Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாவி தமிழ் மக்கள் கைது செய்யப்படும்போதும் கொலை செய்யப்படும்போதும் கோவில்கள் தகர்க்கப்படும்போதும்  புலிகள் என்றும் புலிகளின் முகாம்கள் என்றும்  விமர்சனம் செய்த நிலையிலிருந்து நமக்காக ஆதரவுக்குரல்கள் எழுகின்றன. இனி வருங்காலத்தில் எமது போராட்டத்தில் இவர்களும் பங்குபற்றும்படி காய்கள் நகர்த்தப்படவேண்டும். கயேந்திர குமார் பொன்னம்பலத்தின் வீட்டின்முன் கூச்சலிட்டவர்கள் அதோடு கலைந்ததே சிங்கள மக்களிடத்தில் ஏற்பட்ட  ஒரு மாற்றந்தான்! கலவரம் வெடிக்கும் என்று அச்சுறுத்தினார்கள் அஞ்சினோம் எல்லாவற்றையும் பறித்தார்கள், தப்பி ஓடினோம், எங்கள் இடத்தில  வந்து நின்று துரத்தும்போது அவர்கள் இடத்தில போய் நின்றுதான் நிஞாயம் கேட்க வேண்டும். இல்லையேல் வாழ்வதை மறக்க வேண்டும். அன்று எங்கள் வலிகள் புரியாதவர்கள் நம்மை அழித்தார்கள் அந்த வலி என்னவென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு காட்ட வேண்டும். இல்லையேல் எதிர்கால சந்ததி கேள்வி கேட்க்கும். முன்னையவரை பழி கூறுவதை விட்டு நம்மால் முடிந்ததை முயன்று பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து மக்கள் ஆதரவு பெறுவது புதிய விடயம் இல்லை. இங்கு கஜேந்திரன் புதினமாக ஒன்றும் செய்யவில்லை. 

தமிழர் செரிந்து வாழும் பகுதியில் ஜெனரல் கொப்பேகடுவ படத்தை தாங்கிய நினைவு ஊர்தி ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளுடன் சென்றால் கல்லெறி விழுமா/விழாதா?

மற்ற இனத்தவரின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்/மனமுதிர்ச்சி சாதாரண மக்களிடம் காணப்படுமா? இல்லை என்றால் இப்படி போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

தமிழர்கள் கொப்பேகடுவவின் படத்திற்கு கல்லெறிய மாட்டார்கள் என கருதுகிறேன், ஆனால் பொதுவாகவே சிங்களவர்கள் இறந்தவர்களினை அவமரியாதை செய்வது ஒரு பொதுவான விடயமாகவே இருந்து வந்துள்ளது.

இதற்கு அவர்கள் கூறும் மிருகத்திலிருந்து சிங்கள இனம் தோன்றியதாக கூறும் அவர்கள் கருத்துகள் காரணமாக இருக்கலாம்.

சிங்களவர்களை பற்றி கஜேந்திரகுமாருக்கு தெரியாதிருந்திருக்கிறது என்பதனை ஏற்று கொள்ளமுடியாது.

90 களில் இஸ்ரேலிய மொசாட் அதிகாரி ஒருவர் வெளியிட்ட நூலில், இலங்கை இராணுவத்தினர் பயிற்சிக்காகவும், ஆயுத கொள்வனவிற்காகவும் இஸ்ரேல் சென்ற போது அவரது மேல் அதிகாரி அவரிடம் இலங்கை இராணுவத்தினரை குரங்குகள் என்றும் அண்மையில்தான் மரத்திலிருந்து இறங்கினவர்கள் எனவும் கூறி, அவர்களை கண்டு கொள்ளவேண்ட்டாம் எனவும், அவர்களுக்கு தேவையானதை கொடுத்தனுப்பி விடுமாறு (வாழைப்பழம்) கூறியிருந்தார், இலங்கை இராணுவத்தினர் இராடர் சாதனம் வாங்க சென்றிருந்தவர்களுக்கு, இராடர் சாதனம் என கூறி துறைமுகத்தில் எண்ணெய் கசிவுகளை சுத்தம் செய்யும் பெரிய வக்யும் கிளீனரை காட்டி ஏமாற்றியதாகவும், அந்த குறிப்பிட்ட அதிகாரி தனது சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்தாகவும் எழுதி இருந்தாக நினைவில் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கே சிங்களவர்களை பற்றி தெளிவாக தெரிந்துள்ளது.

