் சால்டாக் வகுபுப் படகுகளை மாதிரியாகக் கொண்டு உள்நாட்டில் கட்டப்பட்டனவாகும்.

Baby Dvora (Copy of Isralie Shaldaq class)

Baby Dvora (Copy of Isralie Shaldaq class).jpg

படிமப்புரவு: navy.lk

 

  • டாபர் (Dabur)

Dvora class/ Super Dvora Mark-1 Sri Lanka

படிமப்புரவு: navy.lk

 

  • டோறா (Dvora)/ சுப்பர் டோறா விதம்-1 (Super Dvora Mark-1)

(படிமம் கிடைக்கப்பெறவில்லை)

 

  • சுப்பர் டோறா விதம்-2 (Super Dvora Mark-2)

Super Dvora mk 2 Sri Lanka.jpg

படிமப்புரவு: AFP images

 

  • சுப்பர் டோறா விதம்-3 (Super Dvora Mark-3)

Super Dvora Mk 3

படிமப்புரவு: navy.lk

 

  • கில்லர் (Killer)

Killer Class FAC.jpg

படிமப்புரவு: Unknown

 


சிறப்புப் படகுச் சதளத்தின் படகுகள் (Boats of Special Boat Squadron):-

 

  • இறப்பர் படகுகள் (Rubber Boats)

உள்நாட்டில் கட்டப்பட்ட இறப்பர் படகுகள்.

SBS Javelins.jpg

படிமப்புரவு: Sri Lanka Navy

 

  • அதிவிறைப்பான கலக்கூட்டு உப்பயானம்/ Rigid Hull Inflatable Boats (RHIBs)

SBS Javelins.jpg

படிமப்புரவு: Sri Lanka Navy

 

  • எஸ்.பி.எஸ். ஜாவலின் (SBS Javelin)

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட இறப்பர் படகுகள்.

 

  • அரோ (Arrow):

இவை சுற்றுக்காவலுக்கும் தாக்குதலிற்கும் பாவிக்கப்படும் வேகப் படகுகளாகும். இவை தலைநகர் திருமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் 16 அடி நீள மாதிரிப் படகு ஒன்றை 2006 இல் எடுத்துச்சென்று மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் உருவாக்கப்பட்டவையாகும்.

ஈழப்போர் முடிந்த பின்னர் இவை செட்ரிக் (Cedric) வகுப்புப் படகுகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டன.

Arrow boats or Cedric Boats.jpg

படிமப்புரவு: Sri Lanka Navy

களவாடிச் செல்லப்பட்ட கடற்புலிகளின் படகின் வகுப்புப் பெயர் 'சுப்பர் சொனிக்' என்று அறிகிறேன். அவற்றின் படிமங்கள் இதோ:

main-qimg-0573c25d03661aaf9203a8dac2087a23.jpg

கலப்பெயர்: சிதம்பரம் (இ), ஜெயந்தன் (வ). இவை இரண்டாம் கடற்கரும்புலிகளின் நினைவாய் சூட்டப்பட்ட கலப்பெயர்கள் ஆகும். இப்படகுகளின் வெள்ளோட்டத்தின் போது இப்படிமம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று துணிபுகிறேன், சிதம்பரத்தின் அணியத்தில் உள்ள மாலையை நோக்கும் போது | படிமப்புரவு: Tamil Tigers | காலம்: 1992-1995

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளால் தாக்கப்பட்ட சிங்களக் கடற்கலங்கள் | ஆவணம்
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட, கைப்பற்றப்பட்ட சிங்களக் கடற்கலங்கள் | ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒவ்வொரு மறுமொழிப் பெட்டியினுள்ளும் ஒவ்வொரு ஆண்டிலும் சிங்களக் கடற்படையுடனான கடற்சமர்களில் அவர்களின் கடற்கலங்கள் ஏதேனும் சேதப்பட்டோ மூழ்கடிக்கப்பட்டோ அல்லது கைப்பற்றப்பட்டோ இருப்பின் அக்கடற்சமர் மட்டும் பற்றிய விரிவான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தவொரு கடற்சமரில் சிங்களக் கடற்கலங்களுக்கு எதுவிதச் சேதமும் ஏற்படவில்லையெனில் அக்கடற்சமரின் பற்றியம் தவிர்க்கப்பட்டுள்ளது.  வெகுசில கடற்சமர்கள் தொடர்பான முழுத் தகவலும் கிடைக்கப்பெற்றிருப்பதால் அவற்றிற்கான யாழ் கருத்துக்களக் கொழுவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சொடுக்கி முழு வரலாறையும் வாசித்தறிக. மேலும், ஈற்றில், ஒவ்வொரு ஈழப்போரிலும் சிங்களக் கடற்படை இழந்த கடற்கலங்களின் எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையான ஆண்டை கீழே உள்ள பட்டியலில் சொடுக்கினால் அது உங்களை குறித்த ஆண்டுள்ள மறுமொழிப்பெட்டிக்கு எடுத்துச் செல்லும். இதன் மூலம் இவ்வாவணத்திற்கான உங்களின் அணுகல் இலகுவாகும். தேடிய அலைய வேண்டியதில்லை.

இனி ஒவ்வொரு கடற்றாக்குதல்களையும் பட்டியல் வடிவில் காண்போம்.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1986

 

 

  • திகதி: பெப்ரவரி 7, 1986
  • அடிபாட்டுக் காலம்: காலை 10:00 மணியளவில்
  • நிகழ்வு இடம்: கடற்கோட்டைக்கும் காரைநகர் கடற்படை முகாமிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் காரைநகர் கடற்படை முகாமிற்குச் சொந்தமான கடற்கலம் ஒன்று விடுதலைப்புலிகளால் அக்கடற்பரப்பில் விதைக்கப்பட்டிருந்த கடல் கண்ணிவெடியில் சிக்கிச் சேதமடைந்தது. இக்கடற்கலத்தை ஏனைய கடற்கலங்கள் மற்றும் உலங்குவானூர்தியின் துணையுடன் மிகுந்த சிரமங்களுக்கு நடுவணிலும் சிறிலங்காக் கடற்படை மீட்டதாக புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அன்றைய உதயன் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் சிறிலங்காக் கடற்படைக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் தொடர்பில் தகவல் இல்லையென்று விடுதலைப்புலிகள் மாதயேடு செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தடவையாக நவீன முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இது" என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக உதயன் செய்தியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் எவ்வகையான தாக்குதலிலும் சேதமடைந்த முதலாவது கடற்கலம் இதுவே என்பது வரலாற்றுத் தகவல் ஆகும்.  
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: அறியில்லை
    • கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 09/02/1986 | விடுதலைப்புலிகள்: ஏப்ரல், 1986

 


 

  • திகதி: மே 19, 1986
  • அடிபாட்டுக் காலம்: பிற்பகல்
  • நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறை கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இத்தாக்குதல் தொடர்பில் 20ம் திகதி புலிகள் 'உதயன்' நாளேட்டிற்கு அளித்த ஊடக வெளியீட்டில், குறித்த கடற்பரப்பிற்கு சிறிலங்கா கடற்படையின் கடற்படை 'போர்க்கப்பல்' ஒன்று வந்தது. அதிலிருந்து கரைக்கு வந்த சிறிய சுற்றுக்காவல் படகு ஒன்று தமது 'உந்துகணைத்' தாக்குதலில் தீப்பற்றி எரிந்து நிர்மூலமானதாம். சுடுகலப் படகு ஒன்று தகர்க்கப்பட்டதாம். மற்றொரு சுற்றுக்காவல் படகு பாரிய தாக்குதலிற்குள்ளானதை அடுத்து அனைத்துக் கப்பல்களும் பின்வாங்கினவாம். ஆனால், 'விடுதலைப்புலிகள்' என்ற புலிகளின் அலுவல்சார் மாதயிதழின் சூலை 1986 பதிப்பில் இத்த்தாக்குதலின் போது மூன்று பீரங்கிப் படகுகளும் ஒரு 'போர்க்கப்பல்' உம் சேதமடைந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தகவல்கள் இவ்வாறு ஒன்றிற்கு ஒன்று முரணாக இருப்பதால் நான் இறுதியாக புலிகளின் அலுவல்சார் மாதயிதழில் வெளியான தகவலை அறுதியான தகவலாக எடுத்துக்கொள்கிறேன்.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 4
    • கடற்கலப் பெயர்: அறியில்லை
    • கல வகை: பீரங்கிப்படகுகள் - 3
    • கல வகை: போர்க்கப்பல் - 1
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த புலிகள்: இழப்பில்லை
  • ஆதாரம்: உதயன்: 20/05/1986 | விடுதலைப்புலிகள்: சூலை, 1986

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1990

 

 

  • திகதி: சூன் 15, 1990
  • அடிபாட்டுக் காலம்: காலை வேளை
  • நிகழ்வு இடம்: தலைமன்னார் பழையபாலம் இறங்குதுறை
  • நிகழ்வு விரிப்பு: தலைமன்னார் கோட்டை காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் பழையபாலம் இறங்குதுறை பரப்பில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீது காலை வேளையில் விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். சமரின் முடிவில் கடற்படை முகாம் விடுதலைப்புலிகள் வசமானது. அப்போது அங்கே தரித்து நின்ற படகொன்று புலிகளால் தாக்கப்பட்டு அதிலிருந்த படைக்கலன்களும் படைய ஏந்தனங்களும் கைப்பற்றப்பட்டதுடன் படகும் மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் ஒட்டு மொத்த தலைமன்னாரும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்அறியில்லை
    • கல வகை: சுடுகலப் படகு
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்: வீரவேங்கை புலொமின்

ஆதாரம்: உதயன்: 16/06/1990 | ஈழநாதம்: 16/6/1990

 


  • திகதி: சூன் 16, 1990
  • அடிபாட்டுக் காலம்: பகல் வேளை
  • நிகழ்வு இடம்: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாம்
  • நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறை ஹாபர் வியூ படைமுகாமில் தரித்து நின்று கரையோரப் பரப்புகள் மீது சுட்டுக்கொண்டிருந்த கப்பல் மீது தவிபு இனர் மேற்கொண்ட உந்துகணைத் (rocket/unguided missile) தாக்குதல்களில் அக்கப்பலின் இயந்திர அறை, கணினி கட்டுப்பாட்டறை, மற்றும் கதுவீ (RADAR) என்பன உடைத்தெறியப்பட்டது. இத்தாக்குதலில் அதிலிருந்த கடற்படையினரில் 20 பேர் கொல்லப்பட்டனர் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் நாயகம் சிறில் ரணதுங்கா 23/06/1990 அன்று தெரிவித்தார். புலிகள் தரப்பில் தாக்குதலின் போது இழப்பேதுமில்லை. ஆனால் நடந்த எதிர்பாராத வெடிநேர்ச்சி ஒன்றில் 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
  • சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்அறியில்லை
    • கல வகை: (படைத்துறை) கப்பல்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 20 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 6 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் விவேகன், கப்டன் அன்சார், 2ம் லெப்டினன்ட் ஸ்ராலின், வீரவேங்கை கரன், வீரவேங்கை தவா, வீரவேங்கை சிறி

ஆதாரம்: ஈழநாதம்: 17&24 /6/1990, உதயன்: 17/06/1990

 


  • திகதி: சூலை 7, 1990
  • அடிபாட்டுக் காலம்: அறியில்லை
  • நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: யாழ் குடாநாட்டிலுள்ள சிறிலங்காப் படையினருக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் போர்த்தளவாடங்களையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காங்கேசன் துறைமுகத்திற்கு அருகில் நின்றிருந்த சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்தினர். இதில் கப்பல் சேதமடைந்தது. சேத விரிப்பு தெரியவில்லை. இத்தாக்குதலால் வழங்கல் முயற்சி தோல்வியடைந்து கப்பல் பின்வாங்கியது. இத பின்னர் அவ்விடத்திற்கு வந்த கடற்படைப்ப் படகு ஒன்று கடலில் நின்றபடி கரையோரப் பரப்புகள் மீது சுடுகலன் கொண்டு தாக்குதல் நடாத்தியது. ஆயினும், அப்பரப்பு மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டமையால் எவ்வித உயிர்ச்சேதம்மும் ஏற்படவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்கப்பல்
    • கல வகை: சுடுகலப் படகு
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை

ஆதாரம்: ஈழநாதம்: 9/7/1990

 


  • திகதி: சூலை 10, 1990
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 10:15
  • நிகழ்வு இடம்: வல்வெட்டித்துறைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இது வல்வெட்டித்துறையில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தனின் கட்டளையின் கீழ் அவர் உட்பட லெப் கேணல் அருச்சுனா மற்றும் கப்டன் தினேஸ் ஆகியோரை படகுக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 படகுகள் எடித்தாராவிற்குப் பாதுகாப்பாக நின்ற கடற்கலங்கள் மீது தாக்குதலைத் தொடுத்து அவற்றைத் திசைதிருப்பக் கடற்கரும்புலிகள் எடித்தாரா மீது மோதியிடித்தனர். இத்தாக்குதலை தேசியத் தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறைக் கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்திக் கட்டளைகளை வழங்க கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் மற்றும் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் எ புலேந்திரன் ஆகியோர் தேசியத் தலைவரின் அருகிலிருந்து அக்கட்டளைகளுக்குச் செயல்வடிவம் தந்தனர். இந்நடவடிக்கைக்கான மேலதிக வேலைத் திட்டங்களை தண்டையல் கப்டன் மோகன் மேத்திரி தலைமையிலான அணி செவ்வனவே செய்து தந்திருந்தது குறிப்பிடத்தக்கது. போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: எடித்தாரா
    • கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல்
    • படிமம்:

ediththara (2).png

படிமப்புரவு: சிறிலங்காக் கடற்படை

editara-ship.webp

படிமப்புரவு: தவிபு

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: பலர்
    • காயப்பட்டோர்: பலர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் 
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உயிராயுதம்-1 | உதயன்: 12/07/1990 | கட்டுரை: எடித்தாரா மீதான முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு | கரும்புலி காவியம் பாகம் - 1

 


  • திகதி: செப்டெம்பர் 13, 1990
  • நிகழ்வு இடம்: யாழ் களப்பு (Jaffna lagoon)
  • நிகழ்வு விரிப்பு: சிறிலங்காப் படைத்துறையானது தவிபுவின் யாழ் கோட்டை முற்றுகையை முறியடித்து யாழ் நகரையே கைப்பற்றும் திட்டத்தோடு 13/09/1990 அன்று 'போட் (Fort) நடவடிக்கை' என்ற பாரிய படைய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. இது  முப்படைகளையும் ஒருங்கிணைத்து மண்டைதீவைக் கைப்பற்றி அங்கு நிலைபெறும் படையினரைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தரையிறக்க முயற்சியாகும். இதற்காக கஜபாகு கப்பல், 28 சுடுகலப் படகுகள் (வகுப்புப் பெயர் அறியில்லை), 4 சிறிய படகுகள், 20 சேணேவிகள், நான்கு தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் இரண்டு அவ்ரோ வானூர்திகள், இரண்டு "சீனச் சகடை" என்ற தமிழ்ப் பட்டப்பெயரைக் கொண்ட வை- 8, வை - 12 வானூர்திகள், ஆகக்குறைந்தது ஒரு சியாமா செட்டி உட்பட எட்டு வானூர்திகள் ஆகியன உடன் கஜபாப் படையணி மற்றும் சிங்கப் படையணிகளின் வீரர்களைக் கொண்ட 4000 தரைப்படையினர் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் குறித்த சமயத்தில் மண்டைதீவிலிருந்து கடற்படைப் படகுகள் மூலம் யாழ் கோட்டையை அண்மித்த வேளை கோட்டை வலுவெதிர்ப்பில் ஈடுபட்டிருந்த தவிபுக்கும் கடற்படையினருக்குமிடையே கடற்சமர் வெடித்தது. இந்தக் கடற்சமரில் கடற்படையினரின் படையெடுப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட போதிலும் சில படையினர் காயக்காரர்களோடு கோட்டைக்குள் சேணேவிகளையும் கொண்டு உள்நுழைந்தனர். இச்சமரில் கடற்படைப் படகுகள் சில மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு அறிவித்திருந்த போதிலும் சிங்களத் தரப்போ தம் தரப்பில் 6 படையப் படகுகள் சேதமடைந்தன என்று செய்தி வெளியிட்டிருந்தது. இச்சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் கரையிலும் கடலினுள்ளும் கிடந்தன. ஏனைய படையினர் மண்டைதீவுக்குப் பின்வாங்கினர். இதன் போது தரைப்படையினருக்கு உதவியாக வந்த வான்படையின் சியாமா செட்டி குண்டுவீச்சு வானூர்தி விடுதலைப்புலிகளால் கடலினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே சமயம் அற்றை நாளில் வான்படையினரின் அவ்ரோ வானூர்தி 10 "பொஸ்பரஸ்" குண்டுகளை யாழ்நகரில் மாலை 5 மணி முதல் 6 மணிவரை வீசியது. கடற்படைக்கு உதவியாக வந்த கஜபாகு கலம் மூலம் நான்கு சிறிய படகுகளில் படையினர் சிறுத்தீவு ஆத்துவாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நேரம் நீர் ஆழமின்மையால் கரைதட்டிக்கொண்டன. இவர்களை எதிர்கொண்ட தவிபு-க்கும் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தத்தில் சில படையினர் கொல்லப்பட்டிருக்கலாமென்று புலிகள் தெரிவித்தனர். இப்படகுகளைப் பாதுகாக்க மூன்று குண்டுதாரிகள் தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டன. அத்தோடு அப்படகுகளில் இரண்டை கடற்படையினர் மிகுந்த இடர்களுக்கும் நடுவணில் கட்டியிழுத்துச் சென்றனர். இரண்டை மாலை நான்கு மணியளவில் கடற்படையினர் வந்து கொண்டு சென்றனர். இச்சமரின் போது கோட்டைப் பரப்பிலிருந்து சிறிதளவு ஆயுதங்களும் படையத் தளபாடங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதே நேரம் யாழ் கோட்டை வாசலில் நடந்த சமரில்சலாமன்என்ற கவசப் பாரவூர்தி தகர்க்கப்பட்டதோடு கோட்டையின் பக்கவாடு, பண்ணைப் பரப்பில், மற்றொரு கவசவூர்தி கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது. இதில் படையினர் பலர் கொல்லப்பட்டனர். 
  • படிமங்கள்:  

13-09-1990 - Jaffna fort entrance - Salaman Military Truck

கோட்டை வாயிலில் அழிக்கப்பட்ட சலாமன் கவசவூர்தி | படிமப்புரவு: தவிபு வழியாக உதயன்

Land mines finding machine.jpg

தரையிறங்க வந்த படையினர் விட்டுச் சென்ற கண்ணிவெடி கண்டுபிடிக்கும் ஏந்தனம் (equipment) | படிமப்புரவு: தவிபு வழியாய் உதயன்

large.fortdefeat.jpg.66d5d8acbdcc88d2e69f1beea417d59e.jpglarge.fortdefeatresult.jpg.61209d809d5b9806d5541ed4798010fb.jpg

தோல்வியில் முடிந்த கோட்டை முற்றுகை முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் சிதறிக்கிடப்பதைக் காண்க | படிமப்புரவு: ஈழநாதம் 17/9/1990

  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 6
    • கடற்கலப் வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: சுடுகலப் படகுகள் (விதப்பான கடற்கலவகை அறியில்லை)
  • சிறிலங்காக் முப்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 26 பேர்
      • வான்படை: ஒரு வானோடி
      • தரைப்படை: நான்கு அதிகாரிகள் மற்றும் 19 தரைப்படையினர்
      • கடற்படை: 2 கடற்கலவர் (Seamen)
    • காயப்பட்டோர்: 106 பேர்
  • வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 13 பேர்

    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் ஆனந்தபாபு, கப்டன் அஞ்சனா, லெப். நெப்போலியன், வீரவேங்கை ரெஜினோல்ட், வீரவேங்கை சுரேன், வீரவேங்கை குணேஸ், வீரவேங்கை நிவாஸ், வீரவேங்கை றொபின், வீரவேங்கை தமிழ்ச்செல்வன், வீரவேங்கை குருபரன், வீரவேங்கை நிக்கலஸ், வீரவேங்கை விஜயன், வீரவேங்கை சந்திரபாபு

ஆதாரம்: உதயன்: 14,15 & 16/09/1990 | ஈழநாதம்: 14 & 16/09/1990 | கட்டுரை: 'அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 192'

 


  • திகதி: செப்டெம்பர் 16, 1990
  • அடிபாட்டுக் காலம்: அறியில்லை
  • நிகழ்வு இடம்: காங்கேசன்துறை கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: படகில் பயணம் செய்த படையினர் மீது கடற்புறாக்கள் கடலில் வைத்தே தாக்குதல் நடத்திப் படகைச் சேதப்படுத்தினர்.
  • சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: 1 ஆள்
  • வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 17/09/1990

 


  • திகதி: ஒக்டோபர் 14, 1990
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: தலைமன்னார் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: பொதுமக்களின் மீன்பிடிப்படகு ஒன்றைத் தாக்குவதற்காக சிங்களக் கடற்படையினர் அதைத் துரத்திச் சென்ற போது கடற்புறாக்கள் வழிமறித்து வலிதாக்குதல் செய்தனர். சிங்களப் படகு சேதமடைந்தது. சிறிதளவு படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன. சேதமடைந்த படகிற்கு என்ன நடந்தது என்பது பற்றிப் புலிகள் தெரிவிக்கவில்லை.
  • சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: சிறு படகு (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 16/10/1990

 


  • திகதி: ஒக்டோபர் 25, 1990
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 5:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: செம்பியன்பற்றுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: புலிகளின் கடல் கண்ணிவெடியில் சிக்கிப் படகு வலுத்த சேதமடைந்தது. 
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: கடற்படைப் படகு (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: பலர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை

ஆதாரம்: உதயன்: 27/10/1990

 


  • திகதி: நவம்பர் 7, 1990
  • அடிபாட்டுக் காலம்: காலை 8:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: முள்ளிக்குளம் (புத்தளம்) கடற்பரப்பு. இன்னும் விதப்பாகவெனில் குதிரைமலையைச் சுற்றியுள்ள கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் இரண்டு படகில் படையினர் வந்த போது தரையிலிருந்து 500 யார் தொலைவில் வைத்து பின்னால் வந்த இரண்டாவது படகு மீது உந்துகணை செலுத்தி (ஆர்பிஜி) மூலம் உந்துகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தப் படகு நகராமல் நிற்க முன்னால் வந்த படகு அதைக் கட்டியிழுத்துச் செல்ல முற்பட்டது. அப்போது அப்படகு மீது புலிகள் சுடுகலச் சூடு நடத்தினர். பின்னர் படையினர் மேலும் மூன்று படகுகளில் வந்து சேதமடைந்த படகைக் கட்டியிழுத்துச் சென்றனர்.  
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை 
    • கல வகை: படகு (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இல்லை

ஆதாரம்: உதயன்:09/11/1990

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1991

 

  • திகதி: மே 4, 1991
  • அடிபாட்டுக் காலம்: இரவு
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இது பருத்தித்துறைக் கடற்பரப்பில் தரிபெற்று தமிழக-தமிழீழ வழங்கல்களைக் குழப்பிக்கொண்டிருந்த தாய்க்கப்பல் மீது கடற்புறாக்களும் கடற்கரும்புலிகளுமாக மேற்கொண்ட வலிதாக்குதல் ஆகும். குறித்த நாள் இரவு தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான சண்டைப்படகுகள் மற்றக் கடற்கலங்கள் மீது தாக்குதல் நடாத்தி அபிதா வரை கடற்கரும்புலிகளை அழைத்து சென்று விட அபிதா மீது கடற்கரும்புலிகள் மோதியிடித்தனர். மொத்த நடவடிக்கையினை அப்போதைய கடற்புறாப் பொறுப்பாளரான கட்டளையாளர் சங்கர் எ தாத்தாவின் துணையுடன் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரரும் கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரனும் வழிநடாத்தினார்கள் (இவர்களின் விதப்பான பணி அறியில்லை). இந்நடவடிக்கைக்கு அப்போதைய வடமராட்சிப் பொறுப்பாளரும் பின்னாளைய கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளருமான பிரிகேடியர் சூசை, கட்டளையாளர் லெப். கேணல் கடாபி, கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் எ முகுந்தன் ஆகியோர் தங்களது முழுப் பங்களிப்பையும் வழங்கியிருந்தனர். போதியளவு வெடிமருந்து இல்லாத காலமென்பதாலும் எவ்வளவு வெடிமருந்து பயன்படுத்த வேண்டுமென்ற பட்டறிவு இல்லாததாலும் கப்பல் மூழ்கடிக்கப்படவில்லை.
  • சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1 (பின்னாளில் கடற்படையில் இருந்து ஆணையிழக்கப்பட்டது)
    • கடற்கலப் பெயர்: அபிதா
    • கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல்
    • கடற்கலப் படிமம்:

Abeetha.jpg

Abeetha - 1991.jpg

படிமப்புரவு: SLN

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 9 பேர்
    • காயப்பட்டோர்: 8 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் சிதம்பரம், கப்டன் ஜெயந்தன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்:
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை
    • படிமம்:

final reading.png

படிமப்புரவு: தவிபு

வேறு கடற்கரும்புலிகள் ஓட்டும் இவர்கள் பாவித்ததையொத்த இடியனின் தோற்றம் :

Sea Black Tigers class name unidentified boat.jpg

படிமப்புரவு: தவிபு

ஆதாரம்: ஈழநாதம்: 05/05/1991 | கட்டுரை: 'அபிதா மீதா கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு'

 


  • திகதி: சூலை 24, 1991
  • அடிபாட்டுக் காலம்: இரவு
  • நிகழ்வு இடம்: நெடுந்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புறாக்களுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் கடலில் நடந்த மோதல் இதுவாகும். இம்மோதலில் மூழ்கடிக்கப்பட்ட படையப் படகிலிருந்த கொல்லப்பட்ட ஆறு கடற்படையினரில், ஒருவரின் சடலம் 24 ஆம் திகதி காலை புங்குடுதீவில் கரையொதுங்கியது. இன்னும் மூன்று சடலங்கள் 25ம் திகதி நண்பகலில் புங்குடுதீவு மருத்துவமனைக்கு அண்மையில் கரையொதுங்கின. அவற்றில் ஒன்று நிர்வாணமாகவும் ஏனைய மூன்றும் படைப்பொறிகளுடன் (Military insignia) சீருடையிலும் காணப்பட்டன. மேலும் மூன்று சடலங்கள் புங்குடுதீவு கிழக்குக் கடற்பரப்பில் தமிழ் மீனவரின் வலைகளில் சிக்கிப் பின்னர் அவர்களால் தட்டிவிடப்பட்டன. அந்த இரு சடலங்களும் பின்னர் மண்டைதீவை நோக்கி மிதந்து சென்றன.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்:
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை 
    • கல வகை: படையப் படகு (விதப்பான கல வகை அறியில்லை )
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 6 பேர் 
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புறாக்கள்: இழப்பில்லை

ஆதாரம்: ஈழநாதம்: 26/07/1991 | உதயன்: 26/07/1991

 


  • திகதி: செப்டெம்பர் 22, 1991
  • அடிபாட்டுக் காலம்: வைகறை
  • நிகழ்வு இடம்: காரைநகர்க் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இதுவே கடற்புலிகளின் முதலாவது கடல்சார் தாக்குதல் ஆகும். நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி செல்லும் கடற்படைப் படகு கடற்புலிகளால் குறிவைக்கப்பட்டது. இதற்காக பிருந்தன் மாஸ்ரரால் இயக்கப்பட்ட கதுவீ (RADAR) மூலம் கிடைக்கப்பெற்ற வேவுத்தகவல்களின் அடிப்படையில் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி ஒரு தாக்குதல் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கான கடல் கண்ணிவெடிகளை மேஜர் மூர்த்தி மாஸ்ரர் உள்ளூர் தொழினுட்பத்தில் உருவாக்கியிருந்தார்; 'கொலின்ஸ் கடல் கண்ணிவெடி'. இக்கடல் கண்ணிவெடிகளைக் குறித்த கடற்பரப்பில் முதல்நாள் இரவில் கடற்புலிகளின் அப்போதைய கடற்தாக்குதல் கட்டளையாளர் லெப்.கேணல் சாள்ஸ் தலைமையில் கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரன், மேஜர் வசந்தன் உள்ளிட்டவர்கள் படகுகள் மூலம் எடுத்துச் சென்று பிருந்தன் மாஸ்ரரின் கதுவீயின் கண்காணிப்பில் வைத்தனர். கடற்புலிகள் கண்ணிவெடியை விதைத்து விட்டுத் திரும்ப அடுத்த நாள் வைகறையில் கடற்படையின் இலக்குவைக்கப்பட்ட படகு சிக்கி மூழ்கியது. உடைந்த படகையும் அதிலிருந்த போர்த் தளவாடங்களையும் மீட்க லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான கடற்புலிகள் சென்றனர். அவர்கள் லெப். கேணல் கங்கையமரன் மற்றும் ஏனைய நீரடி நீச்சல் போராளிகளின் துணையுடன் மீட்டுக் கரைக்குக் கொணர்ந்தனர். படகு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த மொத்த நடவடிக்கையில் மூர்த்தி மாஸ்ரருக்கு உதவியாக கப்டன் மைக்கலும் பிருந்தன் மாஸ்ராருக்கு உதவியாக மேஜர் தீபன்  உள்ளிட்ட கடற்புலிப் போராளிகளின் பங்கு மிகவும் அளப்பரியது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சீ கார்ட்
    • கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 6 பேர் (வல்வளைக்கப்பட்ட வட தமிழீழத்திற்கான சிறிலங்கா கடற்படைக் கட்டளையாளர் கப்டன் ரிச்சார்ட் அமரவீர பின்னர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்)
    • காயப்பட்டோர்: 1
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 24/09/1991 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு | கட்டுரை: 'நீரடி நீச்சல் பிரிவின் தொடக்கக் கால வரலாறுகள்'

 


  • திகதி: ஒக்டோபர் 1, 1991
  • அடிபாட்டுக் காலம்சாமம்
  • நிகழ்வு இடம்: தீவகக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: நயினாதீவு கடற்படை முகாமிலிருந்து ஊர்காவற்துறை கடற்படைத் தளத்திற்குச் சென்றுகொண்டிருந்த 2 படகுகள் வழிமறிக்கப்பட்டு கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை வலிதாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலிற்கு லெப். கேணல் கங்கையமரனின் துணையோடு கடற்புலிகளின் துணைக்கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் வேவு பார்த்தார். பின்னர் தாக்குதலிற்கான வியூகத்தை லெப். கேணல் சாள்ஸே அணியமாக்கி தானே கடற்சமரை வழிநடாத்தினார். இச்சண்டையில் தான் முதற் தடவையாக கடற்புலிகளால் ஒரு சிங்களப் படகு கலைத்து விரட்டப்பட்டது. இத்தாக்குதலிற்கு 50 கலிபர் மற்றும் பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்கள் பொருத்தப்பட்ட கட்டைப்படகுகளே (Dinghy/மீனவர் படகுகள்) பயன்படுத்தப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. மூழ்கடிக்கப்பட்ட படகையும் கைப்பற்றப்பட்ட இலகு இயந்திரச் சுடுகலனையும் மக்கள் பார்வைக்காக வைத்தார், கடற்புலிகளின் அப்போதைய துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: கூகர்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 6 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 3/10/1991 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: திசம்பர் 29, 1991 
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 2:30 மணி
  • நிகழ்வு இடம்: யாழ். குடாநாட்டுக் களப்பு
  • நிகழ்வு விரிப்பு: யாழ். களப்பில் நாகதேவன்துறையிலிருந்து ஆனையிறவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிங்களக் கடற்படையினரின் 5 'வோட்டர் ஜெட்' படகுகள் வழிமறிக்கப்பட்டு கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதல். மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 9 பேர்
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 30 & 31/12/1991, 05/02/1992

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1992

 

  • திகதி: பெப்ரவரி 3, 1992
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு
  • நிகழ்வு இடம்: ஆனையிறவுக் களப்பு (lagoon)
  • நிகழ்வு விரிப்பு: பூநகரி கடற்படைத்தளத்திலிருந்து ஆனையிறவு முகாமிற்கு தளவாடங்களை ஏற்றிச்சென்ற எட்டு படகுகளைக் கொண்ட தொடரணி மீது கடற்புலிகளால் கடல் கண்ணிவெடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. திகைத்த படையினர் மூழ்கிக்கொண்டிருந்த படையினரையும் ஆளணியினரையும் மீட்க முயன்றனர். அப்போது  பிருந்தன் மாஸ்ரர், லெப். கேணல் சாள்ஸ் உட்பட சில போராளிகள் படையினரை நோக்கி பி.கே. இயந்திரச் சுடுகலனால் மட்டும் சுட்டபடி ஒரு படகில் (வகுப்புப் பெயர் அறியில்லை. அக்காலத்திய குருவி/ சூடை/ சுப்பர் சொனிக் வகுப்புகளில் ஒன்றாக இருக்கலாம்) விரைந்து சென்றனர். விரைந்து வந்த படகைக் கண்ட படையினர் பயந்து பின்வாங்கியோடினர். பின்னர், பயனற்ற விதத்தில் உடைந்துபோய் மூழ்கியிருந்த சிங்களப் படகை அப்போதைய கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் சாள்ஸ் தலைமையிலான சில போராளிகள் சுழியோடி கட்டியிழுத்துக் கரைக்குக் கொணர்ந்து மக்கள் பார்வைக்கு வைத்தனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 4
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 05/02/1992 | நூல்: தாய்நிலத்து வீரர் (மாவீரர் தொகுப்பு-02) இல் உள்ள லெப். கேணல் சாள்ஸின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: பெப்ரவரி 27, 1992
  • நிகழ்வு இடம்: தாளையடிக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறையிலிருந்து கடல் & தரை படையினரோடு கட்டைக்காடு கடற்படைத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சவட்டன் மீது கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும்.
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சவட்டன்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 2 பேர்
    • காயப்பட்டோர்: 3 பேர் (ஒரு தரைப்படை படைஞன் உட்பட)
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | உதயன்: 1/03/1992 | ஈழநாதம்: 27/02/1992

 


  • திகதி: மார்ச் 3, 1992
  • நிகழ்வு இடம்: மாதகல் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: மாதகல் கடலில் கடற்புலிகள் மேற்கொண்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இதுவாகும். 1994 ஆம் ஆண்டு வரை சேதமடைந்த டோறா சரிசெய்யப்படவில்லை.
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா 
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 

 


  • திகதி: ஓகஸ்ட் 29, 1992 
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30
  • நிகழ்வு இடம்: மண்டைதீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: மண்டைதீவு தரைப்படை-கடற்படை கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் 'ஆசீர் சிறப்புத் தாக்குதலணி'யால் தாக்கப்பட்டு அங்கே கட்டிவைக்கப்பட்டிருந்த வோட்டர் ஜெட் கைப்பற்றப்பட்டுத் தளம் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்த பல்வேறு நவீன போர்த் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தாக்குதலில் நான்கு பேர் கொண்ட கடற்புலிகளின் சிறப்புச் சதளம் (Special Squad) ஒன்று ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இதில் ஆழியன், தம்பி, தென்னவன் மற்றும் ஜீவா ஆகிய கடற்புலிப் போராளிகள் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் இத்தீரச் செயலைப் பாராட்டி 16/1/1993 அன்று தேசியத் தலைவர் பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார்.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1

boat captured in.png

Captured Water Jet from Mandaiteevu.jpg

Water Jet class boat (Captured by Sea Tigers from Mandaitivu)

படிமப்புரவு: தவிபு

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: பலர்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: விடுதலைப்புலிகள்: ஐப்பசி - கார்த்திகை 1994 | ஈழநாதம்: 30/09/1992 | உதயன்: 14/1/1993

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 ஆண்டு: 1993

 

  • திகதி: பெப்ரவரி 26, 1993
  • அடிபாட்டுக் காலம்: வைகறை
  • நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு
  • நிகழ்வு விரிப்பு: கிளாலிக் களப்பில் கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படைக்கும் இடையில் ஏற்பட்ட கடற்சமர் இதுவாகும். இச்சமரின் போது உணவுப் பொருட்களுடனான படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் அது பொதுமக்களினதா அல்லது தவிபு-வினரதா என்பது தெரியவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை
    • காயப்பட்டோர்: 1 ஆள்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 12&14/02/1993

 


  • திகதி: பெப்ரவரி 26, 1993
  • நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு
  • நிகழ்வு விரிப்பு: கிளாலிக் களப்பில் கடற்புலிகள் மேற்கொண்ட கடல் கண்ணிவெடித் தாக்குதல் இதுவாகும். இக்கண்ணிவெடியை சேரன் என்ற கடற்புலிப் போராளி விதைத்தார். இவரோடு நம்பி, எல்லாளன், சரத்பாபு ஆகிய கடற்புலிகளும் இந்நடவடிக்கையில் பங்கெடுத்திருந்தனர். ஆனால் அவர்களின் பாத்திரங்கள் அறியில்லை. இவர்கள் அனைவருக்கும் தேசியத் தலைவர் 06/03/1993 அன்று பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார்; போராளி சேரனுக்கு அதிசிறப்புப் பரிசு வழங்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது, தவிபுவினரால்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 4 பேர்
    • காயப்பட்டோர்: 3 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 27&28/02/1993, 08/03/1993 | ஈழநாதம்: 27&28/02/1993

 


  • திகதி: மார்ச் 3, 1993 
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 12:00 மணியளவில்
  • நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு
  • நிகழ்வு விரிப்பு: கிளாலிக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் சென்ற சிங்களக் கடற்படையினர் மீது கடற்புலிகள் வலிதாக்குதல் நடாத்தினர். படகு எரிந்து மூழ்கியது. கடற்புலிகளின் தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாத ஏனைய சிங்களப் படகுகள் பின்வாங்கிச் சென்றன.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் வேந்தன்

ஆதாரம்: உதயன்: 04/03/1993 | ஈழநாதம்: 04/03/1993

 


  • திகதி: ஓகஸ்ட் 26, 1993
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:55 மணி முதல் வைகறை 5:05 மணி வரை
    • இடியன்கள் மோதிய நேரங்கள்: வைகறை 2:05, 4:00 மணிகள்
  • நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு
  • நிகழ்வு விரிப்பு: கிளாலிக் களப்பில் பயணம் செய்துகொண்டிருந்த பொதுமக்களை தாக்கும் நோக்கோடு நாகதேவன்துறையிலிருந்து ஐந்து வோட்டர் ஜெட்களில் வந்த சிங்களக் கடற்படையினரை பயணத்திற்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த கடற்புலிகள் வழிமறித்து மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இக்காலகட்டத்தில் ஒவ்வொரு தடவையும் கடலில் அடிபடும் போதும் சிங்களக் கடற்படையினர் மாறுபட்ட தாக்குதல் திட்டங்களோடு வருவதே வழக்கமாகும். இம்முறை பகை இரு கடலணியாகப் பிரிந்து முன்னகர்ந்தது. ஒரு கடலணி மக்களை தாக்கவெனவும் மற்றொன்று அவர்களைப் பாதுகாக்க வரும் கடற்புலிகளை மறிக்கவெனவும் நகர்ந்தது. ஆனால், கடற்புலிகள் இதனை அறிந்து இரு முனையிலும் சிங்களக் கடற்படையினை எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில், ஒரு சமர்முனையில், கடற்புலிகளிடம் சிக்கியுள்ள சிங்களக் கடற்படையின் வோட்டர் ஜெட்டினை இடிக்குமாறு கரையில் காத்திருந்த கப்டன் மதனுக்கு கட்டளை வழங்கப்பட்டது. கப்டன் மதன் தனது குப்பியைக் கழற்றி கடற்கரும்புலி கப்டன் கண்ணாளனிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டார். தன்னை நோக்கி வரும் கரும்புலிப்படகை கண்ட வோட்டர் ஜெட் (P 115) தப்பியோட எத்தனித்தது. ஆயினும் அதற்கு அவகாசம் வழங்காமல் அதன் கலக்கூட்டின் நடுப்பகுதியில் மோதியிடித்து தாட்டார், கப்டன் மதன். பின்னர் தொடர்ந்தும் சமர் நீண்டது. பேந்து ஒரு கட்டத்தில் மற்றொரு சமர்முனையில் இன்னொரு வோட்டர் ஜெட் கடற்புலிகளால் தப்ப வழியின்றி சுற்றிவளைக்கப்பட்டது. அது உதவிக்காக கட்டளை மையத்திற்கு தகவல் அனுப்பிவிட்டு இறுதிவரை சமராட தீர்மானித்திருந்தது. அதை இடிக்குமாறு மேஜர் நிலவனுக்கு கட்டளை வழங்கப்பட - புறப்பட்டுச் சென்றார். காரிருட்டில் நட்புப் படகுகளை இனங்கண்டு, விலத்தி ஒட்டி, உதவி வருவதற்குள் தப்ப ஏதுவின்றி நின்ற வோட்டர் ஜெட்டை (P 121) மோதியிடித்துத் தாட்டார், மேஜர் நிலவன்.  இப்படகிலிருந்து சிறிதளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. இவ்விரு கடற்கரும்புலிகள் பற்றி ஒரு விடையத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் கடற்சமர் வெடிக்கும் போது பகைப்படகை இவர்களின் சக்கைவண்டிகள் துரத்தும். அப்போது தப்பியோடும் பகைக்கும் கடற்கரும்புலிகளுக்கும் இடையிலான இடைவெளி குறுகும் போது பகைவன் தன் நவீன வோட்டர் ஜெட் படகினை ஒரு அடியான ஆழம் குறைந்த நீரினுள் செலுத்துவான். அவ்வாறு செல்லும் வல்லமை கடற்கரும்புலிகளின் படகிற்கு இல்லாமையால் தரைதட்டும் என்பதால் கடற்கரும்புலிகள் திரும்பிடுவர். இவ்வறு இக்கரும்புலித் தாக்குதலில் ஈடுபட்ட இரு கடற்கரும்புலிகளும் கரும்புலித் தாக்குதலுக்காக கடலில் இலக்குத்தேடி மொத்தம் 61 நாட்கள் அலைந்தனர். இலக்குக் கிடைக்காவிடத்து காத்திருந்து, 62வது நாள் இரவில் இலக்குக் கிட்டிய போதே மோதியிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
    • தாக்குதல் வகை: உந்துகணை செலுத்தி மூலம் ஏவப்பட்ட உந்துகணையால்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 10 பேர் (நால்வரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன)
    • காயப்பட்டோர்: பலர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர்
    • கடற்கரும்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நிலவன் எ வரதன், கப்டன் மதன் எ பற்றிக்
        • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரேந்தர்
  • சக்கை வண்டிகள்:
    • எண்ணிக்கை: 2
    • வகுப்புப் பெயர்: குருவி
    • கலப் பெயர்: குமரப்பா (மேஜர் நிலவன் எ வரதன்), புலேந்திரன் (கப்டன் மதன் எ பற்றிக்)
    • படிமம்:

Major Nilavan.png

Kuruvi class Idiyan boat - Maj. Varathan.png

படகுகாவி மேலுள்ள "குமரப்பா" என்ற கடற்கலப்பெயர் கொண்ட குருவி வகுப்பு இடியனில் அமர்ந்திருக்கும் மேஜர் நிலவன் | படிமப்புரவு: தவிபு

ஆதாரம்: ஈழநாதம்: 27/08/1993 | உதயன்: 27/08/1993 | உயிராயுதம் பாகம் - 1 | விடுதலைப்புலிகள் புரட்டாசி-ஐப்பசி 1993

 


  • திகதி: ஓகஸ்ட் 29, 1993
  • அடிபாட்டுக் காலம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 10:30 மணி வரை
    • இடியன் மோதிய நேரம்: காலை 9:20 மணி
      • காலை 9:20 மணியிலிருந்து 12 மணி வரை கலம் எரிந்துகொண்டிருந்தது.
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறை நகரிற்கு கிழக்கிலுள்ள முனை என்ற பரப்பின் கடற்கரையிலிருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: திருகோணமலையிலிருந்து முன்னதாக கட்டைக்காடு கடற்படைத்தளம் வந்த இக்கலம், காங்கேசன்துறை நோக்கிச் சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்தது. அப்போது பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் நான்கு படகுகள் (வகுப்புப் பெயர் அறியில்லை) வழிமறித்துத் வலிதாக்குதல் நடாத்தின, பின்னர்  கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலுக்கு வழியெடுத்துக் கொடுக்கும் தாக்குதலில் மகளிர் படையணி ஒரு சண்டைப்படகுடன் சென்று சண்டையிட்டது. தாக்குதலின் முடிவில் லெப். கேணல் பாமா தன் தலைமையிற் படகு கொண்டு சென்று கடலில் நின்ற புலிகளுக்குத் துணையாகத் தாக்குதல் நடாத்தி மற்றைய எமது படகுகள் திரும்பி வருவதற்கு வழியமைத்துக் கொடுத்தார். கரும்புலித் தாக்குதலில் எரிந்து மூழ்கிக்கொண்டிருந்த கலத்தில் ஏறிய கடற்புலிகள் அதிலிருந்த முக்கிய சில படைக்கலன்களைக் கழற்றிக் கைப்பற்றிக் கரைசேர்த்தனர்.
  • மேலதிகத் தகவல்: இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளுள் ஒருவரான கப்டன் மணியரசனே 'உயிராயுதம்' என்ற பிடாரச்சொல்லை (new term) முதன் முதலில் மொழிந்தவர் ஆவார்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்- 1
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 12 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் புகழரசன் எ புவீந்திரன், கப்டன் மணியரசன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்:
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: சீ நோர் (ஒரு வகுப்பான கட்டைப்படகு (மீனவர் படகு))

ஆதாரம்: ஈழநாதம்: 30/08/1993 | உதயன்: 30/08/1993 | உயிராயுதம் பாகம் - 2 | கரும்புலி காவியம் பாகம் - 1 | களத்தில்: 18.10.1995

 


  • திகதி: நவம்பர் 10, 1993
  • நிகழ்வு இடம்: நாகதேவன்துறை கடற்தளம்
  • நிகழ்வு விரிப்பு: பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தவளைப் பாச்சல் நடவடிக்கையின் போது பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் நாகதேவந்துறையைக் கைப்பற்றுவதும், அச்சண்டை முடியும் வரை பூநகரிக் கூட்டுப்படைத் தளத்திற்கு கடல்வழியால் சிங்களப் படைகளுக்கு உதவி கிடைக்க விடாமல் செய்வது என்பன கடற்புலிகளின் பணியாகும். அச்சமரின் போது நாகதேவன்துறை கடற்படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து வோட்டர் ஜெட்கள் கடற்புலிகளினால் கைப்பற்றப்பட்டது. இவற்றில் ஒன்று கடற்புலிகளின் மகளீர் பிரிவுப் போராளிகளினால் - லெப். கேணல் பாமா தலைமையிலான பெண் போராளிகளில் - கைப்பற்றப்பட்டது. முதல் நாள் ஒரு வோட்டர் ஜெட் படகைக் கைப்பற்றிக் கொண்டுவந்து கரை சேர்த்தனர், இவர் தலைமையிலான அணியினர். பின்னர் அடுத்த நாள் அதிகாலை மீண்டும் சமரிற்கு வேறொரு படகில் சென்ற போது நடந்த கடற்சமரில் காலில் காயப்பட்டு வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார். மேலும் கைப்பற்றப்பட்டுத் தளம் கொணரப்படும் வேளையில் பூநகரி கல்முனைக்கு அண்டிய கடற்பரப்பில் சிங்கள வான்படையின் வான்குண்டு வீச்சில் இரண்டு மூழ்கிட எஞ்சியவை கடற்புலிகளின் சண்டைப்படகுகளானது.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
    • படிமம்:

 

  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: வீரச்சாவடைந்த மொத்த 460 போராளிகளுள் லெப். கேணல் பாமா உள்ளிட்ட சில கடற்புலிப் போராளிகள்

ஆதாரம்: தவளைப் பாச்சல் நடவடிக்கை ஆவண நிகழ்படம் | உயிராயுதம் பாகம் - 3 | கட்டுரை: 'லெப். கேணல் பாமாவின் வாழ்க்கை வரலாறு' | உதயன்: 12/10/1994 | களத்தில்: 18.10.1995

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1994


 

  • திகதி: ஓகஸ்ட் 14, 1994
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:45
  • நிகழ்வு இடம்: அராலிக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: அராலிக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்காக் கடற்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. படகு கைப்பற்றப்பட்டு அதிலிருந்த படையினனின் சடலமும் பெருமளவு படைக்கலன்களும் கைப்பற்றப்பட்ட பின்னர் படகு மூழ்கடிக்கப்பட்டது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: கொழும்புச் சவட்டன்
    • கலப் படிமம்:

இதையொத்த கலமே அன்று மூழ்கடிக்கப்பட்டது.

