Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலேயே சீனாவின் அடுத்த இராணுவதளம் - சர்வதேச அறிக்கை பரபரப்பு தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அடுத்த இராணுவதளம் இலங்கையிலேயே உருவாகும் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி  கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் எண்ணெய் தானியங்கள் மற்றும் அரிய உலோகங்கள்; இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் துறைமுக கட்டமைப்பை நிறுவுவதில் சீன வணிக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள அதிக முதலீட்டை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற்கொண்டுள்ள  இந்த ஆய்வகம் சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் அமையலாம் என தெரிவித்துள்ளது.

உலகளாவிய அபிலாசைகளை பாதுகாத்தல் -சீனாவின் துறைமுக தடம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு கடற்படை தளங்களுக்கான தாக்கங்கள் என்ற ஜூலை மாத அறிக்கையில் சீனாவின் அடுத்த வெளிநாட்டு கடற்படை தளம் எங்கு அமையலாம் என எட்டு இடங்களை குறிப்பிட்டுள்ள வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி  கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் சீனாவின் வெளிநாட்டு கடற்படை தளம் இலங்கையில் அமைவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே சீனாவின் அடுத்த வெளிநாட்டு தளம் அமையலாம் என தெரிவித்துள்ள அறிக்கை 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கு முதலீடு செய்துள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் கமரூன் ஆகியநாடுகளில் இரண்டு முதல் ஐந்துவருடங்களில் தளங்கள் அமையலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உலகிலேயே மிகப்பெரிய பாரியதுறைமுதலீடு அம்பாந்தோட்டையே என தெரிவித்துள்ள அந்த அறிக்கை சீனா நேரடி கட்டுப்பாட்டை செலுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

மூலோபாய அடிப்படையில் அமைந்துள்ளதாலும் உயர்வர்க்கத்தினர் பொதுமக்கள் சீனாமீது அதிக நாட்;டம் கொண்டுள்ளதாலும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வாக்கெடுப்புகளில் இரண்டுநாடுகளிற்கும் இடையில் நல்லுறவு காணப்படுவதாலும் அம்பாந்தோட்டையே  அடுத்த சீனாவின் தளம் என அந்தஅறி;க்கை தெரிவித்துள்ளது.

சீனா தனது முதலாவது வெளிநாட்டு கடற்படை தளத்தினை 2016 ம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவின் ஜிபூட்டியில் அமைத்துள்ளது.590 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் 2000 படையினர் உள்ளனர். இவர்கள் ஹோர்ன் ஒவ் ஆபிரிக்காவை சுற்றியுள்ள கடல் பகுதியிலிருந்து பயணிக்கும் சீன கப்பல்கள் மத்தியதரை கடல் ஐரோப்பாவிற்கு செல்வதற்காக சூயஸ்கால்வாயை அணுகும் சீன கப்பல்களை கடற்கொள்ளையர்களிடமிருந்து தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றனர்.

இலங்கையிலேயே சீனாவின் அடுத்த இராணுவதளம் - சர்வதேச அறிக்கை பரபரப்பு தகவல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஊரறிந்த உண்மை தானே?!
பதட்டப்பட என்ன இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

எப்பயாம் கால்கோள் விழா? ஜெய்சங்கர் ஜி யை பிரதம விருந்தினராக அழைத்து ஒரு நாமமும் போட்டு விடலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எப்பயாம் கால்கோள் விழா? ஜெய்சங்கர் ஜி யை பிரதம விருந்தினராக அழைத்து ஒரு நாமமும் போட்டு விடலாம்🤣

அண்ணை; இதுக்கு கூப்பிட வேண்டியவை பழைய காய்கள்! தங்களுக்கு ஒரு கண் போனாலும் தமிழர்களுக்கு இரண்டு கண்ணும் போகவேணும் என்றெண்ணியவை... 
கொழும்பில் நடைபவனி எல்லாம் செய்தவை!

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சொல்லுவதத்திற்கு அருகதை இல்லாதது.

