Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணாலயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள்.  என்ன பிரச்சினையென‌ நான் கேட்க ம‌கள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . 
ஒரு வயதுக்கு பிறகு முதுமை ஒன்றை விரும்பும் ஆனால் அந்த முதுமை விரும்புவதை நாம் வாழ முடியாமல் தங்கி வாழ்வது என்பது மிக கொடுமையாக இருக்கும் எதாவது செய்வதென்றால் கூட கூட இருப்பவர்களிடம் ஆயிரம் முறை கேட்க வேண்டும். இத்தனைக்கும் உழைக்கும் போதும் பிள்ளைகளை வளர்க்கும் போது ஆயிரம் முடிவுகளை துணிந்து எடுத்திருப்போம். ஆனால் முதுமை வந்ததும் எங்கோ ஊர் மூலையில் யாருக்கும் தேவையற்ற பொருள் போல முடங்கி இருப்போம் தேவைப்படும் போது மட்டும் பாவிப்பது போல. அனுபவம் கூட  அமைதியாகிவிடுகிறது. டீவிக்கு முன்னால் ஒரு பொம்மை போல பேரப்பிள்ளைகளுடன் ஓர் வாழ்க்கை. 

கொரோனா காலம் முடிந்த பிறகு கொழும்பில் வாழ்வது மிக சிரமாக இருந்தது தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதும் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு, உக்கிரேன் போர் என உலகை சரித்துக்கொண்டிருந்தது வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாராப் பிரச்சினைகள் , பெற்றோல் பிரச்சினை , எரிவாயு , மண்ணெண்ணெய் பிரச்சினை இப்படி இருக்க இந்த பிரச்சினைகளுக்குள் கொழும்பில் வாழ்வதென்பது மிக சவாலகவே இருந்தது மகளின் கணவருக்கும் வேலை நின்று போக ஒருவர் உழைப்பில் வாழ்வது குடும்பத்தில்  பணத்தட்டுப்பாட்டால்  ஆட்கள் மீது எரிந்து வீழ்வது மட்டும் மிஞ்சி இருந்தது குழந்தைகள் படிக்க வேண்டும்  , நீர் கட்டணம் , மின்சாரக்கட்டணம் வீட்டு வாடகை என பணத்தேவை அதிகரிக்கவே மகள் ஏதோ நிறுவனத்தில் கடன் பட்டிருக்கிறாள் என புரிந்து கொண்டேன்.

மாலை நேரம் வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் கேட்கிறாள் மகள். அண்ணா அவசரமாக பணம் கொஞ்சம் அனுப்பு என அவனோ அக்கா இங்கயும் நிலமை மோசம் அப்பா எக்கவுண்ட்ல பணம்  இருக்கிறதுதானே அவசரத்துக்கு தானே வாங்கி எடு என மகன் சொல்லி இருப்பான் போல அவளோ அப்பாகிட்ட எப்படி பணம் கேட்பது என மகள் சொல்வது என் காதில் வீழ்கிறது.

எனக்கும் என் முதுமைக்கும் ஓய்வும் நிம்மதியும் அமைதியான இடமும் தொந்தரவற்ற வாழ்க்கையும் தேவைப்படுகிறது இனிமேலும் யாருக்கும்  பாரமாக இருக்க கூடாது என உள்மனம் சொல்கிறது. வீட்டை விட்டு வெளிக்கிடும் எண்ணம் என்னைத் தொற்றிக்கொள்கிறது. அந்த கண்ணாடி மேசையில் அந்த வங்கி அட்டையை வைத்துவிட்டு அதன் ரகசிய இலக்கத்தையும் எழுதி வைத்துவிட்டு கண்ணாடியை பார்க்க அதற்கு முகம் காட்டத்தெரியவில்லை. ஆனால் பெயருக்கும் அதுவும் கண்ணாடி மேசையே என்னைபோல. குழந்தைகளை மெதுவாக கொஞ்சிவிட்டு நன்றாக படியுங்கள் அம்மப்பா குப்பைகளைக்கொட்டிவிட்டு வருகிறேன் என ஒரு பையில் சில உடுப்புக்களை எடுத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தங்கி வாழ ஓர் இடம் உண்டு எனக்கொரு இடமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

சரணாலயம் தொடரும்   ........

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ தனி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......கலக்குறீங்கள் தனி........தொடருங்கள்........!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

தொடருங்கோ தனி.

17 hours ago, suvy said:

ஆஹா.......கலக்குறீங்கள் தனி........தொடருங்கள்........!  👍

சரணாலயத்தில் தஞ்சமடைந்த இரு பறவைகளுக்கும் நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியேறிய நான் பஸ் ஏறுவதற்கு தயாரானேன் நிட்சயமாக சொந்த ஊருக்கு செல்லக்கூடாது என நினைத்து வேற தெரியாத ஊருக்கு பஸ் ஏற‌ பஸ் கட்டணத்தை கேட்க 1200 ரூபா என்றார் கையில் பணம் இல்லாதாததால் இருந்த சிறிய செல்போனை விற்க 4000 ரூபா கொடுத்தார் .மிக பழசு நிறைய சாமான் மாற்ற வேண்டும் அவசரத்திற்கு பணம் தேவைப்பட ஒன்றூம் சொல்ல முடியாமல் கொடுக்கும் பணத்தை வாங்கி பஸ்ஸில் அமருகிறேன் . பஸ் புறப்படுகிறது இடைநடுவே ஏறிய சிங்கள பெண்மணி தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு பஸ்ஸில் உள்ள பயணீகளிடம் ஒரு சிட்டை நீட்டி வந்தாள் எல்லோரும் சிறிய பணத்தை கொடுக்க நானும் ஒரு 50ஐ கொடுக்க அவள் நன்றி சொல்லி விட்டு இறங்கிறாள்.