1994  p-201 - Colombo Cheverton class

படிமப்புரவு: navypedia.org

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 3
    • காயப்பட்டோர்: பலர்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 14 & 15/08/1994 | navypedia.org (http://www.navypedia.org/ships/sri_lanka/srl_cf_p201.htm)

 


  • திகதி: ஓகஸ்ட் 16, 1994 | வைகறை 12:45 மணி
  • நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: தரித்து நின்ற கண்காணிப்புக் கையாற்றிக் கப்பல் மீது நீரடி நீச்சல் கரும்புலி மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். கரும்புலித் தாக்குதலால் கப்பலில் பற்றிய தீ அருகில் நின்றிருந்த இழுவைப்படகிலும் மூண்டதால் அதுவும் எரிந்து மூழ்கியது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கலப் பெயர்: தீரா 
      • கல வகை: இழுவைப்படகு (Tugboat)
    • தொடரிலக்கம்: A 516 
      • கல வகை: கண்காணிப்புக் கையாற்றி (Surveillance Tender)
      • கடற்கலப் படிமம்:

Monitoring ship - capt Angkayarkanni.jpg

படிமப்புரவு: தவிபு

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • காணாமல்போனோர்: 2 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1
    • தரநிலையுடனான பெயர்: கப்டன் அங்கயற்கண்ணி
      • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலி

ஆதாரம்: ஈழநாதம்: 23/08/1994 | உதயன்: 17/08/1994

 


  • திகதி: செப்டெம்பர் 19, 1994
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 11:25 மணி முதல் 12:30 மணி வரை
    • இடியன்கள் மோதிய நேரம்: சாமம் 11:25 மணி (இடியன்கள் மோதிய பின்னரே கடற்சமர் தொடங்கியது)
      • கப்பல் சாமம் 12:30 மணிக்கு மூழ்கடிக்கப்பட்டது.
  • நிகழ்வு இடம்: அரிப்புகுடாக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: மன்னாரிலுள்ள கடற்புலிகள் தளத்திலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள அரிப்புக்குடா கடற்பரப்பில் 31 மணித்தியாலங்களாக தரிபெற்றிருந்த கப்பல் மீது கடற்கரும்புலிகளும் கடற்புலிகளுமாக மேற்கொண்ட மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். முதலில் நீரடியால் நீந்திச் சென்ற கடற்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவினர் கப்பலின் சுழலியைச் சேதப்படுத்தினர். இதனை நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த மேஐர் இன்பநிலா உட்பட கடற்கரும்புலி மேஐர் பரன் தலைமையிலான அணி வெற்றிகரமாக செய்து முடித்தது. இதனால் கப்பலின் நகர்திறன் பாதித்தது. பேந்து, விரைந்து சென்ற முதலாவது இடியன் கடையாரில் மோதியிடித்து வெடித்த பின்னர் கடற்படையினர் கன்னாபின்னா என்று சுடத் தொடங்கினர். அவ்வேளையில் இரண்டாவது இடியனும் அடுத்து மோதியிடித்தது. தொடர்ந்து கடற்சமர் வெடித்தது. தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் தலைமையில் லெப். கேணல் நிமல், லெப். கேணல் சலீம், கடற்கரும்புலி லெப். கேணல் ரதீஸ், மேஜர் கண்ணன், மேஜர் சிங்கன், மேஜர் கனியன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி, கடற்கரும்புலி மேஜர் வினோதா, கடற்கரும்புலி கப்டன் தணிகை, கப்டன் தாயகி, கப்டன் வில்வம் ஆகியோர் தமது சண்டைப்படகுகளால் கப்பலைத் தாக்கினர். எனினும் ஏற்கனவே இடியனின் மோதலால் ஏற்பட்ட ஓட்டையின் வழியே புகுந்த நீரால் கப்பல் மூழ்கத் தொடங்கியது. தாக்குதலுக்கு உள்ளான ஒரு மணிநேரத்திலேயே கப்பல் மூழ்கிவிட்டது. சிறிதளவு நவீனப் படைக்கலன்களும் பல சி.க. சார் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஒக்க நடவடிக்கையினையும் தேசியத் தலைவர் அவர்கள் நேரடியாக நெறிப்படுத்த, சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை, கட்டளையாளர் லெப். கேணல் கங்கையமரன் மற்றும் துணைக் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் ஆகியோர் வழிநடாத்தியிருந்தனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: சாகரவர்த்தனா
    • கல வகை: ஆழ்கடல் சுற்றுக்காவல் கலம்
    • கடற்கலப் படிமம்:

sakaravarthana.jpg

படிமப்புரவு: அறியில்லை

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 25 பேர்
    • காயப்பட்டோர்: 4 பேர்
    • போர்க்கைதிகளானோர்: கப்பல் தண்டையல் அஜித்குமார் பொயகொட மற்றும் அவரது கூட அதிகாரியான என்.ஈ. விசித்த கமகே
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4
    • பதவி & தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புக் கட்டளையாளர்' லெப். கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் தூயமணி எ வாமன், கப்டன் இசைவாணன் எ லக்ஸ்மன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்:
    • எண்ணிக்கை: 2
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: ஈழநாதம்: 21/09/1994 | உதயன்: 21/09/1994 | கட்டுரை: சாகராவர்த்தனா கப்பலை கற்பிட்டிக் கடலில் மூழ்கடித்த கடற்கரும்புலித் தாக்குதல்

 


  • திகதி: ஒக்டோபர் 9, 1994
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 4:30 மணி
  • நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: 1200 தொன் எடையுள்ள பொருட்களை (உணவுகள் என்கிறது சிங்களம்) படைய வள்ளம் ஒன்றிற்கு மாற்றுவதற்காக வெற்றிலைக்கேணி கடற்பரப்பில், கரையிலிருந்து காணக்கூடியளவு சில மைல் தொலைவில், நங்கூரமிட்டு தரிபெற்றிருந்தது. அவ்வேளையில் திடீரென அங்கு வந்த கடற்புலிகள் வேட்டுகளைத் தீர்த்து கப்பலின் இரு பக்கங்களிலும் சக்கை வைத்து வெடிப்பித்த பின்னர் மூழ்கும் போது அதிலேறி கப்பலிலிருந்த கதுவீ மற்றும் தொலைத்தொடர்பு ஏந்தனங்களைக் கைப்பற்றிச் சென்றனர். இத்தாக்குதலின் வழிமறிப்புத் தாக்குதலில் கடற்கரும்புலிகளின் மகளீர் அணி பங்கேற்றிருந்தது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: ஓசன் ரேட்
    • கல வகை: வழங்கல் கப்பல்
    • கடற்கலப் படிமம்:

Ocean Trade.png

படிமப்புரவு: அறியில்லை

  • கப்பல் ஊழியரில் (சிங்களவர்),
    • கொல்லப்பட்டோர்: யாருமில்லை
    • காயப்பட்டோர்: யாருமில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: யாருமில்லை

ஆதாரம்: ஈழநாதம்: 09/10/1994 | உதயன்: 21/09/1994 | களத்தில்: 18.10.1995

 


  • திகதி: நவம்பர் 8, 1994
  • கடற்சமர் காலம்: சாமம் 12:26 மணி முதல் சுமார் மூன்று மணி நேரம்
  • நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணி கடற்கரையோரத்தில்
  • நிகழ்வு விரிப்பு: வெற்றிலைகேணி கடற்கரையோரத்தில் படையத் தளவாடங்கள் இறக்கிக்கொண்டிருந்த போது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளுமாக இணைந்து மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இந்நடவடிக்கைக்கான வேவில் பெண் போராளி ஒருவரே ஈடுபட்டார். அதற்காக தலைவரினால் உந்துருளி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
  • சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: பப்பதா
    • கல வகை: பயனுடைமை தரையிறக்கக் கலம் (LCU)
    • கடற்கலப் படிமம்: ரணகஜவின் தோற்றத்தில் இருக்கும்
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வித்தி
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: ஈழநாதம்: 10/11/1994 | உதயன்: 10/11/1994 | களத்தில்: 18.10.1995

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 ஆண்டு: 1995

 

  • திகதி: ஏப்ரல் 19, 1995
  • அடிபாட்டுக் காலம்: சாமம்
    • நீரடிக் குண்டுகள் வெடித்த நேரம்: சாமம் ஒரு மணியளவில் - சில நிமிட வேறுபாட்டில் இரண்டும் வெடித்தன
  • நிகழ்வு இடம்: திருகோணமலைத் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: திருகோணமலைத் துறைமுகத்தினுள் ஊடுருவிய நீரடி நீச்சல் கரும்புலிகளால் கரும்புலித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கடற்கலங்களினோடு நீர்முழுகி இலக்கிய மிதந்து அமிழக்கூடிய கடற்கலத்தால் மோதியிடித்துக் கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டது என்று சிறிலங்காக் கடற்படையினர் தெரிவித்தனர். அக்கடற்கலத்தில் ஒரு பெயர் இருந்ததாகவும் அதிருந்த பகுதி தம்மால் மீட்கப்பட்டுள்ளதகாவும் அப்பெயரானது அக்கடற்கலத்தை கட்டிய வல்லுநரின் பெயர் என்றும் தெரிவித்தனர். ஆனால் கூடுதலாக அப்பெயரானது அக்கடற்கலத்தின் பெயராக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன். ஏனெனில் புலிகளின் இடியன்களில் கலப்பெயர் பொறிக்கப்பட்டிருப்பது வழமையே!
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்கள்: ரணசுறு, சூரயா
    • கல வகை: விரைவுச் சுடுகலப் படகு (FGB)
    • கடற்கலப் படிமம்:

ranasuru.webp

Suraya.webp

படிமப்புரவு: தவிபு

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 11
    • காயப்பட்டோர்: 23
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதுசா, கப்டன் சாந்தா, மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன்
      • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்
  • படிமங்கள்:

ஆதாரம்: உதயன்: 20/04/1995, 15/05/1995

 


  • திகதி: சூன் 04, 1995
  • நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகத்திற்கு மிக அண்மையான கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: மனிதநேய அடிப்படையிலான பொருட்களையும் நோயாளர்களையும் ஏற்றிப்பறிக்கும் சேவையில் ஈடுபட்டிருந்த 'சீ டான்சர்' என்ற கப்பலானது செஞ்சிலுவைச் சங்கக் கொடியுடன் பருத்தித்துறையிலிருந்து காங்கேசன் துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது துறைமுகத்திற்கு மிக அண்மையில் கடற்புலிகளின் கடல் கண்ணிவெடியில் சிக்கி வலுத்த சேதமடைந்து 5ம் திகதி முற்றாக மூழ்கி அமிழ்ந்தது. இச் சம்பவமானது போக்கூழானது என்று தமிழீழத் தேசியத் தலைவர் வருத்தத்தைத் தெரிவித்ததுடன் செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்புடன் செல்லும் கடற்கலங்களுக்கு எந்தவொரு ஊறும் ஏற்படுத்தக்கூடாது என்ற சம இணக்கத்தை புலிகள் தொடர்ந்தும் தீவிரக் கவனத்துடன் கடைப்பிடிப்பர் என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்திருந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்குச் சொந்தமான இக்கப்பலானது 1995ம் ஆண்டு பெப்ரவரியில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சீ டான்சர் (Sea Dancer)
    • கல வகை: கப்பல்
    • படிமம்:

Sea Dancer... sunk by sea tigers.png

  • கப்பல் ஊழியர் ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 05/06/1995, 07/06/1995, 10/06/1995

 


  • திகதி: சூலை 16, 1995
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:15 மணி முதல் சுமார் நான்கு மணி நேரம்
    • நீரடிக் குண்டுகள் வெடித்த நேரம்: சாமம் 1:30 மணி
    • இடியன் பகைச் சூட்டால் வெடித்த நேரம்: வைகறை 5:30 மணி
  • நிகழ்வு இடம்: காங்கேசன்துறை துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: இது காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய நீரடி நீச்சல் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதல் ஆகும். இத்தாக்குதலிற்கு கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் நரேஸ் தலைமையில் கடற்புலிகளின் நான்கு வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டை வண்டிகள் உட்பட பல சண்டைப்படகுகளோடு லெப். கேணல் குணேஸ், லெப். கேணல் நிமல், லெப். கேணல் இரும்பொறை, லெப். கேணல் சதீஸ், லெப். கேணல் நாவரசன், லெப். கேணல் மாதவி, மேஜர் விசும்பன் என பல போராளிகள் புறப்பட்டுச் சென்றனர். முதலில் உட்சென்ற நீரடி நீச்சல் கரும்புலிகள் எடித்தாரா கடற்கலனின் கலக்கூட்டில்(hull) நீரடி வெடிகுண்டுகளைப் பொருத்தி அதை தகர்த்தனர். பின்னர் அங்கிருந்த கடற்கலங்களின் மீது ஊடுருவி உட்சென்றிருந்த கடற்புலிகள் தாக்குதலைத் தொடுக்க கடற்புலிகளுடன் சிங்களக் கடற்படையினர் மிண்டினர். கடற்சமர் வெடித்த சிறிது நேரத்தில் லெப். கேணல் நரேஸ் வீரச்சாவடைய தாக்குதல் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் குணேஸ் கடற்சமரை பொறுப்பெடுத்து வழிநடத்தினார். தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் யுனான் வகுப்பைச் சேர்ந்த தரையிறக்கக் கலத்தினை இலக்குவைத்து நோக்கி விரைந்த இடியனொன்று பகைவரின் வேட்டிற்கு இலக்காகி மூழ்கியது. அதில் சென்ற கடற்கரும்புலிகளில் ஒருவர் வீரச்சாவடைய மற்றையவர் உயிர்தப்பி 17ம் திகதி கரைமீண்டார். இக்கடற்சமரில் லெப். கேணல் மாதவி கட்டளை அதிகாரியாகச் சென்ற வோட்டர் ஜெட் படகு கலக்குழுவினரோடு மூழ்கடிக்கப்பட்டது. இதுவே கடற்புலிகள் தரப்பில் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது பெரிய சண்டை வண்டி ஆகும். 
  • மூழ்கடிக்கப்பட்ட  கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: எடித்தாரா
    • கல வகை: கண்காணிப்புக் கட்டளைக் கப்பல்
    • படிமங்கள்:

எடித்தாராவின் படிமம் மேலே 1990 ஆம் ஆண்டுப் பெட்டியில் கொடுத்துள்ளேன். 

ediththara.png

'எடித்தாராவின் அணியத்தில் தான் நீரடிக்குண்டு பொருத்தப்பட்டது. அதனால் அதன் அணியப் பக்க கலக்கூட்டில் ஓட்டை விழுந்து, நீர் புகுந்து, அது மூழ்கும் காட்சி | படிமப்புரவு: சிங்களக் கடற்படை'

கீழே உள்ளது யுனான் வகுப்பைச் சேர்ந்த தரையிறக்கக் கலமாகும்

yunan class LC - aimed in KKS 1995

'படிமப்புரவு: navy.lk'

  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 3 பேர்
    • காயப்பட்டோர்: 10 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 16 பேர்
    • கடற்புலிகள்: 11+2 பேர் 
      • தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர்' லெப். கேணல் சந்திரன் எ நரேஸ், 'கடற்புலிகளின் மகளீர் பிரிவுச் சிறப்புக் கட்டளையாளர்' & சண்டைப்படகு கட்டளை அதிகாரிலெப். கேணல் மாதவி, கப்டன் வில்வன், கப்டன் கமலம், கப்டன் தாயகி, லெப். பூமதி, லெப். தவமலர், லெப். சோபிதா, லெப். சுபத்திரா, லெப். நேசன் எ தவமாறன், 2ம் லெப். அருள் மதி, 2ம் லெப். நதியரசி, 2ம் லெப். நித்தியா (இந்தப் பதின்மூன்று பேருள் இரு பெண் போராளிகள் போர்க்கைதிகளாகி சிங்களச் சிறையில் வன்புணர்ச்சி செய்யப்பட்டு வதைக்கப்பட்டனர்)
    • கடற்கரும்புலிகள்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் தமிழினி (இடியன் பகைவேட்டிற்கு இலக்காகி மூழ்கியது. இதில் அன்னார் வீரச்சாவடைய இவரோடு சென்ற மற்றைய இடியரான கப்டன் செவ்வானம் நீந்திக் கரைமீண்டார்.)
        • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தங்கம், மேஜர் நியூட்டன் எ செந்தாளன்
        • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்
        • படிமங்கள்:
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 17 & 18 /07/1995 | எரிமலை: நவம்பர் 1995 | கட்டுரைகள்: 'எடித்தாரா மீதான இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் வரலாறு', 'லெப். கேணல் மாதவியின் வாழ்க்கை வரலாறு'

 


  • திகதி: ஓகஸ்ட் 29, 1995 சாமம்
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையோரத்திலிருந்து ஏழு கடல்மைல் தொலைவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுருக்கமாக, ஈபிடிபி என்ற தேச விரோதக் குழுவால் இயக்கப்பட்டு யாழ். நோக்கி கப்பல் ஊழியர்கள் உட்பட 120 பேருடன் (4 சிங்கள & 4 தமிழ் கப்பல் ஊழியர்கள், 63 ஆண்கள், 58 பெண்கள், 15 சிறுவர்) பயணம் செய்த 'எம்.வி. ஐரிஸ் மோனா' (MV Irish Mona) என்ற வலசைக் (ferry) கப்பல் முல்லைக் கடற்பரப்பில் கரையிலிருந்து 15மைல் தொலைவில் வைத்து கடற்புலிகளின் மகளீர் படையணிப் போராளிகளால் வைகறை 2:30 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டது. அதிலிருந்த அத்தனை பேரும் பாதுகாப்பாக கரை சேர்ப்பிக்கப்பட்ட பின்னர் அக்கப்பலானது சிங்களக் கடற்படையை ஈர்க்கும் ஒரு சூழ்ச்சிப் பொறியாக மாற்றப்பட்டடது. பின்னர் காணாமல் போன கப்பலைத் தேடி வந்த சிங்களக் கடற்படையினர் கப்பல் தனியாக நிற்பதை அறிந்து அதைச் சோதனை செய்ய நெருங்கிய போது கடற்கரை மணலில் தாட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தகரியால் (tank) விடுதலைப்புலிகள் சுட்டு முதலாவது டோறாவைத் தாட்டனர். முதல் டோறாவின் கதி அறிய நாடிய இரண்டாவது டோறாக்கும் அதே கதி. இரண்டையும் சுட்டுத் தாட்டவர் 'சூரன் கவச அணி'யின் கட்டளையாளர் சோ ஆவார். அதோடு வந்த ஜெயசாகர என்ற கட்டளைக் கப்பல் பிழைத்தோடியது. மூழ்கிக்கொண்டிருந்த கலமொன்று கடற்புலிகளின் மகளிர் பிரிவால் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வரப்பட்டு அதிலிருந்தும் மூழ்கிய மற்றையதிலிருந்தும் ஏராளமான படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன. பின்னர் கரைக்குக் கொண்டுவரப்பட்ட சுப்பர் டோறா மக்கள் பார்வைக்கென வைக்கப்பட்டது. மேற்கொண்டு தேடுதல் வேட்டையை நிறுத்திப் பின்வாங்கிக்கொண்டனர், சிங்களக் கடற்படையினர். பின்னர், தம் நோக்கம் நிறைவேறியதும் சில நாட்கள் கழித்து கப்பலையும் பயணிகளையும் பாதுகாப்பாக விடுதலை செய்தனர், புலிகள். ஆனாலும் கப்பலின் ஊழியர்கள் (கலக்குழு) தொடர்ந்து தடுப்பிலிருந்தனர். இவர்களில் இரு தமிழர்கள் 27/04/1997 அன்றும் இரு சிங்களவர் 25/10/1998 அன்றும் விடுதலை செய்யப்பட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏனைய இரு தமிழரும் சிங்களவரும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் இக்கப்பலின் தண்டையல் கே.பி. விஜயக்கோன் மனிதநேய அடிப்படையில் 10/04/2000 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
  • படிமங்கள்:

Irish Mona.png

எம்.வி. ஐரிஸ் மோனா | படிமப்புரவு: தவிபு

John Bosko school - Irish Mona passengers.jpg

ஜோன் பொஸ்கோ பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்.வி. ஐரிஸ் மோனாவில் பயணம் செய்த பயணிகள் | படிமப்புரவு: உதயன்

 

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்-1 & பேபி டோறா
      • கல வகை: விரைவுத் தாக்குதல் கலம்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 20 பேர்
      • முதலில் அடி வேண்டிய டோறாவில்: 12 பேர்
      • இரண்டாவதாக அடி வேண்டிய டோறாவில்: 8 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: இல்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 30/08/1995, 01, 02 & 07/09/1995, 27/04/1997, 11/04/2000 | எரிமலை: ஒக்டோபர் 1995 | தமிழ்நெற்: 19/10/1997 (Tigers sink Sri Lankan gunboat) | களத்தில்: 04/10/1995

 


  • திகதி: செப்டெம்பர் 3, 1995
  • அடிபாட்டுக் காலம்: மாலை 9:30 மணி முதல் சாமம் வரை
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: மாலை 10 மணிக்குக் கிட்டவாக
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: ஐரிஸ் மோனாவில் வெடிகுண்டுகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவோ என்று ஐயுற்று, அதனை நெருங்க அஞ்சியதால் தொலைவில் நின்றவாறு நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர், வல்வளைக்கப்பட்ட தமிழர் தலைநகரிலிருந்து புறப்பட்ட சிங்களக் கடற்படையினர். இதனைக் கவனித்த கடற்புலிகள் அவர்களை குச்சவெளிக் கடற்பரப்பில் வலித்து, சமராடி, தந்திரப் பின்வாங்கல் மூலம் 20 நிமிட ஓட்டத்தில் குச்சவெளியியிலிருந்து புல்மோட்டையை அடைந்தனர். பின்னர் காரிருட்டைப் பாவித்து புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து அவர்களைத் தாக்கியழித்தனர், புல்மோட்டையிலிருந்தே புறப்பட்ட கடற்கரும்புலிகள். இத்தகவலை அப்போதைய சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கம் மூடி மறைத்தது. கடற்கலம் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் அக்கடற்பரப்பில் எம்.ஐ. 24 உலங்குவானூர்தி ஒன்று வந்த பல நிமிடங்கள் வட்டமடித்து விட்டுச் சென்றதைக் கடற்புலிகள் கண்டனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா
      • கல வகை: விரைவுத் தாக்குதல் கலம்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 10 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: இல்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 4 பேர்
    • கடற்கரும்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்:  கப்டன் கண்ணாளன், மேஜர் நகுலன் எ தோமஸ்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி
    • கடற்புலிகள்: 2 பேர் 
      • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் செங்கண்ணன், கப்டன் பூவேந்தன்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை
    • படிமம்:

oooo.png

மேஜர்களான நகுலனும் கண்ணாளனும் கரையிலுள்ள இடியனில் அமர்ந்திருக்கின்றனர். | படிமப்புரவு: தவிபு

மேஜர் நகுலன் மேஜர் கண்ணாளன்.jpg

மேஜர்களான நகுலனும் கண்ணாளனும் கடலினில் ஓடும் இடியனில் அமர்ந்திருக்கின்றனர். | படிமப்புரவு: தவிபு

ஆதாரம்: உதயன்: 05/09/1995 | எரிமலை: ஒக்டோபர் 1995

 


  • திகதி: ஒக்டோபர் 11, 1995
  • அடிபாட்டுக் காலம்வைகறை
  • அடிபாட்டுக் காலம்: மாலை 6 மணி தொடங்கி 6 மணி நேரம் தொடர்ந்தது
  • நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: குறித்த நாள் சாமத்தில் கடலினுள் இறங்கி வைகறைப் பொழுதில் இலக்கினை அண்மித்த கடற்கரும்புலி கடல் வேவுப்புலிகளின் துணையுடன் கலத்தின் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டார். இதில் கலம் சேதமடைந்தது. ஆனால் சேத விரிப்புகளை சிங்களக் கடற்படை வெளியிட மறுத்துவிட்டது.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: அறியில்லை
      • கல வகை: தரையிறக்கக் கலம் (விதப்பான வகை அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 3 பேர்
    • கடற்கரும்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் அருள்ஜோதி
      • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலி
    • கடற்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: 'விசேட கடல்வேவுப் பிரிவுக் கட்டளையாளர்' மேஜர் மோகன், கடல் வேவுப்புலி கப்டன் ராம்குமார்

ஆதாரம்: உதயன்: 12/09/1995 | ஒளிவீச்சு: செப்டெம்பர் 1995

 

 

  • திகதி: செப்டெம்பர் 20, 1995
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5 மணி முதல் மாலை 10 மணி வரை
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:30 மணி
    • வழங்கல் கப்பல் மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:40 மணி
  • நிகழ்வு இடம்: காங்கேசன் கடற்பரப்பு, மாதகல் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: காங்கேசன் துறைமுகத்தினுள் நுழைந்த கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் அங்கிருந்த டோறாக் கலங்களுடனும் விரைவுச் சுடுகலப் படகு ஒன்றுடனும் மிண்டின. கடற்சமர் தொடங்கி அரை மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் டோறா தீப்பிடித்தெரிந்து 10 மணியளவில் மூழ்கியது. சமநேரத்தில் துறைமுகத்தில் படையேற்பாடுகளை அவசரமாக இறக்கிவிட்டு காரைநகர் நோக்கி விரைந்த 'லங்கா முடித' வை துரத்திச் சென்ற கடற்புலிகள் மாதகல் கடலில் வைத்து கரும்புலித் தாக்குதல் மேற்கொண்டனர். அதில் கப்பல் பாரிய சேதமடைந்தது. பின்னர் தமிழரின் தாக்குதலைச் சமாளிக்க ஏலாமல் சிங்களவரின் ஏனைய கடற்கலங்கள் பின்வாங்கி ஓடின.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா
      • கல வகை: விரைவுத் தாக்குதல் கலம்
  • சேதப்பட்ட (பாரிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: லங்கா முடித
      • கல வகை: வழங்கல் கப்பல்

lanka muditha - 1995 large damage.jpg

படிமப்புரவு: FleetMon

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 12 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4
    • தரநிலையுடனான பெயர்கள்: முன்னாள் 'முல்லை மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்' மேஜர் அந்தமான் எ அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம், கப்டன் சிவன் எ சிவா
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 22/09/1995 | எரிமலை: ஒக்டோபர் 1995

 


  • திகதி: ஒக்டோபர் 2, 1995
  • அடிபாட்டுக் காலம்நண்பகல்
  • அடிபாட்டுக் காலம்: மாலை 6 மணி தொடங்கி 6 மணி நேரம் தொடர்ந்தது
  • நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்கரையிலிருந்து 15 கிமீ தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: புலிப்பாய்ச்சல் நடவடிக்கை முறியடிக்கப்பட்ட பின்னர் அதேபோன்று நடந்துகொண்டிருந்த இடிமுழக்கம் நடவடிக்கைக்கான வலுவூட்டத்திற்குத் தேவையான படையப்பொருட்களையும் ஆளணியினையும் திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தனர், சிங்களப் படைதுறை தரப்பு. அதன் விதமாக திருகோணமலை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலங்கள் (LCM), இரண்டு விரைவுச் சுடுகலப் படகுகள், மற்றும் வேறு நான்கு கடற்கலங்கள் (ஆகக் குறைந்தது ஒரு சாதாரண டோறாவும் ஒரு சால்டாக்கும்) ஆகியன அடங்கிய தொடரணியினை வழிமறித்துத் தாக்க தலைவரின் பணிப்பிற்கமைய கடற்புலிகள் முடிவு செய்தனர். தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட கட்டளையாளர் பிருந்தன் மாஸ்டர் தலைமையிலான போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடற்புலிகளின் படகுகள் முள்ளிவாய்க்காலில் வந்து காத்திருந்தன. அக்காலகட்டத்தில் முல்லைத்தீவிலிருந்து வெற்றிலைக்கேணி வரையிலான கடற்பரப்பில் கரையிலிருந்து குறைந்த தொலைவிலும் அதன் பின்னர் உயர்க்கடலிலும் செல்வது சிங்களக் கடற்படையின் வாடிக்கையாக இருந்தது. அதனால் முல்லைத்தீவு சுண்டிக்குளக் கடற்பரப்பில் வைத்து சிங்களத் தொடரணியைத் தாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. இத்தாக்குதலின் போது புதிய உத்தியாக கடற்புலிகளின் சண்டைவண்டிகளால் தாக்கப்பட்டு நிப்பாட்டப்படும் சிங்களக் கடற்கலத்தை சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவுப் போராளிகள் நீரடி நேரக்கணிப்புக் குண்டு பொருத்தி தகர்க்கப்படுவதும் சேர்க்கப்பட்டிருந்தது. திட்டத்திற்கு அமைவாக லெப்.கேணல் தன்ராஜ், லெப் கேணல் இளநிலா மற்றும் கடற்புலிகளின் அப்போதைய துணைக் கட்டளையாளர் பிருந்தன் மாஸ்ரர் ஆகியோரைக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட சண்டைப்படகுகளும் (எண்ணிக்கை அறியில்லை) கடற்கரும்புலிகளான மேஜர் அருமை தலைமையில் கப்டன் தணிகை ஆகியோர் ஒரு வெடிப்படகிலென முள்ளிவாய்க்காலில் வந்து காத்திருந்தனர். தொடரணியில் வந்த ரணகஜவிற்கு ஏமமாக வந்த டோறாப் படகுகள் மீது லெப் கேணல் இளநிலா தலைமையிலான சண்டைப்படகுகள் தாக்குதலை மேற்கொண்டனர். அதே சமயம் லெப் கேணல் தன்ராஐ் மற்றும் பிருந்தன் மாஸ்ரரின் சண்டைப்படகுகள் ரணகஜவைக் குறிவைத்து தாக்கி அதைனோக்கி வழியமைத்துக் கொடுக்க கடற்கரும்புலிகள் தரையிறங்குக்கலம் மீது அதன் கடையாரில் மோதி வெடித்தனர். ஆயினும் கப்பல் தப்பியது. திடீரென கடலில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால நீரடி நீச்சல் போராளிகள் செல்ல இயலாமல் போனது. தொடர்ந்த கடற்சமரில் டோறா ஒன்றும் சேதமாக்கப்பட்டது.
  • சேதப்பட்ட (சிறியளவு) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதம் அறியில்லை)
      • கல வகை: விரைவுத் தாக்குதல் கலம்
    • கடற்கல வகுப்புப் பெயர்: ரணகஜ
      • கல வகை: எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலம்
      • படிமம்:

This is Ranagaja. Pabbatha (sunk 1998) looks exactly like this

இது ரணகஜ. பப்பதாவும் இதனை ஒத்த தோற்றத்தையே கொண்டது | படிமப்புரவு: navy.lk

  • சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்ட கடற்படையினர்: 18 பேர்
    • காயப்பட்டோர்: 54 பேர்
      • தரைப்படையினர்: 40 பேர்
      • கடற்படையினர்: 14 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர்
    • கடற்கரும்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அருமை, கப்டன் தணிகை
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: 'நளாயினி சிறப்புக் கடற்தாக்குதல் அணி' கட்டளையாளர் லெப்.கேணல் இளநிலா, கப்டன் சுஜீவன், லெப். அமுதன்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 04, 05/10/1995, கட்டுரை: ரணகஜ உள்ளடங்கிய வழங்கல் தொடரணி மீதான கடற்புலிகளின் தாக்குதல்

 


  • திகதி: ஒக்டோபர் 17, 1995
  • அடிபாட்டுக் காலம்: சாமம்
  • நிகழ்வு இடம்: திருகோணமலைத் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: வல்வளைக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கில் உள்ள சிறிலங்காப் படையினருக்கு படையேற்பாடுகள் மற்றும் இன்றியமையாப் பொருட்களை வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்த கப்பல் திருமலைத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது நீரடி நீச்சல் கரும்புலிகள் ஊடுருவி நீரடிக்குண்டு பொருத்தி மூழ்கடித்தனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: இல்லை
    • கடற்கலத் தொடரெண்: 512
      • கல வகை: வழங்கல் கப்பல்
  • சிறிலங்கா ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 9 பேர்
      • கடற்படையினர்: 2 பேர்
      • கப்பல் ஊழியர் (சிங்களவர்) 2 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: 9 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி
      • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்

ஆதாரம்: உதயன்: 18/10/1995

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட, கைப்பற்றப்பட்ட சிங்களக் கடற்கலங்கள் | ஆவணக்கட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1996

 

 

  • திகதி: மார்ச் 15, 1996
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 12:20 மணி
  • நிகழ்வு இடம்: மன்னார் பள்ளிமுனையிலிருந்து 3 கிமீ தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: மன்னார் கடலில் சூழ்ச்சிப்பொறியாக நடமாடிய கடற்புலிப் படகுகளின் நடமாட்டத்தைக் கண்டு சிறிலங்காத் தரைப்படை-கடற்படையின் அணிகள் எருக்கலம்பிட்டியிலிருந்தும் பள்ளிமுனையிலிருந்தும் மூன்று கடற்படைப் படகுகளில் வெளிக்கிட்டு கூட்டாகக் கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டனர். அப்போது ஈருடகத் தாக்குதலணியினர் (2008இல் சேரன் ஈருடகத் தாக்குதலணி என்று பெயர் மாற்றப்பட்டனர்) கரையோரப் பற்றைக்குள் பதுங்கியிருந்து கடலில் வந்தவர்கள் நோக்கி வலிதாக்குதல் நடாத்தினர். வெற்றிகரமான இம்மோதலில் இரு சடலங்கள், சிறிதளவு படைக்கலன்கள் மற்றும் ஒரு படகு ஆகியன கைப்பற்றப்பட்டன. தமிழர் தரப்பில் இழப்புகள் ஏற்படவில்லை.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை (வெளுறிய நிறம்)
    • கல வகை: கட்டைப்படகு
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை (கடு நிறம்)
    • கல வகை: கட்டைப்படகு
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (நீல நிறம்)
    • கல வகை: கட்டைப்படகு
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 10-16 பேர்
    • காயப்பட்டோர்: 4

ஆதாரம்: உதயன்: 16/03/1996 | ஒளிவீச்சு 1996 ஏப்ரல்

 


  • திகதி: மார்ச் 30, 1996 
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல்
  • நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்கரையிலிருந்து 15 கிமீ தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: இத்தாக்குதலின் நோக்கமானது திருமலையிலிருந்து வெற்றிலைக்கேணிக்கு நடைபெற்றுவரும் வழங்கலை நிறுத்துவதே ஆகும். குறித்த நாளில் காங்கேசன்துறை கடற்படைத் தளத்திலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலங்கள், இரண்டு விரைவுச் சுடுகலப் படகுகள், மற்றும் வேறு நான்கு கடற்கலங்கள் (ஆகக் குறைந்தது ஒரு சாதாரண டோறாவும் ஒரு சால்டாக்கும்) ஆகியன அடங்கிய தொடரணியே கடற்புலிகளின் இலக்காகவிருந்தது. இத்தாக்குதலிற்காக லெப். கேணல் டேவிட் தலைமையில் அவர் உட்பட லெப். கேணல் நிமலன், லெப். கேணல் குணேஸ் ஆகியோரை கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட மூன்று வோட்டர் ஜெட் சண்டைவண்டிகளும் சில இடியன்களுமாக பூனைத்தொடுவாயில் காத்திருந்தன. அப்போது காங்கேசன்துறையிலிருந்து வந்துகொண்டிருந்த தொடரணியை நோக்கி லெப். கேணல் நிமலனின் சண்டைப்படகு விரைந்து சென்று பொருதியது. தொடர்ந்த கடற்சமரில் பகைத் தாக்குதலால் அன்னாரின் வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டை வண்டி மூழ்கடிக்கப்பட்டது. ஆயினும் ஏனைய இரு வோட்டர் ஜெட்களும் தொடர்ந்து கடற்சமரில் ஆடின. அதன் போது நிலைகுலைந்து நின்ற டோறா ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அது மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் சால்டாக் ஒன்றும் மீளப்பாவிக்கேலதபடி சேதப்பட்டதோடு இன்னுமொரு சுடுகலப் படகும் சேதமாக்கப்பட்டது. பின்னாளில் இங்கு மூழ்கடிக்கப்பட்ட டோறாவின் முதன்மைச் சுடுகலன் உட்பட சில படைக்கலன்கள் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினரால் கழட்டியெடுக்கப்பட்டு கடற்சமர்களில் பயன்படுத்தப்பட்டன
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: டோறா 
    • கல வகை: விரைவுத் தாக்குதல் கலம்
  • சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சால்டாக்
      • கல வகை: விரைவுத் தாக்குதல் கலம்
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
      • கல வகை: விரைவுச் சுடுகலப் படகு
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 14 பேர்
      • கொல்லப்பட்டோரில் இருவர் (லெப். விஜேதுங்க, துணை லெப். குணவர்த்தன) ஆகியோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தவிபுவிடம் சிறைப்பட்டிருக்கலாம் என்றும் கொழும்புப் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
    • காயப்பட்டோர்: 5 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 21 பேர்
    • கடற்கரும்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் ஜெகநாதன், கப்டன் இளையவள்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: 19 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: சண்டைப்படகு கட்டளை அதிகாரி லெப். கேணல் நிமல் எ நிமலன், லெப். கேணல் குணேஸ் எ எழில்வண்ணன், மேஜர் கனியன், மேஜர் மன்னவன், மேஜர் செம்மலை, மேஜர் மோகன், மேஜர் மலர்மொழி, கப்டன் கரன், கப்டன் நல்லவன், கப்டன் மிதுனன், கப்டன் கனகா, கப்டன் திருமாறன், லெப். குமுதினி, லெப். பிருந்தா, லெப். செல்வக்குமார், லெப். கீதா, லெப். மகேஸ்வரி, லெப். எழுமதி, கப்டன் ஆனந்தி
    • சண்டை வண்டியில் பயணித்த தரைப்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: கப்டன் இராவணன் (ராதா விமான எதிர்ப்பு அணியினன், இ.பா.ப.)
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 01 & 03/04/1996 | ஒளிவீச்சு 1996 ஏப்ரல் | உயிராயுதம் - 5

 


  • திகதி: ஏப்ரல் 12, 1996
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணி முதல் வைகறை 5:45 மணிக்கு மேல் வரை
    • துறைமுகம் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது வள்ளத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நேரம்: வைகறை 5:45 மணி முதல் 
  • நிகழ்வு இடம்: கொழும்புத் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: கொழும்புத் துறைமுகத்தினுள் புகுந்து அங்கிருந்த மூன்று வணிகக் கப்பல்கள் மற்றும் மூன்று படையக் கப்பல்களுடன் கட்டடத் தொகுதி மேல் தாக்குதல் நடத்துவதே இலக்காகும். இதற்காக 9 கடற்கரும்புலிகள் உயிராயுதங்களாகச் சென்றனர். இவர்களில் நீரடி நீச்சல் கரும்புலிகளான 6 பேர் முற்கொண்டு செல்லப்பட்டு குறிக்கப்பட்ட இடத்தில் மாலை 9:30 மணியளவில் இறக்கப்படுவர். முதலில், சாமம் 12:00 மணிக்கு, துறைமுக வாயிலில் முதலாவதாக நின்றிருந்த எரிபொருள் தாங்கியிலும் அதிலிருந்து 700 மீட்டர் தொலைவில் நின்றிருந்த இரு கொள்கலன் காவிகளிலும் நீரடி நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்திய மேஜர் பொய்யாமொழி, மேஜர் மீனக்கொடியோன், கப்டன் விக்கி ஆகியோர் பின்வாங்கி ஏற்கனவே தயார் நிலையில் நிற்கும் வள்ளத்தில் ஏறிட வேண்டும். எஞ்சிய மூவரான மேஜர் தென்னமுதன், கப்டன் சுபாஸ், கப்டன் மதனி ஆகியோர் 2700 மீட்டர் தொலைவிலிருந்த கடற்படையின் வலுவான 6 கப்பல்களில் மூன்றிற்கு நீரடிக் குண்டுகளைப் பொருத்தி சாமம் 1:30 மணிக்குத் தம்மோடு சேர்த்து வெடித்திட வேண்டும். இவற்றோடு மற்றைய மூன்றுமாக ஆறு கப்பல்களும் வெடித்துச் சிதறும். பின்னர் 5:45 மணியளவில் உட்புகும் வள்ளத்திலிருந்து உந்துகணை பிலிறுந்தும் கைக்குண்டுகள் (RPG) 65ஐ ஏவியும் ஏனைய கனவகை இயந்திரச் சுடுகலன்களால் சுட்டும் அங்குள்ள கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தி இறுதிவரை சமராடி அழிக்க வேண்டும். இதுவே தாக்குதல் திட்டமாகும். ஆனால் சாமம் 10 மணிக்கு கடலில் இறக்கப்பட்டோர் வைகறை 6 மணியாகியும் இயற்கைத் தயவின்மையால் போய்ச்சேர இயலவில்லை. ஆகையால் கடற்படைப் படகுகள் இவர்களைக் கண்டுகொண்டதாலோ என்னமோ இவர்கள் தம்மைத் தாமே குண்டுவைத்து அழித்துக்கொண்டனர். சமநேரத்தில் 5:45 மணிக்கு உட்புகுந்த 'கண்ணன்' என்ற கலப்பெயரைக் கொண்ட வள்ளத்திலிருந்த நடவடிக்கைக் கட்டளையாளர் லெப். கேணல் பிரதாபன், துணைக் கட்டளையாளர் மேஜர் ரதன், ஓட்டி மேஜர் வளநாடன் ஆகிய மூன்று கடற்கரும்புலிகளுமாக அங்கிருந்த கட்டடத் தொகுதி மற்றும் நீரடி நீச்சல் கரும்புலிகள் இலக்கு வைத்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த போது வழிமறித்த கடற்படையோடு வெடித்த மோதலில் வள்ளத்தை அழித்து வீரச்சாவடைந்தனர், கடற்கரும்புலிகள். இந்த வள்ளம் கொழும்பு முகத்துவாரதிலிருந்து வந்திருக்கலாம் என்று தாம் ஐயுறுவதாக கடற்படையினர் தெரிவித்தனர். இத்தாக்குதல் தொடர்பாக புலிகள் உடனடியாக வெளியிட்ட ஊடக வெளியீடு தவறானது என அவர்கள் பின்னாளில் வெளியிட்ட 'உயிராயுதம் பாகம் - 5' இல் மறைமுகமாக ஏற்றுக்கொண்டனர்.
  • மேலதிகத் தகவல்: இச்சமரில் 9 கடற்கரும்புலிகள் "வீரச்சாவடைந்தனர்" என விடுதலைப்புலிகள் அறிவிருந்தனர். ஆனால் உயிராயுதம் என்ற கரும்புலிகளின் வரலாறு கூறும் நிகழ்படத்தில் 7 நீரடி நீச்சல் கரும்புலிகள் இத்தாக்குதலிற்கு அணியமாகுவது போலக் காட்டப்பட்டிருக்கிறது. அவர்களோடு இன்னும் 3 பேருமாக (வள்ளத்தில் சென்றோர்) மொத்தம் 10 பேர் கரையோரமாக கைகோர்த்தபடி நடமாடுவது போலவும் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தலைவரோடு நின்று படமெடுத்த போது 9 பேர் மட்டுமே நிற்கின்றனர். அவர்களிலும் ஒருவரின் முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, இத்தாக்குதலிற்கு முதலில் அணியமான ஏழு நீரடி நீச்சல் கரும்புலிகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவர் இறுதிக் கணத்தில் ஏதோ காரணத்தினால் அனுப்பப்படாமல் போக மாற்றாள் ஒருவர் (அந்த ஏழு பேரிலிருந்து முதலில் தெரிவாகமல் விடுப்பட்டவர்) தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறார் என்று அறுதியில்லாமல் ஊகிக்கிறேன்.
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 4
    • கடற்கலப் பெயர்: மெர்கஸ் மாகோ எ ஆர்மா (MERCS MAHO a.k.a. ARMA)
      • கல வகை: எரிபொருள் தாங்கி

இக்கப்பல் சேதமடைந்ததாக உதயனும் 1996ம் ஆண்டே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

MERCS MAHO 1996 damaged

படிமப்புரவு: MarineTraffic.com

    • கடற்கலப் பெயர்: சிங்க ஏஸ் (SINGA ACE)
      • கல வகை: மகிழுந்து காவி

இதற்குள்ளிருந்த ஏழு மகிழுந்துகள் சேதமடைந்திருந்தன என்று தாக்குதல் நடந்த அடுத்தநாளே உதயன் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

SINGA ACE - 1996 damaged.jpg

படிமப்புரவு: FleetMon

    • கடற்கலப் பெயர்: சீ லான்ட் என்டேவர் (SEA LAND ENDEAVOUR)
      • கல வகை: கொள்கலன் காவி

SEA LAND ENDEAVOUR - 1996 damaged.jpg

படிமப்புரவு: MarineTraffic.com

    • கடற்கலப் பெயர்: நெட்லொய்ட் ஓப்ரிட்ஜோன் (NEDLOYED OBRIDJAN)
      • கல வகை: கொள்கலன் காவி

NEDLOYED OBRIDJAN - 1996 damaged.jpg

படிமப்புரவு: shumsw3.tripod.com

  • சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இல்லை
    • காயப்பட்ட கடற்படையினர்: ஆகக்குறைந்தது ஒருவர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 9
    • தரநிலையுடனான பெயர்கள்: நடவடிக்கைக் கட்டளையாளர்லெப். கேணல் ரதீஸ் எ பிரதாபன்,நடவடிக்கை துணைக் கட்டளையாளர்மேஜர் ரதன், ‘வள்ள ஓட்டி மேஜர் ரவாஸ் எ வளநாடன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் பரன் எ தென்னமுதன், மேஜர் பொய்யாமொழி, மேஜர் ஜனார்த்தனன் எ மீனக்கொடியோன், கப்டன் சுபாஸ், கப்டன் விக்கி, கப்டன் மதனி
      • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்
      • படிமங்கள்:

 

ElWfgKcXEAEgMMC.jpg

நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளான மேஜர் பொய்யாமொழி மற்றும் மேஜர் ஜனார்த்தனன் எ மீனக்கொடியோன் (இ-வ) தேசியத் தலைவரோடு நின்று பொதிக்கின்றனர்(pose)

  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: வள்ளம்
    • கலப்பெயர்: கண்ணன்

ஆதாரம்: உயிராயுதம் - 5 | உதயன்: 13 & 15/04/1996 | Island: 12/10/2022 (A forgotten episode: Black Sea Tiger raid on Colombo port)  - நெட்லொய்ட் ஓப்ரிட்ஜோன், சீ லான்ட் என்டேவர் ஆகிய இரண்டு சேதமடைந்த கடற்கலங்களின் பெயர்களைப் பெற மட்டுமே இச் சிங்கள இனவாத நாளேட்டைப் பயன்படுத்தினேன்.

