Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப செய்தி

1. மொஸ்கோ புறநகரில் உள்ள ஒரு தொழில்சாலையில் பாரிய வெடிப்பு (explosion). 50 பேர் வரை பலி என அஞ்சப்படுகிறது.

2. போராயுதங்கள் உள்ள தொழில்சாலை என உக்ரேன் ஆதரவு கணக்குகள் ஊகம்.

3. அண்மையில் மொஸ்கோ மீதான தானியங்கி விமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

 

 

 

 

  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் உ.ப.ப.செய்தி

மஸ்கோவின் பிரதான விமானநிலையமான Domodedovoவில்   வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன, என்கிறன உக்ரேனிய கணக்குகள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று மதியம் கேர்ச் பாலம் உட்பட கிரைமியாவின் சில இடங்களை உக்ரேன் தாக்கியது.

கேர்ச் பாலத்தில் தாக்குதலை திசை திருப்பும் புகையை ரஸ்யா பாவித்துள்ளது.

 

 

Posted

அரசு ஊழியர்கள் ஐ - போன் பயன்படுத்த தடை

அரசு ஊழியர்கள் ஐ - போன் பயன்படுத்த தடை

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.

ரஷியாவிலும் ஐ - போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும் ஐ - போன் மற்றும் ஐ - பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா மற்றும் அதன் அண்டைய நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது.

எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ - போன் 14 உள்பட பல மாடல்களை ரஷியர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷியாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. (FSB) 2 மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது.

ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.

இதனையடுத்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கையில் அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

"ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம், எனவே ஐ - போன்கள் மற்றும் ஐ - பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது.

பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது.

தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ - போன்களைப் பயன்படுத்தலாம்" என ரஷிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான அமைச்சர் மக்சுட் ஷடேவ் (Maksut Shadaev) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆப்பிளுடன் இணைந்து இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாக FSB குற்றம் சாட்டிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

https://tamil.adaderana.lk/news.php?nid=176427

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யா தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உட்பட 7 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளையும் தேவையான போது பயன்படுத்தி வருகிறது.

உக்ரைன் டிரோன்களை ரஷ்யா இடைமறித்து அழித்தபோதிலும், உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு கெர்சன் பிராந்தியத்தில் ரஷ்யா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, தனது 12 வயது சகோதரர் மற்றும் தந்தையுடன் உயிரிழந்துள்ளது. ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/268265

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப. செய்தி

அண்மைய தாக்குதலின் பின் 3 நாட்களாய் கேர்ச் பாலத்தில் போக்குவரத்து இல்லையாம். அதனால் பாலத்தின் தற்போதைய நிலையை காட்டும் படங்களும் இல்லையாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 12 பேர் உயிரிழப்பு

3.png

ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சியின்படி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெற்றோல் நிலையத்திற்கு பரவியதாக கூறப்பட்டது.

மேலும், ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், “ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டியது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது. மேலும், சம்பவ இடத்தில் 260 தீயணைப்பு வீரர்கள் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.

https://thinakkural.lk/article/268404

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவின் சுப்பர்சோனிக் குண்டு வீச்சு விமானம் உக்ரைனின்ஆளில்லா விமானதாக்குதலில் அழிப்பு

Published By: RAJEEBAN

22 AUG, 2023 | 05:44 AM
image
 

உக்ரைனின்  ஆளில்லா விமானங்கள் ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன 

 

சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது.

டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது – உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஸ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது.

இதேவேளை ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது என ரஸ்யா தெரிவித்துள்ளது - இந்த பிராந்தியத்திலேயே டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன.

ஆளில்லா விமானமொன்றை வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் கண்டு அதன் மீது தாக்குதலை மேற்கொண்டனர் சிறிய ஆயுதங்களால் அது தாக்கப்பட்டது- ஒரு விமானம் சேதமடைந்துள்ளது உயிரிழப்புகள் இல்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/162890

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிகோசின் பயணித்த விமானத்தை ரஸ்ய ஏவுகணை சுட்டு வீழ்த்தியதாம்.

