Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி நேரத்தில் படிச்சு சோதினை சித்தி அடைவது எப்படி?

Featured Replies

யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன.

தேவையான பொருட்கள்:

1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்..

2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர்

3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் உங்கள் காதுகளில் விழாது இருப்பதற்கு

4. தலைக்கு அணிய பாண்ட் - மண்டையை சுத்தி இறுக்கி கட்டுவதற்கு

5. பனடோல், தைலனோல் குளிகைகள் - மயங்கி விழப்போவது போல் இருந்தால் பாவிக்க..

6. கொரிப்பதற்கு மிக்சர், கடலை, சுண்டல், சுவிங்கம், கம் போன்றன

7. பிரகாசமான வெளிச்சத்தை பாய்ச்சும் மின்விளக்கு, மேசை விளக்குகள் இரண்டு, மூன்று

8. பூட்டு போட்டு மூடக்கூடிய தனிஅறை (மலசலகூடமும் அட்டாச் செய்து இருந்தால் நல்லது)

9. பவர்பொயிண்ட் சிலைட்ஸ், சமரி நோட்ஸ் - தொகுப்பு உரைகள்

10. கேள்வி பதில் கொத்து

11. தாராளமாக குடிநீர்

12. கணனி, இண்டர்நெட் இணைப்பு

13. மின்விசிறி, ஏசி, ஹீட்டர்

14. வாயினுள் வைக்கக்கூடிய சிறிய மரக்கட்டை

15. தலைக்கு போடுவதற்கு தொப்பி: மண்டையை நீங்கள் அடிக்கடி சொறிவதால் தலைமயிர் கொட்டுப்படுதல், காயம் ஏற்படுதல் போன்றவற்றை தடுக்க..

தேவையில்லாத பொருட்கள்:

1. எம்.எஸ்.என் மெசஞ்சர் - சோதினை முடியும் வரை இதை கணனியில் இருந்து அகற்றிவிடவேண்டும்.

2. ரீவி, ரேடியோ, ஐபொட்

3. தொலைபேசி, மொபில், பிளக்பெரி.. இதர எலக்ரோனிக் டிவைசசஸ்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்களையும் , தேவையில்லாத பொருட்களையும் வாசிக்கும்போது உங்களுக்கு செய்முறை தானாகவே விளங்கும் என நினைக்கின்றேன்.

சில விசேட பொருட்களின் பயன்பாடு:

1. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர்: இதை நித்தா வரும் நேரத்தில் பாவிக்க வேண்டும். நித்தா வரும்போது உங்கள் கால்களை குளிர்தண்ணியினுள் வைக்கவேண்டும்.

2. தலையைக்கு அணிய பாண்ட் - மண்டையை சுத்தி இறுக்கி கட்டுவதற்கு: இதை தலையிடி வந்தால் பாவிக்கவேண்டும்.

3. வாயினுள் வைக்கக்கூடிய சிறிய மரக்கட்டை: நீங்கள் எக்கச்சக்கமாக மாட்டுப்பட்டு விட்டால் அதாவது எல்லாம் சூனியமாக இருந்தால், பாடப்புத்தகத்தில் இருப்பது ஒன்றும் விளங்காமல் இருந்தால், இந்த மரக்கட்டையை வாயினுள் வைத்து இறுக்கி கடித்துக்கொண்டு புத்தகத்தை படிக்கவேண்டும். இதுபோல் உங்கள் மனம் படிப்பில் ஒருமை அடையாது அங்கும், இங்கும் அலைந்து கொண்டு இருந்தாலும் இவ்வாறு செய்யலாம்.