 


  • திகதி:  சூன் 11, 1996
  • அடிபாட்டுக் காலம்:சாமம்
  • நிகழ்வு இடம்: காரைநகர் கடற்படைத்தளம்
  • நிகழ்வு விரிப்பு: காரைநகர் கடற்படைத்தளத்தினுள் ஊடுருவிய நீரடி நீச்சல் கரும்புலியாலும் மற்றொரு கடற்புலி நீரடி நீச்சல் போராளியாலும் குறித்த கடற்கலங்களின் கலக்கூட்டில் நீரடி வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பின்னர் கூடச்சென்ற கடற்புலிப் போராளியை பின்னுக்கு அனுப்பிவிட்டு பேபி டோறாவின் கலக்கூட்டில் வெடிகுண்டை பொருத்தி அதனையும் மற்றைய இரு கடற்கலங்களையும் தகர்த்து தானும் வீரச்சாவடைந்தார். 
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்கள்:
      • சவட்டன்: 2 
      • பேபி டோறா: 1
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் இளங்கோ எ ஜீவறஞ்சன்
      • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்

ஆதாரம்: உயிராயுதம் - 5

 


  • திகதி:  சூன் 11, 1996
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல்
    • ஏவுகணை ஏவப்பட்ட நேரம்: சரியாக நண்பகல் 11:50 மணிக்கு
    • ஏவுகணை ஏவியவர்: பிரிகேடியர் கடாபி
    • பாவிக்கப்பட்ட ஏவுகணை செலுத்தி: மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை - 14 (SAM-14)
  • நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு:  எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி என்னால் அறியமுடியவில்லை. கூடுதலாக சுற்றுக்காவல் வந்த டோறா மீது கடலில் ஏதேனும் ஒரு கட்டைப்படகிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம். இதில் டோறாவில் ஏவுகணை ஏவுண்ணியிருக்கிறது. அதனால் டோறாவிற்கு ஏற்பட்ட விளைவுகள் பற்றித் தெரியவில்லை. ஆனால் விளைவுகள் பாரதூரமாக இருந்திருக்கலாம் என்று மட்டும் ஊகிக்கூடியவாறு உள்ளது. சிங்களம் இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றது பற்றி மூச்சுக்கூட விடவில்லை. இன்னும் சோகமாக, யாழ் குடாநாட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த சிங்களப் படையெடுப்பிற்கு எதிரான உக்கிர எதிர்ச் சமர்களால் இக்காலத்தில் புலிகளின் நாளேடுகளோ இல்லை உதயனோ வெளிவரவில்லை. இதனால் இத்தாக்குதல் பற்றி எதுவும் அறியமுடியவில்லை.
  • மூழ்கடிக்கப்பட்ட அ சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: இத்தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்டு இறுதிப்போரில் சிங்களவரால் கைப்பற்றப்பட்டு தற்போது இரத்மலானை 'சிறிலங்கா வான்படை அருங்காட்சியகத்தில்' வைக்கப்பட்டுள்ள ஏவுகணை செலுத்தியில் பொறிக்கப்பட்டிருந்த வரலாற்றுத் தகவல்.

 


  • திகதி: சூலை 19, 1996
  • அடிபாட்டுக் காலம்: சூலை 18 எற்பாடு - சூலை 21 (மணி அளவுகள் அறியில்லை)
    • ரணவிரு மீது இடியன் மோதிய நேரம்: அண்ணளவாக எற்பாடு 5:45 மணி
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவை முற்றாக மீட்பதற்காக தவிபு தொடுத்த 'ஓயாத அலைகள்- 1' நடவடிக்கையின் போது புலிகளால் பரம்பப்பட்ட (overrun) படைத்தளத்தை மீளக் கைப்பற்ற சிங்களப் படை 'மும்முனைத் தாக்குதல்' (சி. திரிவிட பகர) என்று பெயர் சூட்டப்பட்ட படைய நடவடிக்கையை சூலை 19, 1996 அன்று தொடங்கினர். இதன் மூலம் அளம்பில் கடற்கரையை உவர்க்கத்தலையாக்கி (Beach head) சிங்கள அதிரடிப்படையினைத் தரையிறக்கி முல்லைப் படைத்தளைத்தை மீளக் கைப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையோடு கடற்படை எடுத்த முயற்சிக்கு எதிராக கடற்புலிகள் புரிந்த கடற்சமர் இதுவாகும். முல்லைப் படைத்தளம் மீதான புலிகளின் நடவடிக்கையின் போது படைத்தளப் பாதுகாப்பிற்காகப் பகைவன் கடல் மூலம் தாக்குவானென ஏற்கனவே கடற்புலிகள் எதிர்பார்த்திருந்ததால் கடலில் வலுவான கடல்வேலியை அமைத்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கடற்படையுடன் முட்டினர். பெரும் கடற்சமர் வெடித்தது. ஒரு கட்டத்தில் கடற்படையின் ரணவிரு என்ற விரைவுச் சுடுகலப் படகு கடற்புலிகளால் இலக்குவைக்கப்பட்டது. அதனை மோதியிடிப்பதற்காக முதலில் மேஜர் கண்ணபிரானும் மேஜர் பார்த்தீபனும் ஓட்டிச்சென்ற இடியனானது மோதுவதற்கு இன்னும் ஐந்து மீட்டர்களே இருந்த பொழுது பகைவரின் வேட்டு மழையில் தீப்பிடித்து எரிந்து போனது. எனவே அடுத்த இடியனில் கவனமாக சென்ற மேஜர் செல்லப்பிள்ளையும் மேஜர் சுடரொளியும் வெற்றிகரமாக கப்பலின் கடையாரில் மோதியிடித்து வெடித்தனர். இயந்திரப் பகுதி நொறுங்கி கடலில் கப்பல் சுழலத் தொடங்கியது. அதை மறு புறத்தால் நெருங்கி இடிக்க முயன்ற மற்றொரு குண்டுப்படகு இயந்திரக் கோளாறால் வெடிக்காமல் போனது. மேஜர் மிதுபாலன் அதை பின்வாங்குவது போலப் பாசாங்கு செய்து, பின்னுக்கு எடுத்து, வேகம் கூட்டி மீண்டும் மோதிய போதும் அது வெடிக்கவில்லை. நீர் புகத்தொடங்கிய குண்டுப்படகிலிருந்த கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் இன்னிசை காயப்பட்ட போதிலும் குண்டுப்படகை சாதுரியமாக பின்னுக்குக் கொண்டுவந்தார் மற்றைய கடற்கரும்புலியான மேஜர் மிதுபாலன். பேந்து இன்னொரு இடியனில் சென்ற மேஜர் பதுமன் அக்கப்பலின் அணியத்தில் மோதியிடிக்க கப்பல் மூழ்கத் தொடங்கியது. எவ்வாறெயினும் இறுதியில் கடல்வேலி ஊடறுக்கப்பட்டு பகைவன் வெற்றிகரமாக அளம்பிலில் தரையிறக்கினான். ஆயினும் தரையிறங்கியோரில் 120 பேர் வரை கொல்லப்பட்டு அந்நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. சூலை 18 - சூலை 21 வரையான கடற்சமர்களில் லெப் கேணல் சுதர்சன் உட்பட 27 கடற்புலிப் போராளிகளும் வீரச்சாவடைந்தனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: ரணவிரு
      • கல வகை: விரைவுச் சுடுகலப் படகு
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 35 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: 1
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் கண்ணபிரான் எ அப்துல்லா, மேஜர் பார்த்தீபன் எ வேதமணி, மேஜர் பதுமன், மேஜர் செல்லப்பிள்ளை, மேஜர் சுடரொளி
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 3
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 21/07/1996 | உயிராயுதம்-5

 


  • திகதி: சூலை 23, 1996 
  • அடிபாட்டுக் காலம்: பகல் பொழுது
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைப் படைத்தளத்தை மீட்க சிங்களப் படை நடாத்திக்கொண்டிருந்த  'மும்முனைத் தாக்குதல்' என்ற தரையிறக்க நடவடிக்கையின் போது தரையிறக்கிக் கொண்டிருந்த கலம் மீது விடுதலைப்புலிகள் ஏவிய கணையெக்கி எறிகணையொன்று வீழ்ந்து வெடித்ததில் கடற்கலத்தினுள் இருந்த 22 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 28 பேர் காயமுற்றனர். அத்துடன் கடற்கலமும் மெல்லிய சேதமடைந்தது.
  • சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: ரணகஜ
      • கல வகை: தரையிறக்கக் கலன்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 22 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: 28
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 28/10/1996

 


  • திகதிசெப்டெம்பர் 9,1996
  • அடிபாட்டுக் காலம்வைகறை
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைத் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: புல்மோட்டையில் அமைந்துள்ள சிறிய துறைமுகம் ஒன்றிலிருந்து இல்மனைட்டு என்ற கனிமத்தை சப்பானுக்கு ஏற்றிப்பறிப்பதற்காக பிலிப்பைன்சு நாட்டைச் சேர்ந்த கப்பலொன்றில் ஏற்றிக்கொண்டிருந்தனர், சிறிலங்கா அரசாங்கத்தின் வேலைக்காரர். அப்போது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த போராளிகளால் கப்பல் தகர்க்க முயற்சிக்கப்பட்டு மோசமான சேதத்திற்குள்ளானது. தாக்குதலிற்குள்ளான போது கப்பலில் 3,000 தொன் இல்மனைட்டு கனிமம் அடங்கிய மணல் ஏற்றப்பட்டிருந்தது. தமிழர்களின் கனிம வளம் களவு போவதைத் தடுக்கவே தாங்கள் இத்தாக்குதலை மேற்கொண்டதாகப் புலிகள் பேந்து அறிக்கைவிட்டிருந்தனர். வெளிநாட்டுக் கப்பல் ஊழியர்கள் யாருக்கும் இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. கப்பலில் இல்மனைட்டை ஏற்றிக்கொண்டிருந்த உள்ளூர் தொழிலார்கள் 9 பேரே காயமுற்றனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகயிருந்தது.  
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: எம். வி. பிரின்சஸ் வேவ் (MV Princess Wave)
    • கல வகை: சரக்குக் கப்பல்
  • சிறிலங்கா ஊழியர் ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இல்லை
    • காயப்பட்டோர்: 10
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 10/08/1996 | தமிழ்நெற்: 12/09/1997 (LTTE allays shipping fears)

 


  • திகதிசெப்டெம்பர் 14, 1996
  • அடிபாட்டுக் காலம்சாமம் 
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக்கும் குச்சவெளிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: திருமலையின் சூடைக்குடா (ஃவௌல் பொயின்ற்/Foul Point) பரப்பிலிருந்து வன்னி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் படகுகளை வழிமறித்து சிங்களக் கடற்படையினர் தொடுத்த வலிதாக்குதலிற்கு எதிரான முறியடிப்புக் கடற்சமர். கடற்புலிகள் தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.
  • சேதமாக்கப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: படகு (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 2
    • காயப்பட்டோர்: 6
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 16/09/1996 | குறித்த நாளின் மாவீரர் பட்டியல்

 


  • திகதி: ஒக்டோபர் 21, 1996 
  • அடிபாட்டுக் காலம்: காலை 6:00 மணி
  • நிகழ்வு இடம்: பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையம்
  • நிகழ்வு விரிப்பு: வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு கூட்டுப்படைத்தளத்திற்கு அச்சுறுத்தலாக பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையத்தைத் தாக்கியழிப்பதற்காக கடலால் கொணரப்பட்ட சிறிலங்காத் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளம் (SBS) தரையிறக்கத் தாக்குதலொன்றை மேற்கொண்டது. வெற்றிகரமாக கரையை அண்மித்து தரையிறக்கப்பட விட்ட பின்னர், கடற்புலிகளின் தளத்திற்கு பாதுகாப்பாகயிருந்த கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணியான சூட்டி தரைத்தாக்குதல் அணியினர் (மகனார்) அவர்களுடன் வேகமாக மிண்டினர். தரையிறக்கத்திற்கு சூட்டாதரவாக சிங்கள வான்படையினரும் (எம்.ஐ. 24 முதற்கொண்டு) தரைப்படையினரின் சேணேவி எறிகணைவீச்சும் துணை நின்றனர். இச்சமரில், தரையிறக்கத்திற்கு படையினரைக் கொணர்ந்த ஒரு உட்கரைச் சுற்றுக்காவல் கலம் கடற்புலிகளின் உந்துகணை பிலிறுந்தும் கைக்குண்டுத் (ஆர்.பி.ஜி) தாக்குதலில் முற்றாக எரிந்து அழிக்கப்பட்டதுடன் மற்றொரு உட்கரை சுற்றுக்காவல் படகும் எம்.ஐ.17 போக்குவரவு உலங்குவானூர்தி ஒன்றும் சேதமடைந்தது. கொல்லப்பட்ட படையினரிடமிருந்து பல படைக்கலன்கள் கைப்பற்றப்பட்டன; இங்குதான் முதன் முதலாக ஓட்டோ டொங்கான் என்ற குறியீட்டுப்பெயருடைய தானியங்கி கைக்குண்டு செலுத்தி கைப்பற்றப்பட்டது. சிங்களக் கடற்படையினரின் இவ் அதிரடித் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வந்த படையினர் கட்டைக்காடு கடற்படைத்தளம் நோக்கி பின்வாங்கப்பட்டனர். இச்சமரில் தரைத்தாக்குதலணியின் 42 போராளிகள் பங்கெடுத்திருந்தனர். இத்தாக்குதலில் அப்போதைய சூட்டி தரைத்தாக்குதல் அணியின் கட்டளையாளர் களத்தை வழிநடாத்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை வழிநடாத்தியிருந்தார்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
      • கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம் (40 அடி நீளம் கொண்டது)
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
      • கல வகை: உட்கரைச் சுற்றுக்காவல் கலம்
  • சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 9 பேர்
      • கடற்படையினர்: 9 பேர்
    • காயப்பட்டோர்: 44 பேர்
      • கடற்படையினர்: 9 பேர்
      • தரைப்படையினர்: 35 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கெங்கன் எ கெங்காதரன், கப்டன் ஆனந்தபாபு, லெப்.கேணல் வாசன் எ தனராஜ்

ஆதாரம்: உதயன்: 22 & 24 /10/1996 | உயிராயுதம் - 5 | கட்டுரை: பூனைத்தொடுவாய் தளத்தை தாக்க தரையிறங்கிய படையினர் மீதான முறியடிப்பு சமர்

 


  • திகதி: ஒக்டோபர் 25, 1996
  • அடிபாட்டுக் காலம்: சாமம்: 11:00 மணியளவில்
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: அண்ணளவாக எற்பாடு 5:45 மணி
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: பூனைத்தொடுவாய் நிகழ்விற்கு பகரடி நடத்தும் நோக்கோடு திருமலை துறைமுகத்தை பத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கடற்புலிகளின் கலத்தொகுதிகள் சில அண்மித்தன. அவ்வேளையில் இதைக் கண்ட சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் அவற்றைத் தடுத்து நிறுத்த நெருங்கிய போது அவற்றில் ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு டோறா மூழ்கியது. அதன் கலக்கூட்டில் ஓட்டை விழுந்து அது நீரில் அமிழ்ந்துகொண்டிருந்த போது லெப். கேணல் நிரோஜன் (கடற்புலிகளின் பின்னாளைய துணைக் கட்டளையாளர்) தனது சண்டைப்படகை அதற்கு அருகில் நகர்த்தி அதன் மீது ஏறினார். பின்னர் அதிலிருந்த 20 மிமீ சுடுகலனை கழட்டிக்கொண்டிருக்கும் போது இதைக் கண்டுகொண்ட மற்றொரு டோறா இவர்களைத் தாக்க எத்தனிக்க டோறாவிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகு மறுபக்கத்தால் திரும்பி அந்த டோறாவைத் தாக்கியது. நிரோஜனும் சுடுகுழலை மட்டும் கழட்டியபடி நீriனுள் பாய்ந்து நீந்தி தனது படகில் ஏறினார். மற்றைய டோறா ஏனைய கடற்படைப் படகுகளின் உதவி கிடைக்கும் வரை கடற்புலிகளின் கலத்தொகுதியுடன் மிண்டிச் சமாளித்தது. வெற்றிகரமாய் இலக்கு அழிபட்டமையால் கடற்புலிகள் தம் தளம் நோக்கிப் பின்வாங்கினர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (சாதாரணம்)
      • தொடரெண்: P-457
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 12 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நளினன் எ தில்லையன், கப்டன் ஜெயராஜ் எ பெரியதம்பி
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 27/10/1996 | உயிராயுதம் - 5 | கட்டுரை: லெப். கேணல் நிரோஜனின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: நவம்பர் 11, 1996
  • நிகழ்வு இடம்: காரைநகர் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: காரைநகரிலிருந்து காங்கேசன் துறைமுகம் வரை சுற்றுக்காவலில் ஈடுபடும் டோறாக் கலம் இலக்கு வைக்கப்பட்டது. இதற்காக சக்கைவண்டி ஒன்று மன்னாரிலிருந்து புறப்பட்டு நெடுந்தீவு, காரைநகர் எனக் கடற்பயணம் செய்து, காரைநகரிற்கு அண்மையில் வைத்து துரத்திச்சென்று மோதியிடித்தது. இலக்குச் சற்று விலகி விட்டதால் டோறா சேதத்துடன் தள்ளாடியது. பின்னர் நடந்த மோதலில் மற்றொன்று கடற்புலிகளின் சூட்டில் சேதமடைந்தது. விடுதலைப்புலிகள் தரப்பில் கடற்கரும்புலிகள் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: 4 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் பாரதி, கப்டன் இன்னிசை
      • கடற்கரும்புலி வகை: நீர் மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உயிராயுதம் - 5 | உதயன்: 12/11/1996 | குறித்த நாளின் மாவீரர் பட்டியல்

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1997

 

 

  • திகதி: சனவரி 15, 1997
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 12:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: மண்டைதீவுக்கும் கல்முனைக்கும் (பூநகரி) இடைப்பட்டக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் தரைப்படையினரையும் கடற்படையினரையும் ஏற்றிக்கொண்டு வந்த இரு கட்டைப்படகுகள் கடற்புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகின. இதில் ஒன்றிலிருந்த படையினர் கொல்லப்பட்டதோடு 21 அடி நீள கட்டைப்படகும் கைப்பற்றப்பட மற்றையது தப்பியது. கடற்படையினரின் சடலங்கள், சில படைக்கலன்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஏந்தனங்கள், வெளியிணைப்பு மின்னோடிகள் (Outboard Motor) ஆகியன கைப்பற்றப்பட்டன. புலிகளின் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: கட்டைப்படகு
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 3 பேர்
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 17/01/1997 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மார்ச் 8 & 9, 1997
  • நிகழ்வு இடம்: மன்னார்க் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் நடைபெற்ற மோதல். விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புகள் ஏற்படவில்லை.
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 20/03/1997 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மார்ச் 15, 1997
  • அடிபாட்டுக் காலம்: காலை 9:45 மணியளவில்
  • நிகழ்வு இடம்: சாலை கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சாலைக் கடற்பரப்பில் சூழ்ச்சிப்பொறியாக நடமாடிய கடற்புலிகளின் படகொன்றைத் தாக்கும் எண்ணத்தோடு நெருங்கிய டோறா மீது ஏற்கனவே எதிர்தாக்குதல் நடத்த கடற்கரையில் அணியமாயிருந்த விடுதலைப்புலிகள், டோறா தம் கரையை அண்மித்தவுடன் அதன் மீது மூன்று கணையெக்கி (mortar) எறிகணைகளை ஏவினர். அவை டோறாவுக்குள் வீழாமல் அருகில் வீழ்ந்து வெடித்ததில் டோறா மெல்லிய சேதமடைந்தது.
  • சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இல்லை
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 20/03/1997 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மார்ச் 24, 1997
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 12:30 மணி முதல் வைகறை 5:30
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் சாலைக் கடற்தளம் மீது வலிதாக்குதல் நடத்தவென கொடிக்கப்பலான பராக்கிரமபாகுவோடு அதற்கு ஏமமாக (escort) மூன்று சுடுகலப் படகுகளும் எட்டு டோறாக்களுமாக முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தன. பராக்கிரமபாகுவிலிருந்த உந்துகணைகளின் மூலம் கடற்புலிகளின் தளம் மீது தாக்குதல் நடத்துவது என்பதுவே சிங்களவரின் திட்டமாக இருந்தது. இதை மாறிப் புரிந்து, அதாவது வருவது சில சிங்களக் கடற்கலங்கள் என்றும் அதன் மீதே தாக்குதல் நடத்தச் செல்கிறோம் என்ற எண்ணத்தோடு சென்ற கடற்புலிகளுக்கு, தம் வலுவை விஞ்சியதான, தம் மீதே தாக்குதல் நடத்தும் வலுவோடு கடற்படையினர் வருகின்றனர் என்பது தெரிந்திருக்கவில்லை. எனவே முன்னகர்ந்து வந்த கடற்படையோடு முதலில் மிண்டிய கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்கும் கடற்சமர் வெடித்தது. 30 கடல்மைல்  தொலைவில் வந்துகொண்டிருந்த பராக்கிரமபாகுவை தம் முதன்மை இலக்காகக் கருதிய கடற்புலிகள் முன்னால் வந்த டோறாக்களை அடித்து விலத்தி, கப்பல் மீது தாக்குதலைத் தொடுக்கின்றனர். கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'ஒஸ்கார்' என்ற சண்டைப்படகின் முதன்மைச் சூட்டாளரும் கடற்புலிகளின் சிறந்த சூட்டாளருமாகிய லெப். கேணல் ஒஸ்காரின் சூட்டில் பராக்கிரமபாகுவின் முதன்மைச் சுடுகலத்தின் சூட்டாளர் கொல்லப்பட அவரோடு நின்ற மேலும் ஏழு படையினர் காயமடைந்தனர். இத்தாக்குதலின் மூலம் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி கடற்கரும்புலிகளான மேஜர் நாவலன், கப்டன் கலைவள்ளி ஆகியோர் மோதச் சென்ற போது கப்பலில் நின்ற ஏனைய கடற்படையினரின் வேட்டில், எட்டுவதற்கு இன்னும் 30 மீட்டர்களே எஞ்சிய நிலையில், இடியன் தீப்பிடித்து எரிந்து போனது. இரண்டாவது இடியன் மேற்கொண்டு நடந்த சமரில் கடற்படையின் தாக்குதலிற்கு இலக்காகி வெடித்தது.
  • சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகை: சுடுகலப் படகு
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 பேர்
    • காயப்பட்ட கடற்படையினர்: 7/8 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர்
    • கடற்கரும்புலிகள்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதீஸ் எ நாவலன், மேஜர் தமிழ் மாறன், கப்டன் வானதி, கப்டன் கலைவள்ளி 
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். சுகுணன் எ மாவேந்தன்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 30/05/1997 | உயிராயுதம் -

 


  • திகதி: ஏப்பிரல் 10,1997
  • அடிபாட்டுக் காலம்: காலை
  • நிகழ்வு இடம்: தலைமன்னார்க் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: மன்னார் தீவில் தலைமன்னாரிலிருந்து பேசாலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கடற்படையின் இரு கட்டைப்படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டன. இதில் ஒரு படகு புலிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு அதிலிருந்த மூன்று காவல்துறையினரும் ஐந்து கடற்படையினரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்த கடற்சமரில் மேலுமொரு கடற்படையினன் கொல்லப்பட்டார். கைப்பற்றப்பட்ட படகிலிருந்த எட்டுச் சடலங்களும் மாங்குளத்தில் வைத்து செஞ்சிலுவைச்சங்கத்தின் அனைத்துலகக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. புலிகளின் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: கட்டைப்படகு
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 9 பேர்
      • கடற்படையினர்: 6 பேர்
      • காவல்துறையினர்: 3 பேர்
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 11 & 14 /04/1997 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மே 27, 1997
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 12:30 மணி முதல் வைகறை 5:30
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய்க் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இவ்வலிதாக்குதலில் இயற்கை தமிழருக்குச் சாதமில்லாமல் போனதால் பேரிழப்பு ஏற்பட்டது. முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படைக்கு எதிரான வலிதாக்குதல் ஒன்று செய்வதற்காக கடற்புலிகளின் ஆறு சண்டைப்படகுகளும் ஆறு இடியன்களுமாக அணியமாகி நின்றன. அதே நேரம் செம்மலையிலிருந்து தலைநகரான திருமலைக்கு ஒரு வழங்கல் நடந்துகொண்டிருந்தது. அதில் பங்கெடுத்த ஒரு நடுத்தர மற்றும் ஒரு சிறிய தர வகை படகு என்பன பணியை முடித்து விட்டு இக்கலமணியோடு சேர்ந்துகொண்ட போது இவ் வழங்கல்களை முடித்துவிட்டு திரும்பிய படகுகளை தாக்கவென உயரக்கடலில் நின்ற எட்டு டோறாக்கள் கீழிறங்கி வந்தன. அவற்றோடு பொருதவென கடற்புலிகள் உயரச் சென்ற போது எதிர்பாராமல் ஏற்பட்ட முரட்டுத்தனமான கடலாலும் காற்றாலும் கனமாக அலை எழுந்து மோதியதால் சென்ற ஆறு இடியன்களில் நான்கு வெடித்துச் சிதறின. மேற்கொண்டு கடற்படையோடு மிண்டிய கடற்புலிகள் பின்னர் கரை திரும்பினர்.
  • சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2
    • கடற்கலப் வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இல்லை
    • காயப்பட்ட கடற்படையினர்: 1 ஆள்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 8 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அன்பு, மேஜர் இளமகன், மேஜர் வலம்புரி, மேஜர் வினோதா, மேஜர் சந்திரா, கப்டன் சுதாகரன், கப்டன் அருளர்சன், கப்டன் சித்தா 
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 4 
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 30/05/1997 | உயிராயுதம் -

 


  • திகதி: மே 29, 1997 வகைறை
  • நிகழ்வு இடம்: திருமலைத் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: தலைநகர் திருமலையிலிருந்த பிரிமா ஆலைக்கு 52 ஆயிரம் மெற்றிக் தொன் கோதுமை தானியத்தை ஏற்றிவந்த கிரேக்க நாட்டுக் கப்பல் மே 23 ஆம் திகதி முதல் திருமலை துறைமுகத்திற்கு வெளியே தரித்திருந்தது. தரித்திருந்த கப்பலின் கலக்கூட்டில் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் 29/05/1997 அன்று சாம இறுதியில் நீரடி நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தி வெடிப்பித்ததின் மூலம் பொறி அறை சேதமடைந்தது. உடைப்பு ஏற்பட்டு கடல் நீரும் உட்புகுந்தது. பின்னர் கொழும்பிலிருந்து அழைத்து வரப்பட்ட வல்லுநர்கள் மூலம் சேதம் சரிசெய்யப்பட்டு 16/07/1997 அன்று சிறிலங்காவின் 'வெரிதாஸ்' என்ற இழுவைப்படகு மூலம் சிங்கப்பூர் நோக்கி இழுத்துச் செல்லும் பணி தொடங்கப்பட்டது.
  • சேதமாக்கப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அதேனா (Athena)
    • கல வகை: சரக்குக் கப்பல்
  • சிறிலங்காக் கடற்படை/ ஊழியர் ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இல்லை
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 30 & 31/05/1997, 16/07/1997

 


  • திகதி: சூலை 1, 1997
  • நிகழ்வு இடம்: பேசலைக் கடற்பரப்பில் கரையிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறையிலிருந்து மன்னாருக்கும் திருமலைக்கும் பயணிகள் மற்றும் ஏதிலிகளை ஏற்றிப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது என்னும் போர்வையில் படையினரையும் ஏற்றிப்பறிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தது இக்கப்பல். 500 பேர் வரை ஏற்றிச்செல்லக் கூடிய இக்கப்பலில் 300 ஏதிலிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல சிங்களக் கடற்படை அனுமதி வழங்கியிருந்தது. மிச்ச இடத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவில்லை. அவ்விடங்களில் தான் தவிபு கூறுவது போன்று படையினரை ஏற்றிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நிகழ்வன்று இக்கப்பல் காங்கேசன்துறையில் ஏதிலிகளை இறக்கிவிட்டு அடுத்த தடவைக்காக மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதனோடு 'தாராகி' என்ற கலப்பெயர் கொண்ட இன்னொரு வலசையும் (ferry) சென்றுகொண்டிருந்தன. காலையில் நேரத்துடன் மன்னாரை அண்மித்த இவ்வலசை இறங்குதுறைக்குச் செல்வதற்கான கடற்படையின் அனுமதியை எதிர்பார்த்து பேசாலைக் கடற்பரப்பில் கரையிலிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது. அப்போது காலை 6:30 மணியளவில் 5 சண்டைப்படகுகளில் வந்த கடற்புலிகள் கப்பல் ஊழியர்கள் 9 பேர் உட்பட 39 பேரைக் கடத்தியதோடு கப்பலையும் எரித்துவிட்டுச் சென்றனர். இச்செயலைக் கண்ட பின்னால் வந்த மற்ற வலசை ஆழ்கடல் வழியே தலைமன்னார் துறைக்கு ஓட்டமெடுத்தது. கடத்திச் செல்லப்பட்ட கப்பல் ஊழியர்கள் 9 பேரில் இருவர் இந்தோனேசியர், ஐவர் சிங்களவர், ஒருவர் தமிழன் மற்றும் ஒருவர் முசிலீமும் ஆவர். இந்தோனேசிய கப்பல் ஊழியர்கள் இருவரும் 04/07/1997 அன்று விடுதலை செய்யப்பட்டனர். பொதுமக்களில் 7 பேர் 14/07 அன்று விடுதலை செய்யப்பட்டனர். ஏனையவர்களில் ஒருவர் தவிர்த்து அனைவரும் அநுராதபுரத்தில் கைதுசெய்யப்பட்ட ஐந்து விடுதலைப்புலிகளை விடுவிப்பதற்காக மாற்றிக்கொள்ளப்பட்டனர். எஞ்சிய ஒரு சிங்களவர் (கலக்குழு உறுப்பினர்)  தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டு 25/10/1998 அன்று செஞ்சிலுவைச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தாங்கள் யாரும் வேதனைப்படுத்தப்படவோ இல்லை வதைக்கப்படவோ இல்லையென்றும் நல்லபடியாகவே நடத்தபட்டோம் என்றும் பன்னாட்டு மன்னிப்பு அவையிடம் தெரிவித்திருந்தனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: எம்.வி. மிசென் (MV Misen)
    • கல வகை: வலசை
  • கப்பல் ஊழியர் ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இல்லை
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 2 & 5/07/1997 | தமிழ்நெற்: 11/07/1997 (Tigers target sea bridge) | asa370191997en.pdf (பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை)

 


  • திகதி: சூலை 8, 1997
  • அடிபாட்டுக் காலம்: மாலை 8:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: காங்கேசன்துறையில் வழங்கல் சரக்குகளை இறக்கிவிட்டு திருமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த "மின்செல் இன்டர்னசனல் லிமிடெட்" என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பலானது முல்லைத்தீவில் வைத்து புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் திடீரென ஆழ்கடல் நோக்கி கப்பல் செல்லத் தொடங்கிய வேளை கப்பலை வலுக்கட்டாயமாக நிறுத்துவதற்காக கடற்புலிகள் எழுதருகை (warning) வேட்டுகளைத் தீர்த்தனர். பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரே அதிலிருந்த வடகொரிய கலக்குழுவினரில் ஒருவர் கொல்லப்பட்டு விட்டாரென்பது தெரிய வந்தது. பேந்து, கப்பல் அளம்பில் நோக்கி கொண்டு செல்லப்பட்டு கலக்குழுவினர் 38 பேரும் தரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கப்பலில் இருந்த கொல்லப்பட்ட ஊழியரின் சடலமும் ஏனைய ஊழியர்களும் சூலை 13 அன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். விடுவிக்கப்பட முன்னர் புலிகளின் முகாம் ஒன்றில் அவர்களுக்கு தமிழ் மரபுப்படி விருந்து கொடுக்கப்பட்டது. அதில் புலிகளின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது கலக்குழுவினரும் அவர்களோடு சேர்ந்து பாடி ஆடினர். கப்பலின் தண்டையல் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை துன்புறுத்துவதில் 'இரக்கமற்றது' என்று விரித்ததாகவும், ஆயுதப் போராட்டத்திற்கு அனுதாபம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்கப்பலானது 01/09/1997 அன்று கொரிய கப்பல் நிறுவனத்திடம் அலுவல்சாராக கையளிக்கப்பட்டது. அதை செஞ்சிலுவைச் சங்கத்தின் 'சிகிரி' என்ற இழுவைப்படகு முல்லை. இருந்து திருமலை நோக்கி இழுத்துச் சென்றது.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: எம்.வி. மொ றான் பொங் (MV Mo Ran Bong)
    • கல வகை: சரக்குக் கப்பல்
  • கப்பல் ஊழியர் ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1
    • காயப்பட்டோர்: இல்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 09 & 13/07/1997, 23 & 25/08/1997, 02/09/1997 | தமிழ்நெற்: 11/07/1997 (Tigers target sea bridge), 13/07/1997 (Mo Ran Bong's Crewmen Released)

 


  • திகதி: சூலை 25, 1997
  • அடிபாட்டுக் காலம்: காலையில் 7 மணிநேரம் 
  • நிகழ்வு இடம்: முல்லை கடற்பரப்பிற்கும் புல்மோட்டை கடற்பரப்பிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் படகுகளைக் கண்டு அவற்றின் மேல் கடற்படையினர் மேற்கொண்ட வலிதாக்குதலிற்கு எதிரான தாக்குதல் இதுவாகும்.
  • சேதமாக்கப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: கடற்படைப் படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 26/07/1997 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: ஓகஸ்ட் 14, 1997
  • அடிபாட்டுக் காலம்: சாமத்திலிருந்து வைகறை 3:30 வரை மூன்று மணிநேரம் நடந்தது
  • நிகழ்வு இடம்: அளம்பிலுக்கும் புல்மோட்டைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவிலிருந்து எட்டுப் படகுகளில் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளை குறித்த கடற்பரப்பில் வழிமறித்த போது சிங்களக் கடற்படைக்கும் கடற்புலிகளுக்கும் கடற்சமர் வெடித்தது.
  • சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்காக் கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்: லெப். செல்வன்

ஆதாரம்: உதயன்: 15/08/1997 | மாவீரர் பட்டியல்

 


  • திகதிசெப்டெம்பர் 9, 1997 
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணி முதல்
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: "சீன ஓசன் சிப்பிங் கொம்பனி" என்ற சீன நாட்டு கப்பலேற்றும் நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பலானது சிறிலங்கா சிறப்புப் படையினரும் சிங்களக் கடற்படையின் சுடுகலப் படகுகளும் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்க புல்மோட்டையிலிருந்து நியூயோர்க்கிற்கு 15 மில்லியன் மதிப்புள்ள 26,235 மெற்றிக் தொன் இல்மனைட்டு தனிமத்தை ஏற்றிச்செல்ல அணியமாக இருந்த போதே கடற்புலிகளின் அதிரடித் தாக்குதலிற்கு இலக்கானது. உந்துகணைகளை ஏவியும் இயந்திரச் சுடுகலன்களால் சுட்டபடியும் சிங்களத்தின் கடல் திரையைக் கிழித்து முன்னகர்ந்த கடற்புலிகள் கடற்சிறுத்தைகளை கப்பல் தளத்தில் ஏற்றினர். கடற்சிறுத்தைகள் கப்பலின் தளத்தில் காவலிற்கிருந்த சிறிலங்கா அதிரடிப்படையினருடன் முரட்டுடன் மிண்டினர். ஒரு கட்டத்தில் கைகலப்புமானது. பின்னர் தளத்திலிருந்த கடற்சிறுத்தைகளால் கப்பல் கைப்பற்றப்பட்டு சக்கை வைத்து வெடிக்க வைக்கப்பட்டதில் தீப்பிடித்து மூழ்கத்தொடங்கியது. கப்பல் தளத்தில் நடந்த சண்டையில் ஆகக் குறைந்த 15 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு இரு கன்னைக்கும் நடுவில் சிக்குண்டதால் குறுக்குச்சூட்டில் சீனக் கலக்குழுவினரில் சிலரும் உள்ளூர் தொழிலாளிகள் சிலரும் கொல்லப்பட்டனர். கடலில் நடந்த சமரில் மூன்று "கடற்படைப் படகுகள்" மூழ்கடிக்கப்பட்டதுடன் (தமிழ்நெற் செய்தியாளர்களுடன் கதைத்த சிங்கள அதிகாரி ஒருவரால் இத்தகவல் உறுதி செய்யப்பட்டது) மேலும் ஒன்று புலிகளால் கைப்பற்றப்பட்டது. எவ்வாறெயினும் மற்ற அறிக்கைகளின்படி அங்கு காவலுக்கு நின்றிருந்த கனமாக ஆயுதம் பூண்ட டோறாக்கள் மூன்றும் உதவிக்கு விரைந்த டோறாக்கள் மூன்றும் தப்பியோடியதால் கப்பலில் நின்ற வலுவெதிர்ப்புக்காரர்கள் தற்காத்துக்கொள்ளும்படி ஆயிற்றாம். தமது முதல் தாக்குதல் மூலம் விடுத்த எழுதருகையை (warning) புறக்கணித்து தொடரப்பட்ட தமிழ் மக்களின் கனிம வளங்கள் சுறண்டப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே சிறிலங்கா அரசால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இக் கப்பலை அழித்ததாக புலிகள் தெரிவித்தனர். ஏனைய ஊழியரும் தொழிலாளிகளும் கடலில் குதித்து நீந்தி உயிர் பிழைத்தனர். 14ம் திகதியளவில் முற்றாக மூழ்கிவிட்ட கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சரக்கில் இரண்டாயிரம் தொன் மட்டுமே மீட்கப்பட்டது. சிறிதளவு படைக்கலன்களும் படகும் நான்கு கடல் அதிரடிப்படையினரின் சடலங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இந்நடவடிக்கை தொடர்பில் 11/09/1997 அன்று இலண்டனிலிருந்து புலிகள் வெளியிட்ட ஊடக வெளியீட்டின் உரை பின்வருமாறு:

"புல்மோட்டையில் உள்ள இல்மனைட்டு தாது மணல் தமிழீழத்தின் எல்லைக்குள் காணப்படும் மூல இயற்கை வளங்களில் ஒன்றாகும்.

"வெளிநாடுகளில் அதிக விலைக்கு விற்பதற்காக இக்கோட்டத்திற்கு உரித்துடையது சிங்கள அரசால் முறைமையான வகையில் சூறையாடப்படுகிறது. இதன் விற்றுமுதல் தமிழ் மக்களின் அழிவிற்காக படைக்கலன்கள் மற்றும் கணைகள் கொள்வனவு செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

"இந்த அநீதியைத் தொடர இசைவளிக்க முடியாது.

"மேற்பட்ட சூழ்நிலையின் கீழ், கூறப்பட்ட இல்மனைட்டு தாது மணலை ஏற்றிக்கொண்டிருந்த சரக்குக் கப்பலைத் தாக்கியழிக்கத் தள்ளப்பட்டோம். நாங்கள் செய்ததை எந்தவொரு குறிப்பிட்ட வணிகத்தையோ கப்பலேற்றும் அமைப்பையோ நோக்கி நெறிப்படுத்தப்பட்ட ஆகாத வினையாற்றலாகப் பொருள்கொள்ளக்கூடாது. பன்னாட்டு வணிகத்திற்கோ கப்பலேற்றலுக்கோ கெடுதியான ஒரு வினையாற்றலாகவும் இதை முடிவுசெய்யக்கூடாது

"எங்களுடைய வளங்கள் அகற்றப்படுவதையும் விற்கப்படுவதைத் தடுக்கவும், சிறிலங்கா அரசின் போர் வியூகத்தை முறியடிக்கவும் நாங்கள் முட்டலை மேற்கொண்டோம். இதற்கு முன் இதே தாது மணலை ஏற்றிக்கொண்டிருந்த மற்றொரு கப்பலை இதே பரப்பில் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளோம் என்ற மெய்யுண்மை (fact) பெரிதாக உலகமே நன்கறிந்ததே. எங்களின் எழுதருகையை சிறிலங்கா அரசு பொருட்படுத்தவில்லை. மாறாக, படைத்துறைக் காப்புடன் நடைமுறையைத் தொடர்ந்தது.

"சரக்குக் கப்பலின் தளத்தில் அதிரடிப்படையினர் வைக்கப்பட்டிருந்ததோடு கடற்படை விரைவுத் தாக்குதல் கலங்களும் டோறா சுடுகலப் படகுகளும் கூறப்பட்ட சரக்குக் கப்பலைச் சுற்றியுள்ள கடலில் இருந்தன. இந்தப் படையத் தடுப்புவரிசையை உடைத்துச் சரக்குக் கப்பலின் தளத்தில் ஏறினோம். சில வெளிநாடு மற்றும் உள்ளூர் கப்பல் ஆட்கள் அடுத்தடுத்த சூட்டுச் சண்டையில் இறந்தனர்.

"இந்த முறையில் உயிர்கள் இழக்கப்பட்டதற்கு ஆழ்ந்து வருந்துகிறோம்.

"கடலிலும் நிலத்திலும் போர் சீற்றமடைகிறது. அடக்குமுறை முடிவிலியான பகைவரால் எமது இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பிற்கு இசைவளிக்க முடியாது. எமது நிலத்தினதும் எமது தேசத்தினதும் ஓம்பலிற்காகவும் நல்வாழ்விற்காகவும் குறிப்பிடவியலா உறுதியான காப்பு நடவடிக்கைகளை எடுக்க நாம் தவிர்க்க முடியாத கட்டாயத்தில் இருக்கிறோம்."

