Jump to content

இலங்கை: ஆதிகுடி வேடுவர்களை சிங்களர்கள் ஏற்கும் போது தமிழர்கள் ஒதுக்கி வைப்பது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

இலங்கை ஆதிகுடிகளாக வேடுவர் தேன் எடுக்கிறார் 

கட்டுரை தகவல்
  • எழுதியவர், யூ.எல். மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 18 ஜூலை 2023, 07:42 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர்.

ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்க்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும் இழந்து வாழும் இந்த மக்கள் கூட்டத்திடம், வேடுவர்களுக்கேயுரிய அம்சங்களென சில விடயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 'சந்தோசபுரம்' எனும் கிராமத்திலுள்ள வரதன் - வேடுவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் வேடுவர்களுக்கான 'குவேனி பழங்குடியினர் நலன்புரி அமைப்பின்' செயலாளராக பணியாற்றுகின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் மற்றும் வெருகல் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 11 வேடுவர் கிராமங்களை ஒன்றிணைத்து, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

 

குவேனி என்பவர் யார்?

கிறிஸ்துவுக்கு முன்னர் 5ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து விஜயனும் அவரின் நண்பர்களும் இலங்கைக்கு வந்தபோது, இயக்கர் குலப் பெண்ணான குவேனியைக் கண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டதாக பௌத்தர்களின் புனித நூலான மகாவம்சம் கூறுகிறது.

இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில், இலங்கையை ஆட்சிபுரிந்த விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த குழந்தைகளின் வழித்தோன்றல்களே தாங்கள் என, வரதன் கூறுகின்றார். ஆனால் இதனை நிரூபிப்பதற்கான சான்றுகள் எவையும் அவர்களிடமில்லை. இருந்தபோதும் அவர்களின் பிறப்புச் சான்றிதழில் 'சாதி' எனும் பகுதியில் 'வேடர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடர்களின் வாழ்க்கை - சாதாரண மக்களின் வாழ்க்கை முறையிலும் வேறுபட்டதாக ஆதியில் இருந்தது. காட்டில் அல்லது காட்டை அண்டிய பகுதிகளில் இவர்கள் வாழ்ந்தனர். மிருகங்களை வேட்டையாடுதல், காட்டில் தேன் எடுத்தல் போன்றவை இவர்களின் பிரதான தொழில்களாக இருந்தன.

ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்னர் வேடர்களும் காட்டிலிருந்து வெளியே வந்து - சாதாரண வாழ்க்கை முறைக்கு பழகி விட்டனர். அவர்களின் தொழில்களும் மாறி விட்டன. ஆனால் காட்டுக்குச் சென்று தேன் எடுக்கும் மூதாதையர் தொழிலை மட்டும், இன்னும் இவர்கள் கைவிடவில்லை.

காட்டிலிருந்து வெளியேறிய நிலையில், சிங்களவர்களை அண்மித்து வாழும் வேடுவர்கள் - சிங்களவர்களாகவும், தமிழர்களின் பிரதேசங்களுக்கு அருகாமையில் வாழ்கின்றவர்கள் தமிழர்களாகவும் அடையாளம் பெற்றனர் அல்லது அடையாளப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் வேடுவர்கள் - தமிழர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

விஜயன் - குவேனி

தமிழர்களால் ஏற்கப்படாத வேடுவர்கள்

ஆனாலும், ”வேடுவர்கள் இன்னும் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே உள்ளனர்” என்கிறார் சாலையூரைச் சேர்ந்த சிறிசெல்வம். இவர் குவேனி பழங்குடியினர் நலன்புரி அமைப்பின் பொருளாளர். ”வேடுவர்கள் இப்போதும் ஏளனமாகவே பார்க்கப்படுகின்றனர்.

