Jump to content

Recommended Posts

Posted

'சந்திர ஈர்ப்பு விசையை உணரும் சந்திரயான்-3' - நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது

1082057.jpg
 
 

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கிய சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன்மூலம் நிலவுக்கு மிகவும் அருகில் தற்போது சந்திரயான்-3 விண்கலம் உள்ளது. சந்திரயான்-3 பயணத்தில் இது முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-3 தற்போது சந்திர ஈர்ப்பு விசையை உணர்கிறது. நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை நாளை இரவு 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இரவு 7.15 மணியளவில் நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக்கொண்டது சந்திரயான்-3. அடுத்த 20 நாட்கள் சந்திரயான் நிலவை அதன் நீள்வட்ட சுற்றில் சுற்றிய பின் அது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரை இறங்கும்.

 

 

சந்திரயான்-3 விண்கலம்: சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன.

 

 

கடந்த 26 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. அதன்பிறகு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (சாஃப்ட் லேண்டிங்) தரையிறக்கப்படவுள்ளது.

https://www.hindutamil.in/news/india/1082057-chandrayaan-3-successfully-placed-into-lunar-orbit-says-isro.html

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Justin

நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்த

வாலி

முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂

Justin

நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!) முன்கதை சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரனின் படத்தை வெளியிட்ட சந்ராயன் 3

சந்திரனின் படத்தை வெளியிட்ட சந்ராயன் 3

நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் பிரவேசித்துள்ள சந்திராயன் – 3 விண்கலம், படம்பிடித்து அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் அடங்கிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பகிர்ந்துள்ளது.

நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 615 கோடி இந்திய ரூபாய் செலவில் வடிவமைத்த சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி நள்ளிரவு 12.05 அளவில் விண்கலத்தை புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்து விலக்கி, நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மிகவும் சிக்கலான இந்த பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சந்திரயான்-3 விண்கலம், நிலவின் ஈர்ப்பு விசைப்பகுதிக்குள் உந்தி தள்ளப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5.47 அளவில் நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதியில் ஆய்வு கலம் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன் பின்னர் விண்கலத்திலிருந்து ரோவா கலன் வெளியேறி நிலவின் தரையில் பயணித்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆய்வுகளை முன்னெடுத்திராத நிலையில், சிக்கலான 41 நாட்களை கொண்ட பயணத்திற்காக ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம், 22 நாட்களுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை சந்திரனின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

இந்தநிலையில், குறித்த விண்கலம், படம்பிடித்து அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் அடங்கிய முதல் புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.

https://athavannews.com/2023/1343792

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப ரசியா இந்தியாவுக்கு முன் போய் இறங்கப் போகுதாம்.

Posted
11 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப ரசியா இந்தியாவுக்கு முன் போய் இறங்கப் போகுதாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான் -3 விண்கலம்: லேண்டர் தனியாக பிரிந்தது..!

17 AUG, 2023 | 01:57 PM
image
 

சந்திரயான்-3' விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. 

 விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். 

தற்போதைய நிலையில், 'சந்திரயான்-3' 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் தரையிறங்க இருக்கிறது.

https://www.virakesari.lk/article/162567

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலவிற்கு மிக அருகில் சென்றது சந்திரயான் 3

monishaAug 18, 2023 16:12PM
ஷேர் செய்ய : 
chandrayaan 3 get more closer to moon

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவிற்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதுமையை நிகழ்த்த வேண்டும் என்று மாபெரும் கனவோடு கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ.

தொடர்ந்து சந்திரயான் 3 சுற்று வட்டப்பாதையை இஸ்ரோ கண்காணித்து வந்ததோடு பூமியிலிருந்து சுற்றுப்பாதையை அதிகரித்து நிலவை நோக்கிப் பயணிக்க செய்தது, தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையையும் இஸ்ரோ குறைத்துக் கொண்டே வந்தது.

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற சவாலை நோக்கி அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்து வருகிறது இஸ்ரோ.

அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டரை இஸ்ரோ வெற்றிகரமாக பிரித்து எடுத்தது. தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது.

இந்நிலையில் லேண்டரை நிலவிற்கு மேலும் அருகில் கொண்டு செல்வதற்கான பணியை இஸ்ரோ மேற்கொண்டது. அதன்படி ”டீ பூஸ்டிங்” முறையில் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவிலிருந்து 113 கி.மீ அருகிலும் 157 கி.மீ தொலைவிலும் உள்ள சுற்றுப்பாதையில் லேண்டர் நிலவை சுற்றி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான தென் துருவத்தின் புதிய புகைப்படங்களை லேண்டர் பகிர்ந்துள்ளது.

 

 

https://minnambalam.com/india-news/chandrayaan-3-get-more-closer-to-moon/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான் 3: தலையெழுத்தே இந்த '15 நிமிடங்களில்' தான் உள்ளது - விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்?

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்
  • பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆகஸ்ட் 23ஆம் தேதி, மாலை 5:32. அப்போதுதான் இஸ்ரோ விஞ்ஞானிகளை பதைபதைக்க வைக்கும் 15 நிமிடங்கள் தொடங்கவுள்ளன.

அந்தப் பதினைந்து நிமிடங்களில்தான் நிலாவுக்கு மேலே 30 கி.மீ உயரத்தில் இருக்கக்கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை நிலாவில் தரையிறக்குவார்கள்.

கடந்த முறை சந்திரயான் 2 திட்டத்தில் இந்த இடத்தில்தான் தோல்வியடைந்தது. அப்போது நடந்த தவறுகளை பகுப்பாய்வு செய்து, இந்த முறை அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட சந்திரயான் விண்கலத்தை அமைத்துள்ளார்கள்.

இந்த 15 நிமிடங்களில் சந்திரயான் அது எட்டு கட்டங்களாக தரையிறங்கும் செயல்முறையை மேற்கொள்கிறது. அந்த எட்டு கட்டங்கள் என்னென்ன, கடந்த முறை நடந்த தவறு இப்போது நடக்காமல் இருக்க என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பன குறித்து இனி விரிவாகக் காண்போம்.

 
சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வரும். பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வரும்.

தரையிறங்கும் நிகழ்வின் முதல் கட்டம்: வைரத்தை வைரத்தால் அறுக்கும் யுக்தி

விண்வெளியில் நிலாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சந்திரயான் விண்கலம் முதலில் நிலாவைச் சுற்றி வரும். பிறகு நீள்வட்டப் பாதையில் கோழி முட்டையைப் போன்ற வடிவில் சுற்றி வரும்.

அந்த நேரத்தில், நிலவுக்கு நெருக்கமாக இருக்கையில் 30 கி.மீ தொலைவிலும் தூரத்தில் இருக்கும்போது 100 கி.மீ தொலைவிலும் இருக்கும்.

அப்படிச் சுற்றி வரும் நேரத்தில், ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 கி.மீ. என்ற நெருக்கமான தொலைவில் இருக்கும் சூழலில் தான் நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறையை அது மேற்கொள்ள இருக்கிறது.

இந்த நேரத்தில் விண்கலம் தரையிறங்குவதற்குப் பயன்படுத்தும் அதன் நான்கு கால்களும் கீழ்நோக்கி இருக்காமல், பக்கவாட்டில் நோக்கியிருக்கும்.

அதை எப்படி கீழ்நோக்கித் திருப்பி, தரையிறக்குவார்கள்?

 
சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

ஒருபுறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் விண்கலத்திற்கு தள்ளுவிசை கிடைக்கும்.

அதற்குப் பின்னால் இருப்பதும் ராக்கெட் தொழில்நுட்பம்தான். வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, ராக்கெட் உதவியுடன் விண்வெளிக்கு ஏவப்பட்ட சந்திரயான் விண்கலத்தை, அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலாவிலும் தரையிறக்கப் போகிறார்கள்.

இதை ஓர் எளிமையான சான்றோடு கூற முடியும். தோட்டத்தில் நீர் பாய்ச்சும்போது குழாயில் இருந்து தண்ணீர் படுவேகமாக வரும். அப்போது, அதற்கு எதிர்புறத்தில் குழாயைப் பிடித்திருப்பவர் கைகளில் ஒரு தள்ளுவிசை உணரப்படும். அதுதான் ராக்கெட் தத்துவம்.

ஒரு புறத்தில் ராக்கெட்டின் எரிபொருள் எரியும்போது மறுபுறத்தில் தள்ளுவிசை கிடைக்கும். சந்திரயான் விண்கலத்தில் பக்கவாட்டில் தெரியும் கால்களில் சிறு ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை இயக்கினால் அதற்குப் பின்புறத்தில், அதாவது விண்கலத்தின் மேல் பகுதியில் ஒரு தள்ளுவிசை கிடைக்கும்.

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும்.

அப்போது முன்னோக்கிச் செல்லும் விண்கலத்தின் வேகம் குறையும். அப்படி வேகம் குறைந்தால் அது மென்மையாகத் தரையிறங்கும்.

முப்பது கி.மீ தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயானின் வேகம் மணிக்கு 6000 கி.மீ. இந்தத் தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாகக் குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ தூரத்திற்கு வரும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1200 கி.மீ. என்ற அளவுக்கு குறையும்.

இந்த மொத்த நிகழ்வும் நடந்து முடிய 10 நிமிடங்கள் ஆகும். ஆக, தரையிறங்குவதற்கான அந்த 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் முடிந்துவிட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சந்திரயான் ஏழு கட்டங்களை வெற்றிகரமாகத் தாண்டியாக வேண்டும்.

 

இரண்டாவது கட்டம்: நிலாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்த கூகுள் மேப்

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இரண்டாவது கட்டத்தில் எடுப்பார்கள்.

இரண்டாவது கட்டத்தில் 7.4 கி.மீ உயரத்தில் இருந்த விண்கலத்தை படிப்படியாகக் குறைத்து 6.8 கி.மீ உயரத்திற்குக் கொண்டு வருவார்கள்.

இந்தக் கட்டத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கின்றன. அதில் முதலாவதாக பக்கவாட்டில் பார்த்தவாறு இருக்கும் விண்கலத்தின் கால்களை தரையிறங்க வசதியாக கீழ்நோக்கித் திருப்ப வேண்டும். பக்கவாட்டில் இருக்கும் கால்களை சுமார் 50 டிகிரி அளவுக்குத் திருப்புவார்கள்.

இரண்டாவதாக, முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா என்ற முடிவை இந்தச் சூழலில்தான் எடுப்பார்கள்.

நாம் கார் ஓட்டும்போது வழியைத் தெரிந்துகொள்ள கூகுள் மேப்பை பயன்படுத்துவது போலத்தான் இதுவும். விண்கலத்தில் இருக்கும் செயற்கை நுண்ணறிவு கருவி அதற்கான பணிகளைச் செய்யும். அதை எப்படிச் செய்யும்?

மொபைல்களில் முகத்தை அடையாளம் கண்டு அன்லாக் செய்துகொள்வதற்காகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போலவே, விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவியில் ஒரு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் ஏற்கெனவே தரையிறங்கும் பகுதியைப் படம்பிடித்து பதிவேற்றியுள்ளார்கள்.

 
சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கும்.

இந்த இரண்டாவது கட்டத்தில் விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவி அதன் பாதையைப் படம்பிடித்துக்கொண்டே செல்லும். அது எடுக்கும் படங்களை, அதில் பதிவேற்றி வைத்துள்ள படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையைக் கண்டறிந்து செல்லும்.

படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து அந்த செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கும்.

மூன்றாவது கட்டம்: விண்கலத்தின் ‘ராக்கெட் பிரேக்’

தற்போது நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு விண்கலம் இருக்கும் வகையில் அதைக் கீழே இறக்குவதுதான் மூன்றாவது கட்டம்.

பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட விண்கலத்தின் கால்களை நேராக கீழ்நோக்கி இருக்கும் வகையில் திருப்புவதுதான் இந்தக் கட்டத்தில் செய்யப்படும் முதல் விஷயம்.

சைக்கிளில் பிரேக் பிடித்தால் வேகம் குறைவதைப் போல், ராக்கெட்டின் இஞ்சினை முன்புறமாக இயக்கினால் விண்கலத்தின் வேகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும்.

மணிக்கு 1200 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்த விண்கலம், 800 மீட்டர் உயரத்திற்கு வரும்போது, அதன் முன்னோக்கிச் செல்லும் வேகம் பூஜ்ஜியமாகிவிடும்.

 

நான்காவது கட்டம்: அடி மேல் அடி வைத்து நகரும் விக்ரம் லேண்டர்

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும்.

இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் ராக்கெட் விசையைக் குறைத்துவிடுவார்கள். விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேரும்.

அப்படி வந்து சேர்ந்ததும், 22 நொடிகளுக்கு அந்தரத்தில் அப்படியே மிதக்கும். இந்தச் சூழ்நிலையில்தான் விண்கலத்தில் இருக்கும் ‘இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள்’ வேலை செய்யத் தொடங்கும்.

தரையிறங்கும் விண்கலத்தின் நான்கு கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ, குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்துவிடக்கூடும். இத்தகைய இடர்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய வேண்டும்.

அத்தகைய இடத்தைத் தேர்வு செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவி சந்திரயான் 3இன் கணினியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தில்தான் நிலாவின் எந்தப் பகுதியில் தரையிறங்குவது என்பதைத் துல்லியமாக அந்த விண்கலம் முடிவு செய்யும்.

நிலா தனது ஈர்ப்புவிசையால் விண்கலத்தைப் பிடித்து இழுக்கும். அதற்கு சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுக்கும் வகையில் இயங்கும். இதன்மூலம் விண்கலம் கீழேயும் விழாமல் மேலேயும் செல்லாமல் அந்தரத்தில் இருக்கும்.

அப்போது கீழே இருக்கும் பகுதிகளில், பெரிய குழிகள் மட்டுமின்றி சின்னச் சின்ன குழிகள், சிறு சிறு கற்கள் உட்பட அனைத்தையும் அதனால் மிகத் துல்லியமாக ஆராய முடியும். இப்படியே பக்கவாட்டில் நகர்ந்தபடி ஆராய்ந்து துல்லியமாக எந்த இடத்தில் தரையிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

 

ஐந்தாவது கட்டம்: நிலாவின் மேற்பரப்பை நெருங்கும் விண்கலம்

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது.

நிலாவின் மேற்பரப்பில் இருந்து 150 மீட்டரில் இருந்த விக்ரம் தரையிறங்கி கலன், 60 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்குவதுதான் ஐந்தாவது கட்டம்.

இப்போது எந்த இடத்தில் தரையிறங்க வேண்டுமோ அந்த இடத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நிலையில், கீழ்நோக்கி இறங்கக்கூடிய ராக்கெட்டின் விசையைக் கொஞ்சம் குறைத்தால் என்ன நடக்கும்?

நிலாவினுடைய ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, மெல்ல மெல்ல காற்றில் மிதந்து விழுகும் இறகைப் போல விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும்.

இந்த முறை விண்கலத்தில் லேசர் டாப்லர் வெலாசிமீட்டர் என்ற புதிய கருவியை இஸ்ரோ இணைத்துள்ளது. இந்தக் கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பும்.

அந்த லேசர் கற்றை திரும்பி மேல்நோக்கி வரும். அதை உணர்ந்து, விண்கலம் எவ்வளவு வேகத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதை கணத்திற்கு கணம் கணக்கிடும். அதைப் பொருத்து, கூடுதல் வேகம் இல்லாமல் தேவைப்படும் வேகத்தில் தரையிறங்கும் வேலையை அந்தக் கணினி செய்யும். அந்த அளவுக்கு ராக்கெட்டை நுணுக்கமாக இயக்கும் வேலையை செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி செய்யும்.

 

ஆறாவது கட்டம்: விண்கலத்தை கீழே விழாமல் தடுக்கும் எளிய நுட்பம்

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்க இஸ்ரோ ஒரு புதுமையான நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.

அதன்பிறகு அறுபது மீட்டர் உயரத்தில் 10 மீட்டர் உயரத்திற்கு விண்கலத்தைக் கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.

