Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, goshan_che said:

அமெரிக்காவின் பலம் ஒரு போதும் உலகில் எங்கும் இந்தியாவை விட குறையாது என்பது வெளிப்படை உண்மை.

ஆனால் ஒரு கணத்தில் வகிபாகம் கூடும், குறையும் அதை வைத்து, அமெரிக்கா இந்தியாவை ஓரம் கட்டி விட்டது என்றோ, இலங்கையில் இந்தியா தோத்து விட்டது என்ற முடிவுக்கு வருவது என்னை பொறுத்தவரை - too simplistic.

இலங்கை ஒரு சின்ன விடயம் - இன்னும் பல பெரிய விடயங்களில் அமெரிக்காவுக்கு இந்தியா தேவை.

ஆகவே இதை இப்படி எளிமையாக விளங்கி கொள்ள கூடாது.

முக்கியமான விடயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள்.

இந்திய வெளியுறவு கொள்கை, இலங்கையில் மட்டுமல்ல, நேபால், மாலைதீவு, பாகிஸ்தான் எங்கும் சீனாவிடம் தோத்து விட்டது.

மாலைதீவில், இந்தியாவே வெளியேறு கோசம் ஆரம்பித்து விட்டது.

இலங்கையில், சீனாவிடம், இந்தியா அடைந்த தோல்வியே, அமெரிக்காவினை கொண்டு வந்து இறக்கி விட்டது.

ஆகவே, இந்தியா பெரியண்ணன், வல்லரசு... பூச்சாண்டி வேண்டாமே.

Edited by Nathamuni
  • Haha 1
  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும்

பாலபத்ர ஓணாண்டி

உங்கட கதை ஒரு உப்பு சப்பில்லாத கதை ரஞ்சித்.. இதே திமுகா புலிகளை ஆதரித்தபோது அதிமுக ஆதரவாளர்கள் புலிகளை இப்படித்தான் கேவலமாக பேசினார்கள்.. ஜெயலலிதாவே கேவலமாக பேசிய பதிவுகள் உண்டு..தமிழ்நாட்டில் ஒரு கட்

ரஞ்சித்

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான தனது வெளிப்படையான ஆதரவினை தனது அரசியலின் பிரதான மூலதனமாக இட்டு சீமான் செய்துவரும் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவருவதை சீமானை ஆ

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

கோத்தவினை வெளியே துரத்தும் போராட்டத்தின் பின்னால், முழுமையாக அமெரிக்கா தான் இருந்தது என்று விமல் வீரவன்ச மட்டும் சொல்லவில்லை.

ஒரு குரூப், புத்தகம் அடித்து, வெளிவிவகார அமைச்சரிடம் கொடுத்தும் விட்டார்கள்.

அந்த போராட்டம் நடந்த காலத்தில், இந்தியாவின் வகிபாகம்? 

எதுவுமே இல்லை.

சரி பின்னர் வந்த ஜனாதிபதி தேர்தலில், ரணிலை எதிர்த்த மொட்டு கட்சிகாரரை இந்தியா ஆதரித்தே.... என்ன நடந்தது?

ரோ விலும் பார்க்க, சிஐஏ இலங்கையில் பலமாக உள்ளது என்பது உறுதியாகிறதா?

தமிழர் பகுதியில், சீன ஆதரவு பௌத்த ஆலயங்கள் தீடீரென முளைப்பது ஏன் என்று இந்தியாவுக்கு கரிசனையை இல்லை. ஆனால் அமெரிக்க தூதர் கேட்டார்.

ஆகவே, இந்தியாவே ஒன்னும் செய்ய முடியாத கள சூழலில், தமிழக சில்லறை அரசியலை பூதாகாரமாக்கி வேடிக்கை பண்ணாமல், நடப்பதற்கும் உன்னிப்பாக கவனிப்போம்.

இந்த களேபரத்தில், கஜேந்திரன் எம்பிக்கு அடி விழுந்ததை கவனிக்கவில்லை....   

மேலே வடிவாக இலங்கையில் இந்தியா, அமெரிக்காவின் இலங்கை வகிபாகம் பற்றிய உங்கள் புரிதல் ஏன் “எளிமையானது” என்பதை சொல்லி விட்டேன்.

நீங்கள் தனியே செய்தியை மட்டும் வைத்து, ஒரு முடிவுக்கு வந்து விட்டு அது சரி என வாதிடுகிறிர்கள்.

இதில் மேலும் சொல்ல எதுவும் இல்லை.

இது திரியின் தலைப்பும் அல்ல.

ஆனால் ஈழத்தமிழரின் தமிழகம் பற்றிய அணுகுமுறை, இந்தியா பற்றிய அணுகுமுறை ஒன்றல்ல.

இந்தியாவுக்கு இலங்கையில் வகிபாகமே இல்லை என்றே ஆகினாலும் - ஈழதமிழருக்கு, தமிழகத்தின் துணை தேவை

ஆகவே தமிழக அரசியலில் அணிசாராமல் நிற்பதே சரியான, அயலககொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

முக்கியமான விடயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள்.

இந்திய வெளியுறவு கொள்கை, இலங்கையில் மட்டுமல்ல, நேபால், மாலைதீவு, பாகிஸ்தான் எங்கும் சீனாவிடம் தோத்து விட்டது.

மாலைதீவில், இந்தியாவே வெளியேறு கோசம் ஆரம்பித்து விட்டது.

இலங்கையில், சீனாவிடம், இந்தியா அடைந்த தோல்வியே, அமெரிக்காவினை கொண்டு வந்து இறக்கி விட்டது.

ஆகவே, இந்தியா பெரியண்ணன், வல்லரசு... பூச்சாண்டி வேண்டாமே.