பிரகாசமான வெளிச்சத்தை பாய்ச்சும் மின்விளக்கு, மேசை விளக்குகள் இரண்டு, மூன்று: உங்கள் நிலமை மோசமாகி நித்தா தூக்கித் தூக்கி அடித்தால் மேசையில் அப்படியே விழுந்து படிக்கின்ற அருமந்த புத்தகத்தின் மேல் வீணீர் வடிப்பதை தவிர்ப்பதற்காக மேசையை சுற்றி பிரகாசமாக ஒளியை பாய்ச்சும் மின்விளக்குகளை போட்டுவிடவேண்டும். கண்ணில் ஒளிவெள்ளம் பாய்வதன் மூலம் நீங்கள் தூங்குவது தடுக்கப்படுகின்றது.

உங்களுக்கும் இவ்வாறு நல்ல ஐடியாக்கள் தோன்றினால் மற்றவர்களுக்கும் இங்கு கூறி அனைவரும் சோதினை சித்தி அடைந்து, சிறந்த புள்ளிகள் பெற்று யாழ் இணையத்துக்கு பெருமை சேர்க்க உதவும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். :)

மேலதிக ஐடியாக்கள் அவ்வப்போது வரும்போது பின்பு கூறுகின்றேன். எனவே, தொடர்ந்து ஒன்லைனில் இணைந்து இருங்கள்..

நன்றி! :P

Edited by கலைஞன்

  • Replies 57
  • Views 8.8k
  • Created
  • Last Reply

எல்லாம் சரி இந்த மரக்கட்டை விசயம் தான் புதுசா இருக்க...தனியறையில இருந்து நல்லாப் படிக்கிறீங்கிள் என்று மட்டும் விளங்குது :-)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா இதைவிட என்னிடம் நல்ல ஐடியா இருக்கு -

படிக்கவேண்டிய புத்தகத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர்விட்டு அரைத்து குடித்தால் மிகச்சிறப்பான புள்ளிகளை பெறலாம்.

  • தொடங்கியவர்

சினேகிதி உங்களுக்கும் இப்படி ஏதாவது ஐடியா வந்தா சொல்லுங்கோ பிளீஸ்..

ராகவன் அண்ணை, நாங்கள் படிக்கிறமோ இல்லையோ, வாங்கிற புத்தகத்தை கவனமாக பாதுகாத்து திருப்பி விற்றுவிடுவோம். ஒவ்வொரு Text Book ம் $ 100 - $ 150 காசு. இதை எப்படி மிக்சியில் போட மனம் வரும்? இதை திருப்பி Used Book Store இல் விற்பதன்மூலம் ஓர் புதிய மிக்சி வாங்கலாம். :P

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஐடியாக்கள் தொடர்கின்றன..

1. படுக்கும்போது தலையணை, போர்வை பாவிக்ககூடாது. அப்போதுதான் தூங்கிவழியாது படுக்கும்போதும் கூட விழிப்புடன் - படிக்கவேணும் என்ற எண்ணத்துடன் இருப்பீங்கள்.

2. பச்சைத்தண்ணி, சுடுதண்ணி குளியல் எடுக்கலாம்.

3. கழுத்தை சுற்றி ஸ்காவ் அல்லது சால்வை அல்லது துப்பட்டா (சுரிதாருடன் வரும் சால்வை போன்ற துணி) மூலம் இறுக்கி கட்டலாம். இதன்மூலம் ஒன்றை செய்து முடிக்கவேண்டும், படித்து முடிக்க வேண்டும் என்ற மனவைராக்கியம் ஏற்படும்.

3. இரண்டு கைகளிலும் மணிக்கூடு கட்ட வேண்டும். மேலும், படிக்கும் அறைச்சுவரில் நான்கு புறமும் சுவர்க்கடிகாரங்கள், தினக்காட்டிகளை (கலண்டர்) மாட்ட வேண்டும்.

4. நிலமை கவலைக்கிடம் என்றால், ஆண்களாக இருந்தால் மொட்டை அடிப்பது நல்லது. பெண்களாக இருந்தால் கொண்டை போட்டுக் கொள்ளலாம்.

5. படிக்கும்போது மிகவும் துன்பமாக இருந்தால் raaga.com அல்லது oosai.com க்கு சென்று Devotioanl Songs - கந்தசஷ்டி கவசம், யேசு கீதங்கள், சிவபுராணம் போன்றவற்றை கேட்கலாம்.

