Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலுள்ள தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 AUG, 2023 | 10:37 AM
image
 

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.

சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்தார்.

குருந்தூர் மலை விவகாரம் குறித்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் 

  • இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம்.

 

  • தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.

 

  • நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம்.

 

  • தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.அவர்கள் மகிழ்ச்சியடையும்.

 

  • குருந்தூர் மலை குறித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் எந்தளவுக்கு நியாயமானது என்பது தர்க்கத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

 

  • முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குருந்தூர் விகாரையின் விகாராதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தியுள்ளார்.

 

  • குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

 

  • குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன.

 

  • குருந்தூர் மலை குறித்து மகாவசம்சம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.குருந்தூர் விகாரரை பௌத்தர்களுக்கு சொந்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதொரு விடயமல்ல. 

 

  • குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்கும் அங்கு இந்து கோயில் இருந்ததற்கும் எவ்வித தொல்பொருள் சான்றுகளும் கிடையாது.

 

  • விகாரையில் உள்ள தூண்களில் ஒரு தூண் வட்ட வடிவில் உள்ளது.இந்த தூண் சிவலிங்கம் என்று குறிப்பிட்டு முறையற்ற தர்க்கத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டு குருந்தூர் மலை இந்துக்களுடையது என்ற போலியான தர்க்கத்தை முன்னிலைப்படுத்தி பௌத்தர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

 

  • இந்த நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் இடமளித்துள்ளது.ஆனால் பௌத்த மரபுரிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பௌத்தர்களுக்கு இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

 

  • தமிழ் அடிப்படைவாதிகளின் நாடகத்துக்கு இடமளித்தால் பௌத்தர்களின் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.

 

  • பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் கோழைத்தனமாக இருக்கலாம். ஆனால் பௌத்தர்கள் கோழைத்தனமாக இருக்கமாட்டார்கள்.

 

  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளன.அழிக்கப்பட்டுள்ளன.

 

  • ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள்.

 

  • பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார்.

 

  • இவர் கொழும்பில் வாழ்ந்துக் கொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்கிறார்.

 

  • பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.

 

  • அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்க நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம்.தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

 

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சாதாரண தமிழர்கள் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகளில் இருந்து வேறுப்பட்டுள்ளார்கள்.

 

  • அடிப்படைவாத பிரிவினைவாத கொள்கையுடைய தமிழ் அரசியல்வாதிகளின் பிடிகளில் இருந்து தமிழ் மக்களை விடுவித்தால் மாத்திரமே இந்த நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முடியும்.

 

  • கொழும்பில் இருந்துக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இனவாத செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிவிடும் வரிசையில் பொன்னம்பலம், சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் உள்ளடங்குகிறார்கள்.

 

  • தெற்கில் இவர்கள் வாழ்வற்கு உள்ள சுதந்திரத்தை வடக்கில் சிங்களவர்களிடமிருந்து பறிப்பதற்கும் தடையேற்படுத்துவதற்கும் இவர்களுக்கு தார்மீக உரிமையில்லை.

 

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும்.

 

  • அந்த கோரிக்கையை முன்வைக்க எமக்கு உரிமை உண்டு.ஆகவே சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வசிக்கும் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

 

  • இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/162812

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் காணியை மோசடி செய்து விற்றதாக இவர் மீது வழக்கு நடந்ததே, முடிவடைந்து விட்டதோ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

மீண்டும் ஒரு யூலையை(83) தோற்றுவிப்பது சிறப்பு. ஏன் போராடுவான் நேரடியாகப் பெற்றோலை ஊற்றிக் கொழுத்திவிடலாமே? அதன்பின் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பேசமாட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
  • பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.

 

  • அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை.கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்க நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம்.தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

1956 ல் இருந்து எத்தனை இனப்படுகொலையை நடத்தி இருப்பீர்கள் கம்பன்பில? 
உங்களை பின்னால் இருந்து இயக்குபவர்களை தமிழ் மக்கள் அறிவார்கள்.
உங்களின் அழிவு உங்கள் மக்களால் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய கேரளம்  அல்லது தமிழ்நாடு கரையோரத்தில் இருந்துவந்த கணபதிப்பிள்ளை என்ற மூதாதையரின் தோற்றம் கம்மின்பல (சிங்கள கணபதிப்பிள்ளை) போடும் கூச்சலை ....