ஆனால் அது உண்மையாக இருக்குமா என என் மனது கேட்கிறது? . பஸ் சாப்பாட்டுக்காக நிறுத்தி மல சல கூடம் கழிக்க சென்றால் போக முடியாத அளவுக்கு நாற்றமும் மணமுமாக இருக்க ஏந்தான் இப்படியான கடைகளுக்கு நிறுத்துறாங்களோ என மீண்டும் மனதிற்கும் கேள்வி எழ ஏனென்றால் சத்தமாக எங்கேயும் கேள்விகள் கேட்க முடியாது இலங்கையை பொறுத்த வரை நமது ஊரிலும் கூட. ஒரு வணிசையும் பிளேண்டியையும் குடித்துவிட்டு பஸ் ஏறுகிறேன் இருக்கும் பணத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அடுத்த குழு ஏறுகிறது அவர்களோ ஒரு சிறிய மடிக்கணணி ( ரப்) ஒன்றில் ஒரு சிறுமியைக்காட்டி அவளது சத்திரசிகிச்சைக்கு உதவுமாறு பணம்கேட்க ஆனால் அவர்கள் ரை கட்டி சூ போட்டு சிமாட்டாக இருந்தார்கள். ஆக இவர்கள் கொள்ளைக்கூட்டம் என மனது சொல்கிறது அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் அனைவரும் 20 ரூபாய் ஆனால் நான் பணம்  கொடுக்க வில்லை என்னை முறைத்தவாறு செல்கிறார்கள்அவர்கள்.

அனைவரும் சிங்கள இளைஞ்ஞர்கள் அப்போதுதான் தெரிந்து கொண்டேன் பஸ்ஸ்லி பயணிக்க பலர் இருபது ரூபா மாற்றி எடுத்ததை இதையே பிழைப்பாக வச்சி இலங்கையில் ஒரு கும்பல் ஏமாற்றுப்பேர் வழிகள். பஸ் ஊரை வந்து அடைகிறது அன்றிரவு பசி வேற வயிற்றை கிளற ஆரம்பிக்க சட்டைபையை தடவ பையில் இருந்த காசு குனிந்து பையை எடுக்கும் விழுந்து இருக்க பையில் காசு இருக்கவில்லை பஸ்ஸில் திரும்ப போய் தேடினால் காசு அங்கு இருக்கவில்லை.    

எனக்கும் பசிக்குமான கொஞ்சல் ஆரம்பமானது அது அப்படி இருக்க உடலையாவது சுத்தமாக்க வேண்டும் மென ஒரு தேவாலயத்துக்கு செல்ல அங்கே தங்க முடியாது வெளியில் போங்கோ என சொல்கிறார் பாதுகாவலர் காரணம் ஏப்றல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு  பிறகு யாரையும் உள்ளே விடுவதில்லையாம். அடுத்து ஒரு கோவிலை நோக்கி செல்ல உள்ள விடமுடியாது கோவில் நிர்வாகம் என சொன்னார்கள் கவனமாக கடவுளையும் சேர்த்து பூட்டி வையுங்கள் என சொல்லி விட்டு ஒரு பள்ளிவாசலை நோக்கி நடந்தேன் யாரும் இல்லை நீர் வசதிகள் எல்லாம் இருந்தது குளித்துவிட்டு உடுப்பையும் மாற்றிவிட்டு வெளியில் இருந்த மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்க பசி மயக்கம் கண்ணை மூடியது யாரோ கதைப்பது செல்வதெல்லாம் கண்ணுக்கு தெரிகிறது .

நானோ விழித்துப்பார்க்க நான் விரித்து இருந்த துணியில் 50 ரூபா பணம் போடப்பட்டிருந்தது அதை எடுத்து கடைக்கு போனால் க‌டைக்காரனோ ஐயா இப்ப ஒரு பரோட்டாவே ஐம்பது ரூபா இந்த காசுக்கு ஒன்றும் வராது போங்கோ என துரத்திவிட்டான். வறுமை கொடியது அதிலும் வறுமையிலும்  பசி மிக கொடியது இரண்டு நாளுக்குள் கையில் பணம் இல்லாத  இந்த வெளி உலகத்தை நான் புரிந்து கொண்டது போல் யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள் என நினைத்து மீண்டும் அந்த இடத்தில் வந்து உறங்குகிறேன். பஸ்ஸில் அந்த பிள்ளைகள் ஏன் சிட்டை நீட்டி பொய் சொல்லி காசு கேட்டிருக்கிறார்கள் என நினைத்து ......................................வயிறு பொல்லாதது  

சரணாலயம் தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

தோழுக்கு மிஞ்சினால் தோழன்.

தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தோழுக்கு மிஞ்சினால் தோழன்.

தொடருங்கள்.

நன்றி அண்ணா உங்கள் ஊக்கத்திற்கு  உங்கள் ஊக்கங்கள் பல ஆக்கங்களை தருவிக்கும் என்ற நம்பிக்கையில் நான் @suvy@ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ தனி.
பசியோடிருப்பது கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா........நன்றாகப் போகின்றது கதையும், எழுத்துநடையும்.........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2023 at 06:11, தனிக்காட்டு ராஜா said:

அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள்.  என்ன பிரச்சினையென‌ நான் கேட்க ம‌கள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . 