இந்த‌ உல‌கை எடுத்து கொண்டால் ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் ஒப்புடுகையில் இந்தியா ஒரு சுன்ட‌க்காய் நாடு.............இந்தியாவின் வீர‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ம‌ட்டும்மே
ஆனால் த‌லைவ‌ர் கோரிலா தாக்குத‌ல் மூல‌ம் தமிழ‌ர்க‌ள் யார் என்று போன‌ நூற்றாண்டிலே நிருபித்து விட்டார்

வாழ்க்க‌ தலைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்😍🙏...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

மேலே வடிவாக இலங்கையில் இந்தியா, அமெரிக்காவின் இலங்கை வகிபாகம் பற்றிய உங்கள் புரிதல் ஏன் “எளிமையானது” என்பதை சொல்லி விட்டேன்.

நீங்கள் தனியே செய்தியை மட்டும் வைத்து, ஒரு முடிவுக்கு வந்து விட்டு அது சரி என வாதிடுகிறிர்கள்.

இதில் மேலும் சொல்ல எதுவும் இல்லை.

இது திரியின் தலைப்பும் அல்ல.

ஆனால் ஈழத்தமிழரின் தமிழகம் பற்றிய அணுகுமுறை, இந்தியா பற்றிய அணுகுமுறை ஒன்றல்ல.

இந்தியாவுக்கு இலங்கையில் வகிபாகமே இல்லை என்றே ஆகினாலும் - ஈழதமிழருக்கு, தமிழகத்தின் துணை தேவை

ஆகவே தமிழக அரசியலில் அணிசாராமல் நிற்பதே சரியான, அயலககொள்கை.

மீண்டும் சொல்கிறேன் குழம்பாதீர்கள்.

இங்கே, நாலு பேர் பண்ணும் அலம்பறை, ஈழத்தமிழர் நிலைப்பாடு என்று யார் சொன்னது? நான் இந்தியா குறித்து சொல்வதும் சபை ஏறாது.

இன்றய நிலையில் ஈழத்தில், தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் கருத்தே கவனத்துக்கு எடுக்கப்படும் என்பதில் தெளிவாக இருங்கள். அவர்கள் இன்றும் இந்தியா சார்பாகவும், தமிழக அரசியலில் நடுநிலையாகவுமே இருக்கிறார்கள்.

அது புரிந்தால், நேரவிடயம் உண்டாக்கும் கருத்துக்கள் இராது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Nathamuni said:

நீங்கள் ஆதரிக்காவிடில் என்ன நடக்கும??

இது நல்ல கேள்வி....

1..சீமான்  எங்களை பற்றி பேசுவதை நிறுத்தி விடுவார் அல்லது குறைத்து விடுவார் 

2..தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு அமைப்போ...தனிநபர்களே   ஈழத்தமிழர் பற்றி கேவலமாகவும்  தரக்குறைவாகவும்  முக்கியமாக தலைவர் பற்றி  எழுதப்போவதில்லை 

3...எங்கள் ஆதரவு  தேவையற்றது   பிரயோஜனம் அற்றது.  தமிழ்நாட்டில் உள்ள எந்தக்கட்சிக்கும்.  ஒரு சட்டமன்ற உறுப்பினர்  அல்லது சட்டமன்ற ஆட்சியை பெற்றுக்கொடுக்காது. 

4...மலேசியா தமிழருக்கு...பர்மா தமிழருக்கு   ...இப்படியான. நாடுகளில் வாழும் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு   இவர்கள் ஏதாகினும் தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளார்களா. ??  இல்லையே  ??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Nathamuni said:

முக்கியமான விடயத்தில் கோட்டை விட்டு விடாதீர்கள்.

இந்திய வெளியுறவு கொள்கை, இலங்கையில் மட்டுமல்ல, நேபால், மாலைதீவு, பாகிஸ்தான் எங்கும் சீனாவிடம் தோத்து விட்டது.

மாலைதீவில், இந்தியாவே வெளியேறு கோசம் ஆரம்பித்து விட்டது.

இலங்கையில், சீனாவிடம், இந்தியா அடைந்த தோல்வியே, அமெரிக்காவினை கொண்டு வந்து இறக்கி விட்டது.

ஆகவே, இந்தியா பெரியண்ணன், வல்லரசு... பூச்சாண்டி வேண்டாமே.

எனக்கும் இந்தியா தோத்து விட்டது என்றும் அம்மணமாக ஓடுகிறது எண்டும் எழுத ஆசைதான்🤣

உண்மையில் கணிசமான வெற்றியாகிய சந்திராயனை கூட “சப்பை மேட்டர்” என எழுதும் மனநிலையில் தான் நானும் பலரும் உள்ளோம்🤣.

ஆனால் இந்த இந்திய வெறுப்பு - எம்மை நடப்பதை காண மறுக்கும் மனநிலைக்கு இட்டு செல்ல கூடாது.

நேபாளிலும், இலங்கையிலும், மாலைதீலும் இந்தியா கடைசியிம் முதலுமாக தோத்து விட்டது என்றோ,

இந்தியாவை நேரடியாக பகைத்து இந்த நாடுகளில் இருந்து வெளிதள்ள அமரிக்கா விரும்பும் என்றோ - உங்களுக்கு தோன்றினால்….

உங்களுக்கு நிச்சயம் ஒரு தம்பியின் லைக் கிடைக்கும்🤣.

ஆனால்…என்னை பொறுத்தபரை இந்த புரிதல் மிக எளிமையானதும், தவறானதும் ஆகும்.

7 minutes ago, Nathamuni said:

இங்கே, நாலு பேர் பண்ணும் அலம்பறை, ஈழத்தமிழர் நிலைப்பாடு என்று யார் சொன்னது?

தனியே யாழை மட்டும் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக சகல ஊடக பரப்பிலும்.

8 minutes ago, Nathamuni said:

இன்றய நிலையில் ஈழத்தில், தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் கருத்தே கவனத்துக்கு எடுக்கப்படும் என்பதில் தெளிவாக இருங்கள். அவர்கள் இன்றும் இந்தியா சார்பாகவும், தமிழக அரசியலில் நடுநிலையாகவுமே இருக்கிறார்கள்

ஆனால் (சரியாக) அவர்கள் மெனமாக இருக்கிறார்கள்.