 

 

உ.ப.ப.செ👆🏼

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

உ.ப.ப.செ

Dmytriy Utkin எனும் வாக்னரை உருவாக்கியவரும் - பிரிகோசினின் வலதுகரமுமானவரும் அந்த விமானத்தில் பயணித்தாராம்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

பிரிகோசின் பயணித்த விமானத்தை ரஸ்ய ஏவுகணை சுட்டு வீழ்த்தியதாம்.

 

 

உ.ப.ப.செ👆🏼

பொறுத்திருப்போம், உடல் கிடைக்கும் வரை.

ஆனால், பிரிகோசின் பறந்திருந்தால் அது முட்டாள்தனமென்பேன். புட்டினோடு முண்டி விட்டு தரைத்தளம் தவிர மேல் தளங்களில் அபார்ட்மென்ற் எடுத்து வசிப்பதே ஆபத்தாக முடியுமென்பது செய்தி வாசிப்போருக்கே புரியும் போது, இவர் 6000 அடிகளுக்கு மேலே பறந்திருக்கிறாரே? என்ன விசர்த்தனமான வேலை இது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Wagner chief listed among passengers on board crashed plane, Russian state media

Wagner chief Yevgeny Prigozhin is listed among passengers on board a plane that crashed north of Moscow, according to Russian state media.

The official Russian news agency TASS reported the Federal Air Transport Agency has launched an investigation into the crash of an Embraer aircraft, which occurred in the Tver region north-east of Moscow on Wednesday.

"An investigation has been launched into the crash of the Embraer aircraft, which occurred tonight in the Tver region. According to the list of passengers, among them is the name and surname of Yevgeny Prigozhin," the department noted. 

Flight data showed an Embraer Legacy registered to Prigozhin at a cruising altitude over the Tver region after departing a Moscow airport, before data transmission of speed and altitude stopped.

https://www.cnn.com/europe/live-news/russia-ukraine-war-news-08-23-23/index.html

எதிர்பார்த்த செய்தி தான்.

இருந்தாலும் இவ்வளவு விரைவாக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, Justin said:

பொறுத்திருப்போம், உடல் கிடைக்கும் வரை.

ஆனால், பிரிகோசின் பறந்திருந்தால் அது முட்டாள்தனமென்பேன். புட்டினோடு முண்டி விட்டு தரைத்தளம் தவிர மேல் தளங்களில் அபார்ட்மென்ற் எடுத்து வசிப்பதே ஆபத்தாக முடியுமென்பது செய்தி வாசிப்போருக்கே புரியும் போது, இவர் 6000 அடிகளுக்கு மேலே பறந்திருக்கிறாரே? என்ன விசர்த்தனமான வேலை இது?

உண்மைதான். மேற்கின் கண்ணில் மண்ணை தூவி விட்டு பிரிகோசின் தலைமறைவாக இது ஒரு cover ஆகவும் இருக்கலாம்.

கலகத்துக்கு பின், முன்னரும் சில தடவை பிரிகோசின் பெலரூஸ்-சென்பீட்டர்ஸ் பேர்க்-மோஸ்கோ என விமானத்தில் பறந்துள்ளார். 

பிரிகோசன் ஒரு விளங்க முடியா கவிதை, அல்ல ஒப்பாரி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

பொறுத்திருப்போம், உடல் கிடைக்கும் வரை.

முன்னரும் 2017இல் ஒரு தரம் கொங்கோவில் பிரிகோசின் இறந்துவிட்டார் என செய்தி பரவியதாம்.

ஒரு விமானத்தில் பெயரை பதிந்து விட்டு, இன்னொரு விமானத்தில் பறப்பது அவரின் வழமையாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

Wagner chief listed among passengers on board crashed plane, Russian state media

 

எதிர்பார்த்த செய்தி தான்.