இந்தச் சூழலில் பயன்படுவதற்காக விண்கலத்தில் மற்றுமொரு சிறப்பம்சத்தை விஞ்ஞானிகள் வைத்துள்ளார்கள். விண்கலத்தின் கீழ்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அது தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும். அது எதற்காக?

இதை ஒரு எளிய சான்றுடன் விளக்கலாம். நமக்கு எதிரே ஒரு பேருந்து வந்துகொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது தொலைவில் இருக்கும்போது அதன் உருவம் மிகவும் சிறியதாகத் தெரிகிறது. ஆனால், பேருந்து நம்மை நெருங்க நெருங்க, அந்த உருவம் பெரிதாகிக் கொண்டே வரும் அல்லவா!

பேருந்தின் உருவம் எவ்வளவு வேகமாக நம் கண்களுக்குப் பெரிதாகப் புலப்படுகிறது என்பதை வைத்து பேருந்தின் வேகத்தைக் கணக்கிட முடியும்.

அதேபோல, விண்கலம் கீழ்நோக்கிச் செல்லும்போது அது எடுக்கும் புகைப்படங்களில் நிலவின் தரைப்பரப்பு எவ்வளவு வேகமாகப் பெரிதாகிறது என்பதை அடிப்படையாக வைத்து எவ்வளவு வேகத்தில் விண்கலம் கீழ்நோக்கி வருகிறது என்பதைக் கணக்கிடலாம். ஒன்றுக்கு இரண்டான பாதுகாப்பு என்பதே இதன் நோக்கம்.

அதிக வேகத்தில் கீழே இறங்கினால் மென்மையாகத் தரையிறங்காமல் விழுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதைத் தவிர்க்கவே இத்தகைய புதுமையான நுட்பங்கள்.

 

ஏழாவது கட்டம்: விண்கலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் திக்... திக்... நிமிடங்கள்

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும்.

இப்போது நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் விண்கலம் இருக்கிறது. இந்த நேரத்தில் ராக்கெட் அனைத்தையும் ஆஃப் செய்துவிட்டு விண்கலத்தை நிலத்தில் கல் விழுவதைப் போல் தொப்பென விழ வைப்பார்கள். இதுதான் ஏழாவது கட்டம்.

தரையிறங்கும் கடைசி நொடி வரை ஏன் ராக்கெட்டுகளை இயக்கவில்லை?

ஏனெனில், நிலாவின் தரைப்பரப்பு முழுக்க மிகவும் மெல்லிய மண் துகள்கள் நிறைந்திருக்கும். தரை வரைக்கும் ராக்கெட்டை இயக்கிக்கொண்டே இறங்கினால், அந்த மண் துகள்கள் புழுதியாக மேலெழும்பும்.

அப்படி எழும்பும் தூசுகள் விண்கலத்தின் மேற்பரப்பில் உள்ள சூரியத் தகடுகளில் படிந்து சூரிய ஒளியைத் தடுத்து மின்சாரமே உற்பத்தி செய்ய முடியாத அபாயம் ஏற்பட்டுவிடலாம். அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த யுக்தி.

அப்படி விழும்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும்கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையிறங்கி கலனின் கால்களை அமைத்துள்ளார்கள்.

முதல் கட்டம் முடிந்த பிறகு, இரண்டாவது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்த விண்கலம் ஏழாவது கட்டத்தில் வெறும் பத்து மீட்டர் உயரத்திற்கு வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆகும். இந்த நேரத்தைத்தான் விண்கலத்தின் “திக்... திக்... நிமிடங்களாக” விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 
சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கும் 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?
 
படக்குறிப்பு,

ஊர்திக்கலன் வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனான தரையிறங்கி கலனை புகைப்படம் எடுக்கும். தாய்க்கலன் ஊர்திக்கலனை புகைப்படம் எடுக்கும்.

இந்த விண்கலத்திற்கு வாழ்வா சாவா என்று அதன் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் நிமிடங்கள் அவை. இந்த நேரத்தில் விண்கலம் எப்படி இயங்க வேண்டும், பக்கவாட்டில் நகர வேண்டுமா, கீழே எவ்வளவு வேகத்தில் இறங்க வேண்டும் என அனைத்தையும் விண்கலத்தின் உள்ளே இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு கணினிதான் தீர்மானிக்கும்.

அந்த நேரத்தில் விண்கலத்தின் தலையெழுத்து அந்த செயற்கை நுண்ணறிவு கையில்தான்.

எட்டாவது கட்டம்: கண்கொள்ளா காட்சியை காணக் காத்திருக்கும் உலகம்

ஒருவழியாக தரையிறங்கி கலன் கீழே இறங்கிவிட்டது. ஆனாலும் விழுந்த வேகத்தில் தூசுகள் மேலே எழும்பியிருக்கும். அவை அடங்கும்வரை ஏதும் செய்யாமல் விண்கலம் அப்படியே இருக்கும்.

அனைத்தும் அடங்கிய பிறகு, கங்காரு தனது வயிற்றுக்குள் குட்டியை வைத்திருப்பது போலவே, வயிற்றுக்குள் தரையிறங்கி கலன் வைத்திருக்கும் ஊதிக்கலனை வெளியே கொண்டு வரும்.

ஊர்திக்கலன் வெளியே வந்ததும் அதன் தாய்க்கலனான தரையிறங்கி கலனை புகைப்படம் எடுக்கும். தாய்க்கலன் ஊர்திக்கலனை புகைப்படம் எடுக்கும். அந்த புகைப்படங்களின் கண்கொள்ளாக் காட்சியைக் காண இந்தியா மட்டுமின்றி உலகமே காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c90jpn908zxo

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான்-3: நிலாவை முத்தமிடும் இந்தியா - நேரலை

சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

23 ஆகஸ்ட் 2023, 07:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்குகிறது.

இன்று மாலை 5.44 மணிக்கு விக்ரம் லேண்டரை தரையிறக்க ஆயத்தமாவோம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைபரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்.

"நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார். தரையிறங்கிக் கலன் திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு மாலை 5.44 மணிக்கு சென்றடையும். தானியங்கி தரையிறங்கி செயல்பாட்டு கட்டமைப்பிடம் இருந்து கட்டளையைப் பெற்றவுடன் தரையிறங்கிக் கலன், கீழே இறங்குவதற்காக அதிலுள்ள என்ஜின்களை இயங்கச் செய்யும்.

நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான குழு, கட்டளைகள் சரியான வரிசையில் பெறப்படுகிறதா என்பதை உறுதி செய்யும்." இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

 

இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் இந்த நிகழ்வு குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இது மிதுவும் முக்கியமான நாள். மற்றவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்முறையின் மூலமாகவும், துல்லியமாகவும் சந்திரயான் 3-ஐ அனுப்ப முடிந்திருப்பது இந்தியாவுக்குமட்டுமல்ல பூமியில் உள்ள அனைவருக்கும் ஒரு அற்புதமாக விசயம்.

அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். நிலவின் தென் துருவத்தில் யாராலும் இறங்க முடியவில்லை. அப்படியிருக்கும் இது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்றார்.

ஒடிசாவை சேர்ந்த பிரபல மணற் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், சந்திரயானுக்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வடித்துள்ளார். சந்திரயான் விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட், நிலவில் இந்திய கொடி பறப்பது போன்றவற்றுடன் ஜெய் ஹோ என்ற வாசகத்துடன் இந்த சிற்பத்தை அவர் வடித்துள்ளார்.

 
சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மன் இந்தியாவின் சந்திரயான் திட்டம் குறித்து பிபிசியின் மோனிகா மில்லருக்கு பேட்டியளித்தபோது, இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார்.

மேலும், “ நீங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பப் போகிறீர்கள் என்றால், நிச்சயமாக பனி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் நீர் குடிக்க விரும்புவார்கள். அவர்கள் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஆக்ஸிஜனை சுவாசிக்க விரும்புவார்கள். அதிலிருந்து ராக்கெட்க்கு தேவையான எரிபொருளையும் தயாரிக்கலாம்.

எனவே பனி மிகவும் அவசியம். ஆனால், நிலவின் தென் துருவத்தில் உள்ள அந்த பள்ளம் உண்மையில் உயர்ந்த விளிம்பைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விளிம்பின் ஒருசில பகுதிகளில் நிலையான சூரிய ஒளி இருக்கும். ஒருசில பகுதிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சூரிய ஒளி இருக்கும். எனவே, நீங்கள் சோலார் மின்சாரத்தை உருவாக்கும் இயந்திரத்தை அங்கு வைத்தால், தொடர்ந்து மின்சாரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மனிதர்கள் இல்லாமல் நிலவில் தரையிறங்குவது, மனிதர்களுடன் தரையிறங்குவதை விட கடினமானது என்றும் தெரிவித்தார்.

சந்திரயான் 3

பட மூலாதாரம்,SUDARSAN PATTNAIK

 
சந்திரயான் - 3

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழுவினர் இல்லாமல் செல்வதால், உங்கள் கருவிகள் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். இரண்டாவது முயற்சியில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு மிகக் குறைந்த எரிபொருளே இருக்கும். தென் துருவத்தில் மலைகளும் பள்ளங்களும் அதிகமாக இருக்கும். எனவே, நிச்சயமாக அது சவாலானது.

யாராவது மனிதர்கள் செல்லும்போது அந்த நேரத்தில் வழிநடத்த முடியும். காலதாமதம் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்களின் இயந்திரங்கள் வேகமாக வேலை செய்ய வேண்டும். தூசிகளும் பிரச்னையாக விளங்கலாம். இதற்கு முன்பு சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் இதனை சமாளித்துள்ளன. ஒருவேளை இந்தியா இதனை சமாளித்தால் பெரிய விசயம். ” என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி ஆய்வில் இந்தியாவில் நிலா குறித்த திட்டம் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்றும் ஹெலன் ஷர்மன் கூறினார்.

சந்திரயான் 3 திட்டம் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு எவ்வளவு?

இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் ரூ.386 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்துக்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது. சந்திரயான் 3 திட்டத்துக்கான செலவு ரூ.615 கோடி மட்டுமே?

சந்திரயான் 3 விண்கலம் எப்போது விண்ணில் ஏவப்பட்டது?

ஜூலை 6: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது

ஜூலை 11: 24 மணி நேர ஏவுதல் ஒத்திகை வெற்றிகரமாக செய்யப்பட்டது

ஜூலை 13: சந்திரயான் 3 விண்கலத்தின் கவுண்ட் டவுன் பிற்பகல் 1.05-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியது.

ஜூலை 14: சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு எல்விஎம்3 எம்4 ராக்கெட் மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

 
சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் எத்தனை முறை மாற்றப்பட்டது?

சந்திரயான் விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் (Orbit raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. அவை;

ஜூலை 15: சந்திரயான் 3 விண்கலத்தின் முதல் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 41762 கி.மீ x 173 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஜூலை 17: 2வது முறையாக விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 41603 கி.மீ x 226 கி.மீ தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஜூலை18: மூன்றாவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது

ஜூலை 20: நான்காவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டது

ஜுலை 25: 5வதாக மற்றும் இறுதியாக சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது.

சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியது எப்போது?

ஆகஸ்ட் 1: புவியின் சுற்றூவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

ஆகஸ்ட் 5: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமான நிலவின் நீள்வட்ட பாதைக்குள் செலுத்தப்பட்டது. அப்போது, 164 கி.மீ x 18074 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது.

ஆகஸ்ட் 6: நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தின் பாதை உயரம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 170 கி.மீ x 4313 கி.மீ தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 இருந்தது.

ஆகஸ்ட் 9: 174 கி.மீ x 1437 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 14: 151 கி.மீ x179 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16: நிலவைச் சுற்றி 153 கி.மீ x163 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றும்படி பாதை சுற்றுவட்டம் குறைக்கப்பட்டது.

 
சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

விக்ரம் லேண்டர் பிரிந்தது எப்போது?

ஆகஸ்ட் 17: சந்திரயான் 3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.

ஆகஸ்ட் 19: 113 கிமீ x 157 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது

ஆகஸ்ட் 20: 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது

ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கவுள்ளது

விக்ரம் லேண்டர் நிலவில் என்ன பணிகளை செய்யும்?

நிலாவின் தென் துருவப்பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்தப் பகுதியில்தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யப் போகிறது.

நிலாவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, நிலாவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டதா அல்லது அந்த வெப்பத்தில் உடையக்கூடிய பொருட்களாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின்னர், அதன் உள்ளே இருக்கும் ரோவர் வெளியே வரும். இந்த ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

https://www.bbc.com/tamil/articles/cgxg1dw70pyo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான்-3: நிலாவைத் தொட்டது விக்ரம் லேண்டர் - அடுத்து என்ன செய்யும்?

சந்திரயான்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

விக்ரம் லேண்டர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோதி, “இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல். இந்த தருணம் மறக்க முடியாதது. இந்த தருணம் இதற்கு முன் நடந்திராதது. துயரக் கடலை கடக்கும் தருணம் இது."

"140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த தருணம் உருவாகியுள்ளது. இந்த தருணத்துக்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளது. 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும் திறமையாலும், உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

 
சந்திரயான்-3

பட மூலாதாரம்,ISRO

விக்ரம் லேண்டர் பத்திரமாகத் தரையைத் தொட்டதும் விஞ்ஞானிகள் கட்டிப் பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்கள்.

சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் "எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்" என்று கூறினார்.

விழுப்புரத்தில் விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் தந்தையார் பழனிவேல் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் காட்சியை ஆர்வமுடன் அவர் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தார்

விக்ரம் லேண்டர்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

விக்ரம் லேண்டர்

இனி என்ன நடக்கும்?

நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதலில் ஒன்றுமே செய்யாமல் ஓய்வெடுக்கும்.

10 மீட்டர் உயரத்தில் இருந்து தொப்பென கல் விழுவதைப் போல் தரைப்பரப்பில் விழுந்திருப்பதால் எழும் புழுதிகள் அடங்கும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதுவும் செய்யாமல் அமைதியாக ஓய்வெடுக்கும்.

அந்தப் புழுதி முழுவதும் அடங்கிய பிறகு, மென்மையாக அந்த தரையிறங்கி கலன் தனது வயிற்றுக்குள் வைத்து ஒரு குழந்தையைப் போல் பாதுகாத்து நிலா வரைக்கும் கொண்டு வந்த ரோவர் எனப்படும் ஊர்திக்கலனை வெளியே அனுப்பும்.

லேண்டரில் ஒரு சாய்வுக்கதவு திறந்து, அதன் வழியே ஊர்திக்கலன் சறுக்கிக்கொண்டு வெளியே வரும்.

இங்கே இந்த தரையிறங்கிக் கலன், ஊர்திக்கலன் இரண்டையும் தாய் கலன், சேய் கலன் என விவரிக்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன்.

“விக்ரம் தரையிறங்கிக் கலன் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சில மணிநேரங்கள் கழித்து அதன் சேய் கலமான ரோவர் வெளியே வரும். இதுவும் வெற்றிகரமாக நடந்து முடியும்போதுதான் இந்த முயற்சியில் இஸ்ரோ முழு வெற்றி பெற்றதாக அர்த்தம்.”

https://www.bbc.com/tamil/articles/c51j7k170kyo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான்-3: தரையிறங்கும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தை விக்ரம் லேண்டர் எப்படி சரி செய்தது?

சந்திரயான்-3 தரையிறங்கும்போது ஏற்பட்ட தடுமாற்றம் – விக்ரம் லேண்டர் எப்படி சரிசெய்தது?
 
படக்குறிப்பு,

தரையிறங்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது.

42 நிமிடங்களுக்கு முன்னர்

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிவிட்டது. மொத்த உலகின் கண்களும் இஸ்ரோ மீது பதிந்திருந்த நேரத்தில் இந்த வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருக்கிறது.

ஆனால், தரையிறங்கிக் கொண்டிருந்த அந்த 15 நிமிடங்களில் ஒரு 30 விநாடிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திரயான்-3 நடுங்க வைத்துவிட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் மனதில் திட்டத்தின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கிய அந்த 30 நிமிடங்களில் என்ன நடந்தது?

விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது என்ன நடந்தது?

இப்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது 800 மீட்டர் என்ற உயரத்தை எட்டும் வரை விக்ரம் தரையிறங்கி கலன் எதிர்பார்த்த அனைத்து அளவுகளுக்கு உள்ளே தான் இருந்துள்ளது என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

 

அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருந்ததோடு, பெரிய மாற்றங்கள் இருக்கவில்லை என்று கூறும் அவர், ஆனால் 150 மீட்டர் உயரத்திற்குச் சென்றபோதுதான் அது தரையிறங்குவதாக இருந்த இடத்தின் தரைப்பகுதியில் இடர் இருப்பதை உணர்ந்துள்ளது என்று விளக்கினார்.

 
சந்திரயான்-3 தரையிறங்கும்போது ஏற்பட்ட தடுமாற்றம் – விக்ரம் லேண்டர் எப்படி சரிசெய்தது?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

தரையிறங்கும் செயல்முறை தொடங்கிய “18வது நிமிடத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து பிறகு அதைச் சரிசெய்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.”

அதை உடனடியாக உணர்ந்த விக்ரம் லேண்டர், அந்த நேரத்தில் மாற்று இடத்தில் தரையிறங்குவதற்காக பக்கவாட்டில் நகர்ந்தது.

இது சாதாரணமாக நேரலையில் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இது மிகவும் கூர்மையான, நுட்பமான இடர்.

இறுதி வரை கச்சிதமாக வந்த விக்ரம் தரையிறங்கி கலன், தடம் பதிக்கப் போகும் நேரத்தில் அந்த இடத்தில் இடர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தத் தருணம் ஒரு படபடப்பை ஏற்படுத்திவிட்டது,” என்கிறார் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

தரையிறங்கும் செயல்முறை தொடங்கிய “18வது நிமிடத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து பிறகு அதைச் சரிசெய்து விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது.”

இந்த மாற்றங்கள் காரணமாக திட்டமிட்ட கால அளவில் 30 விநாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டது. இந்த மாற்றத்தை பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ தொலைத்தொடர்பு மையத்தில் இருந்து கண்ட விஞ்ஞானிகளின் முகத்தில் படபடப்பு தென்பட்டது என்று கூறும் த.வி.வெங்கடேஸ்வரன், இறுதியில் அதைச் சரிசெய்து லேண்டர் தரையிறங்கியதும் நிம்மதியடைந்தனர் என்கிறார்.

பிறகு தரையிறங்கும் வேகத்தை எதிர்பார்த்த வகையில் சரிசெய்து கச்சிதமான வேகத்தில் தரையைத் தொட்டது. அதேபோல், “தரையிறங்குவதற்கான சென்சார் கருவிகள், வழிகாட்டும் கருவிகள், வேகத்தை அளக்கும் கருவிகள், சேதங்களைக் கண்டறியும் கருவிகள் என அனைத்தும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது,” என்று தெரிவித்தார்.

 

ரோவர் எப்போது வெளியே வரும்?

ரோவர் எப்போது வெளியே வரும்?
 
படக்குறிப்பு,

“அந்தக் கதவு திறந்து சுமார் இரண்டு மணிநேரம் கழித்து ஊர்திக்கலனில் இருக்கும் சூரிய மின் தகடுகளை மேலே நிமிர்த்துவார்கள்."

இவற்றைவிட இன்னும் விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொண்டு, விண்கலத்தின் பாகங்களில் என்ன மாதிரியான தாக்கம் தரையிறங்கியதன் மூலம் ஏற்பட்டுள்ளது, அவற்றின் நிலை என்ன என்பன போன்ற தகவல்களைக் கண்டறிவதற்கு உதவும் தரவுகள் இனிமேல்தான் கிடைக்கும்.

தரையிறங்கும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டாலும், ஊர்திக்கலன் அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வரவேண்டும். இந்தச் செயல்முறை இன்று இரவு 8:15 மணிக்குத் தொடங்கும்.

அந்தச் செயல்முறை குறித்து விளக்கிய விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், “அந்தக் கதவு திறந்து இரண்டு மணிநேரம் கழித்து ஊர்திக்கலனில் இருக்கும் சூரிய மின் தகடுகளை மேலே நிமிர்த்துவார்கள்.

அதன்பிறகுதான் அந்த ஊர்திக்கலன் வெளியே வரும். சாய்வுக் கதவு திறந்தவுடன் ஊர்திக்கலன் வெளியே வந்துவிடாது. சாய்வுக்கதவின் சரிவு எந்த அளவுக்கு உள்ளது, அது பாதுகாப்பானதா என்பன போன்ற தகவல்களை ஆய்வு செய்து, உறுதி செய்த பிறகே சாய்வுக்கதவு வழியாகச் சரிந்து கீழே இறங்கும்,” என்று கூறினார்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கி சுமார் நான்கு மணிநேரங்கள் கழித்து இந்தச் செயல்முறை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊர்திக்கலன் வெளியே வந்து சுமார் ஒரு மணிநேரம் சூரிய ஒளியில் சார்ஜ் ஆன பிறகு, மொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தை எடுக்கும். தாய்க்கலன் எடுக்கும் ஊர்திக்கலனின் புகைப்படம் மற்றும் சேய்க்கலமான ஊர்திக்கலன் அதன் தாய்க்கலமான ஊர்திக்கலனை எடுக்கும் புகைப்படம் இரண்டும்தான் இந்தத் திட்டத்தின் வெற்றியை 100 சதவீதம் உறுதி செய்யும்.

ஆனால், இதுவரைக்கும் 95 சதவீத வெற்றிப்பாதையைக் கடந்துவிட்டதாகவும், இதில்தான் மிகவும் சவாலான கட்டமே இருந்தது என்றும் கூறுகிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர்.எஸ்.பாண்டியன்.

ஆகவே, இதற்கு மேல் ரோவர் வெளியே வருவது மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் ஆகியவற்றில் பெரும்பாலும் எந்தச் சிக்கலும் வர வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார் எஸ்.பாண்டியன்.

 

இஸ்ரோவுக்கு முக்கியமான மைல்கல்

இஸ்ரோவுக்கு முக்கியமான மைல்கல்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான்-1 ஏவப்பட்டபோது இஸ்ரோ விஞ்ஞானிகளின் லட்சியமாக இருந்த கனவுத் திட்டம் 15 ஆண்டுகள் கழித்து இன்று நிறைவேறியுள்ளது.

இஸ்ரோவுக்கு இதுவொரு முக்கியமான மைல்கல் என்றே சொல்லலாம். ஏனெனில், நிலாவில் மென்மையாகத் தரையிறங்கித் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமை மட்டுமில்லை, தென் துருவப்பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் கூடவே செய்துள்ளது.

நிலாவின் மேற்பரப்பில் இருந்து 31.5 டிகிரி என்ற தொலைவில் நீள்வட்டப்பாதையில் வந்த விக்ரம் தரையிறங்கி கலன், அதற்குப் பிறகு வந்த அடுத்த 15 நிமிடங்களில் மிகக் கச்சிதமாக அதன் பணியைச் செய்து முடித்தது.

இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் அவர்களிடம் பேசுவது போன்ற ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது. “சந்திரயான்-3: நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். நீங்களும் உங்கள் இலக்கை அடைந்துவிட்டீர்கள்,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் இஸ்ரோ அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது. அது திட்டமிடப்பட்ட போது இஸ்ரோவுக்கு இருந்த கனவு, அதன் சொந்த முயற்சியில் நிலவை முத்தமிட வேண்டும் என்பது. அந்தக் கனவு 15 ஆண்டுகள் கழித்து இன்று நனவாகியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ce7w5907530o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரக்ஞான் ரோவர்: வெறும் 26 கிலோ எடையுள்ள இஸ்ரோவின் குழந்தை நிலவில் என்ன சாதிக்கும்?

சந்திரயான்-3: வெறும் 26 கிலோ எடை, 6 கால்கள் - இந்த ரோவர் நிலாவில் என்னவெல்லாம் செய்யும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

சந்திரயான்-3 விண்கலத்தின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடையுள்ள இந்தச் சிறிய ரோவர்தான் முக்கியமான ஆய்வுகளை நிலாவில் செய்யப் போகிறது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க. சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 23 ஆகஸ்ட் 2023, 19:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிவிட்டது. தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் வெளியேறி பணிகளைத் தொடங்கி உள்ளது. நிலவில் என்ன செய்யப் போகிறது?

அதுகுறித்த தகவல்களை இஸ்ரோ அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது. சந்திரனின் ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்களுக்குச் சமம். அதாவது அங்கு 14 நாட்களுக்குப் பகல் மற்றும் 14 நாட்களுக்கு இரவு நிலவும்.

இதில் 14 நாட்களுக்கு பகல் நீடிக்கும் காலகட்டத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இந்த இரண்டு வார காலகட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுகளை அது நிலவில் மேற்கொள்ளும்.

அங்கு விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வரும் பிரக்ஞான் ரோவர் மேற்கொள்ளப் போகும் ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால நிலவு மற்றும் விண்வெளித் திட்டங்களில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகிக்கும்.

 

விக்ரம் லேண்டர் சேகரிக்கும் தகவல்களை என்ன செய்யும்?

விக்ரம் லேண்டர் சேகரிக்கும் தகவல்களை என்ன செய்யும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

விக்ரம் லேண்டரில் உள்ள சாய்வுக்கதவு திறக்கும்போது, ரோவர் வெளியே வந்து நிலவின் தரையைத் தொடும்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கியதால் எழும்பிய புழுதி அடங்கிய பிறகு நிதானமாக வெளியே வந்த பிரக்ஞான் ரோவர், நிலா குறித்து அனுப்பும் தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள்.

அந்தத் தரவுகள் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்படும். மின்காந்த அலைகளாக மாற்றப்படும் அந்தத் தரவுகளை ஒருவேளை லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பும் முயற்சி தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது?

அதற்கும் இஸ்ரோ ஒரு மாற்றுத் திட்டத்தை வைத்துள்ளது. இந்த இடத்தில்தான் சந்திரயான்-2இன் ஆர்பிட்டர் உள்ளே வருகிறது.

அந்த ஆர்பிட்டர் தரையிறங்கி கலனுடன் தொடர்பில் இருக்கும். விக்ரம் தரையிறங்கி கலன் ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களையும் அது மேற்கொள்ளும் ஆய்வுகளின் தரவுகளையும் மொத்தமாக பூமிக்கு அனுப்பும்.

அதேவேளையில், அந்தத் தரவுகளை ஆர்பிட்டருக்கும் அனுப்பி வைக்கும். பிறகு, அந்தத் தரவுகள் ஆர்பிட்டர் மூலம் பூமிக்கு மீண்டும் அனுப்பப்படும்.

இரண்டில் ஏதாவது ஒரு திட்டத்தில் பிரச்னை ஏற்பட்டாலும் தரவுகள் தங்கள் கைக்குக் கிடைத்துவிட வேண்டும் என்பதற்காக இத்தகைய யுக்தியை இஸ்ரோ பயன்படுத்துகிறது.

 

ரோவர்: 26 கிலோ மட்டுமே எடைகொண்ட இந்தக் கலன் என்ன செய்யும்?

ரோவர்: 26 கிலோ மட்டுமே எடைகொண்ட இந்தக் கலன் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும்.

ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.

நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்?

நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும்.

மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது.

 
சந்திரயான்-3 செய்யும் ஆய்வுகள் நிலாவை விண்வெளிப் பயணத்திற்கான தளமாக மாற்றவே உதவுமா?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவின் தரைப்பரப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது இந்த பிரக்ஞான் ரோவர்தான்.

நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும்.

ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன் மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும்.

அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும்.

அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும்.

இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம்.

சந்திரயான்-3இன் ஆய்வுகள் மனிதன் விண்வெளிக்குச் செல்ல உதவுமா?

சந்திரயான்-3இன் ஆய்வுகள் மனிதன் விண்வெளிக்குச் செல்ல உதவுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்த ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் ஒரு தளம் அமைக்க முடிந்தால், மனிதர்களின் விண்வெளிப் பயணங்கள் எளிமையாகிவிடும்.

செவ்வாய் கிரகத்திற்குப் பயணிக்கும் ஒரு திட்டம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். பூமியில் இருந்தே அந்தப் பயணத்திற்குத் தேவையான எரிபொருள்களையும் நாம் எடுத்துச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஒருவேளை இந்த ஆய்வுகளின் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் ஒரு தளம் அமைக்க முடிந்தால், நிலவுக்குச் செல்வதற்குத் தேவையான எரிபொருளை மட்டும் நிரப்பிக்கொண்டு பூமியில் இருந்து கிளம்பினால் போதுமானது.

நிலவை அடைந்த பிறகு, அங்குள்ள தளத்தில் அங்கேயே சேகரிக்கப்படும் ஹைட்ரஜன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை பயன்படுத்தி செவ்வாய் கோளுக்கான பயணத்தை மனிதர்கள் மேற்கொள்ள முடியும். இத்தகைய முயற்சிகள் உடனடியாக சாத்தியப்படாது என்றாலும், அவற்றுக்கான தொடக்கமாக இஸ்ரோவின் இந்த ஆய்வு இருக்கக்கூடும் என்பதே விஞ்ஞானிகளின் கூற்று.

சந்திரயான்-3 விண்கலனின் மொத்த எடையில் வெறும் 26 கிலோ மட்டுமே எடைகொண்ட ஊர்திக்கலனில் இருக்கும் எல்.ஐ.பி.எஸ். (LIBS), ஏ.பி.எக்ஸ்.எஸ் (APXS) என்ற இரண்டு கருவிகள்தான் இந்த ஆய்வுகள் அனைத்தையும் மேற்கொள்ளப் போகின்றன.

இந்த ஆய்வுகள் எதிர்காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்குக்கூட உதவலாம் என்று கூறுகிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர் எஸ்.பாண்டியன்.

நிலாவின் தரைப்பரப்பில் இத்தகைய குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொள்ளப் போவது இந்த பிரக்ஞான் ரோவர்தான்.

இதற்கிடையே, பிரக்ஞான் ரோவரில் உள்ள சக்கரங்களும் ஒரு முக்கிய வேலையைச் செய்யும்.

இப்படியாக பிரக்ஞான் ரோவர் முன்னோக்கி நகர்ந்துகொண்டே ஆய்வுகளைச் செய்யும்போது, அதன் ஆறு சக்கரங்களும் நிலாவின் தரைப்பரப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவை நிலவின் மேற்பரப்பில் பதிய வைக்கும்.

 
இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3
 
படக்குறிப்பு,

அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இஸ்ரோவை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3

இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான்.

ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது.

அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும்.

உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது.

அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது.

ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

https://www.bbc.com/tamil/articles/cw481197yleo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் வெற்றியின் ரகசியம் என்ன?

வீரமுத்துவேல்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

சந்திரயான்- 3 விண்ணில் ஏவப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல், இத்திட்டத்தில் பணியாற்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நான் ஒரு சாதாரண மனிதன். என்னால் இந்த அளவுக்கு வர முடியும் என்றால், எல்லோராலும் வர முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கிறது. அதனை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது."

"என்னைப் பொறுத்தவைரக்கும், சுய ஒழுக்கம், 100% ஈடுபாடு, எதிர்பார்ப்புகளில்லா கடின உழைப்பு, நம்மிடம் இருக்கின்ற தனித்தன்மை நமக்கு நிச்சயம் வெற்றியைப் பெற்றுத்தரும், கடின உழைப்பு எப்போதும் வீண்போகாது,” இப்படித்தான் தனது வெற்றியின் ரகசியத்தை பற்றி விவரிக்கறார் சந்திரயான் 3-யின் திட்ட இயக்குநர் வீர முத்துவேல்.