அதனால் எங்கள் சமூகத்தவர்களில் கணிசமானோர் தம்மை 'வேடுவர்' என அடையாளப்படுத்த விரும்புவதில்லை. தங்களை 'தமிழர்' என்றே பெரும்பாலும் சொல்கின்றனர். ஆனால் - தமிழர் சமூகம், வேடுவர்களை 'தமிழர்'களாக ஏற்றுக்கொள்வதில்லை” என்கிறார் சிறிசெல்வம்.

இருந்தபோதும் தேர்தல் காலங்களில் - வேடுவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, அவர்களை 'தமிழர்கள்' என தமிழ்க்கட்சிகள் கூறி, அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

"இயக்கத்தின் (தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர்) ஆதிக்கத்தில் எமது கிராமங்கள் இருந்தபோது, சாதிப் பாகுபாடுகள் பெரிதாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் இயக்கத்தில் முக்கிய பதவிகளை வகித்த எவரும், வேடுவப் பெண்களை திருமணம் செய்து கொண்டதில்லை” எனவும் சிறிசெல்வம் கூறுகின்றார்.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

சிறிசெல்வம், பொருளாளர், குவேனி பழங்குடியினர் நலன்புரி அமைப்பு

முன்னோரை வழிபடுதல்

வேடுவர்கள் - இயற்கையினையும் தமது மூதாதையினரையும் வணங்குவதை தங்களின் வழிபாட்டு முறையாகக் கொண்டவர்கள் என்கிறார் திருகோணமலை - நல்லூரில் வசிக்கும் வேடுவர்களின் மூத்த பிரஜைகளில் ஒருவரான மகாலிங்கம்.

அதேவேளை, சைவ சமயத்திலுள்ள சில தெய்வங்களை வணங்குவதையும், சில சைவ வழிபாட்டு முறைகளையும் சேர்த்து, இங்குள்ள வேடுவர்கள் இப்போது பின்பற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

குஞ்சுப் பாப்பா சாமி அல்லது கப்பல் தெய்வம், பெரிய சாமி, மேனாட்சியம்மன் (மீனாட்சியம்மன் அல்ல) மற்றும் கோம்பனாட்சி போன்றோரை வேடுவர்கள் வணங்குகின்றனர். இவர்கள் தமது மூதாதையர் என்கிறார் மகாலிங்கம்.

ஆனால், இந்த மூதாதையருக்கென உருவங்கள் எவையும் இவர்களிடம் இப்போது இல்லை. மேனாட்சியம்மனுக்கான பாடலொன்றினையும் இதன்போது மகாலிங்களம் பாடிக்காட்டினார். வேடுவர்களின் வரலாறு தொடர்பான பாடலொன்றினையும் மகாலிங்கம் நினைவில் வைத்துப் பாடுகிறார். அந்தப் பாடலில் - வேடுவர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள் எனக் கூறப்படுகிறது.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

மகாலிங்கம், நல்லூர்

இங்குள்ள தமிழ்பேசும் வேடுவர்கள் தமிழ்ப் பெயர்களையே இப்போது கொண்டிருக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ் பெயர்களையே வைக்கின்றனர்.

ஆனால், தமது முன்னோர்களின் பெயர்கள் வேறுவிதமாக இருந்ததாக மகாலிங்கம் கூறுகின்றார். நீலர், செம்பன், குஞ்சர், வாழையப்பர், பத்தர், குண்டபெந்துபாணி, மொந்த மற்றும் முத்தபெத்தப்பா என - தங்கள் ஆண் மூதாதையர்கள் பெயர்களை அவர் சொல்கிறார். அபோன்று பெண் மூதாதையர்களுக்கு நீலி, பத்தி, செம்பி என்கிற பெயர்கள் இருந்ததாகவும் கூறினார்.

தங்கள் மூதாதையர்கள் ஆதிகாலத்தில் மட்டக்களப்பு - கருவப்பங்கேணி எனும் இடத்தில் வாழ்ந்ததாக குவேனி பழங்குடியினர் அமைப்பின் தலைவர் கனகரட்ணம் கூறுகின்றார். இவர் திருகோணமலை - நல்லூரைச் சேர்ந்தவர்.