அவர்களின் மெளனத்தை உங்கள் போன்றோரின் இரைச்சல் நிரப்புவதால்…

இந்த இரைசல்தான் ஈழத்தமிழர் நிலைப்பாடு என்ற perception உருவாகி வருகிறது.

இது திண்மமாகினால் (solidify) பின் உடைப்பது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Nathamuni said:

திரும்பவும் சொல்கிறேன்.

ஈழ தமிழ் அரசியல் தலைவர்கள் நிலைப்பாடு தான் கணெக்கெடுக்கப்படும்.

உங்களதோ, எனதோ அல்ல. இங்கிருந்து நாம் எழுதுவத்தை வைத்து, ஈழத்தமிழர் நிலைப்பாடு இதுதான் என்று நினைக்க அங்கேயுள்ள அரசியல் வாதிகள் வெத்து வேட்டுக்கள் அல்ல.

அதேவேளை, தமிழகமோ, இந்தியாவோ எமக்கு செய்ய எதுவுமே இல்லை. செய்திருக்க வேண்டிய காலமும் கடந்து விட்டது...

களமும் இல்லை.

ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கையின் எதிர்காலமே, அமெரிக்கா, சீனா கைகளில். அதாவது வல்லரசுகளின் கைகளில்.

இந்தியா... இனி பார்வையாளார் மட்டுமே. அது துரதிஷ்ட்டமானது.

இது மிகவும் தவறுகள் அதிகம் நிறைந்த கருத்துகள்  

அமெரிக்கா சீனா  இலங்கையில் செய்வது   வியாபாரம்    

இந்தியா செய்வது வியாபாரம் அரசியல்   இரண்டையுமே 

இலங்கை. இந்தியாவுக்கு  எப்போதும்  களம். தான்   விரும்பும் போது  விமானம் மூலம்  சாப்பாடு பார்சல்கள். போடுவார்கள்  🤣🤣🤣🤣 அதனை  உலகிலுள்ள எந்தவொரு நாடும் ஏன் என்று கேட்கப்போவதில்லை   ஐக்கிய நாணய சபை கூட  எந்தவொரு விசாரணையுமின்றி சரி சொல்லும்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kandiah57 said:

இது நல்ல கேள்வி....

1..சீமான்  எங்களை பற்றி பேசுவதை நிறுத்தி விடுவார் அல்லது குறைத்து விடுவார் 

2..தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு அமைப்போ...தனிநபர்களே   ஈழத்தமிழர் பற்றி கேவலமாகவும்  தரக்குறைவாகவும்  முக்கியமாக தலைவர் பற்றி  எழுதப்போவதில்லை 

3...எங்கள் ஆதரவு  தேவையற்றது   பிரயோஜனம் அற்றது.  தமிழ்நாட்டில் உள்ள எந்தக்கட்சிக்கும்.  ஒரு சட்டமன்ற உறுப்பினர்  அல்லது சட்டமன்ற ஆட்சியை பெற்றுக்கொடுக்காது. 

4...மலேசியா தமிழருக்கு...பர்மா தமிழருக்கு   ...இப்படியான. நாடுகளில் வாழும் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு   இவர்கள் ஏதாகினும் தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளார்களா. ??  இல்லையே  ??

ஆன‌ந்த‌ச‌ங்க‌ரிக்கும் ட‌க்கிள‌ஸ்சுக்கும் சிங்சாங் போடும் கூட்ட‌த்தில் இருந்த‌ வ‌ந்த‌ நீங்க‌ள் எல்லாம் அண்ண‌ன் சீமான் பெய‌ரை சொல்ல‌வே த‌குதி இல்லாத‌ ந‌ப‌வ‌ர்க‌ள்! ந‌ன்றி...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kandiah57 said:

இலங்கை. இந்தியாவுக்கு  எப்போதும்  களம். தான்   விரும்பும் போது  விமானம் மூலம்  சாப்பாடு பார்சல்கள். போடுவார்கள்  🤣🤣🤣🤣 அதனை  உலகிலுள்ள எந்தவொரு நாடும் ஏன் என்று கேட்கப்போவதில்லை   ஐக்கிய நாணய சபை கூட  எந்தவொரு விசாரணையுமின்றி சரி சொல்லும்   

சரியான புரிதல்.

இங்கே மேலோட்டமாக பார்போருக்கு புரியாதது.

இலங்கையில் நடப்பது இலங்கைக்கான போட்டி அல்ல. இந்தியாவுக்கான போட்டி.

இந்தியா என்ற காதலியை, அமெரிக்கா என்ற காதலன் வசீகரிக்க, தன் பக்கம் முற்றாக வர எத்தனிக்கிறார்.

அவர்கள் இடையே ஊடலும், காதலும் நடக்கிறது.

இந்தியா வளர்க்கும் குட்டி நாய்தான் இலங்கை.

இந்தியாவோடு ஊடல் வரும் போது நாய்க்கு அமெரிக்க சில பிஸ்கெட்டை தூக்கி போடும். நாயும் வாலாட்டும்.

ஊடல் தொடரும். காதலும் தொடரும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

ஆன‌ந்த‌ச‌ங்க‌ரிக்கும் ட‌க்கிள‌ஸ்சுக்கும் சிங்சாங் போடும் கூட்ட‌த்தில் இருந்த‌ வ‌ந்த‌ நீங்க‌ள் எல்லாம் அண்ண‌ன் சீமான் பெய‌ரை சொல்ல‌வே த‌குதி இல்லாத‌ ந‌ப‌வ‌ர்க‌ள்! ந‌ன்றி...................

தம்பி கருத்துகள் இல்லையா  ???  என்னை பற்றி இங்கு உரையாடல் நடக்கவில்லை  ..தமிழ்நாட்டில் உள்ள சீமான் என்ற தனிநபரின். செயல்பாடுகளினால். எமது போராட்டத்தையும். தலைவரையும்  இழிவாக தரக்குறைவாக  தமிழ்நாட்டு அமைப்புகள்  தனிநபர்கள. எழுதுகிறார்கள் பேசுகிறார்கள் ..இதை மறத்து கருத்துகள் வையுங்கள்    நான் மிக மிக சின்னவன்   யாழ் மிகப்பெரிய ஊடகம்.  அதில் என்னைப் பற்றி விவாதங்கள் செய்வது… யாழை  அவமானப்படுத்துவது ஆகும்    😁

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
34 minutes ago, goshan_che said:

ஆனால் (சரியாக) அவர்கள் மெனமாக இருக்கிறார்கள்.

