Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுது போல இருக்கே!
ஒரு செய்தியையும் காணேல!!

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுது போல இருக்கே!
ஒரு செய்தியையும் காணேல!!

இப்படித்தான் முடிவு இருக்கும் என்று முன்பே எதிர்வு கூறப்பட்டதுதானே.

இதே நிலைமைதான் காஸாவுக்கும். 

ஜெயிலர் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் போது ஜெயிலரை விமர்சிப்பதும்,  LEO வந்ததும் LEO வை விமர்சிப்பதும் வழமைதானே? 

இப்போது தீபாவளிக்குப் புதிதாக ஒன்றைப்பற்றி தொடங்க அது  பிய்த்துக்கொண்டு ஓடும். ஆனால் சீமான் பற்றிய திரி மட்டும்  இளையராஜா இசைபோல எப்போதும் சலிக்காமல் ஓடும். 

🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பலஸ்தீன மோதல் : மேற்குலகின் ஆதரவை இழக்கிறதா உக்ரேன்?

Published By: VISHNU    12 NOV, 2023 | 04:58 PM

image

சுவிசிலிருந்து சண் தவராசா

காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்கிறது. அந்தப் பிராந்தியத்தில் தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.  கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டி விட்டது.

அதில் மூன்றிலொரு வீதத்தினர் சிறார்கள் என்கின்ற செய்தி பதைபதைப்பைத் தருகின்றது. இருந்தும் மேற்குலகை ஆள்வோரின் மனச்சாட்சி இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை என்பதைப் பார்க்க முடிகின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்துக்காகக் குரல் தந்து கொண்டிருக்கையில் ‘ஒப்புக்குச் சப்பாணி’ என்பதைப் போன்று ‘மனிதாபிமான மோதல் தவிர்ப்பு’ என்பதைப் பற்றியே மேற்குலகம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.

இந்த வேளையில் உலகின் மனச்சாட்சி உள்ள நாடுகள் இஸ்ரேலுடனான தமது இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டிப்பதன் ஊடாக தமது கடுமையான நிலைப்பாட்டை இஸ்ரேலுக்கும், முழு உலகிற்கும் பறைசாற்றி வருகின்றன. இந்த வரிசையில் இறுதியாக ஆபிரிக்க நாடுகளான தென் ஆபிரிக்கா மற்றும் சாட் ஆகியவை இணைந்து உள்ளன.

ஏற்கனவே பொலீவியா, துருக்கி, ஜோர்தான், ஹொன்டுராஸ், கொலம்பியா, சிலி ஆகிய 7 நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்து உள்ளமை தெரிந்ததே. தொடர்ந்துவரும் நாட்களில் இந்த அணியில் மேலும் பல நாடுகள் சேர்ந்து கொள்ளும் அறிகுறிகள் தென்படுகின்றன.

மறுபுறம், அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. தமது சகோதரர்கள் காஸாவில் வகைதொகையின்றிக் கொல்லப்படுவது தொடர்பில் அரபுலக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆத்திரம் செயற்பாடுகள் ஊடாக வெகுவிரைவில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேவேளை, காஸா மோதல் ஆரம்பமான நாள் முதலாக உக்ரேன் போர் தொடர்பிலான செய்திகள் இரண்டாம் பட்ச நிலைக்குச் சென்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரேனின் ‘பதில் தாக்குதல் நடவடிக்கை’ உரிய பலனைத் தராத நிலையில், ஒருசில விட்டுக்கொடுப்புடன் ரஷ்யாவுடன் சமரசத்துக்குச் செல்லுதல் தொடர்பான செய்திகளும் சமாந்தரமாக வெளியாகத் தொடங்கியுள்ளன.

இவ்வாறான செய்திகளை வழக்கம் போன்றே உக்ரேன் அரசுத் தலைவர் விளாடிமிர் ஷெலன்ஸ்கி மறுத்திருந்தாலும் ‘நெருப்பில்லாமல் புகை வராது’ என்பதைப் போன்று திரைமறைவில் ஏதோ காய்நகர்த்தல்கள் உள்ளதாகவே தெரிகின்றது என்கின்றன விஷயமறிந்த வட்டாரங்கள்.

உக்ரேனின் இராணுவத் தலைமைக்கும் அரசுத் தலைமைக்கும் இடையில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்ற விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை மெய்ப்பிப்பது போன்று தற்போதைய கள நிலவரம் தொடர்பில் அண்மையில் படைத் தளபதி தெரிவித்த கருத்தும் அதற்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான விளக்கமும் அமைந்திருந்தது.