"கருவப்பங்கேணியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் பின்னர் இடம்பெயர்ந்தனர்.1957ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக, நாங்கள் இப்போது வாழும் நல்லூருக்கு குடிவந்தோம்" என்கிறார் கனகரட்ணம்.

பரம்பரைத் தொழிலை செய்ய முடியாத நிலை

அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, வேடுவர்கள் இப்போது அவர்களின் பரம்பரைத் தொழிலான வேட்டையினைக் கைவிட்டுள்ளனர். இலங்கையில் காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதால், வேட்டையாடுவதிலிருந்து மிக நீண்ட காலமாகவே தாம் விலகியிருப்பதாக கனகரட்ணம் கூறுகின்றார்.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

கனகரட்ணம், தலைவர், குவேனி பழங்குடியினர் அமைப்பு

ஆனால், காட்டுக்குச் சென்று தேன் எடுக்கும் தொழிலை வேடுவர்கள் தொடர்ந்தும் செய்துவருகின்றனர். இருந்தபோதும் இந்தத் தொழிலைச் செய்வதிலும் தாங்கள் பல்வேறு இடர்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாக குவேனி பழங்குடியினர் அமைப்பினர் தலைவர் தெரிவிக்கின்றார்.

"மரப் பொந்துகளிலுள்ள தேன்கூடுகளில் இருந்தே நாங்கள் தேன் எடுப்போம். பொந்துகள் சிறியவையாக இருந்தால், அவற்றினை கோடரியால் சீவி சற்று பெரிதாக்குவோம். தேன் எடுப்பதற்காக ஒருபோதும் மரங்களை நாங்கள் வெட்டி வீழ்த்துவதில்லை. ஆனாலும் தேன் எடுக்கச் செல்லும் வேடுவர்கள், மரங்களை வெட்டி வீழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படுகின்றார்கள். இதற்காக பல தடவை நாங்கள் நீதிமன்றில் அபராதம் செலுத்தியுள்ளோம். காட்டில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி, எடுத்துச் செல்வோரும் உள்னர். அவர்களையும் எங்களையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது” என்கிறார் கனகரட்ணம்.

தேன் விற்றுக் கிடைக்கும் பணம்தான் - பெரும்பாலும் இவர்களின் வருமானமாக உள்ளது. ”நாங்கள் தேன் எடுப்பதிலுள்ள இடர்களை நீக்கும் வகையில், அந்தத் தொழிலைச் செய்யும் வேடுவர்களுக்கென அடையாள அட்டையொன்றினை அறிமுகப்படுத்தி, அதனை எமக்கு அரசு வழங்க வேண்டும்” எனவும் அவர் கேட்கிறார்.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை

கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் மற்றும் தற்போது அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, தமது மூதாதையர் செய்துவந்த தொழில்களைக் கைவிட்டுள்ள வேடுவர்கள், தங்கள் வருமானத்துக்காக நன்நீர் மீன் பிடித்தல் விவசாயம் செய்தல், விறகெடுத்தல் மற்றும் கூலித்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவமரியாதையினால் கைவிடப்படும் கல்வி

தமிழ் பேசும் வேடுவர் சமூகம், கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக கூறுகின்றார் குவேனி பழங்குடியினர் அமைப்பின் செயலாளர் வரதன். குழந்தைகளின் கல்வியில் பெற்றோரின் அக்கறையின்மை, வறுமை மற்றும் ஏனைய சமூகத்தினரின் புறக்கணிப்பு போன்றவை இந்த நிலைக்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

”வேடுவர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இருவர், அவர்களின் பகுதியிலுள்ள 5ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலையொன்றில் படித்து விட்டு, 6ஆம் வகுப்புக்காக வேறு பாடசாலையொன்றில் சேர்ந்துள்ளனர். இந்தப் பிள்ளைகளை நையாண்டி செய்யும் வகையில், ஏனைய சமூகப் பிள்ளைகள் 'வேடப்பிள்ளை, வேடப்பிள்ளை' எனக் கூறி பரிகசித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் கடந்தவாரம் நடந்துள்ளது. இதனால், அவர்களில் ஒரு பிள்ளை இப்போது பாடசாலைக்குச் செல்வதற்கு மறுத்துள்ளது" என வரதன் தெரிவித்தார்.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

