Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிலவைத் தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா ''India is on the MOON'' - இஸ்ரோ தலைவர் சோம்நாத் உற்சாகம்.

 
21 mins ago

நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3!

 
 
 

சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி சாதனைப் படைத்துள்ளது இந்தியா. ஏற்கெனவே இதே இடத்தில் சந்திரயான் 2-வைத் தரையிறக்க முயன்று அது தோல்வி அடைந்த நிலையில், தற்போது மீண்டும் அதை முயன்று வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர் இந்திய விஞ்ஞானிகள்!

சந்திரயான் 3 Live Updates: நாடெங்கும் உற்சாகம்; விஞ்ஞானிகள் கொண்டாட்டம் - நிலவில் கால் பதித்தது இந்தியா! | Chandrayaan - 3 LIVE Updates: Mission Moon Landing - Vikatan

வெற்றி நிமிடங்களைக் கண்டு மகிழ்ந்த திட்ட இயக்குநரின் தந்தை!

 
 
 
பழனிவேல்
 
பழனிவேல்

சந்திரயான் - 3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இதன் திட்ட இயக்குநரான வீரமுத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை பழனிவேல், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து அந்த வெற்றி நொடிகளை நேரலையில் கண்டுகளித்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.

 
21 mins ago

"India is on the MOON!" - இஸ்ரோ தலைவர் சோம்நாத் உற்சாகம்.

 
 
 

நிலவைத் தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா ''India is on the MOON'' - இஸ்ரோ தலைவர் சோம்நாத் உற்சாகம்.

சந்திரயான் 3 Live Updates: நாடெங்கும் உற்சாகம்; விஞ்ஞானிகள் கொண்டாட்டம் - நிலவில் கால் பதித்தது இந்தியா! | Chandrayaan - 3 LIVE Updates: Mission Moon Landing - Vikatan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

படிப்படிப்பாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டர் கால்பதித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கியது தொடர்பாக காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோதி, “இது போன்ற வரலாற்றுத் தருணங்களைப் பார்க்கும் போது நமக்குப் பெருமையாக இருக்கிறது. இது புதிய இந்தியாவின் விடியல். இந்த தருணம் மறக்க முடியாதது. இந்த தருணம் இதற்கு முன் நடந்திராதது. துயரக் கடலை கடக்கும் தருணம் இது.

140 கோடி இந்தியர்களின் துடிப்பால் இந்த தருணம் உருவாகியுள்ளது. இந்த தருணத்துக்காக இஸ்ரோ பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளது. 140 கோடி நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துகள். நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பாலும் திறமையாலும், உலகில் எந்த நாடும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல்

பட மூலாதாரம்,ISRO

 
படக்குறிப்பு,

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல்

சந்திரயான்- 3 திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டின் வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார். விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும் பேசிய அவர் "எனது குழுவினர் முழுமையான பங்களிப்பை வழங்கினர்" என்று கூறினார்.

விழுப்புரத்தில் விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் தந்தையார் பழனிவேல் சந்திராயன் நிலவில் தரை இறங்கும் காட்சியை ஆர்வமுடன் அவர் வீட்டில் இருந்தபடியே கண்டு ரசித்தார்

"இந்தியா வரலாறு படைக்கப் போகிறது" என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வேண்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மத வழிப்பாட்டு தலங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் உள்ள ஜன் கல்யான் சமிதியில் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற வேண்டி யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவில் மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி உள்ளிட்டோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரட்பால் தர்காவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

சந்திரயான் 3

பட மூலாதாரம்,ANI

இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் இந்த நிகழ்வு குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இது மிதுவும் முக்கியமான நாள். மற்றவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு செயல்முறையின் மூலமாகவும், துல்லியமாகவும் சந்திரயான் 3-ஐ அனுப்ப முடிந்திருப்பது இந்தியாவுக்குமட்டுமல்ல பூமியில் உள்ள அனைவருக்கும் ஒரு அற்புதமாக விசயம்.

அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் தவறில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். நிலவின் தென் துருவத்தில் யாராலும் இறங்க முடியவில்லை. அப்படியிருக்கும் இது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கும்” என்றார்.

ஒடிசாவை சேர்ந்த பிரபல மணற் சிற்ப கலைஞரான சுதர்ஷன் பட்நாயக், சந்திரயானுக்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் வடித்துள்ளார். சந்திரயான் விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட், நிலவில் இந்திய கொடி பறப்பது போன்றவற்றுடன் ஜெய் ஹோ என்ற வாசகத்துடன் இந்த சிற்பத்தை அவர் வடித்துள்ளார்.