இப்பொது பிலிப்பைன்ஸில் காட்டுகிறது 


மிகப் பெரிய தளம், Pala u , பசிபிக் தீவில் கட்ட  திட்டம் இருக்கிறது

இன்னமும் வேடிக்கை , பசிபிக் தீவுகளுடன் அமெரிக்கா வைத்து இருக்கும் The Compact of Free Association (COFA), இந்த தீவுகளுக்கு அமெரிக்கா ஆயுதபாசடையை விட வேறு எந்த ஆயுதப்படையும் மரியாதையை நிமித்தம் கூட போகமுடியாது, தடுக்கும் இறைமை அமெரிக்காவிடம் இருக்கிறது.

இந்த உடன்படிக்ஸை 24-26 காலாவதி ஆகிறது, எல்லாத்தீவுகளும் புதுப்பிக்கும் மனநிலையில் இல்லை.

அதாவது தெரிவுகள் வந்து விட்டது சீன வடிவில், அமெரிக்கா ஏகோபித்த சர்வதேச கிரீம் சாப்பிடுவதை மற்றவர்கள் பங்கு கேட்கிறாரக்ள் - வெப்பியாரம் பொறுக்க முடியாமல் பொருமிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்னதான் தலைகீழாக நின்றாலும் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் தடுக்க முடியாது. தமிழர்களை இந்தியா பகடை காயாக வைத்து இங்கு காய் நகர்த்த பாக்குது. எனவே தமிழர் பிரச்சினையும் ஒரு தொடர் கதைதான்.

தனது இந்திய மணிப்பூர் மக்களைப்பற்றியே கவலைப்படாத மோடி இலங்கை தமிழர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை. சில வேளைகளில் வரும் காலங்களில் தமிழர்களும் சீனாவின் திட்ட்ங்களுக்கு ஆதரவளிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு

hambantota-port.jpg

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின் AidData ஆய்வுத் திட்டத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவின் துறைமுகத் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வெளிநாட்டு கடற்படைத் தளங்களைப் பாதுகாப்பது என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள 46 நாடுகளிலுள்ள 78 சர்வதேச துறைமுகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்கட்டமைப்பை மேம்படுத்தவும், எண்ணெய், தானியம் மற்றும் உலோகப் பொருட்களின் இறக்குமதி – ஏற்றுமதிக்காகவும் சீன வர்த்தக நிறுவனங்கள் செய்துள்ள பாரிய முதலீடுகள் தொடர்பான விரிவான தகவல்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சீன வர்த்தக நிறுவனங்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை தமது ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள 78 சர்வதேச துறைமுகங்களின் நிர்மாணத்திற்காக செலவிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக அடுத்து வரும் 5 வருடங்களில் ஈக்வடோரின் கினி இராச்சியத்தின் வாடா துறைமுகம் , பாகிஸ்தானின் Gwadar துறைமுகம் மற்றும் கெமரூன் இராச்சியத்தின் க்ரீப் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மேலதிகமாக பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சீனா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையில் காணப்படும் நட்பே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடு, இவ்வாறான திட்டமொன்றுக்காக சீனா செய்துள்ள மிகப்பெரிய முதலீடு என்பதுடன், இதன் பெறுமதி 2.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பெரும்பான்மை பலத்தை சீனாவிற்கு பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே தனது முதல் வெளிநாட்டு இராணுவத்தளத்தை கிழக்கு ஆபிரிக்காவின் ஜிபூட்டி துறைமுகத்தில் நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/265739

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இந்தியாவுக்கு வேண்டாதவர்கள் புரளியை கிளப்பி விட்டிருப்பார்களோ? இனி இந்தியா தூக்கமில்லாமல் அலையப்போகுது.        

  • கருத்துக்கள உறவுகள்

இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!