வரதன், செயலாளர், குவேனி பழங்குடியினர் அமைப்பின்

திருகோணமலையில் தமிழ் பேசும் வேடுவர்கள் அதிகமாக வாழும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேடுவர் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளை முழுமையாக அல்லது மிக அதிகமாகக் கொண்ட 08 பாடசாலைகள் உள்ளன.

அவற்றில் 05ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலைகள் ஐந்து உள்ளன. 09ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலை ஒன்றும், 10ஆம் வகுப்பு வரையுள்ள பாடசாலை ஒன்றும் உள்ளன. வேடுவர் சமுதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் உயர்தரம் எனும் 12ஆம் வகுப்பில் சேர்ந்து படிப்பதென்றால், ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பான்மையாக உள்ள பாடசாலைகளில் சேர்ந்தே தமது கல்வியைத் தொடர வேண்டியுள்ளது.

தமிழ் பேசும் வேடுவர்களின் நிலைமை குறித்து நல்லூரில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றும் வி. பிரேமகாந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ஏனைய சமூகத்தவர்களுக்குச் சமனான அந்தஸ்துகளும் வாய்ப்புகளும் இந்த மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இலங்கை ஆதிகுடி வேடுவர் நிலை
 
படக்குறிப்பு,

வி. பிரேமகாந்தன், கிராம உத்தியோகத்தர், நல்லூர்

நல்லூரில் பிரேமகாந்தன் கடமையாற்றும் இரண்டு கிராமசேவை பிரிவுகளில் முழுமையாக வேடுவர்கள் வசிக்கின்றனர். ”இந்த இரண்டு பிரிவுகளிலும் 350 வேடுவர் குடும்பங்கள் உள்ளனர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் மேலும் பல பழங்குடியினக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை உள்ளடக்கி - குவேனி பழங்குடியினர் எனும் பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு சமூக சேவைத் திணைக்களத்தின் கீழ் இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டு, இயங்கி வருகின்றது” என்றார்.

வேடுவர்கள் - தேன் எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்தாலும், இனிப்பாகச் சொல்லிக் கொள்ள அவர்களிடம் பெரிதாக எவையுமில்லை. ஆனால் சுற்றியுள்ள சமூகங்களால் தினமும் புறக்கணிக்கப்படுகின்றமை குறித்த கசப்பான கதைகள் - அவர்களின் கைவசம் ஏராளம் உள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c5140j4ekgyo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2023 at 12:19, ஏராளன் said:

அவர்களின் பிறப்புச் சான்றிதழில் 'சாதி' எனும் பகுதியில் 'வேடர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு எந்தளவு உள்ளது

யாழ்ப்பாணம் சாதி வெறியின் கோட்டையா?”

யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்இவை எல்லாம் இந்த ஆண்டில் சிலரை பேட்டி கண்டு பிபிசி தமிழ் எழுதிய கட்டுரைகள்.

பிபிசி தமிழ், சமீபகாலமாக சாதியை வைத்து ஈழத்தவர்களை குறி பார்த்து அடித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தில் எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகள் சாதி அடிப்படையில் நடந்திருக்கலாம். உடனேயே அதை எடுத்து  ஊதி உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கு அடிப்படையான பிரச்சனைகள் பல இருந்தும் அதை எல்லாம் தாண்டி வந்து சாதியத்தை மட்டும் அது ஏன் உமிழ்கிறது?

இப்பொழுது வேடுவரை துணைக்கு அழைத்து வந்திருக்கிறது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் race என்பதை யாரோ ஒருத்தர்  சாதிஎன்று மொழி பெயர்த்து வைத்திருக்கிறார். உண்மையில் அதுஇனம்என்று இருந்திருக்க வேண்டும்.