இது ஒரு மற்ற இனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வில் கூறவில்லை, நாங்கள் பெருமைப்படும் சில விடயங்கள் மற்றவர்களின் பார்வையில் அசிக்கமாக தெரியும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகள் இருக்கும் போது இப்படியான செயற்பாடுகள் இடம் பெற்றதா?...சமாதான காலத்தில் கூட இடம் பெறவில்லை ..யாருக்கு படம் காட்ட இவர் திலீபனை பயன்படுத்துகிறார்?
காவல் துறை அனுமதி தனக்கு தேவையில்லை என்று அனுமதி பெறாமலே வெளிக்கிட்டவர் ...நல்லாய் பிடித்து வெளுக்கோணும் ...திலீபனை பற்றி சொல்ல வெளிக்கிட்டவர் என்றால்,அமைதியாய் ,அடியை வாங்கி கொண்டு விளக்கப்படுத்தி இருக்க வேண்டும்.
திலீபனைப் பற்றி சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும் ..முதலில் 90ம் ஆண்டுகளுக்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு வர யார் என்பதை சொல்லி கொடுங்கள் 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செல்வராசா கஜேந்திரன் மீது கொலை வெறித்தாக்குதல் : விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்!

Published By: VISHNU

19 SEP, 2023 | 04:55 PM
image
 

பொலிஸ் பாதுகாப்பில் இருக்க சிங்கள காடையர்கள் தாக்குதலை நடத்துகிறார்கள். அதுவும் ஓர் நாடாளுமன்ற உறுப்பினர் மீதே இந்த கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நாடாக இலங்கை தொடருகிறது.

இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர்கள் எப்படி பொலிஸ்துறை இருக்கும் போதே சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்களோ அப்படி கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது சிங்கள இனவெறிக்கும்பல்.

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டின் நினைவையொட்டி, திருகோணமலையிலிருந்து செப்டம்பர் 15 முதல் எழுச்சி ஊர்தி பயணத்துக்கு பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அணிதிரண்டனர்.

மூன்றாவது நாளான திருகோணமலை மூதூர் கட்டைப்பறிச்சான் பிரதேசத்தில் ஆரம்பித்த ஊர்திப் பவனி அங்கிருந்து ஆலங்கேணி தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நகருக்குள் பிரவேசித்தது.

மக்களை எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த கூடினர். 50 க்கும் மேற்பட்ட இராணுவ புலனாய்வாளர்கள் வந்து பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

கப்பல்துறை முக சந்திக்கருகில் ஊர்தி வாகனம் சென்று கொண்டிருந்த போது, திடீரென கல்வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இவையெல்லாம் பொலிஸ்துறை இருக்கும் போதே நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கல்லெறிந்த அந்த இனவெறிக்கும்பல் நேரடியாக ஊர்தி அருகே வந்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை சூழ்ந்து கொண்டு கொலை வெறியோடு தாக்கினர். ஆனால்,சிங்கள இனவெறியர்களின் தாக்குதலை பொலிசார் வேடிக்கை பார்த்தனரே தவிர, தடுக்கக்கூட முயலவில்லை.

பின்னர் பொதுமக்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகளும் பாராளுமன்ற உறுப்பினரை தாக்குதலிலிருந்து பாதுகாத்து மருத்துவமனையில் சேர்த்தனர். செல்வராசா கஜேந்திரன் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய அமைதிப்படையை கண்டித்தும் 5அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் 1987 செப்டம்பர் 15 ஆம் திகதி கேணல் திலீபன் உண்ணாநிலைப்போராட்டத்தை துவங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவை போற்றும் வகையில் இம்மாதிரியான ஊர்தி பயணத்தை ஒருங்கிணைப்பது வழக்கம். முறையான முன் அனுமதியோடு தான் நடத்தப்படுகிறது.

ஆனாலும், சிங்கள இனவெறியர்கள் இத்தாக்குதலை தொடுத்திருப்பது கண்டனத்துக்குரியதாகும். இப்படி தாக்குதலை நடத்தி தமிழீழ உறவுகளை அச்சுறுத்த முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் மீதான இத்தாக்குதலை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம். இன்னமும் தொடரும் இனவெறிப்போக்குக்கு எந்த தீர்வும் காணாமல்,

சிங்கள இனவெறி அரசுக்கு ஒத்துழைக்கும் இந்திய ஒன்றிய அரசின் போக்கும் சிங்கள பவுத்த இனவாதிகளுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளது. 

தொடரும் இத்தகைய இனவெறித்தாக்குதலை தடுத்து நிறுத்தும் பொறுப்பு சர்வதேசத்துக்கும் உண்டு.