சந்திரயான்- 3 விண்ணில் ஏவப்பட்டு, நேற்று (ஆகஸ்ட் 23) வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல், இத்திட்டத்தில் பணியாற்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் சந்திரயான்-3 திட்டத்திற்கு பொறுப்பேற்ற பிறகு வெளியிட்டிருந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது. அதில், தன்னால் சாதிக்க முடியும் என்றால், அனைவராலும் முடியும் என ஊக்கமளித்துள்ளார்.

 

"அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன்"

வீரமுத்துவேல்

பட மூலாதாரம்,SOUTHERN RAILWAYS/ TWITTER

 
படக்குறிப்பு,

வீரமுத்துவேல் சராசரி மாணவராகத் தான் இருந்தார் எனக் கூறுகிறார் வீர முத்துவேல் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜே. அமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன்

விழுப்புரத்தில் பிறந்த வீர முத்துவேல், 10 ஆம் வகுப்பு வரை ரயில்வே பள்ளியில் படித்துவிட்டு, தனியார் கல்லூரியில் டிப்ளமோ சேர்ந்துள்ளார்.

“பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் யாருக்கும் கல்விப்பின்புலம் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து இயந்திரவியலில் டிப்ளமோ படித்தேன். அப்போதுதான் பொறியியல் மீது ஒரு ஆர்வம் வந்தது. அதனால், என்னால் 90% மதிப்பெண் எடுக்க முடிந்தது,” என்றார்.

தன்னுடைய கல்லூரிக் கல்வி குறித்து பகிர்ந்துகொண்ட அவர், அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்காக அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

அனைத்து செமஸ்டர்களிலும்(Semester) முதல் அல்லது இரண்டாம் இடம் பிடிப்பேன். அது வருவதற்காக அனைத்து நேரங்களிலும் படித்துக்கொண்டிருக்கமாட்டேன். படிக்கும்போது 100% கவனம் செலுத்தி, புரிந்து படிக்க வேண்டும் என நினைப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்றுக்கொடுத்தது,” எனக்கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் வீர முத்துவேல் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஜே. அமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரனிடம் பிபிசி பேசியது. அப்போது அவர், வீரமுத்துவேல் சராசரி மாணவராகத் தான் இருந்தார் எனக் கூறினார்.

 

வீரமுத்துவேல் கல்வி ஆவணங்கள் சொல்வது என்ன ?

வீரமுத்துவேல் கல்வி ஆவணங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அவர் சராசரியாக ஒரு 70% முதல் 80% எடுக்கும் மாணவராகத்தான் இருந்துள்ளார்.

அவர் சுமார் 25 வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரியில் படித்துள்ளார். அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் யாரும் இங்கு இல்லாததால், அவரது கல்வி ஆவணங்களை எடுத்துப்பார்த்தோம். அவர் சராசரியாக ஒரு 70% முதல் 80% எடுக்கும் மாணவராகத்தான் இருந்துள்ளார். ஆனால், அவர் அந்த காலக்கட்டத்திலேயே கல்லூரி செய்முறைத் திட்டங்களை (College Project) அவரே செய்துள்ளார்.” என பகிர்ந்தார்.

வீர முத்துவேல் குறித்து மேலும் பகிர்ந்துகொண்ட அமோஸ், “அவர் படிக்கும் காலத்தில், தற்காலத்திற்கு தேவையான அளவு மட்டும் கல்வியில் செலவழித்துவிட்டு, எதிர்காலத்திற்காக தனது ஆற்றலை வளர்த்துக்கொள்வதில் அப்போதே முனைப்புடன் இருந்திருக்கிறார் என்பது அவரது கல்வி ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிகிறது,” என்றார்.

வீரமுத்துவேலின் வெற்றிக்கு, அவரது அர்பணிப்பே காரணம் என்றகிறார் அவரது தந்தை பழனிவேல். பிபிசியிடம் பேசிய அவர், “வீர முத்துவேலுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்ட நாள் முதல் அவர் வீட்டிற்கு கூட செல்லாமல், அவரும் அவரது குழுவினரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த திட்டத்துக்காக எனது மகன் வீர முத்துவேல் அவரது பெயருக்கு ஏற்ற வகையில் விடா முயற்சி, வீர முயற்சி எடுத்து வீரமாக வெற்றி கண்டதை நினைத்து பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்,

 

தங்கை திருமணத்துக்கூட செல்லாத வீரமுத்துவேல்

சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

தங்கையின் திருமணத்திற்குக்கூட அவர் வராமல் சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றியதாகக்கூறி நெகிழ்ந்தார் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல்

திட்டத்திற்கு பொறுப்பேற்றது முதல் தன்னுடன் கூட சரியாக பேசவில்லை எனக்கூறிய பழனிவேல், தங்கையின் திருமணத்திற்குக்கூட அவர் வராமல் சந்திரயான்-3 திட்டத்திற்காக பணியாற்றுவதாகக் கூறி நெகிழ்ந்தார்.

இந்த திட்டத்தில் என்றைக்கு பொறுப்பாளராக எனது மகன் நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் விழுப்புரத்திற்கு வரவில்லை. என்னுடன் அடிக்கடி பேச மாட்டார். குறிப்பாக எனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கும் வர முடியாது என்று சொன்னார். அதுபோல் கடந்த 20ஆம் தேதி எனது மகளின் திருமணமும் நடைபெற்றது. அதற்கும் அவர் முடியாது என்று சொன்னார் நான் பரவாயில்லை உன்னுடைய பணி இந்த நாட்டுக்கே முக்கியம் என்று சொல்லி அவரை மேலும் ஊக்கப்படுத்தினேன்,” என்றார்.

 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை

தொடர்ந்து பேசிய அவர், “முத்துவேல் என்னைப் பற்றியோ எனது குடும்பத்தைப் பற்றியோ நினைக்க மாட்டார். அவரது பணியில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் அவர் இன்றைக்கு வெற்றி கொண்டிருக்கிறார்,” என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார் .

மற்றவர்களிடம் தன்னை வீர முத்துவேலின் தந்தை என அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் எனது மகளின் திருமண பத்திரிகையை எடுத்துச் சென்று உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் வழங்கும்போது அவர்களது குழந்தைகளை அழைத்து இவர் தான் விஞ்ஞானி வீர முத்துவேலின் தந்தை இவரது மகனை போல் நீங்கள் பணியாற்றி நாட்டிற்கு வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இது என்னால் மறக்க முடியாது” என்றும் கூறினார்.

 

வீரமுத்துவேல் இஸ்ரோவில் சேர்ந்தது எப்படி?

முத்துவேலின் தந்தை பழனிவேல்
 
படக்குறிப்பு,

விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வீர முத்துவேல், 10-ஆம் வகுப்பு வைர ரயில்வே இருபாளர் பள்ளியில் படித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட வீர முத்துவேல், 10-ஆம் வகுப்பு வைர ரயில்வே இருபாலார் பள்ளியில் படித்துள்ளார். பின், விழுப்புரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியலில் டிப்ளமோ படித்த அவர், பொறியியல் கல்ந்தாய்வு மூலமாக தனியார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் இளங்களை பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர், திருச்சியில் உள்ள ஆர்.இ.சி., கல்லூரியில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்ற வீர முத்துவேல், கோவையில் உள்ள தனியார் இயந்திரவியல் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணியாற்றியுள்ளார். பின், விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கொஞ்ச காலத்திற்கு பிறகு, தனது கனவான இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து திட்ட பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். பணியில் இருக்கும்போதும், விண்வெளி அறிவியல் மீது தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக, ஐஐடி மெட்ராசில் பிஎச்டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்து, வெற்றிகரமாக படித்து முடித்துள்ளார்.

அதற்கு பிறகு, இஸ்ரோவில் முதல் நேனோ (NANO) விண்கலத்தை ஏவுவதற்காக குழுவை வழிநடத்தும் வாய்ப்பை பெற்று, மூன்று நேனோ விண்கலன்களை ஏவியுள்ளார். அதற்குப்பிறகு, பல்வேறு இணை பொறுப்புகள் வகித்த வீர முத்துவேல், சந்திரயான்-3 இன், திட்ட இயக்குநராக 2019 நியமிக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cd1gqyz01w3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னாசியாவில் மக்கட்தொகையில் முதலிடம் வகிக்கும் ஒருநாடு(தமிழர் எதிர்நிலை,தமிழ்மொழி அழிப்பு,கிந்தி,கிந்து மதத் திணிப்பு என்பவற்றைக் கடந்து)என்ற வகையில் மிகச் சிறந்த வெற்றியே. பொதுவாக இந்தியர்களது பெருமைக்குணம் மாறாதது. அவர்கள் ஒரு கூட்டத்தில் முதலில் ** விட்டாலும் அதனையும் பெருமையாகக் கூறிவிட்டுச் செல்லக்கூடியவர்கள். வெட்க துக்கம் பாராது கடந்துவிடுவர். அதுகூட அவர்களது வளர்ச்சிக்குக் கரணியமாக இருக்கலாம். அயல்நாடென்ற வகையில் பாராட்டுதற்குரியதே. மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளூர் அரசுகளின் ஊழலற்ற நிர்வாகத்தினாலும், செயற்றிறன் மிக்க அதிகாரிகளினாலும் மட்டுமே அடையமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14 நாட்கள் மட்டுமே வாழும் சந்திரயான் 3 - Chandrayaan 3 Landing

 

 

CHANDRAYAAN 3 வெற்றி - அடுத்து என்ன? | Explained in Tamil

 

"நிலா உள்ள இறங்கிய ROVER என்ன பண்ண போகுது தெரியுமா?"😯 சந்திரயான் 3 - DETAILED REPORT

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலாவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

அது மட்டுமின்றி விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் பயணிக்கும். லேண்டரும் ஒருபுறம் அதற்குத் தொடர்ச்சியாக வழிகாட்டிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்போது பிரக்யான் ரோவர் அங்குள்ள நிலவியல்ரீதியிலான சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 25 ஆகஸ்ட் 2023, 03:44 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த இரண்டு நாட்களாக சந்திரயான்-3 பற்றிய பேச்சுதான் இந்திய மக்களின் வார்த்தைகளிலும் காதுகளிலும் நிரம்பியிருந்தன. இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மட்டுமின்றி இந்தியாவின் விண்வெளி ஆய்வுத்துறையின் எதிர்காலத்திற்கே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

தற்போது நிலாவில் நான்காவது நாடாக தடம் பதித்துவிட்ட இந்தியா, அங்கு செய்யப்போகும் ஆய்வுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் பேருதவியாக இருக்கக்கூடும்.

ஆனால், அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் இரண்டும் என்ன வகையான சவால்களை எதிர்கொள்ளும், அந்த சவால்களைச் சமாளிக்கும் முன்னேற்பாடுகள் அவற்றில் செய்யப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.

 

பல கிலோமீட்டர் உயரத்திற்குப் பறக்கும் நிலவின் தூசுகள்

நிலவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவில், 0.07 மி.மீ விட்ட கொண்ட நுண்ணிய துகள்களைப் போல் அதன் மண் இருக்கும்.

நிலாவின் மேற்பரப்புக்கும் பூமியின் மேற்பரப்புக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அங்குள்ள தரைப்பரப்பு மிகவும் அலங்கோலமானது என்றுகூட சொல்லலாம்.

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விண்கற்கள் பல்லாண்டுக் காலமாக மோதியதன் தாக்கம், பெரும் பள்ளங்களாக நிலவில் அவற்றின் காயங்களை விட்டுச் சென்றுள்ளன.

கோடிக்கணக்கான ஆண்டுகளாக விண்கற்கள் நிலவின் மேற்பரப்பில் குண்டு மழை பொழிவதைப் போல் பொழிந்துள்ளன. இந்தத் தாக்கம் இனியும் நடைபெறும்.

நிலாவின் மேற்பரப்பு ரெகோலித் எனப்படும் தன்மை கொண்டதாக உள்ளது. நிலவில், 0.07 மி.மீ விட்ட கொண்ட நுண்ணிய துகள்களைப் போல் அதன் மண் இருக்கும்.

 
ரோவர்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவிலுள்ள மண்ணின் விட்டம் மிகச் சிறிய அளவில் இருக்கும். ஆனால், அவற்றைத் தோண்டினால் கீழே கடினமான பாறை இருக்கும்.

ரெகோலித் என்பது நிலவின் மேற்பரப்பில் விண்கற்களின் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு பரப்பு என்கிறார் பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் லெனின்.

இந்த மேற்பரப்பு பாறை போன்ற அமைப்புடையதுதான். ஆனால், இதில் மண் துகள் மிகவும் சிறியதாக, தூசுகளாக இருக்கும். எளிதில் மேலெழும்பிப் பறக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், அதற்குக் கீழே தோண்டிப் பார்த்தால் கடினமான பாறை அமைப்புகள் இருக்கும்,” என்று கூறுகிறார்.

விட்டம் மிகச் சிறிய அளவில் இருக்கும் கடற்கரை மணல் எளிதில் தூசுகளாக மேலே பறக்கும். ஆனால், அவற்றைத் தோண்டிக் கீழே பார்த்தால் கடினமான பாறை இருக்கும் அல்லவா! அதைப் போலவேதான் இதுவும்.

இந்தத் தூசு போன்ற மண்ணை பூமியுடன் ஒப்பிட்டால் அதன் அளவு குறித்த புரிதல் இன்னும் தெளிவாகக் கிடைக்கும். பூமியிலுள்ள மண்ணின் விட்டம் 2.0 முதல் 0.05 மி.மீ வரை இருக்கும். இதில் இருப்பதிலேயே மிகக் குறைந்த விட்டம் கொண்ட மண்ணின் அளவுக்குத்தான் நிலவிலுள்ள மண் சாதாரணமாகவே இருக்கும்.

நிலவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவில் தரையிறங்கிய பிறகு தனது நிழல் தெரியும் வகையில் விக்ரம் தரையிறங்கி கலனின் லேண்டர் இமேஜர் கேமரா அனுப்பிய புகைப்படம்.

விக்ரம் லேண்டரின் ராக்கெட் இன்ஜின் செயல்பாடு, இறுதிக்கட்ட தரையிறக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் மேற்பரப்பில் உள்ள தூசுகள் அதிகளவில் மேலே எழும்பியது.

அந்தத் தூசுகள் நிலவில் அதிக தூரத்திற்குச் சிறிது சிறிதாகப் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் அந்த மண் பல கி.மீ உயரத்திற்குப் பறக்கின்றன.

பிறகு, அந்தத் தூசுகள் நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் வரை பறந்துகொண்டே இருக்கும். பூமியின் ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் நிலவின் ஈர்ப்பு விசை, வளிமண்டலமே இல்லாத அதன் மேற்பரப்பு ஆகியவற்றால், தூசுத் துகள்கள் அடங்க சில மணிநேரங்கள் ஆனது.

இவை அனைத்தும் அடங்கிய பிறகே லேண்டர் திறந்து, ரோவர் வெளியே வந்தது.

ரோவர் பள்ளங்களில் விழும் ஆபத்து உள்ளதா?

பிரக்யான் ஊர்திக்கலன் நிலாவில் நகர்வதற்கு விக்ரம் தரையிறங்கி கலன் வழிகாட்டும். ரோவரில் மொத்தம் ஆறு சக்கரங்கள் உள்ளன. அந்த ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது,” என்கிறார் சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் முனைவர். எஸ்.பாண்டியன்.

 
நிலவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

பிரக்யான் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனி டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

பூமியில் நாம் பார்க்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களில் இருசக்கர இயக்கம், நான்கு சக்கர இயக்கம் போன்ற இயக்கவியல் செயல்முறையைப் பார்த்திருப்போம்.

அவற்றில், இரண்டு சக்கரங்களுக்கு ஒரு மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரண்டு சக்கரங்களும் இணைந்தே இயங்கும். ஆனால், நிலவில் ஆய்வு செய்யப்போகும் ரோவரின் ஆறு சக்கரங்களுக்கும் தனித்தனியாக மோட்டார்கள் உள்ளன.

இதனால், “ஒவ்வொரு சக்கரமும் அவற்றின் போக்கில் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அவற்றுக்கு வேறுபாட்டுத் தடை (Differential Braking) பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இவையனைத்தும் பொதுவான ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

அந்த செயற்கை நுண்ணறிவு கணினிதான், எந்த சக்கரம் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான கட்டளைகளை வழங்கும்,” என்று விளக்குகிறார் பாண்டியன்.