 'ரஷ்யாவுடனான மோதல் ஒரு தேக்க நிலையை அடைந்திருக்கிறது. தற்போதைய நிலையில் எந்தவொரு அணியும் பாரிய வெற்றி எதனையும் பெற்றுவிட முடியாத நிலை உள்ளது. அது முதலாம் உலகப் போரை ஒத்த ஒரு நிலை.' என ஜெனரல் வலரி சலுஸ்னி பிரித்தானியாவின் ‘த எக்கோனமிஸ்ட்’ ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருந்தார்.

அவரது கருத்துக்குப் பதிலளித்த அரசுத் தலைவர் அலுவலக உதவியாளர் இகோர் சொவ்க்வா, ஜெனரல் வலரி சலுஸ்னியின் கருத்தைக் கண்டித்ததுடன் அந்தக் கருத்து ரஷ்யத் தரப்புக்கு ஆதரவு அளிப்பது போன்று உள்ளதாகத் தெரிவித்தார். அத்தோடு இந்தக் கருத்து வெளியான கையோடு மேற்குலக ராஜதந்திரிகள் பலரும் தன்னைத் தொடர்பு கொண்டு அவர் கூறியது உண்மையா எனக் கேட்டனர் எனவும் கூறியிருந்தார்.

அதேவேளை, கடந்த 6ஆம் திகதி ஜெனரல் வலரி சலுஸ்னியின் நெருங்கிய சகாவான மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்.

தனது பிறந்தநாளை ஒட்டி வழங்கப்பட்ட பரிசுப்பொதியை தனது மகனுடன் இணைந்து பிரிக்கும் போது பரிசாக வழங்கப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் மேஜர் கென்னடி சாஸ்ற்யக்கோவ் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சம்பவ இடத்தில் மேலும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இது திட்டமிட்ட தாக்குதல் எனவும், அந்தத் தாக்குதலில் ஜெனரல் வலரி சலுஸ்னியே இலக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடும் என ஓர் ஊகமும் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே, உக்ரேன் தரப்பு கலகலத்துப் போயுள்ள நிலையில் படைத்துறைக்கும் அரசுக்கும் இடையில் பிளவு உள்ளதாக வெளியாகும் செய்திகளும், உக்ரேனை மேற்குலகு படிப்படியாகக் கைகழுவி வருவதாக வெளியாகும் செய்திகளும் உக்ரேனின் போர் வெற்றி தொடர்பில் மேற்குலகம் நம்பிக்கையிழந்து வருவதன் அறிகுறியே என நோக்கர்கள் தெரிவிக்கின்றார்கள்.

உக்ரேனின் அரசு இயந்திரம் ஊழலில் மூழ்கித் திளைக்கின்றது என்ற செய்தி ஒன்றும் புதியதல்ல. அண்மைக் காலமாக இது விடயத்திலும் மேல்நாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு தேர்தல் நடக்குமானால் ஸெலென்ஸ்கி மாற்றப்பட வேண்டும் என்ற வகையிலான தகவல்களையும் மேற்குலக ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது.

இரண்டு வருடங்களை நிறைவு செய்யவுள்ள போரில் உக்ரேன் தரப்பு பாரிய மனித இழப்பைச் சந்தித்துள்ளது. படையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வயோதிபர்களைக் கூட கட்டாயமாகப் படையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமை தெரிந்ததே. உக்ரேன் தரப்புக்கு உதவி செய்யும் மேற்குலகம் மேலதிக உதவிகளை, படைத் தளபாடங்களை வழங்கத் தயாராக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த மனிதவலு அவசியம் என்பது தொடர்பில் குறித்த நாடுகள் கரிசனை கெண்டிருப்பதும் செய்திகளில் அடிபடுவதைப் பார்க்க முடிகின்றது.

மேற்குலக ஊடகங்கள் மற்றும் அவற்றுக்குத் தகவல்களை வழங்கும் வட்டாரங்களின் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தில் இருந்த உக்ரைன் தற்போதைய காஸா மோதல் காரணமாக தனது முதன்மையை இழந்திருக்கின்றது என்பது தெட்டத் தெளிவாகின்றது.

