Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்!

மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் நடவடிக்கை!

written by  adminAugust 12, 2023
Senthil-thondaiman.png?fit=720%2C584&ssl

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன.

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன. அங்கு வாழும் தமிழ் மக்கள் இவ்விகாரை நிர்மாண பணிகள் ஆரம்பிக்க இருப்பதை நிறுத்துமாறு கோரிஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் விகாரை நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் பாரியதோர் இனமுறுகல் ஏற்படும். ஆகையினால், கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களை பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக ஆரம்பிக்க இருக்கும் குறித்த விகாரையின் நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

https://globaltamilnews.net/2023/193954/

  • கருத்துக்கள உறவுகள்
கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்வோம் என எச்சரிக்கை

 
 
 

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

குறித்த பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்துவதற்கு சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குமார்களினால்  இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மூவின மக்களது சகோதரத்துவத்தையும் வீணடிக்கின்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை உடனடியாக பதவி நீக்கம் செய்வோம் எனவும் இதன்போது எச்சரித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1344598

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணியிள், பண்ணிப்பாருங்கோவன்.

சீனாவா, இந்தியாவா உசத்தி என்று காட்டுங்கோ! 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்த சிங்களமா? அரச நிர்வாகமா? சரியான போட்டி

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி பிக்குகள் ஓய்யாரமா பின்னுக்கு கைகட்டி நிற்பது சுப்பரோ சுப்பர். எங்கோ சேரிப்பக்கமா நிண்ட ரௌடிகளை பிடிச்சு காவித்துணியாலை சுத்திட்டு கொண்டுவந்து இறக்கியிருக்கிறானுக பாவிப்பயலுக. இந்த போஸ் குடுத்துகொண்டு நிண்டா கல்லறையிலை கிடக்கிற புத்தபெருமானே  பிரண்டு படுப்பான்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை - நிலாவெளி பிரதான வீதியை மறித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் !

news-02-6.jpg

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், வரலாற்று சான்றுகளை கிளறுகின்ற சம்பந்தன், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

news-03-4.jpg

நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரை காரணமாக இனமுறுகல் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து உத்தேச விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன. அங்கு வாழும் தமிழ் மக்கள் விகாரையின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்க இருப்பதை நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர் இந்த நிலையில் விகாரை நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் பாரிய இனமுறுகல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களை பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக உத்தேச விகாரையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/268017

  • கருத்துக்கள உறவுகள்

செந்திலுக்கு அஷ்டமச்சனி.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2023 at 22:56, vanangaamudi said:

இந்த போஸ் குடுத்துகொண்டு நிண்டா கல்லறையிலை கிடக்கிற புத்தபெருமானே  பிரண்டு படுப்பான்.

புத்தர் செய்த மிகப்பெரிய தவறு, இல்லறத்தில் நுழைந்தவர் அதிலே நிலைத்து நின்று நல்லறிவை போதித்திருக்கலாம், நாட்ட நடு நிசியில் தன்னை நம்பி வந்தவளை கைவிட்டு, உலக துன்பங்களை எதிர்கொள்ள பயந்து கிளம்பியவர், தான் யாரென்றும் எதற்காக அரண்மனையை விட்டு கிளம்பினேன், எனது போதனை என்னவென்று விபரமாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். முக்கியமாக, தான் கடவுளல்ல, ஒரு வழிகாட்டும் துறவி என்பதையாவது சொல்லித்தொலைத்திருக்க வேண்டும் அல்லது அவர் சொன்னவை இவர்களுக்கு விளங்காமல் அவரை தமது கொலை கொள்ளைகளுக்கு சாட்சியாக பாவிக்கிறார்களோ? அப்படியானால் அவர் வழிகாட்டியுமல்ல இந்தகொள்ளையர்களின் தலைவர், வழிகாட்டி. இவரை வழிபடலாமா? மற்றவர்களின் உரிமைகளை பறித்து நடுத்தெருவில் விட்டு நாடு முழுவதும் விகாரை கேட்கும் பேராசை கொண்டவரால் பக்தர்களுக்கு அருள் வழங்க முடியுமா?  இதற்கு பெயர் கடவுளாம்! சண்டைக்கு அலையும் பிக்குகளுக்குத்தான் வெளிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காவிகளுடன் ஒரு இஸ்லாமிய அமைச்சரும் செந்திலை அகற்றுவதட்கு முயட்சிப்பதாக தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சின்னப்பெடியன்! அரசியல் கனவோட இப்பதான் முதன்முதலாக ஏறியிருக்கிறார், அதுக்கிடையில தள்ளிவிழுத்துறோம் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