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 4
    • கடற்கல வகுப்புப் பெயர்: எம்.வி. கோர்டியாலிட்டி (MV Cordiality)
      • கல வகை: சரக்குக் கப்பல்
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
      • கல வகை: "கடற்படைப் படகு" (மொத்தம் மூன்று)
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
      • கல வகை: அறியில்லை
  • சிறிலங்காக் ஆயுதப்படை ஆளணியினரில்,
    • தரைப்படை
      • கொல்லப்பட்டோர்: 5 பேர் 
      • காயப்பட்டோர்: அறியில்லை
    • அதிரடிப்படை
      • கொல்லப்பட்டோர்: 10 பேர் 
      • காயப்பட்டோர்: அறியில்லை
  • கப்பல் ஊழியர் (சீனர்) ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டர்: 8 பேர்
    • காயப்பட்டோர்: 22 பேர்
  • உள்ளூர் தொழிலாளர் ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 5 பேர்
    • காயப்பட்டோர்: 5 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 10, 11 & 15 /09/1997 | தமிழ்நெற்: 12/09/1997 (LTTE allays shipping fears) | LTTE PRESS COMMUNIQUÉ 11/09/1997

 


  • திகதி: ஒக்டோபர் 19, 1997
  • அடிபாட்டுக் காலம்: மாலை 9:00 மணி முதல் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது  
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: அதிகாலை 1:45 மணியளவில்
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: திருகோணமலையிலிருந்து வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறுய்) நடவடிக்கைக்காக வன்னிக்குப் போராளிகளைக் கொண்டுவரும் பணியில் மாலை 6 மணி முதல் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கும் அவர்களைத் தடுக்கவென திருமலையிலிருந்தும் காங்கேசன்துறையிலிருந்தும் வந்திருந்த ஒன்பது டோறாக்களும் இடையில் மாலை 9:00 மணி முதல் தொடராக கடற்சமர் வெடித்தது. தொடராக நடந்த கடற்சமரின் விளைவாய் சாமம் 1:30 மணியளவில் லெப். கேணல் நிரோஜன் (பின்னாளைய கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்) தனது சுடுகலனால் டோறாவைச் சுட்டு நிலைகுலையவைக்க அவருடன் நின்ற கடற்கரும்புலிகள் இருவரால் ஓட்டப்பட்ட குண்டுப்படகொன்று டோறாவில் மோதியிடித்து அதை மூழ்கடித்தது. கொல்லப்பட்ட கடற்படையினன் ஒருவனின் சடலம் 23ம் திகதி கொக்கிளாய்க் கடற்கரையில் கரையொதுங்கியது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: பேபி டோறா
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கலப் வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 7 பேர்
    • காயப்பட்டோர்: 2 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர்
    • கடற்புலிகள்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வீரமணி, கப்டன் பரமு, கப்டன் நவநீதன் எ மதிவதனன்
    • கடற்கரும்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சிறி, கப்டன் சின்னவன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
      • படிமங்கள்:

large.15578401_254416354979210_8075341479592237141_n.jpg.0df5a23e16b9cdf6900dfca7b26b54e1.jpg

  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 20, 21 & 24.10.1997 | உயிராயுதம் - 6 | தமிழ்நெற்: 19/10/1997 (Tigers sink Sri Lankan gunboat)

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 ஆண்டு: 1998

 

 

  • திகதி: பெப்ரவரி 22, 1998
  • அடிபாட்டுக் காலம்: மாலை 7:15 மணியிலிருந்து அடுத்த நாள் வைகறை 2:00 மணி வரை  
    • வலம்புரி மீது இடியன் மோதிய நேரம்: மாலை 8:00 மணியளவில்
    • பப்பதா மீது இடியன் மோதிய நேரம்: மாலை 9:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணி & காங்கேசன்துறை கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: தொடரணியில் சென்று கொண்டிருந்த இரு கடற்கலங்கள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன. நிகழ்வின் முழு விரிப்பு: 
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கலப் பெயர்: பப்பதா
      • கல வகை: எந்திரமயப்பட்டவை தரையிறக்கக் கலம் (LCM)
    • கடற்கலப் பெயர்: வலம்புரி
      • கல வகை: படைய வலசை (Military ferry)
    • படிமம்:

Valampuri ship (Left) and Pabbatha LC (Right) on the day of attack.jpg

சமர் நடந்த நாளில் கடற்புலிகளால் எடுக்கப்பட்ட நிகழ்படக் காட்சியிலிருந்து: இடது பக்கம் நிற்பது வலம்புரி, வலது பக்கம் நிற்பது பப்பதா | படிமப்புரவு(Img. court.): நிதர்சனம்

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 47 பேர்
    • காயப்பட்டோர்: 62 பேர் (நீரில் தத்தளித்து சிங்களச் சுழியோடிகளால் மீட்கப்பட்டோர் மற்றும் நீந்திக் கரைசேர்ந்தோர்)
    • மேலும் நால்வர் நீந்தித் தமிழ்நாடு சென்று அங்குள்ள தமிழ் மக்களால் காப்பாற்றப்பட்டு மீண்டும் வானூர்தி மூலம் சிறிலங்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 11 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கரன், கப்டன் மேகலா, மேஜர் வள்ளுவன், மேஜர் குமரேஸ் எ குமரேசன், கப்டன் ஜனார்த்தனி, கப்டன் வனிதா, மேஜர் மாமா எ சுலோஜன், மேஜர் நைற்றிங்கேள் எ தமிழ்நங்கை, மேஜர் தமிழினியன், கப்டன் நங்கை, மேஜர் தமிழின்பன் எ மொறிஸ்
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 5
    • வகுப்புப் பெயர்
      • அறியப்பட்டவை: மூன்று வெள்ளை வகுப்பு மற்றும் ஒரு சூடை வகுப்பு

ஆதாரம்: உதயன்: 20, 21 & 24/02/1998, 01,02 &/03/1998  | உயிராயுதம் - 7 | தமிழ்நெற்: 23/02/1998 (Two tanks on sunk ships), (Eleven Tigers killed in naval battle), (Sea tigers sink ship carrying troops - radio)

 


  • திகதி: பெப்ரவரி 25, 1998
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 11:50 மணியளவில் தொடங்கியது
  • நிகழ்வு இடம்: கிளாலி கடற்படைத்தளம்
  • நிகழ்வு விரிப்பு: கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தின் கிளாலித் தளத்தினுள் புயலெனப் புகுந்து அங்கிருந்த படகுகள் மீது தாக்குதல் நடாத்தினர் கடற்சிறுத்தைகள். நிகழ்வின் முழு விரிப்பு: 
  • அழிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2
    • கடற்கலப் வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கலவகை: சுடுகலப் படகுகள்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 5 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • கடற்சிறுத்தைகள் ஆளணியினரில்: 
    • வீரச்சாவடைந்தோர்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: 'நடவடிக்கைக் கட்டளையாளர்' மேஜர் குயிலன், கப்டன் ஜெயந்தன், கப்டன் சூரி எ சூரியன்
    • காயமடைந்தோர்: 3 பேர்

ஆதாரம்: உதயன்: 27/02/1998, 01/03/1998 | தமிழ்நெற்: 26/02/1998 (SLN boat destroyed in commando raid - Radio) | திரைப்படம்: ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ என்ற இந்நடவடிக்கையினை அப்படியே காட்சியாக மனக்கண்முன் நிறுத்திய திரைப்படம்

 


  • திகதி: மார்ச் 11, 1998
  • அடிபாட்டுக் காலம்சாமம்
    • வோட்டர் ஜெட் மீது இடியன் மோதிய நேரம்: சாமம் 1:30 மணி 
  • நிகழ்வு இடம்: திருமலை வட்டத்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இக்கரும்புலித் தாக்குதலின் இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது தலைநகர் திருமலையின் துறைமுக நுழைவுவாசலில் உள்ள வட்டத்தீவிற்கும் அதற்கருகிலுள்ள யானைத்தீவிற்கும் இடையில் சுற்றுக்காவலில் ஈடுபடும் வோட்டர் ஜெட் வகுப்புப் படகேயாகும். இதற்காக கடற்புலிகளின் கடல் அதிரடிப்படையான "கடற்சிறுத்தைகள்" பிரிவிலிருந்து இருவர் கடற்கரும்புலிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இவர்களை வட்டத்தீவு வரை அழைத்துச் செல்லும் பணி கடற்புலிகளான லெப். கேணல் ஜோன்சன் மற்றும் லெப். கேணல் தர நிலையுடைய புலவர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக கடற்கரும்புலிகளை அழைத்துச் சென்று வட்டத்தீவிற்கு அருகில் உள்ளவொரு சிறிய தீவு ஒன்றில் சில நாட்கள் தளமிட்டிருந்தனர். முன்னர் பெயரிடப்படாத அத்தீவில் நுளம்புகள் அதிகமாக இருந்ததால் "நுளம்பான் தீவு" என்று இவர்கள் அத்தீவிற்குப் பெயர் சூட்டினர். அத்தீவிலேயே இவர்கள் சமைத்துண்டு படுத்துறங்கினர். அத்தோடு அங்கிருந்தபடியே தாக்குதலிற்கான மேலதிக வேவுகளை கடற்கரும்புலிகளும் அழைத்துச் சென்றோருமாக மாறிமாறி எடுத்தனர். தாக்குதல் நாளன்று குறித்த இலக்கு மீது கவிர் வகுப்புக் குண்டுப்படகை வட்டத்தீவு வரை நீரில் தள்ளி நகர்த்திச் சென்று, பகைவருக்கு அசுமாத்தம் காட்டக்கூடாது என்பதற்காக, அங்கால் இடியர்கள் ஓட்டிச் சென்று வெற்றிகரமாக மோதியிடித்தனர். சிங்களவரின் படகில் இருந்த கடற்படையினர் எழுவரில் ஐவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இத்தாக்குதலை கடற்கரும்புலி லெப். கேணல் பாண்டியன் எ வள்ளுவன் நேரடியாக வழிநடாத்தினார். இத்தாக்குதலில் கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவரும் பங்கெடுத்திருந்தார்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 2 பேர்
    • காயப்பட்டோர்: இல்லை   
  • வீரச்சாவடைந்த கடற்சிறுத்தைக் கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் இசையாளன், கப்டன் ஆர்வலன் 
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: கவிர்

ஆதாரம்: உதயன்: 12 & 13/03/1998 | தமிழ்நெற்: 11/03/1997 (Two Sea Tigers killed - Radio), (Sea tigers sink SLN boat) | உயிராயுதம் பாகம்-7 | இத்தாக்குதலில் பங்குபற்றிய கடற்புலிகளின் கட்டளையாளர் திரு. புலவரின் வாக்குமூலம் | கட்டுரை: 'திருமலைத் துறைமுக வாசலில் வோட்டர் ஜெட்டை மூழ்கடித்த கடற்சிறுத்தைக் கரும்புலிகள்'

 


  • திகதி: மார்ச் 10 & 11, 1998
  • கடற்சமர்க் காலம்: சாமம் 10:30 மணி முதல் வைகறை 4:30 மணிவரை
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து சுற்றுக்காவலிற்காக வந்த சிங்களக் கலத்தொகுதி மீதான வலிதாக்குதல். புலிகளின் படகுகள் எதுவும் மூழ்கடிக்கப்படவில்லை.
  • சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: 4 பேர்  
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் கருணாகரன் (10/03), கப்டன் கோமளன் (11/03)

ஆதாரம்: தமிழ்நெற்: 11/03/1998 (4 Tiger boats sunk - SLN) | உதயன்: 11/03/1998

 


  • திகதி ஏப்பிரல் 29, 1998
  • நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சத்துருக்கொண்டான் காவல் நிலையம் முன்பிருந்த வாவியில் நிறுத்தப்பட்டிருந்த புளூ ஸ்ரார் வகுப்புப் படகு ஒன்று வாவியின் மறுபக்கத்திலிருந்து, சிங்களப் படையக் கட்டுப்பாடற்ற பரப்பு, நீரடியில் நீந்தி வந்த கடற்புலிகளால் கடத்தப்பட்டது. படகோடு சில படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார்
    • கடற்கல வகை: கட்டைப்படகு
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை 
    • காயப்பட்டோர்: இழப்பில்லை  
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 1/05/1998

 


  • திகதி சூலை 21, 1998
  • நிகழ்வு இடம்: கச்சதீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் படையினருக்கும் மோதல் நடைபெற்றது. மோதலின் பின்னர் கடற்புலிகளின் படகுகள் இராமேஸ்வரம் கடற்கரையை நோக்கிச் சென்றன. 
  • சேதமாக்கப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை 
    • கடற்கல வகை: படையப் படகு (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை 
    • காயப்பட்டோர்: 1 ஆள் 
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 23/07/1998

 


  • திகதி: ஓகஸ்ட் 14, 1998 
  • நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: 60 டன் சரக்குகளை ஏற்றியபடி எம்.வி.பிரின்சஸ் காஷ் என்ற சிறிலங்காவின் வழங்கல் கப்பலானது தனது கன்னிப் பயணத்தைத் தொடங்கியது. இக்கப்பலானது 'குட்வில் கைட் (Goodwill Guide) என்ற உள்நாட்டு நிறுவனத்தால் 1998 ஏப்பிரல் மாதத்தில் துபாயிலிருந்து தருவிக்கப்பட்டு உள்நாட்டிலில் திருத்தப்பட்டது ஆகும். 11ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டு திருமலை சென்று அங்கிருந்து பருத்தித்துறையை நோக்கிச் செல்வதற்காக 14ம் திகதி இரவு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிக்கலுக்குரிய முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இரவில் பயணிக்க முடியுமா என்று சிறிலங்காக் கடற்படையிடம் கலக்குழுவினர் கேட்க, அதற்கு அவர்கள் வேண்டாம் என்றும் பகலில் செல்லுமாறும் அறிவுறுத்தி கப்பலை முல்லைக் கடலிலேயே நிறுத்துமாறு கலக்குழுவினருக்கு உத்தரவிட்டனர். ஆனால் மெய்யில், 12,13 ஆம் திகதிகளில் கலக்குழுவினரோடு கதைத்தவர்கள் கடற்புலிகளே! கடலில் நிறுத்துமாறு கூறியவர்களும் அவர்களே! கப்பல் முல்லைத்தீவுக் கடலில் கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. அப்போது கப்பல் முல்லைக் கடலில் நிற்பதை அறிந்து கடற்புலிகள் 2 சண்டைப்படகுகளில் வந்து 2:30 மணியளவில் கப்பலின் தளத்தில் ஏறி கப்பலை சோதனையிட்டனர். பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் நின்றிருந்த கப்பலை அம்மாவட்டக் கடற்கரையை நோக்கிச் செலுத்துமாறு பணிக்க தண்டையலும் அதன்படி ஒழுகினார். கப்பலும் கடத்தப்பட்டது. இக்கப்பலில் 22 பேர் கொண்ட கலக்குழுவினர் இருந்தனர்; அவர்களில் கப்பலின் தண்டையல் உட்பட 18 பேர் இந்தியரும் எஞ்சியோர் சிங்களவரும் ஆவர். அனைவரும் கடற்புலிகளால் சிறைப்படுத்தப்பட்டு கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த போது, கப்பலை தரிப்பிடத்திலிருந்து ஆழ்கடல் நோக்கி நகர்த்துமாறோ அல்லது தாம் குண்டுவீசுவதற்காக கலக்குழுவினருடன் கப்பலை கைவிடுமாறோ சிறிலங்காக் கடற்படை தொடர்ந்து பணிப்புரையிட்டனர். இவ்வாறு நண்பகல் 10 மணி முதல் எற்பாடு 2:00 மணி வரை மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. முதன்முறை விடப்பட்ட போது, கரைக்குக் கொண்டு செல்லப்பட்ட கப்பலின் தண்டையல் வி.என். கப்ரோ, தாங்கள் கப்பலில் இருப்பதாகவும், விடுதலைப்புலிகள் கலக்குழுவினரிடம் உசாவல் நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் அதுவரை எந்தவிதமான படைய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் சிறிலங்காக் கடற்படையிடம் பிழையன தகவலை புலிகளின் வேண்டுகோளிற்கிணங்க கோரினார். கோரிக்கையைப் பொருட்படுத்தாமல் சிங்களக் கடற்படை கப்பலை நோக்கி மூன்று தடவை எழுதருகை வேட்டுகளை தீர்த்தனர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் பணிப்புரையை ஏற்கமுடியாததால் மேலும் 30 நிமிடங்கள் காலவேளை வழங்கப்பட்டது, சிங்களக் கடற்படையினரால். ஆனாலும் சிங்களவரின் பணிப்புரை ஏற்கப்படவில்லை. அதே போல் சிங்களவரும் தண்டையலின் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், 14ம் திகதி எற்பாடு 3:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டுதாரி இரண்டு அவ்விடத்திற்கு விரைந்தது. இத்தாரை குண்டுதாரிகளில் ஒன்று குண்டுவீச முனைந்த போது அவற்றில் ஒன்றை இலக்குவைத்து மேற்பரப்பிலிருந்து வான் நோக்கி புலிகள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். ஆனால் கிபிர் தப்பிவிட்டது. தொடர்ந்து தரையிலிருந்து வான்நோக்கி புலிகள் சுட்டாலும் எற்பாடு 4:15 மணியளவில் நான்கு வான்குண்டுகள் கப்பல் மீது வீசப்பட்டு அழிக்கப்பட்டது. கப்பலின் தண்டையல் "விடுதலைப் புலிகளுக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்" எனக் கூறப்பட்டதை அடுத்து, புலிகளுக்கு "ஊறான சரக்குகள்" வழங்கப்படுவதைத் தடுக்க குண்டுவீசப்பட்டதாக சிறிலங்காக் கடற்படை கூறியது. தாம் கரையிலிருந்து 55 கடல்மைல் தொலைவில் கப்பலை நிறுத்தக் கூறியதாகவும் அனால் கப்பலின் கப்டன் கரையிலிருந்து 14 கடல் மைல் தொலைவில் நிறுத்தியதாகவும் கூறியது கடற்படை. பின்னர், குழுவினரில் 17 இந்தியர்களும் ஓகஸ்ட் 16 அன்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். சுமார் 600 யாழ்ப்பாண வியாபாரிகள், கப்பல் மீது குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை பட்டினியால் வாட்டுவதாகவும், வழங்கலை குறைத்து வருவதாகவும் அவர்கள் சிங்கள அரசாங்கத்தைக் குற்றம் சாட்டினர். சிறிலங்காவின் வான்படையால் அழிக்கப்பட்ட சரக்குகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறிலங்கா அரசிடம் கோரிக்கையும் விடுத்தனர். கப்பலில் இருந்த பொருட்களாவன: 
    • கட்டடப்பொருட்கள் கூட்டுத்தாவனத்திற்குரிய,
      • 3,500 மெற்றிக் தொன் சீமெந்து
      • கூரைப் பொருட்கள்
      • கட்டடப் பொருட்கள்
    • 104 உந்துருளிகள்
    • 20 தானுந்து முச்சக்கரவண்டிகள்
    • 20 லான்ட் மாஸ்டெர்கள்
    • 2 பாவிக்கப்பட்ட மகிழுந்துகள்
    • சாராயம், பியர் போன்ற குடிவகைகள்
    • குளிர்பானங்கள்
    • பல நூற்றுக்கணக்கான தேங்காய் எண்ணெய் உருள்கலன்கள்
    • அரிசி, பருப்பு, சீனி, கோழித்தீன், ஆகியன அடங்கிய ஆயிரம் தொன் பொருட்கள்
    • கோடா நீர்மம் (சுருட்டுக்கானது)
    • தனியாருக்குரிய,
      • 84,000 சீமெந்துப் பொதிகள் (1,500 மெற்றிக் தொன்)
      • காகிதாதிகள்
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: எம்.வி. பிரின்சஸ் காஷ் (MV Princess Kash)
    • கல வகை: சரக்குக் கப்பல்
    • படிமம்:

LTTE_Sea_Tigers_attack_vessel_by_sunken_SL_freighter.jpg

சிங்கள வான்படையின் குண்டுவீச்சில் அழிந்து போய் பின்னர் கறள் பிடித்த நிலையில் பல ஆண்டுகளிற்குப் பிறகு எடுக்கப்பபட்ட நிழற்படம். இக்கப்பலைக் கடந்து செல்வது கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'இசையரசி' என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைப்படகு ஆகும்.  | படிமப்புரவு: விக்கிப்பீடியா

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை 
    • காயப்பட்டோர்: இழப்பில்லை  
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 15,16,17,19/08/1998 | தமிழ்நெற்: 16/08/1998 (Counterclaims over 'Princess Kash' bombing) | ரெட்டிஃவ்: 02/09/1998 (“The most dangerous of all my trips…”), (“I thought I would be killed in the crossfire”)

 


  • திகதி: ஒக்டோபர் 30, 1998
  • அடிபாட்டுக் காலம்: காலை 7:30 மணியளவில் தொடங்கியது
  • நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: வைகறை 4:30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து 525 பயணிகளுடன் திருமலை நோக்கிப் புறப்படவிருந்த "லங்கா முடித" என்ற கப்பலுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக முல்லைத்தீவுக் கடலில் காத்திருந்த சிங்களக் கடற்படையின் 8 டோறாக்களைக் கொண்ட கலத்தொகுதியுடன் மிண்டிய கடற்புலிகளின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 20 படகுகளைக் கொண்ட பல கலத்தொகுதிகள், ஒரு டோறாவை மூழ்கடித்ததுடன் இன்னும் இரண்டைச் சேதப்படுத்தின.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 20+ பேர் 
    • காயப்பட்டடோர்: 8 பேர்  
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் மேனன், கப்டன் இளங்கதிர்

ஆதாரம்: உதயன்: 31/10/1998 | தமிழ்நெற்: 31/10/1998 (Tigers sink Sri Lankan gunboat)

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட, கைப்பற்றப்பட்ட சிங்களச்சார் கடற்கலங்கள் | ஆவணக்கட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 1999

 

 

  • திகதி: சனவரி 29 & 30, 1999
  • அடிபாட்டுக் காலம்: திகதி சாமம் 10 மணி முதல் 30ம் திகதி வைகறை 4 மணி வரை
  • நிகழ்வு இடம்: சாலைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் புலிகளுக்கு படைக்கலன்களை ஏற்றியபடி இரு வழங்கல் கப்பல்கள் வருவதாக சிறிலங்காப் படைத்துறைக்கு புலனாய்வுத் தகவலொன்று கிடைத்தது. கமுக்கமான தகவலையடுத்து கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையின் டோறா ஒன்றும் சுடுகலப் படகுகள் பலவும் வழங்கல்களை கப்பலிலிருந்து ஏற்றிக்கொண்டு கரை திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் வழங்கல் & சண்டைப் படகுகளைக் கொண்ட கலத்தொகுதியோடு மிண்டின. அப்போது வெடித்த கடற்சமரில் கடற்படையின் தாக்குதல்களை சமாளித்தவாறு கடற்புலிகள் சேதமின்றி கரைக்குத் திரும்பினர். நடந்த கடற்சமரில் கடற்படையின் டோறா ஒன்று சேதமாகியது. பின்னர், மேற்கொண்டு நடந்த தேடுதலில் வழங்கல்களை ஏற்றி வந்ததாகக் கருதப்படும் தமிழகத்தில் பதிவு செய்த கொமாண்ட் (MT Command) என்ற தாங்கியையும் கொமாண்டல் கிளிப்பா (Commandal Clippa) என்ற சரக்குக் கப்பலையும் பிடித்து ஏமத்தோடு திருமலை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். சோதனை செய்து அவற்றில் ஐயத்திற்குரிய பொருட்கள் ஏதுமில்லாததால் புலிகளினுடையது இல்லை என்று நம்பி விடுவித்தனர். ஆனால் இவற்றிலிருந்து வழங்கல்களை இறக்கிய பின்னரே கடற்படையினர் இவற்றை பிடித்து சோதனை செய்தனர் என்று கொழும்பு வட்டாரங்கள் தமிழ்நெற்றிற்குத் தெரிவித்தனர். 
  • சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை 
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வேங்கை, மேஜர் அகிலன் எ சாந்தகுமார், மேஜர் கலியரசன்

ஆதாரம்: உதயன்: 29/01/1999 | தமிழ்நெற்: 30/01/1999 (Three Sea Tigers killed - radio), (Four Sea Tigers killed -SLN)

 


  • திகதி: பெப்ரவரி 18, 1999
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 
  • நிகழ்வு இடம்: கிளாலி கடற்படைத்தளம்
  • நிகழ்வு விரிப்பு: பெப்ரவரி 25, 1998 அன்று இலக்கு வைக்கப்பட்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகே இம்முறையும் இலக்காகியது. ஆனால் போன தடவையைவிட இந்தத் தடவை தளத்தின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டிருந்ததால் கடற்படைத் தளத்தின் வாசலில் வைத்துத் தாக்கிக் கைப்பற்றுவது திட்டமாக இருந்தது. அதற்கமைவாக 7 பேர் கொண்ட ஒரு சதளமாக கடற்சிறுத்தைகள் சென்றனர். முன்னர் சென்ற மூன்று சதளத் தலைவர்களில் (Squad Leader) ஒருவரே இம்முறை சதளத் தலைவராக அனுப்பப்பட்டார். தாக்குதலை கட்டளையாளர் லெப். கேணல் சேரமான் நேரடியாக வழிநடாத்தினார். ஆனால் இம்முறையும் வோட்டர் ஜெட் வரவில்லை. பி 174 என்ற தொடரெண்ணை உடைய கே-71 என்ற வகுப்புப் பெயரைக் கொண்ட  படகே வந்ததால் அதைத் தாக்கிக் கைப்பற்றக் கடற்சிறுத்தைகள் திட்டமிட்டனர். தாக்குதலின் போது படகிலிருந்த அத்தனைக் கடற்படையினரும் கொல்லப்பட்டதோடு கே-71 படகு வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டு தளம் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதலில் இரு சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலிருந்ததால் புலிகளாலையே புனித படைய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. படகிலிருந்து படைக்கலன்களும் போர்த்தளவாடங்களும் கைப்பற்றப்பட்டன. பின்னாளில் இக்கடற்கலத்திற்கு "நிமல்" என்ற பெயரைக் கலப்பெயராகக் கடற்புலிகள் சூட்டினர்.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்கே-71
    • படிமம்:

main-qimg-776c36a5c694875ebf2cb8b5c31c04fe.jpg

கைப்பற்றப்பட்ட கலத்தைப் பாவித்து சமாதான காலத்தில் தென் தமிழீழத்தில் வழங்கல் பணியில் ஈடுபடும் கடற்புலிகள் | படிமப்புரவு: தவிபு-ல் எடுக்கப்பட்டது. பின்னர் அந்நிழற்படத்தை  அவர்களிடமிருந்து சிங்களம் கைப்பற்றி உவர்மலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளது.

 

Untitled.jpg

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் போது ஆனையிறவுக் களப்பில் சிங்களக் கடற்படையின் வழங்கல் படகுகளை வழிமறித்து கே-71 படகிலிருந்து பொருதும் கடற்புலிகள். | படிமப்புரவு: தவிபு 

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்ட கடற்படையினர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: திரைப்படம்: ‘உப்பில் உறைந்த உதிரங்கள்’ என்ற இந்நடவடிக்கையினை அப்படியே காட்சியாக மனக்கண் முன் நிறுத்திய ஆவணத் திரைப்படம் | உதயன்: 19, 20 & 22/02/1999 | தமிழ்நெற்: 19/02/1999 (Sea Tigers attack SLN patrol - VoT)

 


  • திகதிமே 25, 26 1999
  • அடிபாட்டுக் காலம்: 25ம் திகதி சாமம் 11 மணியிலிருந்து வைகறை 2:30 மணிவரை நடந்தது.
  • நிகழ்வு இடம்: அளம்பில் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: அளம்பில் கடற்பரப்பில் விடுதலைப்போரிற்கு வலுச் சேர்க்கும் நடவடிக்கையாக வழங்கல்களை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த வழங்கல் படகுகளுக்கு ஏமம் வழங்கிக்கொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகிற்கும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் மோதல் மூண்டது. அப்போது கடற்புலிகளின் சண்டைப்படகிற்கு உதவியாக மேலும் நான்கு சண்டைப்படகுகளும் அவ்விடத்திற்கு விரைந்தன. வெடித்த கடற்சமரில் கடற்படையின் டோறா ஒன்று சேதமாகியது. இச்சமரின் போது கடற்படை டோறாவின் நகர்திறனை லெப். கேணல் பிரசாந்தன் தான் தனது முதன்மைச் சுடுகலனின் சூட்டால் நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை
    • காயப்பட்டோர்: இழப்பில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 7
    • தரநிலையுடனான பெயர்கள்: 'படகுக் கட்டளை அதிகாரி' லெப். கேணல் பிரசாந்த் எ பிரசாந்தன், மேஜர் வர்ணன், மேஜர் சுருளி எ நாயகன், மேஜர் தேன்மொழி, கப்டன் வசந்தராணி, லெப். மடந்தை, லெப். அன்புக்குயில் எ தர்மா

ஆதாரம்: உதயன்: 27 & 28/05/1999 | தமிழ்நெற்:  27/05/1999 (Seven Tigers killed in naval battle -VoT) | கட்டுரை: லெப் கேணல் நிசாந்தனின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: சூலை 25, 1999
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 3:30 மணியளவில் 
  • நிகழ்வு இடம்: தலைநகர் திருகோணமலைத் துறைமுகத்தின் புதிய இறங்குதுறை
  • நிகழ்வு விரிப்புப.நோ.கூ.ச. சொந்தமான இக்கப்பலானது 1998 ஆம் ஆண்டு முதல் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் வருவாயின்மை காரணமாக 1998ஆம் ஆண்டே இதன் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் சி. கடற்படையின் அனுமதியுடன் சேவையைத் தொடர்ந்தது. துறைமுகக் காவல் நிலையத்திற்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புதிய இறங்குதுறையில் கட்டப்பட்டிருந்த போது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் நீரடியால் நீந்திச் சென்று தரித்து நின்ற கப்பலின் கலக்கூட்டில் (hull) நேரக்கண்டிப்பு நீரடிக் குண்டைப் பொருத்தி வெடிக்கச் செய்து கப்பலை மூழ்கடித்தனர். இது ஒரே தடவையில் 350 பயணிகளை ஏற்றிச்செல்ல வல்லது ஆகும்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: நியூக்கோ என்டூரன்ஸ் (Newco Endurance)
    • கல வகை: பயணிகள் வலசை (Passenger Ferry)
  • சிறிலங்கா ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: கப்பல் தண்டையல் சவிரிமுத்து அருள்நாயகம்
    • காயப்பட்டடோர்: கப்பல் காவலாளி எஸ். சண்முகம்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்:  உதயன்: 26/07/1999 | தமிழ்நெற்: 25/07/1999 (Passenger ferry sunk by powerful blast)

 


  • திகதி: ஓகஸ்ட் 12, 1999
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 12:30 மணியிலிருந்து தொடர்ந்து நான்கு மணிநேரம் நடந்தது 
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் நான்கு படகுகள் ஆழ்கடலில் திருமலை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த சிறிலங்காக் கடற்படையினர் அவற்றினை வழிமறித்து கொக்கிளாய் ஆழ்கடற்பரப்பில் மிண்டினர். அப்போது மூண்ட கடற்சமரில் கடற்படையினரின் டோறா ஒன்று சேதமடைந்தது. அதே நேரம் கடற்படையினர் தாம் இரு கடற்புலிப் படகுகளை சேதமாக்கியதாகவும் அவை கொக்கிளாய்க்கு "எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அளம்பில் நோக்கி கட்டியிழுத்துச் செல்லப்பட்டதாகத்" தெரிவித்தனர். கடற்படையினர் வழமையாக விடும் அள்ளுகொள்ளையான கணக்கில் இதுவும் ஒன்றா அல்லது மெய்யிலையே நடந்ததா என்பது பற்றி அறியமுடியவில்லை. புலிகள் பொதுவாக தமது சண்டைப்படகுகள் ஏதேனும் மூழ்கினால் மட்டுமே அறிவிப்பதுண்டு. சேதத்தினைப் பற்றி அத்தி பூத்தாற் போலவே வாய்திறப்பதுண்டு.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: அறியில்லை  
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 14/08/1999 | தமிழ்நெற்: 13/08/1999 (Dvora damaged - VoT), (Two LTTE boats damaged-SLN)

 


  • திகதி: ஓகஸ்ட் 16, 1999
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 3:15 மணியிற்குப் பின்னர் தொடங்கியது
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: வைகறை 3:15 மணி 
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்சமர்களின் போது கடற்புலிகள் துரத்தத் தொடங்கினால் எப்பொழுதும் டோறாக்கள் தப்பியோடிவிடும். ஆதலால் அவற்றை மோதியிடித்துவிட்டு பின்னர் தாக்கித் தாட்டுவிடும் வியூகமொன்றோடு கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன் தலைமையிலான மூன்று சண்டைப்படகுகளைக் கொண்ட கலத்தொகுதியும் லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான மூன்று சண்டைப்படகுளைக் கொண்ட மற்றொரு கலத்தொகுதியும் நாயாற்றுத் தொடுவாயில் ஆயத்தமாய் காத்திருந்தன. அதேநேரம் இரு கடற்கரும்புலிகளைக் கொண்ட இடியனொன்று புல்மோட்டைக்கும் புடவைக்கட்டுக்கும் இடையில் சென்று ஆயத்தமாய் நின்றது. அப்போது கடற்கரும்புலிகளின் இடியனை நோக்கி விரைந்து வந்த டோறாவை தமது இடியனில் பூட்டப்பட்டிருந்த இயந்திரச் சுடுகலனைப் பாவிக்காமலேயே மோதியிடுக்கும் துணிகர தாக்குதலில் ஈடுபட முயன்றனர் கடற்கரும்புலிகள். அப்போது டோறாவின் சூட்டிற்கு இலக்காகி, மோதுவதற்கு 5- 10 மீட்டர்களே இருக்கையில் இடியன் வெடித்துச் சிதறியது. இதனால் டோறாவும் வலுத்த சேதமடைகிறது. அதை மூழ்கடித்து விட விரைந்த கடற்புலிகளின் சண்டைவண்டிகளுக்கும் ஆதரவிற்கு விரைந்த டோறாகளுக்குமிடையில் கடற்சமர் வெடித்தது. ஆனாலும் சேதமடைந்த டோறாவை ஏனைய டோறாக்கள் பாதுகாப்பாக கட்டியிழுத்துச் சென்றுவிட்டன. சமரின் பின்னர் புலிகளின் குரலால் டோறா ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் பின்னாளில் வெளியான உயிராயுதம் பாகம்-7 இல் புலிகள் தம் முதல் தகவல் அறிக்கை பிழையென்பதை மறைமுகமாக ஏற்று டோறா சேதமென்றே ஒப்புக்கொண்டனர்.
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: தவிபுவின் முதல் தகவல் அறிக்கை பிழையென்று மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
    • காயப்பட்டடோர்: தவிபுவின் முதல் தகவல் அறிக்கை பிழையென்று மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டதால் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. 
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் நீதியப்பன் மற்றும் மேஜர் அந்தமான் எ எழில்வேந்தன்
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: கவிர்  

ஆதாரம்: உதயன்: 17/08/1999 | தமிழ்நெற்: 16/08/1999 (Confusion over firing at sea), (SLN Dvora sunk - radio) | உயிராயுதம் பாகம்-7 இல்

 


  • திகதி: செப்டெம்பர் 26 & 27, 1999
  • அடிபாட்டுக் காலம்: 26 ம் திகதி சாமம் 10 மணி முதல் 27ம் திகதி வைகறை 4 மணி வரை
  • நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த படையினரின் கடற்கலத் தொடரணியை இலக்கு வைத்து முல்லைத்தீவிற்கு உயர 50 கடல் மைல் தொலைவில் கடற்புலிகள் வலிதாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். இதற்காக அப்போதைய கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன், லெப். கேணல் இரும்பொறை (பின்னாளைய துணைக் கட்டளையாளர்), கடற்கரும்புலி லெப். கேணல் நிரஞ்சன் ஆகியோரைக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட சண்டைப்படகுகளும் இவர்களின் தலைமையில் கடற்கரும்புலிகளான மேஜர் உமேசன், மேஜர் விடுதலை, மேஜர் நாதவேணி ஆகியோரைக் கொண்ட இடியன் ஒன்றுமாக ஒரு கலமணியாகச் சென்று தாக்குதலைத் தொடுத்தனர். சமர் உக்கிரமடைய கடற்புலிகளின் மேலதிக சண்டைப்படகுகளும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்ததாக சிங்களக் கடற்படை தெரிவித்திருந்தது. அப்போது காங்கேசன்துறையிலிருந்தும் திருமலையிலிருந்தும் மேலதிக தாக்குதல் கலங்கள் படையினருக்கு உதவியாகவும் வந்து சேர்ந்தன. சமரின் போது எகிப்திலிருந்து சென்னைக்கு 14 ஆயிரம் மெற்றிக் தொன் உரவகைகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த - சீனாவில் பதிவுசெய்யப்பட்ட - எம். வி. யுஜியா என்ற சரக்குக்கப்பல் விடுதலைப்புலிகளின் தாக்குதலிற்கு உள்ளானது. இக்கப்பல் மீது படகு ஒன்றில் வந்த ஆயுததாரிகளே உந்துகணைகளையும் சுடுகலன்களையும் கொண்டு தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் புலிகளாக இருக்கலாம் என்று தாம் ஐயப்படுவதாகவும் கப்பலின் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர். இருந்தபோதிலும் 'உயிராயுதம் பாகம்-8' இல் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் விளக்கியிருந்த இக்கடற்சமர் தொடர்பான விரிப்பில், இக்கப்பல் மேலே தான் கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பதை சூசகமாகக் கூறியிருப்பதாக ஊகிக்கிறேன்; சாதாரணமாக கடற்கலங்களின் வகுப்புப் பெயரை விதப்பாகக் குறிப்பிடும் அவர் இத்தாக்குதலிற்கு மட்டும் 'இலக்கு' என்று பொத்தாம்பொதுவாக குறிப்பிட்டிருந்ததை வைத்தே இவ்வாறு நான் "ஊகிக்கத் தலைப்படுகிறேன்". புலிகள் என்று நம்பப்படுபவர்களின் தாக்குதலில் கப்பல் வலுத்த சேதமடைந்திருந்தாலும் கப்பலிலிருந்த சீனக் கலக்குழுவினருக்கு எவ்வித உடற்சேதமும் ஏற்படவில்லை. சமரின் முடிவில் கப்பல் திருமலை வட்டத்தீவை நோக்கி கட்டியிழுத்துச் செல்லப்பட்டது, சிங்களக் கடற்படையின் சிறப்புக் கடற்படைப் படகுகளால். சமர் நடந்த அடுத்த நாள் கடற்படையினரே கப்பல் மீது தாக்குதல் நடாத்தியதாக 'புலிகளின் குரல்' வானொலியும் விடுதலைப்புலிகளே தாக்குதல் நடாத்தியதாக கடற்படையினரும் என்று அடிபட்ட இரு கன்னையினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொண்டனர் குறிப்பிடத்தக்கது. இச்சமரில் கடற்படையின் இரு படையப் படகுகள் சேதமடைந்தன.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: படையப் படகுகள் (விதப்பான வகுப்பு அறியில்லை) - 2
    • கடற்கலப் பெயர்: எம். வி. யூஜியா (MV Yujiya)
      • கல வகை: சரக்குக் கப்பல்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 4 பேர்
    • கடற்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: கப்டன் தமிழ்க்குன்றன்
    • கரும்புலிகள்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் உமேசன் எ செழியன், மேஜர் ரவி எ விடுதலை, மேஜர் நாதவேணி 
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: வெள்ளை 

ஆதாரம்: உதயன்: 28/09/1999 | தமிழ்நெற்: 27/09/1999 (Damaged merchant vessel towed to port) | உயிராயுதம் பாகம்-8

 


  • திகதி: ஒக்டோபர் 7, 1999
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணியிலிருந்து வைகறை 5:30 மணிவரை
  • நிகழ்வு இடம்: கச்சதீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த நாளன்று இந்தியாவிலிருந்து கரை நோக்கி வந்துகொண்டிருந்த வழங்கல் படகுகளுக்கான - மருத்துவப் பொருட்களுக்கானது - ஏமத்திற்காக அளம்பிலிலிருந்து கட்டளைப் படகான 'கேசவன்' என்ற கலப்பெயர்கொண்ட படகும் (வேவ் ரைடர் வகுப்பு) இன்னும் இரண்டு படகும் (கலப்பெயர் & வகுப்புப் பெயர் அறியில்லை) என ஒரு கலத்தொகுதி படகுகாவிகள் மூலம் மன்னாருக்கு அனுப்பப்பட்டன. உரகடலில் காரிருட்டில் வந்துகொண்டிருந்த தமிழரின் இரு வழங்கல் படகுகளையும் சிங்களவரின் டோறாக்கள் கண்டு வழிமறித்துத் தாக்கத் தொடங்கின. உடனே கரையிலிருந்த தமிழரின் கலத்தொகுதி கடலேறி ஏமத்திற்கு விரைந்தது. கலத்தொகுதியின் கட்டளையாளராக லெப். கேணல் நிரோஜன் கேசவன் படகில் சென்றார். வழியில் இயந்திரக் கோளாறு காரணமாக துணையாய் சென்ற இரு சண்டைப்படகுகளும் மெள்ளமாய் நகர்ந்தன. கலத்தொகுதியின் கதுவீ மோசமான காலநிலை காரணமாகச் சரிவரத் தொழிற்படவில்லை. ஆகையால் கடல் பட்டறிவின் துணையுடன் துணைகளை எதிர்பார்க்காமல் முன்னேறிச் சென்றது கேசவன் படகு. ஆனால் அங்கே அடிவேண்டி ஒரு வழங்கல் படகு மூழ்கிவிட்டிருந்தாலும் அதன் கலமர் பாதுகாப்பாக மற்றைய வழங்கல் படகில் இருந்தனர். அந்த மனநிறைவுடன் கடற்புலிகளின் கட்டளைப்படகு பகைவருடன் பொருதிக்கொண்டிருந்த போது வழங்கல் படகு பத்திரமாக கரை சேர்ந்தது. சிறிது நேரத்தில் கடலில் நடந்த சமரில் கேசவன் படகின் இயந்திரம் சேதமடைந்து அசையாமல் நின்றது. துணைப்படகுகள் இரண்டும் தம்மால் இயன்ற வரை நெருங்கி முன்னேறிய போது கேசவன் படகு தீமூண்டு மூழ்கிக்கொண்டிருந்தது, அதன் கலக்குழுவினரோடு. இக்கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் டோறாக்களில் இரண்டு மெல்லிய சேதமாகியது என்று உதயனும் ஒன்று சேதமாகியது என்று தமிழ்நெற்றும் செய்தி வெளியிட்டுள்ளன. 
  • சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1 / 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை
    • காயப்பட்டடோர்: 1 ஆள் 
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 15 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: ‘கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப். கேணல் நிரோஜன், மேஜர் காமினி எ ஜெயராஜ், மேஜர் நகுலன், மேஜர் குகன் எ செல்லையா, மேஜர் சோழன், கப்டன் இளநிலவன், லெப். நாகமணி, லெப். பாவேந்தன், லெப். சொற்கோ, லெப். தமிழ்நம்பி, 2ம் லெப். மாறன், 2ம் லெப். இசைவாணன், வீரவேங்கை முதல்வன், வீரவேங்கை செம்பியன், வீரவேங்கை இனியவன்

ஆதாரம்: உதயன்: 8, 9 &10 /10/1999 | தமிழ்நெற்: 7/10/1999 (Fifteen Tigers killed - VoTt), (LTTE boat sunk, four killed - SLN) | கட்டுரை: லெப். கேணல் நிரோஜனின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: ஒக்டோபர் 14 & 15, 1999
  • அடிபாட்டுக் காலம்: 14ம் திகதி சாமம் 10:00 மணி முதல் 15 திகதி வைகறை 3:00 மணி வரை
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய்க் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: வன்னியிலிருந்து 200இற்கும் மேற்பட்ட போராளிகளை தலைநகர் திருமலைக்கும் திருலைமையிலிருந்து 200இற்கும் மேற்பட்ட போராளிகளை வன்னியிற்குமாக ஏற்றிப்பறிக்கும் வழங்கல் நடவடிக்கை தேசியத் தலைவரால் கடற்புலிகளிடம் கையளிக்கப்பட்டது. இதற்கமைவாக லெப். கேணல் கோகுலன், லெப். கேணல் பழனி மற்றும் கடற்சிறுத்தைக் கட்டளையாளர் லெப். கேணல் சேரமான் ஆகியோரைக் கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட சண்டைப்படகுகள் ஐந்தும் கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவத்தை கட்டளை அதிகாரியாகக் கொண்ட இடியனில் கடற்கரும்புலிகளான மேஜர் பரணி, மேஜர் கலைமகள் ஆகியோரும் கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட இடியனில் கடற்கரும்புலிகளான மேஜர் சூரியப்பிரபா, கப்டன் சுதா ஆகியோருமென ஒரு கலத்தொகுதியாகப் புறப்பட்டுச் சென்றனர் (இவற்றைத் தவிர வேறு குண்டுப்படகுகளும் சென்றனவா என்பது தெரியவில்லை) இக்கலத்தொகுதியில் போராளிகளை ஏற்றிய மிராஜ் வகுப்பு மற்றும் பல்வேறு வகுப்பு வழங்கல் படகுகளும் இடம்பெற்றிருந்தன. கொண்டுசென்ற போராளிகளை இறக்கவேண்டிய இடத்தை நோக்கி கலத்தொகுதி சென்றுகொண்டிருக்கையில் திருமலையிலிருந்த கடற்படையினர் இவர்களைக் கண்டு அவ்விடத்திற்கு விரைந்தனர். வந்த கடற்படையினரோடு கடற்புலிகள் பொருதி கடற்சமர் நடந்துகொண்டிருக்கையில் இறக்கியேற்ற வேண்டியவர்களை குறித்த இடத்தில் இறக்கியேற்றிவிட்டு அங்கிருந்து கடற்புலிகள் திரும்பினர். வந்துகொண்டிருக்கையில் புடவைக்கட்டு கடற்பரப்பில் கடும்சமர் நடந்துகொண்டிருந்தது. இச்சமரில் லெப். கேணல் பழனியின் கலத்தொகுதி ஒரு பக்கத்தாலும் லெப். கேணல் கோகுலனின் கலத்தொகுதி இன்னொரு பக்கத்தாலும் சமராடிக்கொண்டிருக்கையில் ஒரு டோறா வலுத்த சேதமாகி நகராமல் நின்றது. அதை இலக்கு வைத்துப் பாய்ந்து சென்ற இரு இடியன்கள் மோசமான மேகமூட்டத்தின் காரணமாக தெளிவான பார்வையின்மையால் இலக்குப்பிசகி தமக்குள்ளையே மோதி வெடித்துச்சிதறின. ஆயினும் தொடர்ந்து சமராடிய கடற்புலிகள் ஏனைய போக்குவரவுப் போராளிகளைப் பத்திரமாகக் கரை சேர்த்தனர். 
  • சேதப்பட்ட (மோசமான) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: 4 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 7 பேர்
    • கடற்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: மேஜர் துவாரகன்
    • கரும்புலிகள்: 6 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் பழனியப்பன் எ புவேந்திரன் எ புவனேஸ், லெப்.கேணல் அருந்தவம், மேஜர் கோபி எ பரணி, மேஜர் சூரியப்பிரபா, மேஜர் கலைமகள், கப்டன் சுதா எ சுதாகரன் 
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • வகுப்புப் பெயர்: வெள்ளை 

ஆதாரம்: உதயன்: 16/10/1999 | தமிழ்நெற்: 15/10/1999 (Twenty Tigers killed in sea battle -SLN), 16/10/1999 (Seven LTTE casualties in sea battle -Radio) | உயிராயுதம் பாகம்-8

 


  • திகதி: திசம்பர் 8, 1999
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 3:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: முல்லைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் நின்றிருந்த கப்பல்களிலிருந்து கரைக்கு வழங்கல்களைக் கொண்டுவரும் நடவடிக்கைக்கு, புலிகளின் மொழியில் 'வலுச் சேர்க்கும் நடவடிக்கை', எந்தவொரு எடையூறும் சிங்களக் கடற்படையால் ஏற்படாவண்ணம் கண்காணிப்பு நடவடிக்கையொன்றை ஒரு குண்டுப்படகைக் கொண்டு ஆழ்கடலில் மேற்கொண்டனர். தேவைப்படும் போது கண்காணிப்பில் ஈடுபடும் குண்டுப்படகே சண்டைப்படகுகளின் துணையின்றி இடையூறை ஏற்படுத்தும் இலக்கின் மீது தாமாக மோதியிடிப்பதுவென திட்டமிடப்பட்டது. இதற்கமைவாக 08/12/1999 அன்று வழங்கல்களுக்குப் பயன்படும் மிராஜ் வகுப்புப் படகொன்றில் (பொதுவாக சுடுகலன் ஒன்று பூட்டப்பட்டிருக்கும்) நான்கு கடற்கரும்புலிகள் புறப்பட்டுச் சென்றனர். கண்காணிப்பில் இவர்கள் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கத்தில் வலுச் சேர்க்கும் நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. அப்போது கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழரின் படகை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த 8 டோறாக்கள் கொண்ட சிங்களவரின் கலத்தொகுதியொன்று கண்டுகொண்டது. தனியனாக நின்ற படகை அழிக்கவென சிங்களவரின் டோறா ஒன்று கீழிறங்கி வர அதை மோதியிப்பதற்கு கடற்புலிகளின் படகு உயரச் சென்றது. டோறாவை நெருங்கி மோதுவதற்காக எத்தனித்த போது அவ்டோறாவிலிருந்த கடற்படையினரின் சூட்டில் இடியன் வெடித்துச் சிதறியது. எனினும் இடியனின் வெடியதிர்வில் டோறா மீளப் பாவிக்கேலாதளவு சேதமாகி ஏனைய டோறாக்களால் திருமலைக்கு கட்டியிழுத்துச் செல்லப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
  • சேதப்பட்ட (மீளப் பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 4 பேர்
    • காயப்பட்டோர்: 5 பேர்
  • வீரச்சாவடைந்த கரும்புலிகள்: 4 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கார்வண்ணன் எ சிவரூபன், மேஜர் இசைக்கோன், மேஜர் ரங்கன் எ யாழ்வேந்தன், கப்டன் கானவன்
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: மிராஜ்
    • கலப்பெயர்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 9/12/1999 | தமிழ்நெற்: 08/12/1999 (Naval clash kills 4), 09/12/1999 (4 Tigers killed) | உயிராயுதம் பாகம்-8

 


  • திகதி: திசம்பர் 30, 1999
  • அடிபாட்டுக் காலம்: காலை 9:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: கிளாலிக் களப்பு
  • நிகழ்வு விரிப்பு: ஓயாத அலைகள்-03 தொடர் படைய நடவடிக்கை நடந்து கொண்டிருந்த போது குறித்த நாளில் கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி சிங்களக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தின் (SBS) தொடரணி ஒன்று வழங்கல் நடவடிக்கைக்காக நகர்ந்துகொண்டிருந்தது. அது கொக்குப்பிட்டியில் இருந்த போராளிகளால் கவனிக்கப்படுகிறது. அத்தொடரணியில் 3 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள், 4 கூகர் வகுப்புப் படகுகள் மற்றும் 8 புளூஸ்ரார் வகுப்புப் படகுகள் என்பன உள்ளடங்கியிருந்தன. பகைவரின் இந்த நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய வகைப் படகுகள் இரண்டும் (ஒன்றின் வகுப்புப் பெயர் கே-71) கரும்புலிப் படகு ஒன்றுமென ஒரு சதளமாக கொக்குப்பிட்டியில் இருந்து விரைந்தன. இந்நிலையில் கரும்புலிப்படகின் பொறி சீராக இயங்க மறுத்ததால், அது அவ்விடத்திலேயே தரித்து நின்றுவிட்ட இக்கட்டான சூழல் உருவாகியது. அதே நேரம் தொடரணி மீது சிறிய வகை தாக்குதல் படகுகளில் ஒன்று தாக்குதலை தொடங்கியது. இக்கடற்சமரின் இக்கட்டான நிலையை கிளாலிக் கரையில் கவிர் வகுப்புக் கரும்புலிப்படகோடு நின்று கவனித்துக்கொண்டிருந்த அறிவரசன் புரிந்து கொண்டார். எனவே எந்தவிதக் கட்டளையுமின்றி தானே கரும்புலியாய் முட்டிட முடிவெடுத்தார். தானே தன்னந்தனியாக வற்றுக்கடலில் நின்ற தனது கரும்புலிப் படகைத் தள்ளி கடலுக்குள் இறக்கி, கொக்குப்பிட்டியில் நின்ற கட்டளையாளர் லெப். கேணல் பகலவனிடம் நேராக விரைந்து சென்று, இடிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொண்டார். எந்த விதத் தொலைத்தொடர்புக் கருவியுமோ கதுவீயுமோ இன்றி கட்டளையாளர் கையால் சுட்டிக்காட்டிய சிங்களக் கடற்படையின் வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மீது மோதியிடித்து அதை மூழ்கடித்தார். இதனால் கிளாலிக் களப்பிலே ஆனையிறவிற்கான அன்றைய சிங்களப் படைத்துறைக்கான வழங்கல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் மூன்று புளூஸ்ரார் வகுப்புப் படகுகள் (விதப்பான வகுப்பு அறியில்லை) சேதமடைந்தன.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: புளூஸ்ரார் (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: கலக்குழுவினர் அத்தனை பேரும்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கரும்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்: கப்டன் அறிவு எ அறிவரசன்
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: கவிர்
    • கலப்பெயர்: கிடைத்துள்ள நிகழ்படத்தில் இவ்விடியனின் பெயர் தென்படுகிறது. ஆனால் நிகழ்படம் தெளிவற்றுள்ளதால் கலப்பெயரை அறிய முடியவில்லை.