முதல் வசனத்திலேயே நாலு ‘போண்’ வந்து விட்டது. இன்னும் எத்தனை வருமோ? தொடருங்கள் தனிக்காட்டு ராஜா. வாசிக்க காத்திருக்கிறேன். ‘போண்’ என்பது ‘போன்’ என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளியேறிய நான் பஸ் ஏறுவதற்கு தயாரானேன் நிட்சயமாக சொந்த ஊருக்கு செல்லக்கூடாது என நினைத்து வேற தெரியாத ஊருக்கு பஸ் ஏற‌ பஸ் கட்டணத்தை கேட்க 1200 ரூபா என்றார் கையில் பணம் இல்லாதாததால் இருந்த சிறிய செல்போனை விற்க 4000 ரூபா கொடுத்தார் .மிக பழசு நிறைய சாமான் மாற்ற வேண்டும் அவசரத்திற்கு பணம் தேவைப்பட ஒன்றூம் சொல்ல முடியாமல் கொடுக்கும் பணத்தை வாங்கி பஸ்ஸில் அமருகிறேன் . பஸ் புறப்படுகிறது இடைநடுவே ஏறிய சிங்கள பெண்மணி தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவுமாறு பஸ்ஸில் உள்ள பயணீகளிடம் ஒரு சிட்டை நீட்டி வந்தாள் எல்லோரும் சிறிய பணத்தை கொடுக்க நானும் ஒரு 50ஐ கொடுக்க அவள் நன்றி சொல்லி விட்டு இறங்கிறாள்.

ஆனால் அது உண்மையாக இருக்குமா என என் மனது கேட்கிறது? . பஸ் சாப்பாட்டுக்காக நிறுத்தி மல சல கூடம் கழிக்க சென்றால் போக முடியாத அளவுக்கு நாற்றமும் மணமுமாக இருக்க ஏந்தான் இப்படியான கடைகளுக்கு நிறுத்துறாங்களோ என மீண்டும் மனதிற்கும் கேள்வி எழ ஏனென்றால் சத்தமாக எங்கேயும் கேள்விகள் கேட்க முடியாது இலங்கையை பொறுத்த வரை நமது ஊரிலும் கூட. ஒரு வணிசையும் பிளேண்டியையும் குடித்துவிட்டு பஸ் ஏறுகிறேன் இருக்கும் பணத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அடுத்த குழு ஏறுகிறது அவர்களோ ஒரு சிறிய மடிக்கணணி ( ரப்) ஒன்றில் ஒரு சிறுமியைக்காட்டி அவளது சத்திரசிகிச்சைக்கு உதவுமாறு பணம்கேட்க ஆனால் அவர்கள் ரை கட்டி சூ போட்டு சிமாட்டாக இருந்தார்கள். ஆக இவர்கள் கொள்ளைக்கூட்டம் என மனது சொல்கிறது அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் அனைவரும் 20 ரூபாய் ஆனால் நான் பணம்  கொடுக்க வில்லை என்னை முறைத்தவாறு செல்கிறார்கள்அவர்கள்.

அனைவரும் சிங்கள இளைஞ்ஞர்கள் அப்போதுதான் தெரிந்து கொண்டேன் பஸ்ஸ்லி பயணிக்க பலர் இருபது ரூபா மாற்றி எடுத்ததை இதையே பிழைப்பாக வச்சி இலங்கையில் ஒரு கும்பல் ஏமாற்றுப்பேர் வழிகள். பஸ் ஊரை வந்து அடைகிறது அன்றிரவு பசி வேற வயிற்றை கிளற ஆரம்பிக்க சட்டைபையை தடவ பையில் இருந்த காசு குனிந்து பையை எடுக்கும் விழுந்து இருக்க பையில் காசு இருக்கவில்லை பஸ்ஸில் திரும்ப போய் தேடினால் காசு அங்கு இருக்கவில்லை.    

எனக்கும் பசிக்குமான கொஞ்சல் ஆரம்பமானது அது அப்படி இருக்க உடலையாவது சுத்தமாக்க வேண்டும் மென ஒரு தேவாலயத்துக்கு செல்ல அங்கே தங்க முடியாது வெளியில் போங்கோ என சொல்கிறார் பாதுகாவலர் காரணம் ஏப்றல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு  பிறகு யாரையும் உள்ளே விடுவதில்லையாம். அடுத்து ஒரு கோவிலை நோக்கி செல்ல உள்ள விடமுடியாது கோவில் நிர்வாகம் என சொன்னார்கள் கவனமாக கடவுளையும் சேர்த்து பூட்டி வையுங்கள் என சொல்லி விட்டு ஒரு பள்ளிவாசலை நோக்கி நடந்தேன் யாரும் இல்லை நீர் வசதிகள் எல்லாம் இருந்தது குளித்துவிட்டு உடுப்பையும் மாற்றிவிட்டு வெளியில் இருந்த மரத்தில் சாய்ந்து கொண்டு இருக்க பசி மயக்கம் கண்ணை மூடியது யாரோ கதைப்பது செல்வதெல்லாம் கண்ணுக்கு தெரிகிறது .