அவர்களின் மெளனத்தை உங்கள் போன்றோரின் இரைச்சல் நிரப்புவதால்…

இந்த இரைசல்தான் ஈழத்தமிழர் நிலைப்பாடு என்ற perception உருவாகி வருகிறது.

இது திண்மமாகினால் (solidify) பின் உடைப்பது கடினம்.

அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் சரி...

ஆனால் அவர்களை இந்தியா விரக்தியுற வைக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இஸலாமியர்கள், இப்படி விரக்தி அடைந்தே, சவூதியும், ஐஎஸ் ம் உள்ளே நுழைந்தது.

அதேபோலவே, அதுகிடக்குது கழுதை... கொல்லைப்புறத்தில் இருக்கும், ஒரு சுண்டக்காய்  நாடு என்று அலட்ச்சியமாக இருந்ததால், சீனாவும், அமெரிக்காவும் உள்ளே புகுந்து கொண்டபின், குய்யோ, முறையோ என்று வந்து, விமானம் பறக்கிறம், கப்பல் ஓடுறம், ரயில் பாதை கட்டுறம் எண்டால்?

தமிழர்கள் அல்ல, தாம் கையெழுத்து போட்ட 13 குறித்த ஒப்பந்தம் 37 வருசமா, கடுக்காய் கொடுக்குது இலங்கை.

ஒண்டு, செயல்படுத்து அல்லது தூக்கி ஏறி என்று சொல்ல வக்கில்லை. என்ன வல்லரசு?

அட போங்க சாரே.... 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

100 வீதம் சரியான கருத்து.. எதற்கு ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ஈழத்தமிழர்கள் மற்றக்கட்சிகளை மூர்க்கமாக எதிர்த்து எழுதுகிறார்கள் என்று புரியவில்லை.. தங்கள் தங்கள் விருப்பமான கட்சிகளின் மேல் ஆதரவோடு ஈழத்தமிழர்கள் நின்று கொள்வது நல்லது.. அதைத்தாண்டி அந்த அந்த கட்சிக்காரர்களுடன் சேர்ந்து எதற்கு இந்த வீணாய்ப்போன ஈழத்தமிழர்கள் களமாடுகிறார்கள்.. ஒரு நேர சோத்துக்குக்கூட பிரயோசனம் இல்லாத வேலை உது.. அவர்களுடைய ஆத்துமணல் பிரச்சினை இயற்கை பிரச்சினை சோத்துப்பிரச்சினை சம்பளபிர்ச்சினை உரிமைப்பிரச்சினை இதை எல்லாம் அவர்கள்தானே பேசி அரசியல் செய்யவேணும்.. எதுக்கு நம்மாளுங்க அதை செய்யுறானுங்க..? அவர்கள் எங்களைப்போல அரசியல் அனாதைகள் இல்ல.. அவர்களுக்கு என்று ஒரு நாடு இருக்கு மாநில அரசு இருக்கு அவர்கள் விரும்பும் கட்சிகள் இருக்கு.. சோ அவர்கள் தங்கள் அரசியலை பாத்துக்கொள்வார்கள்.. நாங்கள் குரல்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.. அவர்கள் எப்பவாவது எங்கள் ஊர் சம்பள பிரச்சினை மண் அள்ளுற பிரச்சினை ஆடுமாடு வளக்குற பிரச்சினை பற்றி கதைத்திருக்கிறார்களா.. சிங்களவர்களால் இனப்படுகொலை இன ஒதுக்கல் நடக்கும்போது மட்டும் குரல் கொடுப்பார்கள்.. அது தார்மீகக்கடமை.. இன ஒடுக்கல் இன அழிப்புக்கு குரல் கொடுப்பது வேறு அந்த நாட்டு லோக்கல் அரசியல் கதைப்பது வேறு.. அதே போல் ஒரு இன அழிப்பு நிலமை தமிழ் நாட்டில் ஏற்பட்டால் அப்போ நாம ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாம்.. இப்ப எதுக்கு லோக்கல் அரசியல்ல நாம பிரச்சாரம் செய்யணும்..? இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே வெளிநாட்டவர்கள் இந்திய அர்சியலில் ஈடுபட தடை இருக்கு.. நாளைக்கே ஈழத்தமிழர்கள் ஆதரிக்கும் எதிர்க்கும் வேறு வேறு கட்சிகள் உதாரணத்துக்கு பாஜாகவை தமிழகத்துக்குள் விடக்கூடாது அதனால் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று தமது ஊர் நலத்தை சிந்தித்து ஒன்றாக போட்டியிட்டால் இந்த களமாடி ஈழத்தமிழர்கள் எந்த முக்காட்டை போத்துக்கொண்டு இருக்கப்போகிறார்கள்.. அவர்கள் ஊர் நலனை முன்னிறுத்தி என்ன முடிவெடுப்பதும் அவர்களுக்கு சரியானது தானே..

ப்ரோ,

நல்ல கருத்துதான்.

ஆனால் நீங்கள் நினைக்கிறீர்களா…சுயமாக சிந்தித்து ஒவ்வொரு ஈழதமிழனும் புத்திசாலிதனமாக தமிழ் நாட்டு அரசியலை பொது வெளியில் பேசாமல் தவிர்ந்து கொள்வான் என?

வாய்பில்ல ராஜா…வாய்ப்பில்ல.

கேட்டால்…

“அவனை முதல்ல நிறுத்த சொல்லு” எண்டு நாயகன் டயலாக் பேசுவானுவோ.

அப்போ அணிசாராமையை எப்படி கட்டி காப்பது?