தமிழரின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் என்ற தன்னுடைய நலனுக்காக செய்து கொண்டு தமிழரின் முதுகில்குத்தியவர்கள் நித்திரை இல்லாமல் நம்மதி இல்லாமல் அலையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் ஹிந்திய அதிகாரிகள் சொறீலங்காவுக்கு ஓடி வந்த தடவைகளை விட இப்போ அதிகம் ஓடுகிறார்கள். புலிகள் இல்லாத கடந்த 14 ஆண்டுகள்..ஹிந்தியாவுக்கு தலையிடியானதாகவே இருந்துள்ளது.

இது அமெரிக்க சார்பு மேற்குலகிற்கும் பொருந்தும்.

தவறான வெளியுறவுக் கொள்கைகளின் விளைவு இது. உண்மையான பகையை இனங்காணத் தெரியாத பங்குவமற்ற கொள்கை வகுப்பாளர்களின் நடவடிக்கைகளால்.. ஹிந்தியா சிதறிச் சின்னாபின்னமாவது உறுதி. அதில் சோனியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியா சிதறிச் சின்னாபின்னமாவது உறுதி.

அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! என்வாழ்நாளில் அது நிறைவேற வேண்டும். இந்தச்சனியன் தொலைந்தாலே நமக்கு  விடிவு பிறக்கும்.  அன்று  நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

 ஹிந்தியா சிதறிச் சின்னாபின்னமாவது உறுதி. 

 

2 hours ago, satan said:

அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்! என்வாழ்நாளில் அது நிறைவேற வேண்டும். இந்தச்சனியன் தொலைந்தாலே நமக்கு  விடிவு பிறக்கும்.  அன்று  நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

இந்தியா சிதறுவதால் ஈழம் விடியுமென்ற உருவகிப்பு  முன்பும் பல தமிழ் அரசியல் ஆய்வாளர்களது உரையாடல் வெளிக்குள் பேசுபொருளாக இருந்த காலம் இருந்தது. அக்காலத்தில் ஜம்மு-காஸ்மீர், மணிப்பூர்,நாகலாந்து மற்றும் பஞ்சாப்(காலிஸ்தான்) போன்ற மாநிலங்களில் விடுதலைப்போராட்டம் தீவிரமாக இருந்தகாலமாகும். இன்று அந்தநிலை இல்லை. அப்படியொருநிலை தோன்றுமாயின் எந்தவிலை கொடுத்தாவது, அதாவது எவளவு மக்களைக் கொன்றாவது, தமிழீழத்தில் நடாத்தியதுபோன்று செய்தாவது இந்தியா தனது ஒருமைப்பாட்டைத் தக்கவைக்கும். இந்தியா அப்படியொரு இனஅழிப்பில் ஈடுபட்டாலும் உலகநாடுகள் ஒன்றும் தலையிடப்போவதுமில்லை. அதற்கு அண்மைய  ஜம்மு-காஸ்மீர் மற்றும் மணிப்பூரே சாட்சி.  எமக்கான விடுதலையை வென்றெடுக்கத் திடமான அரசியல் தலைமையும், அர்பணிப்புமிக்க செயற் திட்டங்களும், உழைப்புமே தேவை. காகம் இருக்குப் பழம்பழம் விழுந்த கதை தமிழீழ விடுதலைக்குப் பொருந்தாது. எமக்கான விடியல் எமது கைளில், அதாவது தாயகம்-புலம்-தமிழகம் என 75வீதம் நகர்த்தப்பட்டால் 25வீதம் அனைத்துலக மற்றும் புவிசார் அரசியலைக் கையாள்வதன் ஊடாகச் சாத்தியப்படுத்த முடியும். ஆனால், 2009இன்பின் நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம். எல்லாத் தரப்புகளும் சேற்றுவாழிகளோடு திரிகின்றநிலையைக் காண்கின்றோம். இந்த இடுக்குகளின் ஊடாக மாற்றுச் சக்திகள் தமிழரிடையே வேகமாக ஊடுருவித் தமிழினத்தின் சிந்தனைப்போக்கைச் சிதைத்துவருகின்றன என்பதைக் கவனிக்கத்தவறுகின்றோம். சிலதரப்புகள் இன்னும் ஒருபடிமேற்சென்று தலைவர் வருவார் என்றும், 13தொடக்கப்புள்ளியென்றும், 13பிளஸ் என்றும் கதையாடல்களோடு திரிகின்றன. தேசியத் தலைவரின் கூற்றான  ''விழிப்புதான் விடுதலைக்கான முதல்படி,, என்பதைத் தமிழினம் உற்றுநோக்காதவரை விடிவு கானல்நீரே.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