மிகுதி பின்.. :P

எல்லாரும் சொல்லச் சொல்ல நானும் நம்பேல்லை. ஆனா இப்ப கொஞ்சங் கொஞ்சமா நம்ப வேண்டிக் கிடக்கு

:huh::(:blink:

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா! அந்தப் பல்லுக்குத்திற ஈக்கிளும் இஞ்சிச்சோடாவும் மட்டும் மிஸ்ஸிங்.

(இவ்வளவு சாப்பாட்டுக்கும், செமிபாட்டுக்கும் ஈக்கிளும், இஞ்சியும் கட்டாயம் தேவைதான்.) :huh::(

ச்சா! அந்தப் பல்லுக்குத்திற ஈக்கிளும் இஞ்சிச்சோடாவும் மட்டும் மிஸ்ஸிங்.

(இவ்வளவு சாப்பாட்டுக்கும், செமிபாட்டுக்கும் ஈக்கிளும், இஞ்சியும் கட்டாயம் தேவைதான்.) :huh::(

ஏன் பெரியப்பா இஞ்சி சோடா பரிட்சைக்கு அதுவும் தேவையா எனக்கு தெரியாம போயிட்டு........... ;)

ஜெனரல்!!

மிகவும் முக்கியமான மாட்டரை டிஸ்கசன் பண்ணுறீங்க போல பேபியும் மொண்டசூரியில் இப்படி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடியா என்னை போல மொண்டசூரிக்கு பேபிகளுக்கு நானும் சில டிப்ஸ் கொடுக்கிறேன்....... :P .

ஜம்மு பேபி எக்சாம் வேசிங் டிப்ஸ்

1)முதலில் தேவையான சமன்பாடுகள் மற்றும் மறந்து போக கூடிய சில நுணுக்கமான விடயங்களை ஒரு வெற்று தாளில் எழுதி பொக்கட்டில் வைக்கவும். :(

2)உள்ளங்கையில் தேவையான தகவல்களை எழுதி வைக்கவும்.

3)எக்சாம் கோலில் பக்கத்தில் இருக்கும் நண்பணிற்கு போன் எடுத்து பல்தேர்வு வினாவிற்கு எவ்வாறு கையை காட்டுவோம் போன்ற தகவலை கலந்துரையாடவேண்டும் :P (இந்த குறிப்பு அவுஸ்ரெலியாவில் இருக்கும் மாணவர்கள் கடைபிக்க வேண்டாம் ஏனேனில் உங்களுக்கு ஒரு பல்தேர்வு வினா பக்கத்தில் இருப்பவர்களுக்கு இன்னொரு பல்தேர்வு வினா என்று தான் கேள்விகள் கொடுபார்கள் அநேகமான பல்கலைகழங்களிள் இவ்வாறு தான் இங்கு ஏனைய நாடுகள் பற்றி தெரியாது இலங்கையில் பாடசாலை பரிட்சை செய்பவர்களுக்கு இது பெரிதும் உதவும் நான் கூட இப்படி தான் இலங்கையில் பல பரிட்சைகளிள் அதாவது தவணை தேர்வில் இவ்வாறு தான் செய்யிறான் ஜெனரல் விடை தெரிந்தாலும் இவ்வாறு செய்வதில் ஒரு தனி சுகம் :blink: .)