பிபிசி தமிழ் பகுதி ஏன் இப்படி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது?

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு எந்தளவு உள்ளது

யாழ்ப்பாணம் சாதி வெறியின் கோட்டையா?”

யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்இவை எல்லாம் இந்த ஆண்டில் சிலரை பேட்டி கண்டு பிபிசி தமிழ் எழுதிய கட்டுரைகள்.

பிபிசி தமிழ், சமீபகாலமாக சாதியை வைத்து ஈழத்தவர்களை குறி பார்த்து அடித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தில் எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகள் சாதி அடிப்படையில் நடந்திருக்கலாம். உடனேயே அதை எடுத்து  ஊதி உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கு அடிப்படையான பிரச்சனைகள் பல இருந்தும் அதை எல்லாம் தாண்டி வந்து சாதியத்தை மட்டும் அது ஏன் உமிழ்கிறது?

இப்பொழுது வேடுவரை துணைக்கு அழைத்து வந்திருக்கிறது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் race என்பதை யாரோ ஒருத்தர்  சாதிஎன்று மொழி பெயர்த்து வைத்திருக்கிறார். உண்மையில் அதுஇனம்என்று இருந்திருக்க வேண்டும்.

பிபிசி தமிழ் பகுதி ஏன் இப்படி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது?

 

 

 

 

 

 

 

 

ஒரு தவறு நடக்கும் போது வராத ஆட்சேபனையும் உறுத்தலும், அந்தத் தவறை பிபிசி போன்ற ஒரு ஊடகம் (கூட்டியோ, குறைத்தோ) குறிப்பிடும்  போது   வருகிற நிலை இருக்கிறதல்லவா? இது தான் சாதி ரீதியான தாழ்த்தலை இன்னும் பல தலைமுறைகளுக்கு நாம் எம்மிடையே வைத்திருப்போம் என்று எனக்குச் சொல்கிறது. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஒரு தவறு நடக்கும் போது வராத ஆட்சேபனையும் உறுத்தலும், அந்தத் தவறை பிபிசி போன்ற ஒரு ஊடகம் (கூட்டியோ, குறைத்தோ) குறிப்பிடும்  போது   வருகிற நிலை இருக்கிறதல்லவா? இது தான் சாதி ரீதியான தாழ்த்தலை இன்னும் பல தலைமுறைகளுக்கு நாம் எம்மிடையே வைத்திருப்போம் என்று எனக்குச் சொல்கிறது. 

Justin, ஆட்சேபணையும் உறுத்தலும் இங்கும் இருக்கிறது.

நாங்கள் போராடும் போது இனமாகத்தான் போராடினோம். சாதி அப்போது இல்லை. 2009க்குப் பின்னர் மீண்டும் சிலர் சாதியை கையில் எடுத்துக் கொண்டார்கள். அந்த சிலரை மாற்றுவது என்பது இப்போதைய நிலையில் சிரமம். ஆனாலும் போராட்டக் காலத்தில் இல்லாமல் போனது போல் பின்னாளில் அது காணாமல் போகலாம்.

எனது ஆதங்கம் என்ன என்றால், பிபிசி தமிழ், ஈழத் தமிழர்கள் பற்றிய முக்கியமான பிரச்சனைகள விடுத்து, கவனத்தை வேறு எங்கேயோ திசை திருப்புகிறது என்பதுதான். இப்படியான செயற்பாட்டினால், ஒருவிதத்தில் ஈழத்தமிழர்களின் ஒற்றுமைக்கான நிலை கூடத் தளர்ந்து போகலாம்

எது எப்படியோ,  நீங்கள் குறிப்பிடபடி குறைந்த பட்சமான எனது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

தமிழ் அரசியல்வாதிகளே இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ‘சாதிஎன்ற வார்த்தை  இடம் பெற்றிருக்கிறது. அது இப்போதும் உள்ளதா எனத் தெரியவில்லை. அப்படி இருக்குமாயின் உரியவர்கள் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்து அந்த வார்த்தைக்குப் பதிலாக முன்பிருந்தது போல்இனம்என்று மாற்றிவிடச் சொல்லுங்கள்.