புலிகள் காலத்தில் ஹிந்திய அதிகாரிகள் சொறீலங்காவுக்கு ஓடி வந்த தடவைகளை விட இப்போ அதிகம் ஓடுகிறார்கள். புலிகள் இல்லாத கடந்த 14 ஆண்டுகள்..ஹிந்தியாவுக்கு தலையிடியானதாகவே இருந்துள்ளது.

இது அமெரிக்க சார்பு மேற்குலகிற்கும் பொருந்தும்.

தவறான வெளியுறவுக் கொள்கைகளின் விளைவு இது. உண்மையான பகையை இனங்காணத் தெரியாத பங்குவமற்ற கொள்கை வகுப்பாளர்களின் நடவடிக்கைகளால்.. ஹிந்தியா சிதறிச் சின்னாபின்னமாவது உறுதி. அதில் சோனியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

இந்தியா சிதறினால் தமிழ்களுக்கென்று உலகில் 2 நாடுகள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இந்தியா சிதறினால் தமிழ்களுக்கென்று உலகில் 2 நாடுகள் கிடைக்கும்.

சீனா வந்தால் ஈழத்துக்கோ தமிழ் நாட்டுக்கோ வாய்ப்பே இல்லாமல் போய்விடும் 😭

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சிதறினால் ஈழம் விடியாது, ஆனால் தமிழரை தடுத்தாடும் ஆள் குறையும். சீனா இலங்கையில் கால் ஊன்றினால் இந்தியா என்ன விலை கொடுத்தாலும் மீளப்பெறமுடியாது. அப்போ, தமிழரை நாடி வரும் இந்தியா. அந்த நேரம்; இந்தியாவை நம்புவதற்கு அவர்கள் தாயாராகவோ, இந்தியாவின் உதவியை ஏற்குமளவுக்கோ தமிழர் இருக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்­கை­யிலா சீனாவின் அடுத்த தளம்?

07 AUG, 2023 | 06:29 PM
image
 

 

ஹரி­கரன்

இன்னும் இரண்டு மாதங்­களில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்கு, தனது முத­லா­வது பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ள நிலையில், சென்ற மாத இறு­தியில் அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­களின் அறிக்கை ஒன்று வெளி­யா­கி­யி­ருக்­கி­றது. சீனாவின் அடுத்த கடல் கடந்த இரா­ணுவத் தளம் அமை­ய­வுள்ள இடம் தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு அது.

'உல­க­ளா­விய அபி­லா­ஷை­களைப் பாது­காத்தல்: சீனாவின் துறை­முகத் தடம் மற்றும் எதிர்­கால வெளி­நாட்டு கடற்­படைத் தளங்­க­ளுக்­கான தாக்­கங்கள்' என்ற தலைப்பில் இந்த ஆய்வு அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­காவின் வேர்­ஜீ­னியா மாநி­லத்தில் உள்ள வில்­லியம் அன் ­மேரி கல்­லூ­ரியின் எய்ட் டேட்டா ஆய்­வ­கத்தின் ஆய்­வா­ளர்­களால் இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

அந்த ஆய்வு அறிக்­கையில் சீனாவின் அடுத்த இரா­ணுவத் தளம் அமையக் கூடும் என எதிர்­பார்க்­கப்­படும் 8 இடங்கள் வரி­சைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதில் முத­லா­வது இடத்தில் ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது கடற்­படைத் தளத்தை அமைக்­க­வுள்­ளது என்ற ஊகங்­களும், ஆய்­வு­களும் பல ஆண்­டு­க­ளா­கவே வந்து கொண்­டி­ருக்­கின்­றன. சீனாவும் இலங்­கையும் அதனை எப்­போதும் நிரா­க­ரித்தே வந்­தி­ருக்­கின்­றன.