4)அடுத்தது இரவில் நித்தா விழித்து படிக்கு போது நித்தா வந்தா உடனே யாழிற்கு வரவும் வந்து ஒரு கருத்து கணிப்பையோ அல்லது அரட்டை அடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி பெற்று மீண்டு பல மணித்தியாலங்களுக்கு படிக்கலாம். :P

5)பரிட்சைக்கு படிக்கும் போது பரிட்சைகு படிக்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல் படிக்க வேண்டும் பரிட்சை என்றவுடன் படபடப்பு வந்து இறுதியாக ஒன்றும் படிக்க ஏலாம போய்விடும். :)

6)நீங்கள் விழித்து இருந்து படிக்கும் போது வீட்டை யாரும் தூங்கினா எரிச்சல் வரும் அந்த நேரங்களின் உங்கள் செல்போன் மூலம் வீட்டு லான்ட் போனிற்கு போன் பண்ணி அவர்களை எழுப்புவதன் மூலம் சந்தோசமாக படிக்கலாம் இந்த முறை இலங்கையில் நான் பல தடவை பின்பற்றி இருக்கிறேன் :) .(ஏச்சும் வாங்கி இருக்கிறேன் மாட்டுபட்டு)

7)குறிப்பாக இந்த நேரங்களிள் அளவிற்கு மிஞ்சி சோறு மற்றும் மரகறியை சாப்பிடுவதை தவிர்கவும் லைட்டான சாப்பாடுகளை சாப்பிடவேண்டும் இல்லாட்டி நித்தா தான் வரும் படிக்கும் போது. :huh:

8)கேள்பிரண்ட் அல்லது போய் பிரண்ட் இருந்தா உங்களுக்கு அன்று தொலைபேசியை சுவிச் ஓவ் பண்ணி வைப்பதே சிறந்தது. B)

9)அடுத்து அன்று தான் பரிட்சைக்கு எல்லாவற்றையும் படிக்க போறவர்கள் அந்த மாதிரி விச பரிட்சையுக் ஈடுபடாமல் சந்தோசமாக சென்று படுப்பது சிறந்தது ஏனேனில் இவ்வளவு நாளும் இல்லாம இந்த ஒரு நாளிள ஒன்று ம்சாதிக்க முடியாது நல்லா படுத்தாலாவது கனவிலையாவது நல்ல மார்க்ஸ் கிடைக்கும்.

10)தயவு செய்து கடவுளை கும்பிட்டு அவரின்ட டைம்மை வேஸ்ட் பண்ண வேண்டாம் அந்த டைமில நீங்க ஏதாவது உறுபடியாக செய்யலாம்...... :)

இது ஜம்மு பேபியின் எக்சாம் வேசிங் டிப்ஸ்.......இன்னும் தொடரும்...........

ஜம்முபேபி பஞ்-கண்ணா வாழ்கையில பல பரிட்சை வரும் எல்லாவற்றிலையும் பாஸ் ஆக வேண்டும் என்று இல்லை ஆனா பாஸ் ஆக வேண்டிய பரிட்சையில பாஸ் ஆகிட வேண்டும்......

அப்ப நான் வரட்டா!!

படிக்கிறபோது நானும் இப்படித்தான் உண்மையில கஸ்டப்பட்டன். அண்டைக்கண்டைக்கு படி என்டு அப்பா சொல்ல சொல்ல கேக்காம நல்லா ஊர்சுத்திட்டு கடைசி நேரம் மண்டையபோட்டு உடைப்பன். சரி என்னால முடிஞ்ச அறிவுரைகள்தாறன்.

நித்திரை வருது என்டு சொன்னா நடந்து நடந்து படியுங்கோ. இந்தியாவில் நீங்கள் இருந்தால்மொட்டைமாடியில் நடந்து நடந்து படித்து பக்கத்துவீட்டு பிகருகளுக்கு பிலிம் காட்டாலாம். அது நிச்சயம் உற்சாகம் தரும். ( தண்ணிக்குள் காலை வைச்சா அடிக்கடி மூச்சா வரும்)

எல்லாவற்றையும் ஒரேயடியாப்படிக்க முடியாது. பரீட்சைக்கு முதல் அவசரமாக படிக்க புத்தகம் உகந்ததல்ல. அதனால் சிறு கொப்பி வாங்கி சுருக்கமாக சிலவற்றையாவது குறித்து வைத்துக்கொள்ளுங்கள். கடைசிநேரத்தில் இது பிட்டாக(பரீட்சையில் காப்பிஅடிக்கும்துண்டு) கூட உதவும்.

