Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விம்பிள்டனில் 7 தடவைகள் சம்பியனான ஜோகோவிச்சை வீழ்த்தி 20 வயதான அல்காரஸ் சம்பியனானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

17 JUL, 2023 | 10:24 AM
image
 

விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். 

ஞாயிற்றுக்கிழமை (16)  நடைபெற்ற இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை  1-6, 7-6 (8/6), 6-1, 3-6, 6-4 விகிதத்தில்அல்காரஸ்   தோற்கடித்தார். 

20 வயதேயான கார்லோஸ் அல்காரஸுக்கு இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டமாகும். 

Carlos-Alcaraz---2023-wimbledon-champion

36 வயதான நோவாக் ஜோகோவிச் உலகின் 2 ஆம் நிலை வீரர். ஆண்களில் 23 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். இவ்வருடத்தின் அவுஸ்திரேலியஇ பிரெஞ்சு பகிரங்க சுற்றுப்போட்டிகளிலும் அவரே சம்பியனானார்.

 

விம்பிள்டனில் 7 தடவைகள் ஜோகோவிச் சம்பியனாகியவர். 2018 முதல் தொடர்ச்சியாக 4 தடவைகள் விம்பிள்டன் சம்பியனாகிய அவர், இம்முறை தொடர்ச்சியான 5 ஆவது விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை குறி வைத்திருந்தார். இம்முறை அவர் சம்பியனானால்இ 8 விம்பிள்டன் பட்டங்களை வென்ற சுவிட்ஸர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை சமப்படுத்தியிருப்பார். இதன் மூலம் 24 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற அவுஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையையும் ஜோகோவிச் சமப்படுத்தியிரு ப்பார்.

எனினும் அவரை இளம் வீரர் அல்காரஸ் கடும் போராட்டத்தின் பின் வெற்றிகொண்டார். 4 மணித்தியாலங்கள், 42 நிமிடங்கள் இப்போட்டி நீடித்தது.

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்ற சம்பியனான 3 ஆவது ஸ்பானிய வீரர் அல்காரஸ் ஆவார். 

ஸ்பானிய வீரர்களான 1966 ஆம் ஆண்டு மனுவெல் சன்டானாவும், 2008, 2010 ஆம் ஆண்டுகளில் ரபாயெல் நடாலும் இப்பட்டத்தை வென்றிருந்தனர்.

இதற்குமுன் 2022 ஆம் ஆண்டு அமெரிக்கப் பகிரங்க சுற்றுப்போட்டியில் அவர் சம்பியனாகியிருந்தார். 

ஜாகோவிச்சைவிட 16 வயது இளையவரான அல்காரஸ், போட்டியின் பின்னர் ஜோகோவிச் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், நீங்கள் எனக்கு மிகுந்த உந்துதலாக இருந்தீர்கள். உங்களை பார்த்து நான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன்' என்றார்.

அல்காரஸுக்கான சம்பியன் கிண்ணத்தை வேல்ஸ் இளவரசி கெத்தரின் கையளித்தார்.

Carlos-Alcaraz---2023-wimbledon-champion

ஆல்காரஸ் இவ்வெற்றிக்குத் தகுதியானவர் என நோவாக் ஜோகோவிச் பாராட்டினார்.

காயம் காரணமாக இப்போட்டிகளில் பங்குபற்றாத ரபாயெல் நடாலும், அல்காரஸுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  

விம்பிள்டனில் தொடர்ச்சியான 34 போட்டிகளில் வெற்றியீட்டிய பின்னர் இப்போது முதல் தடவையாக ஜோகோவிச் தோல்வியுற்றுள்ளார். விம்பிள்டன் இறுதிப்போட்டிகளில் 2013 ஆம் ஆண்டின் பின்னர் அவர் தோல்வியுற்றமை இதுவே முதல் தடவையாகும்.

https://www.virakesari.lk/article/160180

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

அல்கேரஸுக்கு வாழ்த்துக்கள். தான் சிறுவயது முதல் பார்த்து வளர்ந்த  ரஃவேல் என கூறி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
விம்பிள்டனில் வென்ற செக் வீராங்கனைக்கும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடத்திற்குப் பின் முன்னணியில் இல்லாத ஒருவர் வென்றதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்    விளையாட்டுலிம் சரி  அரசியலிலும் சரி   இளைஞர்கள் முன்னுக்கு வரவேண்டும்   அல்லது விடவேண்டும்   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விம்பிடள்டன் மகளிர் ஒற்றையர சம்பியனானார் மார்கேத்தா

Published By: SETHU

16 JUL, 2023 | 12:33 PM
image
 

2023 விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை மார்கெத்தா வொன்ட்ரௌசோவா சம்பியனாகியுள்ளார்.