கடந்த ஜூன் மாதம் “பிரான்ஸ் 24" இணை­யத்­துக்கு வழங்­கிய செவ்­வியில் கூட, சீனா­வுடன் 1500 ஆண்­டு­கால தொடர்­புகள் இருந்­தாலும், அத­னுடன் எந்த இரா­ணுவ உடன்­பாடும் கிடை­யாது என்றும், அம்­பாந்­தோட்டை துறை­முகம் வர்த்­தக செயற்­பா­டு­க­ளுக்­கா­கவே சீன நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும், அதன் பாது­காப்பு இலங்கை படை­க­ளிடம் தான் உள்­ளது என்றும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, திட்­ட­வட்­ட­மாக கூறி­யி­ருந்தார்.

download__1_.jpg

அது­ போன்றே அம்­பாந்­தோட்­டையில் சீனா கடற்­படைத் தளத்தை அமைக்­க­வுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யாகும் போதெல்லாம், அது அமெ­ரிக்­காவின் கட்­டுக்­கதை என்றும், அதன் அச்­சத்தின் வெளிப்­பாடு என்றும் சீனா கூறி­வந்­தி­ருக்­கி­றது. எவ்­வா­றா­யினும், இலங்கை உள்­ளிட்ட 14 நாடு­களில் சீனா தளம் அமைக்க வாய்ப்­புள்­ள­தாக, சீன ஊடகம் ஒன்று 2014ஆம் ஆண்­டி­லேயே தகவல் வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போது, அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆய்வில், சீனா தனது அடுத்த தளத்தை அமைப்­ப­தற்கு சாத்­தி­ய­முள்ள 8 நாடு­களின் துறை­மு­கங்கள் வரி­சைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையின் அம்­பாந்­தோட்டை, ஈக்­வ­டோ­ரியல் கினி­யாவின் பாட்டா, பாகிஸ்­தானின் குவடார், கெம­ரூனின் கிரிபி, கம்­போ­டி­யாவின் றீம், வனு­வாட்­டுவின் போர்ட் லுகன்வில், மொசாம்­பிக்கின் நகாலா, மொரிட்­டா­னி­யாவின் நுவாக்கோட் ஆகி­ய­னவே சீனா தளம் அமைக்க வாய்ப்­புள்ள இடங்­க­ளாக அடை­யாளம் காணப்பட்­டுள்­ளன. ஏற்­கெனவே சீனா, ஜிபுட்­டியில் தனது முத­லா­வது கடற்­படைத்தளத்தை 2016ஆம் ஆண்டில் அமைத்துவிட்­டது.

560 மில்­லியன் டொலர் செலவில் அந்த தளம் அமைக்­கப்­பட்­டது. சோமா­லிய கடற்­கொள்­ளை­யர்­க­ளிடம் இருந்து சீன சரக்கு கப்­பல்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்கு என்ற போர்­வையில் அங்கு சீனா தனது தளத்தை அமைத்­தது. அங்கு இப்­போது நீர்­மூழ்கி கப்­பல்­களும் தரித்து நிற்­கின்­றன.

இந்த நிலையில்தான், சீனா இரண்­டா­வது கடற்­படைத் தளத்தை எங்கு அமைக்கும் என்ற ஆய்வு அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

2000ஆம் ஆண்­டுக்கும் 2021ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலத்தில், சீனா சுமார் 30 பில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்­துள்ள, அல்­லது நிதி­ய­ளித்­துள்ள 46 நாடு­களின், 78 துறை­மு­கங்­களை மையப்­ப­டுத்­தியே இந்த ஆய்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