நானோ விழித்துப்பார்க்க நான் விரித்து இருந்த துணியில் 50 ரூபா பணம் போடப்பட்டிருந்தது அதை எடுத்து கடைக்கு போனால் க‌டைக்காரனோ ஐயா இப்ப ஒரு பரோட்டாவே ஐம்பது ரூபா இந்த காசுக்கு ஒன்றும் வராது போங்கோ என துரத்திவிட்டான். வறுமை கொடியது அதிலும் வறுமையிலும்  பசி மிக கொடியது இரண்டு நாளுக்குள் கையில் பணம் இல்லாத  இந்த வெளி உலகத்தை நான் புரிந்து கொண்டது போல் யாரும் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள் என நினைத்து மீண்டும் அந்த இடத்தில் வந்து உறங்குகிறேன். பஸ்ஸில் அந்த பிள்ளைகள் ஏன் சிட்டை நீட்டி பொய் சொல்லி காசு கேட்டிருக்கிறார்கள் என நினைத்து ......................................வயிறு பொல்லாதது  

சரணாலயம் தொடரும்

தனிகாட்டுராஜா, நீண்ட கதை எழுதும் திறமையை.. இவ்வளவு நாளும் எங்கு ஒழித்து வைத்திருந்தவர்.
நன்றாக உள்ளது. தொடருங்கள் ராஜா...  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரணாலயம் உண்மைக்கதை போல் தெரிகின்றது....தொடருங்கள் ராசன்

  • கருத்துக்கள உறவுகள்

சரணாலயம் ...நன்றாக இருக்கிறது ..ஆங்கிலப் சொற் பதங்கள் குறைத்து எழுதினால்  உ = ம்  போன் (தொலைபேசி.. அழைப்பு)  மிக மிக சிறப்பு. ஏற்கனவே சுட்டி காட்டியுள்ளேன் தனியின்  ...எழுத்துநடை மிகவும் நல் மாற்றமடைந்து உள்ளது என  தொடருங்கள்.பாராட்டுக்கள்.  
 
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கதிர்காமம் போனபோது 

யாரோ சொந்தக்கதையை சொல்லியிருக்கிறாங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

தொடருங்கோ தனி.
பசியோடிருப்பது கொடுமை.

நன்றிகள் ஏராளன் 

22 hours ago, suvy said:

ஆஹா........நன்றாகப் போகின்றது கதையும், எழுத்துநடையும்.........!   👍

நன்றி அண்ணை  

18 hours ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கோ தனி.

நன்றி அண்ணை  

15 hours ago, Kavi arunasalam said:

முதல் வசனத்திலேயே நாலு ‘போண்’ வந்து விட்டது. இன்னும் எத்தனை வருமோ? தொடருங்கள் தனிக்காட்டு ராஜா. வாசிக்க காத்திருக்கிறேன். ‘போண்’ என்பது ‘போன்’ என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ம் நன்றி அண்ணை குறைகளை சொல்லும் போதே திருத்திக்கொள்ளலாம் அதற்க்காகவே கருத்துக்களை இட்டால் இன்னும் சிறப்பாக எழுதலாம்  

14 hours ago, தமிழ் சிறி said:

தனிகாட்டுராஜா, நீண்ட கதை எழுதும் திறமையை.. இவ்வளவு நாளும் எங்கு ஒழித்து வைத்திருந்தவர்.
நன்றாக உள்ளது. தொடருங்கள் ராஜா...  

நன்றி அண்ணை பைக்கட்டில் பத்து ரூபா இருக்கும் போது வரும் சிந்தனைக்கும் யோசனைக்கும் அளவே இல்லை கண்ணுக்கு சம்பவம் தெரிய கற்பனை தட்டில் இறக்கி கதையாக்கி விடுவதுதான் 

13 hours ago, குமாரசாமி said:

சரணாலயம் உண்மைக்கதை போல் தெரிகின்றது....தொடருங்கள் ராசன்

வேலை முடிந்து பேருந்தை பிடிக்க வரும் போது தினம்  ஒருவரை காண்பேன் தனக்குத்தானே பேசிக்கொண்டு குடையுடன் நடந்து செல்வார் ஒரு முதியவர்  நீளகாற்சட்டை முழங்கால் வரை மடித்திருக்கும்  அவரை நினைத்து ஒர் கதை 

இப்படி பாதையில் அலைந்து திரிபவர்களுக்கு சிலர் பெண்கள் ஆண்கள் சோறு கட்டி பார்சல் கொடுக்கிறார்கள் நல்லது என்றாலும் அவர்களுக்கு தங்குமிடங்கள் இருந்தாலும் அங்கே தங்க மறுக்கிறார்கள் ஓர் இடத்தில் இருக்க மாட்டார்கள் அவர்கள் நடக்கணும் ஊர் முழுக்க இரவில் தங்கல் ஓர் கடைக்கு முன் தாழ்வாரத்தில் என்ன கொடுமையானது 

13 hours ago, நிலாமதி said:

சரணாலயம் ...நன்றாக இருக்கிறது ..ஆங்கிலப் சொற் பதங்கள் குறைத்து எழுதினால்  உ = ம்  போன் (தொலைபேசி.. அழைப்பு)  மிக மிக சிறப்பு. ஏற்கனவே சுட்டி காட்டியுள்ளேன் தனியின்  ...எழுத்துநடை மிகவும் நல் மாற்றமடைந்து உள்ளது என  தொடருங்கள்.பாராட்டுக்கள்.  
 
நன்றி அக்கா 
நன்றாக சுட்டிக்காட்டுகள் அதுவே போதும் இனிவரும் பகுதிகளில் ஆங்கில பதங்களை குறைக்கிறேன் 

8 hours ago, ஈழப்பிரியன் said:

அண்மையில் கதிர்காமம் போனபோது 

யாரோ சொந்தக்கதையை சொல்லியிருக்கிறாங்கள்.