ஆதாரம்: தமிழ்நெற்: 31/12/1999 (Clash in Jaffna Lagoon) | உயிராயுதம் பாகம் - 8

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 ஆண்டு: 2000

 

 

  • திகதி: மார்ச் 6, 2000
  • அடிபாட்டுக் காலம்: சாமத்தில் மூன்று மணிநேரம் தொடர்ந்து நடந்தது
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலிகளின் நான்கு படகுகளை கண்ட படையினர் அவற்றின் மீது வலிதாக்குதலை செய்ததையடுத்து கடற்சமர் வெடித்தது. இதில் புலிகளின் படகுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்பப்பட்டாலும் சேத விரிப்பு அறியில்லை. நான் சிங்களவரால் வெளியிடப்பட்ட தகவல்களை ஆவணத்தில் சேர்க்கவில்லை, அவை எப்பொழுதும் அள்ளுகொள்ளையாக காட்டப்படுவதால். 
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள் (கிளை அறியில்லை): 12 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தவநாதன், மேஜர் குமரச்செல்வன் எ ராகுலன், மேஜர் அறிவுமங்கை, மேஜர் கிளிமொழி, கப்டன் ரஞ்சிதன், கப்டன் சுபநிலா, கப்டன் இருண்மொழி எ அருள்மொழி, கப்டன் பருதி எ கருணை, லெப். செங்கண்ணன் எ ஊரவன், லெப். திலாந்தன், 2ம் லெப். கலைத்தங்கன், வீரவேங்கை கேசவன் 
      • இவர்களில் ஆகக்குறைந்தது ஐந்து பேர் கடற்புலிகள் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம்: உதயன்: 8 & 9/03/2000 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மார்ச் 12, 2000
  • அடிபாட்டுக் காலம்: மாலை 7:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் இரணைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: வலுச் சேர்க்கும் நடவடிக்கை (கடல் வழங்கல்) ஒன்றில் ஈடுபட்டிருந்த கடற்கரும்புலிகளை வழிமறித்த கடற்படைக்கும் கடற்கரும்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் தம்மால் இயன்றவரை சிங்களக் கடற்படையின் படகை தாக்கியழிக்கும் முயற்சியாக நெருங்கிச் சென்ற போது கடற்படையின் சூட்டில் இவர்களின் வள்ளம் வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பினால் ஏற்பட்ட சிதறல்களால் கடற்படையின் டோறா ஒன்று சேதமடைந்தது. 
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: 4 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மதன், மேஜர் பரதன், கப்டன் சுவேந்திரன் எ தினேஸ்

ஆதாரம்: உதயன்: 14 & 16/03/2000 | மாவீரர் பட்டியல் | உயிராயுதம் பாகம்-8

 


  • திகதி: ஏப்ரல் 7, 2000
  • அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: நாகர்கோவில் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலிலிருந்த டோறாக்கள் புலிகளின் நாகர்கோவில் வலுவெதிர்ப்பு நிலைகள் (Defence points) மீது கடலிலிருந்தபடி தாக்குதல் நடாத்திக்கொண்டிருந்த வேளை கடற்புலிகளோடு முட்டுப்பட்டு மோதல் வெடித்தது. அப்போது நாகர்கோவில் கடற்கரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினர் 130 மிமீ சேணேவி கொண்டு முதலில் ஒரு சுப்பர் டோறா மீது சுட்டனர். சூடுபட்டு அது மூழ்கியது. அதன் கதி அறிய வந்த அடுத்த பேபி டோறாக்கும் அதே கதிதான். புலிகளின் சூட்டால் அதன் கலக்கூட்டில் ஓட்டை விழுந்து கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவிலுள்ள பிட்டி ஒன்றில் மோதி கடலில் ஓரளவிற்கு தாண்டது. தாண்ட பேபி டோறாவைக் கடற்புலிகள் கரைக்கு கட்டியிழுத்து வந்ததாக அறியப்படுகிறது. எதுயெப்படியாயினும் இவ்டோறா கரைக்குக் கொண்டுவரப்பட்டது/ கரைதட்டியது. அதிலிருந்தும் முதலில் மூழ்கியதிலிருந்தும் கடற்புலிகள் படைக்கலன்கள் மற்றும் ஏந்தனங்களைக் கழட்டியெடுத்தனர். இரு டோறாக்களிலுமாகச் சேர்ந்து மொத்தம் 35 பேர் மூழ்கியிருந்தனர். அவர்களில் 19 பேரே சிங்களக் கடற்படையால் மீட்கப்பட்டனர். 16 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: பேபி டோறா
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
    • படிமங்கள்:
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 16 பேர்
    • காயப்பட்டோர்: ஆகக்குறைந்தது 1 ஆள்
  • வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 8, 9&10/03/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 7/04/2000 (Two Dvoras sunk -LTTE), (Dvora survivor swims ashore, helicopter hit), 9/04/2000 (Tigers list weapons taken from Dvoras)

 


  • திகதி: ஏப்ரல் 12, 2000
  • அடிபாட்டுக் காலம்: காலை 6:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: புத்தளம் முகத்துவாரத்திற்கு அப்பால் குதிரைமலையின் முனைக் கடற்பரப்பு  (கற்பிட்டிக் கடற்பரப்பு)
  • நிகழ்வு விரிப்பு: கற்பிட்டித் தளத்தில் ஊடுருவி தாக்குதல் நடாத்த முயன்ற அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவின் கட்டளையாளர் கப்டன் முத்துமணி காட்டிக்கொடுப்பால் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவர் நகர்ந்த பரப்பு முசிலீம்கள் பெருவாரியாக வாழும் பரப்பாகும். அவரின் நினைவாக புகழரசன் கடற்கரும்புலிகள் அணியைச் சேர்ந்த கப்டன் வீரமணி அதே கற்பிட்டிக் கடலின் குறித்த பரப்பில் சுற்றுக்காவலில் வந்த வோட்டர் ஜெட் படகை இலக்கு வைத்து கரும்புலியாய்ச் சென்றார். கடற்புலிப் படகுக் கட்டளை அதிகாரிகளான அறிவு மற்றும் சோலைக்குமரன் ஆகியோரின் படகுகள் வழிமறித்துத் தாக்க மீனவர் வேடத்திலிருந்த இவரின் படகு முன்னகர்ந்து சென்று பகைப் படகை மோதியிடித்து மூழ்கடித்து.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் 
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: 4 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் வீரமணி
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: கட்டைப்படகு (Dinghy)

 ஆதாரம்: உதயன்: 13/04/2000 | தமிழ்நெற்: 12/04/2000 (SLN, Sea Tigers clash off Katpitty) | உயிராயுதம் பாகம் - 8

 


  • திகதி: சூன் 5, 2000
  • அடிபாட்டுக் காலம்: மாலை 
  • நிகழ்வு இடம்: வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடலில் நடைபெற்ற முறியடிப்புச் சமரின் போது இரு கடற்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டன. கடற்புலிகளின் படகொன்று கடும் சேதமடைந்து பின்னர் கட்டியிழுத்து வரப்பட்டது. நிகழ்வின் முழு விரிப்பு:

(இவ்விரிப்பினுள் இரு டோறாக்கள் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் மூழ்கடிக்கப்பட்டது ஒரு டோறாவும் ஒரு றினிட்டி மறைனும் என்பது குறிப்பிடப்பட வேண்டியதுவாகும்.)

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்:2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா
    • கடற்கல வகுப்புப் பெயர்: றினிட்டி மறைன்
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 15 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 13 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் ஆண்டான் எ சசிகரன், மேஜர் அமுதப்பிரியா, மேஜர் மதிவண்ணன், மேஜர் மருதா, கப்டன் ஜெயவதனி எ சோபனா, கப்டன் சத்தியரூபி கப்டன், இளஞ்சேரன், கப்டன் குயில்மாறன், கப்டன் சேசிகா லெப். மதிவதனன், லெப். குட்டிக்கண்ணன், 2ம் லெப். கலைமுகிலன், வீரவேங்கை மதியழகன்

ஆதாரம்: மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/6/2000 (Two super-dvora gun boats sunk)

 


  • திகதி: சூன் 26, 2000
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 1:30 மணியளவில் தொடங்கி எட்டு மணிநேரம் நீடித்தது
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து 50 கடல் மைல் தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கப்பல் தொடரணியில் செல்லும் படைக்கலன்கள் ஏற்றிய கப்பலொன்றை அழிக்கும்படியான தலைவரின் கட்டளைக்கு கடற்புலிகள் செயல்வடிவம் கொடுத்த அடிபாடு இதுவாகும். கட்டளைக்கு ஏற்ப திட்டம் வகுத்து லெப். கேணல் பழனி தலைமையில் லெப். கேணல் ரஞ்சன், மற்றும் மேஜர் ஆழியன் ஆகியோரை படகு கட்டளை அதிகாரிகளாகக் கொண்ட 3 சண்டைப்படகுகளும் இவர்களோடு கடற்கரும்புலி மேஜர் சூரனைக் கட்டளை அதிகாரியாகக் கொண்ட ஒரு வெள்ளை வகுப்புக் குண்டுப்படகில் கடற்கரும்புலிகளான லெப். கேணல் ஞானக்குமரன் மற்றும் மேஜர் சந்தனா மற்றும் இன்னும் இரு கடற்கரும்புலிகளும், கடற்கரும்புலி மேஜர் நல்லப்பனை கட்டளை அதிகாரியாகக் கொண்ட வெள்ளை வகுப்புக் குண்டுப்படகில் கடற்கரும்புலிகளான கப்டன் பாமினி மற்றும் கப்டன் இளமதி ஆகியோருமாக புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் எற்பாடு 3 மணிக்குப் புறப்பட்டுச் சென்று முல்லைத்தீவிற்கு உயர 60 கடல்மைல் தொலைவில் தரிபெற்றிருந்தனர். அப்போது கடலின் கடும் கொந்தளிப்பாலும் அதிகரித்து வீசிய கடற்காற்றின் வேகத்தாலும் படகுகளைச் சரியான இலக்கை நோக்கி நகர்த்துவது தடையாய் இருந்தது. ஆயினும் இதனைப் பொருட்படுத்தாது இரவுப்பொழுதில் இலக்கிற்காக காவலிருந்தனர் கடற்புலிகள். முடிவில், திருமலையிலிருந்து வந்துகொண்டிருந்த உகண கப்பலும் அதற்கான ஏம டோறக்களையும் சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது கடற்புலிகள் பின்தொடர்ந்து சென்று தாக்குதலைத் தொடங்கினர். அப்போது நேரம் சாமம் 1:30 மணியாகும். கடற்சமரின் ஒரு கட்டத்தில் மேஜர் ஆழியன் தனது சண்டைப்படகு மூலம் தாக்குதல் நடாத்தியபடி மேஜர் சூரனின் இடியனை கப்பலிற்கு அருகாமை வரை அழைத்துச் சென்றார். மோதுவிக்க முன்னர் மேஜர் ஆழியனின் படகில் இருந்த லெப். கேணல் சிலம்பரசன் பகைவரின் வலுவெதிர்ப்பு சற்றுத் தணிந்துகொண்டு செல்வதை அறிந்து மேஜர் சூரனின் இடியனில் இருந்த இரு கடற்கரும்புலிகளை நீரினுள் குத்திக்கும் படி கட்டளை வழங்குகிறார். அவர்களும் அப்படியே செய்தனர். பின்னர் இடியனை மோதும் படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இடியனின் தாக்குதலிற்குப் பின்னர் கப்பலிலிருந்து வலுவான சூடு கடற்புலிகளை நோக்கி ஏவல்செய்யப்பட்டது. ஆயினும் மேஜர் ஆழியன் அதற்கு முகம்கொடுத்தபடி தொடர்ந்து எதிர்த்தாக்குதலில் ஏடுபட்டார். அப்போது லெப். கேணல் பழனியும் லெப். கேணல் ரஞ்சனும் மேஜர் நல்லப்பனின் இடியனைக் கொண்டு சென்று மோதுவித்தனர். உடனே கப்பல் வெடித்துச் சிதறி அங்கேயே மூழ்கியது. சமரின் நடுவில் கடற்படையின் டோறா ஒன்றும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டது. கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு எதுவிதச் சேதமும் ஏற்படவில்லை. நீரினுள் குதித்த கடற்கரும்புலிகளை லெப். கேணல் சிலம்பரசன் தனது படகில் ஏற்றியபடி தளம் திரும்பினார்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: மெர்க்ஸ் உகண (Mercs Uhana)
    • கல வகை: படைய வழங்கல் கப்பல்
    • படிமம்:

MERCS UHANA - sunk 2000

படிமப்புரவு: கப்பலில் பணிபுரிந்த ஒரு சிங்களவர்

  • சேதமாக்கப்பட்ட (கடுமையாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 10 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் ஞானேஸ்வரன் எ ஞானக்குமார், மேஜர் சூரன், மேஜர் நல்லப்பன், மேஜர் சந்தனா, கப்டன் இளமதி, கப்டன் பாமினி.
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • கல வகை: வெள்ளை

ஆதாரம்: மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 26/06/2000 (Arms ship destroyed - LTTE), (Ship hit in seas off Mullaithivu) | உயிராயுதம் பாகம்-8 | கட்டுரை: எம்.ரி. கொய் தண்டையல் கடற்கரும்புலி லெப்.கேணல் சிலம்பரசனின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: செப்டெம்பர் 30, 2000
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல்
  • நிகழ்வு இடம்: குதிரைமலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பு 
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் சிங்களக் கடற்படையின் டோறா ஒன்று கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. தாக்குதலிற்குப் பின்னர் அங்கு அனுப்பப்பட்ட மேலதிக சிங்களப் படகுகளால் மூழ்கிய கலத்திலிருந்து 7 சிங்களக் கடற்கலவர் காப்பாற்றப்பட்டனர். இக்கடற்சமரில் 2 சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 2 பேர் காணாமல் போயினர். அவர்கள் இறுதிவரை கண்டுபிடிக்கப்பட்டவில்லை. ஆனால் இம்மோதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்பேதும் ஏற்படவில்லை. 
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 4 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 1/10/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 30/09/2000 (Tigers sink FAC in Kalpity)

 


  • திகதி: ஒக்டோபர் 19, 2000
  • அடிபாட்டுக் காலம்: இரவு
  • நிகழ்வு இடம்: வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சிங்களக் கடற்படையின் தகவலின் படி, வெற்றிலைக்கேணியை நோக்கி வந்துகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் கலத்தொகுதிக்கும் அங்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் வெடித்த கடற்சமர் இதுவாகும். கடற்சமர் பற்றி தவிபு ஒன்றும் கூறவில்லை. ஆனால் இம்மோதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்பேதும் ஏற்படவில்லை. 
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: படகுகள் (விதப்பான கல வகை அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 21/10/2000 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: ஒக்டோபர் 23, 2000
  • அடிபாட்டுக் காலம்
    • கடற்சமர்: வைகறை 5:30 மணியளவில்  தொடங்கி மூன்று மணிநேரம் தொடர்ந்தது
      • லிகினியா மற்றும் டோறா மீது இடியன்கள் மோதிய நேரம்: வைகறை 5:45 மணியளவில்
    • தரைச்சமர்:
      • எறிகணை வீச்சு: வைகறை 5 மணி சொச்சத்திலிருந்து கடற்சமரின் குறிப்பிட்ட காலம் வரை
      • முற்றுகை உடைப்புச் சமர்: துல்லியமான காலம் அறியில்லை. ஆனால் எறிகணை வீசத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலையே தமது உந்துருளி சிறப்புப்படையினர் (BSF) அவ்விடத்திற்குச் சென்று புலிகளுடன் மிண்டினர் என்றும் அப்போது தம் தரப்பில் இருவர் கொல்லப்பட்டதோடு 11 பேர் காயமடைந்தனர் என்று சிங்களம் தெரிவித்ததாக உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மோதல் இரவுவரை தொடர்ந்ததாகவும் உதயன் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
        • ஏவுகணை ஏவப்பட்ட நேரம்: சரியாக நண்பகல் 10:30
        • ஏவுகணை ஏவியவர்: இளம்புலி (ராதா விமான எதிர்ப்பு அணி)
        • பாவிக்கப்பட்ட ஏவுகணை செலுத்தி: மேற்பரப்பிலிருந்து வான்நோக்கி ஏவும் ஏவுகணை - 14 (SAM-14)
        • ஏவப்பட்ட இடம்: மார்பிள் கடற்கரையின் டயமன்ட் குன்றின் சாரலில் இருந்து
  • நிகழ்வு இடம்
    • கடற்சமர்: திருமலைத் துறைமுகத்தினுள்
    • தரைச்சமர்
      • எறிகணை வீச்சு: திருமலைத் துறைமுகம் மீது மார்பிள் கடற்கரையிலிருந்து கணையெக்கிகளால் (mortar) எறிகணை வீச்சு நடாத்தப்பட்டது
      • முற்றுகை உடைப்பு: மார்பிள் கடற்கரையை அண்டிய கந்தளாய் ஊற்றுப் பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: திருகோணமலைத் துறைமுகத்தினுள் கடற்கரும்புலிகளும் கடற்புலிகளும் புகுந்து மேற்கொண்ட தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதலிற்காக ஆறு கடற்கரும்புலிகள் 4 கவிர் வகுப்புப் படகுகளில் மாவலி கங்கை ஆற்றிலிருந்து புறப்பட்டு திருமலைத் துறைமுகத்தை நோக்கிச் சென்றனர். அதே சமயம் நாவற்குடா மார்பிள் கடற்கரையிலிருந்து கணையெக்கிகள் மூலம் இனங்காணப்பட்ட திருமலை துறைமுக இலக்குகள் மீது எறிகணை வீச்சு நடாத்தப்பட்டது, திருமலைப் படையணியின் போராளிகளால். இந்தக் குழப்ப நிலையைப் பயன்படுத்தி வைகறை 5:30 மணியளவில் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலி லெப். கேணல் இளங்கோ தலைமையிலான கடற்கரும்புலிகளும் பிறிதொரு இடத்திலிருந்து வந்திருந்த கடற்புலிகளும் சிங்களக் கடற்படையோடு மிண்டினர். கடற்சமரை லெப். கேணல் இரும்பொறை மாஸ்டர் வழிநடாத்தினார். வெடித்த கடற்சமரில் கடற்கரும்புலிகளின் இரு குண்டுப்படகுகள் "லிஹினியா" விரைவுப் படைக்காவி மீதும் ஒரு டோறாக் கலம் மீதும் வைகறை 5:45 மணியளவில் அடுத்தடுத்து மோதியிடித்து அவற்றை மூழ்கடித்தனர். கடற்சமர் தொடர்ந்து நடைபெற்றது. மூன்றாவது இடியன் உள்ளே வெடிக்க நான்காவது தளம் திரும்பியது. தொடர்ந்தும் கடற்றளம் மீது நடைபெற்றுக்கொண்டிருந்த எறிகணை வீச்சால் அங்கே தரிபெற்றிருந்த மேலும் இரு விரைவுப் படைக்காவிகள் சேதமடைந்தன. அப்போது கடற்படைத்தளம் மீது எறிகணைகளை சரமாரியாக ஏவிக்கொண்டிருந்த திருமலை படையணிப் போராளிகள் நிலைகொண்டிருந்த மார்பிள் கடற்கரைக்கு அண்டிய கந்தளாய் ஊற்றுப் பரப்பை சுற்றிவளைத்த கடற்படையினர் மற்றும் தரைப்படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் கடும் சமர் மூண்டது. இச்சமரில் பொதுமக்கள் மூவர் காயமடைந்தனர். தரைச்சமருக்கு சூட்டாதரவு வழங்கவென வந்த எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்தி ராதா விமான எதிர்ப்பு அணிப் போராளி இளம்புலி அவர்களால் சரியாக நண்பகல் 10:30 மணியில் SAM-14 ஏவுகணை செலுத்தி மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது (இவ் ஏவுகணையின் வெற்றுக்கூடு தற்போது சிறிலங்காவிலுள்ள இரத்தினபுரி வான்படை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.). இதனை அவர் டயமன் குன்றின் சாரல் தரையைத் தொடும் இடத்திலிருந்து ஏவியிருந்தார். உலங்குவானூர்தியிலிருந்த நான்கு வான்படையினரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் 24ம் திகதி மட்டில் கடற்படை சுழியோடிகளால் கண்டெடுக்கப்பட்டன. பின்னர், சுற்றிவளைப்பை வெற்றிகரமாக உயிரிழப்பேதுமின்றி உடைத்துத் தளந்திரும்பியதாக தமிழர் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் மார்பிள் கடற்கரை மற்றும் அண்டிய பரப்புகளிலிருந்து தப்பியோடிய போராளிகளை சிங்களப் படையினர் பிடித்தாத்துடர்ந்த (pursue) போது 24ம் திகதி நாவற்குடாப் பரப்பில் குப்பி கடித்து வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களையும் வகை-56 துமுக்கிகள் இரண்டையும் பல ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றினதோடு, மேலுமொருவர் குப்பி கடித்தபடி உயிர்காக்கப்பட்டு திருமலை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு தகவல் தெரிவித்துள்ளன. அவரிடமிருந்து நிகழ்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்தாக்குதலின் போது புலிகளிடமிருந்து கைப்பற்றியதாக சிறிலங்காப் படைத்துறையானது கரும்புலிகள் மகாவலி கங்கை ஆற்றில் தமது கவிர் வகுப்புப் படகை ஓட்டும் காட்சி ஒன்றையும் புலிவீரனொருவன் வெறும்மேலுடன் ஒரு போர்த்தளவாடத்தை (வகை - 63 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்தியின் இரு குழல்கள் போன்று தென்படுகிறது.) தோளில் சுமந்த படி நடந்து செல்லும்படியான நிழற்படமொன்றையும் ஆதாரமாக வெளியிட்டிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் இவ்வாறொரு நிகழ்வு நடைபெற்றதாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இத்தாக்குதலினால் திருகோணமலை பட்டணமும் சூழலும் பரப்பில் கடும் பதற்றநிலை நிலவியதோடு நகரமும் அதிர்ந்தது. எறிகணைகள் மற்றும் அவற்றின் சிதறல்கள் நகரை அண்டிய குடியிருப்புகள் மீதும் வீழ்ந்தன. இதனால் மக்கள் திகிலடைந்தனர். இரவு வரை மார்பிள் கடற்கரை மற்றும் நாச்சிக்குடா பரப்புகளில் மோதல்கள் தொடர்ந்ததால் வெள்ளைமணல் மற்றும் நாச்சிக்குடா பரப்புகளிலிருந்து சுமார் 500 குடும்பங்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்ததாக அற்றை நாளே தகவல்கள் வெளியாகின. உப்பாற்று சுற்றுப்பரப்புகளிலிருந்து சுமார் 250 குடும்பங்கள் வெளியேறி ஆலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயந்த மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு திருமலைக் கோட்டச் செயலர் வேலும்மயிலும் நேரில்சென்று இடருதவிப் பணிகளை மேற்கொண்டார். 24ம் திகதி மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளுத் திரும்பினர்.

  • மார்பிள் கடற்கரையிலிருந்து தாக்குதல் மேற்கொண்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிகழ்படமாக சிறிலங்கா அரசு வெளியிட்டது: 

https://eelam.tv/watch/ம-வல-கங-க-ஆற-ற-ல-039-கவ-ர-039-வக-ப-ப-ப-படக-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html

https://eelam.tv/watch/mi-24-ரக-த-க-க-தல-உலங-க-வ-ன-ர-த-ச-ட-ட-வ-ழ-த-தப-பட-ட-க-ட-ச_NsSLV9CHjoIY4Wu.html

  • சேதப்பட்ட (சிறிதளவு) கடற்கலங்கள்: 2
    • கடற்கலப் பெயர்: லங்கா ராணி
      • கடற்கல வகை: விரைவுப் படைக்காவி 
      • படிமம்:

A-543 Lanka Rani - Damaged in Trincomale 2000

'படிமப்புரவு: slnwwp'

    • கடற்கலப் பெயர்: ஹன்சயா (Hansaya)
      • கடற்கல வகை: விரைவுப் படைக்காவி 
      • படிமம்:

hansaya A-540 damaged 2000.jpg

'படிமப்புரவு: navy.lk'

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை
    • கடற்கலப் பெயர்: லிஹினியா (Lihiniya)
      • கடற்கல வகை: விரைவுப் படைக்காவி 
      • படிமம்:

Lihiniya A 541 - Sunk 2000 & later salvaged.

'படிமப்புரவு: அறியில்லை'

  • துறைமுகக் கடற்சமரால் சிறிலங்கா கடற்படை ஆளணியினரில் (தொடக்கக் கட்ட அறிக்கையின் படி),
    • கொல்லப்பட்டோர்: 2 பேர்
    • காயப்பட்டோர்: 25 பேர்
  • கந்தளாய் ஊற்று முற்றுகை உடைப்புச் சமரால் சிறிலங்கா ஆயுதப்படை ஆளணியினரில் (ஒக்டோபர் 23, 2000 ஆம் ஆண்டு நண்பகல் 11:15 வரை - கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி),
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டோர்: பலர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 6 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் நித்தி எ சோழவேங்கை, மேஜர் மயூரன், மேஜர் திருமாறன் எ திருவாளவன், மேஜர் நிதர்சன், மேஜர் றோஸ்மன் எ கணேஸ், லெப்.கேணல் றெஜி எ இளங்கோ
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலி
    • படிமங்கள்:

 

 

  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 3
    • கல வகை: கவிர்

ஆதாரம்: உதயன்: 24,25,27 & 28/10/2000 | தமிழ்நெற்: 23/10/2000 (Massive assault on Trincomalee Harbour -LTTE), (Tigers destroy gunboat in Trincomalee SLN Yard), (Mi24 shot down, fighting on Marble Beach) | மாவீரர் பட்டியல் | navypedia: HANSAYA personnel transports (1983/1987)  (http://www.navypedia.org/ships/sri_lanka/srl_ls_hansaya.htm) | உயிராயுதம் பாகம் - 9

 


  • திகதி: நவம்பர் 2, 2000
  • அடிபாட்டுக் காலம்: மாலை 9:45 மணியளவில்
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையிலிருந்து 71 கடல் மைல் தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: தொடர்ந்துகொண்டிருந்த விடுதலைப்போரிற்குத் தேவையான எரிபொருளை தொகையாகக் கொண்டுவருவதற்காக "பழனி" என்று பெயரிடப்பட்ட ஒரு எரிபொருள் தாங்கிப் படகு உள்நாட்டிலேயே கடற்புலிகளால் கட்டப்பட்டது. அது ஏமப்படகுகளின் (மகேஸ்வரி என்ற கலப்பெயர் கொண்ட வழங்கல் படகும் மூன்று சண்டைப்படகுகளும் கொண்ட கலத்தொகுதி ஒன்று) துணையோடு குறித்த ஆழ்கடலிற்குச் சென்று அங்கிருந்த தமிழீழ வணிகக் கப்பலிலிருந்து எரிபொருளை ஏற்றியபடி முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது கரையிலிருந்து 71 கடல் மைல் தொலைவில் இவர்களை சிங்களக் கடற்படையின் ஆழ்கடல் சுற்றுக்காவல் கலமான சுரணிமாலா (இசுரேலால் வழங்கப்பட்டது) வழிமறிக்க மோதல் வெடித்தது. அப்போது பழனி படகிலிருந்த கடற்கரும்புலிகளான லெப்.கேணல் பெத்தா, மேஜர் சதா, மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் வல்லவன் மற்றும் கடற்புலி லெப். கேணல் சதீஸ் ஆகியோர் தாங்கியின் பாதுகாப்பிற்குப் பொருத்தப்பட்டிருந்த படைக்கலனால் பகைக் கலத்தை நோக்கிச் சுட்டனர். ஆயினும் சூட்டுவலு கூடிய சிங்கள ஆழ்கடல் கலத்தின் சூட்டில் தமிழரின் எரிபொருள் தாங்கியால் நின்றுபிடிக்க இயலவில்லை. அதன் இயந்திரம் சேதமடைந்து நகராமல் கடலிலேயே நின்றுவிட்டது. இருந்தாலும் பின்னால் வந்துகொண்டிருந்த ஏனைய கடற்புலிப் படகுகள் சுரணிமாலாவின் முற்றுகையை உடைத்து பழனியின் கலக்குழுவினரை வழங்கல் படகான மகேஸ்வரியில் ஏற்றினர். இதன் பின்னர் 'பழனி'யின் தொழினுட்பம் பகைவரின் கையில் சிக்கக்கூடாது என்பதற்காக படகிலிருந்த எரிபொருளை எடுத்து படகு முழுவதும் ஊற்றி தன்னோடு சேர்த்துக் கொளுத்தி தானும் வீரச்சாவடைந்தார், பழனியின் தொலைத்தொடர்பாளரான கடற்கரும்புலி மேஜர் இலக்கியன். பேந்து புலிகளின் ஏமக் கலத்தொகுதி காயமடைந்திருந்த கடற்கரும்புலிகளோடும் கடற்புலிகளோடும் முல்லைத்தீவுக் கடற்புலிகளின் கடற்றளம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது காங்கேசன்துறையிலிருந்தும் திருமையிலிருந்தும் 15 இற்கும் மேற்பட்ட சிங்களக் கடற்படையின் டோறாக்கள் திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளோடு பொருதினர். கடற்புலிகளின் கலத்தொகுதிக்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து கடற்புலிகளின் மேலதிகச் சண்டைப்படகுகள் விரைந்து சென்று டோறாக்களின் மேல் தாக்குதலைத் தொடுக்க பாரிய கடற்சமர் வெடித்தது. தொடர்ந்த கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்றின் ஓட்டியான கடற்கரும்புலி லெப். கேணல் சல்மானும் வேறு சில போராளிகளும் வீரச்சாவடைய கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமுமடைந்தனர். கடற்படையின் வலிதாக்குதலை முறியடித்துக் கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் பின்னர் கரைசேர்ந்தன.  
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 10 பேர்
    • கடற்புலிகள்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் சதீஸ் எ சதீஸ்குமார், மேஜர் குமரவேல், மேஜர் நிலவன், கப்டன் குமார் எ உயிரோவியன் 
    • கடற்கரும்புலிகள்: 6 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: ‘கப்பல் தண்டையல்லெப்.கேணல் பெத்தா எ கதிர்காமரூபன், சண்டைப்படகு ஓட்டி லெப்.கேணல் சல்மான் எ இரும்பொறை, மேஜர் சதா எ சதாசிவம், மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், 'இயந்திரப் பொறியியலாளர்' கப்டன் வல்லவன்
      • படிமங்கள்:

 

ஆதாரம்: உதயன்: 3/11/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (LTTE boat destroyed -SLN) | உயிராயுதம் பாகம்-9

 


  • திகதி: நவம்பர் 3, 2000
  • அடிபாட்டுக் காலம்: மாலை 7:45 மணியளவில்
  • நிகழ்வு இடம்: திருமலைத் துறைமுக வாசலில்
  • நிகழ்வு விரிப்பு: சம்பூர் கரையிலிருந்து புறப்பட்டுச் சென்ற இடியன் திருமலை துறைமுகத்தினுளிருந்து சுற்றுக்காவலிற்காக வெளியே வந்த டோறா மீது மோதி வெடித்ததில் டோறா சேதமடைந்தது. அவ்டோறா பின்னர் துறைமுகத்தினுள் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது.
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: பலர்
    • காயப்பட்டோர்: பலர்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுடர்மணி எ செங்கதிர், லெப்.கேணல் நரேஸ்
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • படிமங்கள்:

 

 

 

  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: கவிர்

ஆதாரம்: உதயன்: 6/11/2000 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (LTTE boat destroyed -SLN)

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 ஆண்டு: 2001

 

இவ்வாண்டில் பி411 என்ற தொடரெண் கொண்ட சீ சென்ரினெல் வகுப்புச் சுடுகலப் படகொன்று மூழ்கடிக்கப்பட்டதாக நேவிபீடியா என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் திகதியை என்னால் அறியமுடியவில்லை.

 

  • திகதி: மார்ச் 21, 2001
  • அடிபாட்டுக் காலம்: காலை 5:00 மணியளவில்
  • நிகழ்வு இடம்: முல்லைக் கரையிலிருந்து 8 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகள் மீது வலிதாக்குதல் நடாத்திய சிங்களக் கடற்படையின் டோறாக்கள் மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர் என்று அற்றை நாளே புலிகள் செய்தி அறிக்கை விட்டிருந்தாலும் மெய்யில் வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்புலிகள் மீதே சிங்களக் கடற்படையினர் வலிதாக்குதல் நடாத்தி வேண்டிக்கட்டினர். யாழிலிருந்து திருமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மூன்று டோறாக்கள் {சுப்பர் டோறாவும் (பி 422) பேபி டோறாவும் (பி 495, பி497)} முதலில் கடற்புலிகளைக் கண்டுகொண்டன. உடனே பேபி டோறாக்கள் இரண்டும் கடற்புலிகளின் மூன்று சண்டைப்படகுகள் மீது முதல் வேட்டுகளைத் தீர்த்தன. முதலில், கடற்புலிகளின் சண்டைப்படகுகளின் கலத்தொகுதிக் (flotilla) கட்டளையாளர் வழங்கல் படகுகள் சாளைத் தளத்திற்கு ஓம்பலாகச் (safe) செல்வற்காக அனைத்துக் கலமணிகளையும் (squadron) சண்டை தவிர்ப்புச் செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆயினும் கடற்படையின் படகுகள் நன்கு நெருங்கி கடற்புலிகளைத் தாக்கத் தொடங்கின. கடற்படையின் தொந்தரவு அதிகரித்ததால் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் திடீரென வலு முரட்டுத்தனமான தாக்குதலை பகையின் டோறாக்கள் மீது தொடுத்தார். வெடித்த கடற்சமரின் ஒரு சமயத்தில் சுப்பர் டோறா (பி 495) ஒன்று கடற்புலிகளின் தாக்குதலில் நிலைகுலைந்து இயந்திரம் சேதமடைந்ததால் நின்றுவிட அதன் மீது தாக்குதலை வலுப்படுத்தினர். அந்நேரம் மேலும் 8 டோறாக்கள் உதவிக்கு விரைந்து தாக்குதல் நடாத்தின. சேதமடைந்ததிலிருந்த கடற்படையினர் சிலரைக் கொல்ல ஏனையோர் கடலினுள் குதித்து வேறொரு கலத்தில் ஏறி உயிர்தப்பினர். பின்னர் டோறாவைக் கைப்பற்றி, அதிலேறி, படைக்கலன்களைக் கழட்டியெடுத்துவிட்டு சக்கை வைத்து அதை மூழ்கடித்தனர், கடற்புலிகள். அதே சமயம் உதவிக்கு விரைந்து வந்த சிங்கள வான்படையின் குண்டுதாரிகள் கடற்புலிகளை இலக்கு வைத்தன. இந்நிலையை தமக்குச் சாதகமாக்கிய கடற்புலிகள் சிங்களக் கடற்படையின் கடற்சமர் வியூகத்தினுள் நுழைந்து பகைவரோடு இரண்டறக் கலந்து சமராடினர். கடற்புலிகளின் இத்தந்திரமான வியூகத்தால் திணறிய சிங்கள வான்படை பகை-நட்புக் கடற்கலங்களை இனக்காணத் தவறி தம் டோறா ஒன்றின் மீதே குண்டுவீசி மூழ்கடித்தனர். மேற்கொண்டு கடற்புலிகளோடு பொருத இயலாமல் சிங்களக் கடற்படையினர் பின்வாங்கினர். இக்கடற்சமரின் போது மேலும் இரு டோறாக்கள் சேதமடைந்தன. ஆனால் சிங்களக் கடற்படையினரோ இச்சமரில் தமது ஒரே ஒரு டோறாவே மூழ்கடிக்கப்பட்டதாகவும் தமது வான்படையினர் வான்குண்டெதையும் வீசவில்லையென்றும் தெரிவித்தனர். இக்கடற்சமரை கடலில் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் வழிநடாத்த பிரிகேடியர் சூசை அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தரையிலிருந்து வழிநடாத்தினார். இது புலிகளின் ஒருதலைப் பக்க போர் நிறுத்தத்தை மீறியதொரு செயலென்று புலிகள் குற்றம் சாட்டினர். 
  • மேலதிகத் தகவல்: வெடித்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் 12 டோறாக்களோடு கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் மிராஜ் வகுப்பு வழங்கல் படகுகளும் பொருதின. இத்தாக்குதலில் கடற்சிறுத்தை அணியின் கட்டளையாளரான லெப். கேணல் சேரமான், லெப். கேணல் பகலவன், லெப். கேணல் கன்னியத்தம்பி, கடற்புலிகளின் மகளீர் பிரிவுத் துணைக் கட்டளையாளர் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி, லெப். கேணல் விடுதலை, லெப். கேணல் சீராளன், லெப். கேணல் ஜெரோமினி எ விடுதலை, மேஜர் ஆழியன், மேஜர் தமிழ்நம்பி, லெப். கேணல் சிறீராம் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். சிறீராம் அவர்கள் சென்ற சண்டைப்படகில் லெப். கேணல் சேரமான் இருந்தார். கட்டளையாளர் சிறீராம் மொத்தச் சமரையும் படமாக்கியிருந்தார். இச்சமரில்ராகினிஎன்ற கலப்பெயரைக் கொண்ட மிராஜ் வகுப்பு வழங்கல் படகும் பங்கெடுத்திருந்தது. டோறாவிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள் யாவும் இதில் தான் ஏற்றப்பட்டன. கரையில் இதிலிருந்தும் மற்றைய மிராஜ் வகுப்புப் படகிலிருந்தும் படைக்கலன்களையும் காயம் & வீரச்சாவுகளையும் பொதுமக்கள் இறக்கினர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம்-2 (பி 495)
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை. கடற்புலிகளின் தகவலின் அடிப்படையில். ஆனால் சிங்களம் இது பெருத்த சேதத்தோடு தப்பியது என்றே கூறுகின்றது)
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 9+ பேர் 
    • காயப்பட்டடோர்: பலர் 
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 3 பேர் 
    • தரநிலையுடனான பெயர்: மேஜர் தென்றல், மேஜர் கலா எ நாவுக்கரசி, கப்டன் மறவன் 
    • காயப்பட்டடோர்: ஒரு பெண் போராளி உட்பட ஆகக்குறைந்தது நான்கு போராளிகள்
  • நிகழ்படம்

ஆதாரம்: உதயன்: 22/03/2001 | தமிழ்நெற்: 21/03/2001 (SLN gunboat sunk), (One Dvora captured, weapons stripped - VOT) | எரிமலை: மார்ச் 2001 | கட்டுரை: ‘21.03.2001 அன்று சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிகள்

 


  • திகதி: ஏப்ரல் 16, 2001
  • அடிபாட்டுக் காலம்புலிகளின் குரலின் செய்தியின் படி: சாமம் 1:45 மணியளவில் தொடங்கியது
  • நிகழ்வு இடம்: சாளைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகள் வலுச் சேர்க்கும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது வைகறைப் பொழுது 2:15 மணியளவில் சிறிலங்காக் கடற்படையின் ஐந்து டோறக் கலங்கள் இவர்களைக் கண்டுகொண்டன. பொதுவாக இந்நடவடிக்கைகள் இராப்பொழுதிலேதான் நடைபெறுவதுண்டு, சிங்களக் கடற்படையுடனான முட்டலைத் தவிர்க்க. அவை புலிகளின் படகுகள் என்பது தெரியாமல் கடற்புலிகளின் கலத்தொகுதிகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி உசாவல் செய்ய முயன்ற போது கடற்புலிகளிடமிருந்து குறிகைகள் (Signal) ஏதும் கிடைக்காததால் சிங்களக் கடற்படையின் பி 462 என்ற டோறா முதலில் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தபடி மிண்டியது. மேற்கொண்டு ஏனையவையும் சுடத் தொடங்க கடற்சமர் மூண்டது. அச்சமயம் நாகர்கோவில் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இரு டோறாக்களும் திருமலை, காங்கேசன்துறை கடற்றளங்களிலிருந்து உதவிக்கு மேலதிக சுடுகலப் படகுகளும் அழைக்கப்பட்டு கடற்புலிகளின் கலத்தொகுதியோடு பொருதின. நடந்த கடற்சமரில் கடற்புலிகளின் சூட்டில் பி 490 என்ற தொடரெண் கொண்ட டோறாவின் இயந்திரங்கள் சேதமாகி காங்கேசன்துறைக்கு கட்டியிழுத்துச் செல்லப்பட்டது. கதுவீ பொருத்தப்பட்ட மற்றொரு டோறாவும் (பி 460) இராப்பார்வை ஏந்தனங்கள் (Equipments) பொருத்தப்பட்ட இன்னொரு டோறாவும் தொடர்ந்த கடற்சமரில் சேதமாகின. சிங்கள வான்படையும் சிங்களக் கடற்படைக்கு உதவியது. கடற்சமர் முடிந்த பின்னர் அப்பரப்பில் தேடுதல் நடாத்திய போது ஒரு டசினுக்கும் அதிகமான நெகிழி உருள்கலன்கள் மிதந்து வருவது கவனிக்கப்பட்டது என்று சிங்களக் கடற்படை கூறியது. பின்னர் அவற்றை ஆய்வுகுட்படுத்திய கடற்படையினர் அவற்றில் சிலதில் வான்புலிகளின் இலகு வகை வானூர்திகளுக்கான ஹை ஒக்ரேன் எரிபொருளும் சிலதில் சயனைட் தயாரிப்பதற்கான ரலிலின் டெசோசயனைட் என்ற வேதிப்பொருளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வான்புலிகளின் சிலின் 143 இலகு வகை வானூர்திகளுக்கான எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டது என்பது இக் கட்டுரை எழுதுவினைஞரின் ஊகமாகும். இக்கடற்சமரானது புலிகளின் ஒருதலைப் பக்க போர் நிறுத்தத்தை மீறிய செயல் என்று புலிகள் குற்றம் சாட்டினர்.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இழப்பில்லை 
    • காயப்பட்டடோர்: 7 பேர் 
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர் 
    • தரநிலையுடனான பெயர்: 2ம் லெப். கவிமகள், லெப். தமிழ்மறவன்

ஆதாரம்: உதயன்: 17,19/04/2001 | தமிழ்நெற்: 16/04/2001 (SLN, Sea Tigers clash off Mullaithivu)

 


  • திகதி: ஏப்ரல் 20, 2001
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 3:50 மணியிலிருந்து காலை 7:00 மணி வரை
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவுக் கரையில் பொதுமக்களின் உதவியுடன் போர்த்தளவாடங்களை இறக்கிக்கொண்டிருந்த கடற்புலிகளின் நடமாட்டத்தை கரைக்கு வடகிழக்கே 32 கடல்மைல் தொலைவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கலங்கள் கண்டுவிட்டு மேலதிக கடற்படையை துணைக்கு அழைத்து கடற்புலிகளோடு பொருதினர். சிங்களக் கடற்படைக்குத் துணையாக வழமை போல சிங்கள வான்படையும் வந்து சேர்ந்து சமர் புரிந்தன. இதற்கு முன்னர் நடந்த பல கடற்சமர்களின் போதும் சிங்கள வான்படை உதவிக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடற்சமரில் சிங்களக் கடற்படையின் டோறா ஒன்று சேதமடைந்தது. கடற்புலிகளின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. அவற்றுள் ஆகக்குறைந்தது ஒன்றாவது வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகாகும். இக்கடற்சமரில் தான் முதன்முறையாக 8 கடற்புலிகள் சிங்களக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட்ட ஒரே படகிலிருந்தே பிடிக்கப்பட்டனராம். காயத்தோடு இருந்த அவர்களில் ஒருவர் பலாலி படைய மருத்துவமனையிலும் ஏனையோர் திருமலை படைய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்தது. ஆனால் இவ்வாறு சிறிலங்காக் கடற்படையால் பிடிக்கப்பட்ட போர்க்கைதிகள் பன்னாட்டு போர்க்கைதிகள் விதிமுறைக்கு மாறாக மிகவும் மோசமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தப்பட்டனர். பெண் போராளிகள் சிங்களக் கலங்களில் ஏற்றப்பட்டவுடனேயே ஆடைகள் கழையப்பட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டனர். பின்னர் திருமலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு இறக்கப்பட்டவுடன் உடைகள் கொடுக்கப்பட்டது. இவ்வாறு பிடிபட்டவர்களில் ஆகக்குறைந்தது இரு பெண் போராளிகளாவது 2002 சனவரி வரை உயிரோடு இருந்துள்ளனர். ஏனைய போராளிகளின் நிலைமை தெரியவில்லை. எவ்வாறெயினும் இதற்கு முன்னர் பிடிபட்டவர்கள் மிகக் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டதே இவர்களினதும் கதியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 
  • மேலதிகத் தகவல்: இவர்களில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு வெலிக்கடை மகளீர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த (சனவரி 2002 நிலவரப்படி) சுபாசினி மற்றும் விஜயகலா ஆகியோர் தொடர்பில் பன்னாட்டு மன்னிப்பு அவைக்கு கிடைத்திருந்த அறிக்கைகளிலிருந்து…
    • சுபாஷினி: “பன்னாட்டு மன்னிப்புச் சபைக்கு கிடைத்த தகவலின்படி, விஜயரத்தினம் சுபாஷினி விடுதலைப் புலிகளின் படகில் கடலிலிருந்து திரும்பிய போது, சிறிலங்காக் கடற்படையின் சுடுகலப் படகுகள் பல அவர்களைச் சுற்றி வளைத்தன. பல மணி நேரம் கடும் சண்டை நடந்தது. விஜயரத்தினம் சுபாஷினி மற்றும் பலர் அவர்களது படகுகள் சேதமடைந்ததை அடுத்து கடலில் குதித்தனர், பின்னர் அவர் கடற்படைச் சுடுகலப் படகு ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டார். சுடுகலப் படகில் ஏறிய உடனேயே, அவளது உடைகள் அனைத்தும் கழற்றப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டன. மேலும், பத்து கடற்படை வீரர்கள் அவது முலைகளையும் பிறப்புறுப்புப் பகுதியையும் தொட்டு அழுத்தினர். அவள் கத்திக் கொண்டிருந்த போது அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் விரல்களை அவளது பெண்குறிக்குள் விட்டனர். இந்த முழு வேதனையும் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. படகு திருகோணமலையை அடைந்ததும் அவளது உடைகள் கொடுக்கப்பட்டன. அவர் கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் எவ்வித குற்றச்சாட்டோ உசாவலோ இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிவுக்கிட்டியவரை, இந்தக் குற்றச்சாட்டு குறித்து எந்த உசாவலும் நடத்தப்படவில்லை.” (பன்னாட்டு மன்னிப்புச் சபை, AI Index: ASA 37/001/2002, பக்கம்: 14)
    • விஜயலலிதா: “தங்கையா விஜயலலிதா என்ற 14 வயது தமிழ்ப் பெண், 20 ஏப்ரல் 2001 அன்று விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட போது பத்துக்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் (மேலே உள்ள வழக்கு எண். 4 ஐயும் பார்க்கவும், விஜயரத்தினம் சுபாஷினி). அறிக்கையின்படி, தங்கையா விஜயலலிதா கடற்படையின் சுடுகலப் படகில் அழைத்துச் செல்லப்பட்டு அவரது பாவாடை மற்றும் கச்சு கழற்றப்பட்டது. படகு திருகோணமலையை அடைந்ததும் அவளது உடைகள் அவளிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டன. அவர் தற்போது கொழும்பு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் எவ்வித குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.” (பன்னாட்டு மன்னிப்புச் சபை, AI Index: ASA 37/001/2002, பக்கம்: 14)
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: 4 பேர் 
  • கடற்புலிகள் ஆளணியினரில்: 
    • வீரச்சாவடைந்தோர்: 9 பேர்
      • தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் பவான், லெப். கேணல் கடம்பன், மேஜர் மயூரி, மேஜர் இசைவிழி, கப்டன் சுடர்வானம், லெப். மைந்தன், லெப். அறிவு எ அறிவழகன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். மதிநிலா எ நிலாவொளி
    • காயமடைந்தோர்: சிலர்
    • போர்க்கைதிகளானோர்: 8 பேர்
      • முதற்பெயருடனான இயற்பெயரும் வயதும்: சிற்றம்பலம் துஸ்யந்தினி (16), தங்கையா விஜயலலிதா (14), விஜயரத்தினம் சுபாசினி (19), புவனேஸ்வரன் மலிஸ் (21), வைகரன் (19), ரவி (19), கந்தன் (19), கோடீஸ்வரன் (24)

