Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெட்டிசனார் கலாநிதி பேரின்பம் ✍

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெட்டிசனார் பேரின்பம் :writing_hand:

fg.jpg

பேரின்பத்தார் பெட்டிசம் எழுதுறார்.
ஊர் உலகத்துக்கு நல்லதை செய்யிறார். 
:rolling_on_the_floor_laughing:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! பெரிய விதானையார் வினாசித்தம்பி.
நான் பேரின்பம் எழுதுறன். உங்களுக்கு குளத்தடி சின்னையாவை கட்டாயம் தெரிஞ்சிருக்கும்..அவருக்கு ஒரு டசின் பெடி பெட்டையள் எண்டும் உங்களுக்கு தெரியும்.ஆனால் அதிலை முக்காவாசி குஞ்சு குருமன் எல்லாம் கனடாவுக்கு ஓடீட்டினம்.இப்ப அவையள் செல்வச்செழிப்போடை பந்தாவாய் திரியினம். சின்னையா குடும்பத்துக்கு கிழமைக்கு கிழமை கனடாவிலை இருந்து மணியோடர் மணியோடராய் வருதெண்டு  போஸ்ற் பீயோன் மணியம் சொன்னவன்.சின்னையா குடும்பம் இப்ப வீட்டிலையே நிக்கிறேல்லை. ஊர் ஊராய் ஒரே சுத்தல் தான்.போன கிழமையும் தனி பஸ் புடிச்சு கதிர்காமம் போட்டு வந்தவையள்.

இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால் சின்னையா குடும்பத்திட்ட  உவ்வளவு காசு வசதிகள் இருந்தும் இப்பவும் கூப்பன்கடை முத்திரை வைச்சிருக்கினம். ஏன் எப்பிடி எண்டு நீங்கள் ஒருக்கால் விசாரிக்க வேணும். சிரமதானப்பணியிலை கூப்பன் மா மூட்டையளை மடக்கின சின்னயாவின்ரை கதையை பிறகு சொல்லுறன்.

இப்ப நான் சொன்ன விசயத்தை ஆருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ...பிறகு நான் ஊரிலை இருக்கேலாது.
இப்படிக்கு
பேரின்பம்

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டிசன் பேரின்பத்திடமிருந்து நிறைய விடயங்கள் வெளிவரும் போலக் கிடக்கு........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சின்னையா குடும்பத்துக்கு கிழமைக்கு கிழமை கனடாவிலை இருந்து மணியோடர் மணியோடராய் வருதெண்டு  போஸ்ற் பீயோன் மணியம் சொன்னவன்.

குமாரசாமியார், பெட்டிசன் பழசு போலே. 😉

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் மணியோடராய் வருகுதோ ?  ஓ, சின்னபிள்ளையாயிருக்கும் போது    நடந்த கதையா ? இப்ப .....செல்போன் காலமெல்லோ ? ஒரு "கோல் " காணும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இப்ப நான் சொன்ன விசயத்தை ஆருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ...பிறகு நான் ஊரிலை இருக்கேலாது.
இப்படிக்கு
பேரின்பம்

பேரின்பத்துக்கு இருட்டடி விழப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

பேரின்பம் வணக்கம்..!