ம் இன்னும் நிறைய இருக்கு வரும் கதைகள் ஒவ்வொன்றாக 

அநேகமாக வேலையிடத்தில் இலவச வைபை இருக்கிறது  பாடங்கள் பரிசோதனைகள் இல்லாத நேரத்தில் எழுதுவது  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரண்டு புரண்டு படுக்கிறேன்  பசிக்கு தூக்கம் வரவில்லை தண்ணீரை குடித்துவிட்டு இனியென்ன கெளரவம் நாளை பிச்சை எடுத்தாவது வயித்தின்ற பிரச்சினையை தீர்க்க வேண்டுமென முடிவெடுத்து வானத்துக்கும் எனக்கும் சிறிய காலம் பின்நோக்கிய மீட்டல் பேச்சுக்கள் தொடரும் போது   யாரோ ஒருவன் திடுதிடுவென ஓடி   அந்த மரத்தில் ஒளிவதை கண்டேன் ஒளிந்த அவன் மீண்டும் என்னருகில் வந்து எனது படுக்கைக்கு நிலத்தில் விரித்த பழைய சரத்தை எடுத்து முகத்தைமூடி நித்திரை போல தூங்கிவிட்டான். அவனைக்கண்டதும் எனது தூக்கமும் பசியும் முளித்து பார்க்கிறது வியப்புக்குறி போட்டு.

அவன் வந்து உறங்கினமாதிரி இருந்த போது அருகில் பொலிஸ் வண்டி ஒன்று வந்தது ஐயா இங்க யாராவது ஓடுனவனா?? இல்லை தம்பி ஏன்? இல்லை ஐயா எங்களை கண்டதும் ஒருவன் ஓடினான் அவனைதேடித்தான் இங்க வந்தோம்  ஓ அப்படியா! யார் அங்க படுக்கிறது எனக்கு தெரிஞ்ச பொடியன் தான் ஓ இஞ்செஞ்லாம் படுக்க கூடாது நாளைக்கு இடத்த மாத்தணும் இல்லையென்றால் புடுச்சி உள்ள போட்டுடுவோம் சரி தம்பி நாளைக்கு நான் போயிடுவேன் என பொலிசுக்கு சொல்ல அவர்கள் வாகனம் நகர்கிறது.

நானோ அவன் போர்வையை விலக்க மாட்டானோ? இல்லை தூங்கி விட்டானோ? என்ற முனைப்பில் என்ற சாரன விடுடா கள்ளா என சாரணை இழுக்கிறேன். ஐயா இழுக்காதீங்க இந்தாங்கோ உங்க சாரன் என்றான் அவன் கள்ளானாடா நீ? ஓம் ஐயா கள்ளந்தான் என்ன பொலிசிட்ட சொல்லி கொடுக்க போறீங்களா என்ன ?? இந்த உலகத்தில யார் கள்ளன் இல்ல சொல்லுங்க ? அரசியல் வாதி முதல் அடி மட்ட தொழிலாளியில் கூட கள்ளன் இருக்கிறான் என்ன பிடிபடுகிறவன் அகப்படுகிறான் பிடிபடாதவன் அழகாக வாழ்கிறான் என சொல்ல. 

மீதமாக நான் ஒன்றும் சொல்ல வார்த்தையும் வரல.............. சாமாதானம் ஆகிறேன் நான். ஐயா நானும் தேடாத வேலை இல்ல. படிக்கல யாரும் வேலை கொடுக்கல தெரிந்த வேலைக்கு போனால் எப்பயோ திருடுனத வச்சி இப்பவும் திருடன் முத்திரை குத்துறாங்க .ஆனால் நான் திருடுறத விட்டு கனநாள் ஆச்சு இப்ப பொலிஸ்க்காரன் கண்டா காசு கேட்பான் இல்லாட்டால் புடிச்சுக்கொண்டு போய் பொய் கேசு போடுவான் அதான் ஓடி வந்து ஒளிஞ்சன் என்று சொன்னான் அவன். மனம் மெதுவாக சாந்தமாகிறது அவன் பக்க நியாயத்தில்.
வாங்களன் சாப்பிடுவம் என்றான் எனக்கிருந்த பசிக்கு எல்லாம் பறந்தது என்ன தம்பி இருக்கிறது? இரண்டு சோற்றுப்பார்சல் இருக்கிறது இறைச்சி என்றான் ஓரளவு மனம் தயங்கினாலும் பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்று சும்மாவா  சொல்லி இருக்கிறார்கள். ம் நீ சாப்பிடு எனக்கு வேணாம் சீ நீங்க‌ பசியோட படுத்து இருப்பீங்க சாப்பிடுங்க என்றான். பசிக்கும் ஒன்றுமே தெரியாது  ஒரு வாயை அள்ளிசாப்பிட்டேன் பசி மயக்கம் அவன் கைகளை விட என் கைகள் அள்ளி அள்ளி தின்ன வைத்தது என் பசியை அவன் புரிந்து கொண்டான் ஐயா மாடு சாப்பிடுவீங்களோ?....ம் ம் ம்  இதென்ன???? இந்த நேரத்தில் இவன் இந்த கேள்வியைக்கேட்கிறானே எதுக்கும் சைவம் என்று சொல்லாமல் கிறிஸ்றியன் என்று சொல்லி விடுவோம் என நினைத்து கிறிஸ்டியன் என சொல்லிவிட்டேன். பசி என்னையும் என் மதத்தையும் மறக்க வைத்து பொய்யும் சொல்ல வைத்தது. பசிக்கு சாதி மதம் குலம் கோத்திரம் ஒன்றுமே தெரியாது  சாப்பிடும் போது அவன் கேள்விகளை கேட்க ஆயத்தமானான் 
ஐயா எத்தின நாளா இங்க இருக்கிற நீங்கள்? 
எங்க இருந்து வந்த நீங்கள்?  
 பிச்சை எடுக்கிற நீங்களா? 
யாரும் சொந்தம் இல்லையா ? 
கல்யாணம் கட்டவில்லையா? 
பிள்ளைகள் இல்லையா? 
அல்லது பிள்ளைகள் துரத்தி விட்டதுகளா?? 
அவன் கேள்விக்கு கொடுப்பில் அடக்கிய சோறை வைத்து பதில் சொல்ல முடியாது சாப்பிட்ட பிறகே பதில் சொல்கிறேன் என கை சைகயால் காட்டினேன். பசி மெதுவாக அடங்குகிறது அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொல்ல ம்ம் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை தான் ஐயா உங்களைப் போலவே எனக்கும் பிரச்சினை நீங்கள் சுதந்திரமாக வாழ நினைக்கிறீர்கள் நானோ ஓடி ஒளிந்து வாழும் வாழ்க்கை.

