Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

 

  • Replies 565
  • Views 53.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எல்லாரும் தான் வரி கட்டுகிறார்கள், இதையெல்லாம் சாதனையாகச் சொல்பவர்கள் எங்கள் ஆசியக் குடிகளாக மட்டும் தான் இருப்பரென நினைக்கிறேன்😂. கட்டின வரிக்கேற்ப விழுந்தால் அம்புலன்ஸ், வேலை போனால் சாப்பிடக் க

  • "ஒரு வாரத்தில் கியேவ் விழுந்து விடும்!"  என்று சொன்னது பலித்தது போலவே, "ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகி விடும்" என்பதும் பலிக்க இன்னும் ஒரு நாள் தான் மிச்சமிருக்குது😎!  இப்படி ஊர் உலக நிலவர

  • இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2024 at 12:08, ஏராளன் said:

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக உள்ளோம் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த புதின்

10-2.jpg

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத போரைத்தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். ஆனாலும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம். என்றார்.

அப்போது அவரிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு புதின், அதற்கான அவசியம் இருந்ததில்லை. உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராவே உள்ளோம். என்றார்

இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://thinakkural.lk/article/295606

தலையங்கமும்  உள்ளடக்கமும் நேரெதிராக உள்ளன. 

இந்த ஊடகங்களையெல்லாம்  நம்பி கருத்தெழுத முடியுமா? 

☹️

ரஷ்ய படைகள் Avdiïvk நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து Orlivka என்ற கிராமத்தையும் கைப்பற்றி முன்நேறி வருகின்றன.

நேற்று இரவு உக்ரெய்னை நோக்கி ரஸ்யா 90 ஏவுகணைகளையும் 60 ஈரானிய டிரோன்களையும் ஏவியுள்ளது.

உக்ரெய்ன் மீதான படையெடுப்பை  இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகக் கூறி வந்த ரஸ்யா, இன்று முதல் தடவையாக உக்ரெய்ன் மீது போர் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

ரஷ்ய படைகள் Avdiïvk நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து Orlivka என்ற கிராமத்தையும் கைப்பற்றி முன்நேறி வருகின்றன.

நேற்று இரவு உக்ரெய்னை நோக்கி ரஸ்யா 90 ஏவுகணைகளையும் 60 ஈரானிய டிரோன்களையும் ஏவியுள்ளது.

உக்ரெய்ன் மீதான படையெடுப்பை  இதுவரை மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையாகக் கூறி வந்த ரஸ்யா, இன்று முதல் தடவையாக உக்ரெய்ன் மீது போர் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளது.

இணையவன் உங்கள் நாட்டு ராணுவமும் உக்ரேன் களத்தில் நிற்பதாக சொல்கிறார்களே?

4 minutes ago, ஈழப்பிரியன் said:

இணையவன் உங்கள் நாட்டு ராணுவமும் உக்ரேன் களத்தில் நிற்பதாக சொல்கிறார்களே?

போர் ஆரம்பித்தபோது சாதாரண பிரெஞ்சு இளைஞர்கள் இங்கிருந்து போய் உக்ரெய்ன் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கியபோது அவற்றைப் பராமரிப்பதற்காக இராணுவத்தினர் சென்றிருக்கலாம். ஆனால் உத்தியோகபூர்வமாக இல்லை.

இந்தப் போர் ஐரோப்பாவை நோக்கிய அச்சுறுத்தலாக இருப்பதால் அமெரிக்காவின் உதவிகள் பின்னடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் தன்னை முன்னிலைப் படுத்த முயல்கிறது. பிரெஞ்சு அதிபருக்கு உள்நாட்டில் முற்றிலும் ஆதரவு இல்லாத நிலையிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரெய்னுக்கான உதவிகள் தொடர்பாக மிகப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. இதனால் மக்ரோன் பிரஞ்சு இராணுவம் உக்ரெய்னுக்குச் செல்லவேண்டி வரலாம் என்ற கருத்தைக் கைவிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அமெரிக்கா முன்மொழிந்த வரைவு தீர்மானத்தின் மீது ரஷ்யா மற்றும் சீனாவின் வீட்டோக்களை விமர்சித்தார்.

