Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும் இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பரமேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை சிசிபி அதிகாரிகள் விசாரணையின் போது கண்டுபிடித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1346648

  • Haha 1
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் இந்தியாவில் கைது

சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை சிசிபி அதிகாரிகள் விசாரணையின் போது கண்டுபிடித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1346648

செய்தியின் தலைப்பு புலிகளுடன் தொடர்பு என. ஆனால் உள்ளடக்கம் பாதாளக் குழுவுடன் தொடர்பு என்று சொல்கின்றது.

வர வர தமிழ் தளங்களின் செய்திகளின் தரம் மோசமாக போய்க் கொண்டே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆ(கா)தவன் செய்திகள் இப்படித்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத்

இப்படி சுத்த தமிழ் பெயர் எண்டால் சந்தேகமே இல்லை - புலியள்தான்🤡=🇮🇳.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதவன் நியூஸ் இப்போது அந்தக்காலத்து இந்துநேசன் "மஞ்சள் பத்திரிகை" ரேஞ்சுக்கு வந்திட்டுது. இதைவிடப் நாலுவீட்டில விழுகிற பழையதைத் திண்டு வாழலாம்.

இதத்தான் சொல்லுறது பத்திரிகை ............... என்று  

கடந்த ஒரு கருத்திடுகையில் நான் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்கள் என எழுதியதை அவச்சொல்லைப் பாவித்ததென்று நீக்கிவிட்டார்கள்.ஆதலால் இதையும் மட்டுறுத்தினர் சரிபார்த்து மிச்சமிருந்தால் அனுமதிக்கவும்.

36 minutes ago, goshan_che said:

இப்படி சுத்த தமிழ் பெயர் எண்டால் சந்தேகமே இல்லை - புலியள்தான்🤡=🇮🇳.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நிழலி said:

செய்தியின் தலைப்பு புலிகளுடன் தொடர்பு என. ஆனால் உள்ளடக்கம் பாதாளக் குழுவுடன் தொடர்பு என்று சொல்கின்றது.

வர வர தமிழ் தளங்களின் செய்திகளின் தரம் மோசமாக போய்க் கொண்டே இருக்கின்றது.

https://www.dailymirror.lk/breaking-news/3-Sri-Lankans-involved-in-gang-wars-murder-cases-held-in-Bengaluru/108-265967

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Elugnajiru said:

ஆதவன் நியூஸ் இப்போது அந்தக்காலத்து இந்துநேசன் "மஞ்சள் பத்திரிகை" ரேஞ்சுக்கு வந்திட்டுது. இதைவிடப் நாலுவீட்டில விழுகிற பழையதைத் திண்டு வாழலாம்.

இதத்தான் சொல்லுறது பத்திரிகை ............... என்று  

கடந்த ஒரு கருத்திடுகையில் நான் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்கள் என எழுதியதை அவச்சொல்லைப் பாவித்ததென்று நீக்கிவிட்டார்கள்.ஆதலால் இதையும் மட்டுறுத்தினர் சரிபார்த்து மிச்சமிருந்தால் அனுமதிக்கவும்.

ம்ம்ம் கொழும்பு டெய்லிமெயில் கூட புலிகள் எண்டு சொல்லவில்லை. ஆதவன் சொல்லி இருக்கு.

3 hours ago, Nathamuni said:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, goshan_che said:

ம்ம்ம் கொழும்பு டெய்லிமெயில் கூட புலிகள் எண்டு சொல்லவில்லை. ஆதவன் சொல்லி இருக்கு.

ஆதவன் நியூஸ் என்பது யாருடையது எனில் லைக்க சுபாஸ்கரனுடையது தனிப்பட்ட ரீதியில் சிங்களத்தின் இரண்டு தொலைக்காட்சிகள் மற்றும் அரச தொலைக்காட்சியை வாடகைக்கு எடுத்தது இவைகள் தவிர ஆதவன் நியூசும் இவருடையதே இவர் நினைத்தால் தமிழில் ஒரு மிகச் சிறந்த ஊடகமாக இதைக் கொண்டுவரலாம் இதில் வேலைசெய்யும் ஊழியர்கள் இவரிடம்ந் இப்படி இதை நடாத்துகிறீர்கள் சிறப்பாகச் செயல்படலாம்தானே எனக்கேட்டதாக அறிந்தேன் ஆனால் தமிழ் ஊடகமெனில் அரசுக்கு எதிராக எதுவும் சொல்லமுடியாது எல்லத்தையும் பறிச்சுப்போட்டு உள்ளவைத்துவிடுவாஙள் என்பதால் கம்மென்று இருக்கிறார் என நினைக்கிறேன் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, Elugnajiru said:

ஆதவன் நியூஸ் என்பது யாருடையது எனில் லைக்க சுபாஸ்கரனுடையது தனிப்பட்ட ரீதியில் சிங்களத்தின் இரண்டு தொலைக்காட்சிகள் மற்றும் அரச தொலைக்காட்சியை வாடகைக்கு எடுத்தது இவைகள் தவிர ஆதவன் நியூசும் இவருடையதே இவர் நினைத்தால் தமிழில் ஒரு மிகச் சிறந்த ஊடகமாக இதைக் கொண்டுவரலாம்

இதுபற்றி அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஆனபடியால் அவரது மின்னஞ்சல் முகவரி எடுத்து அவரின் கவனத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யலாம்.(அதையும் பார்ப்பாரோ என்னவோ?).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதுபற்றி அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஆனபடியால் அவரது மின்னஞ்சல் முகவரி எடுத்து அவரின் கவனத்திற்கு கொண்டுவர முயற்சி செய்யலாம்.(அதையும் பார்ப்பாரோ என்னவோ?).

எந்த இலங்கை ஊடகத்திலும் புலிகள் என வரவில்லை. ஆதவன் வேணும் எண்டே சொருகி உள்ளது.

பிக்குவிடம் எட்டாக வளைந்து விருது வாங்குபவருக்கு இது தெரியாமல் நடக்கிறது என நம்ப நான் தயாரில்லை அண்ணை.

2 hours ago, Elugnajiru said:

ஆதவன் நியூஸ் என்பது யாருடையது எனில் லைக்க சுபாஸ்கரனுடையது தனிப்பட்ட ரீதியில் சிங்களத்தின் இரண்டு தொலைக்காட்சிகள் மற்றும் அரச தொலைக்காட்சியை வாடகைக்கு எடுத்தது இவைகள் தவிர ஆதவன் நியூசும் இவருடையதே இவர் நினைத்தால் தமிழில் ஒரு மிகச் சிறந்த ஊடகமாக இதைக் கொண்டுவரலாம் இதில் வேலைசெய்யும் ஊழியர்கள் இவரிடம்ந் இப்படி இதை நடாத்துகிறீர்கள் சிறப்பாகச் செயல்படலாம்தானே எனக்கேட்டதாக அறிந்தேன் ஆனால் தமிழ் ஊடகமெனில் அரசுக்கு எதிராக எதுவும் சொல்லமுடியாது எல்லத்தையும் பறிச்சுப்போட்டு உள்ளவைத்துவிடுவாஙள் என்பதால் கம்மென்று இருக்கிறார் என நினைக்கிறேன் 

ம்ம்ம்ம்…இவர்கள்தான் எமக்கு பொருளாதாரம் மூலம் விடியலை தரப்போகிறார்கள் என பலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

பிக்குவிடம் எட்டாக வளைந்து விருது வாங்குபவருக்கு இது தெரியாமல் நடக்கிறது என நம்ப நான் தயாரில்லை அண்ணை.

அப்ப நிமிர கனகாலம் எடுக்குமா?

Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப நிமிர கனகாலம் எடுக்குமா?

இப்படி குனிந்த ஆட்கள் நிமிர்வதே இல்லை.🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப நிமிர கனகாலம் எடுக்குமா?

நிமிராது🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இவர்கள்தான் எமக்கு பொருளாதாரம் மூலம் விடியலை தரப்போகிறார்கள் என பலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.

சிங்கள பாதாள உலக சமூகவிரோதிகளை புலிகள் என்று செய்தி புனையும் ஒரு ஊடகத்தின் உரிமையாளர், அதுவும் பெளத்த பிக்குகளின் முன் எண்சாண் உடம்பை சுருக்கி, நாணிக்கோணி நின்று விருது வாங்கிய அவர் தனது பொருளாதாரப் பலத்தின்மூலம் தமிழருக்கான உரிமைகளை வாங்கித் தருவார் என்று நம்புவோமாக. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ரஞ்சித் said:

சிங்கள பாதாள உலக சமூகவிரோதிகளை புலிகள் என்று செய்தி புனையும் ஒரு ஊடகத்தின் உரிமையாளர், அதுவும் பெளத்த பிக்குகளின் முன் எண்சாண் உடம்பை சுருக்கி, நாணிக்கோணி நின்று விருது வாங்கிய அவர் தனது பொருளாதாரப் பலத்தின்மூலம் தமிழருக்கான உரிமைகளை வாங்கித் தருவார் என்று நம்புவோமாக. 