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

இப்போதைய கேரளம்  அல்லது தமிழ்நாடு கரையோரத்தில் இருந்துவந்த கணபதிப்பிள்ளை என்ற மூதாதையரின் தோற்றம் கம்மின்பல (சிங்கள கணபதிப்பிள்ளை)

 

 

 

ஆதாரம் ?

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு லாபம் இல்லாதவரை எந்த ஒரு தூதரகமும் வாயே திறக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கட்டும் உடைக்கட்டும் அப்ப வாவது தெரியட்டும் மக்களுக்கு அரசியல் வாதிகளின் சொகுசு வீடுகளை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அடிக்கட்டும் உடைக்கட்டும் அப்ப வாவது தெரியட்டும் மக்களுக்கு அரசியல் வாதிகளின் சொகுசு வீடுகளை

அந்தாளின்ர சொத்துப்பத்து மலேசியா முதல் தென்னாபிரிக்கா வரை பரந்து விரிந்து இருக்காம்! யாமறியோம் பராபரமே...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அந்தாளின்ர சொத்துப்பத்து மலேசியா முதல் தென்னாபிரிக்கா வரை பரந்து விரிந்து இருக்காம்! யாமறியோம் பராபரமே...

ம் அரசியல்ல பிழைப்பு அப்படி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் அரசியல்ல பிழைப்பு அப்படி 

இல்லையாம் ஜிஜி காலத்து உழைப்பும் பரம்பரைச் சொத்தும் என்று கதைக்கிறாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

இல்லையாம் ஜிஜி காலத்து உழைப்பும் பரம்பரைச் சொத்தும் என்று கதைக்கிறாங்கள்!

நமக்கு நம்ம குடிசையை மேயவே நேரம் இல்லை வருகிற மாரிக்கு ஓடுகளை மாற்ற ஏறினால் ஓடு உடைஞ்சு தள்ளுது இது நம்ம நிலமை🙄🙄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நமக்கு நம்ம குடிசையை மேயவே நேரம் இல்லை வருகிற மாரிக்கு ஓடுகளை மாற்ற ஏறினால் ஓடு உடைஞ்சு தள்ளுது இது நம்ம நிலமை🙄🙄

பழைய ஓடு உடையத்தான் செய்யும், நீங்கள் 15/16 வயசுப் பையன்களை நாலு காலில் நடந்து போய் மாற்றச் சொல்லுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

பழைய ஓடு உடையத்தான் செய்யும், நீங்கள் 15/16 வயசுப் பையன்களை நாலு காலில் நடந்து போய் மாற்றச் சொல்லுங்க.

பழைய மரம் வளைகள் மரங்கள் சிலாகைகள் கருங்குளவி ஓட்டை போட்டு மரத்தை துளைத்து வச்சிருக்கு பிரிச்சு செய்யணும் பிரிச்சால் அதே கெதி😴😴😴 

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பழைய மரம் வளைகள் மரங்கள் சிலாகைகள் கருங்குளவி ஓட்டை போட்டு மரத்தை துளைத்து வச்சிருக்கு பிரிச்சு செய்யணும் பிரிச்சால் அதே கெதி😴😴😴 

திட்டமிட்டு செய்யவெளிக்கிட்டாலும் செலவு மூன்று மடங்காகிவிடும், கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

1956 ல் இருந்து எத்தனை இனப்படுகொலையை நடத்தி இருப்பீர்கள் கம்பன்பில? 
உங்களை பின்னால் இருந்து இயக்குபவர்களை தமிழ் மக்கள் அறிவார்கள்.
உங்களின் அழிவு உங்கள் மக்களால் தான்.

பரவணிக்குணம் மாறாது. மாற்றுவதும் கடினம். இந்த இனம் தானே அடிபட்டு அழியும்வரை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் காணியை மோசடி செய்து விற்றதாக இவர் மீது வழக்கு நடந்ததே, முடிவடைந்து விட்டதோ? 