குறித்த துறை­மு­கங்­களின் மூலோ­பாய இருப்­பிடம், துறை­மு­கத்தின் ஆழம், அந்த நாட்டின் அர­சியல் உறு­தித்­தன்மை மற்றும் ஐ.நா. பொதுச் சபையில் சீனா­வுடன் இணைந்து வாக்­க­ளிக்கும் அர­சாங்­கங்களின் போக்கு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த வரி­சைப்­ப­டுத்தல் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்­தியப் பெருங்­க­டலின் மத்­தியில், மூலோ­பாய முக்­கி­யத்­துவம் மிக்க இடத்தில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் அமைந்­தி­ருப்­பதும், சீனாவின் எந்தக் கடற்­படைக் கப்­பலும் தரித்துச் செல்­வ­தற்குப் போதிய ஆழத்தை இந்த துறை­முகம் கொண்­டி­ருப்­பதும் சீனாவின் கடற்­படைத் தளத்தை அமைப்­ப­தற்கு அதிக வாய்ப்­புள்ள இட­மாக இதனை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அத்­துடன், ஐ.நா. பொதுச்­ச­பையில் இலங்கை சீனா­வுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தி­ருக்­க­வு­மில்லை. அர­சியல் உறு­தித்­தன்மை அதிகம் இல்­லா­தி­ருப்­பதும் சீனா­வுக்குச் சாத­க­மா­னது தான்.

ஏனைய நாடுகள், துறை­மு­கங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில், இலங்கை சீனா­வுக்கு வாய்ப்­பான தெரி­வாக இருக்­கி­றது என்று கூறு­கி­றது அமெ­ரிக்க ஆய்வு. இலங்­கையின் அமை­விட முக்­கி­யத்­து­வத்­தினால் எல்லாக் காலங்­க­ளிலும், இங்கு தளம் அமைப்­பது பல்­வேறு நாடு­களின் கன­வா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

சோழர்­களின் படை­யெ­டுப்புத் தொடக்கம், போர்த்­துக்­கீசர், ஒல்­லாந்தர், ஆங்­கி­லேயர் காலம் வரை மாத்­தி­ர­மன்றி, அதற்குப் பின்­னரும் இலங்­கையை தள­மாக பயன்­ப­டுத்த பல்­வேறு நாடு­களும் விரும்­பின.

1980களின் தொடக்­கத்தில், அமெ­ரிக்கா திரு­கோ­ண­ம­லையில் தளம் அமைக்கப் போகி­றது என்ற கதை இருந்தது. இந்­தி­யாவும் அது­கு­றித்து அச்சம் கொண்­டி­ருந்­தது. அதற்குப் பின்னர் இந்­தி­யாவும் சில காலம் இலங்­கையை தள­மாக பயன்­ப­டுத்­தி­யது. அதற்குப் பிறகு தான் சீனா காலூன்றப் போகி­றது என்ற அச்சம் ஏற்­பட்­டது.

இலங்­கையில் பிற நாடுகள் தளம் அமைக்கப் போவது தொடர்­பான தக­வல்கள் எல்­லாமே ஊகங்­களோ, வதந்­தி­களோ அல்ல. ஏனென்றால், இலங்­கையின் அமை­விட முக்­கி­யத்­துவம் தான் அத்­த­கைய தக­வல்கள் பர­வு­வ­தற்குக் காரணம். அம்­பாந்­தோட்­டையில் சீனா தளம் அமைக்கப் போவ­தாக வெளி­யாகும் தக­வல்கள் எல்­லாமே உண்­மை­யென்றோ பொய் என்றோ எடுத்துக் கொள்ள முடி­யாது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இலங்­கையில் சீனா தளம் அமைத்து விடக் கூடாது என்­பதில் கவ­ன­மாக இருக்­கி­றது. அதற்­காக அவ்­வப்­போது, இவ்­வா­றான கல்லை வீசி, குட்­டையைக் குழப்­பவும் வாய்ப்­பி­ருக்­கி­றது. அதற்­காக இலங்­கையில் தளம் அமைக்கும் எண்ணம் சீனா­வுக்கு இல்லை என்று ஒரே­ய­டி­யாக மறுத்து விட முடி­யாது.