சந்திரயான் 3

பட மூலாதாரம்,ISRO

பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மன் இந்தியாவின் சந்திரயான் திட்டம் குறித்து பிபிசியின் மோனிகா மில்லருக்கு பேட்டியளித்தபோது, இது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் என்று குறிப்பிட்டார்.

மேலும், “ நீங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பப் போகிறீர்கள் என்றால், நிச்சயமாக பனி மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அவர்கள் நீர் குடிக்க விரும்புவார்கள். அவர்கள் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரித்து ஆக்ஸிஜனை சுவாசிக்க விரும்புவார்கள். அதிலிருந்து ராக்கெட்க்கு தேவையான எரிபொருளையும் தயாரிக்கலாம்.

எனவே பனி மிகவும் அவசியம். ஆனால், நிலவின் தென் துருவத்தில் உள்ள அந்த பள்ளம் உண்மையில் உயர்ந்த விளிம்பைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விளிம்பின் ஒருசில பகுதிகளில் நிலையான சூரிய ஒளி இருக்கும். ஒருசில பகுதிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சூரிய ஒளி இருக்கும். எனவே, நீங்கள் சோலார் மின்சாரத்தை உருவாக்கும் இயந்திரத்தை அங்கு வைத்தால், தொடர்ந்து மின்சாரத்தை உருவாக்கிக்கொண்டே இருக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மனிதர்கள் இல்லாமல் நிலவில் தரையிறங்குவது, மனிதர்களுடன் தரையிறங்குவதை விட கடினமானது என்றும் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி! முதன் முதலாக, நிலவின் தென் துருவத்தில் கட்டுப் பாட்டுத் தரையிறக்கம்! படங்களைப் பார்க்க ஆவலாக உள்ளோம்!

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் இருட்டான இடத்தில் என்ன உள்ளது என அறிய ஆவல். தண்ணீர் உள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகிறார்கள். மிக சொற்ப காலமே அங்கு கலம் தரிப்பதால்  ஆராட்சி சாத்தியமா தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 20 நிமிடங்களில் என்னவெல்லாம் நடந்தன?

மாலை 05:44:

விக்ரம் லேண்டரில் நான்கு இன்ஜின்கள் இருக்கின்றன. அது நிலவைச் சுற்றிவந்த காலத்தில் நான்கு இன்ஜின்களும் இயங்கி அதை சீராகச் செல்ல வைத்தன. நிலவை நோக்கிக் கீழே இறங்கும் பயணம் வித்தியாசமானது. அதற்காக இந்த நான்கில் இரண்டு இன்ஜின்கள் அணைக்கப்பட்டன. மீதி இரண்டு இன்ஜின்களின் உந்துவிசையில் விக்ரம் லேண்டர் சாய்வுப் பாதையில் வேகமாகக் கீழே இறங்கியது.

சந்திரயான் 3
 
சந்திரயான் 3

மாலை 05:48:

விக்ரம் லேண்டர் நிலவைத் தொடும் க்ளைமாக்ஸ் பயணத்தின் முதல் கட்டமான Rough Breaking Phase பயணம் தொடங்கியது. வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நிலவை நெருங்கும் இந்தப் பயணம் மிகக் கடினமானது என்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. இந்தப் பயணத்தின் முடிவில் விக்ரம் லேண்டர், நிலவுக்கு 14 கி.மீ பக்கமாக நெருங்கி வந்தது.

 

மாலை 05:59:

இதைத் தொடர்ந்து Altitude Hold Phase தொடங்கியது. இது வெறும் 10 நொடிகள் பயணம். இந்த நேரத்தில் நிலவு இருக்கும் தூரத்தைக் கணித்து, தான் இருக்கும் இடத்தையும் உணர்ந்து, தன் பயண இலக்கை லேண்டர் திட்டமிட்டது.

மாலை 05:59:

Altitude Hold Phase முடிந்து Fine braking phase தொடங்கியது. இந்த நேரத்தில் நிலவுக்கு மூன்று கிலோமீட்டர் நெருங்கி வந்தது லேண்டர்.

சந்திரயான்- 3
 
சந்திரயான்- 3

மாலை 06:01:

Vertical Descent phase 1 எனப்படும் நிலவை நெருங்கும் கடைசி கட்டப் பயணம் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் லேண்டர் தன் சாய்மானக் கோணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நேராகி, செங்குத்தாக நிலவை நோக்கி இறங்கியது. லேண்டரின் பக்கவாட்டு வேகமும் கீழ்நோக்கிய வேகமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டது. நிலவுக்கு 150 மீட்டர் நெருக்கமாக வந்தது லேண்டர்.