சனிக்கிழமை (15) நடைபெற்ற இறுதிப்போட்டியில்  டுனீஷிய வீராங்கனை மார்கேத்தா ஜபேரை 6-4. 6-4 விகிதத்தில் வொன்ட்ரௌசோவா வென்றார்.

24 வயதான மார்கெத்தா வொன்ட்ரௌசோவா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் இதுவாகும்.

Marketa-Vondrousova---Ons-Jabeur--Wimble

விம்பிள்டன் பகிரங்க சுற்றுப்போட்டியொன்றில் தரவரிசைக்கு உட்படாத வீராங்கனை ஒருவர் சம்பியனாகியமையும் இதுவே முதல் தடவையாகும்.

விம்பிள்டன் போட்டிகளில் சம்பியனாகிய 3 ஆவது செக் குடியரசு வீராங்கனை மார்கேத்தா. ஜானா நொவோட்டான. பெஸ்ட்ரா கிவிட்டோவா ஆகியோர் ஏற்கெனவே விம்பிள்டன் சம்பியனாகிய செக் குடியரசு வீராங்கனைகள் ஆவர்.

https://www.virakesari.lk/article/160135

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விம்பிள்டனில் தோல்வியடைந்த ஒன்ஸ் ஜபேருக்கு ஆறுதல் கூறிய இளவரசி கேட் மிடில்டன்

17 JUL, 2023 | 04:24 PM
image
 

விம்பிள்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஒன்ஸ் ஜபேருக்கு இளவரசி கேட் மிடில்டன் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

SEI164210021-578x800.jpg

 

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட போட்டிகளில் மிக முக்கியமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த 3 ஆம் தேதி லண்டனில் தொடங்கி நடந்து வந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசைப் பட்டியலில் 42ஆவது இடத்திலுள்ள செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, உலகின் முன்னணி வீரரில் ஒருவரான துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் ஒன்ஸ் ஜபேரை 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்திய மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே, கடந்த ஆண்டும் எலினா ரைபாகினாவிடம் இதே விம்பிள்டன் இறுதி போட்டியில் தோல்வியுற்ற ஜபேர், இந்த முறையும் இறுதி வரை வந்து தோல்வியுற்றதால் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். குறிப்பாக ரன்னர்-அப் கேடயம் கொடுக்கப்பட்ட போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் போட்டியை காண சென்றிருந்த இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மருமகளும், டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்மின் மனைவியுமான இளவரசி கேட் மிடில்டன், ஒன்ஸ் ஜபேர் கண் கலங்கிய போது,  உடனே ஒன்ஸ் ஜபேர் இருந்த இடத்திற்கே சென்று ஆறுதல் கூறியதோடு, அவரது கைகளை பிடித்து நம்பிக்கை கொடுத்து அன்பான சில வார்த்தைகளையும் பேசியுள்ளார்.

fa343985e69a4b4ee36ad62c41bb91d5.jpg

ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போல விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஒன்ஸ் ஜபேர் தோல்வியுற்ற போது கேட் மிடில்டன் ஆறுதல் கூறி இருந்த நிலையில், இந்த முறையும் இதே மாதிரியான நிகழ்வு நடந்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோவை விம்பிள்டன் அதன் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது இது வைரலாகி வருகிறது.

https://www.virakesari.lk/article/160238

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருமாதிரி Younger Generation வீரர் ஒருவர் ஜோகோவிச்சை தோற்கடித்து  Grand Slam பட்டம் வென்றுவிட்டார்.
நல்ல மேட்ச். முதல் செட் 6 - 1 என்றவுடன் போய் படுத்துவிட்டேன். 2 மணி நேரத்தின் பின் வந்து பார்த்தால் Alcaraz  அடுத்த 2 செட்டையும் வென்றது தெரிந்தது. அதற்குப்பின் மேட்ச் முடியும் வரை இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

அப்பாடா ஒருமாதிரி Younger Generation வீரர் ஒருவர் ஜோகோவிச்சை தோற்கடித்து  Grand Slam பட்டம் வென்றுவிட்டார்.
நல்ல மேட்ச். முதல் செட் 6 - 1 என்றவுடன் போய் படுத்துவிட்டேன். 2 மணி நேரத்தின் பின் வந்து பார்த்தால் Alcaraz  அடுத்த 2 செட்டையும் வென்றது தெரிந்தது. அதற்குப்பின் மேட்ச் முடியும் வரை இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ந‌ண்பா..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.