  உம்மளின்ர லெற்றர் பாத்தன்.. குளத்தடி சின்னையாவில நல்ல கடுப்பில இருக்கிறீர்போல.. லைட்டா என்னிலயும் காண்டு போல கடுதாசியில தெரியுது.. உதுக்கு நான் ஒண்டும் செய்யேலாது.. இப்ப இஞ்ச இயக்கம் இல்ல..அரச அதிகாரிகள் நாங்கள் வச்சதுதான் சட்டம்.. நீர் கடுதாசி போட்டு என்ன துள்ளினாலும் வேலைக்கு ஆகாது.. சின்னையான்ர ஒவ்வொரு மோனும் ஊருக்கு வரேக்க வெளிநாட்டு சாராயம் மூண்டு போத்தில் எடுத்து எனக்கெண்டு மனுசன் ஒவ்வொரு போத்திலா உடையாமல் சீலைத்துணியால சுத்தி உரவாக்குக்க மறைச்சு வச்சு கொண்டந்து என்ர ஒபிஸ் கக்கூசுக்கு பின்னால வச்சுவிட்டிருக்கும்.. மோளவை வரேக்க வெளிநாட்டு உடுப்பு என்ர மனுசிக்கும் பிள்ளையளுக்கும் எண்டு தனியா எடுத்து வச்சு கொண்டுவந்து தரும்.. அதுபோக கண்டோஸ் வெளிநாட்டு ரொபியள் மணிக்கூடு போன் எண்டு விதம் விதமா வருசம் வருசம் எனக்கு படி வைக்குது சின்னையா.. அதுபோக சின்னையான்ர பொடியள் கண்டி கதிர்காமம் எண்டு போறவானில என்ர மனுசி பிள்ளையளும் அப்பப்ப ஏறிக்கொண்டு போய் ஓசீல இடம்பாக்குதுவள்.. இப்ப சொல்லும் இவ்வளவு செய்யுற ஒரு நல்ல ஏழை சீவன்ர கூப்பன் மட்டைய நான் பறிக்க ஏலுமோ..?குளத்தடி சின்னையா மாரி உம்மால எனக்கு படி அளக்க ஏலுமோ..?  ஏலுமெண்டா சொல்லும் நாளைக்கே சின்னையான்ர கூப்பன் முத்திரைய நாலு துண்டா வெட்டி கச்சா கடலுக்க போடுறன்..

இப்படிக்கு

ஏரியா விதானை

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் சின்னையா,

எங்கட சிநேகிதம் தெரியாம, உவன் பேரின்பம் பெட்டிசம் போட்டு இருக்கிறான்.

போனகிழமை, உன்னோடே, சிரிச்சு, சிரிச்சு டீயும், வடையும், கந்தையரிண்ட கடையில திண்டு, குடிச்சுப் போட்டு, உந்த வேலை செய்திருக்கிறான்.

பயப்படாத, நான் என்னத்தை செய்யப்போறன். ஆனால் ஆளை கண்டால், கடதாசி கிடைச்சது, அலுவல் நடக்குது. இருந்து பாருமன் விளையாட்டை என்று சொல்லி விடுவன்.

ஆள், கட்டைதான்... முதுகிளை குத்துற வேலை செய்யுது.

அதுசரி, உன்ட பெடியள் ஒண்டுட்டை சொல்லி எண்ட இரண்டாவது பெடிய கனடாவுக்கு எடுத்து விடேலுமா  என்று விசாரிச்சு சொல்லுமன். உங்க அவன்ட சிநேகிதப் பொடி, குமாரசாமி ஜேர்மன் போய் இறங்கினோன்ன, தானும் வெளிக்கிடோணும் எண்டு ஒத்தக்காலில நிக்கிறான்.

அதோடை இன்னொரு விசயம், எண்ட கடைசி பெட்டைக்கு சம்பந்தம் ஒண்டு பேசவேணும். தெரின்ச ஆட்கள் தாரும் இருந்தால் பாருமன். கனடா, லண்டன் எண்டாலும் ஒகே.

இப்படிக்கு 

வினாசித்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

செம்பியன்பற்று பிரதேச செயலாளர் பிரேம் குமாருக்கு,

கனம் ஐயா,

விதானை வினாசித்தம்பி பற்றியது

ஐயா என் பெயர் சிற்றின்பம். உங்களுக்கு கிழமைக்கு ஒரு கடிதம் போடும் பேரின்பத்தின் இளைய தம்பி நான்.

எனது சகோதரர், வெளிநாட்டு வீட்டார்-சின்னையா, விதானை வினாசிதம்பி மூவரும் இணைந்து கூப்பன் மோசடி செய்கிறார்கள் என நான் சந்தேகிக்கிறேன்.

இதை நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்.

பெரும் தனவானாக இருக்கும் சின்னையா தொடர்ந்தும் கூப்பன் எடுக்கிறார். இதை அனுமதிக்க, சின்னையாவிடம் உயர் வெளி நாட்டு மது வகைகளை மாட்டுத்தோல் பையில் வைத்து விதானை வினாசிதம்பி பெற்று கொள்வதாக நான் அறிகிறேன்.

இதை அறியாமல் என் சகோதரர் விதானையிடமே ஒரு பெட்டிசனை போட்டுள்ளார்.

உடனே சுதாகரித்த விதானையும், சின்னையாவும் மூன்று மாதத்துக்கொரு ஜொனி வாக்கர் என்று என் சகோதரரையும் இந்த கூட்டில் பங்காளியாக சேர்த்து கொண்டுள்ளனர்.