இதன்மூலம், நிலவின் தரைப்பரப்பில் உள்ள பள்ளங்களில் ஏதேனும் ஒன்றில் ரோவரின் ஏதாவது ஒரு சக்கரம் சிக்கினாலும்கூட அதை மற்ற ஐந்து சக்கரங்களும் சேர்ந்து வெளியே கொண்டுவந்துவிடும்.

 
அது மட்டுமின்றி விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் பயணிக்கும். லேண்டரும் ஒருபுறம் அதற்குத் தொடர்ச்சியாக வழிகாட்டிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
 
படக்குறிப்பு,

தரையிறங்கியபோது கிளம்பிய தூசுகள் ரோவரைவிட லேண்டர் மீதுதான் அதிகமாகப் படிந்திருக்கும்.

அது மட்டுமின்றி விநாடிக்கு ஒரு சென்டிமீட்டர் என்ற வேகத்தில் ரோவர் பயணிக்கும். லேண்டரும் ஒருபுறம் அதற்குத் தொடர்ச்சியாக வழிகாட்டிக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

தரையிறங்கி கலன், ரோவரின் பாதையில் எங்கேயாவது பெரும் பாறைகள் கிடந்தால் அவை குறித்த எச்சரிக்கைகளை வழங்கும். அதன்மூலம் எங்கும் மோதிவிடாமல் ரோவர் பாதுகாக்கப்படும்.

நிலவின் மண் துகள்கள் மின்சார உற்பத்தியை பாதிக்குமா?

பூமியிலேயே தொடர்ந்து தூசு படிந்துகொண்டே இருந்தால், அதன் திறன் குறைந்துவிடுகிறது. அப்படியிருக்கும்போது நிலாவில் இருக்கும் மண்ணின் சராசரி அளவே இங்குள்ள தூசுகளைப் போலத்தான் என்னும்போது அது சூரிய மின்சார உற்பத்தியை பாதிக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.

அதேபோல தரையிறங்கும்போது கிளம்பிய புழுதிகள் தரையிறங்கி கலன் மீது படியும். இந்தப் புழுதிகள் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புண்டு என்கிறார் முனைவர்.எஸ். பாண்டியன்.

 
நிலவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லேண்டரின் சூரிய மின் தகடுகள் மீது படிந்துள்ள தூசுகளால் அவற்றின் மின்சார உற்பத்தித் திறன் குறையலாம்.

“விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது பெரியளவில் புழுதி கிளம்பியிருக்கும். அந்தப் புழுதி அதன்மீது படியும். லேண்டரின் வயிற்றுக்குள்ளே இருந்த காரணத்தால், இந்தப் புழுதியால் ரோவரின் செயல்பாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது.

ஆனால், லேண்டரில் அதன் தாக்கம் இருக்கும். அதிலுள்ள சூரிய மின் தகடுகளின் மின்சார உற்பத்தித் திறன் குறையும். பூமியில் ஆறு மாத காலத்தில் படியக்கூடிய அளவிலான தூசுகள், தரையிறங்கிய நேரத்திலேயே லேண்டர் மீது படிந்திருக்கும்,” என்கிறார் முனைவர் பாண்டியன்.

இதை நம்மால் தடுக்க இயலாது. ஆனால் அந்தத் திறன் குறைபாட்டை எப்படிச் சமாளிப்பது என்று இஸ்ரோ முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதாவது நிலவில் எங்கே இந்த விண்கலம் தரையிறங்கியதோ அங்கு எவ்வளவு புழுதி கிளம்பும், அது எந்தளவுக்கு மின்சார உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பனவற்றை இஸ்ரோ கணக்கிட்டுள்ளது.

அதே நேரத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது கிளம்பும் புழுதியைத் தவிர அங்கு வேறு புழுதி கிளம்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆகவே, “அந்தத் தருணத்தில் எவ்வளவு புழுதி கிளம்ப வாய்ப்புள்ளது, அப்படிக் கிளம்பும் புழுதி லேண்டரின் சூரிய மின் தகடுகளில் படிவதால் எந்தளவுக்கு உற்பத்தித் திறனை அது பாதிக்கும் என்பனவற்றைத் தோராயமாக இஸ்ரோ கணக்கிட்டது.

அதன் அடிப்படையில், அத்தகைய உற்பத்தித் திறன் குறைபாடு ஏற்பட்ட பிறகு கிடைக்கும் ஆற்றல் லேண்டருக்கு தேவையான ஆற்றலாக இருக்கும் வகையில், தரையிறன்கி கலனைச் சுற்றி மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன,” என்றும் விளக்கினார் பாண்டியன்.

ஆகவே ஆற்றல் உற்பத்தியில் ஏற்படக்கூடிய திறன் குறைபாட்டை லேண்டரால் சமாளிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

 
நிலவில் ஆய்வு செய்யும்போது பிரக்யான் ரோவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

குறைந்தபட்சம் மணிக்கு 40,000 கி.மீ முதல் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் விண்கற்கள் நிலவில் வந்து மோதுகின்றன.

இதுபோக நிலவில் வந்து மோதும் விண்கற்களால் கிளம்பும் தூசுகளும் லேண்டர் மற்றும் ரோவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இத்தகைய செயல்முறைகள் கணிக்க முடியாதவை என்பதால், அவற்றால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாது.

அப்படியான நிகழ்வு ஏதும் நடந்தால், அது ரோவரின் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயம் இருப்பதையும் தவிர்ப்பதற்கில்லை.

அதேபோல், கணிக்க முடியாத விண்கற்களின் தாக்குதல் ரோவர் ஆய்வு செய்யும் இடத்தில் ஏற்படாது என உறுதியாகக் கூற முடியாது என்று கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன். கணிக்கக்கூடிய சவால்களை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இஸ்ரோ திட்டமிட்டு அனுப்பியுள்ளது.

இருப்பினும் குறைந்தபட்சம் மணிக்கு 40,000 கி.மீ முதல் ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் வந்து மோதக்கூடிய விண்கற்களின் தாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படியான தாக்கத்தால் கிளம்பும் தூசுகளையும் தவிர்க்க முடியாது.

சவால்கள் நிறைந்ததுதானே விண்வெளிப் பயணம். அந்த சவால்களையும் அபாயங்களையும் சமாளித்து ஆய்வுகளை மேற்கொண்டு தாயும் குழந்தையுமான விக்ரமும் பிரக்யானும் சாதனை புரியும் என்று உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cd1mdpxdnljo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதித்துக்காட்டிய சந்திரயான் 3

image_40a3098df7.jpg

சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், ஓகஸ்ட் 23 அன்று நிலவில் பத்திரமாகத் தரையிறங்கியது; அதன் வயிற்றில் இருக்கும் ‘பிரக்யான்’ உலாவிக் கலம் வெளிவந்து ஒளிப்படங்களை எடுத்து அனுப்ப உள்ளது.

சோவியத் ஒன்றியம்/ ரஷ்யா, அமெரிக்கா,  சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக இந்தியா நிலவில் கால் பதித்துள்ளது. சந்திரயான் 3 தரையிறங்கிக் கலம் கீழே இறங்கும் நிகழ்வு தொடங்கி சுமார் பதினேழு நிமிடங்கள் கடந்திருந்தன.

அப்போது நிலவின் தரையிலிருந்து வெறும் 150 மீட்டர் உயரத்தில் இருந்தபோது, கீழே இடர்நிலை உள்ளது என்பதைத் தரையிறங்குக் கலம் கவனித்தது. அந்த நேரம் அனைவருக்கும் ‘திக் திக்’ நிமிடங்களாகக் கடந்தது. அந்நிலையில். அதன் இடரை உணர்ந்து ஆபத்தைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சட்டென்று செயல்பட்டு. அருகே பாதுகாப்பான இடத்தை அடையாளம் கண்டது. அதனால் தரையிறங்குக் கலம் பக்கவாட்டில் நகர்ந்து பாதுகாப்பாக அங்கே தரையிறங்கியது

அடுத்து என்ன? - நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய ஒளி தெரியும் பகல் பொழுதில். வெப்பம் சுமார் 54 டிகிரி இருக்கும். சூரியன் மறைந்து இரவு கவிழும்போது வெப்பம் தடாலெனக் குறைந்து மைனஸ் 200 என்ற உறைபனிக் குளிர் ஏற்படும்.

சந்திரயான் கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகள் அந்தக் கடும் குளிரைத் தாங்காது. எனவே. நிலவின் பகல் பொழுதில் மட்டுமே கருவிகள் செயல்படும். அதன் பின்னர் தரையிறங்கிக் கலம். உலாவிக் கலம் ஆகியவற்றின் ஆயுள் முடிந்துவிடும். நிலவின் ஒரு நாள் என்பது 14 பூமி நாள்களுக்குச் சமம். எனவே. தரையிறங்கிக் கலம். உலாவிக் கலத்தின் ஆயுள் 14 நாள்கள்.

image_0171ded196.jpg

தரையிறங்கும் தொழில்நுட்பம்: விமான இறக்கை, ஹெலிகாப்டர் விசிறி, பாராசூட் முதலியவற்றைப் பயன்படுத்தி பூமியில் மென்மையாகத் தரையிறங்க முடியும். காற்றே இல்லாத நிலவில் இந்த மூன்றும் பயன் தராது. எனவேதான் ஆற்றலளித்துத் தரையிறக்கும் (powered descent) நுட்பத்தை நிலவில் பயன்படுத்த வேண்டும். ராக்கெட் உயர் அழுத்தப் புகை வெளிப்படும் திசைக்கு எதிராகத் தள்ளு விசை ஏற்படும்.

எனவே, கீழே விழும் விண்கலம் கீழ்நோக்கி ராக்கெட்டை இயக்கினால் மேல் நோக்கிய தள்ளுவிசை கிடைக்கும். கீழ்நோக்கிய ஈர்ப்புவிசை, மேல்நோக்கிய ராக்கெட் தள்ளுவிசை இரண்டின் விளைவாக விண்கலத்தை அந்தரத்தில் நிறுத்தலாம்; அல்லது மெதுவாகக் கீழே இறங்கச் செய்யலாம். இதுவே ஆற்றலளித்துத் தரையிறக்கும் நுட்பம்.

கீழ்நோக்கிய விசைக்கு ஈடுகட்டும் வகையில் மேல்நோக்கிய தள்ளுவிசையை உருவாக்க வேண்டும். அதற்கு ராக்கெட் இன்ஜின் செயல்பாட்டைக் கூட்டிக் குறைக்க வேண்டும். இதற்கான செயற்கை நுண்ணறிவுப் பொறியைத் தயார் செய்ய வேண்டும். இதுபோல வழித்தடம் காணும் செயற்கை நுண்ணறிவுப் பொறி, இடர் உணர்ந்து ஆபத்தைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவுப் பொறி, விண்கலத்தை இயக்குவதற்கு செலுத்திப் பொறி முதலியவற்றை இந்திய விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர். இந்த செயற்கை நுண்ணறிவுப் பொறிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன என சந்திரயான் 3 வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

என்னென்ன ஆய்வுகள்? - 2019 ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த சந்திரயான் 2 இன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதன் சுற்றுப்பாதைக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலையுணர்வுக் கருவியைக் கொண்டு நிலவின் தரைப்பரப்பில் உள்ள தாதுப்பொருள்கள் இனம்காணப்பட்டுப் பட்டியலிடப்பட்டுள்ளன.

image_e71e0d7aa5.jpg

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலத் தொலையுணர்வு வழியே அறியப்பட்ட தரவுகள் உண்மைதானா என உலாவிக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆல்பா துகள் எக்ஸ்ரே நிறமாலைமானி (Alpha Particle X-ray Spectrometer – APXS), லேசர் தூண்டுதலுடன் சிதைக்கும் நிறமாலை மானி (Laser Induced Breakdown Spectroscope - LIBS) கருவிகளைக் கொண்டு ஆய்வுசெய்யும்.

தொலையுணர்வு வழியே இனம் கண்ட அதே தாதுப் பொருள்களை உலாவிக் கலமும் இனம் கண்டால், சுற்றுப்பாதைக் கலம் அளிக்கும் தரவுகள் மீது கூடுதல் உறுதித்தன்மை ஏற்படும். இதுதான் முக்கியத் திட்டம். உலாவிக் கலம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தரவுகளைத் திரட்ட முடியும் என்பதால், மேலும் நம்பிக்கை தரும்.

பூமியின் மேற்புற ஓடு சில்லு சில்லாக உடைந்து ஒன்றுடன் ஒன்று மோதியபடியே உள்ளது. ‘டெக்டானிக் சில்லுகள்’ எனப்படும் இந்தப் பகுதிகள் மோதி உரசும் இடங்களில்தான் நிலநடுக்கம், எரிமலை போன்றவை பூமியில் உருவாகும்.

உலரும் திராட்சைப் பழத்தோலின் மீது சுருக்கம் ஏற்படுவதுபோல, நிலவு குளிரக் குளிர அதன் மேற்புறத்திலும் சுருக்கம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக நிலவிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலவின் நடுக்கங்களை உணர்ந்து ஆராய்ச்சி செய்ய தரையிறங்கிக் கலத்தில் நிலவு நடுக்க ஆய்வுக் கருவி (Instrument for Lunar Seismic Activity - ILSA) பொருத்தப்பட்டுள்ளது.

உலோகம் வெப்பத்தைக் கடத்தும் அதே வகையில் மரத்துண்டு கடத்தாது; அதனால்தான் மரத்துண்டைக் கொண்டு சமையல் கரண்டி கைப்பிடியைச் செய்கிறோம். சந்திரா தரைப்பரப்பு வெப்ப இயற்பியல் ஆய்வு (Chandra’s Surface Thermo-physical Experiment – ChaSTE) எனும் ஆய்வுக் கருவியை வைத்து, நிலவு மண்ணின் வெப்பக் கடத்துத் திறன் அளவிடப்படும்.

பூமியின் மீது திட, திரவ, வாயு என்ற மூன்று நிலைகளில் பொருள்கள் உள்ளன. மின்னல் போன்ற அரிதான வகைகளில் மட்டுமே நான்காவது நிலையான பிளாஸ்மா நிலையில் பொருள்களைப் பூமியில் காணலாம். ஆனால், சூரியக் கதிர்களின் தாக்கத்தில் நிலவின் மேற்புறத்தில் தோல்போல பிளாஸ்மா அடுக்கு உள்ளது. நிலவின் தரைப்பரப்பின் அருகே பிளாஸ்மா நிலையில் உள்ள பொருள்களை ‘ரம்பா’ கருவி (Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere – RAMBHA) ஆராயும்.

மேலும் பூமியிலிருந்து அனுப்பப்படும் லேசர் கதிர்களைத் தரையிறங்கிக் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லேசர் பிரதிபலிப்புக் கண்ணாடி (Laser Retroreflector Array - LRA) பிரதிபலித்துத் திருப்பும். லேசர் ஒளி சென்றுவர எடுக்கும் காலம் அளக்கப்பட்டு, நிலவின் தொலைவு மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்படும்.

நிலவின் இயக்கங்கள், ஈர்ப்பு விசைகுறித்த தத்துவ ஆய்வுகள் எனப் பல மேலதிக ஆய்வுகள் இந்தத் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக விண்வெளி சார்ந்த ஆய்வில் இந்தியா அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதை, சந்திரயான் 3 வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது.

image_fadc57fc30.jpg

வெற்றியின் முதல் படி:

பூமியிலிருந்து நிலவு வரை சந்திரயான்-3 கடந்து வந்த பாதை!

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் திகதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, 4 ராக்கெட் மூலம் சந்திரயான்–3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் வெற் LVM3 M றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து நிலவுக்கு உயர்த்தும் நிகழ்வு:

முதற்கட்ட கட்ட நிகழ்வு

ஜூலை 15ம் திகதி முதற்கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earthbound firing-1) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 41762  கிலோ மீட்டர் x 173 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இரண்டாம் கட்ட நிகழ்வு

ஜூலை 17ம் திகதி இரண்டாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound apogee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அப்போது, விண்கலம் 41603 கிலோ மீட்டர் x 226 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் கொண்டுவரப்பட்டது.