 

மாலை 06:02:

Vertical Descent phase 2 எனப்படும் நிலவைத் தொடும் பயணத்தின் கடைசி இரண்டு நொடிகளை நெருங்கியது லேண்டர். தான் இறங்க வேண்டிய இடம், அதற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு இடம் என்று இரண்டையும் ஆராய்ந்தது. திட்டமிட்டிருந்தபடி மிகச் சரியாக நிலவை நெருங்கியது.

விக்ரம் லேண்டர்
 
விக்ரம் லேண்டர்

மாலை 06:04:

தன் நான்கு கால்களையும் அழுத்தமாகப் பதித்து நிலவைத் தொட்டது விக்ரம் லேண்டர். ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டது. 'என் இலக்கை நான் அடைந்துவிட்டேன். உங்களாலும் உங்களின் இலக்கை அடையமுடியும்' என்று சந்திரயான் - 3 பயணம் சொல்லாமல் சொல்கிறது.

Vikatan Digital Exclusive - 01 March 2023 - சந்திரயான் - 3: விக்ரம் லேண்டரின் வெற்றிப் பயணம் - கடைசி 20 நிமிடங்களில் என்னவெல்லாம் நடந்தன? | Chandrayaan 3 Moon Landing: Vikram Lander's descent final 20 minutes - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞானத்துக்கு வாழ்த்துக்கள.இதில் பல தமிழர்கள் முக்கிய பங்காற்றியது மிக்க மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

மகிழ்ச்சி! முதன் முதலாக, நிலவின் தென் துருவத்தில் கட்டுப் பாட்டுத் தரையிறக்கம்! படங்களைப் பார்க்க ஆவலாக உள்ளோம்!

விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்

சந்திரயான்

பட மூலாதாரம்,ISRO

 
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, ரஷியா , சீனா வரிசையில் இணையும் இந்திய விண்ணியல் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பிழம்பு said:

விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்

சந்திரயான்

பட மூலாதாரம்,ISRO

 

நன்றி பிழம்பர்!

இந்த குன்றும் குழியுமான (pock mark) நிலவின் மேற்பரப்பிற்கு ஒரு காரணம் இருக்கிறது. பூமியைப் போல அடர்த்தியான வளிமண்டலம் நிலவுக்கு இல்லாமையால் தொடர்ந்து விண்கற்களால் மோதப்படுக் கொண்டேயிருக்கிறது நிலவின் தரை. இதனால் இந்தத் தோற்றம். பூமியை நோக்கி வரும் சிறு விண்கற்கள் பெரும்பாலானவை தரையை அடையாமல் வளிமண்டலத்தில் உராய்வினால் எரிந்து விடுகின்றன. இந்த எரிதலையே சில சமயங்களில் meteor showerஆகக் காண்கிறோம்!

https://earthsky.org/astronomy-essentials/earthskys-meteor-shower-guide/

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் ரிலீஸ்.

IMG-20230823-233802.jpg

பார்த்து நெருப்பு .. குழம்பு ஆகிடாம..😊

  • கருத்துக்கள உறவுகள்
15 நிமிடத்திலே 30 கிலோமீட்டர் உயரத்திலே இருந்து மெதுவாக இறங்கி 7 கிலோமீட்டர் உயரத்திற்கு வந்து
அந்த 7 கிலோமீட்டரிலே இருந்து மூன்று கிலோமீட்டர் உயரம் வர படுக்கை வசமாக இருந்த இறங்கும்வாகனம் நேராக திருப்பி
ஒரு கிலோமீட்டர் தூரம் உயரத்திலே அப்படியே நிலை நின்று பறந்து இறங்கும் இடத்தை தேடி
பின்பு 700 மீட்டர் உயரம் வந்தவுடன் திரும்பவும் சரியான இடத்தை துல்லியமாக பார்த்து
மெதுவாக இறங்கியது.
சரியாக சொன்னபடி 6.03. சரியாக.
கொஞ்சம் கூட தாமதம் ஆகவில்லை.
இந்த தொழில்நுட்பங்களின் அருமை என்பது இது ராணுவத்திலேயும், தொலைத்தொடர்பிலும், மருத்துவத்திலேயும் பயன்படுத்தப்படும்போது புரியும்.
எனவே இது பெரும் சாதனை.
யோசிச்சு பாருங்க
அங்கே நிலவிலே 1 கிலோமீட்டர் உயரத்திலே அப்படியே நிலையான நின்னு தேடி அப்புறம் இறங்குது.
இது எதுவுமே இங்கே இருந்து கட்டளைகள் கொடுக்கப்படவில்லை.
இந்த மொத்த 30 நிமிடத்திலேயும் ஒரு விநாடிக்கு ஒரு படம் எடுத்து அனுப்பிட்டேவும் இருந்தது.
சாதனைன்னா அரும் பெரும் சாதனை.
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்... நிலாவில், animiertes-mond-bild-0033.gif
(கோலத்தை போட்டு😜), animiertes-hand-bild-0034.gif வெற்றிகரமாக   animiertes-hand-bild-0076.gif தரை இறங்கியது. animiertes-hand-bild-0032.gif 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '~After Chandrayan 3 landed in Moon உழவன் மீம்ஸ் பாட்டி வாங்கடா...வாங்க வாங்க இப்போதான் பாட்டிய பாக்கனும்னு நெனப்புவந்துச்சா.?'