இதில் இவர்கள் மூவருக்கும் இலாபமே. இழப்பு முழுவதும் திறைசேரிக்கே.

இதை தடுக்க ஆவன செய்யுங்கள் ஐயா.

இவ்வண்ணம்,

சிற்றின்பம்

குடத்தனை

பிகு

நான் ஒரு அரைக்காப்போத்தல் வட் 69 கேட்டும் சின்னையா தர மறுத்துவிட்டான். ஆனால் அதற்கும் நான் எழுதியமைக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12/9/2023 at 18:51, பாலபத்ர ஓணாண்டி said:

பேரின்பம் வணக்கம்..!

  உம்மளின்ர லெற்றர் பாத்தன்.. குளத்தடி சின்னையாவில நல்ல கடுப்பில இருக்கிறீர்போல.. லைட்டா என்னிலயும் காண்டு போல கடுதாசியில தெரியுது.. உதுக்கு நான் ஒண்டும் செய்யேலாது.. இப்ப இஞ்ச இயக்கம் இல்ல..அரச அதிகாரிகள் நாங்கள் வச்சதுதான் சட்டம்.. நீர் கடுதாசி போட்டு என்ன துள்ளினாலும் வேலைக்கு ஆகாது.. சின்னையான்ர ஒவ்வொரு மோனும் ஊருக்கு வரேக்க வெளிநாட்டு சாராயம் மூண்டு போத்தில் எடுத்து எனக்கெண்டு மனுசன் ஒவ்வொரு போத்திலா உடையாமல் சீலைத்துணியால சுத்தி உரவாக்குக்க மறைச்சு வச்சு கொண்டந்து என்ர ஒபிஸ் கக்கூசுக்கு பின்னால வச்சுவிட்டிருக்கும்.. மோளவை வரேக்க வெளிநாட்டு உடுப்பு என்ர மனுசிக்கும் பிள்ளையளுக்கும் எண்டு தனியா எடுத்து வச்சு கொண்டுவந்து தரும்.. அதுபோக கண்டோஸ் வெளிநாட்டு ரொபியள் மணிக்கூடு போன் எண்டு விதம் விதமா வருசம் வருசம் எனக்கு படி வைக்குது சின்னையா.. அதுபோக சின்னையான்ர பொடியள் கண்டி கதிர்காமம் எண்டு போறவானில என்ர மனுசி பிள்ளையளும் அப்பப்ப ஏறிக்கொண்டு போய் ஓசீல இடம்பாக்குதுவள்.. இப்ப சொல்லும் இவ்வளவு செய்யுற ஒரு நல்ல ஏழை சீவன்ர கூப்பன் மட்டைய நான் பறிக்க ஏலுமோ..?குளத்தடி சின்னையா மாரி உம்மால எனக்கு படி அளக்க ஏலுமோ..?  ஏலுமெண்டா சொல்லும் நாளைக்கே சின்னையான்ர கூப்பன் முத்திரைய நாலு துண்டா வெட்டி கச்சா கடலுக்க போடுறன்..

இப்படிக்கு

ஏரியா விதானை

ஓம் பெரிய விதானையார்!

உங்களுக்கு வெளிநாட்டு சோப்பு சீப்பு கண்ணாடி கேக்குது. ஆனால் எனக்கு கூப்பன் மா  முக்கியம்.உவன் சின்னையன்  கவுண்மேந்து செலவிலை குளம் வெட்டினதுக்கு வந்த கூப்பன்மா மாசிக்கருவாடு எல்லாத்திலையும் அரைவாசியை அமுக்கி போட்டு மிச்சத்தை தான் பங்கிட்டு ஊர்ச்சனத்துக்கு குடுத்தவன். கொத்துரொட்டி காக்கா கடைக்கு என்ரை கண்பட நாலு மூட்டை கூப்பன்மா இறக்க கண்டனான். மற்றவன் உழைப்பின சுகம் காணுற ஆள் நான் இல்லை கண்டியளோ விதானையார்.

இந்தா பார் இப்ப  கரவெட்டி டி ஆர் ஓ ஓபீசுக்கு  போறன். பெரிய விதானைக்கு அடிக்கிறன் பெட்டிசன்....

என்னை யாரென்று எண்ணி எண்ணி  நீ பார்க்கின்றாய் இது யார் பாடும் பாடலென்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.