சீமானை எதிர்த்து பல ஈழ தமிழரும் எழுதி வருகிறார்கள் என்ற நிலையை உருவாக்குவதே.

இப்போ புரிகிறதா?

நாம் சீமானை துவைத்து தொங்க விடுவது “பெருமை அல்ல கடமை”.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

தம்பி கருத்துகள் இல்லையா  ???  என்னை பற்றி இங்கு உரையாடல் நடக்கவில்லை  ..தமிழ்நாட்டில் உள்ள சீமான் என்ற தனிநபரின். செயல்பாடுகளினால். எமது போராட்டத்தையும். தலைவரையும்  இழிவாக தரக்குறைவாக  தமிழ்நாட்டு அமைப்புகள்  தனிநபர்கள. எழுதுகிறார்கள் பேசுகிறார்கள் ..இதை மறத்து கருத்துகள் வையுங்கள்    நான் மிக மிக சின்னவன்   யாழ் மிகப்பெரிய ஊடகம்.  அதில் என்னைப் பற்றி விவாதங்கள் செய்வது… யாழை  அவமானப்படுத்துவது ஆகும்    😁

மேல‌ இருந்து கீழ‌ பார்த்தால்
என்னை விட‌ அதிக‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் நீங்க‌ள்..............இந்த‌ திரிக்குள் ஆர‌ம்ப‌த்தில் ட‌க்கிள‌ஸ் ப‌ற்றி நீங்க‌ள் எழுதின‌துக்கு என் க‌ருத்தை எழுதினேன் அத‌ற்கு உங்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை ஆன‌ ப‌டியால்..............எம்மின‌த்தால் ஒதுக்க‌ப் ப‌ட்ட‌ துரோகிய‌லை ப‌ற்றி எழுதி என் நேர‌த்தை நான் வீன் அடிக்க‌ விருப்ப‌ வில்லை...............

2002க‌ளில் இருந்து 2009க‌ள் வ‌ரை உங்க‌ட‌ ஆட்க‌ள் செய்த‌ துரோக‌ செய‌ல்க‌ள்  உல‌க‌ த‌மிழ‌ர்க‌ள் அறிந்த‌ விடைய‌ம்! ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Nathamuni said:

அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் சரி...

ஆனால் அவர்களை இந்தியா விரக்தியுற வைக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இஸலாமியர்கள், இப்படி விரக்தி அடைந்தே, சவூதியும், ஐஎஸ் ம் உள்ளே நுழைந்தது.

அதேபோலவே, அதுகிடக்குது கழுதை... கொல்லைப்புறத்தில் இருக்கும், ஒரு சுண்டக்காய்  நாடு என்று அலட்ச்சியமாக இருந்ததால், சீனாவும், அமெரிக்காவும் உள்ளே புகுந்து கொண்டபின், குய்யோ, முறையோ என்று வந்து, விமானம் பறக்கிறம், கப்பல் ஓடுறம், ரயில் பாதை கட்டுறம் எண்டால்?

தமிழர்கள் அல்ல, தாம் கையெழுத்து போட்ட 13 குறித்த ஒப்பந்தம் 37 வருசமா, கடுக்காய் கொடுக்குது இலங்கை.

ஒண்டு, செயல்படுத்து அல்லது தூக்கி ஏறி என்று சொல்ல வக்கில்லை. என்ன வல்லரசு?

அட போங்க சாரே.... 

உங்கள் இந்தியா சம்பந்தமான ஆதங்கங்கள் அத்தனையும் நியாமனதும் நான் உணர்வதும் கூட.

வாலி படம் பார்த்திருப்பியள்?

அதில் வாற சிம்ரன் மாரி நீங்கள், தமிழ் நாட்டையும் இந்தியாவையும் போட்டு குழப்பிகொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.

மீளவும் சொல்கிறேன் இந்தியா இலங்கையில் இருந்து முற்றாக விரட்டி அடிக்கப்பட்டாலும், ஈழ தமிழருக்கு தமிழ் நாட்டின் தயவு தேவை.

பிகு

என்ன சிம்ரன் இதெல்லாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

Thank you Boss!!

எங்களை போன்றவர்கள் இரைச்சலை அவர்கள் கேட்பீனம் எண்டுறியள்... சும்மா பகிடி பண்ணாதீங்கோ...

உங்களை போன்றவர்கள் இரைச்சல் அதனை பாலன்ஸ் பண்ணுமே... ஓகேதானே.

சும்மா தமாசு பண்ணாமல், போய் வேறு வேலை பார்ப்போம்.

அடடே, கந்தையர் சீமானுக்கு எதிர்ப்பு, பையன் ஆதரவு.... என்று வெடியே போடபோகினம்? 

டெல்லியை மீறி தமிழ்நாடு செய்ய எதுவுமே இல்லை.

ஆனாலும் டெல்லி, இன்றய நிலையில் பங்காளி அல்ல, பார்வையாளர் மட்டுமே என்பதே நிதர்சனம்.

Just have fun with TN politics and move on!!! 🤣

பெங்களூரில் இருந்து வீடியோ லூசு லட்சுமி வீடியோ போட்டிருக்கு எண்ணெடு பார்க்கப்போறன். 🥰

சந்திப்போம்... 

12 minutes ago, goshan_che said:

பிகு

என்ன சிம்ரன் இதெல்லாம் 🤣

பல கள உறவுகள் இருந்தும், உங்களுடன் விவாதிக்க விரும்பும் காரணம், I can discuss with you at professional level. 

நன்றி, இணைந்திருங்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

மேல‌ இருந்து கீழ‌ பார்த்தால்
என்னை விட‌ அதிக‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் நீங்க‌ள்..............இந்த‌ திரிக்குள் ஆர‌ம்ப‌த்தில் ட‌க்கிள‌ஸ் ப‌ற்றி நீங்க‌ள் எழுதின‌துக்கு என் க‌ருத்தை எழுதினேன் அத‌ற்கு உங்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை ஆன‌ ப‌டியால்..............எம்மின‌த்தால் ஒதுக்க‌ப் ப‌ட்ட‌ துரோகிய‌லை ப‌ற்றி எழுதி என் நேர‌த்தை நான் வீன் அடிக்க‌ விருப்ப‌ வில்லை...............