36 minutes ago, Cruso said:

இந்த காவிகளுடன் ஒரு இஸ்லாமிய அமைச்சரும் செந்திலை அகற்றுவதட்கு முயட்சிப்பதாக தெரிகின்றது. 

 இதெல்லாம் நடப்பவைதானே, ஒன்றும் புதிதில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தடையுத்தரவு பிறப்பிக்க கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரமில்லை - புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர்

Published By: DIGITAL DESK 3

25 AUG, 2023 | 09:07 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொரலுகந்த  ரஜமஹா விகாரைக்கு சட்டபூர்வமாக விகாரை ஒன்று அமைக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில்  அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர்  அந்த நிலத்துக்குள் உட்பிரவேசிப்பதற்கு  தடை விதிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  நகரங்கள், பட்டிணங்கள் சபையின் செயலாளரிடம் தடையுத்தரவு விதிக்குமாறு கோரியுள்ளார். மாகாண ஆளுநருக்கு இந்த அதிகாரம் உள்ளதா என   பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மாகாண ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆகவே, சீலவங்ச தேரர் அந்த விகாரை பகுதிக்குள் உட்பிரவேசிக்கலாம், வசிக்கலாம் அதற்கு தடையேதும் இல்லை என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24)  இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் திருகோணமலை மாவட்டத்தில் நகரங்கள் மற்றும் பட்டிணங்கள்  பிரதேச செயலக பிரிவு  பகுதி தொல்பொருள் மரபுரிமைக்கு சொந்தமானது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் 'ஆராயம' ஒன்றை நிர்மாணிப்பதற்கு 60 பேச்சர்ஸ் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வெல்கம  விகாரையின் விகாராதிபதி சீலவங்ச திஸ்ஸ தேரருக்கு இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த காணியை தூய்மைப்படுத்தி அங்கு வசிப்பதற்கு தேரர் சென்ற போது தமிழர்களில் ஒருசிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்த காணிக்குள் உட்பிரவேசிப்பதற்கும், அங்கு வசிப்பதற்கும் தடையுத்தரவு விதிக்குமாறு நகரம் மற்றும் பட்டிணங்கள் பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு தடையுத்தரவு விதிக்க மாகாண ஆளுநருக்கும் பிரதேச செயலாளருக்கும் அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியில் வழங்கப்பட்டுள்ள காணிக்குள் உட்பிரவேசிப்பதை தடுப்பது சட்டவிரோதமானது. இப்பகுதியில் வாழும் தமிழர்களும், தமிழ் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. உயர்மட்டத்தில் இருந்துக் கொண்டு செயற்படும் ஒரு  நபரின் சூழ்ச்சியின் ஊடாகவே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே மாகாண ஆளுநருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வருமாறு பதிலளித்தார்.

கேள்வி ; பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்  விகாரை பகுதிக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர் மற்றும் பிரதேச செயலாளருக்கு உள்ளதா?

பதில் ; பொரலுகந்த விகாரை 13-15- 024 என்ற இலக்கத்தின் கீழ் புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆகவே விகாரை மற்றும் அப்பகுதிக்கு எவரும் செல்லவாம் தடையேதுமில்லை.