இருந்தாலும் இவ்வளவு விரைவாக.

இனி நாம் வெளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம். 

1 hour ago, Justin said:

பொறுத்திருப்போம், உடல் கிடைக்கும் வரை.

 

எரிவதை பார்த்தபின்பும் உடல் பற்றி பேசமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணையத்தில் வைரலாகும் காணொளிகளில் சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகியுள்ளது. விமானம் தரையை நோக்கி விழும் விதத்தை நோக்கும்போது ஆகாயத்தில்  வைத்தே விமானம் தாக்கப்பட்டு  செயல் இழக்க செய்யப்பட்டிருப்பதும் அதன் இறக்கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டபின்  விமானிகளின்  கட்டுப்பாடுகள் எதுவுமின்றி  வீழ்வதையும்  காணக்கூடியதாயுள்ளது.  அண்மையில் புட்டினுக்கு எதிராக இராணுவக்கிளர்ச்சி செய்த பிரிகொஜினுடன் வாக்னரின் நிறுவனர் உற்கின் என்பவரும்  விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்யாவில் இருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி உண்மையாகின் வாக்னர் கூலிப்படையின் இரண்டு முக்கிய தலைவர்கள்  ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது ஊர்ஜிதமாகிறது. இருப்பினும் இந்த விமான விபத்தில் சிக்கி  வாக்னர் தலைமைகள்  இறந்துவிட்டதாக ஒரு  செய்தியை வேண்டும் என்றே  பரப்ப பொய் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வாக்னரின் தலைமைகள் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை  என்றும் அப்படி செய்திருந்தால் தாங்கள் புட்டினின் சதிவலையில் இலகுவாக விழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை முன் கூட்டியே கணிக்கத் தெரியாத முட்டாள்கள் இல்லை என்றும் வேறொரு இணையசெய்தி சந்தேகத்தை விதைக்கிறது.

புட்டினுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததையடுத்து திரைக்குப்பின்னால்  சமாதான ஒப்பந்தம் உருவானபோது வாக்னர் தலைவர்களுக்கு முடிவுகட்டும் இரகசிய ஏற்பாடுகளும் சமகாலத்தில் செய்யப்பட்டதாக இன்னொருதகவல் கூறுகிறது.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் குழு தலைவரை ரஷ்சியவோ.. உக்ரைனோ.. கொன்றாலும்.. சி ஐ ஏ க்கே வெற்றி.

ரஷ்சியா இந்த வேளையில்.. வாக்னர் குழுவின் ஆதரவை இழப்பது நல்லதல்ல. அப்படி இழக்க வேண்டும் என்பது தான் அமெரிக்காவினதும்.. சி ஐ ஏ யினதும் விருப்பமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vanangaamudi said:

இணையத்தில் வைரலாகும் காணொளிகளில் சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகியுள்ளது. விமானம் தரையை நோக்கி விழும் விதத்தை நோக்கும்போது ஆகாயத்தில்  வைத்தே விமானம் தாக்கப்பட்டு  செயல் இழக்க செய்யப்பட்டிருப்பதும் அதன் இறக்கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டபின்  விமானிகளின்  கட்டுப்பாடுகள் எதுவுமின்றி  வீழ்வதையும்  காணக்கூடியதாயுள்ளது.  அண்மையில் புட்டினுக்கு எதிராக இராணுவக்கிளர்ச்சி செய்த பிரிகொஜினுடன் வாக்னரின் நிறுவனர் உற்கின் என்பவரும்  விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்யாவில் இருந்து வரும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி உண்மையாகின் வாக்னர் கூலிப்படையின் இரண்டு முக்கிய தலைவர்கள்  ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது ஊர்ஜிதமாகிறது. இருப்பினும் இந்த விமான விபத்தில் சிக்கி  வாக்னர் தலைமைகள்  இறந்துவிட்டதாக ஒரு  செய்தியை வேண்டும் என்றே  பரப்ப பொய் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

வாக்னரின் தலைமைகள் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை  என்றும் அப்படி செய்திருந்தால் தாங்கள் புட்டினின் சதிவலையில் இலகுவாக விழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை முன் கூட்டியே கணிக்கத் தெரியாத முட்டாள்கள் இல்லை என்றும் வேறொரு இணையசெய்தி சந்தேகத்தை விதைக்கிறது.