காரணம் எதுவானாலும் உக்ரைன் போர் முடிவுக்கு வருமானால் அது அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியே. உலக சமாதானத்துக்கும் அது அவசியமானது என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

https://www.virakesari.lk/article/169131

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல‌ன்சிய‌ தூக்கி பிடிச்ச‌ ஆட்க‌ள் யாழில் இப்ப‌ உக்கிரேன் செய்திக‌ள் ப‌ற்றி விவாதிப்ப‌தில்லை😁.............

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Biggest Drone Attack நடத்திய Russia; Ukraine கொடுத்த பதிலடி... தீவிரமாகிறதா Ukraine - Russia War?

யுக்ரேன் தலைநகர் கீயவில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை ரஷ்யா தொடுத்திருப்பதாக கீயவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ரஷ்யா மீது யுக்ரேன் குறைந்தது 24 டிரோன்கள் மற்றும் 2 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்ததாகவும் அதனை ரஷ்ய வான் படை முறியடித்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்-உக்ரேன் அமைதி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஆயத்தமாகிய வேளையல் UK யின் பொறிஸ் ஜோண்சன் தலையிட்டு எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

ரஸ்-உக்ரேன் அமைதி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஆயத்தமாகிய வேளையல் UK யின் பொறிஸ் ஜோண்சன் தலையிட்டு எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. 

 

உக்ரேன் பிரச்சனை இப்போதைக்கு முடியாது போலுள்ளது. அதை விட ஜேர்மனிக்கு வந்த விருந்தினர்களால்(உக்ரேனிய அகதிகள்) புதிய தலையிடிகள் உருவாகியுள்ளனவாம்.....வேலைக்கு போங்கோடா எண்டு அடிச்சு சொன்னாலும் போறாங்கள் இல்லையாம்.🤣

Posted
On 28/11/2023 at 06:52, குமாரசாமி said:

உக்ரேன் பிரச்சனை இப்போதைக்கு முடியாது போலுள்ளது. அதை விட ஜேர்மனிக்கு வந்த விருந்தினர்களால்(உக்ரேனிய அகதிகள்) புதிய தலையிடிகள் உருவாகியுள்ளனவாம்.....வேலைக்கு போங்கோடா எண்டு அடிச்சு சொன்னாலும் போறாங்கள் இல்லையாம்.🤣

பின்னை எங்களை மாதிரி 3 வேலை செய்யும் அகதிகள் மேற்குக்கு கிடைப்பார்களா?

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைன் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்டப்பட்டுள்ளார் - உக்ரைன் புலனாய்வு பிரிவு

Published By: RAJEEBAN   29 NOV, 2023 | 11:14 AM

image

உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவரின் மனைவி நஞ்சூட்ட்பட்டுள்ளார்  என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் இராணுவ புலனாய்வுபிரிவு இதனை தெரிவித்துள்ளது.

புலனாய்வு பிரிவின் தலைவர் கைரைலோ புடனோவின் மரியானா புடனோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் எப்போது நஞ்சூட்டப்பட்டார் யார் அதற்கு காரணம் என்ற விபரங்களை உக்ரைன் வெளியிடவில்லை.

ரஸ்யாவிற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை முன்னெத்ததன் காரணமாக உக்ரைனில் மக்கள் அபிமானத்தை பெற்றவராக புலனாய்வு பிரிவின் தலைவர் காணப்படுகின்றார்.

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து  உக்ரைனின் புலனாய்வு பிரிவின் தலைவர் உயிர் தப்பியுள்ளார்.

இந்த நஞ்சூட்டலிற்கு யார் காரணம் என்பது குறித்த விபரங்கள் வெளியாகத அதேவேளை உக்ரைன் புலனாய்வு பிரிவின் ஏனைய சிலரும் சிறிய நஞ்சூட்டல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிபிசியின் உக்ரைன் சேவை தெரிவித்துள்ளது.

ரஸ்யா இது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் இது உள்மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என ரஸ்ய ஊடகம்தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/170514

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய பெண்கள் 8 இற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்: புட்டின் வலியுறுத்தல்

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990 இல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும். அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என தெரிவித்துள்ளார்.

நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.

ரஷ்ய குடும்பங்களில் ஏராளமான நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்வோம். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்கள் நடைமுறையாகவும், ரஷ்யாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.

ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு.