அந்த வெளி நாட்டு காரன் இந்த ஆளின் அடாவடிக்கு பயந்து இங்குள்ள வழக்கிட்கு வர மறுத்து விடடார். சுருட்டினது சுருட்டினதுதான். கம்மன்பிள்ளை எண்டால் சும்மாவா? பிரபல கேடிகளில் ஒருவன்தான் இவன். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

மீண்டும் ஒரு யூலையை(83) தோற்றுவிப்பது சிறப்பு. ஏன் போராடுவான் நேரடியாகப் பெற்றோலை ஊற்றிக் கொழுத்திவிடலாமே? அதன்பின் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பேசமாட்டார்

இன்னொரு ஜூலை கலவரம் இருப்பதட்கான சந்தர்ப்பம் இருப்பதாக உளவு தகவல் தெரிவிப்பதாக அறிய முடிகிறது. எனவேதான் ரணில் பாதுகாப்பை விரிவாக்குவது சம்பந்தமாக பேசி இருக்கிறார். எப்படி இருந்தாலும் இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையும் இருக்கும் வரைக்கும் இலங்கை தமிழர்கள் கவலைப்பட தேவை இல்லை. அவர்கள் பார்த்து கொள்ளுவார்கள். 

இந்த கம்மன்பில பொன்னம்பலம் வீட்டில் தொடங்குவதட்கும் காரணம் இருக்கின்றது. அவர்(கஜேந்திரகுமார்) பொலிஸாரின் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை காரணமாக வைத்து அவரை தாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். போலீசாரும் தங்கள் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளாததால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறலாம்.  இருந்தாலும் இவர்களின் பம்மாத்து விளையாட்டு எப்படி போகுதென்று பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Cruso said:

இந்தியாவும், ஐக்கிய நாடுகள் சபையும் இருக்கும் வரைக்கும் இலங்கை தமிழர்கள் கவலைப்பட தேவை இல்லை. அவர்கள் பார்த்து கொள்ளுவார்கள். 

தமிழர் முள்ளி வாய்க்கால் அழிவின் முன் இவர்களை கநோக்கி எழுப்பாத கூக்குரலா? வைக்காத கோரிக்கையா? ஒருவர் களத்தில் நின்று அழித்தார், மற்றவர் உலங் கு வானூர்தியில் பறந்து வேடிக்கை பார்த்து ரசித்தார்.

32 minutes ago, Cruso said:

ரணில் பாதுகாப்பை விரிவாக்குவது சம்பந்தமாக பேசி இருக்கிறார்.

 எவரின் பாதுகாப்பை? சிங்களவர் தாக்குப்படாமலா? இவர்களை கைது செய்வதே நாட்டுக்குப்பாதுகாப்பு. அதை செய்யாமல் எதையும் பாதுகாக்க முடியாது. அப்படி ஒரு கலவரம்  நடந்தால்; காலத்தை இழுத்தடித்த ஐ. நாவும், போராட்டத்தை அழிக்க உதவிய சர்வதேசமும், ஏமாற்றிய ரணிலுமே அதற்க்கான பொறுப்பை ஏற்கவேண்டும். இவர்கள் நினைத்து தொடங்குவது வேறொன்றை அவர்களுக்கு ஏமாற்றத்தை, அழிவை  கொடுக்கும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

கொழும்பிலுள்ள தமிழ் எம்.பிக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட வருமாறு சிங்கள பௌத்தர்களுக்கு உதய கம்மன்பில அழைப்பு

ஈழத்தமிழர்களுக்கு  சிங்கள அரசியல்வாதிகளினால் தான் விடிவு வரவேண்டும் என ஒரு விதி இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? :rolling_on_the_floor_laughing:

எல்லாம் பெருமான் சித்தம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

குமார் பொன்னம்பலம், தனது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு  நல்லது. வெளிநாடுகளுக்கும் அறிவிப்பது நல்லது. எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்க இவரை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்? எல்லா தமிழ் அரசியலாதிகளும் ஒன்று சேராவிட்டால் ஒவொருவராக குறிவைத்து அழித்தொழிப்பது சுலபம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்களுக்கு  சிங்கள அரசியல்வாதிகளினால் தான் விடிவு வரவேண்டும் என ஒரு விதி இருந்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? :rolling_on_the_floor_laughing:

எல்லாம் பெருமான் சித்தம். :cool:

அதற்கான வாய்ப்புகளை ரணில் அனுமதிக்கமாட்டார். முப்படைகளைக் கொண்டாவது அடக்கக்கூடும். யே.ஆரின் 1983யூலைபபடுகொலையின் எதிர்மறை விளைவுகளை கண்டவரும்,  களத்திலே நின்று நடாத்திய குழாமில் தப்பியிருக்கும் ஒருவரென்ற வகையிலும் பின்விளைவுகளை அவதானித்தே முழுநகர்வையும் ரணில் நகர்த்துகிறார். அப்படியொரு நிலை ஏற்பட்டால் அவரது தற்போதைய நகர்வுக்குப் பெரும் தடையாக அமையும். அதாவது தமிழினத்திடம் இருக்கும் இனப்படுகொலை என்ற ஆயுதத்தை அகற்ற ஒன்றுமேயில்லாத 13ஐ திணித்து உலகுக்குத் தமிழருக்குத் தீர்வைக் கொடுத்துவிட்டேன். எனவே, இனி ஐநாவோ அனைத்துலகப் பொறிமுறையோ தேவையில்லை என்று சிறிலங்காவின் இன அழிப்புப் பிணையெடுப்புப் பிழைத்துவிடலாம். ஆகையால் சாத்தியமில்லை. ஒருவேளை மகிந்த குழுவின் கட்டுப்பாட்டை மீறுவராயின் சாத்தியப்படலாம். ஆனால் நரியல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

குமார் பொன்னம்பலம், தனது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு  நல்லது. வெளிநாடுகளுக்கும் அறிவிப்பது நல்லது. எத்தனையோ அரசியல்வாதிகள் இருக்க இவரை மட்டும் ஏன் குறி வைக்கிறார்கள்? எல்லா தமிழ் அரசியலாதிகளும் ஒன்று சேராவிட்டால் ஒவொருவராக குறிவைத்து அழித்தொழிப்பது சுலபம்.

இவரை அகற்றவேண்டிய தேவை தனியே சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலாக மட்டும் தெரியவில்லை. ஏனெனில் 13ஐ பெரும்பாலான கட்சிகள் முன்மொழிய 'ஒரு நாடு இருதேசம்' என்ற தீர்வினை அழுத்தமாக முன்வைத்து வருகிறார். உலக அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் ஒரு முழுமையான சமஷ்டிக் கூட்டமைப்பாகவும் உள்ளதால் 'ஒரு நாடு இருதேசம்' என்பது பெரும் இடையூறாக ஆதிக்க சக்திகளுக்கு இருக்கிறது. மேற்குக் கூட்டணி மற்றும் இந்திய சக்திகளுக்கு ஏதாவது குறைந்தபட்ச அதாவது, சிங்களம் விரும்பும் தீர்வைத் தமிழர் ஏற்றுக்கொண்டு தமது சுரண்டல் தடையின்றி நடக்கத் தமிழர்கள் வழிவிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அவர் கட்டுப்படுத்த நினைத்தால் இவர்களை கைது செய்ய வேண்டும். ஒருவேளை அவ்வாறு நடந்து சிங்களவரால் ரணில் துரத்தப்படவேண்டும் என்றும் செய்வார்கள். ஆனால் யாரும் நினையாத, யாராலும் தடுக்க முடியாத ஏதோ ஒன்று நிகழப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

நேரம் வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, அவர் கட்டுப்படுத்த நினைத்தால் இவர்களை கைது செய்ய வேண்டும். ஒருவேளை அவ்வாறு நடந்து சிங்களவரால் ரணில் துரத்தப்படவேண்டும் என்றும் செய்வார்கள். ஆனால் யாரும் நினையாத, யாராலும் தடுக்க முடியாத ஏதோ ஒன்று நிகழப்போகிறது.

தமிழினம் மீண்டுமொரு இடப்பெயர்வையும், அழிவையும் சந்திக்கும் சக்தியோடு இருக்கிறதா? சாம்பலில் இருந்து எழமுடியாது இறைக்கைகள் கருகியதுபோன்று தமிழினத்தின்நிலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.