இரு நாட்டு ஜனாதிபதிகள் போல அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திர கூட்டம் முன்னே பேசி தூங்கி விட்டோம் 
 
 அடுத்த நாள் காலை எழும்பி பார்க்கும் போது எனது உடுப்பு பைகளை காணவில்லை 

தொடரும் 

  • கருத்துக்கள உறவுகள்

பசிக்கு உணவு வந்தது ஆனால் பை  போச்சு.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட பக்கத்துல படுத்திருந்தான் பையை அடிச்சுட்டு போயிட்டானே என அங்குமிங்கும்  தேட சிறிய தூரத்தில் நாய் ஒன்று பையை கிளறுவதைக்கண்டேன் ஆம் என்னுடைய பைதான் உள்ளே சாப்பாடு இருக்குமென நினைத்து கவ்விக்கொண்டு சென்றிருக்கிறது ஒரு நிமிடத்தில் அவனை நான் திருடிவிட்டான் என நினைத்திருந்தேன் என் நினைப்பை அவன் பொய்யாக்கி இருந்தான் அன்றிரவு பேசியதில் அவன் பெயரை கூட கேட்க மறந்துவிட்டேன் தம்பி என்றே கூப்பிட்டதால் . ஆனால் அவன் முகத்தை மறக்க முடியாது என் பசியை போக்கியவன் அல்லவா.

பையை எடுத்து உடுப்புக்களை வைக்க என் முன்னே ஒருவர் ஐயா உங்களை நான் இரண்டு நாளாக இங்க காண்கிறன் ஒரு இல்லத்தில் சேர்த்துவிடுகிறன் அங்க இருப்பீங்களா? ம் ம் இனியென்ன அங்கேயாவது போய் இனியுள்ள காலங்களை கழிப்போம் என நினைத்து ஓம் சொல்ல அழைத்துச்செல்கிறார் அந்த இல்லத்துக்கு அங்கே எனது பெயர் ( பரமானந்தன்) அடையாள அட்டையில் உள்ள விலாசம் பதியப்பட்டு சேர்க்கப்பட்டேன் அங்கே எனது வயதை ஒத்தவர்கள் 20 பேர் அளவிலே இருந்தார்கள் காரணம் அதிகமானவர்கள் அங்கே இருக்க நினைப்பதில்லையாம் சில வேளை வெளியே ஓடிடுவார்களாம் . எனக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது நல்ல நிழல் தரு மரங்கள் அமைதியான சோலைவனம் போல இருந்தது சிலகாலம் அங்கே பழக நாங்கள் நண்பர்களானோம். சும்மா கிடந்த தரிசு நிலத்தில் மரக்கறி , பழமரங்களை நட்டு பலன் பெற்றோம் மேலதிகமாக விளைந்த பொருட்களை விற்று காசும் எங்கள் கணக்கில் வைத்திருந்தார்கள் இல்லத்து நிர்வாகிகள்.

ஒரு நாள் அவசர ஒன்று கூடல் மணி அடிக்கிறது நானும் என்ன? ஏதோ? என அங்கே கூடிய கூட்டத்துடன் சேருகிறேன். எங்களது  தோட்டத்திலிருந்து அங்கே கூடிய கூட்டம் எல்லோரும் யாரும் துணி தரப்போறாங்களோ? அல்லது நாளைக்கு ஏதும் சாப்பாடு தரப் போகிறார்களோ? என ஆளாளுக்குள் ஒன்றை பேச அந்த நிலைய  நிர்வாகியான சரவணன் ஐயா வந்து நாளைக்கு நமது இல்லத்திற்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் உங்களைப் பார்க்க வருகிறார்கள் இந்த இடங்களை வீடியோ எடுத்து அவங்க தொலைக்காட்சியில்  காண்பிக்க போகிறார்களாம். உங்களிடம் கேள்வி கேட்பார்கள் பேட்டி கொடுக்க வேண்டும் என சொன்னார் . சொன்னதும் ஆளாளுக்கு மறுத்துக்கொண்டே நின்றார்கள். காரணம் தொலைக்காட்சியில் தெரிந்தால் பிள்ளைகளின் மானம் போய்விடும் என்பதால்.................... நின்றவர்கள் எல்லாம் குடும்பத்தால் மகனால் , மகளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் விலக்கியவர்கள் , துரத்தியடிக்கப்பட்டவர்கள், முதுமையால் காப்பகத்துக்கு சேர்த்து விடப்பட்டவர்கள் அத்தனை பேரும்.  

பரமா(னந்தன்) நீ தான் நல்லா கதைப்பியே வார ஆட்களுடன் கதைச்சு ஒரு பேட்டி கொடுங்களன் என்றார் . இல்ல ஐயா எனக்கு பேசவராது தொலைக்காட்சி என்றா நடுங்கும் எனக்கு.  நான் பேட்டி கொடுக்க மாட்டேன் என்றேன் .
............. நீங்க இந்த காப்பகத்துக்கு முன்னுதாரணமா இருக்கிற நீங்கள். நான் உங்களதான் என் மனதுல நினைச்சி இருந்தன். சரி உங்களுக்காக பேட்டி கொடுக்கிறேன் என நானும் சொல்ல மனதோ பேட்டி கொடுத்தால் காப்பகத்தை விட்டு வெளியேற வேண்டும் என உள் மனது மெதுவாக சுரண்டி செல்கிறது. (காரணம் என்னைத்தேடி எனது மகள் வரலாம்??)