ரஷ்யாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1 ஆம் திகதி கணக்கின்படி 14 கோடியே 64 இலட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999 ஆம் ஆண்டு புட்டின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.

https://thinakkural.lk/article/283176

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய உக்ரைன் போர்: படை வீரர்களை இழந்து தவிக்கும் ரஷ்யா

ரஷ்ய உக்ரைன் போரில் இதுவரையில் ரஸ்யாவில் 90% பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த இழப்பு ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

கடந்த 2022 பிப்ரவரி இல் 360,000 பணியாளர்களுடன் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கியது.

வீரர்களின் இழப்பு

அப்போதிருந்து, 315,000 ரஷ்ய படையில் அல்லது மொத்த வீரர்களில் சுமார் 87% பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அறிக்கை மதீப்பீடு செய்துள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர்: படை வீரர்களை இழந்து தவிக்கும் ரஷ்யா | Russia Lost 90 Percentage Solidiers In Ukraine War

இந்நிலையில் வீரர்களின் அதிகப்படியான இழப்பு போரை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு கடினமாவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரை முன்நகர்த்தி செல்ல வேண்டிய தேவை உள்ளதால் தகுதிகள் குறைந்த வீரர்களை படையில் ரஷ்யா சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/russia-lost-90-percentage-solidiers-in-ukraine-war-1702491654

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹாஸாவில் போர் நடப்பதையே எல்லோரும் மறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இதில் உக்ரேனை யார் மனதில் வைத்திருக்கப் போகின்றனர்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/11/2023 at 10:54, ஏராளன் said:

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுது போல இருக்கே!
ஒரு செய்தியையும் காணேல!!

யுத்தமுனையிலும், கருத்துக்களத்திலும் stalemate. கூடவே பனிக்காலம் வேற.

இரு பக்கத்திலும் பெரிய பீரங்கிகள் ஓய்வில் இருக்கும்.

சின்ன, சின்ன சில்லறை பிஸ்தோலுக்கள் நாமும் இருக்கிறோம் என்பதை காட்ட இடைக்கிடை வெடிக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, goshan_che said:
On 12/11/2023 at 05:54, ஏராளன் said:

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் சண்டை முடிஞ்சு சமாதானம் வந்திட்டுது போல இருக்கே!
ஒரு செய்தியையும் காணேல!!

யுத்தமுனையிலும், கருத்துக்களத்திலும் stalemate. கூடவே பனிக்காலம் வேற.

இரு பக்கத்திலும் பெரிய பீரங்கிகள் ஓய்வில் இருக்கும்.

சின்ன, சின்ன சில்லறை பிஸ்தோலுக்கள் நாமும் இருக்கிறோம் என்பதை காட்ட இடைக்கிடை வெடிக்கும்

உக்ரேன் அதிபர் அமெரிக்க காங்கிரசை உதவுமாறு கேட்க வந்துள்ளார்.

அவர்களும் அசையுமா போல தெரியலை.

இதை வைத்து பைடனை அசைக்கவே காங்கிரஸ் முனைகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நகைச்சுவையாளர் (Comedy piece) செலன்ஸ்கியை நிலைதான்  கவலைக்கிடமாக  இருக்கிறது. நாடு நாடாய் அலைந்து, என்னையும்  கவனியுங்கள் எனக் கையேந்தினாலும் யாரும் கவனிப்பாரில்லை. 

☹️

45 minutes ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் அதிபர் அமெரிக்க காங்கிரசை உதவுமாறு கேட்க வந்துள்ளார்.

அவர்களும் அசையுமா போல தெரியலை.

இதை வைத்து பைடனை அசைக்கவே காங்கிரஸ் முனைகிறது.

செலன்ஸ்கி பிச்சைக்காறன் லெவலுக்கு இறங்கினாலும் ஒருவரும் மனம் இரங்குவதாக இல்லை. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் அதிபர் அமெரிக்க காங்கிரசை உதவுமாறு கேட்க வந்துள்ளார்.

அவர்களும் அசையுமா போல தெரியலை.

இதை வைத்து பைடனை அசைக்கவே காங்கிரஸ் முனைகிறது.

ஓம்…ஜனநாயக நாடுகளில் இது ஒரு பிரசிச்சினை.  அதிகாரம் கட்சிக்கு கட்சி மாறுவதால் சில விடயங்களில் கொள்கை தளம்பல் இருக்கும். 

பொதுவாக இது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இருப்பதில்லை. ஆனால் உக்ரேன் விடயத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் மட்டும் அல்லாது பிரெசிடென்சியும் ரிப்பளிக்கன் வசமானானால் செலன்ஸ்கி தலைமையிலான உக்ரேனுக்கு சங்குதான்.