2002க‌ளில் இருந்து 2009க‌ள் வ‌ரை உங்க‌ட‌ ஆட்க‌ள் செய்த‌ துரோக‌ செய‌ல்க‌ள்  உல‌க‌ த‌மிழ‌ர்க‌ள் அறிந்த‌ விடைய‌ம்! ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்..................

தம்பி  நான் பதில் எழுதி உள்ளேன்  பொதுவாக  உங்களுக்கு என்று தனியாக எழுதவில்லை   முதலில் நான் டக்ளஸ் ஆனந்தசங்கரி  போன்றவர்களின். ஆதரவுளான் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்      சீமானை  ஆதரிப்பதை விட  டக்ளஸ் ஆதரிக்கலாம் என்றே எழுதினேன் ...இது கருத்து    இந்த கருத்தின் விரிவு  சீமான்  டக்ளஸ் விட கேவலமானவர் என்பது   இது என்னுடைய புரிதல்   இங்கே டக்ளஸ் பற்றி யாழ் கள உறுப்பினர்கள் நீங்கள் உள்பட. சொன்னவை  அனைத்தும் உண்மை தான்    அதற்காக சீமானை  தூக்கி பிடிக்க முடியாது    உங்கள் கருத்துகள்  தலைப்பைச் சார்ந்து இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/9/2023 at 14:30, ரஞ்சித் said:

, இவரது அரசியலை ஆதரிக்கும் எந்த ஈழத் தமிழனும் இதுகுறித்துச் சிந்திப்பது நல்லது.

நீங்கள் இந்த பதிவை எழுதியது ஒரு வகையில் நல்ல விடயம். என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது ஒன்று. அதே நேரம் இங்கே எழுதுவோரின் நோக்கங்களையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே இவ்வளவு பக்கம் பக்கமாக ஒரு சிலர் எழுதுவது நேரத்தைப் போக்க யாழை ஒரு பொழுது போக்கும் இடமாகப் பயன்படுத்துகிறார்கள். சிலர் சரியான விதத்தில் விளங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள். சிலர் உணர்ச்சி வேகத்தில் முதல் பக்கத்தில் எழுதியவற்றை மறந்து போய் வேறு விதமாகஎழுதுகிறார்கள். ஆகையால் இப்படியான பதிவுகளை வாசிக்கும் என் போன்றவர்களுக்கும் எதனைக் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதும் புரியும். 

மனிதர்கள் பலவிதம்.. 

உங்களுடைய பதிவிற்கு நன்றி. 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, Kandiah57 said:

தம்பி  நான் பதில் எழுதி உள்ளேன்  பொதுவாக  உங்களுக்கு என்று தனியாக எழுதவில்லை   முதலில் நான் டக்ளஸ் ஆனந்தசங்கரி  போன்றவர்களின். ஆதரவுளான் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்      சீமானை  ஆதரிப்பதை விட  டக்ளஸ் ஆதரிக்கலாம் என்றே எழுதினேன் ...இது கருத்து    இந்த கருத்தின் விரிவு  சீமான்  டக்ளஸ் விட கேவலமானவர் என்பது   இது என்னுடைய புரிதல்   இங்கே டக்ளஸ் பற்றி யாழ் கள உறுப்பினர்கள் நீங்கள் உள்பட. சொன்னவை  அனைத்தும் உண்மை தான்    அதற்காக சீமானை  தூக்கி பிடிக்க முடியாது    உங்கள் கருத்துகள்  தலைப்பைச் சார்ந்து இல்லை 

யாழில் எந்த‌ க‌ருத்து திரி தலைப்பைச் சார்ந்து தொட‌ர்ந்து இருக்கு எல்லாம் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌ப்ப‌து போல் தான் க‌ட‌சியில் முடிந்து இருக்கு...............அண்ண‌ன் சீமான் மீது போட‌ ப‌ட்ட‌ அவ‌தூறு வ‌ழ‌க்குக்கு அண்ண‌ன் சீமான் இன்று முற்றுப் புள்ளி வைத்து விட்டார்............யாழில் சீமானை ப‌ற்றி அவ‌தூற‌ கில‌ப்பி விட்ட‌து யார்..........சீமானை கைது செய்ய‌ ஊட்டிக்கு விரைந்த‌து காவ‌ல்துறை............விஜ‌ட‌ல‌ட்சுமி சொல்லுவ‌து உண்மை............அந்த‌ உண்மை பேசும் உத்த‌மி ஏன் கொடுத்த‌ புகார‌ திரும்ப‌ பெற‌னும்............சேற்றை வாரி ஒருத‌ர் மீது பூசுவ‌து என்று முடிவெடுத்தால் உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு என்ன‌ வேணும் என்றாலும் எழுதி த‌ள்ளுவிங்க‌ளா..............திண்ணையில் சீமானின் பெய‌ரை  க‌ல‌ங்க‌ப் ப‌டுத்திய‌ ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ர் இதை உங்க‌ளால் ம‌றுக்க‌ முடியுமா.............