கேள்வி ; இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா?

பதில் ; பொரலுகந்த ரஜமஹா விகாரை மற்றும் போராட்டம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அதிபர், நகரம் மற்றும் பட்டிணங்கள் பிரதேச சபையின் செயலாளர் ஆகிய தரப்பினர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கேள்வி ; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுவதை அரசாங்கம் அறிந்துள்ளதா? அது தொடர்பான தகவல்கள் உள்ளதா?

பதில் ; ஆம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. நாளாந்தம் தகவல்கள் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி ; சட்டவிரோதமாக மாகாண ஆளுநர் வழங்கிய அறிவுறுத்தலை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?

பதில் ; இல்லை, பொரலுகந்த விகாரை பகுதிக்கு அந்த தேரர் செல்லலாம் அங்கு வசிக்கலாம் தடையேதும் இல்லை.

https://www.virakesari.lk/article/163139

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

சட்ட ரீதியில் வழங்கப்பட்டுள்ள காணிக்குள் உட்பிரவேசிப்பதை தடுப்பது சட்டவிரோதமானது.

தனியார் காணிகளுக்குள் விகாரை அமைப்பது மட்டும் சட்டமுறையானதோ? சட்டத்தை மிதிப்பவர்கள் சொல்கிறார்கள்!

23 hours ago, ஏராளன் said:

ஆறு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் 'ஆராயம' ஒன்றை நிர்மாணிப்பதற்கு 60 பேச்சர்ஸ் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

வெல்கம  விகாரையின் விகாராதிபதி சீலவங்ச திஸ்ஸ தேரருக்கு இந்த காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த காணியை தூய்மைப்படுத்தி அங்கு வசிப்பதற்கு தேரர் சென்ற போது தமிழர்களில் ஒருசிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒரு பிக்குவுக்கு எதற்கு அங்கு காணி வழங்கப்பட்டது? யாரது காணி அது? வந்து குத்துவாங்கள், பக்கத்தில தோண்டுவாங்கள்,  இடிப்பாங்கள், பிறகு விகாரை என்பாங்கள். கேட்டால் தொல்பொருள் என்பாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3

28 AUG, 2023 | 02:01 PM
image
 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

IMG_0362.JPG

குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஏ6 பிரதான வீதியை வழிமறித்து கிழக்கு ஆளுநருக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் இன்று திங்கட்கிழமை (28) காலை தொடக்கம் மதியம்வரை இடம்பெற்றது. 

இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்று வந்தநிலையில் இது தொடர்பாகவும் பேசப்பட்டது.

IMG_0374.JPG

குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிராக தமிழ் மக்களினால் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஜனாதிபதியினால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட விகாரையின் கட்டுமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG_0362.JPG

காலாகாலமாக தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிக்குள் விகாரை அமைத்தால் அது இன முறுகலை ஏற்படுத்தும் என்ற வகையிலும், இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்ற வகையிலும் தமிழ் மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/163348

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டதால் பரபரப்பு  

09 SEP, 2023 | 02:39 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

குறித்த பதாகை இன்று (09) காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பதாகை நடப்பட்டதன் பின்னர், அப்பகுதியில் பொலிஸார் சிலர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

375197579_648049597418537_10690900777430

சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். 

அத்துடன் குறித்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக் கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இலுப்பைக்குளம் பகுதியில் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/164177

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் சிங்களப் படைகளின் பொலிஸாரின் ஆக்கிரமிப்புக் காலத்தில் அவர்களின் ஆதரவோடு சிங்கள அரச அனுசரணையோடு அமைக்கப்பட்ட அனைத்து புத்த ஆலயங்களும் இடித்து அகற்றக்கப்படுவதே.. இதற்கு ஒரே தீர்வு. 

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு என்ன நடந்ததோ

அதேநிலை தான் கிழக்கு மாகாண ஆளுணருக்கும் வரும்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.