தாமஸ்-கிரீன்ஃபீல்ட் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு ரஷ்யாவும் சீனாவும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறினார். கிட்டத்தட்ட ஒவ்வொரு கவுன்சில் உறுப்பினரும் ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தத்தைப் பெற வாக்களித்ததாக அவர் கூறினார். பணயக்கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும்.

https://www.cnn.com/middleeast/live-news/israel-hamas-war-gaza-news-03-22-24/index.html

 

2 minutes ago, இணையவன் said:

போர் ஆரம்பித்தபோது சாதாரண பிரெஞ்சு இளைஞர்கள் இங்கிருந்து போய் உக்ரெய்ன் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கியபோது அவற்றைப் பராமரிப்பதற்காக இராணுவத்தினர் சென்றிருக்கலாம். ஆனால் உத்தியோகபூர்வமாக இல்லை.

இந்தப் போர் ஐரோப்பாவை நோக்கிய அச்சுறுத்தலாக இருப்பதால் அமெரிக்காவின் உதவிகள் பின்னடைந்துள்ள நிலையில் பிரான்ஸ் தன்னை முன்னிலைப் படுத்த முயல்கிறது. பிரெஞ்சு அதிபருக்கு உள்நாட்டில் முற்றிலும் ஆதரவு இல்லாத நிலையிலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரெய்னுக்கான உதவிகள் தொடர்பாக மிகப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. இதனால் மக்ரோன் பிரஞ்சு இராணுவம் உக்ரெய்னுக்குச் செல்லவேண்டி வரலாம் என்ற கருத்தைக் கைவிடவில்லை.

தகவலுக்கு நன்றி இணையவன்.

Andreï Morozov. இவர் பிரபலமான ரஸ்ய புளொக்கர். ரெலிகிராமில் இலட்சம் பேர் இவருடன் இணைந்திருந்தனர். 2014 இல் உக்ரெய்னுக்கு எதிராகப் போரிட்டவர். இராணுவத்திலுள்ள தனது தொடர்புகளால் ரெலிகிராம் மூலம் களச் செய்திகளையும் வீடியோக்களையும் பகிர்ந்தவர். அட்விக்கா சமரில் மட்டும் 16000 ரஸ்ய படையினர் இறந்தும் காயமடைந்தும் களத்தை விட்டு நீக்கப்பட்டதை முதலில் தெரிவித்தவர் இவர்தான். ரஸ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளாலும் இழப்புகளைக் குறைத்துக் காட்டுமாறு இவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இறக்குமுன் தனது வீட்டை விற்று ரஸ்ய படையினருக்கு ட்றோன்கள் வாங்கிக் கொடுக்குமாறு எழுதி வைத்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாவின் இரண்டு கப்பல்களை அழித்ததாக உக்ரைன் தெரிவிப்பு - பிரிட்டன் வரவேற்பு

25 MAR, 2024 | 03:00 PM
image

கிரிமியாவில் ரஸ்யாவின் இரண்டு தரையிறங்கு கலங்கள்மீது தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிரிமியாவில் ரஸ்யாவின் கருங்கடல் படையணி பயன்படுத்தும் இரண்டு தரையிறங்கு கப்பல்கள்மற்றும் தொலைத்தொடர்புநிலையம் ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் யமல் அசோவ் என்ற இரண்டு கப்பல்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களை வரவேற்றுள்ள பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் கிரான்ட் சாப்ஸ் உக்ரைனின் யுத்தத்தில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்;ந்த தருணம் என தெரிவித்துள்ளார்.

1783 முதல் கருங்கடலில் ரஸ்ய கடற்படை காணப்படுகின்ற போதிலும் புட்டின் எதிர்காலத்தில் கருங்கடலில் சுதந்திரமாக உடற்பயிற்சியில் ஈடுபடமுடியாது என்பதே இந்த தாக்குதலின் செய்தி எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் உக்ரைன் யுத்தத்தில் தோல்வியடைய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/179667

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

Andreï Morozov. இவர் பிரபலமான ரஸ்ய புளொக்கர். ரெலிகிராமில் இலட்சம் பேர் இவருடன் இணைந்திருந்தனர். 2014 இல் உக்ரெய்னுக்கு எதிராகப் போரிட்டவர். இராணுவத்திலுள்ள தனது தொடர்புகளால் ரெலிகிராம் மூலம் களச் செய்திகளையும் வீடியோக்களையும் பகிர்ந்தவர். அட்விக்கா சமரில் மட்டும் 16000 ரஸ்ய படையினர் இறந்தும் காயமடைந்தும் களத்தை விட்டு நீக்கப்பட்டதை முதலில் தெரிவித்தவர் இவர்தான். ரஸ்ய படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளாலும் இழப்புகளைக் குறைத்துக் காட்டுமாறு இவருக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தாலும் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். இறக்குமுன் தனது வீட்டை விற்று ரஸ்ய படையினருக்கு ட்றோன்கள் வாங்கிக் கொடுக்குமாறு எழுதி வைத்துள்ளார்.