இது புட்டினுக்கும் தெரியும் - ஆகவேதான் he is playing the long game.

விடுதலைபுலிகள் பற்றி முன்னர் எழுதும் போது ஒரு தடவை எழுதினேன்.  Perfect should never be the enemy of the good.

அதாவது நாம் விரும்பும் இலட்சிய தீர்வை அடைவதற்க்காக, கிடைக்க கூடிய நல்ல தீர்வை கைவிடக்கூடாது.

செலன்ஸிக்கும் அதுதான்.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரைக்கும்தான் நேரம்.

அதற்குள் ஒன்றில் இழந்த 20% உக்ரேனை மீட்கவேண்டும், அல்லது மிகுதியையாவது தக்கவைக்கும் ஒரு உடன்படிக்கைக்கு போகவேண்டும்.

ஆனால் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. புட்டின் உக்ரேனில் இறங்கிய தருணமே, டிரம்ப் இதர தீவிர வலது ரிபப்ளிகன் ஆட்கள் சொன்னதை வைத்து, பைடன் தோற்றால் இப்படி ஆகும் என நான், ஜஸ்டின் போன்றோர் முன்பே எழுதியுள்ளோம்.

 

 

பிகு

ஆனால் அரசியலில் எதுவும் விரைவில் மாறலாம். தீவிர வலதுசாரிகளின் டார்லிங் தற்போதைய அர்ஜெண்டீனா அதிபர். அவரின் பதவி ஏற்பில் அவர் செலென்ஸ்கியை கொஞ்சாத குறை அவ்வளவு அரவணைப்பு.

செலன்ஸ்கியின் தென், வட அமெரிக்க பயணங்கள் தனியே ஊடகங்களை வாசித்துவிட்டு வாந்தி எடுப்போர் சொல்வது போல் “பிச்சை பயணமாக” மட்டும் இல்லாமல், ஆர்ஜெண்டினா வழியாக, American Right இடம் தன்னை/உக்ரேனை re position பண்ணும் முயற்சியாயும் இருக்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்பதுபோல,

கோமாளி (Comedy piece) ஒரு நாட்டின்அதிபராக வந்தால் நாடு நாடாக பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டி வரும் என்பதற்கு  கோமாளி செலன்ஸ்கி ஒரு எம்வாழ்நாள் உதாரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

நகைச்சுவையாளர் (Comedy piece) செலன்ஸ்கியை நிலைதான்  கவலைக்கிடமாக  இருக்கிறது. நாடு நாடாய் அலைந்து, என்னையும்  கவனியுங்கள் எனக் கையேந்தினாலும் யாரும் கவனிப்பாரில்லை. 

☹️

நாங்கள் உக்ரேனுக்கு சாத்தல் விழ ஆரம்பத்திலையே சொன்னனாங்கள் எல்லோ?🤣
மச்சான் செலென்ஸ்கியர் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு ஓடித்திரியப்போறார் எண்டு 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் உக்ரேனுக்கு சாத்தல் விழ ஆரம்பத்திலையே சொன்னனாங்கள் எல்லோ?🤣
மச்சான் செலென்ஸ்கியர் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு ஓடித்திரியப்போறார் எண்டு 😎

இப்படித்தான் யுத்தத்தின் தொடர்ச்சி இப்படியாகத்தான் வந்து நிற்கும் என யதார்த்தத்தை பலர்  எதிர்வு கூறியபோது அவர்களை புட்டினின் கைக்கூலிகள் என பிளந்துகட்டினதுதான் எங்கள் ஆய்வாளர்கள் கண்ட மிச்சம். 

(தான் போக வழியில்லாத குதிரை, போற வழியில் நின்ற சங்கடத்தாரையும் இழுத்து விழுத்திச்சாம் என்பது போல போகிறது கதை.)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, குமாரசாமி said:

நாங்கள் உக்ரேனுக்கு சாத்தல் விழ ஆரம்பத்திலையே சொன்னனாங்கள் எல்லோ?🤣
மச்சான் செலென்ஸ்கியர் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு ஓடித்திரியப்போறார் எண்டு 😎

3 நாளில் கியவ்…

ரஸ்யா டாங்கிகள் மீது உக்ரேனியர் பூங்கொத்து எறிவார்கள்….