அண்ண‌ன் சீமான் நீதி ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொடுத்து இருக்கிறார்..........விஜ‌ய‌ல‌ட்சுமி வீர‌ல‌ட்சுமி ம‌ற்றும் முக்தார் போன்ற‌வ‌ர்க‌ள் பொது ம‌க்க‌ள் முன் ம‌ன்னிப்பு கேட்டும் நிலை வ‌ரும் அதோடு ந‌ஷ்ட‌ ஈடு வ‌ழ‌க்கும் தொட‌ர‌ ப‌ட்டு இருக்கு.............இதில் இருந்து யாரும் த‌ப்ப‌ முடியாது............அண்ண‌ன் சீமான் ப‌ல‌ விடைய‌த்தில் மெள‌வுன‌மாய் க‌ட‌ந்து போனார் இந்த‌ அவ‌தூறுக‌ளை க‌ட‌ந்து............பொறும்மைக்கும் ஓர் எல்லை உண்டு..............இவ‌ர்க‌ளின் அவ‌தூறு தான் அண்ண‌ன் சீமான் ஊட‌க‌ம் முன்னாள் கோவ‌ப் ப‌ட‌ கார‌ண‌ம் அந்த‌ பேட்டியோட‌ கொடுத்த‌ புகார‌ திரும்ப‌ பெற்று விட்டு க‌ர்நாடாகாவுக்கு ஓடி த‌ப்பி விட்ட‌து அந்த பெண் ம‌ன‌ நோயாளி...........அவாக்கே தெரியும் இது திராவிட‌ம் எழுதி கொடுத்த‌ க‌தைக்கு தான் ந‌டிக்க்க்றேன் என்று...........க‌ட‌சியில் த‌ன‌க்கு ஆப்பாய் வ‌ந்து முடியும் என்று அவா நினைத்து கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டா! ந‌ன்றி......................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Nathamuni said:

Thank you Boss!!

எங்களை போன்றவர்கள் இரைச்சலை அவர்கள் கேட்பீனம் எண்டுறியள்... சும்மா பகிடி பண்ணாதீங்கோ...

உங்களை போன்றவர்கள் இரைச்சல் அதனை பாலன்ஸ் பண்ணுமே... ஓகேதானே.

சும்மா தமாசு பண்ணாமல், போய் வேறு வேலை பார்ப்போம்.

அடடே, கந்தையர் சீமானுக்கு எதிர்ப்பு, பையன் ஆதரவு.... என்று வெடியே போடபோகினம்? 

டெல்லியை மீறி தமிழ்நாடு செய்ய எதுவுமே இல்லை.

ஆனாலும் டெல்லி, இன்றய நிலையில் பங்காளி அல்ல, பார்வையாளர் மட்டுமே என்பதே நிதர்சனம்.

Just have fun with TN politics and move on!!! 🤣

பெங்களூரில் இருந்து வீடியோ லூசு லட்சுமி வீடியோ போட்டிருக்கு எண்ணெடு பார்க்கப்போறன். 🥰

சந்திப்போம்... 

பல கள உறவுகள் இருந்தும், உங்களுடன் விவாதிக்க விரும்பும் காரணம், I can discuss with you at professional level. 

நன்றி, இணைந்திருங்கள். 👍

சந்திப்பம்.

மறக்க வேண்டாம், தமிழ் நாடும் இந்தியாவும் ஒன்றல்ல.

மட்டுப்பட்ட ரீதியில் இன்றும், ஒரு காலத்தில் இந்தியா உடைந்தால் மட்டற்ற ரீதியிலும் நமக்கு தமிழ்நாடு தேவை.

நமது இரைச்சல் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோரை நம்மை வெறுக்க வைக்க கூடாது. 

Fun முக்கியம் ஆனல் இனம் அதை விட முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, பையன்26 said:

யாழில் எந்த‌ க‌ருத்து திரி தலைப்பைச் சார்ந்து தொட‌ர்ந்து இருக்கு எல்லாம் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌ப்ப‌து போல் தான் க‌ட‌சியில் முடிந்து இருக்கு...............அண்ண‌ன் சீமான் மீது போட‌ ப‌ட்ட‌ அவ‌தூறு வ‌ழ‌க்குக்கு அண்ண‌ன் சீமான் இன்று முற்றுப் புள்ளி வைத்து விட்டார்............யாழில் சீமானை ப‌ற்றி அவ‌தூற‌ கில‌ப்பி விட்ட‌து யார்..........சீமானை கைது செய்ய‌ ஊட்டிக்கு விரைந்த‌து காவ‌ல்துறை............விஜ‌ட‌ல‌ட்சுமி சொல்லுவ‌து உண்மை............அந்த‌ உண்மை பேசும் உத்த‌மி ஏன் கொடுத்த‌ புகார‌ திரும்ப‌ பெற‌னும்............சேற்றை வாரி ஒருத‌ர் மீது பூசுவ‌து என்று முடிவெடுத்தால் உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு என்ன‌ வேணும் என்றாலும் எழுதி த‌ள்ளுவிங்க‌ளா..............திண்ணையில் சீமானின் பெய‌ரை  க‌ல‌ங்க‌ப் ப‌டுத்திய‌ ந‌ப‌ர்க‌ளில் நீங்க‌ளும் ஒருவ‌ர் இதை உங்க‌ளால் ம‌றுக்க‌ முடியுமா.............

அண்ண‌ன் சீமான் நீதி ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொடுத்து இருக்கிறார்..........விஜ‌ய‌ல‌ட்சுமி வீர‌ல‌ட்சுமி ம‌ற்றும் முக்தார் போன்ற‌வ‌ர்க‌ள் பொது ம‌க்க‌ள் முன் ம‌ன்னிப்பு கேட்டும் நிலை வ‌ரும் அதோடு ந‌ஷ்ட‌ ஈடு வ‌ழ‌க்கும் தொட‌ர‌ ப‌ட்டு இருக்கு.............இதில் இருந்து யாரும் த‌ப்ப‌ முடியாது............அண்ண‌ன் சீமான் ப‌ல‌ விடைய‌த்தில் மெள‌வுன‌மாய் க‌ட‌ந்து போனார் இந்த‌ அவ‌தூறுக‌ளை க‌ட‌ந்து............பொறும்மைக்கும் ஓர் எல்லை உண்டு..............இவ‌ர்க‌ளின் அவ‌தூறு தான் அண்ண‌ன் சீமான் ஊட‌க‌ம் முன்னாள் கோவ‌ப் ப‌ட‌ கார‌ண‌ம் அந்த‌ பேட்டியோட‌ கொடுத்த‌ புகார‌ திரும்ப‌ பெற்று விட்டு க‌ர்நாடாகாவுக்கு ஓடி த‌ப்பி விட்ட‌து அந்த பெண் ம‌ன‌ நோயாளி...........அவாக்கே தெரியும் இது திராவிட‌ம் எழுதி கொடுத்த‌ க‌தைக்கு தான் ந‌டிக்க்க்றேன் என்று...........க‌ட‌சியில் த‌ன‌க்கு ஆப்பாய் வ‌ந்து முடியும் என்று அவா நினைத்து கூட‌ பார்த்து இருக்க‌ மாட்டா! ந‌ன்றி......................