அடுத்தநாள் பேட்டி...............................   எல்லோரும் மரத்தின் கீழ் அமர  .எல்லா இடங்களையும் பதிவு செய்து இறுதியாக பேட்டிக்கு வந்தார் அந்த இணைப்பாளர் கேள்விகள் தொடங்கின நீங்களெல்லாம் ஏன் காப்பகத்துக்கு வந்த நீங்கள் விரும்பியா? அல்லது உங்களை  கொண்டு வந்து சேர்த்தார்களா?? ......................
வீட்டில இருக்க விருப்பம் இல்லை அதனால் காப்பகத்திற்கு வந்தோம்  என பிள்ளைகளால் துரத்தப்பட்டதை சொல்லாமல் பொய் சொல்கிறார்கள் ....சரி  ஒவ்வொரு ஆளாக வந்து நாங்கள் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியுமா ஒரு சிலர் மறுக்க சிலர் சொல்ல தயாரானார்கள் 
கேள்விகள் தொடர்கிறது:  

ஏன் நீங்கள் இங்க அதாவது  முதியோர் இல்லத்திற்கு  வந்த நீங்கள்? 
இதுதான் எல்லோருக்கும் முதல் கேள்வியாக இருந்தது?
பதில் : என்னைப்பார்க்க யாரும் இல்லை என் சொந்தங்கள் இறந்துவிட்டார்கள் வயது போகிறது வீட்டில் தனியாக இருக்க முடியல யோசனையும் மன விரக்தியும் ஏற்படுகிறது அதுதான் இங்க வந்தன் சந்தோசமாக இருக்கிறேன் என்றார் ஒருவர் 

மற்றவரும் கேள்விக்கு : மகள் கல்யாணம் கட்டிட்டா எனக்கும் வருத்தம் ஆஸ்பத்திரிக்கு போனால் கூட யாரும் பார்க்க வருவதில்லை மகளையும் கோபிக்க இயலாது வேலை பிள்ளைகளை கவனிக்க நேரம் போகிறது என பிள்ளைகளை விட்டுக்கொடுக்க முடியாமலும் பதில் சொன்னார்.

அடுத்தவர் : சில காலம் மன நல மருத்துவமனையில் இருந்தேன் என்னை என் பிள்ளைகளே இங்கு இருங்கள் என சொல்லி கொடுத்து விட்டு போனார்கள் 

இறுதியாக என்னிடம் கேள்வி :  
 ஏன் வந்த நீங்கள் ?
பதில்:  என் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு இரண்டு பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள் எனக்கு தனியாக வாழ்வதற்கு பிடிக்கவில்லை அதனால் இங்கே வந்துவிட்டேன். நலமாக மன சந்தோசத்துடனும் நிம்மதியாகவும் இருக்கிறேன் நல்ல உணவு கிடைக்கிறது  நாங்கள் செய்த தோட்டத்திலிருந்து காய் கனிகள் கிடைக்கிறது மேலதிகமானவற்றை விற்று காசும் சம்பாதிக்கின்றோம் எனவும் சென்னேன். நாங்கள் வீட்டில் இருந்தால் கூட இவ்வளவு சந்தோசமாக இருந்திருப்பமோ! என்பதே கேள்விக்குறிதான் என சொல்ல பேட்டியாளரோ உங்கள் அனைவரின் முகத்தில் தெரியும் சந்தோசத்திலே நாங்கள் அறிந்து கொண்டோம் என சொல்லி பேட்டி முடிவடைகிறது.
 
அடுத்தநாள் எனது பையை எடுத்து இல்ல நிர்வாகியிடம் செல்கிறேன் ஐயா நான் இல்லத்தை விட்டு போக போகிறேன் அனுமதி தாருங்கள் ஏன் பரமா என்ன பிரச்சனை ? யாரும் ஏதும் கதைச்சவங்களோ ? இல்லை அப்படி இல்லை ஐயா நேற்றைய பேட்டி எப்படியும் என் மகளுக்கு தெரிய வரும் அவள் இங்கு வருவதற்குள் நான் செல்ல வேண்டும் அதுதான் என தயங்கியவானாக நின்றேன். ஓ அதுதான் பிரச்சினையா ஓம் யோசிச்சு முடிவ சொல்லு பரமா வெளிய போனால் திரும்பவும் கஸ்ரப்படவேணும் இது போல இல்லம் கிடைக்குமா? பார்ப்போம் ஐயா இந்த உலகில் சில நல்ல உள்ளம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் தானே இந்த உலகம் ஒவ்வொருவருக்குமானது பறவைகள், விலங்குகள்  மனிதர்களுக்கு வாழும் காலத்தில் தங்கி செல்ல ஓர் இடம் தானே யாரும் இங்கே நிரந்தமாக இருப்பதில்லையே !