IMG-4256.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

இப்பொழுது வேடுவரை துணைக்கு அழைத்து வந்திருக்கிறது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் race என்பதை யாரோ ஒருத்தர்  சாதிஎன்று மொழி பெயர்த்து வைத்திருக்கிறார். உண்மையில் அதுஇனம்என்று இருந்திருக்க வேண்டும்.

பிபிசி தமிழ் பகுதி ஏன் இப்படி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது?

ஆனால் அதிலோ அந்த கூண்டில் இலங்கைத்தமிழர் , இலங்கை சோனகர்,  சிங்களவர் என்றே எழுதுவார்கள்  
சாதிகள் பெயர் இருப்பதில்லை  ஆனால் பி பி சி இப்ப சாதியத்தூக்கி உள்ள வந்திருக்கு இது இந்தியாயாட வேலையோ 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

Justin, ஆட்சேபணையும் உறுத்தலும் இங்கும் இருக்கிறது.

நாங்கள் போராடும் போது இனமாகத்தான் போராடினோம். சாதி அப்போது இல்லை. 2009க்குப் பின்னர் மீண்டும் சிலர் சாதியை கையில் எடுத்துக் கொண்டார்கள். அந்த சிலரை மாற்றுவது என்பது இப்போதைய நிலையில் சிரமம். ஆனாலும் போராட்டக் காலத்தில் இல்லாமல் போனது போல் பின்னாளில் அது காணாமல் போகலாம்.

எனது ஆதங்கம் என்ன என்றால், பிபிசி தமிழ், ஈழத் தமிழர்கள் பற்றிய முக்கியமான பிரச்சனைகள விடுத்து, கவனத்தை வேறு எங்கேயோ திசை திருப்புகிறது என்பதுதான். இப்படியான செயற்பாட்டினால், ஒருவிதத்தில் ஈழத்தமிழர்களின் ஒற்றுமைக்கான நிலை கூடத் தளர்ந்து போகலாம்

எது எப்படியோ,  நீங்கள் குறிப்பிடபடி குறைந்த பட்சமான எனது ஆதங்கத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

தமிழ் அரசியல்வாதிகளே இலங்கை பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில், ‘சாதிஎன்ற வார்த்தை  இடம் பெற்றிருக்கிறது. அது இப்போதும் உள்ளதா எனத் தெரியவில்லை. அப்படி இருக்குமாயின் உரியவர்கள் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்து அந்த வார்த்தைக்குப் பதிலாக முன்பிருந்தது போல்இனம்என்று மாற்றிவிடச் சொல்லுங்கள்.

IMG-4256.jpg

 

உங்கள் பதிலுக்கு நன்றி கவி. ஆனால், உங்கள் கருத்துகளோடு முற்றாக உடன்பாடில்லை.

2009 வரை சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான தண்டனைகள் காரணமாக மட்டும் தான் அது இல்லாமல் இருந்ததேயொழிய, ஒரு பொதுப் பிரச்சினையை எதிர்கொண்ட மக்கள் கூட்டமென்ற வகையில் சாதிப் பாகுபாடு மறைந்திருக்கவில்லை. இடம்பெயர்ந்த மக்களிடையே கூட சாதிப் பாகுபாடு உள்ளார்ந்து இருந்தது. எனவே தான் சாதிப்பாகுபாடு எம்மிடையே இருந்து நீங்காது என நம்புகிறேன். இதற்கு ஒரு காரணம், இதைப் பற்றிப் பேசும் போது "இது முக்கிய பிரச்சினையா இப்ப?" என்று மடை மாற்றும் முயற்சிகள் - நீங்கள் இப்ப செய்வது போல.