ஆதாரம்? 

ஒரு பொறுப்புள்ள இடத்தில் இருப்பவர் தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிடுதல் அந்தப் பொறுப்பிற்கு அழகு. 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் யுத்தம் - ஒரேதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்களை அழித்ததாக உக்ரைன் தகவல்

Published By: RAJEEBAN   06 APR, 2024 | 09:21 AM

image

ரஸ்யாவின் தென்பகுதி விமானதளம் மீது உக்ரைன் மேற்கொண்ட பாரிய ஆளில்லா விமானதாக்குதலில் ரஸ்யாவின் ஆறு போர் விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் 8 விமானங்கள் சேதமடைந்துள்ளன 20க்கும் மேற்பட்ட ரஸ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் போர்முனையில் பயன்படுத்தப்படும் எஸ்யு27- 34 விமானங்களின் மொரெஜொவ்ஸ்க் தளத்தின் மீதே இஸ்ரேல் ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யா இதுவரை இந்த தாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் உக்ரைனின் 40 ஆளில்லா விமானங்கள் இலக்குவைக்கப்பட்டன  என தெரிவித்துள்ளது.

உக்ரைன் 40க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதால் ரஸ்யாவின் வான்வெளி பாதுகாப்பு பொறிமுறை செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்  என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/180557

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவர் குத்திக்கொலை - ரஸ்ய பிரஜை கைது

29 APR, 2024 | 12:13 PM
image

உக்ரைன் படைவீரர்கள் இருவரை ஜேர்மனியில் ரஸ்ய பிரஜையொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஜேர்மனியின் தென்பகுதியில் உள்ள வணிகவளாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேர்னோவ் என்ற நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கத்திக்குத்திற்கு இலக்கான 36 வயது அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் 28 வயது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவரும் ஜேர்மனியில் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து ரஸ்யர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182219

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

ஜேர்மனியில் உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவர் குத்திக்கொலை - ரஸ்ய பிரஜை கைது

கூடியிருந்து தண்ணியடிச்சு போட்டு...வெறியேறின பிறகு அரசியல் கதைக்க வெளிக்கிட்டு நடந்த சம்பவம் எண்டு தெரியுது. 😂

இதை ஊடகங்கள் ரஷ்ய-உக்ரேன் பிரச்சனைமாதிரி பிரிச்சு மேய்ஞ்சிருக்குதுகள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

ரஷ்யாவின் செம செய்கை | திணறும் நாடுகள் | திக் திக் உக்ரைன் F-16 |

  • 3 weeks later...
  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா வான் தாக்குதல்!

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது இலக்கு வைத்து ரஷ்யா வான் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை இலக்கு வைத்து ரஷ்யா நடத்தும் 8ஆவது தாக்குதல் இதுவாகும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த தாக்குதல்களினால் உக்ரைனில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இந்த புதிய தாக்குதலில் 12 ஏவுகணைகளையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/304369

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 மாதங்­களில் ரஷ்யாவில் 70,000 படை­யினர் பலி அல்­லது காயம்! பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சு தெரி­விப்பு

Published By: DIGITAL DESK 7    16 JUL, 2024 | 10:29 PM

image

(ஆர்.சேது­ராமன்)

உக்ரேன் யுத்­தத்தில் கடந்த 2 மாதங்­களில் மாத்­திரம் ரஷ்­யாவின் 70,000 படை­யினர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அல்­லது காய­ம­டைந்­துள்­ளனர் என பிரிட்டன் தெரி­வித்­துள்­ளது.

பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சு கடந்த வார இறு­தியில் வெளி­யிட்ட, இரா­ணுவப் புல­னாய்வுத் தகவல் குறிப்பில் இவ்­வி­டயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உக்­ரேனின் கார்கிவ் பிராந்­தி­யத்தை கைப்­பற்­று­வ­தற்­காக ரஷ்யா ஆரம்­பித்த புதிய போர்­மு­னையில்  ரஷ்ய படை­யி­ன­ருக்கு பாரிய இழப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதத்தில் ரஷ்ய படை­யி­னரின் நாளாந்த இழப்­புகள் (உயி­ரி­ழப்பு மற்றும் காயம்) 1,262 ஆக இருந்­தது எனவும் ஜூன் மாதம் இது 1,163 ஆக இருந்­தது எனவும் பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சு தெர­வித்­துள்­ளது.

2 மாதங்­களில் மாத்­திரம் 70,000 ரஷ்ய படை­யினர் உயி­ரி­ழந்தோ  அல்­லது காய­ம­டைந்தோ இருக்­கலாம் என  அவ்­வ­மைச்சு தெரிவித்­துள்­ளது.

உக்­ரேனின் கிழக்குப் பிராந்­தி­யத்தில் கடந்த சில மாதங்­களில் ரஷ்ய படை­யினர்  பல பிர­தே­சங்­களைக் கைப்­பற்­றினர்.

கார்கிவ் பிராந்­தி­யத்தை கைப்­பற்­று­வ­தற்­காக கடந்த மே மாதம் புதிய போர்­மு­னையை ரஷ்யா திறந்­தது. இப்போர் நட­வ­டிக்­கையில் உக்­ரே­னிய படை­யி­ன­ருக்கு இழப்­புகள் ஏற்­பட்­டன. அதே­வேளை, ரஷ்ய படை­யி­ன­ருக்கும் அது இழப்­பு­களை ஏற்­ப­டத்­தி­யுள்­ள­தாக பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ரஷ்ய படை­யி­னரின் அணு­கு­முறை போர் முனையில் அழுத்­தங்­களை அதி­க­ரித்­தாலும், வினைத்­தி­ற­னான உக்­ரே­னிய தற்­காப்பு நட­வ­டிக்­கையும், ரஷ்ய படை­யி­னரின் பயிற்­சி­யின்­மையும் தந்­தி­ரோ­பாய வெற்­றி­களை ரஷ்­யா­வினால் விஸ்­த­ரித்­துக்­கொள்ள முடி­ய­வில்லை என பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ரஷ்ய படை­யினர், சிறிய அள­வி­லான தாக்­குதல் அணி­களை பயன்­ப­டுத்­தி­வ­ரு­வதால் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்­றங்­களை அடைய முடி­ய­வில்லை என மேற்­கு­லக ஆய்­வா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

சர்­வ­தேச சமா­தா­னத்­துக்­கான கார்­ஜினி நிதி­யத்தின் மைக்கல் கொவ்மன் இது தொடர்­பாக கூறு­கையில், "இந்த தந்­தி­ரோ­பா­ய­மா­னது சிறிய ஆதா­யங்­களை அளிக்­கக்­கூ­டி­யது. எனினும், செயற்­பாட்டு ரீதி­யி­லான முன்­னேற்­றங்­களை அடை­வ­தற்கு இது அதிகம் பொருத்தமானதல்ல.

பாரிய தாக்குதல்கள் ரஷ்ய படையினருக்கு செலவு மிகுந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் அவ்திவ்காவில் நடந்தைப் போன்ற தளபாட இழப்புக்களை அப்படையினால் ஏற்றுக்கொள்ள முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188613

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கி அழிப்பு - உக்ரைன் அறிவிப்பு

04 AUG, 2024 | 01:40 PM
image

கிரிமியாவில் ரஸ்யாவின் நீர்மூழ்கியொன்றை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா வளைகுடாவில் நங்கூரமிடப்பட்டிருந்த ரஸ்யாவின் நீர்மூழ்கியை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

செவஸ்டபோல் நகரில் உள்ள துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல் காரணமாக ரஸ்ய நீர் மூழ்கி அழிக்கப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் கருங்கடல் கடற்படைபிரிவினால் பயன்படுத்தப்பட்ட நான்கு நீர்மூழ்கிகளில் ஒன்றையே உக்ரைன் தாக்கி அழித்துள்ளது. இந்த நீர்மூழ்கிகளை பயன்படுத்தியே கலிப்ர் குரூஸ் ஏவுகணைகளை ரஸ்யா ஏவிவந்துள்ளது.