ஒட்டுமொத்த உக்ரேனும் ரஸ்யவசமாகும்….

இப்படி பலதை சொன்னதையும் நினைவூட்டுகிறேன்🤣.

அமெரிக்காவில் ரிபளிக்கன்ஸ் கை ஓங்கினால் உக்ரேன் பாடு கஸ்டம், டிரம்ப் வந்தால் (அவர் புட்டினிடம் பிடி கொடுத்துள்ளவர்) ஐரோப்பவின் நிலையே கஸ்டம் என்பதை உக்ரேன் போருக்கு முதலே இங்கே பலர் எழுதிய படிதான் இருந்தார்கள். உங்களுக்கு பதிலாகவே இவற்றை நான் எழுதியதும் உண்டு.

உங்களைத் தீர்கதரிசி, மற்றவர்களை விடு பேயன் என் நிறுவி விடும் மேட்டுகுடி அந்தரிப்பில் இவற்றை செலக்டிவ் அம்னீசியாவில் விட்டு விட்டீர்கள் போலும்🤣.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

இப்படித்தான் யுத்தத்தின் தொடர்ச்சி இப்படியாகத்தான் வந்து நிற்கும் என யதார்த்தத்தை பலர்  எதிர்வு கூறியபோது அவர்களை புட்டினின் கைக்கூலிகள் என பிளந்துகட்டினதுதான் எங்கள் ஆய்வாளர்கள் கண்ட மிச்சம். 

(தான் போக வழியில்லாத குதிரை, போற வழியில் நின்ற சங்கடத்தாரையும் இழுத்து விழுத்திச்சாம் என்பது போல போகிறது கதை.)

 

மலையோடு குன்றும் குழிகளும் மோதுகின்றன. சிரிப்பு சிரிப்பாய் வருது.உக்ரேன் யுத்தத்தால் மேற்குலகு பொருளாதார அடிகளை  எவ்வளவுதான் வாங்கினாலும் இன்னும் மீசையில் மண் படவில்லை என்ற  பீலிங்கில் திரிகின்றார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நோகாத மாதிரி நடிக்கின்றார்கள் என பார்க்கலாம்.😂

இப்படிக்கு
கறுப்பு ஜேர்மன்காரன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

உங்களைத் தீர்கதரிசி, மற்றவர்களை விடு பேயன் என் நிறுவி விடும் மேட்டுகுடி அந்தரிப்பில் இவற்றை செலக்டிவ் அம்னீசியாவில் விட்டு விட்டீர்கள் போலும்🤣.

நான் யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. எனக்கு ஒத்து வரும் திரிகளில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்தே என் கருத்துக்களை எழுதுவேன்.அத்துடன் விடயம் தெரியாத திரிகளுக்குள் மூக்கை நுழைப்பதுமில்லை. அதனோடு என்னை ஒரு தீர்க்கதரிசியாகவும் நினைத்ததும் இல்லை.😎

ரஷ்யா உலகளாவிய அளவில் ஏட்டிக்கு போட்டியான வல்லரசு. அப்படியான ஒரு நாடு  பல அழிவுகளை உருவாக்கியாவது தன் வெற்றியை நிர்ணயிக்கும்.அதற்குரிய இயற்கை வளங்களும் தன்னகத்தே வைத்திருக்கின்றது. மேற்குலகு 20 வருடத்திற்கு ரஷ்யா மீது  பொருளாதார தடைகளை விதித்து வைத்திருக்கின்றார்கள். இதனால் மேற்குலகு ஏதாவது சாதித்ததா? இல்லையே. மாறாக தாங்களே பொருளாதார நெருக்கடியில் மாட்டுப்பட்டு உள்ளனர்.😂

இன்றைய ஜேர்மனிய அரசு கூட தங்கள் வருடாந்த வரவு செலவு அறிக்கையை தயாரிக்க முடியாத அவலத்திலிருந்து தேவையில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி சுபம் என முடித்துள்ளனர். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் இலக்கு முடியும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது: அதிபர் புதின் பேட்டி

12-14.jpg

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள்.

குறிப்பாக அமெரிக்கா இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடி) வரை நிதி உதவி செய்திருக்கிறது.

எனினும், ரஷியா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனைக் கொண்டுவர ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது என தெரிவித்தார்.

அதிபராக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=263285

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ஈழப்பிரியன் said:

உக்ரேன் அதிபர் அமெரிக்க காங்கிரசை உதவுமாறு கேட்க வந்துள்ளார்.