டிவி பார்க்கக்கூடாது என்றில்லை. சாப்பிடும் போது பாருங்கள். அந்த தருணத்தில் மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை தரக்கூடிய பாட்டுக்களை பாருங்கள். ( உதாரணம் சேரனின் ஆட்டோகிராபில் வரும் ஒவ்வொரு பூக்களும் என்ற பாட்டு)

சில பாடங்கள் (உதாரணமாக கணக்கியல் கணிதம்) படிக்கும் போது பாடல்கள் தாராளமாக கேட்கலாம். சோகப்பாடல்களைத்தவிருங்ள் இல்லை என்றால் பழைய காதல் நினைவுகள் வேதனையைத்தந்து சரியாக படிக்கமுடியாமல் போகலாம்.

நீங்கள் படித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு படித்ததை உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் உங்கள் சொந்த மொழிநடையில் ஓடவிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். நண்பனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் படித்ததை கேள்வியாக கேளுங்கள். அவன் தெரியாது திணறினால் நீங்கள் பதிலை சொல்லுங்கள். உங்களை நீங்களே பரீட்சிக்க இது உதவும். நீங்கள் நல்லாபடிக்கிறீங்கள் என்று அவன் கண்ணூறு பொடவும் உதவும்.

பலதடவை படித்தும் மண்டையில் ஏறூது மனது அலைபாய்ந்தால் கண்ணைமூடி படுத்துவிடுங்கள். மனசாட்சிக்கு மறுநாள் காலை எழுந்து படிப்பதாக வாக்குறுதி கொடுங்கள். இல்லை வேறு பாடத்தை படியுங்கள்.

நான் படிக்கிற காலத்தில குறுக்காலைபோவார் உந்த mms, video call எண்டு ஒண்டு அறிமுகப்படுத்தவில்லை. செய்திருந்த நான் எல்லாம் அந்த மாதிரி பாஸ் பண்ணி எங்கையோ இப்ப இருந்திருப்பன். அந்தக் காலத்தில ஆள்மாறாட்டம் செய்து குதிரை ஓடுறது தான் பாஸ் பண்ண ஒரே வழியா இருந்தது.

இப்ப தானே silent இல phone விட்டுட்டு mms, video call என்று புகுந்து விளையாடலாம்.

அப்புறம் முதல் நாள் இரவு 2...3 ஜெயிண்ட் பத்தினா நல்லா இருக்கும். மிச்சத்தை வந்து தோழர் கிருபன் விளங்குபடுத்துவார். நான் போட்டுவாறன். :huh:

உங்கள் அனைவரது டிப்ஸ் உம் நல்லா இருக்குங்கோ

மணியண்ணா சொன்னது போல பெரிய பாத்திரத்தினுள் காலை வைச்சு படிக்கும் போது நல்லாக குளிரும் மூச்சாவும் அடிக்கடி வரும். அத்தோடு குளிரும் போது சுருண்டு பெட்சீட்டுக்குள் படுக்கணூம் போலவும் தோணும்.

சில பாடங்கள் (உதாரணமாக கணக்கியல் கணிதம்) படிக்கும் போது பாடல்கள் தாராளமாக கேட்கலாம். சோகப்பாடல்களைத்தவிருங்ள் இல்லை என்றால் பழைய காதல் நினைவுகள் வேதனையைத்தந்து சரியாக படிக்கமுடியாமல் போகலாம்.

உதை தான் நானும் செய்தேன். இறுதியில் பரீட்சை மண்டபத்தில் கணக்கியல் பாடம் செய்யும்போது எனக்கு ஏதாவது பாட்டு கேட்கணும் போல இருந்திச்சு. இறுதியில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே புள்ளிகள் வந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு! உதுக்குத்தான் உங்களைச்' செல்வனிலை" ஆமிக்காம்பில போட்டு அந்த வாங்கு வாங்கினவர்கள்.