மூன்றாம் கட்ட நிகழ்வு

ஜூலை 18ம் திகதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (பூமிக்கு செல்லும் பெரிஜி துப்பாக்கி சூடு) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் 51400 கிலோ மீட்டர் x 228 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது.

நான்காம் கட்ட நிகழ்வு

ஜூலை 20ம் திகதி நான்காம் கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழ்ற்சி வெற்றிகரமாக முடிந்தது. அப்போது, விண்கலம் 71351 கிலோ மீட்டர் x 233 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் நிறுவப்பட்டது.

ஐந்தாம் கட்ட நிகழ்வு

இதனையடுத்து ஜூலை 25ம் திகதி ஐந்தாம் கட்ட மற்றும் இறுதி கட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் (Earth-bound perigee firing) சுழற்சி முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் 127603 கிலோ மீட்டர் x 236 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையை அடைந்தது. இதனை தொடர்ந்து, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

நிலவை நோக்கி பயணம்:

ஆகஸ்ட் 1ம் திகதி டிரான்ஸ் லூனார் இன்செர்ஷன் (டிஎல்ஐ) சுழற்சி மூலம் சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து புறப்பட்டு நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. அன்றைய தினம், பூமியிலிருந்து நிலவுக்கு 288     கிலோ மீட்டர் x 369328 கிலோ மீட்டர் ஆக இருந்தது. ஓகஸ்ட் 4ம் திகதி விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்தது.

பின்னர், ஓகஸ்ட் 5ம் திகதி லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) அதாவது, சந்திரயான்-3 விண்கலமானது பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மூலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.  இதன் பிறகு, சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு நடைபெற்றது.

சுற்றுப்பாதை குறைப்பு:

முதற்கட்ட குறைப்பு

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 170 கிலோ மீட்டர் x 4313 கிலோ மீட்டர். தொலைவில் கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் கட்ட குறைப்பு

ஆகஸ்ட் 9 ஆம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு வெற்றிகரமாக நிகழ்த்தியது. அதன், என்ஜின்களின் சுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்து, 174 கிலோ மீட்டர் x 1437 கிலோ மீட்டர். கொண்டு வரப்பட்டது.

மூன்றாம் கட்ட குறைப்பு

அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி மூன்றாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு 150 கிலோ மீட்டர் x 177 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

இறுதிகட்ட குறைப்பு

ஆகஸ்ட் 16 ஆம் திகதி, சந்திரயான் -3ஐ 153 கிலோ மீட்டர் x 163             கிலோ மீட்டர் என்ற சுற்றுவட்டப்பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இத்துடன், சந்திரனைக் சுற்றிவரும் சுற்றுவட்ட பாதைகள் நிறைவடைகின்றன. இதுவே உந்துவிசைக் கலனின் உதவியுடன் ‘விக்ரம்’ லேண்டர் மேற்கொண்ட கடைசி கட்ட சுற்றுவட்ட பாதையாகும்.

image_526dbd1d43.jpg

தற்போதைய நிகழ்வு:

உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவை சுற்றிவந்த போது,லேண்டரின் சுற்றுப்பாதை முதல் மற்றும் டீபூஸ்டிங் முறை மூலம் 25 கிலோ மீட்டர் x 134 கிலோ மீட்டருக்கு வெற்றிகரமாக குறைக்கப்பட்டு தற்போது, சந்திரயான்-3 விண்கலம், திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 14-ம் திகதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சாதித்துக்காட்டிய-சந்திரயான்-3/91-323188

Posted

சந்திராயன்- 4( LUPEX) யப்பானுடன் கூட்டு சேர்ந்து 2026ல் சந்திரனின் தென்பகுதிக்கு மேலும் ஆராட்சிகளுக்கு அனுப்பப்படுமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளத்தை உணர்ந்த பிரக்யான் ரோவர்; பாதையை மாற்றிய இஸ்ரோ - தற்போதைய நிலவரம்?

பாதையை மாற்றிய இஸ்ரோ

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நேற்று(ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது.

பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, தற்போது ரோவர் புதிய பாதையில் சீராகப் பயணிப்பதாக இஸ்ரோ தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக சந்திரயான்-3 திட்டத்தின் மூன்று இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல, நிலாவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை குறித்து விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE என்ற கருவி அனுப்பிய தகவல்களையும் இஸ்ரோ பகிர்ந்திருந்தது.

பள்ளத்தை உணர்ந்த பிரக்யான் ரோவர்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நேற்று (ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது.

 

நிலவின் தென் துருவத்தில் வெப்பநிலை என்ன?

நிலவின் தென் துருவத்தில் வெப்பநிலை என்ன?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE கருவியில் இருந்து முதல் கட்ட தரவுகளை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ChaSTE கருவி சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள, தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையை அளவிடுகிறது.

அதில் உள்ள வெப்பநிலையை அளவிடும் சாதனம் மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ. அடியில் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. அதில் வெப்பநிலையை அளவிடும் 10 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

மூன்றில் இரு இலக்குகளை எட்டிவிட்டோம்- இஸ்ரோ

மூன்றில் இரு இலக்குகளை எட்டிவிட்டோம்- இஸ்ரோ

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகளில் இரண்டை எட்டிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் கால் பதித்த விக்ரம் லேண்டரும், அதில் இருந்து நிலாவில் தரையிறங்கி ஊர்ந்து சென்ற பிரக்யான் ரோவரும் கச்சிதமாக தங்களது பணியைச் செய்வதாக இஸ்ரோ கூறியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் 3 இலக்குகள் என்ன? அவற்றில் இதுவரை எட்டப்பட்ட இலக்குகள் என்ன? என்பது குறித்து இஸ்ரோ தனது பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.

அதன்படி, நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்குவது, நிலவின் மேற்பரப்பில் ரோவர் நகர்ந்து செல்வது ஆகிய 2 இலக்குகள் பூர்த்தியாகி விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் நல்ல முறையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் எனப்படும் தரையிறங்கி கலனில் இருக்கும் மூன்று கருவிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக இஸ்ரோ அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ரோவர் எனப்படும் ஊர்திக்கலன் நகரத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி உந்துவிசை கலனில் இருக்கும் ஷேப் எனப்படும் கருவியும் கடந்த ஞாயிறு முதல் இயங்கத் தொடங்கிவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உந்துவிசை கலனில் உள்ள இந்தக் கருவி சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் பூமியைப் போன்ற தோற்றம் கொண்ட புறக்கோள்களைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

 

ரோவர் என்ன செய்யும்?

ரோவர் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும் ரோவர்

ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில் தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.

நிலாவின் தரையில் இறங்கிவிட்ட இந்த 26 கிலோ எடை கொண்ட இஸ்ரோவின் குழந்தை என்னவெல்லாம் செய்யும்?

நிலாவின் தரைப்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ என்ற வேகத்தில் ரோவர் நகரும். அப்படி நகரும் நேரத்தில் அது அங்குள்ள பொருட்களை ஸ்கேன் செய்துகொண்டே நகரும்.

மேலும், நிலாவின் காலநிலை குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை அனுப்பும். அதுமட்டுமின்றி, நிலாவின் மேற்பரப்பின் தன்மை குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், சேய் கலமான ரோவர் நிலாவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவுக்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து அனுப்பும்.

இயல்பாகவே ஒரு பொருளை உடைத்தால்தான் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் ரோவர் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை லேசர் மூலம் உடைத்துப் பார்க்கிறது.

 
ரோவர் என்ன செய்யும்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

ரோவர் மூலமாக நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும்.

நிலாவின் மண்ணில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதை அதனால் கண்டறிய முடியும்.

ஊர்திக்கலன் நிலாவின் தரையைக் குடைந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்யும். அதன்மூலம் அந்த மாதிரிகளில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், டைட்டானியம் என என்னென்ன தனிமங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்கும்.

அதோடு நிலாவின் மேற்பரப்பில் உள்ள வேதிம கலவைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றின் இருப்பு, கனிமங்கள் என்னென்ன உள்ளன என்று நிலாவின் மண்ணை எடுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும்.

இதற்கு அலைமாலை அளவி என்ற கருவியை ரோவர் பயன்படுத்துகிறது. இந்த அலைமாலை கருவியால் ஒரு பொருளில் இருக்கக்கூடிய பல்வேறு தனிமங்களைப் பிரித்துப் பார்த்து வகைப்படுத்த முடியும்.

அதன்மூலம், நிலாவின் மணற்பரப்பில் என்னென்ன வகையான தாதுக்கள், கனிமங்கள் இருக்கின்றன என்பதை இஸ்ரோவால் தெரிந்துகொள்ள முடியும். அவற்றைத் தெரிந்துகொள்வது எதிர்காலத்தில் நிலவை மனிதர்கள் மற்ற கோள்களுக்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும்போது ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூட உதவும்.

இதற்குச் சான்றாக செவ்வாய் கோளுக்கான பயணத் திட்டத்தைக் கூறலாம்.

 

இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3

இரண்டு வாரங்களுக்கு மட்டுமே ஆய்வு செய்யும் சந்திரயான்-3

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன

இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவில் இந்தியா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் அனைத்துமே இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான்.

ஏனென்றால், இரண்டு வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு தொடங்கிவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்குமே வெப்பநிலை குறையும். அந்த உறைபனிக் குளிரில் லேண்டர், ரோவர் இரண்டுமே இயங்க முடியாது.

அவை இயங்குவதற்குத் தேவையான சூரிய ஒளி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கிடைக்காது. அது மட்டுமின்றி, இரவு நீடிக்கும் அந்த இரண்டு வாரங்களிலும் நிலவும் உறைபனிக் குளிர் அவற்றின் பாகங்களில் விரிசல்கள் விழச் செய்யலாம். இதனால் அவை விரைவிலேயே இறந்துவிடும்.

உறைபனிக் குளிரில் இந்தக் கருவிகளால் இயங்க முடியாது என்பதையும் தாண்டி, அவற்றின் கட்டமைப்பிலேயே சேதங்கள் ஏற்படக்கூடும். உலோகங்களால் உறைபனிக் குளிர் வெப்பநிலையைத் தாங்க முடியாது.

அதிலும் 200 டிகிரி செல்ஷியஸ் வரைக்கும் செல்லும்போது, அத்தகைய வெப்பநிலையில் அவை சேதமடையக்கூடும். இதனால், லேண்டர், ரோவரின் பாகங்கள் செயலிழக்க வாய்ப்புள்ளது.

ஆக, அடுத்த இரண்டு வாரங்களில் ரோவரும் லேண்டரும் அனுப்பவுள்ள தரவுகள்தான் உலகளவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை ஒரு புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்லப் போகின்றன.

https://www.bbc.com/tamil/articles/c0dg9mlm4ddo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ISRO-ன் புது Video: Vikram Lander-ஐ India-ல் இருந்தே நகர்த்திய ISRO; இனி நிலவுக்கு சென்று வரலாம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரனில் 40 சென்ரிமீற்றர் துள்ளிக் குதித்த விக்ரம் லேண்டர்: புதிய இடத்திலும்  ஆய்வுக்கருவிகள் சோதனை

Published By: SETHU

05 SEP, 2023 | 01:47 PM
image
 

சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கி வைக்கப்பட்டிருந்த, சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், தரையிலிருந்து 40 சென்ரிமீற்றர் மேலெழும்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்கியதாக இஸ்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.  இது சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தனது கட்டளைகளின்படி, விக்ரம் லேண்டரின் என்ஜின்கள் இயங்க ஆரம்பித்து, எதிர்பார்க்கப்பட்டவாறு 40 சென்ரிமீற்றர் உயரத்துக்கு அந்த லேண்டர் கிளம்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர், 30 முதல் 40 சென்ரிமீற்றர் அளவிலான தூரம் நகர்ந்து மீண்டும் சந்திரனின் தரையில் அது இறங்கியது. என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று முற்பகல் தெரிவித்தது.

இது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் சந்திரனில் மேற்கொண்ட இரண்டாவது ‘மென் தரையிறக்கம்’ எனவும், இது சந்திரயான் -3 திட்டத்தின் இலக்குகளை விஞ்சிய செயற்பாடு எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனின் தரையிலிருந்தவாறு விக்ரம் தரையிறங்கிக் கலம் மீண்டும் இயங்க ஆரம்பித்து, அக்கலம் தாவி இறங்கியமையானது முக்கியமான ஒரு பரிசோதனையாக கருதப்படுகிறது.

சந்திரனிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் திட்டங்கள் மற்றும் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்துவரும் எதிர்காலத் திட்டங்களுக்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இப்பரிசோதனைக்கான திட்டம் குறித்து இஸ்ரோ முன்னர் அறிவித்திருக்கவில்லை.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் (தரையிறங்கி) கடந்த 23 ஆம் திகதி சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த பிரக்யான் எனும் தரையூர்தி (ரோவர்) வெளியில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

 

சந்திரனின் தென் துருவத்தில் அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், மங்கனீஸ், டைட்டானியம்,  ஒட்சிசன் உட்பட பல மூலகங்கள் இருப்பது பிரக்யான் ஊர்தியிலுள்ள ஆய்வுக்கருயின் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உறங்கு நிலையில் விக்ரம், பிரக்யான்

இதேவேளை, சந்தியான்-3 திட்டத்தின் இலக்குகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரனில் செப்டெம்பர் 4 ஆம் திகதி சூரியன் மறைய ஆரம்பிக்கும் நிலையில் விக்ரம் மற்றும் பிரக்யானை உறங்கு நிலைக்கு செல்கின்றன அறிவித்துள்ளது.

சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாட்களுக்குச் சமனாகும். இதனால் சந்திரனில் சூரிய ஒளி கிடைக்கும் ஒரு பகல் பொழுது (பூமியில் 14 நாட்கள்) மாத்திரம் விக்ரம் லேண்டர், மற்றும் பிரக்யான் ஊர்தி ஆகியன தரவுகளை அனுப்பும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த 14 நாட்களுக்கு கருவிகள் இயங்குவதற்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதே இதற்குக் காரணம்.

சந்திரனின் தென் துருவத்தில் மீண்டும் செப்டெம்பர் 22 ஆம் திகதியின் பின்னரே சூரிய ஒளி கிடைக்கலம்.  மீண்டும் சூரிய ஒளி கிடைத்தால் விக்ரம் மற்றும் பிரக்யான் மீண்டும் இயங்க ஆரம்பிக்குமா என்ற எதிபார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று பிற்பகல் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட பதிவொன்றில் 'இந்திய நேரப்படி அன்று (திங்கள்) இரவு 8.00 மணி முதல் விக்ரம் உறங்குநிலைக்கு செல்கிறது. அதற்குமுன் விக்ரமின் புதிய இடத்தில் வைத்து, அதன் ஆய்வுக்கருவிகளான சாஸ்ட், ரம்பா-எல், இல்சா (ILSA) ஆகியன பரிசோதனைகளில் ஈடுபட்டன. அவற்றின் தரவுகள் பூமியில் சேகரிக்கப்பட்டன. 

இப்போது அக்கருவிகள் அனைத்து வைக்கப்பட்டுள்ளன. லேண்டரின் ரிசீவர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரக்யானுக்கு அருகில் விக்ரம் உறங்கும். செப்டெம்பர் 22 ஆம் திகதி அவை மீண்டும் விழித்தெழும் என நம்புகிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (சேது)

https://www.virakesari.lk/article/163870

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான் - 3: தூங்கும் விக்ரம் லேண்டர் உயிர்த்தெழப் போவது எப்போது?

சந்திரயான்-3

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் மையத்தில் ஒரு சிறிய புள்ளியாகத் தென்படுகிறது. "சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தின் தரையில் இறங்கியது.

அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும் தனது லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா கூறியிருக்கிறது.