அமெரிக்காவில் நிறப்பாகுபாடு முக்கியமான பிரச்சினையா என்று வெள்ளையரை, அல்லது ஆசியரைக் கேட்டு பதில் தேட முடியுமா? அது நம்பிக்கையான பதிலாக இருக்குமா? இல்லையல்லவா? அதே போல, சாதிப்பாகுபாடு முக்கியமான பிரச்சினையா என்று குறவர் இனத்தவர் அல்லாதவர்கள், பாதிக்கப் படாதோர் தீர்மானிக்க இயலாது.

பிகு: மேலே படிவத்தில் இருக்கும் "சாதி", சிங்களத்தில் "ஜாதிய" என்பதன் மொழிபெயர்ப்பாகத் தான் பார்க்கப் படுகிறது. சிங்களத்தில் "ஜாதிய" என்பது ஆங்கிலத்தில் race எனப்படுகிறது. இது caste அல்ல! இது மொழிபெயர்ப்புத் தவறு. இந்தப் படிவத்தில் யாரும் சாதியை எழுதுவதில்லை. இதைப் படிவத்தில் இருந்து நீக்கி விட்டால், சாதி சமூகத்தில் இருந்து நீங்கி விடும் என்று நம்புபவர் அல்ல நீங்கள்!   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2023 at 16:51, Kavi arunasalam said:

யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு எந்தளவு உள்ளது

யாழ்ப்பாணம் சாதி வெறியின் கோட்டையா?”

யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்இவை எல்லாம் இந்த ஆண்டில் சிலரை பேட்டி கண்டு பிபிசி தமிழ் எழுதிய கட்டுரைகள்.

பிபிசி தமிழ், சமீபகாலமாக சாதியை வைத்து ஈழத்தவர்களை குறி பார்த்து அடித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தில் எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகள் சாதி அடிப்படையில் நடந்திருக்கலாம். உடனேயே அதை எடுத்து  ஊதி உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழருக்கு அடிப்படையான பிரச்சனைகள் பல இருந்தும் அதை எல்லாம் தாண்டி வந்து சாதியத்தை மட்டும் அது ஏன் உமிழ்கிறது?

இப்பொழுது வேடுவரை துணைக்கு அழைத்து வந்திருக்கிறது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் race என்பதை யாரோ ஒருத்தர்  சாதிஎன்று மொழி பெயர்த்து வைத்திருக்கிறார். உண்மையில் அதுஇனம்என்று இருந்திருக்க வேண்டும்.

பிபிசி தமிழ் பகுதி ஏன் இப்படி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது?

 

 

 

 

 

 

 

 

தனக்கு வராத வரைக்கும் தக்காளி சட்னிதான்.. அந்த ஒண்டிரண்டு பேருக்குள் நீங்கள் வந்திருந்தால் உங்களுக்கு அந்த பிள்ளைகளின் வலியை உணரக்கூடியதாக இருக்கும்.. ஒவ்வொரு பருக்கையாக சேர்ந்தால்தான் சோறு.. இன்று ஓரிருவர்தான என்றும்பேசாமல் விட்டால் ஒன்றொன்றாக நாளை ஓராயிரம்பேர் ஆகும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/7/2023 at 10:51, Kavi arunasalam said:

பிபிசி தமிழ், சமீபகாலமாக சாதியை வைத்து ஈழத்தவர்களை குறி பார்த்து அடித்துக் கொண்டிருக்கிறது.

On 19/7/2023 at 10:51, Kavi arunasalam said:

ஈழத்தில் எங்கோ ஒன்றிரண்டு நிகழ்வுகள் சாதி அடிப்படையில் நடந்திருக்கலாம்

ஈழம் என்னும் இலங்கையின் தமிழர் பெரு நிலப்பரப்பில் சாதிய வேறுபாடுகள் ஒதுக்கல்கள் ஒன்றோ இரண்டு இடங்களில்தான் நடந்திருக்கலாம் என்று நீங்கள் கூறினால் உண்மையை மறைப்பது பிபிசி அல்ல சாட்சாத் நீங்களே தான்.