:huh::(

  • கருத்துக்கள உறவுகள்
எல்லாரும் சொல்லச் சொல்ல நானும் நம்பேல்லை. ஆனா இப்ப கொஞ்சங் கொஞ்சமா நம்ப வேண்டிக் கிடக்கு :(:blink::)
இப்பவாவது விளங்கிச்சுதே.... :P
மணியண்ணா சொன்னது போல
அது மணி அண்ணா இல்லை.... ஆதிபன். :huh:
  • தொடங்கியவர்

ஜெனரல்,

உங்கட ஐடியாக்கள் சூப்பர். எண்டாலும் நீங்கள் ரொம்ப பொல்லாத ஆசாமியா இருக்கிறீங்கள்? :3d_019: உங்கட மொபிலில் இருந்து வீட்டு லாண்ட் போனுக்கு ரிங் பண்ணி சனத்தை சாமத்தில நித்தாவால எழுப்புவீங்களா? :huh:

நானும் அறையினுள் இருந்து படிக்கும்போது எனது மொபில் போன் மூலம் வீட்டு லாண்ட்போனுக்கு ரிங் பண்ணி அம்மாவுடன் கதைப்பேன். அதாவது எப்போது சாப்பாடு முடியும், என்ன சாப்பாடு போன்ற விடயங்களை பற்றி பேசுவதற்கும், தேத்தண்ணி, கோப்பி தேவைப்பட்டால், மற்றும் ரீவி சரியான சத்தமாக இருந்தாலும் எனது மொபில் போனிலிருந்து வீட்டு லாண்ட் போனுக்கு ரிங் பண்ணி சத்ததை குறைக்குமாறு கடுமையான கோபத்துடன் பரிந்துரை செய்வேன்.

மற்றது சோதினையில் ஒருகாலமும் நான் கள்ளவேலைகள் செய்வது, சீட் பண்ணுவது இல்லை. எண்டபடியால நீங்கள் சொன்னமாதிரியான கள்ள ஐடியாக்களை எமது மாணவர்களுக்கு சொல்லவில்லை.

எனக்கு என்னுடன் படிக்கும் ஒரு வெள்ளைக்காரி சொன்னாள், தான் பாடக்குறிப்புக்களை தனது உள்ளாடையினுள் சொருகி வைத்துவிட்டு பின் சோதனை நடக்கும்போது மலசலகூடத்திற்கு செல்வதாக சென்று அங்கு பாடக் குறிப்பை வெளியே எடுத்து பார்ப்பாள் என்று! வெள்ளைகளில், ஆண்களைவிட பெண்களே சோதனைகளில் அதிகம் சீட் பண்ணுவார்கள் என்று நினைக்கின்றேன்.

யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன.

இதையெல்லாம் விட்டுட்ட்டு படிக்காமலே பாசாகிறதுக்கு எதும் வழி கண்டுபிடிக்கிறத பாருமோய் மாப்பி

  • தொடங்கியவர்

இதற்கு குதிரை ஓடுதல் என்ற ஓர் வழியை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டார்கள். நான் என்ன புதுசா சொல்ல இருக்கு?

இதற்கு குதிரை ஓடுதல் என்ற ஓர் வழியை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டார்கள். நான் என்ன புதுசா சொல்ல இருக்கு?

ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் உந்த வழியை.

ஆனால் குதிரை ஓடுதல் என்பது எப்படி சாத்தியமாகும்?

பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்ததும் வினாத்தாள்கள் தரும் முன்னர் அடையாளப்பத்திரம் காட்டணுமே. :mellow:

குதிரை ஓடுதல் என்றால் என்ன?எப்படி எக்சாம் கோலிற்கு குதிரையை கொண்டு போகலாம் பேபிக்கு விளங்கவில்லை இந்த மெதட் யாரும் விளனபடுத்துங்கோ........ :mellow:

குதிரை ஓடுதல் என்றால் என்ன?எப்படி எக்சாம் கோலிற்கு குதிரையை கொண்டு போகலாம் பேபிக்கு விளங்கவில்லை இந்த மெதட் யாரும் விளனபடுத்துங்கோ........ :mellow:

:lol::lol::D குதிரை எல்லாம் இல்லை

ஒராளுக்கு பதில் இன்னொருவர் பரீட்சை எழுதுதலை "குதிரை ஓடுதல்" என அழைப்பர் :lol:

:mellow::lol::lol: குதிரை எல்லாம் இல்லை

ஒராளுக்கு பதில் இன்னொருவர் பரீட்சை எழுதுதலை "குதிரை ஓடுதல்" என அழைப்பர் :D

ஓ அப்பா ஓராளிற்கு பதிலா இன்னொருவர் எழுதினா அது குதிரைஓடலா அது எப்படி செய்யலாம் பரிட்சையில அடையாள அட்டை பார்த்து தானே உள்ளுகுள்ள விடுவீனம் மொண்டசூரியில அப்படி இருக்கும் போது எப்படி நிலா அக்கா......... :lol:

ஓ அப்பா ஓராளிற்கு பதிலா இன்னொருவர் எழுதினா அது குதிரைஓடலா அது எப்படி செய்யலாம் பரிட்சையில அடையாள அட்டை பார்த்து தானே உள்ளுகுள்ள விடுவீனம் மொண்டசூரியில அப்படி இருக்கும் போது எப்படி நிலா அக்கா......... :mellow:

அதை தான் நானும் கேட்க்கிறேன் எப்படி சாத்தியமாகும் என? ஆனால் முந்தி எல்லாம் உந்த மெதட்டில் தான் சித்தியடைவார்களாம். மாஸ்ரர்மாரே ஸ்ரூடண்ட் க்கு குதிரை ஓடுறவையாம். :lol:

யாராவது அனுபவசாலிகள் தான் சொல்லணும்

அதை தான் நானும் கேட்க்கிறேன் எப்படி சாத்தியமாகும் என? ஆனால் முந்தி எல்லாம் உந்த மெதட்டில் தான் சித்தியடைவார்களாம். மாஸ்ரர்மாரே ஸ்ரூடண்ட் க்கு குதிரை ஓடுறவையாம். :lol:

யாராவது அனுபவசாலிகள் தான் சொல்லணும்

அடபாவீங்களா அப்ப முந்தி ஒருத்தரும் படித்து சித்தி அடையவில்லை இப்படி தானா என்ன கொடுமை சார்........குருவே எனக்கு இந்த மெதட்டை விளங்கபடுத்துங்கோ......... :mellow:

ஜம்மு! உதுக்குத்தான் உங்களைச்' செல்வனிலை" ஆமிக்காம்பில போட்டு அந்த வாங்கு வாங்கினவர்கள்.

:mellow::lol:

பெரியப்பா அடிவாங்கின போது ஒருக்கா கூட வந்து பார்க்கவும் இல்லை காப்பாற்றவும் இல்லை இது நல்லா இல்லை பிறகு நான் தான் ஒரு மாதிரி ஸ்கேப் ஆகி வந்திருக்கிறேன்......... :P :P :lol:

Have you ever cheated in your exam? How do you do it? Ever get cautch?

att00026sp4.jpg

Well, the conventional way of cheating is over! Let's look at the latest way !

1. Type out your notes in the computer:

att00026wc2.jpg

2. Make sure to resize the font size 6:

att00026xu9.jpg

3. Print out the notes with your own printer:

att00026gb9.jpg

Edited by வெண்ணிலா

நிலா அக்கா டைப் பண்ணி கொண்டு போனா பிடிபட்டுடுவோம் எழுதி கொண்டு போனா தான் தப்பலாம் யாரப்பா இது இந்த சின்ன லொஜிக் கூட தெரியாம.............ஜம்மு பேபியிட்ட கேட்டு படிக்க சொல்லி சொல்லுங்கோ.......... :mellow::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.