அவர்களும் அசையுமா போல தெரியலை.

இதை வைத்து பைடனை அசைக்கவே காங்கிரஸ் முனைகிறது.

www.treasurydirect.gov/instit/annceresult/press/preanre/2023/R_20231212_2.pdf

மேலே உள்ள கோப்பில் இந்த மாதம் 12 ஆம் திகதி வெளியான 15 மார்கழி 2023 இற்கான 30 வருட பணமுறி (2053) விற்பனை ஒப்பந்த விபரம் உள்ளது.

4.75%  ஆண்டு வட்டி விகிதத்தில் 30 ஆண்டுகளுக்கான கடன் பத்திர விற்பனை இடம்பெற்றது, ஏறத்தாழ 51 பில்லியன் கடன் பெறும் பத்திரம் வெறும் ஏறத்தாழ 21 பில்லியன் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இதன் அர்த்தம் என்னவெனில் முதலீட்டாளர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களா?

2024 இல் அமெரிக்க பணவீக்கம் 2.4% விகிதமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் வட்டி விகிதம் குறைவடையும் அத்துடன் ஒப்பிடும் போது தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு 4.75% வட்டி வழங்கும் பணமுறி ஒரு சிறந்த முதலீடாகும், அவ்வாறிருக்க ஏன் முதலீட்டாளர்கள் ஏன் பணமுறியில் முதலிட தயக்கம் காட்டுகிறார்கள்?

இதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் அமெரிக்காவினது நம்பத்தன்மை முதலீட்டாளர்களின் மட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது.

இந்த பணமுறியினை அதிக வட்டி வழங்குவதன் மூலம் விற்பனை செய்யலாம் (இரஸ்யா செய்ததனை போல) அல்லது பணத்தினை அச்சிடலாம் இந்த இரு நடவடிக்கையும் பணவீக்கத்தில் இரு வேறு விதமான தாக்கத்தினை செய்யலாம்.

குறுங்கால பணமுறியினை அமெரிக்கா வெளியிட முன்வருமாயின் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டக்கூடும், ஆனால் தற்போதய அமெரிக்க பொருளாதாரம் தொடர்பாக முதலீட்டாளர்களின் ஐயப்பாட்டின் வெளிப்பாடக அது அமையும்.

ஒரு காலத்தில் உலகின் காவலாளி எனும் நிலையில் இருந்து கீழிறங்கிவிட்டதற்கான உதாரணமாகவே தொடர்ந்து செல்லும் உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய போர் உணர்த்துகிறது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா மட்டுமல்ல உலக பொருளாதாரமும் உறுதியாக இல்லை, ஆனால் அமெரிக்க மேலாதிக்க நிலையினை பேண அது முதலில் பொருளாதார ரீதியில் தன்னை தற்காத்து கொள்ள வேண்டு,

முன்னர் அமெரிக்க கருவூல காரியதரிசியின் செவ்வியினை இஸ்ரேல் அழிவு யுத்த திரியில் இணைத்திருந்தேன் அதில் அவர் கூறியிருந்தார் அமெரிக்க பொருளாதாரத்திற்கு உக்கிரேன் மற்றும் இஸ்ரேலிய யுத்தத்தினை நடத்துவதற்கான பலம் உள்ளதாக கூறியிருந்தார், அந்த கூற்று எந்தளவிற்கு உண்மையாகும் என்பதனை காலம் உணர்த்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த கெப்டன் ரனிஷ் ஹேவகேயின் இறுதி சடங்குகள் : 'உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்' என புகழாராம்!

Published By: DIGITAL DESK 3

18 DEC, 2023 | 11:29 AM
image

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த  கெப்டன் ரனிஷ் ஹேவகேயின்  இறுதி சடங்குகள் உக்ரைன் இராணுவத்தினரின் மரியாதை மற்றும் உக்ரைன் மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் உக்ரைனின் மிலிதோன் நகரில் நடைபெற்றது.

'உக்ரைனைக் காக்க தன் உயிரைக் கொடுத்த மாவீரன்' என்று கப்டன் ரனீஷ் என புகழராம் சூட்டி  இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.

கெப்டன் ரனிஷின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட  வீதியின்  இருபுறமும் வாகனங்களில் சென்ற உக்ரைனியர்கள் தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கி, தலைகுனிந்து மரியாதை செலுத்தினர்.

https://www.virakesari.lk/article/171931




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.