அவருக்கும் இரு முகம் இருக்கும் என்று நம்புவோமாக..

வெளியே எட்டாக வளைந்தும் உள்ளே வெறுப்பை கொண்டும் ஏனெனில் காரியம் நடக்கவேண்டும் என்றால் சில விரும்பத்தகாத செயல்களை செய்யவேண்டும் தானே…

வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்தானே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

காரியம் நடக்கவேண்டும் என்றால் சில விரும்பத்தகாத செயல்களை செய்யவேண்டும் தானே…

வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம்தானே

அவர் தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக வளைகிறார். தமிழரின் விடிவிற்கும் இந்த வளைதலுக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

Posted
6 hours ago, Elugnajiru said:

ஆதவன் நியூஸ் என்பது யாருடையது எனில் லைக்க சுபாஸ்கரனுடையது தனிப்பட்ட ரீதியில்  

ஆதவன் நியூஸ், லைகா. குறூப்பின் ஆதவன் மீடியா நிறுவனம் மூலம் இயக்கப்படுவது. இதன் தலைமைப் பொறுப்பாளராக இருப்பவர் ஊடகவியலாளர் குருபரன். 

குருபரனை தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். ஊடகப் பொறுப்புமிக்க ஊடகவியலாளர். கோத்தாவினால் கடத்தப்பட்டு சர்வதேச அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ் பத்திரிகையாளர்.

ஆதவனின் தலைப்பின் தவறு, தெரியாமல் நடந்து இருக்கவே வாய்ப்புகள் அதிகம். Proof reading என்பது அறவே இல்லாத துறையாக தமிழ் ஊடகத்துறை மாறி விட்டது என்பதற்கான இன்னொரு சாட்சி அது.

சிங்களம் தேவையானவர்களை தம்முடன் சேர்த்து தன் வெற்றியை எப்பவும் தக்க வைத்துக் கொள்ளும். 

நாங்கள் ஒருத்தரைக் கூட மிச்சம் வைக்காது எல்லாரையும் துரோகி ஆக்கி சுய இன்பம் அடைந்து திருப்திப் பட்டுக் கொள்வோம்.

டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, நிழலி said:

ஒரு செய்தி நிறுவனம் என்பது எப்படிச் செயல்படவேண்டும் யாருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் யாரைப் பாதிக்கக் கூடாது யாரிடம் பகைக்கக் கூடாது எப்படியான செய்தி வெளியிடப்படல்வேண்டும் என்பது தவிர அரசாங்கத்தினுடைய சில கோரிக்கைகளையோ அன்றில் செயல்படும் நாட்டில் செல்வாக்குமிக்கவர்களது கோரிக்கைகளையோ ஏற்றுத்தான் செய்திகளை வெளியிடவேண்டும் தவிர குருபரன் தலைமை ஊடகவியளாளராக இருந்தால் அவரது பார்வைக்கு ஒவ்வொரு செய்தியும் அதாவது பிரச்சனைக்குரியது எனக் கருதப்படும் செய்திகள் அனைத்தும் பார்வைக்கு உட்படுத்தப்பட்டெ வரும் இது தவிர்க்கப்படமுடியாததாகும்.  அப்படி குருபரனுக்குத் தெரியாது ஒரு பிரச்சனைக்குரிய செய்தி தவறான விதத்தில் பிரசுரமாகுமாயிருந்தால் அச்செய்தி நிறுவனத்தை அவரைத்தவிர வேறு யாரோ மேலாண்மை செய்கிறார்கள் என்பது அர்த்தமாகும். 

உங்களது கருத்தின்படி குருபரனது கட்டுப்பாட்டில் அந்த நிறுவனம் இல்லை எனப்படுகிறது. அவர் ஒப்புக்குச் சப்பாணியாக இருக்கிறார் என்பதெள அதன் பொருளாகும் உங்களுக்கு அறிமுகமானவராக இருந்தால் ஒரு தடவை கேட்டுத்தெரிந்துகொள்ளுங்களேன் எமக்காக.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.