வாங்கடா வாங்க... இப்பதான், பாட்டியை பாக்கணும்னு நினைப்பு வந்திச்சா.  😂 🤣

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சந்திரயான் 3ஐ உருவாக்க வேலை பார்த்த டெக்னீஷியன்.. இட்லி விற்கும் அவலம்.. கலங்கடித்த விஞ்ஞானியின் கதை..

IMG-20230919-195918.jpg

சென்னை: இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்குவதில் பணிபுரியும் ஹெச்இசி (ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) தொழில்நுட்ப வல்லுநரான தீபக் குமார் உப்ராரியா, ராஞ்சியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லிகளை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும். இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருந்த நிலையில் அதுவும் தூக்க நிலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றுவிட்டது. 14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில்தான் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தற்போது இரண்டையும் தூக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. சந்திரயான் 3 வெற்றி இஸ்ரோவிற்கு மட்டுமின்றி மொத்த நாட்டிற்கும் பெருமை தேடிக்கொடுத்து உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்குவதில் பணிபுரியும் ஹெச்இசி (ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) தொழில்நுட்ப வல்லுநரான தீபக் குமார் உப்ராரியா, ராஞ்சியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லிகளை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே இவருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இவர் இட்லி விற்கும் நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

IMG-20230919-195354.jpg

ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் பழைய சட்டப் பேரவைக்கு எதிரே உப்ராரியா கடை வைத்துள்ளார். சந்திரயான் -3 க்கு ஏவுகணை மேடை மற்றும் கதவுகளை உருவாக்கிய ஹெச்இசி நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் இட்லி கடையை திறந்துள்ளார்.. 18 மாதங்களாக தனது சம்பளத்தை செலுத்தாததால் அவர் தனது சாலையோர கடையைத் திறந்தார்.

HEC இன் சுமார் 2,800 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்று கூறுகின்றனர். அவர்களில் உப்ராரியாவும் ஒருவர். பலர் வேலையை விட்டுவிட்டு வேறு வேறு வேலைகளுக்கு சென்ற நிலையில்தான் இவர் இட்லி விற்க சென்றுள்ளார்.

உப்ராரியா இது குறித்து ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த சில நாட்களாக இட்லிகளை விற்று வருகிறேன். வேலையில் வருமானம் இல்லாததால் இந்த கடையை திறந்தேன். நான் இன்னும் வேலையை விடவில்லை. அந்த வேலையை பார்த்துக்கொண்டே இட்லி விற்றுவருகிறேன். நான் காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறேன். மாலையில், வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு மீண்டும் இட்லி விற்று வாழ்க்கை நடத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், முதலில் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்தேன். 2 லட்சம் கடன் வாங்கினேன். நான் கடனை திருப்பி செலுத்தாதவனாக வங்கி மூலம் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டை நடத்த ஆரம்பித்தேன்.இதுவரை நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். நான் யாரிடமும் பணத்தை திருப்பித் தராததால், தற்போது உறவினர்கள் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். பிறகு மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நடத்தினேன்.

தற்போது இட்லி விற்கிறேன். என் மனைவி நல்ல இட்லி செய்வார். அதை விற்று தினமும் 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும். இதில் 50-100 ரூபாய் லாபம். இந்தப் பணத்தில் வீட்டை நடத்துகிறேன். இப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/technician-who-worked-on-chandrayaan-3-launchpad-is-selling-idly-on-the-roadside-540327.html

டிஸ்கி 

எந்த தொழிலும் கேவலம் இல்லையென்றாலும்.. வேலை செய்ததற்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் என்னப்பா வல்லரசு..? 😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.