இந்த நிமிடம்வரை வடக்குகிழக்கில்  உயர் சாதியினர் என்று தம்மை கருதிக்கொள்ளும் தமிழர்கள் வாழும் மைய பகுதிகளில் ஒதுக்கப்பட்ட சமூகமாக கருதப்படும் எந்த தமிழரும் காணி வீடு சொத்துக்கள் என்று வாங்க முடியுமா?

சாதி மாறி காதல் கல்யாணம் நிகழ்ந்தால் பரந்த மனப்பான்மையோடு ஏற்கும் மக்கள் கூட்டம் உண்டா?  அவ்வளவு ஏன் சாதி குறைந்தவர் என்று அறியப்பட்டால் உடனடியாகவே அவர் என்ன தரத்திலிருந்தாலும் சக மனிதனை ஒருமையில் அழைக்கும் பழக்கம் எங்களது மக்கள் சமூகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமா நடக்கிறது?

சாதியத்தின் பெயரால் சக மனிதர்களை அசிங்கப்படுத்தும்போது வரும் வலியை உணர வேண்டுமானால் முற்பிறப்பினை ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஒரு பிறப்பெடுத்து உயர்ந்த வகுப்பினராய் இறுமாப்படையும் தமிழர்கள் இன்று அவர்களால்  ஏளனம் செய்யப்படும் சாதியில் மீண்டும் பிறக்கவேண்டும் அப்போதுதான் முற்பிறப்பில் அவர்கள் செய்த தவறின் வலியை இப்பிறப்பில் உணர்ந்து கொள்ள முடியும்.

தத்ரூபமாக ஓவியம் வரைந்து காண்பிக்கும் நீங்கள் நிகழ்காலத்தை தத்ரூபமாக காண்பிக்காமல் மறைக்க பார்க்கிறீர்கள் என்றே தங்களின் பதிவின் மூலம் பொருள் கொள்ளலாம்.

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இதைப் பற்றிப் பேசும் போது "இது முக்கிய பிரச்சினையா இப்ப?" என்று மடை மாற்றும் முயற்சிகள் - நீங்கள் இப்ப செய்வது போல.

Justin, 

“அவர்களின் பிறப்புச் சான்றிதழில் 'சாதி' எனும் பகுதியில் 'வேடர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. இலங்கையில், சாதி பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் இருக்கிறது என்று வெளிநாட்டுத் தமிழர்கள் தவறாக கருதக் கூடாது என்பதற்காகத்தான் அது ‘சாதி’ அல்ல ‘இனம்’ என்று இருக்க வேண்டும் என்று எழுதினேன். .

ஈழத் தமிழர்களது இனப் பிரச்சினையை பிபிசி தமிழ் பெரிதாக காட்டாமல் வேறு வேறு பிரச்சினைகளை வெளி உலகுக்குத் தந்து திசை திருப்புகிறதே என்பதே எனது ஆதங்கம்.    சாதிப்பாகுபாடு முக்கியமான பிரச்சினையா என்று குறவர் இனத்தவர் அல்லாதவர்கள், பாதிக்கப்    படாதோர் தீர்மானிக்க இயலாதுஎன்ற உங்கள் கூற்றில் என்னிடம் மாற்றுக் கருத்து இல்லை.

மற்றும்படி நான் தமிழர்களை சாதி வேறுபாடுகளின்றி இனமாகத்தான் பார்க்கிறேன்.

அவர்கள் வலி எனக்கும் தெரிகிறது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

நிகழ்காலத்தை தத்ரூபமாக காண்பிக்காமல் பார்க்கிறீர்கள் என்றே தங்களின் பதிவின் மூலம் பொருள் கொள்ளலாம்.

வல்லவன்,  அது உங்கள் விருப்பம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.