ஆதாரம்: உதயன்: 21&23/04/2001 | தமிழ்நெற்: 20/04/2001 (Four LTTE boats sunk - Navy) | மாவீரர் பட்டியல் | பன்னாட்டு மன்னிப்புச் சபையின் அறிக்கை: asa370012002en.pdf

 


  • திகதி: சூன் 23, 2001
  • அடிபாட்டுக் காலம்: காலை
  • நிகழ்வு இடம்: சம்பூர் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லைகொடுத்து அவர்தம் மீது தாக்குதல் நடாத்திவந்த சுற்றுக்காவல் படகுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த கைக்குண்டு செலுத்தி, வெளியிணைப்பு மின்னோடி, தொலைத்தொடர்புக் கணம் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக தவிபுவினர் ஊடக வெளியீடு ஒன்றில் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த நாள் காலையில் சம்பூர் மீது சிறிலங்காக் கடற்படையின் சுடுகலப் படகுகள் சூடு நடத்தியதாக மூதூரில் உள்ள தமிழ்நெட் செய்தியாளர் தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையின் எறிகணை வீச்சில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன், ஒரு பாடசாலை மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கடற்படையின் எறிகணைவீச்சில் பல கால்நடைகளும் கொல்லப்பட்டதாக புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் கோட்டத்தின் அறிக்கைகள் தெரிவித்தன.
  • கைப்பற்றப்பட்ட  கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: சுற்றுக்காவல் படகு
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: அறியில்லை  
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 24/06/2001  | தமிழ்நெற்: 23/06/2001 (SLN patrol boat captured - Mutur LTTE)

 


  • திகதி: செப்டெம்பர் 15, 2001
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:50 மணியளவில்
  • நிகழ்வு இடம்: சூடைக்குடா (ஃவௌல் பொயின்ற்/Foul Point) கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: வெள்ளைக்கொடி பறக்க விடப்பட்ட கட்டைப்படகு ஒன்றில் குடிமக்கள் போன்று வேடமிட்டு டோறாவை நெருங்கிய கடற்கரும்புலிகள் இலக்கை அண்மித்ததும் வெடித்துச் சிதறினர். இதில் டோறா சிறிது சேதமடைந்தது.
  • சேதப்பட்ட (சிறிது) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: 1 ஆள் 
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்: மேஜர் ஓசையினியவன், கப்டன் தமிழினியன் எ பொறையரசு
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: 

ஆதாரம்: உதயன்: 17/09/2001

 


  • திகதி: செப்டெம்பர் 16, 2001
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 4:30 மணியிலிருந்து நண்பகல் வரை
    • டோறா மீது இடியன் மோதி மூழ்கிய நேரம்: வைகறை 5:30 மணியளவில்
    • மற்றொரு டோறா சேணேவித் தாக்குதலிற்குள்ளாகி மூழ்கிய நேரம்: நண்பகல் 12:45 மணியளவில்
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கரையிலிருந்து 26-30 கடல் மைல் தொலைவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: திருமலையிலிருந்து 1200 தரைப்படையினரையும் கப்பல் ஊழியர்களையும் ஏற்றிக்கொண்டு ஏமக் கலங்களோடு காங்கேசன்துறைத் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'எம்.வி. பிரைட் ஒஃவ் சௌத்' என்ற படைக்காவி பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்துக் கடற்புலிகளால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலின் போது கடற்புலிகளின் அனைத்து வழங்கலும் ஒருங்கிணைக்கப்பட்டு 10 சண்டைப்படகுகள், 2 வழங்கல் படகுகள், மற்றும் 8 குண்டுப்படகுகளைக் கொண்ட 5 கலத்தொகுதிகளாகப் (4 தாக்குதல் மற்றும் ஒரு வழங்கல்) பிரிக்கப்பட்ட கலக்கூட்டம் (fleet) ஒன்று ஈடுபடுத்தப்பட்டது. இந்நடவடிக்கையில் 170 கடற்புலிகளும் 24 கடற்கரும்புலிகளும் ஆக மொத்தம் 194 போராளிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வருண கிரண கடற்றடுப்பு வேலியை உடைக்க கடற்புலிகள் தம்மோடு பொருதிக்கொண்டிருந்த டோறா ஒன்றின் மீது கடற்கரும்புலித் தாக்குதலை குறித்த வைகறைப் பொழுதில் நடாத்தினர். பின்னர் ஏமக்கலங்கள் மீது கடற்புலிகள் தாக்குதலைத் தொடுக்க மேலும் 15 டோறாக் கடற்கலங்கள் திருமலையிலிருந்தும் யாழ் குடாவிலிருந்தும் துணைக்கு வந்து சேர்ந்தன. சிங்களக் கடற்படைக்கு உதவிக்கென சிங்கள வான்படையினரும் அவ்விடத்திற்கு விரைய பாரிய கடற் போரரங்காக விரிந்தது, அக்கடற்சமர். தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் கப்பலைச் சுற்றி வளைத்தனர், கடற்புலிகள். அச்சமயம் இடியன் ஒன்று மோதியிடிப்பதற்காக 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' சொல்லிப் புறப்பட்டுச் சென்ற போது கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவசரக் கட்டளையாக இடியனை மோதியிடிக்காமல் பின்வாங்குமாறு அறிவுறுத்த மோதச் சென்ற இடியனும் கப்பலை ஒரு முறை சுற்றி வலம் வந்துவிட்டு பின்வாங்கியது. அப்போது தான் சிறிலங்காக் கடற்படையினர் வெளியுலகிற்கு அறிவிக்காமல் சிங்களப் படைத்துறையின் கடல் படைக்காவியில் தமக்குப் பாதுகாப்பாக தமிழ் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இலக்கை அழிக்காவிட்டாலும் பரவாயில்லை பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கடற்புலிகள் கப்பலைப் போகவிட்டனர். இத்தாக்குதல் மட்டும் அன்று வெற்றியடைந்திருதால் கட்டுநாயக்கா மீதான கரும்புலி நடவடிக்கை போன்று கடலிலும் உலகமே திரும்பிப் பார்க்க வல்லதொரு வரலாற்றுச் சாதனை படைத்திருப்பர். இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டிருப்பின் அதில் சென்ற படையினரை முற்றாக மீட்கும் வல்லமை சிங்களக் கடற்படையிடம் அப்போது இருக்கவில்லை. இக்கப்பாலானது கடற்கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து ஒரு மணிநேரம் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மேற்கொண்ட தொடர்ந்த சமரில் நண்பகல் 12:45 மணியளவில் நடாத்தப்பட்ட சேணேவித் தாக்குதலில் மற்றொரு டோறா மீளப்பாவிக்கேலாதளவு கடுமையாகச் சேதமடைந்தது. தொடர்ந்த சமரில் மேலும் 6 டோறாக்கள் சேதமடைந்தன. கடற்புலிகள் தரப்பில் ‘பரந்தாமன்’ என்ற கலப்பெயர் கொண்ட வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகின் கடையார் (இயந்திரப்பகுதி) தீ பற்றிக்கொண்டது. மாதவி படகும் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்து மீட்டெடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் தீ அணைக்கப்பட்டது. செப்டெம்பர் 23 அன்று விடுதலைப் புலிகள் கடற்படையினரின் இந்த மனிதக்கேடயச் செயலை வன்மையாக கண்டித்ததுடன் பொதுமக்கள் யாரையும் படைத்துறைக் கப்பல்களில் போக்குவரவுச் செய்யவேண்டாம் என்று அறிவுரை கூறி கேட்டுக்கொண்டனர். நிகழ்வின் முழு விரிப்பு:
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 7
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை) - 6
    • கடற்கலப் பெயர்: எம்.வி. பிரைட் ஒஃவ் த சௌத் (MV Pride of the South)
      • கல வகை: படைக்காவி
      • படிமம்:

MV Pride of South - 2001.jpg

படிமப்புரவு: Tamilnet

  • சிறிலங்கா படைத்துறை ஆளணியினரில்,
    • கடற்படையினரில்:
      • கொல்லப்பட்டோர்: 11-15 பேர்
      • காணாமல் போனோர்: 7-18 பேர் (இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா இல்லையா என்பது பற்றித் தெரியவில்லை)
    • தரைப்படையினரில்
      • காயப்பட்டடோர்: 47-60 பேர்
  • விடுதலைப்புலிகளின் ஆளணியினரில்
    • காயமடைந்தோர்: 2 பேர்
      • கடற்புலிகள்: 2 பேர்
        • ரநிலையுடனான பெயர்: புனிதா (மட்டக்களப்பில் நடந்த சமரொன்றில் லெப். கேணல் தரநிலையில் வீரச்சாவடைந்தார் . இச்சமரில் இவர் தொலைத்தொடர்பாளராக பணியாற்றினார்) மற்றும் இன்னொரு போராளி
    • வீரச்சாவடைந்தோர்: 10 பேர்
      • கடற்புலிகள்: 6 பேர்
        • ரநிலையுடனான பெயர்: கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்லெப். கேணல் இரும்பொறை & (பெயர் அறியில்லா சண்டைப்படகின்) 'படகுக் கட்டளை அதிகாரி' லெப். கேணல் குமுதன், 'முதன்மைப் பொறியியலாளர்' மேஜர் சிவகாந்தன் எ தாஸ் எ காந், '23மிமீ சுடுகலன் முதன்மைச் சூட்டாளர்' மேஜர் நளன், '20மிமீ சுடுகலன் முதன்மைச் சூட்டாளர்' கப்டன் எழிலரசன், '25மிமீ சுடுகலன் சூட்டாளர்' லெப். திருவாணன்
      • கடற்கரும்புலிகள்: 4 பேர்
        • தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் அனோஜன் எ மாதவன், மேஜர் அருணா எ சுதா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி
        • படிமங்கள்:

FJAeZgbWYAgl9AU.jpg

தாக்குதலிற்குச் சென்ற ஏனைய கடற்கரும்புலிகளோடு (இடிக்காதோர்) லெப். கேணல் அனோஜனும் கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியனும் தேசியத் தலைவருடன் உரையாடும் காட்சி | படிமப்புரவு: தவிபு

  • பாவிக்கப்பட்ட சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: கவிர்

ஆதாரம்: உதயன்: 17&18/09/2001 | தமிழ்நெற்: 16/09/2001 (Sea battle off Pt. Pedro), (Two Dvoras sunk, two damaged in clash), (Several killed, missing in naval clash) & 23/09/2001 (Tigers say SLN using civilians as human shield) | கட்டுரை: 'தமிழரை மனிதக் கேடயங்களாகப் பாவித்துத் தப்பித்த எம்வி பிரைட் ஒஃவ் சௌத்' | இத்தாக்குதலில் பங்குபெற்றிய புலிகளின் சண்டைப்படகொன்றின் கட்டளை அதிகாரி திரு புலவர் அவர்களின் வாக்குமூலம்

 

  • திகதி: செப்டெம்பர் 23, 2001
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10 மணியளவில் தொடங்கி எற்பாடு வரை நீடித்தது
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 57 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: வழக்கமான வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகள் மீது குறித்தக் கடற்பரப்பில் வைத்து மே 25 அன்று தொடங்கப்பட்ட 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) என்ற கடற்புலிகளின் ஆழ்கடல் ஆயுத வழங்கல் நடவடிக்கைகளை தடுக்கும் பாரிய கடல்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்படையினர் வலிதாக்குதலில் ஈடுபட்டு மிண்டிய போது கடற்சமர் மூண்டது. சிங்களக் கடற்படைக்கு ஆதராவக சிங்கள வான்படையும் வந்து சேர்ந்தது. தொடர்ந்த கடற்சமரில் கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ள சிங்களவரின் டோறா ஒன்றை இடியன் அண்மித்த போது பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. இருந்தபோதிலும் டோறாவும் சிறிய சேதத்திற்குள்ளாகியது. கடற்புலிகள் எவ்விதச் சேதமுமின்றி கரை திரும்பினர். இங்கு கடற்சமர் வெடித்த இடத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் கடற்புலிகளின் இரு வணிகக் கப்பல்கள் போர்த்தளவாடங்களை இறக்கிவிட்டு திரும்பிச்சென்றுகொண்டிருப்பதை சிங்களக் கடற்படை கண்டதாம்.
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: அறியில்லை  
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 3 பேர்
    • கடற்கரும்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்: மேஜர் நல்லமுத்து எ சிவாகரன், கப்டன் புவிமகள்,கடற்புலிகளின் மகளீர் பிரிவுத் துணைக் கட்டளையாளர்' லெப். கேணல் அமுதசுரபி (இவ இச்சமரில் காயமடைந்து பண்டுவம் பலனின்றி 26/10/2001 அன்று காயச்சாவடைந்தார்)
    • கடற்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: மேஜர் திருமலை

ஆதாரம்: உதயன்: 24&25/09/2001  | தமிழ்நெற்: 23/09/2001 (Tigers say SLN using civilians as human shield)

 


  • திகதி: ஒக்டோபர் 5, 2001
  • அடிபாட்டுக் காலம்: காலை
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கரையிலிருந்து 9 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்த டோறாக் கலத்தை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட வலிதாக்குதலில் டோறா சேதமடைந்தது என்று உதயன் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பெருங்கடலிலிருந்து ஆயுதங்களை ஏற்றுக்கொண்டு வந்துகொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளை வழிமறித்துத் தாம் தாக்குதல் நடாத்தியதாக 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை மட்டக்களப்புக் கடலூடாக ஆயுதங்களை புலிகள் தரையிறக்கியதாக அதிகாரநிறைவு பாதுகாப்பு வட்டாரங்களை மேகோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரயிதழொன்று செய்தி வெளியிட்டிருப்பதாக உதயன் 15/10/2001 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 1 ஆள்
    • காயப்பட்டடோர்: 2 பேர் 
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை 

ஆதாரம்: உதயன்: 6/10/2001 

 


  • திகதி: ஒக்டோபர் 21, 2001
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10:10 மணியளவில் தொடங்கியது
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள ஆழ்கடல் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் வலுச்சேர்க்கும் நடவடிக்கையின் போது எரிபொருளை ஏற்றிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் மே 25 அன்று தொடங்கப்பட்ட 'நிறக்கதிர்கள்' (சி. வருண கிரண) என்ற கடற்புலிகளின் ஆழ்கடல் ஆயுத வழங்கல் நடவடிக்கைகளை தடுக்கும் பாரிய கடல்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கும் இடையில் கடற்சமர் வெடித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகளின் ஆக்குறைந்தது ஒரு சண்டைப்படகாவது மூழ்கடிக்கப்பட்டது. இச்சமரில் கடற்கரும்புலிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். அவர் சண்டைப்படகில் பட்டறிவிற்காகப் பயணித்தவரா (கடற்கரும்புலிகள் கடற்சமர்கள் தொடர்பான பட்டறிவினைப் பெற இவ்வாறு சண்டைப்படகுகளில் செல்வதுண்டு) அல்லது இடியனில் சென்று மோதியிடிக்க முற்பட்ட போது பகைச்சூட்டிற்கு இடியன் இலக்காகிட இவர் வீரச்சாவடைந்தாரா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. கடற்படையின் டோறாக்களுக்கு சேதமேதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: 1 ஆள் (சிங்களக் கடற்படையின் தகவலின் படி)
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 11 பேர் 
    • கடற்புலிகள்: 10 பேர் 
      • தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் செங்கண்ணன் எ கலாதரன், மேஜர் கொற்றவன், மேஜர் நீலவண்ணன், கப்டன் திருவாணன், லெப். தயாபரன் எ முரளி, லெப். நாவரசி, 2ம் லெப். விடுதலைவீரன், 2ம் லெப். தமிழ்வேங்கை, 2ம் லெப். கனிவிழி, 2ம் லெப். சுகனிலா
    • கடற்கரும்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: கப்டன் இளங்குயிலன்

ஆதாரம்: உதயன்: 22/10/2001 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: ஒக்டோபர் 21, 2001
  • அடிபாட்டுக் காலம்: அறியில்லை
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் நடந்த சமரிலிருந்து விலத்தி இவர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பினுள் நுழைந்த போது மீண்டும் சிங்களக் கடற்படையோடு முட்டுப்பட்டுக் கடற்சமரொன்று வெடித்தது. கடற்படையின் டோறாக்களுக்கோ ஆளணியினருக்கோ சேதமேதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இக்கடற்சமரில் கடற்புலிகளின் கடற்கலங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும் விரிப்புத் தெரியவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: அறியில்லை
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 9 பேர் 
    • தரநிலையுடனான பெயர்: லெப்.கேணல் கலாத்தன் எ செங்கண்ணன், கப்டன் ஈழப்பிரியன், கப்டன் நாவலன், லெப். புகழ்நம்பி, லெப். யாதவன், 2ம் லெப். கனிமதி, 2ம் லெப். சுபநிலா எ கலைநிலா, 2ம் லெப். மூவேந்தன், 2ம் லெப். தணிகைச்செல்வி

ஆதாரம்:உதயன்: 22/10/2001 | மாவீரர் பட்டியல் | கட்டுரையாக்கப்பட்ட சிறப்புரை: மருதங்கேணியில் 21/10/2003 அன்று லெப். கேணல் கலாத்தன் நினைவு நூல்நிலையத் திறப்பு விழாவில் பிரிகேடியர் சூசை அவர்கள் உரைத்த சிறப்புரை.

 


  • திகதி: ஒக்டோபர் 21, 2001
  • அடிபாட்டுக் காலம்: காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:30 மணியளவு வரை
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறைக்கு கிழக்கேயுள்ள கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களவரின் கடற்கலங்களை வழிமறித்துக் கடற்புலிகள் நடாத்திய வலிதாக்குதல். இக்கடற்சமரில் வழமை போன்று சிங்கள வான்படையும் சிங்களக் கடற்படைக்கு துணையாக வந்து எதிர் தாக்குதல் நடாத்தியது. சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாக் கடற்கலங்கள் சேதமடைந்தன. இவ்வலிதாக்குதலில் கடற்கரும்புலிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். அவர் மோதியிடிக்க முற்பட்டபோது வீரச்சாவடைந்தாரா அல்லது வேறெப்படியேனும் வீரச்சாவடைந்தாரா என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டடோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர் 
    • கடற்புலிகள்: 4 பேர் 
      • தரநிலையுடனான பெயர்: மேஜர் சிவா, கப்டன் செல்லப்பன், கப்டன் செந்தளிர், 2ம் லெப். புகழினியன்
    • கடற்கரும்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: மேஜர் றோசா

ஆதாரம்: உதயன்: 22/10/2001

 


  • திகதி: ஒக்டோபர் 30, 2001
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறைக் கரையிலிருந்து 17 கடல் மைல் தொலைவுக் கடற்பரப்பு
    • கப்பல் மீது முதலாவது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:14 மணியளவில்
    • கப்பல் மீது இரண்டாவது இடியன் மோதிய நேரம்: முதலாவது மோதியிடிப்பிலிருந்து 10 நிமிட இடைவெளியில்
  • நிகழ்வு விரிப்பு: மக்களுக்கான எரிபொருளை ஏற்றிச்செல்கிறோம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றுள்ள படையினருக்கான எரிபொருளை ஏற்றிக்கொண்டு திருமலையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி ஏமக் கடற்கலங்களோடு சென்று கொண்டிருந்த துன்கிந்த என்ற எரிபொருள் கப்பல் கடற்கரும்புலிகளால் மோதியிடிக்கப்பட்டு வெடித்து எரிந்தது. தாக்குதல் நடந்த சமயத்தில் கப்பலில் 16 கடற்படையினர் மற்றும் தரைப்படையினரும் 11 கப்பல் ஊழியரும் இருந்தனர். கடற்புலிகளின் துணையோடு வந்த கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டனர். 750 இலிருந்து 1000 மெட்ரிக் தொன் அளவிலான எரிபொருளை ஏற்றிச்செல்ல வல்ல இக்கப்பலில் 120 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய், 225 மெட்ரிக் தொன் கந்தக டீசல், 275 மெட்ரிக் தொன் 'லங்கா ஓட்டோ' டீசல் ஆகியன ஏற்றப்பட்டிருந்தன. முதல் மோதியிடிப்பிற்குப் பின் சேதமடைந்த கப்பலை கடற்படையினர் மீட்க முயன்ற போது இரண்டாவது மோதியிடிப்பு நிகழ்ந்தது. இக்கப்பலின் மீதான கரும்புலித் தாக்குதலிற்குப் பின்னர் கப்பலில் நெருப்புப் பிடித்து கொழுந்துவிட்டு பின்னிரவு வரை எரிந்ததைப் பருத்தித்துறைக் கடற்கரையோரத்திலிருந்து கண்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர். இக்கப்பலின் தீ அணைக்கப்பட்டு காங்கேசன்துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதாக சிங்களப் படைத்துறை பேச்சாளர்  பிபிசியிடம் தெரிவித்தார். இத்தாக்குதலானது அதே ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி முல்லைத்தீவிலிருந்த கடற்புலிகளின் தளம் ஒன்றின் மீதான சிங்களவரின் வான் தாக்குதலிற்குப் பழிக்குப்பழியாகவும் (இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் யாரும் வீரச்சாவடையவில்லை.) லெப். கேணல் கலாத்தனின் நினைவாகவும் மேற்கொள்ளப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர். 
  • வெடித்து எரிந்த (ஆனால் மூழ்கடிக்கப்படவில்லை) கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: துன்கிந்த 
    • கல வகை: எரிபொருள் தாங்கி
    • படிமம்:

LMS_DUNHINDA - 2001.jpg

படிமப்புரவு: shipspotting.com

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: இக்கப்பலிலிருந்தோரில் மூவரைக் காணவில்லை ஆனால் ஏனையோர் மீட்கப்பட்டுவிட்டனர் என்று சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் பிரி. சனத் கருணாரட்னேவும் எட்டுப் படைவீரர்கள் கொல்லப்பட்டதோடு பல கடற்கலவர் ஒழிந்தனர் என்று முதலாவது செய்திக் குறிப்பிலும் பல தரைப்படையினரும் கடற்படையினரும் கொல்லப்பட்டதாக புலிகளின் குரல் வானொலி கூறியது என்று இரண்டாவது செய்திக் குறிப்பிலும் தமிழ்நெற் செய்தி வலைத்தளமுமென செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
    • காயப்பட்டடோர்: அறியில்லை  
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர் 
    • தரநிலையுடனான பெயர்: மேஜர் கடலரசன் எ சமுத்திரன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் எ கேசவி
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • வகுப்புப் பெயர்: கவிர்

ஆதாரம்: உதயன்: 31/10/2001  | தமிழ்நெற்: 30/10/2001 (Sea Tiger attack in seas off Pt. Pedro), (Fuel ship sunk off Pt. Pedro - VoT) | பிபிசி ஆங்கிலம்: 31/101/2001 (Tamil Tigers claim tanker attack)

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட, கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார் கடற்கலங்கள் | ஆவணக்கட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  ஆண்டு: 2006


 

  • திகதி: சனவரி 7, 2006
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 2:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: சூடைக்குடா (ஃவௌல் முனை/ Foul Point) கடற்பரப்பு 
  • நிகழ்வு விரிப்பு: திருகோணமலையின் துறைமுகத்திலிருந்து சுற்றுக்காவலுக்கென புறப்பட்ட இரு சுப்பர் டோறாக்களில் ஒன்றினை நோக்கி கடற்புலிகளின் இனந்தெரியா வகுப்பினைச் சேர்ந்த வெடிப்படகொன்று வந்துகொண்டிருந்தது. சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த டோறாக்களில் ஒன்றின் தகவல் தொடர்பு ஏந்தனம் ஒன்றில் 'முன்னால் வருகின்ற டோறா மீது மோதப்போகின்றோம்என்ற தொனிப்பட தமிழில் தகவலொன்று முல்லைத்தீவு சல்லிப் பரப்பிலுள்ள தளமொன்றை நோக்கி அப்படகிலிருந்து அனுப்பப்பட்டது செவிமடுக்கப்பட்டது என்று சிறிலங்காக் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து சிங்களக் கடற்படைத் தளத்திலிருந்த கடற்படை அதிகாரி அப்படகை சோதனையிடுமாறு டோறா ஒன்றிற்குக் கட்டளை பிறப்பித்தார். அதற்கிணங்க சுப்பர் டோறா ஒன்று அப்படகை நோக்கிச் சென்று அதை சோதனை செய்ய முயன்றது. அப்போது வெடிப்படகு அதன் மீது மோதி வெடித்துச் சிதறியதில் டோறா மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என்று சிறிலங்காக் கடற்படையினர் குற்றம் சாட்டினர். எனினும் இதனை முதலில் மறுத்த விடுதலைப்புலிகளின் அப்போதைய பேச்சாளர் தயா மாஸ்டர் இதற்கும் தமது அமைப்பிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று திட்டவட்டமாக மறுத்தார், தமிழ்நெற்றிற்குத் தெரிவிக்கையில். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் தலைவர்  ஹக்ரப் ஹோக்லண்ட், புலிகள் மீது ஐயமிருப்பினும் அவர்கள் இதை மறுத்துள்ளதால் இதற்கு அவர்கள் தான் பொறுப்பு என்று கூறிவிட முடியாது என்றும் கடற்படையினர் இது தொடர்பில் உசாவல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இது போர் நிறுத்த மீறல் அல்ல, இது அவர்களுக்குள் இடம்பெறும் வழமையான சண்டைகளில் ஒன்றாகவே கருத முடியும் என்று பொருள்படும் படியாக மேலும் தெரிவித்தார். எப்படியாயினும் 2006 மாவீரர் வாரத்தில் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் இத்தாக்குதலில் இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா விதம் - 3
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 13 பேர்
    • காயப்பட்டோர்: இரண்டு பேர் நீரினுள்ளிருந்து மீனவர்களால் காப்பாற்றப்பட்டனர்.
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் வஞ்சி எ வஞ்சியின்பன், லெப்.கேணல் நளா எ அகரெழில்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 8/01/2006 | தமிழ்நெற்: 7/01/2006 (SLN Dvora reported missing) | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மார்ச் 25, 2006 
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல்
  • நிகழ்வு இடம்: குதிரைமலையிலிருந்து 17 கடல்மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு 
  • நிகழ்வு விரிப்பு: ஆழ்கடலில் தரிபெற்றிருந்த தமிழீழக் கடற்படைக்குச் சொந்தமான வழங்கல் கப்பலிலிருந்து போர்த்தளவாடங்களை கரைக்கு ஏற்றிவருவதற்கென வள்ளம் ஒன்று சென்றது. அப்போது அதன் இயந்திரம் பழுதானதால் அதனால் திரும்பி வர இயலவில்லை. எனவே அதற்கான மாற்று இயந்திரம் மற்றொரு வள்ளத்தில் கடற்புலிகளால் அனுப்பப்பட்டது. இயந்திரத்தைக் கொண்டு சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் வள்ளத்தினை இடைநடுவில் கடற்படையினர் வழிமறித்தனர். அப்போது தாமும் வள்ளமும் அதனினுள்ளிருந்த பொருட்களும் கடற்படையினரிடம் பிடிபடக்கூடாது என முடிவெடுத்தனர், போராளிகள். அதற்கமைவாக பொதுவாக வழங்கல் படகுகளோடு பொருத்தப்பட்டிருக்கும் வெடிபொருளை வெடிப்பித்து தவிபு மரபிற்கிணங்க தம்மையும் வள்ளத்தையும் அழித்துகொண்டனர். இவ்வெடியதிர்வால் தமிழரின் வள்ளத்தை நெருங்கிய சிங்களத்தின் டோறா மோசமாகச் சேதமடைந்து கடலினுள் மூழ்கியது. அதிலிருந்த பல சிங்களக் கடற்கலவர் நீரினுள் தூக்கி வீசப்பட்டனர், வெடியதிர்வால். "இந்நிகழ்விற்கும் தமக்கும் தொடர்பு கிடையாது" என்று தவிபு சமாதான செயலகப் பணிப்பாளர் மாவீரர் புலித்தேவன் 'ரொய்ட்டர்' செய்தி நிறுவனத்திற்கு ஆங்கிலத்தில் தெரிவித்தார். எனினும் கடற்படையின் இந்நிகழ்வில் புலிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் ஆனால் அவர்கள் தம்மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தவில்லையென்றும் தமது வள்ளத்தை அழிக்கும் போது ஏற்பட்ட வெடியதிர்வே தம் டோறா மூழ்கக் காரணமென்றும் தெரிவித்தார், சிறிலங்காவின் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் அமரசிங்கே. மேலும் இதுவொரு அப்பட்டமான போர் நிறுத்த மீறல் என்றும் இதுதொடர்பில் தாம் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடிட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிலங்கா கண்காணிப்புக் குழு, புலிகள் தாமிதில் தொடர்புபடவில்லை என்று மறுத்திருந்தாலும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் மூலம் அவர்களின் கைவரிசை மறுப்பை விலத்திட வேண்டும் என்று பொருள்படும் படியான கூற்றுரை ஒன்றை வெளியிட்டது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 8 பேர்
    • காயப்பட்டோர்: 11 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் தமிழ்முரசு எ சுஜீந்திரன் மற்றும் பெயர் அறியில்லா 5 போராளிகள்

ஆதாரம்: உதயன்: 26/03/2006 | தமிழ்நெற்: 25/03/2006 (Blast in seas off Kalpitti, 14 feared dead), 26/03/2006 (SLMM condemns Kalpitti attack, raises paramilitary issue) | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: மே 11, 2006 
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 4 மணியளவிலிருந்து சுமார் 2 மணி நேரம்
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:15 மணியளவில்
  • நிகழ்வு இடம்: வடமராட்சிக் கிழக்குக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை குழப்பும் நோக்கோடு வலிதாக்குதலில் ஈடுபட்ட டோறாக்கள் மீதான எதிர்த் தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வில் சிங்களக் கடற்படைக்குச் சொந்தமான 'பேர்ள் குறுஸ் II' என்ற 710 படையினரை ஏற்றிவந்த படைக்காவிக் கப்பலுக்கு ஏமமாக வந்த இரு டோறாக்களே புலிகளை வலிந்து சீண்டி இழுத்தன. அதன் போது கடற்படையினர் மீது கடற்புலிகள் தம் படகுகளின் தற்காப்பிற்காக எதிர்த்தாக்குதலை நடாத்தினர். அப்போது ஒரு டோறா கடற்கரும்புலித் தாக்குதலால் 5:15 மணியளவில் மூழ்கடிக்கப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் மற்றொன்று சேதத்துடன் பின்வாங்கிச் சென்றது. ஆனால் மேற்கொண்டு செல்லமுடியாத நிலையில் குடாரப்புக் கடற்பரப்பில் மூழ்கியது. இத்தாக்குதல் தொடங்கிய போது கடற்சமர் பரப்பிலிருந்து சில மைல்கள் தொலைவில் சென்றுகொண்டிருந்த பேர்ள் குறுஸ் கப்பல் பன்னாட்டுக் கடற்பரப்பிற்குத் தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டது, கடற்புலிகளால். அக்கப்பலில் சிறிலங்காக் கண்காணிப்புக் குழு ஆட்கள் 2 பேர் இருந்ததகைக் கடற்புலிகள் நோக்கியுள்ளனர். பேந்து, அக்கப்பல் இந்தியக் கடலோரக் காவற்படையின் ஏமத்துடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இக்கடற்சமரில் புலிகளின் தரப்பில் 15 வரையான படகுகளைத் தாம் கண்டதாக சி.க.கு. தகவல் தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் எப்படகும் மூழ்கடிக்கப்படவில்லை. இத்தாக்குதலின் பின்னர், சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவிற்கு விடுதலைப்புலிகள் அனுப்பிய கடிதத்தில் சிங்களக் கடற்படையின் கடற்கலங்களில் நீங்கள் ஏறவேண்டாம் என்றும் இதுவே அதற்கான கடைசி எழுதருகை (warning) என்றும் வலியுறுத்தினர். இதற்கு முன்னர் இன்னும் இரு தடவை இவ்வாறு சி.க.கு. விற்கு சிறிலங்காக் கடற்கலங்களில் ஏறவேண்டாம் என வலியுறுத்தி புலிகள் கடிதத்தாலும் வாய்மூலம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவானது சிறிலங்காவின் கடற்கோட்டத்தையும் வான்வெளியையும் அரச சார்பற்ற எவரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் புலிகளுக்கு கடலில் நடமாட எவ்வித உரிமையும் இல்லையென்றும் திடீரென்று சிறிலங்கா அரசிற்கு சார்பாக அறிக்கையிட்டது (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக), இக்கடற்சமர் முடிந்த கையோடு. சிறிலங்கா அரசிற்கு பக்கச்சார்பான சிறிலங்காக் கண்காணிப்புக் குழுவின் இவ் அறிக்கையை எதிர்த்து தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அறிக்கை வெளியிட்டார். அதன் ஓரிடத்தில், "எங்களுடைய ஆட்புலத்தின் சமர்க்களத்தில் அடைந்த தற்போதைய நிலையின் அடிப்படையில் தான் நாங்கள் சமாதான முன்னெடுப்பினுள் நுழைந்தோம். எமது தாயகத்தின் அருகிலுள்ள கடலையும் வான்வெளியையும் அணுகுவதற்கான இறையாண்மை உரிமைகள் குறித்து தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை." என்றார் சீற்றமுடன் (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக). கடற்சமரிற்குப் பின்னர் 12ம் திகதி ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரிகேடியர் சூசை, அரசியல்துறையின் அறிக்கையின் தொனிப்படத்தக்க கருத்தினையே தெரிவித்திருந்தார் (அறிக்கையின் முழு விரிப்பையும் தமிழ்நெற்றில் வாசிக்குக).
  • படிமம்:

MV Pearl Cruise 2.jpg

பேர்ள் குறுஸ் II படைக்காவிக் கப்பல் | படிமப்புரவு: விக்கிபீடியா

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
    • உடனே மூழ்கியதின் தொடரெண்: பி 418
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 15-17 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • விடுதலைப்புலிகளின் ஆளணியினரில்
    • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் மலர்நிலவன், லெப். கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி, லெப். கேணல் சஞ்சனா எ புவிச்செல்வி
    • காயமடைந்த கடற்புலிகள்: 2 பேர்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 12 & 13/05/2006 | தமிழ்நெற்: 11/05/2006 (SLN vessel destroyed in Vadamaradchi East), (LTTE has no rights at sea - SLMM), (LTTE refutes SLMM's controversial statement) & 12/05/2006 (SLMM has no mandate to rule on Tamils sovereign rights - Thamilchelvan) & 13/05/2006 (Soosai reiterates sovereign right to seas bordering Tamil Homeland)

 


  • திகதி: சூன் 17, 2006
  • அடிபாட்டுக் காலம்: காலை 6:30 மணியளவில் தொடங்கியது
  • நிகழ்வு இடம்: பேசாலைக் கடற்பரப்பு 
  • நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கடற்பரப்பினுள் நுழைந்து வலிதாக்குதலில் ஈடுபட்ட சிறிலங்காக் கடற்படையின் 4 புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கடற்படையினரின் 3 படகுகள் அழிக்கப்பட்டன, மற்றொன்று சேதப்படுத்தப்பட்டது. சேதப்பட்டதிலிருந்து கடற்புலிகள் சில படைக்கலன்களையும் கைப்பற்றினர். கடற்படையினரோ, தமது தரப்பில் மூன்று படகுகளே சேதமாக்கப்பட்டது என்று கூறி வழக்கம் போல புலிகளின் இழப்பினை ஊதிப் பெருப்பித்துக்காட்டினர். தமக்கு வான்படையினரும் சேணேவிப் பிரிவினரும் கடலில் கடற்புலிகளை எதிர்க்கத் துணை நின்றதாக மேலும் தெரிவித்தனர். இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் யாரும் வீரச்சாவடையவில்லை என அவர்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இவ் அடிபாட்டைத் தொடர்ந்து கடற்படையினர் வங்காலைப்பாடு மற்றும் பேசாலைக் கடற்கரையோரங்களின் மேல் வலுத்த தாக்குதலை மேற்கொண்டனர். இதில் பேசலையைச் சேர்ந்த 68 மீனவர்களின் 43 வெளியிணைப்பு மின்னோடிகள் (OBM), 70 மீனவக் குடில்கள் மற்றும் வலைகள் என 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. வங்காலைப்பாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களின் 13 வெளியிணைப்பு மின்னோடிகள், 36 ஆடியிழைப் படகுகள், மூன்று 3 1/2 தொன் இழுவலை வள்ளங்கள் மற்றும் முட்டுகள் என 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதற்கிடையில், அந்த காலகட்டத்தில் ஒன்பது வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன, இதனால் சுமார் 5.7 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது. கரையோரக் குடியிருப்புகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்று மக்கள் தங்கியிருந்த வெற்றிமாதா தேவாலயத்தினுள் கைக்குண்டுகளை வீசியும் சுடுகலனால் சுட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்புகள் மீதான தாக்குதல்களில் கடற்றொழிலாளர்கள் நால்வரும் தேவயத் தாக்குதலில் மூதாட்டி ஒருவரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்களில் மொத்தம் 54 பேர் காயமடைந்தனர். எரிக்கப்பட்ட படகு ஒன்றிலிருந்து சடலம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.

large.june2006slnattackoninnocentTamilfi

படிமப்புரவு: உதயன்

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட்,  ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் மற்றும் கட்டைப் படகு வகைகளும் உருவாக்கப்படுகின்றன)
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் கட்டைப் படகு வகைகளும் உருவாக்கப்படுகின்றன)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 12 பேர்
    • காயப்பட்டோர்: பலர்.
  • கடற்புலிகளின் ஆளணியினரில்
    • காயப்பட்டோர்: 2 பேர்

ஆதாரம்: உதயன்: 18 & 19/06/2006 | தமிழ்நெற்: 17/06/2006 (3 SLN boats sunk, 12 troopers killed - LTTE) & 21/06/2006 (Mannar SLN rampage causes $5m damage to property)

 


  • திகதி: சூன் 28, 2006
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:25 மணியளவில் தொடங்கி 55 நிமிடங்களுக்கு தொடர்ந்து நீடித்தது.
  • நிகழ்வு இடம்: குதிரைமலைக்கும் கற்பிட்டிக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்பினுள் 15இற்கும் மேற்பட்ட படகுகளில் சுற்றுக்கவலில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கும் சிறிலங்காக் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் கடற்சமராகியது. தமிழீழக் கடற்பரப்பினுள் நுழைய முற்பட்ட கடற்படையினர் மீது கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டு விரட்டியடித்தனர். இதில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உந்துகணைத் (ஆர்.பி.ஜி பெரும்பாலும்) தாக்குதலில் கடற்படை படகொன்று எரிந்து நீரினுள் மூழ்கியது. புலிகளின் படகுகளுக்கு எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை. இதன் பின்னர் புத்தளம் நகரினுள் (முஸ்லிம்களே இங்கு பெரும்பான்மை) நுழைந்த கடற்படையினரின் வானை நோக்கி வேட்டுக்கள் தீர்த்தபடி வீதியில் நின்றிருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர். அனைத்து கல்வி மற்றும் வணிக நிறுவனங்களும் 12 மணியுடன் மூடப்பட்டன. கற்பிட்டிக் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கரையை நோக்கி கட்டாயப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 5 பேர்
    • காயப்பட்டோர்: பலர்.
  • கடற்புலிகளின் ஆளணியினரில்
    • காயப்பட்டோர்: 2 பேர்
    • வீரச்சாவடைந்தோர்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்கள்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 29/06/2006 | தமிழ்நெற்: 28/06/2006 (5 SLN sailors, 1 LTTE cadre killed in sea clash - LTTE)

 


  • திகதி: ஓகஸ்ட் 1, 2 & 3, 2006
  • அடிபாட்டுக் காலம் & நிகழ்வு இடம்
    • முதற் கடற்சமர்: ஓகஸ்ட் 1 எற்பாடு 2:25 - 3:00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடந்து முடிந்தது | கொக்கிளாய்க் கடற்பரப்பு & உட்துறை முகாம் கடற்பரப்பு
    • இரண்டாம் கடற்சமர்: ஓகஸ்ட் 1 எற்பாடு 5:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை | திருமலைத் துறைமுகத்தின் கடற்பரப்பு 
    • மூன்றாம் கடற்சமர்: ஓகஸ்ட் 1 மாலை 9:00 மணி முதல் ஓகஸ்ட் 2 வைகறை 3:30 மணி வரை | திருமலைக் கடற்பரப்பு
    • நான்காம் கடற்சமர்: ஓகஸ்ட் 3 காலை வேளையில் | மூதூர் இறங்குதுறைக்கு அண்மையான கொட்டியாரக்குடா கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இது திருகோணமலையில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட (ஓகஸ்ட் 1 - ஓகஸ்ட் 5) மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் கடற்சமர்கள் பற்றிய தகவலாகும். ஓகஸ்ட் முதலாம் திகதி எற்பாடு 2:25 மணியளவில் 850 இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினரை திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கி ஏற்றிக்கொண்டு வந்தது, 'ஜெட் லைனர்' என்ற கலப்பெயரைக் கொண்ட படைக்காவிக் கப்பல். அது துறைமுகத்தை அண்மித்ததும் விடுதலைப்புலிகள் துறைமுகத்தை நோக்கி 122மிமீ சேணேவி எறிகணைகள் 36ஐ ஏவினர். ஏவிய எறிகணைகள் அங்குள்ள கடற்படைக் கூட்டுப்படைத்தளத்தினுள் இருந்த கடற்படைக் கல்லூரியில் வீழ்ந்து வெடித்ததில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதால் கடற்படைத் தலைமையகமும் கடும் சேதமடைந்தது. இவ் எறிகணை வீச்சால் துறைமுகத்தினுள் நிப்பாட்டப்பட்டிருந்த பாவிக்கப்படாத சுடுகலப் படகொன்று அழிக்கப்பட்டது என்று கொழும்பு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. முதலாவது கடற்சமர் எற்பாடு 2:25இற்கும் 3:00 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடைபெற்றது. எறிகணை வீச்சு நடந்துகொண்டிருந்த போது கொக்கிளாய் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் 5 படகுகள் கப்பலோடு வந்த டோறாக்களோடு மிண்டின. சிங்களக் கடற்படைக்கு சிறிலங்கா வான்படையும் வான் ஆதரவை நல்கியது. அப்போது வெடித்த கடற்சமரில் ஒரு டோறாக் கலம் மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்தோரில் 8 கடற்படையினர் கொல்லப்பட்டனர் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் ஒரு கடற்புலி வீரச்சாவடைய இன்னும் சிலர் காயப்பட்டததாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது. துறைமுகத்தின் மீதான எறிகணை வீச்சாலும் கடற்புலிகளின் தாக்குதலாலும் பின்வாங்கிய கப்பல் பன்னாட்டு கடற்பரப்பை நோக்கிச் சென்றது. பின்னர் அது, மீண்டும் துறைமுகத்தை நோக்கி வந்த போது, எற்பாடு 5:30 மணியளவில், துறைமுகக் கடலில் கப்பலை வழிமறித்து கடற்புலிகள் சுற்றிவளைத்துத் தாக்கினர். அப்போது கப்பலிற்கு ஏமம் வழங்கவென வந்த டோறாக்களோடும் பொருதினர். இக்கடற்சமர் மாலை 7:00 மணி வரை நீடித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் ஐந்து கடற்புலிகள் வீரச்சாவடைய இன்னும் சிலர் காயமுற்றதாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இக் கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 3 கடும் சேதமடைந்து திருத்த வேலைகளுக்காக கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதனால் மீண்டும் ஆழ்கடலை நோக்கித் திரும்பிய கப்பல், மீண்டும் 9:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வான் ஆதரவோடு துறைமுகத்தை நோக்கித் திரும்பியது. அப்போது திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து மறுபடியும் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட, பெரும் கடற்சமர் மூண்டது. முடிவில், கப்பல் துறைமுகத்தை அடைந்ததாக சிறிலங்க அரசு தெரிவித்தது. இக்கடற்சமரில் கடற்புலிகள் தரப்பில் இரு போராளிகள் வீரச்சாவடைந்ததாக புலிகளின் முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. திருமலைத் துறைமுகக் கடற்பரப்பிலும் திருமலைக் கடற்பரப்பிலும் நடைபெற்ற கடற்சமர்களில் சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் சேதமுற்றதாகவும் மற்றொரு டோறா மெல்லிய சேதமடைந்ததாகவும் தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு இளந்திரையன் தெரிவித்தார். இம்மூன்று கடற்சமர்களிலும் ஒரு கலத்தொகுதியை லெப். கேணல் நிலவன் வழிநடாத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2ம் திகதி & 3ம் திகதி சிறிலங்காக் கடற்படையினரின் திருமலை துறைமுகத்திலிருந்ததான மூதூர் இறங்குதுறை நோக்கிய கடல்வழி தரையிறக்கத்திற்கு எதிரான கடற்புலிகளின் மற்றொரு கடற்சமர் நடைபெற்றது. இக்கடற்சமரிற்கு கடற்புலிகள் அவசரவசரமாக ஆயத்தமாகிச் சென்றனர். இதன்போது லெப். கேணல் நிலவனைக் கட்டளை அதிகாரியாக் கொண்ட இரு சண்டைப்படகுகள் மட்டுமே முதலில் சென்று கடற்படையினரை எதிர்த்தன. பின்னர் மேற்கொண்டு ஏனைய சண்டைப்படகுகளும் வந்து மிண்டி பல மணிநேரம் நகர்வினைக் கட்டுப்படுத்தினர். இக்கடற்சமரின் போது 3ம் திகதி காலை ஒரு கடற்படைப் படகு மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்தார். இவ்விரு நாட்களிலும் கொட்டியாரக்குடாகடற்பரப்பில் நடைபெற்ற கடற்சமரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடற்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். கடற்புலிகளின் ஒரு சண்டைப்படகும் கடும் சேதமடைந்திருந்தது. மூதூரில் மூழ்கிய படகு 'டோறா' என்று இம் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை முடிந்த பின்னர் அது தொடர்பான ஊடக வெளியீட்டின் போது தவிபு படைத்துறைப் பேச்சாளர் திரு இளந்திரையன் அறிவித்தார். ஆனால் சிறிலங்கா அரசோ தமது கடற்கலங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மூச்சுக்கூட விடவில்லை. மாறாக தமிழ்நெற்றில் வெளிவந்தவை பொய்யானவை என்று மட்டும் பரப்புரை செய்தது.
  • படிமங்கள்:

A 542 Jet Liner - aimed by sea tigers in Trinco

ஜெட் லைனர் படைக்காவிக் கப்பல் | வேசுபுக்கு வழியாக

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) - 2 (கடற்சமர்களின் போது மூழ்கடிக்கப்பட்டன)
    • கடற்கல வகுப்புப் பெயர்: பாவனையில் இல்லாத சுடுகலப் படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை) - 1 (எறிகணை வீச்சில் அழிக்கப்பட்டது)
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சேதமாக்கப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்
      • எறிகணை வீச்சால்: ஆகக் குறைந்தது 6 பேர் 
      • கடற்சமரில்: 8+ பேர் 
    • காயப்பட்டோர்
      • எறிகணை வீச்சால்: ஆகக் குறைந்தது 30 பேர்
      • கடற்சமரில்: பலர்
  • கடற்புலிகளின் ஆளணியினரில்
    • காயப்பட்டோர்: 'கலத்தொகுதி கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன் உட்பட பலர்
    • வீரச்சாவடைந்தோர்: ஆகக் குறைந்தது 9 கடற்புலிகள் (இது தவிபு இன் முதல் தகவல் அறிக்கையின் படி கிடைத்த மாவீரர் பட்டியல். நான்காம் ஈழப்போரின் மாவீரர் பட்டியல் முற்றாகக் கிடைக்காமல் ஊழியால் அழிந்துபோனதால் முழு வீரச்சாவு விரிப்பையும் என்னால் அறியமுடியவில்லை). 
      • முதற் கடற்சமர்: மேஜர் இசைக்கலை
      • இரண்டாம் கடற்சமர்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் அலையழகி, 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் சூரியா, 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலாவேந்தி, கப்டன் இசையரசன், வீரவேங்கை சூட்டி. 
      • மூன்றாம் கடற்சமர்: கப்டன் இசையருவி, வீரவேங்கை வீரக்கோன்
      • நான்காம் கடற்சமர்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் தென்றல்மாறன்

ஆதாரம்: உதயன்: 2, 3, 4, 5, & 6/08/2006 | தமிழ்நெற்: 1/08/2006 (Shells hit Trinco navy base, 14 killed, Dvora destroyed), (SLN ship under siege off Pulmoddai coast), 03/08/2006 (LTTE to hand over bodies of 40 SLA troopers) | கட்டுரை: லெப். கேணல் நிலவனின் வாழ்க்கை வரலாறு | த.தே.தொ. ஆவணப்படம்: நடந்து வந்த பாதையில் கடந்து சென்ற 2006

 


  • திகதி: செப்டெம்பர் 1 & 2, 2006
  • அடிபாட்டுக் காலம்: மாலை 9:00 மணியளவிலிருந்து வைகறை 4:00 மணியளவில்
  • நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்புமணல்காடு கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் குறித்த கடற்பரப்பில் வெடித்த கடற்சமரில் சிங்களக் கடற்படையின் இரு டோறாக்கள் கடற்புலிகளால் சுட்டு தாட்டப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலிகள் யாரும் பயன்படுத்தப்படவில்லை. மேற்கொண்டு நடந்த கடற்சமரில் சேதமடைந்த கடற்படை டோறா காங்கேசன் துறைமுகம் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. யாழிலுள்ள சுப்பர்மடம், கொட்டடி, முனை, கற்கோவளம், மூர்க்கம் மற்றும் புனிதநகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 900 குடும்பங்கள், புனித அந்தோனியார் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்ததால், கரையோரத்திலுள்ள சிறிலங்கா படைத்துறை நிலைகள் சூட்டிற்குட்பட்டதால், கரையோர வலுவெதிர்ப்புக் கோட்டிலிருந்து சிறிலங்கா தரைப்படையினர் தற்காலிகமாக தங்கள் நிலைகளைக் காலி செய்தனர். கரையோரத்தில் தற்காலிகமாக தமது நிலைகளை விட்டு வெளியேறிய சிறிலங்கா தரைப்படையினர் காலை 5:00 மணியளவில் தங்கள் நிலைகளுக்குத் திரும்பியதுடன், வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்களும் காலை 7:00 மணியளவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைக் காண முடிந்தது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • காணாமல்போனோர்: 30 பேர்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 02/09/2006 | தமிழ்நெற்: 1/09/2006 (Clashes erupt off Point Pedro coast), 2/09/2006 (2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna)

 


  • திகதி: செப்டெம்பர் 24 & 25, 2006
  • அடிபாட்டுக் காலம்: மாலை 9:45 மணியளவிலிருந்து தொடர்ந்து ஐந்து மணி நேரம்
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: தென் தமிழீழத்திலிருந்து வன்னிக்குப் போராளிகளை ஏற்றிவரும் நடவடிக்கை ஒன்றின் போது ஏற்பட்ட கடற்சமர் இதுவாகும். ஏற்றிக்கொண்டுவரச் சென்ற போதே முட்டுப்பட்டுவிட்டனரா இல்லை திரும்பும் போது முட்டுப்பட்டனரா என்பது தெரியவில்லை. இவ் வெய்யக் கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் 20இற்கும் மேற்பட்ட கடற்கலங்களும் கடற்புலிகளின் பல்வேறு வகைப் படகுகளைக் கொண்ட வலுவூட்டப்பட்ட 25 படகுகளும் பொருதின. கடற்புலிகள் தரப்பில் பல படகுகள் ஆளணி காவிப் படகுகளாகும் (நடவடிக்கைக்கு ஏற்ப). ஏற்றிக்கொண்டு வரப்பட்ட தரைப்புலிகளில் சிலரும் வீரச்சாவடைந்தனர். ஆயினும் சேதங்களுக்கு நடுவணிலும் வெற்றிகரமாக தென் தமிழீழப் போராளிகள் வன்னிக்கு ஏற்றிப்பறிக்கப்பட்டனர். ஆனால் கடற்புலிகளின் கடற்கலங்களுக்கு ஏற்பட்ட சேதவிரிப்புகள் தெரியவில்லை.
  • சேதப்பட்ட (கடுமையாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை 
    • காயப்பட்டோர்: ஆகக் குறைந்தது 5 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 6+ பேர்
    • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் சீராளன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் புயலினி, கப்டன் தாயகன் மற்றும் பலர்
    • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி
    • வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: லெப். கேணல் செவ்வேள் மற்றும் சிலர்

ஆதாரம்: உதயன்: 02/09/2006 | தமிழ்நெற்: 1/09/2006 (Clashes erupt off Point Pedro coast), 2/09/2006 (2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna)

 


  • திகதி: ஒக்டோபர் 18, 2006
  • அடிபாட்டுக் காலம்: காலை 7:45 மணியளவில் தொடங்கப்பட்டு இரண்டு மணி நேரம் நடைபெற்றது
  • நிகழ்வு இடம்: தட்சின துறைமுகம், காலி
  • நிகழ்வு விரிப்பு: நடவடிக்கை பற்றிய தகவல்: 
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) - 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் - 2
  • செயலிழக்கச் செய்யப்பட்ட கடற்கலங்கள் - 1
    • கடற்கலப் பெயர்: பராக்கிரமபாகு
    • கல வகை: கொடிக்கப்பல் (பழையது)
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கலப் பெயர்: அறியில்லை
    • கல வகை: எரிவாயு காவி
    • மற்றும் ஒரு இனந்தெரியாக் கடற்கலம்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில் (சிறிலங்கா அரச தகவலின் படி),
    • கொல்லப்பட்டோர்: 3 பேர்
    • காயப்பட்டோர்: 14 பேர்
  • சிறிலங்காப் பொதுமக்களில்
    • காயப்பட்டோர்: 15 பேர்
  • தவிபு தரப்பில் நடவடிக்கையில் பங்கேற்றோர்: 15 பேர் (கடற்கரும்புலிகள், கடற்புலிகள், மற்று படையப் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்ட 5 படகுகள்)
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 9 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் அரவிந்தா, லெப். கேணல் தில்லைச்செல்வி எ தனு, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் 

ஆதாரம்: உதயன்: 19/10/2006 | தமிழ்நெற்: 18/10/2006 (Naval base in Galle attacked, mob riots in port city) | கட்டுரை: கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) விடுதலை | navypedia.org (srl_cf_parakramabahu) | போரிலக்கியப் பாடல்: காலித் துறைமுகம் மீதில் புகுந்தவர் - இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 12

 


  • திகதி: ஒக்டோபர் 20, 2006
  • அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிவரை முனையில், பின்னர் 7:30 மணிக்குமேல் (மொத்த நிமிடங்கள் அறியில்லை) மணல்காட்டில்
  • நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்புமணல்காடு கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: நாகர்கோவில் கடற்பரப்பில் நின்றிருந்த கடற்புலிகளின் கடற்கலங்கள் மீது மாலை 6:30 மணியளவில் தாக்குதல் நடாத்திய சிறிலங்காக் கடற்படையின் கலத்தொகுதி மீது கடற்புலிகள் எதிர்த்தாக்குதல் நடாத்தி பருத்தித்துறைக் கடற்பரப்பு வரை விரட்டியடித்தனர். இக்கடற்சமர் மாலை 7:30 வரை நீடித்தது. அவர்கள் தளம் திரும்பும் வேளையில் மணல்காடு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா வான்படையின் தாக்குதல் உலங்குவானூர்திகளும் கடற்படையினரும் கடற்புலிகளை வழிமறித்துத் திரும்பவும் வலிதாக்குதல் மேற்கொண்டனர். கடற்புலிகளும் எதிர்த்துப் பொருதினர். இதே நேரத்தில் வரணையிலிருந்த படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பரப்புகளை நோக்கி சேணேவி எறிகணை வீச்சையும் மேற்கொண்டனர். இக்கடற்சமரில் கடற்புலிகளின் 15 வரையிலான படகுகள் பங்கெடுத்ததாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) 
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 21/10/2006 | தமிழ்நெற்: 20/10/2006 (Two SLN Dvora vessels damaged in sea clash - LTTE)

 


  • திகதி: நவம்பர் 9, 2006
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணியிலிருந்து மாலை 7:00 மணிவரை 
  • நிகழ்வு இடம்: முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்புவல்வெட்டித்துறைக் கடற்பரப்பு
    • முதலாவது டோறா மீது இடியன் மோதிய நேரம்: எற்பாடு 5:35 மணியளவில்
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நாகர்கோவில் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்த முயன்றனர், சிறிலங்காக் கடற்படையினர். இதனால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்கு காவலாக நின்ற கடற்புலிகள் கடற்படையினர் மீது எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். தொடர்ந்த கடற்சமர் பருத்தித்துறையின் முனைக் கடற்பரப்பினுள் விரிந்தது. அப்போது அங்கு வைத்து சிறிலங்காக் கடற்படையின் டோறா மீது எற்பாடு 5:35 மணியளவில் கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலால் அது முற்றாக மூழ்கடிக்கப்பட்டது. பின்னர் பின்வாங்கி ஓடிய கடற்படையினரை துரத்திச் சென்ற கடற்புலிகள் வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் வைத்து நடத்திய தாக்குதலில் (கடற்கரும்புலித் தாக்குதலா என்பது தெரியவில்லை) இன்னொரு டோறா சேதமடைந்தது. இது நடந்தது 6 மணியளவில் ஆகும். அது மூழ்க முன்னர் அதிலேறிய கடற்புலிகளால் அதிலிருந்த சில படைக்கலன்கள் கழட்டி எடுத்து கைப்பற்றப்பட்டன. கடற்புலிகளால் சிறிலங்காக் கடற்படையின் சடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்த கடசமரில் கடற்படையினரை காங்கேசன் துறைமுகம் வரை கடற்புலிகள் விரட்டிச் சென்றனர். அப்போது மற்றொரு டோறா சேதப்படுத்தப்பட்டது. தொடர்ந்த கடற்சமர் மாலை 7:00 மணியோடு ஓய்ந்தது. பின்னர் கடற்புலிகள் பாதுகாப்பாக தளம் திரும்பினர். இவற்றை கரையிலிருந்து கண்ட ஒருவர் சாட்சியளித்துள்ளார், தமிழ்நெற்றிற்கு. கடற்புலிகளின் எந்தவொரு படகும் மூழ்கடிக்கப்படவில்லை. கடற்புலிகளின் கடற் தாக்குதலை லெப். கேணல் செழியன் வழிநடாத்தினார். இக்கடற்சமரின் போது சிறிலங்கா கடற்படைக்கும் உதவியாக சிறிலங்கா வான்படையும் களமாடியது. அதன் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகளும் கிபிர் தாரை வானூர்திகளும் தாக்குதலில் ஈடுபட்டன.
  • படிமங்கள்:
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) 
    • தொடரெண்: பி 416, பி 461
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை) 
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 25 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
    • போர்க்கைதிகளானோர்: 4 பேர்
      • பி 461இலிருந்து பிடிபட்டோரின் பெயர் விரிப்பு
        • இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ, 30, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: EE17275) 37C இன் இயந்திரப் பொறியியலாளர், கிரிந்திஹேவ, புண்டுலு ஓயா, நுவரெலியா
        • சமந்த குமார ஹேவகே, 28, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: XS 25749), முன்னணி கடற்கலவர், பேலியகந்தே, கலேவேல
        • கமல் கேமந்த குமாரசிறி, 26, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: XS 29966) பதவிய, பராக்கிரமபுர, அனுராதபுரம்.
      • பி 416இலிருந்து பிடிபட்டோரின் பெயர் விரிப்பு:
        • அனில் பிரியங்கே மடதெனிய, 21, (சிறிலங்கா கடற்படை பதிவு எண்: SS38801), சாதாரண கடற்கலவர், நாலந்த, மாத்தறை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 5 பேர்
    • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்: அறியில்லை
    • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் தாரணி, மேஜர் லவனிதா, கப்டன் சாந்தினி, லெப்டினன்ட் அகவாணன் 

ஆதாரம்: உதயன்: 10/11/2006 | தமிழ்நெற்: 09/11/2006 (Sea Tigers, Sri Lanka Navy clash in Trincomalee sea), (Sea Tigers sink 2 Sri Lankan attack crafts, seize armament, capture troopers)

 


  • திகதி: ஒக்டோபர் 20, 2006
  • அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியிலிருந்து 8:30 மணிவரை 
  • நிகழ்வு இடம்: விடத்தல்தீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள விடத்தல்தீவுக் கடற்பரப்பினுள் நுழைந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளை ஆத்திரமூட்டி தாக்குதல் நடத்த முயன்றனர், சிறிலங்காக் கடற்படையினர். உடனே பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளுக்குக் காவலாக நின்ற கடற்புலிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். கடற்படையினரின் வலிதாக்குதலுக்கு ஆதரவாக சிறிலங்கா வான்படையின் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவானூர்திகள், கிபிர் மற்றும் மிக் தாரை வானூர்திகள் தாக்குதலில் ஈடுபட்டன. விடத்தல்தீவில் தொடங்கிய கடற்சமர் தலைமன்னார் சிறிலங்காக் கடற்படைத் தளம் வரை நீண்டது; கடற்புலிகள் கடற்படையினரைத் துரத்திச் சென்றனர். கடற்படையின் படகுகளில் மாலை 6:55 மணிக்கு ஒன்ரும் மாலை 7:50 மணிக்கு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டன. இரண்டவது மூழ்கடிக்கப்பட்ட போது சிறிலங்காக் கடற்படைக்கு வலுவூட்டம் நடைபெற்றது. தொடர்ந்த கடற்சமரில் மற்றொரு சுற்றுக்கவல் படகும் சேதமடைந்தது. இக்கடற்சமரில் கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கோ ஆளணியினருக்கோ இழப்புகள் ஏற்படவில்லை.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை 
    • கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம்
  • சேதமாக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை 
    • கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: ~10 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • காயமடைந்த கடற்புலிகள்: 3 பேர்

ஆதாரம்: உதயன்: 19/11/2006 | தமிழ்நெற்: 18/11/2006 (Sri Lanka Navy, Sea Tigers clash in Mannar seas)

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  ஆண்டு: 2007

 

 

  • திகதி: சனவரி 21, 2007
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 3:45 மணி முதல் மாலை 6:30 மணி வரை
  • நிகழ்வு இடம்: திக்கத்திற்கும் பொலிகண்டிக்கும் இடைப்பட்ட கரையிலிருந்து 3 மைல் தொலைவிலுள்ள கடற்பரப்பு 
  • நிகழ்வு விரிப்பு: வெற்றிலைக்கேணியிலிருந்து 15 முதல் 20 வரையான சண்டைப்படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் பல கலத்தொகுதிகள் பருத்தித்துறை துறைமுகத்தை நோக்கி வலிதாக்கும் நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத வேளையாக கடற்புலிகளின் சில கலத்தொகுதியினர் சிங்களக் கடற்படையினரோடு முட்டுப்பட மோதலொன்று வெடித்தது. சம நேரத்தில் பருத்தித்துறைத் துறைமுகத்தில் சிட்டி ஒஃவ் லிவர்பூல் கப்பல் பொருட்களை (சிறிலங்கா அரசின் தகவலின் படி உணவுப்பொருட்களாம்) இறக்கிவிட்டு நின்றிருந்த வேளையே தாக்குதல் நடந்ததால் அதன் பாதுகாப்பின்பொருட்டு நங்கூரம் உயர்த்தப்பட்டு காங்கேசன்துறை நோக்கிப் பயணமானது. அப்போது கப்பலை 5 அல்லது 6 பல வகுப்புப் படகுகளைக் கொண்ட கடற்புலிகளின் இரு கலத்தொகுதிகள் பின்தொடர்ந்து சென்றன. உடனே கப்பலின் பாதுகாப்பிற்காக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 கடற்படையினர் கடற்புலிகளை நோக்கிச் சுடத்தொடங்க அங்கும் ஒரு மோதல் வெடித்தது. சமரின் நடுவே கப்பலை இலக்குவைத்து நோக்கிப் பாய்ந்துசென்ற கடற்கரும்புலிகளின் இடியன் ஒன்று பகைச் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. அதன் வெடிப்பில் கப்பலின் கலக்கூடு (hull) சிறிது சேதமடைந்தது. எனினும் கப்பல் 3:45 மணி முதல் 5:45 மணிவரை கடற்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடற்புலிகள் அவ்விடத்தை விட்டகன்ற பின்னரே சிங்களக் கடற்படையின் கடற்கலங்கள் கப்பலை நெருங்கின. பின்னர் கப்பல் காங்கேசன்துறை நோக்கிப் படையினரால் கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் கடற்கலங்களை தாம் தொண்டைமானாறு வரை அடித்துக் கலைத்துச் சென்று விரட்டிவிட்டுத் திரும்பியதாகக் கடற்புலிகள் தெரிவித்தனர். நடந்த கடற்சமரில் கடற்புலிகளுடன் மிண்டிய சிங்களக் கடற்படையின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 15 சுடுகல & டோறாப் படகுகளுக்கு ஆதரவாக மாலை 6 மணியளவலிலிருந்து சிங்கள வான்படையின் மிக்-29 தாரை வானூர்திகள்-2, கிபிர் தாரை வானூர்திகள்-2, எம்.ஐ. 24 வகை தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதல் நடாத்தின. கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து முள்ளி, நாகர்கோவில், மந்திகை ஆகிய முகாம்களிலிருந்து சேணேவி, தகரி மற்றும் பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள் கடலை நோக்கி மேற்கொள்ளப்பட்டன. இக் கடற்சமரால் கரையோரப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்றனர். கடலில் மோதல் வெடித்ததிலிருந்து பலாலி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலிருந்து வடமராட்சி வடக்குப் பரப்பு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணை வீச்சில் ஒரு எறிகணை அல்வாய் சிறிலங்காப் பாடசாலையில் வீழ்ந்தது. இதன் சிதறல்களால் கிறேசியன் பானுமதி என்ற பெண் கொல்லப்பட்டதோடு அவருக்கு அருகில் நின்றிருந்த அவரின் இரு பிள்ளைகளும் காயமடைந்தனர். இக்கப்பலானது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் வழங்கல் பொருட்கள் எடுத்து வரப்படும் கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பலில் 10 சிறிலங்காப் படையினரும் 15 பொதுமக்களும் பயணித்திருந்தனர். இதிலிருந்த 15 பொதுமக்கள் கலக்குழுவினரில் பெரும்பாலாtனோர் இந்தியர்கள் ஆவர். கப்பலிலிருந்த கலக்குழுவினருக்கோ கடற்படையினருக்கோ எவ்விதச் சேதமுமில்லையென்று சிறிலங்கா அரசின் படைத்துறைப் பேச்சாளர் பிரசாத் அமரசிங்கே அற்றைநாளே ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
  • சேதப்பட்ட (சிறிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: சிட்டி ஒஃவ் லிவர்பூல் (City of Liverpool)
    • கல வகை: சரக்குக் காவி
    • படிமம்:

City of Liverpool - damaged 2007.jpg

படிமப்புரவு: அறியில்லை

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் கார்குழலி
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: ஆகக்குறைந்தது 1
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 22/01/2007 | தமிழ்நெற்: 21/01/2007 (Sea Tiger boats enter Point Pedro harbour), (SLA shelling kills mother, wounds children in Pt. Pedro)

 


  • திகதி: சனவரி 29 & 30, 2007
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 5:40 மணியளவில்
  • நிகழ்வு இடம்: கொழும்புத் துறைமுகம்
  • நிகழ்வு விரிப்பு: கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளால் அங்கு தரித்து நின்ற நான்கு புளு ஸ்ரார் வகுப்புப் படகுகள் அழிக்கப்பட்டன. வெடிப்பு அதிர்வால் துறைமுகத்தினுள் இறங்கிக்கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலும் மெல்லிய சேதமடைந்தது. ஆனால் இவற்றை மூடி மறைந்த சிங்களம் தாம் துறைமுகத்தினுள் நுழைந்த மூன்று இடியன்களை சுட்டு வெடிக்க வைத்துவிட்டதாகவும் ஒரு தமிழர் மற்றும் 8 சிங்களவர் என மொத்த 9 மீனவர்களைக் கைது செய்து அவர்கள் புலிகள் என்றும் அவர்களில் ஒருவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்தார் என்றும் மற்றொருவர் சயனைட் உட்கொண்ட படி பிடிபட்டார் என்றும் கதை அளந்தது. ஆனால் 31 ம் திகதி மட்டில் அகில இலங்கை மீனவ சங்கம் பிடிக்கப்பட்டவர்கள் முன்னக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் என்றும் அவர்களுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று கூறிட சிங்களத்தின் குட்டு உடைபட்டது. பின்னர் கரையோர மக்கள் போர்க்கொடி தூக்க அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த அப்பாவித் தமிழர் மட்டும் சிங்களப் புலனாய்விப் பிரிவினரால் தொடர்ந்து மறியலில் வைக்கப்பட்டார். தாக்குதலின் முழு விரிப்புக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளும் இத்தாக்குதல் தொடர்பாக எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. வீரச்சாவடைந்த கரும்புலிகளின் பெயர் விரிப்பினை மட்டும் அறிவித்தனர். இந்த மீனவர் சிக்கல் தொடர்பாக தொடர்பாக மேலும் வாசிக்க:
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 4
    • கடற்கல வகுப்புப் பெயர்: புளூ ஸ்ரார் (விதப்பான கல வகுப்பு அறியில்லை. இந்த புளூ ஸ்ரார் நிறுவனத்தால் படைத்துறைக்கு K-71, K-72, சீ கார்ட் ஆகிய வகுப்புக் கடற்கலங்கள் உருவாக்கப்படுகின்றன)
    • கல வகை: அறியில்லை
  • சேதப்பட்ட (மெல்லிய) கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: பெலொபோனேசியன் பிறைட் (PELOPONESIAN PRIDE)
    • கல வகை: கொள்கலன் காவி
    • படிமம்:

PELOPONESIAN PRIDE - slightly damaged - 2007 jan colombo SBT attack.jpg

படிமப்புரவு: MarineTraffic.com

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த  கடற்கரும்புலிகள்: 5 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர், லெப். மணிக்கொடி, கப்டன் முறையமுதன், லெப். எழுகடல்
      • இவர்களில் லெப். எழுகடல் மற்றும் கப்டன் முறையமுதன் ஆகியோர் இத்தாக்குதலிற்கு கடல் வேவுப்புலிகளாகச் சென்று பின்னர் கடற்கரும்புலிகளாகி வீரச்சாவடைந்தனர் என நான் தமிழீழத்தில் வசிக்கும் போது கேள்விப்பட்டனான்.
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை

ஆதாரம்: தமிழ்நெற்: 27/01/2007 (Attack boats enter Harbour of Colombo, SLN claims destroying 3 boats), (Confusion amidst harbour attack black out), 31/01/2007 (Union: Navy destroyed fishing boats, not Tiger craft), 02/02/2007 (Fishing hamlet fears backlash after Navy arrests) | எரிமலை: மார்ச் 2007

 


  • திகதி: மார்ச் 28 & 29, 2007
  • அடிபாட்டுக் காலம்: மாலை 10:00 மணி முதல் சாமம் 1:00 மணி வரை
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவிற்கும் அளம்பிலிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 23 டோறாக்கள் மீது கடற்புலிகள் நடாத்திய எதிர்த்தாக்குதல் இதுவாகும் என்று தவிபு தெரிவித்திருந்தனர். இதில் சிறிலங்காக் கடற்படையின் 2 டோறாக்கள் மோசமாக சேதமடைந்தன. சேதமடைந்த டோறாக்களை ஏனைய டோறாக்கள் கட்டியிழுதவாறு திருமலை நோக்கி தப்பியோடின. கடற்புலிகள் அவர்களை திருமலை வரை விரட்டிச்சென்றுவிட்டுத் திரும்பினர். இத்தாக்குதலில் குறைந்தது 10 வரையான கடற்புலிப் படகுகள் பங்குபெற்றியிருந்தன என்று சிங்களக் கடற்படை தெரிவித்தது. கடற்புலிகள் தரப்பில் படகுகள் எதுவும் மூழ்கடிக்கப்படவில்லை. இக்கடற்சமரினிடையே அளம்பில் கரையோரத்தில் சிங்களக் கடற்படையினர் சேணேவித் தாக்குதல் நடாத்துவதால் அங்கு வசித்து வந்த மக்கள் அவலப்பட்டு பாதுகாப்பான இடம்தேடி இடம்பெயர்ந்தனர். இத்தாக்குதலில் ஒரு தரைப்புலிப் போராளி வீரச்சாவடைந்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது இது தென் தமிழீழத்திலிருந்து வட தமிழீழத்திற்குப் போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கையின் போது ஏற்பட்ட முட்டலால் வெடித்த கடற்சமரெனத் துலங்குகிறது.
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினkozhuரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த தரைப்புலிகள்: 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் குட்டிவீரன் எ கனிவாளன்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 30/03/2007

 


  • திகதி: ஏப்ரல் 6, 2007
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 15 மணியிலிருந்து 11:30 மணிவரை
  • நிகழ்வு இடம்: மன்னாரின் புலிகளின் கட்டுப்பாட்டுக் கற்பிட்டி கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதி ஒன்றை ஒன்று நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும். இதில் கடற்புலிகளின் சுற்றுக்காவல் படகுத்தொகுதியின் கட்டளையாளரின் தகவலின் படி சிங்களவரின் வோட்டர் ஜெட் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன்  தெரிவித்தார். எனினும் சிறிலங்காப் படையினர் இதை மறுத்ததோடு கடற்கரும்புலிப் படகொன்றை தாம் மூழ்கடித்ததோடு அதன் வெடியதிர்வில் தமது வோட்டர் ஜெட் ஒன்று சேதமடைந்தது என்றனர். அதனால் அது கற்பிட்டி கடற்றுறைக்கு இழுத்துவரப்பட்டது என்றும் கூறினர். ஆயினும் விடுதலைப்புலிகளின் மாவீரர் பட்டியலின் படி கடற்கரும்புலிகள் யாரும் இத்தாக்குதலில் வீரச்சாவடையவில்லை. மேலும் சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி காயப்பட்டு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 8 சிங்களக் கடற்கலவர் சிறிலங்கா வான்படையால் காப்பாற்றப்பட்டு கொழும்புக்கு வான்தூக்கிச் செல்லப்பட்டனர். ஆகவே இதில் கடற்படையின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டிருப்பது உறுதியாவதோடு கடற்படையின் வழமையான மறைப்பும் இங்கு தெரிகிறது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 7 பேர்
    • காயப்பட்டோர்: சிறிலங்காக் கடற்படையின் வட்டாரங்களின் படி 8 பேர் கடலில் காயப்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்னர்.
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 1 ஆள்
    • தரநிலையுடனான பெயர்கள்: கப்டன் றெஜி

ஆதாரம்: உதயன்: 7/04/2007 | தமிழ்நெற் 6/04/2007 (SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE)

 


  • திகதி: மே 4 & 5 , 2007
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியளவில் தொடங்கி அடுத்தநாள் விடிகாலை வரை தொடர்ந்தது.
  • நிகழ்வு இடம்: புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இரு தரப்பின் சுற்றுக்காவல் கலத்தொகுதிகள் நேருக்கு நேர் சந்தித்த போது வெடித்த கடற்சமர் இதுவாகும் என்று புலிகள் தெரிவித்தனர். எனினும் அக்கால கட்டத்தில் கடல்வழியாக திருமலையிலிருந்து வன்னிக்கு போராளிகளை ஏற்றிப்பறிக்கும் நடவடிக்கை நடந்துகொண்டிருந்ததால் அதில் ஈடுபட்ட கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்கும் ஏற்பட்ட கடற்சமராக இது இருக்கலாம் என்று இவ்வெழுத்தாளர் கருதுகிறார். மூண்ட சமரில் கடற்படையின் இரு டோறாக் கலங்கள் மோசமாகச் சேதப்படுத்தப்பட்டன. அவை சமரின் முடிவில் கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. இதே வேளை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி திரியாய்க் கடற்பரப்பில் மூன்று சிங்கள மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: பலர்
    • காயப்பட்டோர்: பலர்.
  • வீரச்சாவடைந்த போராளிகள் : ஆகக்குறைந்தது 3 பேர்
    • கடற்கரும்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப்.கேணல் தமிழவன் எ புதியவன்
    • கடற்புலிகள்/ தரைப்புலிகள்: ஆகக்குறைந்தது 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சதா, வீரவேங்கை தூயோன்

ஆதாரம்: உதயன்: 6/05/2007

 


  • திகதி: மே 24, 2007
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 12:45 மணிக்குத் தரையிறக்கப்பட்டு சாமம் 1:15 மணிக்கு தளம் முற்றுக்கையிடப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டு வைகறை 2:45 மணிக்கு முற்றாக அழிக்கப்பட்டது. நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது
  • நிகழ்வு இடம்: நெடுந்தீவு குந்துவாடியில் அமைந்துள்ள குயின்ராக் கடற்படைத்தளம் & அண்டிய கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவின் குந்துவாடியில் 2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையினர் அமைத்த குயின்ராக் கடற்படைத்தளம் மீதான ஈரூடகத் தாக்குதலணியின் (2008இல் 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி' எனப் பெயர் சூட்டப்பட்டப்பெற்றனர், இதன் முதலாவது கட்டளையாளரின் பெயரால்) தாக்குதல் இதுவாகும். தமிழீழத்தின் மேற்குப் பக்கத்திலுள்ள கடற்புலித் தளமொன்றிலிருந்து 23ம் திகதி மாலை வேளையில் கடற்புலிகளின் துணையுடன் ஈரூடகத் தாக்குதலணியினர் புறப்பட்டனர். இவர்கள் 6 கட்டைப்படகுகளில் (Dinghy) ஏற்றிச்செல்லப்பட்டனர். இவற்றோடு வேறு பல படகுகள் என மொத்தம் 12 படகுகள் இத்தாக்குதலில் பங்கேற்றிருந்தன. சென்றவர்கள் நெடுந்தீவு வெள்ளைப் பரப்பில் சாமம் 12:45 மணியளவில் தரையிறக்கப்பட்டனர். அங்கிருந்து குந்துவாடி நோக்கி நகர்ந்த தமிழரின் ஈரூடகப் படையினர் சாமம் 1:15 மணிக்குத் தளத்தை முற்றுகையிட்டு தாக்குதலைத் தொடுத்தனர். வைகறை 2:45 மணியளவில் தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இந்நடவடிக்கை இரண்டு மணிநேரம் நீடித்தது. தளத்தினுள் சமர் நடந்துகொண்டிருக்கும் போது உதவிக்கு விரைந்த கடற்படையினர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அப்போது டோறா ஒன்று தாக்குதலிற்குள்ளாகி அருகிலிருந்த முருகைப் பாறையில் மோதி முற்றாகச் சேதமடைந்தது. மேலும் இரு வோட்டர் ஜெட்கள் சேதமடைந்தன. அத்தளத்தினுள்ளிருந்த போர்த்தளவாடங்கள் - குறிப்பாக கதுவீ (RADAR) ஒன்று - மற்றும் படைக்கலன்கள், கணைகள் என்பனவற்றைக் கைப்பற்றிக்கொண்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினர், ஈரூடகப் படையினர். கடற்படையின் தளக் கட்டமைப்புகளுக்கு வலுத்த சேதம் விளைவிக்கப்பட்டது. தளத்தினுள் கடற்படையினரின் 34 சடலங்கள் கிடக்கக் காணப்பட்டது கடற்புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தாக்குதலில் யாழ் மாவட்ட கடற்புலிகளின் பொறுப்பாளர் லெப் கேணல் அருணன் மாஸ்டரும் பங்காற்றியிருந்தார். இத்தக்குதலின் போது படைத்தளத்தினுள்ளிருந்த படையினர் சிறிலங்கா வான்படையினை உதவிக்கு அழைத்தும் அவர்கள் உதவிக்கு கடைசிவரை வரவேயில்லை. இத்தீவில் வெட்டுக்கழி, பெரிய கழி, பேய்க்கழி, வெள்ளைக்கழி, செம்பட்டைக்கழி, இராமிழாப்புக்கழி, இரவதைக்கழி போன்ற கழிகளும் சண்ணாங்குளம், நெழுவினிக்குளம், கம்பராமடை, சமனன் குளம், வடக்குறாவெளிக் குளம் போன்ற குளங்களும் காணப்படுகின்றன.
  • நிகழ்படம்https://eelam.tv/watch/24-05-2007-ச-ற-த-த-வ-camp-attack-video_sFX5YAPmUeXthd2.html
  • படிமங்கள்:

Cheran Marines Attack Team's surprise mission on Delft island.jpg

படிமப்புரவு: நிலாவரை நூல்

 

  • சேதமடைந்த கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட்
  • சேதமடைந்த (முற்றாக) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 34 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 7 பேர்
    • ஈரூடகத் தாக்குதலணியினர்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் தமிழ்வேந்தினி & பெயர் அறியில்லாப் போராளிகள்
    • சிறிலங்கா அரசாங்கத்தின் தகவலின் படி தரநிலை அறியில்லாத முகிலன் (வீரசிங்கம் ஜங்கரன்), சுகிர்தன் (பாஞ்சாளன் சுகந்தன்), சிறிமாறன் (சந்திரசேகரன் மயூரன்), தமிழ்வேந்தினி, ??னிவிழி (செபஸ்தியாம்பிள்ளை மேரி கனிஷ்ரா), காலைத்தென்றல் (கதிரிப்பிள்ளை மரியா கௌரி), காதல்மைந்தன் (பிரான்ஸிஸ் ??னிகுமார்)
      • தரை நடவடிக்கையின் போது 4 போராளிகள் மட்டுமே வீரச்சாவடைந்ததாக தவிபு அறிவித்தனர். ஆனால் சிறிலங்கா அரசின் (ஒற்றாடலால் அறியப்பட்டதாம்) இத்தகவலில் 7 பேர் வீரச்சாவடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மேலதிகமான மூன்று பேர் கடலில் நடந்த சமரில் வீரச்சாவடைந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

ஆதாரம்: உதயன்: 24/05/2007 | தமிழ்நெற் 24/05/2007 (Tigers attack Sri Lanka Navy installations in Delft) | கட்டுரை: மேஜர் தமிழ்வேந்தினியின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: சூன் 19, 2007
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 5:30 மணிக்குத் தொடங்கி சாமம் 10:30 மணி வரை
  • நிகழ்வு இடம்: பருத்தித்துறை முனை கடற்பரப்பிற்கும் வெற்றிலைக்கேணி - பருத்திக்காடு கடற்பரப்பிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சிறிலங்காக் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்ப்பரப்பான முனைக்குள் நின்றுகொண்டிருந்த கடற்புலிகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட வலிதாக்குதல் இதுவாகும். இதன்போது வெடித்த கடற்சமரில் கடற்புலிகளின் கல்லப்படாத வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த 'இந்துமதி' என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. அது பின்னர் சிறிலங்காக் கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டது (இதை மறுநிலை பொறியியல் (reverse engineering) செய்து அதன் மூலமே சிறிலங்காக் கடற்படையினர் தமது வேவ் ரைடர் வகுப்புப் படகை 2008இல் உருவாக்கினர் என்று நம்பப்படுகிறது). வேறு சண்டைப்படகுகள் ஏதேனும் சேதப்படுத்தப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இவ் மூழ்கடிக்கப்பட்ட சண்டைப்படகிலிருந்து பல ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர். இதிலிருந்த நான்கு வித்துடல்களையும் தரைவழிப் பாதை மூடப்பட்டுள்ளதால் கடல் வழியாக புலிகளிடம் கையளிக்க செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காக் கடற்படை தெரிவித்திருந்தது. கடற்படையினருக்கு தமது வரணி மற்றும் பல்லப்பை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து பல்குழல் உந்துகணை செலுத்தி மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். அவை வடமராட்சிக் கடற்பரப்பில் நீண்ட நேரமாக கடற்புலிகள் நின்றுகொண்டிருந்த இடங்களில் வீழ்ந்து வெடித்தன. சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறா ஒன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டது.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: ஆகக்குறைந்தது 4 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் முல்லைமகள், லெப். வர்மா, வீரவேங்கை இளங்கீரன், கப்டன் அன்புமலர் (இவர் காயமடைந்து மருத்துவமனையில் காயச்சாவடைந்தவர்)

ஆதாரம்: உதயன்: 21 & 23/06/2007 | தமிழ்நெற் : 19/06/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas)

 


  • திகதி: சூலை 7, 2007
  • அடிபாட்டுக் காலம்: அதிகலை சுமார் 3 மணிநேரம்
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய் தொடக்கம் கொக்குத்தொடுவாய், புல்மோட்டை வரையான கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: தமிழீழக் கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட சிறிலங்காக் கடற்படையின் 21 டோறாக் கலங்களை வழிமறித்து கடற்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். தாக்குதலின் போது கடற்படையினருக்கு தமது  கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலுள்ள படைமுகாம்களிலிருந்து சேணேவிகள் மூலம் தரைப்படையினர் சூட்டாதரவை வழங்கினர். ஆயினும் கடற்படையினர் திருமலை நோக்கி விரட்டப்பட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் அவர்களின் டோறாக்கள் மூன்று சேதப்படுத்தப்பட்டு சிங்கள கடற்படையினரால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டன. கடற்புலிகளின் சண்டைப்படகுகளுக்கு ஏற்பட்ட சேத விரிப்புகள் தெரியவில்லை. எனினும் சிறிலங்காக் கடற்படையின் பேச்சாளரோ கடற்புலிகள் குச்சவெளியிலிருந்த தமது படைமுகாமை தரைவழியாகவும் கடல்வழியாகவும் (ஆகக்குறைந்தது 15 படகுகள்) நுழைந்து தாக்கினர் என்றும் மூண்ட முரட்டுத்தனமான இருமுனைச் சமர் முறியடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். எவ்வாறெனினும் அற்றை நாள் சமரில் இரு போராளிகளே வீரச்சாவடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் நீலன், வீரவேங்கை சுடர்வேந்தன்

ஆதாரம்: உதயன்: 9/07/2007 | தமிழ்நெற்: 8/07/2007 (SLN, Sea Tigers clash in the seas off Pulmoaddai)

 


  • திகதி: ஓகஸ்ட் 12 & 13, 2007
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 10:00 மணி முதல் வைகறை 2:30 மணி வரை
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய், நாயாறு, புல்மோட்டை ஆகிய கடற்பரப்புகள்
  • நிகழ்வு விரிப்பு: கடற்புலிகளிடம் தலைநகர் திருமலையின் புல்மோட்டையில் இருந்து வன்னிக்கு பின்வாங்கி வந்த போராளிகளை ஏற்றிப்பறிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனை சிறிலங்காப் படையினரினர் தமது கட்டளைப் பீடத்திற்கு அனுப்பியதை புலிகளின் ஒற்றாடல் பிரிவினர் அறிந்து கடற்புலிகளுக்குத் தெரிவித்திருந்தனர். இதனை அறிந்தபடியே புல்மோட்டையை நோக்கிக் கடற்புலிகளின் வழங்கல் படகுகளை உள்ளடக்கிய கலத்தொகுதிகள் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் தியாகனின் தலைமையில் புறப்பட்டுச் சென்றன. அப்போது கரையை நோக்கித் தரைவழியாக நகர்ந்துகொண்டிருந்த தரைப்புலிகள் எதிர்பார்த்தது போலவே சிறிலங்கா தரைப்படையுடன் முட்டுப்பட்டதால் அவ்விடத்தில் சமரொன்று வெடித்தது. அதேவேளை புலிகளின் நகர்வினை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த சிறிலங்காக் கடற்படையினர் வெளியேற எத்தனித்த போராளிகளை ஏற்றவென வந்த கடற்புலிகளை தடுக்கும் கடல் வியூகத்தினையும் கடலில் அமைத்தார்கள். புல்மோட்டையை நோக்கி வந்த கடற்புலிகளின் கலத்தொகுதிகளுக்கும் காத்திருந்த கடற்படையினரின் 20இற்கும் மேற்பட்ட டோறாக்களுக்கும் இடையில் கடுஞ்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். சமரின் போது கடற்புலிகளின் சண்டைப்படகொன்று மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர்களின் வெளியேற்ற நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாகவும் சிறிலங்காக் கடற்படையினர் கூறினர். இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் 3 டோறாக்களை கடற்புலிகள் சேதமாக்கியதாகவும் அவர்களை திருமலை நோக்கி விரட்டியடித்ததாகவும் புலிகள் அறிவித்தனர். ஆனால் கடற்புலிகளால் தரைப்புலிகள் அற்றை நாளில் அங்கிருந்து ஏற்றிப்பறிக்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. முல்லைத்தீவு மற்றும் சிலாவத்தையில் புலிகளின் ஆட்புலங்களில் பொதுமக்கள் வசிக்கும் பரப்புகளை நோக்கியும் எறிகணைகள் வீசப்பட்டன. கரையோரங்களில் உள்ள மக்கள் முள்ளியவளை மற்றும் முள்ளிவாய்க்கால் பரப்புகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: 6 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி & 'தாக்குதல் கட்டளையாளர்' லெப். கேணல் தியாகன், 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் கண்ணியத்தம்பி, கப்டன் அகன்போர் எ செவ்வந்தன், 2ம் லெப். அகரக்கடல், 2ம் லெப். ஒளிநிலவன், 2ம் லெப். செந்தமிழ்வாணன்

ஆதாரம்: உதயன்: 14/08/2007 | தமிழ்நெற்: 13/08/2007 (SLN, Sea Tigers battle at Point Pedro seas) | கட்டுரை: லெப். கேணல் தியாகனின் வாழ்க்கை வரலாறு

 


  • திகதி: செப்டெம்பர் 26 & 27, 2007
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 10:30 மணியிலிருந்து வைகறை 3:30 மணிவரை
  • நிகழ்வு இடம்: கொக்கிளாய்-புல்மோட்டைக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுருக்கமாக, திருமலையின் பேராறு மற்றும் கும்புறுபிட்டிக் காடுகளில் மறைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட போராளிகளை வன்னிக்கு ஏற்றிப்பறிக்கும் கடல் நடவடிக்கை இதுவாகும். இக்கடல் நடவடிக்கையின் போது கடற்புலிகளின் சுமார் 20 வழங்கல் மற்றும் சண்டைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன. நடவடிக்கையின் போது சிறிலங்காக் கடற்படையின் 17இற்கும் மேற்பட்ட டோறாக்களுடன் ஏற்பட்ட கடற்சமர் வெடித்தது. இதேவேளை கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், புல்மோட்டை ஆகிய இடங்களிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர்.  புலிகளின் அலுவல்சார் அறிக்கையின்படி, நடந்த கடற்சமரின் ஒரு கட்டத்தில் கடற்புலிகள் கடற்படையின் டோறாக்களை புல்மோட்டை வரை பின்தள்ளிச் சென்று அங்கு வைத்து தீவிர தாக்குதல் தொடுத்தனர். இதன் போது கடற்படையின் இரு டோறாக்கள் மீளப்பாவிக்கேலாத நிலைக்கு சேதப்படுத்தப்பட்டன. அவற்றை கட்டியிழுத்துச் செல்லவென திருமலையிலிருந்து வந்த டோறாக்கள் மீதும் கடற்புலிகள் கலைத்து வலுவாக அடித்தனர். இதன் போது திருமலை துறைமுகத்திற்கு அருகில்வைத்து மேலுமொரு டோறா சேதமாக்கப்பட்டது. இழப்புகளுடன் சிறிலங்காக் கடற்படையினர் திருமலைக்குப் பின்வாங்கினர். புலிகள் தரப்பில் எந்தவொரு படகுகளும் மூழ்கடிக்கப்படவில்லை. அதே வேளை புலிகளின் படகுகள் சில சேதமடைந்தன. ஆனால் வழக்கம் போல் சிறிலங்காக் கடற்படையினர் தமது டோறாக்களுக்கு எவ்விதச் சேதமுமில்லையென்றும் கடற்புலிகளுக்கே அள்ளுகொள்ளையான இழப்புகளென்றும் கதை கட்டினர். முழு நிகழ்வின் விரிப்பையும் வாசிக்க: 

 

  • சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • கடற்புலிகளின் ஆளணியினரில் 
    • வீரச்சாவடைந்தோர்: 3 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: ‘படகு கட்டளை அதிகாரி லெப் கேணல் நிசாந்தன், பெயர் அறியா கடற்புலி (படகு கட்டளை அதிகாரிசுதாவின் படகில் இருந்த சூட்டாளர்களில் ஒருவர்), மற்றும் இன்னுமொரு பெயர் அறியா  கடற்புலி
    • காயப்பட்டோர்: பலர்

ஆதாரம்: உதயன்: 29/09/2007 | தமிழ்நெற்: 28/09/2007 (Sea Tigers, Sri Lanka Navy clash in Eastern waters)

 