புட்டினுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததையடுத்து திரைக்குப்பின்னால்  சமாதான ஒப்பந்தம் உருவானபோது வாக்னர் தலைவர்களுக்கு முடிவுகட்டும் இரகசிய ஏற்பாடுகளும் சமகாலத்தில் செய்யப்பட்டதாக இன்னொருதகவல் கூறுகிறது.

 

இணையச் செய்திகளை, ஊகங்களை, கருத்துகளை கச்சிதமாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்👏🏾. நன்றி.

விமானம் விழும் ஒரு காட்சியில் அருகே ஒரு வெள்ளை கோடும் அதன் ஆரம்பத்தில் ஒரு பொருளும் விமானத்தை தொடர்ந்தும் துரத்தி வருவதாக தெரிகிறது. அது ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றாக இருக்கலாம்.

வாக்னர் ஆதரவு டெலிகிராம் சானல்கள் - பிரிகோசின் கொல்லப்பட்டது உண்மை எனில் மாஸ்கோ நோக்கி 2ம் நகர்வு நிச்சயம் என்கிறன.

ஆனால் அவரும் அவரின் வலதுகரமும் ஒன்றாக போயிருப்பார்களா என்பதும், போனால் ஏன் போனார்கள் என்பதும் ஐயமே.

இதை செய்யும் முன்பே வாக்னரின் அடுத்த தலைவர் யார் என புட்டின் முடிவு செய்திருப்பார் என நினைக்கிறேன்.

இதை புட்டின் செய்யாமல் - ஷிகோ அல்லது இரஸ்ய விமானப்படை கூட செய்திருக்கலாம். முந்தைய கலகத்தின் போது தரைப்படை எதிர்ப்பின்றி விலக, விமானப்படையே புட்டினுக்கு ஆதரவாக களம் கண்டது. அதில் விமானங்கள், 10-15 விமானிகளை வாக்னர் சுட்டு வீழ்த்தியது. அப்போதே பிரிகோசினை மன்னித்தமைக்காக புட்டினை பலர் விமர்சித்தனர்.

அத்தோடு - பிரிகோசின் உயிருக்கு உத்தரவாதம் அளித்த பெலரூஸ் அதிபர் லுக்காசென்கோ முகத்திலும் கரியை பூசியுள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவில் விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் பலி – பிபிசி

Published By: RAJEEBAN

24 AUG, 2023 | 05:59 AM
image
 

ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளனர் அதில் பயணம் செய்தவர்களில்; வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதே வேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.

F4QYxIeWkAAhbZf.jpg

ரஸ்யாவிற்கு துரோகமிழைப்பவர்களின் நடவடிக்கை காரணமாக பிரிகோஜின் உயிரிழந்தார் என டெலிகிராமில் பதிவொன்று வெளியாகியுள்ளது.

மொஸ்கோவிற்கு வடமேற்கில் உள்ள வெர் பிராந்தியத்திலேயே விமானவிபத்து இடம்பெற்றுள்ளது. ரஸ்யாவின் விமானப்படை தளபதி பதவியிலிருந்து சேர்கேய் செரோவிகின் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியான அதேநாளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் சிறந்த உறவு காணப்பட்டதும் - வாக்னர் குழுவின் கலகத்தின் பின்னர் விமானப்படை தளபதி பொதுவெளியில் காணப்படாததும் குறிப்பிடத்தக்கது.