கிரிமியாவின் பாதுகாப்பிற்கு என ரஸ்யா பயன்படுத்தி வந்த நான்கு எஸ்- 400 வான்வெளி பாதுகாப்பு அமைப்புமுறையையும் அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/190238

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள்

உக்ரைன்(ukraine) தனது முதல் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானங்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

"உக்ரைனில் F-16 விமானங்கள். நாங்கள் அதைச் செய்தோம்," ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பெயரிடப்படாத விமானப்படை தளத்தில் இரண்டு விமானங்களால் சூழப்பட்ட ஒரு நிகழ்வில் கூறினார்.

இன்னும் பல தேவை

உக்ரைன் தலைவர் ஒரு காலத்தில் இந்த விமானங்களை வழங்கத் தயங்கியதற்கு நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார் - இருப்பினும் இன்னும் பல தேவை என்று அவர் கூறினார்.

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள் | Ukraine Receives First F 16 Fighter Jets

ஜெட் விமானங்களின் வருகை உக்ரைனின் விமானப்படையின் திறன்களை அதிகரிப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. உக்ரைன் தற்போது பழைய சோவியத் கால ஜெட் விமானங்களையே நம்பியுள்ளது. இன்னும் சில எஃப்-16 விமானங்கள் வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றன.

எங்கிருந்து வந்தன..!

இருப்பினும் உக்ரைனில் இன்னும் போதுமான பயிற்சி பெற்ற விமானிகள் இல்லை என்பதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார். உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வந்தன என்பதை அவர் குறிப்பிடவில்லை.அவை அனைத்தும் டென்மார்க்(denmark), நெதர்லாந்து (netherland)மற்றும் அமெரிக்காவால்(us) அனுப்பப்பட்டதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

அதிரப்போகும் போர்க்களம் : உக்ரைனுக்கு வந்து சேர்ந்த நவீன விமானங்கள் | Ukraine Receives First F 16 Fighter Jets

இதேவேளை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரைனுக்குள் பறக்கும் மேற்கத்திய தயாரிப்பான F-16 விமானங்கள் "சுட்டு வீழ்த்தப்படும்" என்று முன்னர் தெரிவித்திருந்தார். "ஆனால் இந்த விமானங்கள் முன்னணி களமுனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது," என்று அவர் மேலும் கூறினார்.

https://ibctamil.com/article/ukraine-receives-first-f-16-fighter-jets-1722845093

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

உக்ரைன்(ukraine) தனது முதல் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானங்களைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் வெலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Putin GIFs | Tenor

ரஷ்யாவிற்கு என் முன்கூட்டிய வாழ்த்துகள்...🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து உக்ரைன் படையினர் தாக்குதல் - பல மணிநேரம் மோதல்

07 AUG, 2024 | 01:20 PM
image

உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து வந்து ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என ரஸ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டனர் இவர்கள் 10 கிலோமீற்றர் வரை ஊடுருவினர் என ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 டாங்கிகள் 20க்கும் மேற்பட்ட கவசவாகனங்களின் உதவியுடன் இந்த தாக்குதலை  உக்ரைனியபடையினர் முன்னெடுத்தனர் என ரஸ்ய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லை கிராமங்களிலும்,முன்னரங்குகளில் இருந்து பத்து கிலோமீற்றர் உள்ளேயும் பல மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

https://www.virakesari.lk/article/190492

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதும் போச்சே ...

தொடரும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து உக்ரைன் படையினர் தாக்குதல் - பல மணிநேரம் மோதல்

பிறகென்ன......இனி ரஷ்யா துலைஞ்சான். புட்டின் இரானுக்கு ஓட வேண்டி வரப்போகுது 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிறகென்ன......இனி ரஷ்யா துலைஞ்சான். புட்டின் இரானுக்கு ஓட வேண்டி வரப்போகுது 🤣

அண்ணை ரஸ்யாவிற்குள் ஊடுருவும் அளவிற்கு எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கே!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அண்ணை ரஸ்யாவிற்குள் ஊடுருவும் அளவிற்கு எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருந்திருக்கே!

நாடே அப்படி தான் இருக்கு. 

ம்ம் 

எப்படி இருந்த ரசியா??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.