ம் உன் முடிவு சரி என்றால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை உடம்பை நன்றாக பார்த்துக்கொள் என சொல்லி உன் வரவில் தோட்டம் செய்த பணம் கொஞ்சம் இருக்கிறது அதை வாங்கி செல் என வழி அனுப்ப தயாரானார் .இல்லத்தில் யாருக்கும் சொல்லவில்லை சொன்னால் கண் கலங்கி விடுவார்கள் போகவும் விடமாட்டார்கள் நாள் தோறும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்றால் அது அந்த இல்லத்திலேதான் 

வெளியே வந்ததும் எங்கே செல்வது மீண்டும் ஓர் ஊருக்கு செல்ல ஆயத்தமாகிறேன் அந்த நேரம் கள்வனாகிய அந்த தம்பியை காண்கிறேன் அடேய் அடேய் நில்லுடா .............  ஐயா நீங்களா? நீங்கள் எங்க இங்க? இந்த இல்லத்தில தான் இவ்வளவு காலமும் இருந்தன் ஓ அப்படியா அண்டைக்கு இரவு பார்த்த பிறகு உன்னை நான் காணவில்லை நான் தேடுன நான். ஓ நான் அண்டைக்கு நீங்கள் சரியான நித்திரை அதான் உங்களை எழுப்பவில்லை எழுப்பி இருக்கலாம் தானே நீ... நான் இந்த இல்லத்தில சேர்ந்திட்டன் ஓ அப்படியா   ஐயா! நல்லது சந்தோசம்... என்ன இங்க நிக்கிற நீ?

இல்ல ஐயா பிள்ளைக்கு உடம்பு சரியில்ல அதான் மருந்து எடுக்க வந்தன் விலை கூட சொல்கிறான் அதான் நிற்கிறன்  அட கல்யாணம் வேற கட்டிவிட்டாயோ? ஓம் ஐயா   கைப்பிள்ளையை வைத்து அவனும் அவள் மனைவியும் சரி எவ்வளவு வேணூம் 4000 ரூபா சொல்கிறான் ஐயா இந்தா பிடி என  என் தோட்ட வேலை செய்த பணத்தினை எடுத்துக்கொடுக்கிறேன். இல்ல ஐயா வேணாம் வேணாம் வேணாம் என சொல்ல பிடிடா பிடிடா என எனக்கு கிடைத்த 21,300 மொத்த பணத்தினையும் கொடுக்க ஐயா இது எனக்கு அதிகம் என மீள் கொடுக்கிறான். நானோ பைத்தியக்காரா அந்த 1300 ஐ கொடு மீதியை வை நான் யாரிட்ட கொடுக்கிற நீ வை என சொல்ல. என் கையை பிடித்து அழுகிறான் உதவி என்பது அது தேவைப்படும் நேரத்திலே  செய்திட வேண்டும் அப்போதுதான் அதன் பெறுமதி தெரியும் .அழாதே பிள்ளையை நன்றாக கவனித்துக்கொள் என சொல்லி பஸ் ஏறுகிறேன். அவன் மனைவியோ யார் அவர் வினவுகிறாள் நான் பஸ்ஸில் ஏறுகிறேன்

அப்போது இளையராஜா பாடல் ஒலிக்கிறது  எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ

மீண்டும் ஓர் சரணாலயத்தை தேடி............................ முற்றும் 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வேண்டும் வேண்டும் என்று நினைப்பதில்தான் நிறைய பிரச்சினைகள் வருகிறது.......எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் அப்புறம் ஒரு நிம்மதி வரும், அதுதான் உண்மையான நிம்மதி......கதை அபாரம் தனி.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2023 at 12:26, suvy said:

பசிக்கு உணவு வந்தது ஆனால் பை  போச்சு.......!  😂

ஒரு சிறிய திருப்பத்தை வைக்க எழுதியது தான் அண்ண 

1 hour ago, suvy said:

எல்லாம் வேண்டும் வேண்டும் என்று நினைப்பதில்தான் நிறைய பிரச்சினைகள் வருகிறது.......எதுவும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் அப்புறம் ஒரு நிம்மதி வரும், அதுதான் உண்மையான நிம்மதி......கதை அபாரம் தனி.......!  👍

நன்றி அண்ண இறுதிப்பகுதி அதிகமாக நீண்டு விட்டது இன்றை நாள் பாடசாலை விடுமுறை எழுதி முடிக்க வேண்டும் என எழுதி இணைத்துவிட்டேன்  வாசிக்க அதிகமாக இருக்கும் என நினைக்கிறன் 

மீண்டும் நன்றி அண்ணை மனதில் சந்தோசம் வந்தால் நிம்மதிதான் 

  • கருத்துக்கள உறவுகள்

 தனி எழுதிய பதிவுகளில் மிகவும் திறமையான பதிவு இது தான் . சம்பவத்தை மெருகூடட கற்பனைக் குதிரையை ஓட விட்டு நல்ல புனைவுகளை கோர்த்து எழுதி சென்ற விதம் அழகோ அழகு . பாராட்டுக்கள்.  இது எல்லா வயதானவர்களும் சந்திக்கும்பிரச்சினை. நாடு இனம் மதம் என வேறுபாடின்றி  முதுமையில் இத்தகைய கஷ்டங்களும் வரும். நாம் தான் முன்னேற்பாடாக ஆயத்தங்கள்செய்து  வைக்க வேண்டும். சேமிப்பு அவசியம் . சொத்துக்களை தனக்குப்பின் என எழுதவேண்டும். "தனக்கு   கண்டு தான் தானம்". அதிக இடைவெளி விடாது தொடர்ச்சியாக எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி.மேலும் தொடர வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜா  முழுவதும் வாசித்தேன். கதையாக நன்றாக இருந்தது. 
உண்மைக் கதை எனின் ஜீரணிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2023 at 22:41, தனிக்காட்டு ராஜா said:

அடுத்த நாள் காலை எழும்பி பார்க்கும் போது எனது உடுப்பு பைகளை காணவில்லை 

இறைச்சி சாப்பாடு நல்லா இருந்ததில்ல?

அப்புறம் என்னா?

  • கருத்துக்கள உறவுகள்

யோ ராஜா

நாங்களும் ஓய்வூதியம் எடுத்து வீட்டில் இருக்கிறம்.

எங்களை வெருட்ட இது ஒன்றும் எழுதலையே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.