பிரிகோஜினின் எம்பிரேரர் விமானம் ஏழு பயணிகள் மூன்று விமானபணியாளர்களுடன் மொஸ்கோவிலிருந்து சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு சென்றுகொண்டிருந்தது என ரஸ்யாவின் விமானபோக்குவரத்து அதிகாரி சபை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட விமானத்தில் 2014 இல் வாக்னர் குழுவை ஆரம்பித்த சிரேஸ்ட தளபதி டிமிட்ரி உட்கினும் பயணித்துள்ளார்.

விமானம் மொஸ்கோவிற்கும்  சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் உள்ள குசேன்கினோ கிராமத்தில் விழுந்து நொருங்கியுள்ளது.

F4QYyYGXYAA2VUZ.jpg

வாக்னர் தலைவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என இன்டர்பக்ஸ் தெரிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பொதுமக்கள் இரண்டு சத்தங்களை கேட்டனர் என கிரேஜோன்  டெலிகிராம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/163055

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்னர் கூலிப்படை தலைவரின் மரணம் - ஆச்சரியமளிக்கவில்லை என பைடன் தெரிவிப்பு

Published By: RAJEEBAN

24 AUG, 2023 | 07:19 AM
image
 

வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவர் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளார் என வெளியான தகவல்கள் குறித்து நான் ஆச்சரியமடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாக்னர் தலைவரின் உயிரிழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புட்டினின் தொடர்பு இல்லாமல் ரஸ்யாவில் எதுவும் இடம்பெறுவதில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளனர் அதில் பயணம் செய்தவர்களில்; வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.

https://www.virakesari.lk/article/163057

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

ரஸ்யாவில் விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் பலி – பிபிசி

அமெரிக்காவும் இதை செய்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உ.ப.ப.செய்திகள்

1. பிரிகோசினின் தனியார் விமானத்தின் லாண்டிங் கியரில் குண்டு வெடித்ததாயும் - இதனால் ஒரு இறக்கை உடைந்து , மற்றும் சமனிலை பேணும் சாதனம் செயலிழந்ததால் விமான திடீரென மேல் எழும்பி பின் இரெண்டாக உடைந்து வீழ்ந்ததாம். இதனால்தான் விமானத்தின் வால், இறக்கை ஆகியன ஒரு கிமி இடைவெளியில் விழுந்துள்ளனவாம்.

2. பிரிகோசின் உடல் கிடைத்தது, கிடைக்கவில்லை என மாறுபட்ட கருத்துகள் வருகிறன.

3. கிரைமியாவில் படகு மூலம் தாம் தரையிறங்கி ஒரு அதிரடிதாக்குதலை நடத்தி மீண்டதாய் உக்ரேனும், படகுகளை தாக்கியழித்து விட்டதாய் ரஸ்யாவும் கூறுகிறன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் இதை செய்திருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

செய்திருக்கலாம்??? அண்ணா 

அது தானே சரியானது புட்டினை வழிக்கு கொண்டு வர?? 

21 minutes ago, goshan_che said:

உ.ப.ப.செய்திகள்

1. பிரிகோசினின் தனியார் விமானத்தின் லாண்டிங் கியரில் குண்டு வெடித்ததாயும் - இதனால் ஒரு இறக்கை உடைந்து , மற்றும் சமனிலை பேணும் சாதனம் செயலிழந்ததால் விமான திடீரென மேல் எழும்பி பின் இரெண்டாக உடைந்து வீழ்ந்ததாம். இதனால்தான் விமானத்தின் வால், இறக்கை ஆகியன ஒரு கிமி இடைவெளியில் விழுந்துள்ளனவாம்.

அதாவது இது உள்ளிருந்தே நடாத்தப்பட்டுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அதாவது இது உள்ளிருந்தே நடாத்தப்பட்டுள்ளது?

இருக்கலாம். 

அமெரிக்கா இதை செய்திருந்தால் மிக சாதுரியமான நகர்வு - ரஸ்யா/புட்டின்/வாக்னர்/பிரிகோசின் எல்லார் வாயிலும் அல்வா தீத்தியமைக்குச்சமன்🤣.

  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.