 
சந்திரயான்-3

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலாவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான் என்ற ரோவரை அதன் வயிற்றில் சுமந்து கொண்டு - நிலாவின் தென் துருவத்திலிருந்து சுமார் 600 கிமீ தொலைவில் தரையைத் தொட்டது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்குக் கிடைத்தது.

அமெரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் மென்மையான தரையிறங்கிய நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

லேண்டர் மற்றும் ரோவர் நிலாவின் மேற்பரப்பில் சுமார் 10 நாட்கள் செலவிட்டன. தரவு மற்றும் படங்களை சேகரித்தன. "தங்கள் பணி நோக்கங்களை கடந்து விட்டதாக" இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கூறுகிறது.

கடந்த வார இறுதியில், சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால் லேண்டரும் ரோவரும் உறக்க நிலையில் வைக்கப்பட்டதாக கூறியது.

"சூரிய சக்தி குறைந்து பேட்டரி தீர்ந்தவுடன் லேண்டரும் ரோவரும் தூங்கிவிடும்" என்று இஸ்ரோ கூறியது.

சந்திரனில் சூரியன் கதிர் விழும் அடுத்த நாள் தொடங்கும் போது செப்டம்பர் 22-ஆம் தேதி லேண்டரும் ரோவரும் மீண்டும் உயிர்த்து எழும் என்று நம்புவதாக இஸ்ரோ மேலும் கூறியது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை அவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கும் செயல்படுவதற்கும் சூரிய ஒளி தேவைப்படுகிறது.

 
சந்திரயான்-3

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

பிரக்யான் ரோவர் நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு நடத்தியது

இந்திய விண்வெளி நிறுவனம் லேண்டர் மற்றும் ரோவரின் இயக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவர்கள் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளது பற்றிய வழக்கமான புதுப்பிப்புகளை வழங்கியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், சந்திர மேற்பரப்பில் விக்ரம் ஒரு "வெற்றிகரமான ஹாப் பரிசோதனை" செய்ததாக இஸ்ரோ கூறியது. இந்தப் பரிசோதனையின்போது விக்ரம் லேண்டர் மீண்டும் ஒருமுறை நிலவின் தரைப்பரப்பில் இருந்து குதித்து மீண்டும் தரையிறங்கியது.

சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் "அதன் சிறு ராக்கெட்டுகளை உயிர்ப்பித்தவுடன் அது சுமார் 40 உயரத்துக்கு குதித்து 30-40 தொலைவில் தரையிறங்கியது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் நிலாவில் இருந்து பொருள்களை கொண்டு வரவும், மனிதர்களை அழைத்துச் செல்லவும் விண்கலம் பயன்படுத்தப்படலாம் என்று அது மேலும் கூறியது.

https://www.bbc.com/tamil/articles/c72e3x1ze1vo

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோவுக்கு உதவியவர்கள் ஊதியம் கிடைக்காமல் டீ விற்கும் அவலம்

டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படாத காரணத்தால் அவர்கள் இட்லி கடை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆனந்த் தத்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்

சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி நிலவின் தென்துருவத்தில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற சிறப்பை பெற்றது.

சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்கிய நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார். விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய போது, ஜோகன்னஸ்பர்க்கிலிருந்தே அவர் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அதே நேரத்தில் பிரதமர் மோதி உரையாற்றிய போது, சந்திரயான் விண்கலத்துக்கான ஏவுதளத்தை உருவாக்கிய ஊழியர்கள், தங்களுக்கு 18 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஞ்சியில் இருக்கும் துர்வாவில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்இசி) நிறுவனத்தில் பணிபுரியும் 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

எச்இசி (HEC) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் (CPSU). 810 டன் ஏவுதளத்தை உருவாக்கியதைத் தவிர, எச்இசி சந்திரயானுக்கான மடிப்பு தளம், நெகிழ் கதவு உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளது.

மேலும், இஸ்ரோவுக்காக மற்றொரு ஏவுதளத்தையும் ஹெச்இசி தற்போது உருவாக்கி வருகிறது.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் டீ விற்கிறார், மற்றொருவர் இட்லி விற்கிறார்

ஹெச்இசியில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றும் தீபக் குமார் உபராரியா கடந்த சில நாட்களாக இட்லி விற்பனை செய்து வருகிறார்.

இவரது கடை ராஞ்சியில் இருக்கும் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்ட மன்ற கட்டடத்துக்கு நேர் எதிரில் உள்ளது.

காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறார். மாலையில் மீண்டும் இட்லிகளை விற்றுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்.

தீபக் குமார் உபராரியா பிபிசியிடம் பேசுகையில், "முதலில் நான் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்து வந்தேன். அதில் இருந்து 2 லட்சம் ரூபாய் கடன் அளவை முழுமையாகப் பெற்ற பின், அதைத் திரும்பக் கட்டுவது இயலாமல் போனது. இதனால் நான் கடனைத் திருப்பிச் செலுத்தாதவனாக வங்கியால் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு, உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு என் வீட்டை நிர்வகிக்கத் தொடங்கினேன்," என்றார்.

"இதுவரை நாலு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். வாங்கிய கடனை திருப்பித் தராததால், அதன் பின் எனக்கு யாரும் கடன் கொடுக்கவில்லை. இதன் காரணமாக, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நிர்வகித்தேன்." என்றார்.

தனது குடும்பத்தின் ஆதரவற்ற நிலையை விளக்கும் தீபக், "நான் பசியால் உயிர் விடுவதைத் தவிற வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த போது, சிறிய அளவில் ஒரு இட்லி கடையைத் திறந்தேன். என் மனைவிக்கு நன்றாக இட்லி செய்யத் தெரியும். இந்தக் கடையில் நான் தினமும் 300 முதல் 400 ரூபாய் வரை இட்லிகளை விற்று வருகிறேன். இதில் சில சமயம் ரூ 50 அல்லது ரூ. 100 லாபம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு எனது குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன்," என்றார்.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

அலுவலகம் செல்லும் முன்பும், அலுவலகத்தில் இருந்து வந்த பின்பும் சிறுசிறு தொழில்களைச் செய்து பணியாளர்கள் குடும்பத்தை நிர்வகித்து வருகின்றனர்.

தீபக் குமார் உபராரியா மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2012 ஆம் ஆண்டில், தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அந்த வேலையை விட்டுவிட்டு எச்இசி-யில் ரூ.8,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த வருடம் அவர்களுடைய கல்விக் கட்டணத்தை என்னால் இன்னும் கட்ட முடியவில்லை. பள்ளிகளில் இருந்து தினமும் நோட்டீஸ் அனுப்புகின்றனர். குழந்தைகள் படிக்கும் வகுப்பில் கூட எச்இசி-யில் பணியாற்றும் பெற்றோரின் குழந்தைகள் யார் என்று ஆசிரியர் கேட்டு, அவர்களை எழுந்து நிற்கச் சொல்கிறார்," என்றார்.

"இதற்குப் பிறகு அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். என் மகள்கள் இருவரும் அழுதுகொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் அழுவதைப் பார்க்கும் போது, என் இதயம் உடைகிறது. ஆனால் நான் அவர்கள் முன் அழுவதில்லை," என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

இதைச் சொல்லும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் வடிந்தது.

இது தீபக் குமார் உபராரியாவின் நிலை மட்டுமல்ல. அவரைப் போலவே, எச்இசியுடன் தொடர்புடைய வேறு சிலரும் இதேபோன்ற வேலையைச் செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.

உதாரணமாக, மதுர் குமார் என்பவரை எடுத்துக்கொண்டால், அவர் மோமோஸ் விற்பனை செய்துவருகிறார். பிரசன்னா என்பவர் டீ விற்கிறார். மிதிலேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் குமார் கார் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாததால், கடன் செலுத்தாதவர் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சஞ்சய் டிர்கி என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பணம் இல்லாத காரணத்தாலும், உரிய சிகிச்சை கிடைக்காததாலும் சசிகுமார் என்பவரின் தாய் உயிரிழந்தார்.

இவர்களைப் போல் மொத்தம் 2,800 பணியாளர்கள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து பேரை எடுத்துக் கொண்டாலும், 14,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக இந்த துயர நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பி வேலைக்குச் சேர்ந்தவர்கள் தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு 'இந்தியா' கூட்டணியின் ஆதரவு

செப்டம்பர் 14 அன்று, 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் எச்இசி பணியாளர்களின் துயரம் தொடர்பாக ராஜ்பவன் முன் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “எச்இசி என்பது பண்டிட் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் தத்தளிக்கிறது என்பதைக் காட்டிலும், அதைக் காப்பாற்றுவது நமது பொறுப்பு. வியர்வை காய்வதற்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்," என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் கூறுகையில், “எச்இசி ஊழியர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைக்காரர் அவர்களுக்கு ரேஷன் பொருட்களைத் தருவதில்லை. மத்திய அரசின் கொள்கை எச்இசியின் கழுத்தை நெரித்துவிட்டது. அதை தனியார் முதலாளிகளுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, நிதி ஆயோக் 48 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை விற்பனைக்கு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது," என்றார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மத்திய பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “நாட்டை வடிவமைக்க உழைத்த தாய் தான் இந்த (எச்இசி) நிறுவனம். அதை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க மோதி அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம்," என்றார்.

'எனக்கு ஏன் சம்பளம் கிடைக்கவில்லை?'

மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நத்வானி கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் (ஆகஸ்ட், 2023) கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் எச்இசி தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எச்இசி என்பது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனி மற்றும் சுதந்திரமான நிறுவனம் என்று அரசு கூறியது. அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அதன் சொந்த வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது என்பதுடன் தொடர்ச்சியான நஷ்டங்களால் பெரும் கடன்களை எதிர்கொள்கிறது என்றும் அரசு கூறியது.

இந்த பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எச்இசி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டில் ரூ.93.67 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.405.37 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.175.78 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.256.07 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.283.58 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்றுமுதல் ரூ.356.21 கோடியில் இருந்து ரூ.87.52 கோடியாக குறைந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 16 சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அதேசமயம் 2022-23 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத அறிக்கையின்படி, தற்போது இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 1.39 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மட்டும் எச்இசிக்கு உடனடியாக சுமார் ரூ.153 கோடி தேவைப்படுகிறது.

எச்இசி அதிகாரிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்நிறுவனத்தின் மொத்த கடன் சுமை சுமார் ரூ.2,000 கோடியாக உள்ளது.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

நவீனமயமாக்கப்படாததாலேயே எச்இசி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக அங்கு பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் எச்இசி தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது?

எச்இசி அதிகாரிகள் சங்கத் தலைவர் பிரேம்சங்கர் பாஸ்வான் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக நிரந்தர நிர்வாக இயக்குனர் (சிஎம்டி) நியமிக்கப்படவில்லை என்றும், தயாரிப்பு துறைக்கான இயக்குனர் நியமிக்கப்படவில்லை என்றும், இயந்திரங்கள் நவீனப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசிய போது, ''நிரந்தர தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) இல்லாததால், கோப்புகள் பல மாதங்களாக சுற்றி வருகின்றன. தற்போதைய எங்கள் பொறுப்பு நிர்வாக இயக்குனர் நளின் சிங்கால் முதன்மையாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். அவர் எச்இசிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே வந்துள்ளார். பிறகு எப்படி நிர்வாகம் சரியாக நடக்கும்?" எனக் கேட்கிறார்.

பிரேம்சங்கர் தொடர்ந்து பேசிய போது, “ஹெவி மெஷின் பில்டிங் பிளாண்ட் (HMBP), ஹெவி மெஷின் டூல்ஸ் பிளாண்ட் (HMTP), ஃபவுண்டரி ஃபோர்ஜ் ஆலை (FFP) மற்றும் திட்டப் பிரிவு ஆகிய மூன்று ஆலைகள் உள்ளன. உற்பத்தித் துறை இயக்குனர்களாக இருப்பவர்கள் மூன்று ஆலைகளில் பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் வேலைகளை ஒருங்கிணைக்கிறார்கள்," என்றார்.

அதாவது இயக்குனர் மட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நிர்வாக இயக்குனரிடம் போக வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுவே உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்கிறார்.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும் என எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத் கூறுகிறார்.

நவீன இயந்திரங்கள் இல்லாததே பெரும் பிரச்னை

பிரேம்சங்கர் மேலும் பேசிய போது, “எச்இசி நிறுவனத்தில் 6,000 டன் ஹைட்ராலிக் பிரஸ் இருக்கிறது. ஆனால், அது மோசமான நிலையில் உள்ளது. இந்த பிரஸ்ஸில் தான் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையத்திடம் (BARC) தற்போது அணு உலைக்கான ஆர்டருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது. இப்போது இந்த ஆர்டரை தனியார் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். எங்கள் ஹைட்ராலிக் பிரஸ் நன்றாக இருந்திருந்தால், எல் அண்ட் டிக்கு ஆர்டரை வழங்க வேண்டிய அவசியமில்லை, நாங்கள் லாபகரமாக இருந்திருப்போம்," என்றார்.

எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத், இதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தைச் சுட்டிக்காட்டினார், “நிறுவனம் மிகக் குறைவான மொத்த ஆர்டர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஏவுதளத்தை உருவாக்க வேண்டும் என்றால், ஒன்று மட்டுமே கட்டப்படும். அதேசமயம் ஒன்றுக்கு மேல் சம்பாதித்தால் லாபம் அதிகமாக இருக்கும். ஏனெனில் அதே அளவு பணத்திற்கு ஒரு உபகரணத்தை தயார் செய்யலாம். சற்றே அதிக செலவில் அதிக உபகரணங்களை தயார் செய்யலாம்," என்றார்.

“ஒரு சாதனத்திற்காக நாம் தயாரிக்கும் அச்சு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த அச்சும் கெட்டுவிடும். இதைத் தவிர, ஐம்பது வருடங்களாக வேலை செய்யும் அதே இயந்திரத்தில் வேலை செய்ய முடியுமா? இல்லை என்பதே பதில். புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும்,” என்றார்.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

சந்திரயான் விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியதில் எச்இசி நிறுவனத்தின் உதவி பெரும் அளவில் பயன் அளித்துள்ளது.

ராமசங்கர் பிரசாத் தொடர்ந்து பேசிய போது, “31 டிசம்பர் 1958 இல் நிறுவப்பட்ட நேரத்தில், சோவியத் ரஷ்யா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் ஒத்துழைப்புடன் எச்இசி தயாரிக்கப்பட்டது. அப்போது நிறுவப்பட்ட இயந்திரங்கள் இன்று வரை மாற்றப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படவில்லை,” என்றார்.

அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை 2023 பிப்ரவரி 7ஆம் தேதியும், மீண்டும் ஜூன் 26ஆம் தேதியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, நிறுவனத்தை மீண்டும் லாபநோக்கில் செயல்படும் விதமாகக் கொண்டு வர நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர்களை நியமிப்பது மட்டுமின்றி கூடுதலாக 3000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோதி அப்பதவிக்கு வருவதற்கு முன், எச்இசி தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார்.

2013ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோதி பேசுகையில், “ஒரு காலத்தில் பெருமையுடன் இருந்த எச்இசி தொழிற்சாலை இப்போது அந்த நிலையில் இல்லை," எனப்பேசினார்.

அவர் தனது உரையில், “இந்தியாவில் உருவாகும் பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தடுமாறி வீழ்ச்சியடைகின்றன. ஒன்று அதை விற்க வேண்டிய அவசியம் உள்ளது. அல்லது அதை மூடவேண்டிய தேவை ஏற்படுகிறது. இது போன்ற நிலையில், அந்நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது," என்றார்.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பல பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக எச்இசி பணியாளர்கள் கூறுகின்றனர்.

'சந்திரயான்-3யில் எச்இசி பங்களிப்பு இல்லை'

ராஜ்யசபா எம்பி பரிமல் நத்வானி, சந்திரயான்-3க்கான ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்களை உருவாக்க எச்இசிக்கு அங்கீகாரம் உள்ளதா என்றும் மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கனரக தொழில்துறை இணையமைச்சர் கிருஷ்ணபால் குர்ஜார், சந்திரயான்-3க்கான எந்த உபகரணத்தையும் தயாரிக்க எச்இசிக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார்.