தம்பி சீமான்  எவளையெல்லாம் வைத்திருக்கிறார்  எவளையெல்லாம் ஒடி விட்டாள். எனபது பற்றி இந்த திரியில் ஆராய விரும்பவில்லை  அது அவரது தனிப்பட்ட விடயம்   அனுபவிக்கட்டும் 🤣🤣🤣 ஆனால் இங்கு கவனிக்கவேண்டியது  சீமான் மீது வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகளை நீங்களும் மறத்து வாதம் புரியவில்லை  எனவே… நீங்களும் இதனை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள் என்று எடுத்து கொள்ளலாம்   இல்லையா ?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் இந்த பதிவை எழுதியது ஒரு வகையில் நல்ல விடயம். என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது ஒன்று. அதே நேரம் இங்கே எழுதுவோரின் நோக்கங்களையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. இங்கே இவ்வளவு பக்கம் பக்கமாக ஒரு சிலர் எழுதுவது நேரத்தைப் போக்க யாழை ஒரு பொழுது போக்கும் இடமாகப் பயன்படுத்துகிறார்கள். சிலர் சரியான விதத்தில் விளங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள். சிலர் உணர்ச்சி வேகத்தில் முதல் பக்கத்தில் எழுதியவற்றை மறந்து போய் வேறு விதமாகஎழுதுகிறார்கள். ஆகையால் இப்படியான பதிவுகளை வாசிக்கும் என் போன்றவர்களுக்கும் எதனைக் கருத்தில் எடுக்கவேண்டும் என்பதும் புரியும். 

மனிதர்கள் பலவிதம்.. 

உங்களுடைய பதிவிற்கு நன்றி. 

இதையே தான் நானும் விளங்கிக் கொண்டேன்.

என்னைப் பொறுத்த வரையில், யார் சீரியசாக ஒரு விடயத்தை அணுகுகிறார்கள், யார் முகநூல் பதிவு பாணியில் "நேரம் எரிக்கப்" பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவு சில வருடங்கள் முன்பே வந்து விட்டது - ஆனால், இடைக்கிடை பைம்பலுக்கு எழுதுவோருக்கும் நான் பதில் எழுதக் காரணம் - இதை இங்கே சகஜமயப்படுத்தி விடக் கூடாது.

நவீன அரசியலில், சமூகத்திலும் தற்போதைய ஒரு போக்கு எதற்கோ செய்த ஆயுதத்தை வேறு பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது: சிறந்த உதாரணம், "புவி வெப்பமடைவது உண்மை அல்ல" என்ற பெட்ரோலியம் கம்பனிகள் பரப்பிய போலி விஞ்ஞான மனநிலை, கோவிட் பெருந்தொற்றின் போது அரசுகளின் தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எதிர்க்கவும் பாவிக்கப் பட்டது.

எனவே, இப்படி மண்டை கழுவப் பட்ட கருத்தாளர்களையும், அல்லது சுய நினைவோடு பொழுதுபோக்காக எழுதுவோரையும் எதிர்காலத்தில் வேறெதாவது நோக்கத்திற்காக இன்னொரு தரப்பு பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது.  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரியை ரகு திறந்தது ஒரு கருத்து கணிப்பு போன்றது. எனவே உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள் உறவுகளே. எதிர் போர் வேண்டாமே??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

இந்த திரியை ரகு திறந்தது ஒரு கருத்து கணிப்பு போன்றது. எனவே உங்கள் கருத்துக்களை மட்டும் வையுங்கள் உறவுகளே

IMG-4468.jpg

  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4468.jpg

Screenshot-20230918-211518-Collage-Maker

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, goshan_che said:

2009 இற்கு பின்பும் ஈழத்தில் தமிழ் இனம் இருக்கு.

2009 ற்கு பின்னும் அசுர அரசியல் பலத்தோடு தமிழ் நாட்டில் திமுக உண்டு.

இங்கே திராவிட கொள்கையை எதிர்கிறோம் என சீமான் விசுவாசிகள் சீண்டுவது தனியே திமுகவை மட்டும் அல்ல, திராவிடர் கழகம், மதிமுக, விஜைகாந்த் கெளத்தூர் மணி, வேல்முருகன், திருமா, கம்யூனிஸ்டுகள், இப்படி கிட்டத்தட்ட அறுதி பெரும்பான்மையான தமிழ் நாட்டு அரசியல் சக்திகளை.

அது மட்டும் அல்ல தெலுங்கு வெறுப்பை ஈழத்தமிழர் கையில் எடுப்பதால், நாயக்கர், நாயுடு, ரெட்டி….இன்னும் பல தமிழ் நாட்டில் ஆதிக்கம் மிக்க சாதிய அமைபுக்களையும் வலிந்து எதிரிகளாக்குகிறனர் ஈழத்தமிழரிடையே உள்ள சீமானியர்கள்.

2009 இல் திமுக ஆப்பு அடித்தது என்பதால் - மீண்டும், மீண்டும் அவர்களையும். இன்னும் பல வலுவான கூட்டங்களையும் சீண்டி….

தொடர்ந்தும் ஆப்பு கேட்டு வாங்க தேவையில்லை.

திமுக அல்ல திமுகவின் 15 கட்சிக்கூட்டணி. அதுவும் 3 வீத வாக்குகள் வித்தியாசத்தில். 2009 இற்குப் பின் அசுர பலத்தோடு ஜெயலலிதா இருந்தார். தனித்து நின்று இந்தியாவின் 3 பெரிய கட்சியாக தனது கட்சியை உயர்த்தினார். ஸ்டானுக்கு அந்தத் தில் எந்தக்காலத்திலும்வராது.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.