500 கடற்­படைக் கப்­பல்­க­ளுடன் பிர­மாண்­ட­மான கடற்­ப­டையைக் கொண்­ட­தாக வளர்ச்சி பெற்­றுள்ள சீனா, அடுத்து தனது உல­க­ளா­விய ஆதிக்­கத்தை நிலைப்­ப­டுத்த புதிய புதிய தளங்­களை அமைக்கும். அது தவிர்க்க முடி­யாத நியதி.

எலி கொழுத்தால் வளையில் தங்­காது என்­பது போலத் தான், ஒரு கட்­டத்­துக்கு மேல் ஒரு நாடு தனது படை­களை வளர்த்து விட்டால், அதற்கு மேல் அடங்­கி­யி­ருக்­காது.

சீனக் கடற்­ப­டையின் அப­ரி­மித வளர்ச்சி, அதன் எல்­லை­க­ளுக்குள் அதனை மட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­காது. இந்த உண்­மையை உணர்ந்­த­வர்­களால், இலங்­கையில் சீனா தளம் அமைக்க விரும்­பு­கி­றது என்ற தக­வலை ஒரு­போதும் நிரா­க­ரிக்க முடி­யாது.

சீனா­விடம் கடன் பெற்­றுள்ள இலங்கை, எல்லா தரு­ணங்­க­ளிலும் சீனாவின் விருப்­பத்தை புறக்­க­ணிக்க முடி­யாது. இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் இலங்­கையை சீனாவின் பக்கம் சாய விடாமல் தடுப்­பதில் முனைப்­புடன் இருக்­கின்­றன. இப்­போது அமெ­ரிக்கா, பிரான்ஸும் இணைந்து கொண்­டி­ருக்­கின்­றன.

பிரான்ஸ் ஜனா­தி­பதி மெக்­ரோனின் குறு­கிய இலங்கைப் பய­ணமும், ஜப்­பா­னிய வெளி­வி­வ­கார அமைச்­சரின் அண்­மைய இலங்கைப் பய­ணமும், பூகோள அர­சியல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தவை.

சீனாவின் வியூ­கத்­துக்கு தடை­போடும் வகை­யி­லா­னவை. சீனா­வுக்கு எதி­ராக உலகின் முக்­கிய சக்­திகள் இணைந்து செயற்­ப­டு­கின்ற போதும், சீனா தனது தனித்துவமான செயற்பாடுகளின் ஊடாக நாடுகளை தன் பக்கம் இழுத்து வருகிறது.

இலங்கை அணிசேரா கொள்கையை பின்பற்றுவதாக கூறிக் கொண்டாலும், சீனா விடயத்தில் அது எப்போதும், அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்ததில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது தான், இலங்கை தொடர்பான சீனாவின் இப்போதைய எதிர்பார்ப்புகள் என்ன என்பது தெரியவரும்.

கொவிட்டுக்குப் பின்னர், சீன - இலங்கைத் தலைவர்களுக்கிடையிலான உயர்மட்டச் சந்திப்புகள் இடம்பெறவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் சீனப் பயணம், சீனாவின் அடுத்த கடற்படைத்தளம் தொடர்பான ஊகங்களை தெளிவுபடுத்தக் கூடியதாக அமைந்தால் ஆச்சரியமில்லை.

https://www.virakesari.lk/article/161827

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

அதில் முத­லா­வது இடத்தில் ஹம்­பாந்­தோட்டை துறை­முகம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் சீனா தனது கடற்­படைத் தளத்தை அமைக்­க­வுள்­ளது என்ற ஊகங்­களும், ஆய்­வு­களும் பல ஆண்­டு­க­ளா­கவே வந்து கொண்­டி­ருக்­கின்­றன. சீனாவும் இலங்­கையும் அதனை எப்­போதும் நிரா­க­ரித்தே வந்­தி­ருக்­கின்­றன.

 

இத்தனை கோடி பணத்தை கொட்டி சீன அந்த துறைமுகத்தை பெற்றுக்கொண்டது ஒன்றும் கால்பந்து விளையாடுவதற்கல்ல. நிச்சயமாகவே அவர்கள் தங்கள் தேவையை முழுமையாக நிறைவேற்றுவார்கள். அதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.