இருப்பினும், 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், எச்இசி மொபைல் லாஞ்சிங் பெடஸ்டல், ஹாமர் ஹெட் டவர் கிரேன், ஈஓடி கிரேன், ஃபோல்டிங் கம் ரிபொஸிஸனபிள் பிளாட்ஃபார்ம், ஹொரிசாண்டல் ஸ்லைடிங் டோர்ஸ் போன்றவற்றை இஸ்ரோவுக்கு வழங்கியதாக அவர் தனது பதிலில் ஒப்புக்கொண்டார்.

எச்இசியில் மேலாளராகப் பணிபுரியும் புரேந்து தத் மிஸ்ரா கூறுகையில், “சந்திரயான்-3க்கு தனி ஏவுதளம் எதுவும் உருவாக்கப்படாததால் தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசு சரியாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எங்களைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் ஏவுதளங்களை உருவாக்கவில்லை," என்றார்.

"வெளிப்படையாக, நாங்கள் முன்பு தயாரித்து இஸ்ரோவுக்கு வழங்கிய ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்கள் சந்திரயான் -2 மற்றும் சந்திரயான் -3 ஐ விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த பணியில் எச்இசியின் பங்களிப்பு இல்லை என்று அரசாங்கம் கூறினால், அது எப்படி?" எனக்கேட்கிறார் அவர்.

இந்த நேரத்தில், விண்கலங்கள் ஏவப்பட்ட போது, எச்இசியின் இரண்டு பொறியாளர்ள் இஸ்ரோவுக்கு எச்இசி வழங்கிய உபகரணங்களை நிறுவச் சென்றனர் என்றும் அவர் கூறுகிறார்.

 
டீ, இட்லி விற்கும் அவலம்

பட மூலாதாரம்,ANAND DUTT

 
படக்குறிப்பு,

அரசு உதவினால் மட்டுமே எச்இசி நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

அரசு ஏன் உதவவில்லை?

இந்த நிறுவனத்தை காப்பாற்றி முன்னேற்றுவதற்கு மத்திய அரசால் சில நூறு கோடி ரூபாய் மட்டும் உதவ முடியாதா?

இதுகுறித்து ராஞ்சி பாஜக எம்பி சஞ்சய் சேத் கூறுகையில், கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்பி வருவதாகத் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், “இந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அமைச்சரிடம் பலமுறை எழுப்பியுள்ளேன். பிரகாஷ் ஜவடேகர், அர்ஜூன் ராம் மேக்வால், மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் அமைச்சராக இருந்த போதெல்லாம் அவர்களை சந்தித்து இது தொடர்பாகப் பேசினேன்," என்றார்.

ஜூலை 19, 2022 அன்று, சஞ்சய் சேத் மக்களவையில் எச்இசியை சீராக மறுதொடக்கம் செய்ய மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அரசு, இதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தது.

எச்இசி பிரச்னைகளில் குரல் கொடுக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத்காந்த் சஹாய், துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை மூன்று முறை சந்தித்ததாகவும் ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறுகிறார்.

சுபோத் காந்த் சஹய் கூறுகையில், “எச்இசி மூடப்பட்டால் யாரும் ஜார்கண்டில் முதலீடு செய்ய வர மாட்டார்கள். பிரதமர் மோடி எச்இசிக்கு உதவவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்தின் அடையாளத்தை காப்பாற்ற அவர் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

எச்இசி ஏன் முக்கியமானது?

இந்நிறுவனம் தற்போது ரூ.1,356 கோடி மதிப்பிலான ஒர்க் ஆர்டரை வைத்துள்ளது. அதன் வாடிக்கையாளர்களில் ISRO, BARC, DRDO உட்பட நாட்டின் பல பெரிய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அடங்கும். ஆனால், போதிய மூலதனம் இல்லாததால் இவற்றிற்கான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

நம் சாதனைகளைப் பார்த்தால், எச்இசி ஒரு சூப்பர் கண்டக்டிங் சைக்ளோட்ரானை உருவாக்கியுள்ளது. இவை அணு மற்றும் எரிசக்தித் துறை தொடர்பான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.

இவை தவிர, போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் உயர் தாக்க எஃகு அமைப்புகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஏபிஏ தர எஃகு மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்காக குறைந்த அலாய் ஸ்டீல் போர்ஜிங் செய்யும் இயந்திரம் ஆகியவற்றை இந்நிறுவனம் தான் உருவாக்கியது.

இதுமட்டுமின்றி, இஸ்ரோவுக்காக சிறப்பு தர மென்மையான ஸ்டீல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவும் பணிகளுக்கு உதவும் ஆறு அச்சு சிஎன்சி இயந்திரமும் இங்குதான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 105 மிமீ துப்பாக்கி, டி72 டேங்கின் கோபுர வார்ப்பு, இந்தியன் மவுண்டன் கன் மார்க்-2, அர்ஜூன் பிரதான போர் டாங்கியின் கவச எஃகு வார்ப்புகள் ஆகியவை பாதுகாப்புத் துறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ப்ரொப்பல்லர் ஷாஃப்ட் அசெம்பிளி, ரேடார் ஸ்டாக் அசெம்பிளி மற்றும் மெரைன் டீசல் என்ஜின் பிளாக் ஆகியவை எச்இசியால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்திய கடற்படைக் கப்பல் ராணாவுக்கான ஸ்டெர்ன் கியர் அமைப்பின் PYB எந்திரம், 120 மிமீ துப்பாக்கி போன்றவையும் இங்கு தான் தயார் செய்யப்பட்டன.

அணுசக்தி தர எஃகு தயாரிப்பதன் மூலம், எச்இசி, அத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்துள்ளது.

எச்இசி என்பது ஒரு தொழில்துறை அமைப்பாகக் கருதப்படுகிறது. அதாவது மற்ற தொழில்களுக்கு தேவையான கனரக இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, எச்இசி நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு 550 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான உபகரணங்களை தயாரித்து வழங்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cn46neg726yo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குடிக்கிறது கூழ் ஆனால் கொப்பளிக்கிறது பன்னீர்!😂😂

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரயான்-3: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் மீண்டும் இயங்குமா? இஸ்ரோ திட்டம் என்ன?

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம்,X/ISRO

படக்குறிப்பு,

14 நாட்கள் இரவு முடிந்து நிலவின் தென் துருவத்தில் செப்டம்பர் 22 அன்று சூரியன் உதிக்கும்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
  • பதவி, பிபிசிக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

செப்டம்பர் 22 ஆம் தேதி சூரிய உதயத்துக்காக இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது. சூரிய உதயம் என்றால் பூமியில் அல்ல- நிலாவில் சூரிய உதயம் தொடர்பான எதிர்பார்ப்பு அது.

நிலாவில் உறங்கிக் கொண்டிருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அந்த நாளில் எழுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முயற்சி மேற்கொள்ளும்.

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் மற்றும் அதில் உள்ள பிரக்யான் ரோவர் ஆகியவை 14 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை.

சந்திரனின் மேற்பரப்பில் ஒரு நாள் (சந்திர நாள்) என்பது பூமியில் சுமார் 28 நாட்களுக்கு சமம். அதாவது சந்திரனில் சுமார் 14 நாட்கள் பகல் மற்றும் 14 நாட்கள் இரவாக இருக்கும்.

ஆகஸ்ட் 23 அன்று, சந்திரனில் விடியத் தொடங்கியது. அதனால்தான் லேண்டரை இஸ்ரோ அன்று தரையிறக்கியது. செப்டம்பர் 4 ஆம் தேதி நிலவில் பகல் முடிவடைந்ததால், லேண்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடுக்கு இஸ்ரோ மாற்றியது.

 

 

லேண்டர் மற்றும் ரோவர் செயல்பட மின்சாரம் தேவை. சந்திரயான் லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள சோலார் பேனல்கள் சூரிய ஒளியால் இயங்குகின்றன. ஆனால் இரவு துவங்கியதால் அவற்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்திருக்காது.

இரவில் நிலவின் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. அப்போது மைனஸ் 130 டிகிரியாக வெப்பம் குறையும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (நாசா) தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 253 டிகிரியை எட்டும்.

இத்தகைய குறைந்த வெப்பநிலையில், ரோவர் மற்றும் லேண்டர்கள் இரண்டுமே உறைந்துவிடும். சூரியன் மீண்டும் சந்திரனின் மேல் உதிக்கும் வரை அவை அப்படியே இருக்கும். செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மீண்டும் அங்கே சூரிய ஒளி படரும். எனவே அவற்றை மீண்டும் வேலை செய்யவைப்பது சவால் மிகுந்த பணியாக இருக்கும்.

"இரவில், சந்திரனில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரிக்கு கீழே குறையும். இத்தகைய சூழலில் பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடையாது என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் நாங்கள் சில சோதனைகளை நடத்தினோம். எனவே விக்ரமும், பிரக்யானும் கடுமையான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஊடகங்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

 
நிலவில் சூரிய உதயம்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,

சூரியன் உதிக்கும் போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்படுமா என்பதை அறிய இஸ்ரோ மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளது.

மீண்டும் செயல்படாவிட்டால் என்ன செய்வது?

நிலவில் ஸ்லீப் மோடில் இருக்கும் ரோவரை செப்டம்பர் 22ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ முயற்சித்து வருகிறது. அதன் பேட்டரியில் சார்ஜ் முழுமையாக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் மற்றும் ரோவரின் ரிசீவர்கள் நல்ல இயக்கத்தில் உள்ளன.

ஸ்லீப் மோடியில் உள்ள லேண்டரும், ரோவரும் மீண்டும் இயங்கினால் நிலவு குறித்த கூடுதல் தகவல்களை சேகரித்து, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்ததைப் போலவே, அவற்றை பூமிக்கு அனுப்பும் பணி தொடரும். அப்படியில்லை என்றால்,'இந்தியாவின் தூதுவராக' அவை இரண்டும் நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவை மீண்டும் செயல்படாவிட்டால் அவற்றின் நிலை என்னவாகும், எதிர்காலத்தில் மீண்டும் அவை செயல்படும் வாய்ப்பு இருக்கிறதா, நிலவுக்கு செல்லும் பிற நாடுகளின் ரோவர்கள் 'பிரக்யானிடம்' இருந்து ஏதேனும் ரகசிய தகவல்களை சேகரிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இவற்றுக்கான விடைகளை அறிய ஆந்திரப் பல்கலைக்கழக விண்வெளி இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி. ஸ்ரீநிவாஸிடம் பிபிசி பேசியது.

இஸ்ரோ திட்டமான 'ஜியோஸ்பியர் - பயோஸ்பியர்' திட்டத்திற்காக ஆந்திரா பல்கலைக்கழகம் சார்பில் பி.ஸ்ரீனிவாஸ் ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்-3 இன் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ அணுகிய இயற்பியல் நிபுணர்கள் குழுவில் ஸ்ரீனிவாஸும் ஒருவர். அவர் பிபிசியிடம் பேசிய போது பின்வரும் பதில்களை வழங்கினார்.

 
நிலவில் சூரிய உதயம்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,

லேண்டரும், ரோவரும் தயாரிக்கப்பட்ட போதே 14 நாட்கள் ஆயுட்காலத்துடன் தயாரிக்கப்பட்டன.

லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் பூமிக்கு கொண்டு வர முடியாதா?

இது போன்ற ரோவர்களை எந்த ஒரு விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பினாலும், அது 'ஒரு வழி பயணமாகவே' இருக்கும்.

அவற்றை மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் முயற்சியின் போது, அதற்கான செலவில் மற்றொரு விண்கலத்தைத் தயாரித்து விண்ணுக்கு ஏவி விட முடியும்.

 
நிலவில் சூரிய உதயம்

பட மூலாதாரம்,MIKIELL/GETTY IMAGES

படக்குறிப்பு,

விண்வெளி ஆய்வில் கிடைக்கும் தகவல்களை அனைத்து நாடுகளும், பிற அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்துகொள்கின்றன.

லேண்டர், ரோவர் மீண்டும் வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்?

செப்டம்பர் 22 அன்று சூரிய ஒளி மீண்டும் வரும்போது, ரோவரும், லேண்டரும் வேலை செய்யவில்லை என்றால், அவை எப்போதும் செயல்படாது.

ஏனெனில் அவை தயாரிக்கப்பட்ட போது, அவற்றின் ஆயுட்காலம் 14 நாட்களுக்கு வடிவமைக்கப்பட்டது.

செயல்படாத விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் நிலவின் மேற்பரப்பில் கழிவுகளாக மாறமுடியுமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.

 
நிலவில் சூரிய உதயம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

ஒருவேளை லேண்டரும், ரோவரும் செயல்படாமல் போனால் அவற்றை மீண்டும் செயல்படுத்த முடியாது.

எதிர்காலத்தில் மீண்டும் இயங்கும் வாய்ப்புகளே இல்லையா?

அவற்றை மீண்டும் இயக்க முடியாது. அது குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அத்தகைய தொழில்நுட்பம் இதுவரை உருவாக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் மற்றொரு ரோவர் அல்லது ஏதேனும் ஒரு யூனிட்டை அனுப்புவதன் மூலம் ஏற்கனவே உள்ள ரோவர்களைச் செயல்படுத்த நடத்தப்படும் சோதனைகள் இன்னும் கோட்பாட்டு அளவிலேயே உள்ளன.

அப்படி முடியுமென்றால், ஒரு வேளை நாம் ஏற்கெனவே அனுப்பிய ரோவர் பழுதடைந்திருந்தாலும், அதை பழுது பார்த்து, மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் அந்த நிலையை நாம் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

சந்திரனின் மேற்பரப்பில் வேலை செய்யாத ரோவர்கள் மற்றும் லேண்டர்கள் சந்திரனின் குப்பைகளாகக் கணக்கிடப்படுகின்றன.

அவை அங்கு தொடர்ந்து செயல்படுவது மிகவும் கடினம். வேலை செய்யாதவற்றிடமிருந்து எந்த தகவலையும் சேகரிக்க முடியாது.

ஏனென்றால், நிலவில் ஏதாவது ஒன்று ஒருமுறை செயலிழந்தால், அது நிரந்தரமாகச் செயலிழந்துவிடும்.

 
நிலவில் சூரிய உதயம்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,

விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படும் சாதனங்கள் செயல்படாமல் போகும் போது, அவை வெறும் குப்பைகளாக மாறுகின்றன.

வெளிநாட்டு ரோவர்கள் பிரக்யானிடம் தகவல்களை சேகரிக்க முடியுமா?

எதிர்காலத்தில் வேறு எந்த நாடும் நிலவில் சோதனைக்காக லேண்டர்கள் மற்றும் ரோவர்களை அனுப்புகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த வழியில் செல்லும் வெளிநாட்டு ரோவர்களுக்கு தற்போது இருக்கும் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றால் எந்த தடையும் இருக்காது. மேலும், அவற்றால் பிரக்யான் ரோவரை பயன்படுத்தவும் முடியாது.

நிலவுக்குச் சென்ற வெளிநாட்டு ரோவர்களும் பிற யூனிட்டுகளும் தற்போது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பிரக்யான் ரோவரிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால், எந்தவொரு நாடும் தங்கள் நாட்டின் சார்பாக ரோவர் மற்றும் பிற யூனிட்டுகளை விண்வெளிக்கு அனுப்பும் போது, அந்நாடுகள் தங்கள் விவரங்களை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுடனும் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, அவற்றிடம் இருந்து புதிய தகவல்கள் எவையும் சேகரிக்கப்பட வாய்ப்பில்லை.

ரோவர்கள் சேகரித்து நமக்குத் திருப்பி அனுப்பும் தகவல்கள் மதிப்புமிக்க தகவல்களாக இருக்கும். ஆனால் அந்த சாதனங்களில் எந்த ரகசியமும் இல்லை. இது போன்ற சாதனங்களை உற்பத்தி செய்யும் போதே அவற்றின் வாழ்நாள் நிர்ணயிக்கப்படுவதால், பின்னர் அவற்றிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியாது.

https://www.bbc.com/tamil/articles/cd1zd2n645wo




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.