  • திகதி: ஒக்டோபர் 13, 2007
  • அடிபாட்டுக் காலம்: காலை 9:45 மணி முதல் நண்பகல் 10:45 மணி வரை
    • கடற்கலம் மூழ்கடிக்கப்பட்ட நேரம்: நண்பகல் 10:45 மணியளவில்
  • நிகழ்வு இடம்: கல்லடி - முகத்துவாரக்கட்டை ஆகிய பரப்புகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: விடுதலைப் புலிகளின் நீர்ப்பரப்புக்குள் புகுந்த சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதலால் மூண்ட கடற்சமர் இதுவாகும். இக்கடற்சமரின் போது சிறிலங்காக் கடற்படையினர் தரப்பில் ஒரு சுடுகலப் படகு மூழ்கடிக்கப்பட்டதோடு அதிலிருந்த படைக்கலன்களும் மூன்று சடலங்களும் கைப்பற்றப்பட்டன. கடற்புலிகள் தரப்பில் ஆளணியோ கடற்கல இழப்புகளோ ஏற்படவில்லை. கடற்சமரின் போது கடற்படையினருக்கு ஆதரவாக தரைப்படையினரும் பலாலியிலிருந்து கடலை நோக்கி எறிகணை வீச்சு நடாத்தினர். இவ்வெறிகணைகள் கொழும்புத்துறை, மணியந்தோட்டம், அரியாலை கிழக்கு ஆகிய பரப்புகளில் வீழ்ந்து வெடித்தன. இதனால் இப்பரப்பு மக்கள் பதற்றமாகினர். இக்கடற்சமரால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் அலறித் துடித்து ஓடினர். எனினும் மீனவர்கள் ஆருக்கும் பாதிப்பு வரவில்லை. மாலை 7:30 மணியளவில் 40 மீனவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் கடல் "பாஸ்" பெறப்பட்டது. அதனை அடுத்த நாள் மாதா கோவிலடி படைமுகாமில் வந்து பெற்றுக்கொள்ளவும் என்று கடற்படையினர் கூறினராம். ஆனால் மீனவர்கள் குருநகர் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். பாசையூர் - குருநகர் கடற்பரப்பில் 13/10 இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்ட சிறிலங்காக் கடற்படை வீரர்களின் 3 சடலங்களை விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனமும் ஐ.நா.வின் தொடர்பு அதிகாரியுமான எம். பாவரசன் கிளிநொச்சியில் உள்ள பன்னட்டு செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ஜா லோரன்ஸிடம் 14ம் திகதி காலை 10:00 மணியளவில் கையளித்தார்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: உட்கரை சுற்றுக்காவல் கலம்
    • படகிலிருந்து கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • காயப்பட்டோர்: அறியில்லை
    • கொல்லப்பட்டோர்: 5 பேர்
      • படிமங்கள்: 

ஆதாரம்: உதயன்: 14/10/2007 | தமிழ்நெற்: 13/10/2007 (SLN arrests 32 Jaffna fishermen), (Sea Tigers sink SLA vessel, recover 3 bodies), 14/07/2007 (LTTE hands over 3 SLA bodies to ICRC)

 


  • திகதி: நவம்பர் 23, 2007
  • அடிபாட்டுக் காலம்: காலை 7:50 மணியளவிலிருந்து தொடங்கி 2:35 மணி நேரமாகத் தொடர்ந்தது. 
  • நிகழ்வு இடம்: பேசாலை & தலைமன்னார் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: பேசாலைக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீர்ப்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்காக் கடற்படையின் 6 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடாத்தி விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது இரு வோட்டர் ஜெட் படகுகள் சேதமடைந்தன. கடற்படையின் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்துவிட்டுத் திரும்பும் போது பேசாலைக் கடற்படைத்தளம், அதன் காவலரண்கள் மற்றும் காவல் நிலையம் மீது கடற்புலிகள் சுட்டனர். கடற்புலிகள் கரைக்கு அண்மையாக 75 மீட்டர்கள் வரை நெருங்கி வந்து தாக்குதல் நடாத்தினர் என மன்னார் சிறிலங்காக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் கடற்படைத்தளக் கட்டடங்கள் சேதமடைந்தன. இம் மொத்த தாக்குதலில் எவ்வித சேதமுமின்றி கடற்புலிகள் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர் என்று தவிபு படைத்துறைப் பேச்சாளர் மார்சல் தெரிவித்தார். மன்னார் காவல்துறை வட்டாரங்களின் மேலதிகத் தகவலின் படி, கடற்புலிகளுடன் பேசாலை மற்றும் வங்காலைப்பாடு கடற்படையினர் கரையிலிருந்து 2 கிமீ தொலைவில் மிண்டியதால் மோதல் ஒன்று வெடித்து 35 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அது வடமேற்காகப் பெயர்ந்து தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் 2 மணிநேரம் நீடித்தது. மோதலின் போது பேசாலை கரையோரத்தில் உள்ள சிறுதோப்பு மற்றும் வங்காலைப்பாடு ஆகிய சிற்றூர்களைச் சேர்ந்த சில வீடுகள் சேதம் அடைந்ததுடன் 01, 02, 03 மற்றும் 04 ஆகிய வட்டங்களில் உள்ள 400+ பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெற்றி மாதா தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். பின்னர், மீதமுள்ள நான்கு வட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் செயின்ட் மேரிஸ் பாடசாலையில் தஞ்சம் அடைந்தனர். ஏ௧4 வீதியில் பேசாலை ஊடாக தலை மன்னார் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்துப் போக்குவரத்துகளும் காலை 7.50 மணி முதல் நிறுத்தப்பட்டன.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் 
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 23/11/2007 (Sea Tigers open fire on coastal sentry in Peasaalai)

 


  • திகதி: திசம்பர் 25 & 26, 2007
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 11:00 மணி முதல் 1:50 மணி வரை
  • நிகழ்வு இடம்: நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் தமது வழமையான கடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தொலைவில் ஒரு கடற்கலம் தென்பட்டது. அது இரணைதீவிலிருந்து 4 அ 5 கடல்மைல் தொலைவில் நின்றுகொண்டிருந்தது. அது எப்படியான இலக்கு என்று காண்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகளைக் கொண்ட கலமணி (squadron) ஒன்று புறப்பட்டுச் சென்றது. கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அதனை அண்மித்ததும் அக்கடற்கலம் கடற்புலிகளை நோக்கி வேட்டுகளைத் தீர்க்கத் தொடங்கியது. உடனே கடற்புலிகளும் சிங்களவரின் டோறா தாக்குகின்றது என்பதை அறிந்து பகரடித் தாக்குதலில் களமிறங்கினர். கடற்புலிகளின் தாக்குதலில் டோறாவில் சில வேட்டுகள் பட்டுத் தெறிக்க அது காரைநகரை நோக்கி ஓட்டம்பிடித்தது. எனவே கடற்புலிகளின் சண்டைப்படகுகளும் அதனை துரத்தியபடி உயரச் சென்றன. அப்போது இவ் டோறாவோடு தலைமன்னாரிலிருந்து வந்திருந்த வேறு மூன்று டோறாக்கள் கரைநகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கீழாக வழிமறித்து சுற்றிவளைப்பதற்காக கீழே இறங்கி வந்துகொண்டிருந்தன. இதைக் கரையிலிருந்து கவனித்த கடற்புலிகள் அவசரமவசரமாக இரு கலத்தொகுதிகளை (6-7 சண்டைப்படகுகள்) கடலேற்றினர். கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தம்மை நோக்கி வருவதைக் கவனித்த சிங்களக் கடற்படையின் மூன்று டோறாக்களும் நெடுந்தீவுக்கு உயர கச்சதீவை நோக்கி செல்லத் தொடங்கினர். அதாவது சிங்களக் கடற்படையினர் தந்திர வழிவகையாக தமது பாதுகாப்பு எல்லைக்குள் ஓடுகின்றனர். ஓடிய கடற்படையினர் மேலதிக உதவியினைக் கோரினர். காரைநகர் கடற்படைத்தளத்திலிருந்து 30 மிமீ தெறுவேயங்கள் (Cannons) பொருத்தப்பட்ட சூட்டுவலு கூடிய டோறாக்கள் உடனே உதவிக்கு விரைந்தன. இப்போது கடற்படையின் தரப்பில் டோறாக்களின் எண்ணிக்கை 11 (பேபி டோறாக்கள் & சுப்பர் டோறாக்கள்) ஆகக் கூடியது. இவற்றைக்கொண்டு சிங்களவர் அங்கு கடல் வியூகமொன்றை அமைத்தனர். அது அவர்களின் வழமையான அரைநிலவு வடிவ வளைய வியூகமாகும். அந்நேரத்தில் கடற்புலிகளுக்கும் சிங்களக் கடற்படைக்குமான இடைவெளி கிட்டத்தட்ட 5 கிமீ ஆக இருந்தது. உடனே கடற்புலிகள் நெடுந்தீவைத் தாண்டியதும் தமது ஓட்டத்தை நிறுத்தி மேலதிக உதவியினை அனுப்புமாறு கட்டளைப்பீடத்திடம் கோரினர். ஏனெனில் அப்பொழுது கச்சதீவிற்கு கிட்டவாக நின்ற டோறக்களின் எண்ணிக்கை காரைநகரிலிருந்து அனுப்பப்பட்ட உதவிகளால் பத்தைத் தாண்டிவிட்டிருந்தது. கடற்புலிகளின் கட்டளைப்பீடமும் அதற்கமைவாக மேலதிக கலத்தொகுதிகளை அனுப்பி வைத்தது. கடற்புலிகளின் படகுகளின் எண்ணிக்கை இப்போழுது 16 படகுகளாக ஏகிறியது. சமரும் வெடித்தது. தமது வியூகத்திற்குள் கடற்புலிகளை உள்ளிழுத்துத் தாக்கியழிக்க எண்ணிய போது கடற்புலிகளும் உட்செல்வது போன்று சென்று போக்கிக்காட்டி பகைவர் மேல் கடுமையான தாக்குதலை தொடுத்தனர். சிங்களக் கடற்படையினருக்கு ஆதரவாக அ'புரத்திலிருந்து சிங்கள வான்படையின் எம்.ஐ. 24 உலங்குவானூர்தியொன்றும் விரைந்து சூட்டாதரவு வழங்கியது. எனவே கடற்புலிகள் அத்தாக்குதலிலிருந்து தமது கடல் வியூகத்தை விரித்தனர். உலங்குவானூர்தி தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கையில் சிங்களக் கடற்படையின் டோறாக்கள் அதன் பக்கவலுவோடு கீழிறங்கி வந்து கடற்புலிகளோடு பொருத அது பாரிய கடற்சமராக மூண்டது. எனினும் கடற்புலிகள் விடாது தாக்கினர். அதனால் ஒவ்வொரு டோறாக்களும் தம் நிலையிலிருந்து தளர அவை ஒவ்வொன்றிற்கும் இடையிலான இடைவெளி 100, 200, 300 மீட்டர்கள் என கூடிக்கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் சிறிலங்காக் கடற்படையின் டோறா ஒன்று செயலிழந்தது. அதாவது அதன் கலக்குழுவினர் சிலர் கொல்லப்பட்டதோடு அதன் வேகமும் குறைந்த நிலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிங்களவரின் கடல் வியூகத்திற்கும் வான்தாக்குதலிற்கும் நடுவணிலும் வெடிப்படகொன்று ஊடறுத்துச் சென்று சிங்கள வியூகத்தின் பக்கவாட்டிலிருந்து மூன்றாவதாக நின்றிருந்த டோறா மீது நண்பகல் 12:45 மணிக்கு மோதியிடித்து அதை மூழ்கடித்தது. இரண்டாவது கடற்கரும்புலித் தாக்குதல் எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவில்லை. தொடர்ந்த கடற்சமரில் கடற்படையின் மற்றொரு டோறா நண்பகல் 1:00 மணியளவில் திருத்த வேலைகளக்கு அப்பால் சேதமாக்கப்பட்டது. மற்றொன்று 1:50 மணியளவில் சேதமாக்கப்பட்டது. அத்துடன் சிங்களக் கடற்படையினர் தமது தளங்களுக்கு பின்வாங்கி ஓடினர். இத்தாக்குதலை கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் கடலில் வழிநடாத்தினார். இங்கு சிறிலங்காக் கடற்படையினர் இரு வேறு வியூகம் அமைத்துக் கடலில் இறங்கியிருந்தனர். கடற்புலிகளை கரைவரை அண்மித்துத் தாக்குவது அல்லது அவர்களை சீண்டி வலிந்திழுத்து தமக்கு ஏலுமான கடற்பரப்பில் வைத்துத் தாக்குவது (சூழ்ச்சிப்பொறி) ஆகியனவாகும். ஆனால் கடற்புலிகளின் எதிர் வியூகங்களால் அவர்களின் இரண்டு வியூகமும் பொய்த்திடவே சிங்களம் பின்வாங்கி ஓடியது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
    • தொடரெண்: பி 413
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சேதப்பட்ட (மீளப்பாவிக்கேலாது) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான கல வகுப்பு அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: ஒரு அதிகாரி உட்பட 11 பேர்
    • காயப்பட்டோர்: 2 பேர்
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 13 பேர்
    • கடற்கரும்புலிகள்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் சங்கரி, லெப். கேணல் கலையரசி, மேஜர் ஈழவீரன், மேஜர் மதிமுகிலன்
    • கடற்புலிகள்: 9 பேர்
      • பதவிநிலை & தரநிலையுடனான பெயர்கள்: 'படகு கட்டளை அதிகாரி' லெப். கேணல் நிலவன், கப்டன் ஈகைத்தீ, லெப். அகப்புலவன், 2ம் லெப். சந்தன அறிவன், 2ஆம் லெப். கோதைக்கொற்றவன், 2ஆம் லெப். செந்தமிழரசு, 2ஆம் லெப். அகக்கதிர், 2ஆம் லெப். ஈழத்திண்ணன், கப்டன் தப்தகி எ இந்து
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 24/11/2007 | தமிழ்நெற்: 26/12/2007 (Black Sea Tigers sink SLN Dvora attack craft in the seas off Delft island) | நெடுந்தீவுத் தாக்குதல் விரிப்பு நிகழ்படம்

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  ஆண்டு: 2008

 

 

  • திகதி: பெப்ரவரி 4, 2008
  • அடிபாட்டுக் காலம்: மாலை 6:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: மன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த பரப்பில் 450 மேற்பட்ட இந்திய இழுவலை வள்ளங்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. எனவே அவற்றை விரட்டுவதற்காக சிங்களக் கடற்படையின் இரண்டு டோறாக்கள் பாய்ந்து சென்றன. அநேரத்தில் அனைத்து இந்திய இழுவலை வள்ளங்களும் அகலவே இரண்டு மட்டும் நின்றுகொண்டிருந்தன. அவை பழுதடைந்து நிற்கின்றன எனக் கருதிய சிங்களக் கடற்படையினர் அவற்றிற்கு அருகே செல்ல முற்பட்ட போது அவற்றிலிருந்து உந்துகணை பிலுறுந்திய கைக்குண்டால் (ஆர்.பி.ஜி.) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன. இதையடுத்து அந்த டோறாவும் அதிலிருந்த 7 கடற்படையினரும் காணாமல் போனதாக படைத்துறை வட்டாரங்கள் கூறியதென்று தமிழ்நெற் செய்தியினை வெளியிட்டது. இது நிகழ்விற்கு அடுத்த நாள் (07/02) வெளியான தகவல் ஆகும். அடுத்த நாள் (07/02) இந்திய ஊடகம் ஒன்றிற்கு செவ்வியளித்த சிங்களக் கடற்படையின் பேச்சாளர் கொமொடோர் டி.ஜெ.பி. தஸநாயக்க தமது படகு ஒன்று மட்டும் சேதமடைந்திருப்பதாக மட்டும் கூறினார். ஆனால் இந்தக் காணாமல் போனது குறித்து அவர் கருத்து எதையும் கூறவில்லை. இந்நிகழ்வு குறித்து விடுதலைப்புலிகளும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
  • காணாமல்போன அ சேதமடைந்த கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 06/02/2008 | தமிழ்நெற்: 5/02/2008 (SLN Dvora missing in the seas off Mannaar)

 


  • திகதி: பெப்ரவரி 7, 2008
  • அடிபாட்டுக் காலம்: அறியில்லை
  • நிகழ்வு இடம்: தனங்களப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த பரப்பிலுள்ள கடற்கரையில் மாலை 6:45 மணியளைவில் தாக்குதலிற்கு ஆயத்தமாக நின்றதாகக் கூறப்படும் கடற்புலிகளின் படகொன்றின் மீது தாம் சேணேவி எறிகணை வீச்சு மேற்கொண்டதாகவும் அதில் அப்படகிலிருந்த நான்கு புலிவீரர்களும் அப்படகும் மூழ்கடிக்கப்பட்டதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டது. அதே நேரம் விடுதலைப்புலிகளோ தனக்களப்புப் பரப்பில் சிங்களக் கடற்படையுடன் மோதல் ஒன்று ஏற்பட்டது என்றும் அதில் கடற்படையின் இரு கரையோர காவலரண்கள் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்ததோடு 40 குதிரைவலுவில் இயங்கவல்ல ஒரு படகும் (கட்டைப்படகு) கைப்பற்றப்பட்டது என்றும் அறிவித்தனர்.
  • கைப்பற்றப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: படகு (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
    • கலவகை: அறியில்லை
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 09/02/2008

 


  • திகதி: மார்ச் 22, 2008
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 2 மணியிலிருந்து 2:45 மணி வரை
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: வைகறை 2:10 மணியளவில்
  • நிகழ்வு இடம்: நாயாற்றுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த கடற்படையின் பி 438 என்ற தொடரெண் கொண்ட டோறா கலத்தோடு கடற்புலிகள் குறித்த காலத்தில் பொருதிய போது வைகறை 2:10 மணியளவில் நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி கொண்டு தாக்கி அழித்து மூழ்கடித்தனர். ஆனால் சிங்களப் படையினரோ கடற்புலிகள் தம்மோடு பொருதவில்லையென்றும் கடற்கரும்புலித் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டதென்றும் அறிவித்தனர். கடற்புலிகளின் படையேற்பாட்டுக் கப்பல்கள் 2007ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டதிற்கு பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவதுவது தாக்குதலாகையால்பழிவாங்கல்-1என இத்தாக்குதலிற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலதிகத் தகவல்: இத்தாக்குதலின் பின்னர் அக்கடற்பரப்பில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கடற்படையினர் கீழ்வரும் ஒரு நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரியைக் (Diver aimed floating torpedo) கண்டுபிடித்தனர். இதற்குப் புலிகள் சூட்டியிருந்த வகை/வகுப்புப் பெயர் எனக்குத் தெரியவில்லை.

 

main-qimg-352f3e67e31d87ec367a0206058ebf8a.jpg

இம் மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரியுடன் ஒரு சிங்கள நீர்முழுகி மிதக்கும் காட்சி | படிமப்புரவு: Sri Lankan Navy

Shutterstock_7881384a.jpg

படிமப்புரவு: Shutterstock

  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 14 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 3 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் அன்புமாறன், மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனினிலா
    • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி 

ஆதாரம்: உதயன்: 23/03/2008 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 21/03/2008 (Black Sea Tigers sink SLN Dvora, 14 SLN killed - LTTE)

 


  • திகதி: மே 10, 2008
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 2:23 மணி
  • நிகழ்வு இடம்: திருகோணமலை சீனக்குடாவிலுள்ள அஷ்ரப் இறங்குதுறை
  • நிகழ்வு விரிப்பு: திருகோணமலை சீனக்குடாவிலுள்ள அஷ்ரப் இறங்குதுறையில் காங்கேசன்துறைமுகத்திற்குக் கொண்டுசெல்வதற்காக படைக்கலன்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட நிலையில் நின்றிருந்த ஏ 520 என்ற தொடரிலக்கம் கொண்ட இன்விசிபிள் என்ற கப்பல் கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவுக் கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இத்தக்குதலில் விடுதலைப்புலிகளால் நீரடிக் கடற்கலங்கள் ஏதேனும் பயன்படுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை. வெடியதிர்வில் நகரமே அதிர்ந்ததாம். தாக்குதல் நடந்து 13 நிமிடங்களில் கப்பல் முழுமையாக தாண்டுவிட்டது. இக்கப்பாலனது 2007ம் ஆண்டு கடற்புலிகளின் கப்பல் பிரிவிற்குச் சொந்தமான 3 படையேற்பாட்டுக் (mili. logistics) கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிக்க உதவியதாகும். அதற்குப் பழிவாங்கும் விதமாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலாகையால் பழிவாங்கல்-2’ என இத்தாக்குதலிற்குப் பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: இன்விசிபிள் (Invisible)
    • கல வகை: கொள்கலன் காவி
    • படிமம்:

Believed to be Invisible A-520 | sunk on 2008 may

திருமலை துறைமுகத்தினுள் நுழையும் இன்விசிபிள் கப்பல் | படிமப்புரவு: Eaglespeak.com

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: மேஜர் அற்புதன், லெப்.கேணல் செம்பியவளவன்
    • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: அறியில்லை
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 11/05/2008, 18/05/2008 | மாவீரர் பட்டியல் | தமிழ்நெற்: 5/11/2000 (Sea Tiger commandos sink SLN supply ship in Trinco Harbour)

 


  • திகதி: செப்டெம்பர் 18, 2008
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10:30 மணியளவிலிருந்து எற்பாடு 3:30 மணிவரை 
  • நிகழ்வு இடம்: இரணைதீவுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: இரணைதீவு நோக்கி மன்னாரிலிருந்து சிறிலங்காக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளம் மற்றும் விரைவுச் செயல் படகுச் சதளம் ஆகியன முன்னகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டன. இதில் 10 வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மற்றும் 20 கூகர் வகுப்புப் படகுகள் என்பன களமிறக்கப்பட்டிருந்தன என்று புலிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர் நடவடிக்கையாக தாம் தமது சிறிய வகைப் படகுகளையே களமிறக்கியதாக புலிகள் தெரிவித்திருந்தனர். நண்பகல் 10:30 மணியளவிற்குத் தொடங்கிய கடும் கடற்சமர் எற்பாடு 3:30 மணி வரை நீடித்தது. முடிவில் சிங்களக் கடற்படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர் என்று கடற்புலிகள் தெரிவித்தனர். வழக்கம் போல் தம்தரப்பு இழப்புகளைப் புலிகள் வெளியிடவில்லை.
  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகை: அறியில்லை
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்புலிகள்: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 20/09/2008

 


  • திகதி: ஒக்டோபர் 22, 2008
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 5:10 மணியளவில்
  • நிகழ்வு இடம்: காங்கேசன் துறைமுகத்தினுள் 
  • நிகழ்வு விரிப்பு: துறைமுகத்தினுள் மூன்று நீரடி நீச்சல் கடற்கரும்புலிகளில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் மக்களுக்கு உணவுகள் எடுத்து வருகிறோம் என்ற போர்வையில் படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிவந்த நிமலவ மூழ்கடிக்கப்பட்டதோடு றுகுணுவ சேதப்படுத்தப்பட்டது. மூன்றாவது கடற்கரும்புலியால் ஓட்டிவரப்பட்ட மிதக்கும் ஏவரி கவிழ்ந்தபடியே சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் சிங்களமோ வழக்கம் போல எந்தவொரு கப்பலும் மூழ்கடிக்கப்படவில்லை என்றும் நிமலவவிற்கு மட்டும் சேதமென்று தவறுத்தகவலைப் பரப்பியது. சிங்கள அரசின் ஒட்டுக்குழுவும் தமிழ்தேசிய எதிர்ப்புக் கட்சியுமான ஈபிடிபியும் இத்தாக்குதலைக் கண்டித்து கடையடைப்பிற்கு யாழில் அழைப்பு விடுத்திருந்தது. இந்நடவடிக்கைக்கு பெயர் ஏதேனும் சூட்டப்பட்டதா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இக்கப்பலின் அடித்தளத்தில் சிறிலங்காப் படைத்துறைக்கான ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: எம்வி நிமலவ (MV Nimalava)
    • கல வகை: வழங்கல் கப்பல் 
    • படிமம்

MV Nimalawa.jpg

படிமப்புரவு: அறியில்லை

MV Nimalawa sunk.jpg

படிமப்புரவு: shipspotting.com

  • சேதப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கலப் பெயர்: எம்வி மெர்க்ஸ் றுகுணுவ (MV MERCS Ruhunuwa) 
    • கல வகை: வழங்கல் கப்பல்
    • படிமம்:

MERCS_RUHUNU - damaged.jpg

படிமப்புரவு: MarineTraffic.com

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்கள்: 'கடற்புலிகளின் மகளீர் பிரிவு துணைக் கட்டளையாளர்' லெப். கேணல் தாட்சாயினி எ இலக்கியா (இந்நடவடிக்கையின் கட்டளையாளர்), லெப். கேணல் குபேரன்
    • கடற்கரும்புலி வகை: நீரடி நீச்சல் கரும்புலிகள்
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 3 (இரண்டு மோதியிடித்து வெடித்தன. மற்றொன்று கடலினுள் கவிழ்ந்தபடியே சிங்களவரால் கைப்பற்றப்பட்டது. எப்படி கவிழந்தது என்பது அறியில்லை)
    • கல வகை: தாழ் தோற்றுருவக் கல வகையின் நீர்முழுகி இலக்கிய மிதக்கும் ஏவரி (Low Profile Vessal type diver aimed floating torpedo) 
    • கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஏவரியின் படிமம்:  இதற்குப் புலிகள் சூட்டிய வகுப்புப் பெயர் அ வகைப் பெயர் தெரியவில்லை.

main-qimg-b26489db724d85ab9025660c84385c57.png

'கடல் நீரில் கவிழ்ந்த நிலையில்'

main-qimg-4c214514291c9e4220d4a119c9ffea8a.png

'கடற்கரைக்கு கட்டியிழுத்து வந்த பின்னர்'

main-qimg-588ec7c353803a6ec090c5a91f89a968.png

'கடையார்'

ஆதாரம்: உதயன்: 23/10/2008 | தமிழ்நெற்: 22/10/2008 (Explosions target Sri Lankan ships in the seas off Vadamaraadchi), (Sea Tigers sink Sri Lankan supply ship) | றெக் சைற்: https://www.wrecksite.eu/wreck.aspx?286246

 


  • திகதி: நவம்பர் 1, 2008
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 4:00 மணியளவில் இருந்து காலை 7:00 மணி வரை
  • நிகழ்வு இடம்: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பு & நாகர்கோவில் கடற்பரப்பு 
  • நிகழ்வு விரிப்பு: தவிபு அறிக்கையின் படி, வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் குறித்த நாள் வைகறை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கலமணியை சிறிலங்கா கடற்படையின் சுலவுக்கலம், வோட்டர் ஜெட் வகுப்புப் படகுகள் மற்றும் பிற படகுகள் வழிமறித்துத் தாக்குதலை நடத்தின. அப்போது வெடித்த கடும் மோதல் 15 நிமிடம் நீடித்தது. கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர். இதன் பின்னர், அதே நாள் வைகறை 5:15 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து குடத்தனை முதல் நாகர்கோவில் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறாக் கலங்கள், வோட்டர் ஜெட் படகுகள், சுலவுக்கலம் (Hovercraft) உள்ளிட்ட 20 கலங்களுடன் கடற்புலிகளினதும் கடற்கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்துக் காத்திருந்தனராம். இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனராம். இதில் டோறாக் கலம் ஒன்றும் சுலவுக்கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டனவாம். அத்துடன் வோட்டர் ஜெட் ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டதாம். அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் உந்துகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினராம். கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினராம். இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாகவும் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர். ஆனால் இத்தாக்குதல் முடிந்தவுடன் சிறிலங்காக் கடற்படையினர் தமது சுலவுக்கலம் கொழும்பில் தரித்து நிற்பதாகவும் தாம் ஒரு கடற்தாக்குதலுக்கு ஏன் சுலவுக்கலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வினா எழுப்பியிருந்தனர். அத்துடன் இத்தாக்குதலில் தாம் எந்தவொரு கடற்கலத்தையும் இழக்கவில்லை என்றும் புலிகளின் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் இக்கடற்சமரின் போது தமது படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக அறிக்கையிட்டனர், சிங்களக் கடற்படையினர். முதலில் ஒன்றும் இழக்கவில்லை என்று கூறிவிட்டு பின்னர் ஒரு கடற்கலத்தை இழந்ததாக சிங்களம் கூறியிருப்பதால் சிங்களக் கடற்படையின் கல இழப்புத் தொடர்பான தகவலையும் நம்ப ஏலாமல் உள்ளது. சிறிலங்காக் கடற்படையின் சுலவுக்கலம் 2012ம் ஆண்டுதான் கடற்படையிலிருந்து ஆணையிழக்கப்பட்டது என்று சிங்களக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இத்தாக்குதல் தொடர்பில் புலிகள் வெளியிட்ட முதல் ஊடக வெளியீட்டில் உள்ள தகவல் தவறானது என்று புலப்படுகிறது. ஆதலால் இம்மொத்தத் தாக்குதல் தொடர்பான புலிகளின் & சிங்களக் கடற்படையின் தகவலை ஐயத்துடனே பார்க்கவேண்டியுள்ளது. புலிகள் இவ்வாறு செய்தது தரையில் ஏற்பட்ட தொடர் பின்னடைவுகளால் சோர்ந்து போயிருந்த மக்களை உற்சாகப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்ட பரப்புரைத் தகவலோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இல்லை, சிலவேளை விடுதலைப்புலிகள் "கூகர்" என்பதைத் தான் "கூவர்" என்று பிழையாகக் கூறினர் என்று எண்ணத் தோன்றினாலும் அவர்களின் கடந்தகால அறிக்கைகளின் உண்மைத்தன்மை இவ்வெணக்கருவிற்கு இடமளிக்க மறுக்கின்றன. எவ்வாறெயினும் போரின் போது ஓய்வு கிடைத்திருந்தால் புலிகள் தமது 'உயிராயுதம்' தொடர் மூலம் உண்மை நிலவரத்தை வெளியிட்டிருக்கக் கூடும்!
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: அறியில்லை
    • புலிகள்: டோறா & சுலவுக்கலம்  
    • சிங்களக் கடற்படை: முதலில் ஒன்றுமில்லை என்று மறுப்புத் தெரிவித்திருந்தாலும், பின்னாளில் (2010) ஒரு கடற்கலம் என அறிக்கையிட்டுள்ளது
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: அறியில்லை
    • புலிகள்: வோட்டர் ஜெட்
  • இத்தாக்குதல் தொடர்பாக சிங்களவர் வெளியிட்ட காட்சிப்பதிவுகள்:

சமர் முடிந்த பின்னர் அதே நாளில் செம்பியன்பற்றுக் கடற்பரப்பில் கடற்புலிகளின் சண்டைப்படகொன்று தாக்கப்படும் காட்சிப்பதிவினை இங்கு பதிவிட்டுள்ளேன். சிங்கள வான்படையின் வேவு வேனூர்திகள் மூலம் எடுக்கப்பட்ட நிகழ்பட காட்சிப்பதிவின் மூலம் ஆகக்குறைந்தது கடற்புலிகளின் ஒரு வேவ் ரைடர் சண்டைப்படகாவது சிங்கள வான்படையால் செம்பியன்பற்றுக் கடற்பரப்பில் காலை 8:30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சில் தாக்கப்பட்டுள்ளது (மூழ்கடிக்கப்பட்டதா சேதமடைந்ததா இல்லையா என்பது தெரியவில்லை) தெளிவாகத் தெரிகிறது (இவ் வான் தாக்குதலில் கடற்புலிகளின் இரு சண்டைப்படகுகள் அழிக்கப்பட்டதாக சிங்கள வான்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

 

கடற்சண்டையின் அகச்சிவப்புக் காட்சிப்பதிவு:

சிங்களக் கடற்படையால் வெளியிடப்பட்ட இவ் அகச்சிவப்பு நிகழ்படக் காட்சிப்பதிவில் கடற்புலிகளின் நான்கு இடியன்கள் வெடிப்பது தெரிகிறது.

  1. முதலாவது பேரொளிகள்: இரு இடியன்கள் வேறு இரு கடற்கலங்களை அண்மையாக நெருங்கிய பின்னர் ஏற்படுகிறது. இதனால் இரு தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளன. பின்னர் அங்கு இரு கடற்கலங்கள் தொடர்ந்து சுடர்விட்டு எரிகின்றன. கரும்புலிப்படகுகள் எரிந்தாலும் இப்படித்தான் தெரியும் என்பதை உயிராயுதம் தொடர் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
  2. இரண்டாவது பேரொளி: எப்படி ஏற்படது என்று தெரியவில்லை. ஆனால் இது கண்டிப்பாக ஏதேனும் ஒரு கடற்கலத்துடன் மொதியதால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில் மோதியிடிப்பதன் மூலம் ஏற்படும் கரும்புகை எழுந்து மேற்பரப்பில் பரவுவது தெளிவாகத் தெரிகிறது. அத்துடன் கடற்கலங்கள் எதுவும் தொடர்ந்து சுடர்விட்டு எரியவில்லை.
  3. மூன்றாவது பேரொளி: தீப்பிழம்பு எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கடற்கலமொன்று தொடர்ந்து சுடர்விட்டு எரிகிறது.

 

  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை 
      • புலிகள்: 20 பேர்
      • சிங்களக் கடற்படை: பேர்
  • வீரச்சாவடைந்த மொத்தப் போராளிகள்: அறியில்லை
    • கடற்கரும்புலிகள்: 7 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் பதுமன் (பதுமன் மாஸ்டர்), லெப். கேணல் புலிக்குட்டி, லெப். கேணல் கண்ணன், மேஜர் கலைமதி, மேஜர் செந்தூரன், கப்டன் அகச்சேரன், கப்டன் கொள்கைக்கோன் 
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: அறியில்லை
      • தரநிலையுடனான பெயர்கள்: சிறிலங்காக் கடற்படையின் தகவலின் படி, தாம் ஒட்டுக்கேட்டதாகவும், அதன் மூலம் 7 கடற்கரும்புலிகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 16 பேர் காயப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதை உறுதிப்படுத்த முடியவில்லை. அத்துடன் கடற்சமரின் பின்னர் தாம் நடாத்திய தேடுதல் வேட்டையின் போது கடற்புலிகளின் 4 சிதைந்த சடலங்களையும் சில படைக்கலன்களையும் கைப்பற்றியதாகவும் தெரிவித்தனர். மேலும், 4ம் திகதி தவிபு ஓ 2922 என்ற தகட்டெண் உடைய ஆண் போராளியின் வித்துடல் பருத்தித்துறைக் கடற்கரையிலுள்ள சிங்களக் காவலரண் ஒன்றிற்கருகில் கரையொதுங்கியது. இது இக்கடற்சமரின் போது கொல்லப்பட்ட போராளியினுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
  • சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 4
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: உதயன்: 2/11/2000 | தமிழ்நெற்: 1/11/2008 (SLN Dvora, hovercraft sunk in major naval clash - Sea Tigers), 4/11/2000 (Male corpse washed ashore on Point Pedro coast)

 


  • திகதிநவம்பர் 18, 2008
  • அடிபாட்டுக் காலம்: காலை 6:15 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்கள்
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: முல்லைத்தீவு நாயாற்றில் உள்ள கறுப்புமுனைக் நோக்கி சிறிலங்காக் கடற்படையின் சிறப்பு கடல் அதிரடிப்படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான கடற்புலிகளின் முறியடிப்புத் தாக்குதல் இதுவாகும். குறித்த பரப்பு நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்காக் கடற்படையின் இரண்டு வோட்டர் ஜெட் படகுகள் மற்றும் 12 அரோப் படகுகளைக் கொண்ட சிறப்பு அதிரடிப்படை அணியை வழிமறித்து 6:15 மணியளவில் கடற்புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். சிங்களக் கடற்படையின் இந்நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்காத் தரைப்படையினர் செறிவான எறிகணை வீச்சை மேற்கொள்ள வான்படையினர் மிக்- 27 தாரை வானூர்திகள் மற்றும் எம்.ஐ. 24 தாக்குதல் உலங்குவனூர்திகள் கொண்டு வான் சூட்டாதரவில் மிண்டினர். இருந்தபோதிலும் கடற்புலிகள் மிகத் தீவிரமாக எதிர்கொண்டு வலிதாக்குதலை முறியடித்தனர். கடற்புலிகள் தம் தரப்பில் எதுவித இழப்பும் ஏற்படவில்லையென்று தெரிவித்தனர்.
  • சேதமடைந்த கடற்கலங்கள்: 3
    • கடற்கல வகுப்புப் பெயர்: "சிறப்புப் படகுகள்" (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை. ஆனால் சிறப்புப் படகுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவை அரோ ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: இழப்பில்லை

ஆதாரம்: உதயன்: 19/11/2008 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளால் அழிக்கப்பட்ட, சேதப்பட்ட, கைப்பற்றப்பட்ட சிறிலங்காச் சார் கடற்கலங்கள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆண்டு: 2009

 

இறுதிப்போரின் தகவல்கள் அவ்வளவாகக் கிடைக்கப்பெறவில்லை. இவை தவிர்த்து வேறு எதையும் வாசகர்கள் அறிந்திருந்தால் ஆவணப்படுத்தத் தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

  • திகதி: சனவரி 19, 2009
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியிலிருந்து தொடங்கியது
    • டோறா மீது இடியன் மோதிய நேரம்: சரியாகச் சாமம் 11:28 மணி
  • நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: சுண்டிக்குளம் கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில், கடற்படையின் இரண்டாம் கட்ட தடுப்பு வலயத்துக்கு வெளியே, சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிங்களக் கடற்படையின் டோறா மீது கடற்கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சில நிமிடங்களிலையே டோறா மூழ்கியது. கரும்புலித் தாக்குதலின் பின்னர் கடற்புலிகள் சிங்களக் கடற்படையோடு பொருதினர். அப்போது கடற்படைக்கோ கடற்புலிகளுக்கோ ஏற்பட்ட மெய்யான சேத விரிப்பு வெளிவரவில்லை.
  •  மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் அறியில்லை)
    • தொடரெண்: பி- 434
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 19 பேர்
    • காயப்பட்டோர்: 1 ஆள்
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்: லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன்
    • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை

ஆதாரம்: நிலவரம் 17/02/2009 | உதயன்: 21/01/2009 | மாவீரர் பட்டியல்

 


  • திகதி: சனவரி 30, 2009
  • அடிபாட்டுக் காலம்: நண்பகல் 10 மணியளவிலிருந்து தொடங்கியது
  • நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த நாளில் வைகறை 3 மணியளவில் சுண்டிக்குளம் கடற்பரப்பில் இலக்கைத் தேடிச் சென்றுகொண்டிருந்த கடற்கரும்புலிப் படகொன்று கடற்படையினரால் காணப்பட்டு தாக்கியழிக்கப்பட்டது. இதில் சென்ற இரு கடற்கரும்புலிகளும் வீரச்சாவடைந்தனர். பின்னர் அதேநாள் நண்பகல் 10 மணியளவில் முல்லைத்தீவுக் கடலில் சுற்றுக்காவல் சென்றுகொண்டிருந்த டோறாக்கள் மற்றும்  கடற்படையின் சிறப்பு படகுச் சதளத்தின் (SBS) 'செட்ரிக்’ (பழைய வகுப்புப் பெயர்: அரோ) வகுப்புப் படகுகளை உள்ளடக்கிய 15 வரையான படகுகளைக் கொண்டதொரு கலத்தொகுதியை கடற்புலிகள் வழிமடக்கித் தாக்கினர். இதில் இரண்டுசெட்ரிக்வகுப்புப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் அறிவித்தனர். கடற்புலிகள் தரப்பில் எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சிறிலங்காக் கடற்படை அற்றை நாளில் நடந்த இரண்டாவது கடற்சமர் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. 
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 2
    • கடற்கல வகுப்புப் பெயர்: செட்ரிக்
    • கல வகை: விரைவுத் தாக்குதல் வேகப்படகு
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகள்: 2 பேர்
    • தரநிலையுடனான பெயர்: அறியில்லை
    • கடற்கரும்புலி வகை: அறியில்லை
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • வகுப்புப் பெயர்: அறியில்லை
    • கல வகைதாழ் தோற்றுருவக் கடற்கலம்

ஆதாரம்: உதயன்: 31/1/2009 | நிலவரம் 17/02/2009

 


  • திகதி: பெப்ரவரி 8, 2009
  • அடிபாட்டுக் காலம்: வைகறை 5:30 மணியிலிருந்து 6:00 மணிவரை
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: குறித்த நாளில் குறித்த நேரத்தில் கடற்புலிகளால் கடற்படையினர் மேல் மேற்கொள்ளப்பட்ட வலிதாக்குதலால் கடற்சமரொன்று மூண்டது. நடந்த கடற்சமரில் கடற்புலிகளின் இரு தாழ் தோற்றுருவ (Low profile) வகை இடியன்கள் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. அவற்றில் முதலாவது இலக்கை நோக்கிச் சென்ற போது கடற்படையின் சூட்டிற்கு இலக்காகி வெடித்துச் சிதறியதாகவும் மற்றொன்று சுப்பர் டோறாவோடு மோதி அதை நாசப்படுத்தி மூழ்கடித்ததாகவும் புலிகள் அறிவித்தனர். மேற்கொண்டு தொடர்ந்த கடற்சமரில் கடற்புலிகளால் மற்றொரு சுப்பர் டோறா தாக்கிச் சேதமாக்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல, புலிகளின் இத்தகவலை சோடிக்கப்பட்ட ஒன்றென மறுத்த சிங்களக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க, கடற்புலிகளின் இரு கரும்புலிப்படகுகளையும் தாம் மூழ்கடித்து விட்டதாகத் தெரிவித்ததோடு ஒரு நிகழ்படக் காட்சியையும் வெளியிட்டனர். ஆனால் அதில் ஒரே ஒரு குண்டுப்படகு மட்டுமே வெடித்துச் சிதறும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது குண்டுப்படகு மூழ்கடிக்கப்படுவதற்கான காட்சியை வெளியிடவில்லை. 
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை)
  • சேதப்பட்ட (மோசமாக) கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: 15 பேர்
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: 6 பேர்
    • கடற்கரும்புலிகள்: 4 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் வான்மீகி எ கனி, மேஜர் இசையரசன், மேஜர் உலகச்சேந்தன், மேஜர் கருணைநாதன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: 2 பேர்
      • தரநிலையுடனான பெயர்கள்: அறியில்லை
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 2 
    • கல வகை: தாழ் தோற்றுருவக் கடற்கலம்

ஆதாரம்: உதயன்: 09/02/2009 | நிலவரம் 17/02/2009 

 


  • திகதி: பெப்ரவரி 20, 2009
  • அடிபாட்டுக் காலம்: சாமம் 11:30 மணியளவில்
  • நிகழ்வு இடம்: சுண்டிக்குளம் கடற்பரப்பு
  • நிகழ்வு விரிப்பு: குறித்த கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்கலத் தொடரணியை கடற்புலிகளின் கலத்தொகுதி ஒன்று மறித்துத் தாக்குதல் நடத்தியது. கடற்புலிகள் பொருதிய போது கடும் சமர் வெடித்தது. அப்போது சிங்களக் கடற்கலத் தொடரணி மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கடற்கரும்புலித் தாக்குதலில் சுப்பர் டோறா ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. இக்கடற்சமரின் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட ஆளணி இழப்புகள் பற்றி அறியில்லை.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: சுப்பர் டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: ஆகக்குறைந்தது 1 ஆள்
    • கடற்கரும்புலிகள்: 1 ஆள்
      • தரநிலையுடனான பெயர்கள்: லெப். கேணல் மதியழகன்
      • கடற்கரும்புலி வகை: நீர்மேல் தாக்குதல் கரும்புலிகள்
    • கடற்புலிகள்: அறியில்லை
  •  சக்கை வண்டிகள்,
    • எண்ணிக்கை: 1
    • கல வகை: அறியில்லை

ஆதாரம்: தமிழ்நெற் 19/02/2009 (Sea Tigers sink SLN Super Dvora attack craft in Mullaiththeevu seas)

 


  • திகதி: ஏப்ரல் 30, 2009
  • அடிபாட்டுக் காலம்: எற்பாடு 2:45 மணியிலிருந்து தொடங்கியது
  • நிகழ்வு இடம்: முல்லைத்தீவில் இருந்து 52 கடல் மைல் தொலைவில்
  • நிகழ்வு விரிப்பு: 29ம் திகதி எற்பாடு 4 மணியிலிருந்து கடலிலிருந்து கரையோரப் பரப்புகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தொடர் தாக்குதல்களை நடத்தி பொது மக்களைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியபடியும் இருந்தனர். இதனைக் கவனித்து வந்த கடற்புலிகள் 30ம் திகதி எற்பாடு 2:45 மணியளவில் சிறிலங்காக் கடற்படையினர் மீது ஒரு வலிதாக்குதலை கடலில் மேற்கொண்டனர். அப்போது மூண்ட கடற்சமரில் சிறிலங்காக் கடற்படையின் வோட்டர் ஜெட் ஒன்றும் டோறா ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகளால் அறிவிக்கப்பட்டது. இத்தாக்குதலில் கடற்கரும்புலிகள் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • மூழ்கடிக்கப்பட்ட கடற்கலங்கள்: 1
    • கடற்கல வகுப்புப் பெயர்: வோட்டர் ஜெட் 
    • கடற்கல வகுப்புப் பெயர்: டோறா (விதப்பான வகுப்புப் பெயர் தெரியவில்லை)
  • சிறிலங்கா கடற்படை ஆளணியினரில்,
    • கொல்லப்பட்டோர்: அறியில்லை
    • காயப்பட்டோர்: அறியில்லை
  • வீரச்சாவடைந்த போராளிகள்: அறியில்லை

 ஆதாரம்: தமிழ்நெற்: 30/04/2009 (SLN, SLA step up confrontations, Tigers sink two SLN vessels)

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முடிவுரை

 

இத்தோடு இத்திரட்டு முடிவிற்கு வருகிறது. என்னால் இயலுமானவரை கடற்புலிகளால் சிங்களவரின் கடற்படைக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை நம்பிக்கைக்குரிய செய்தி நிறுவனங்கள், நாளேடுகள் மற்றும் கடற்புலிப் போராளிகளின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்து திரட்டி எடுத்து கோர்வையாக்கி பதிவிட்டுள்ளேன். 

இத்திரட்டிற்கான தகவல் சேர்ப்பு மற்றும் எழுத்து வேலையை 2023ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் தொடங்கி சூலை மாத இறுதியில் முடித்துள்ளேன். தகவல் சேர்ப்பின் போது ஆயுதப் போர்க்காலத்தில் வெளிவந்த ஒவ்வொரு உதயன் நாளேடாக வாசித்து அதிலிருந்த தகவலை எடுத்து புலிகளின் அந்நிகழ்வு தொடர்பான தகவலோடு ஒப்பிட்டு இரண்டையும் ஒன்றாக்கி இங்கே வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு குறிப்பிட்ட சமர்கள் தொடர்பன புலிகளின் தகவலை வீரச்சாவடைந்த போராளிகளின் வாழ்க்கை வரலாறுகள், உயிராயுதம் தொடர் மற்றும் அவர்களின் ஊடக வெளியீடுகளிலிருந்தே எடுத்துள்ளேன்.

எமது பண்டைய வரலாற்றில், எமது முன்னோர்கள், கடலில் நடைபெற்ற கடற்சமர்கள் தொடர்பாக எதனையும் ஆவணப்படுத்தவில்லை. ஆதலால் இம்முறையும் அவ்வாறு நடைபெற்றுவிடக் கூடாது என்பதால் நான் இதனை செய்யத் துணிந்தேன்.

மேலும் எமது கடந்த கால தலைமுறையின் கடற்சமர் ஆற்றலையும் எமது தேசத்தின் ஒரே கடற்படையான கடற்புலிகளின் கடற்போரியல் வரலாற்றையும் இனிவரும் எமதினத் தலைமுறைகளுக்கு எடுத்தியம்பும் வகையாகவும் இவ் ஆவணம் திகழும் என்று முழுமையாக நம்புகிறேன்.

என் பின் இதனை ஆவணப்படுத்த விரும்புவோர் உங்களால் ஏலுமான வரை இதனை இற்றைப்படுத்துங்கள், வரலாற்றைப் பாதுகாக்குங்கள். நானும் என்னால் இயன்றவரை தகவல் கிடைக்கும் போதெல்லாம் இதனை இற்றைப்படுத்த முற்சிக்கிறேன்.

நன்றி!

முற்றும்

 

 

மொத்த ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
Posted

உங்கள் முயற்சிக்கும் ஆக்கத்துக்கும் நன்றி நன்னிச்சோழன்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.