ஆகவே,இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு தீர்வு காண இந்தியாவும் தலையிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

https://www.virakesari.lk/article/164958

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Published By: DIGITAL DESK 3

19 SEP, 2023 | 04:39 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை, மக்கள் பிரதிநிதிகளுக்கும்  பாதுகாப்பில்லை. புலனாய்வு பிரிவினர் பலவீனமடைந்து விட்டார்கள் என்றால் திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட  வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின்  இராணுவம் மற்றும்  பொலிஸ் புலனாய்வு பிரிவு வீழ்ச்சியடைந்துள்ளதா? அல்லது ஆட்சியாளர்கள் அடவாடிகளுக்கு துணைபோகின்றனரா? என்ற கேள்விகள் எழுகின்றன.

அதாவது கடந்த 17ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தியாக தீபம் திலீபனின் ஊர்தியில் செல்லும் போது பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் முன்னிலையில் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மிகவும் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவ்விடத்தில் இருந்த பொலிஸ், இராணுவத்தினர்  ஏன்  இந்த தாக்குதுலை தடுக்கவில்லை என்ற கேள்விகள் உள்ளன. இது தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் கண்டனங்கள் உள்ளன. இதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கின்றேன்.இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை  இத வேண்டும். இல்லையேல் இதன் தொடர்ச்சி மிகவும் மோசமாக இருக்கும். இன்னும் தாக்குதல்கள் அதிகரிக்கும்.

பொதுமக்களின் பாதுகாப்பு தற்போது பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பகிரங்கமாகவே துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்  இடம்பெறுகின்றன.

பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை, மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பில்லை. அனுராதபுரம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்னவை இலக்குப்படுத்தி   துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

அதனை யார் நடத்தினர், அவர்களிடம் துப்பாக்கி வந்தது என்ற கேள்விக்கு பொலிஸ் பாதுகாப்பு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

இலங்கையின்  புலனாய்வுத்துறை  வீழ்ச்சியடைந்திருக்க வேண்டும் அல்லது ஆட்சியாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டும்.

இதில் ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும். உங்களிடம் புலனாய்வாளர்கள் இல்லையென்றால் புலனாய்வாளர்களை உங்களுக்கு தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மிகவும் திறமையானவர்கள் உள்ளனர். இரண்டு மூன்று நாட்களில் இந்த விடயத்தை யார், எதற்காக செய்தனர் என்பதனை கண்டறியும் புலனாய்வாளர்கள் உள்ளனர்.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் எங்கள் மீதும் துப்பாக்கி சூட்டை நடத்தி நாங்கள் இறந்தால் அதை கண்டுபிடிக்க முடியாத நிலையே உள்ளது.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி  மன்னார் பகுதியில்  விவசாய நடவடிக்கைக்கு சென்று வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னால் இருந்தவர்கள் யார் இருந்தனர் என்று தெரிந்தாலும் எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த துப்பாக்கி யாருடையது. ஏன் இதனை ஆட்சியாளர்கள் தாமதப்படுத்த வேண்டும்.

அரசியல் பண பலம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? அதற்கு உடந்தையாக இருப்பவர்கள்  யார்? . குற்றச்செயல்களை தடுக்கவிட்டால் பாதுகாப்பு தரப்பு மீது மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றார். 

https://www.virakesari.lk/article/164960

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்”

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது.
இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.

தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பில் அவதான குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.

எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
 

http://www.samakalam.com/நல்லிணக்கத்தை-சீர்குலை/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது.

IMG-4474.jpg

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோழைத்தனமான அறிக்கையை கிழக்கு மாகாண ஆளுநர் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் - வேலுகுமார் சபையில் கோரிக்கை

Published By: VISHNU

20 SEP, 2023 | 08:57 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த திலீபனை நினைவு கூருகின்ற ஊர்வலத்துக்கு சென்ற செல்வராசா கஜேந்திரனின் செயற்பாட்டை கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் அறி்க்கை கோழைத்தனமானது, அதனை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் இனவாதத்தை இனமோதலை துண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த திலீபனை நினைவு கூருகின்ற ஊர்வலத்துக்கு சென்ற இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமாக தாக்கப்படுவதையும் அதனை பொலிஸார் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது.

ஆகவே இன்று இனமோதலை ஏற்படுத்தும் சூட்சுமம் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார். 

அஹிம்சாவாதியை நினைவு கூர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாத முதுகெலும்பு இல்லாத அவர் முறையற்றது என கூறியிருப்பது கோழைத்தனமானது. அவர் தன்னுடைய அறிவிப்பை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் தற்போது நடைபெறும் அத்துமீறல்கள் சமூக ஊடகங்களின் மூலமாகவே மக்களுக்கு வெளிக்கொண்டு வரப்படுகின்றன.

செல்வராசா கஜேந்திரனின் தாக்குதலையும் அவ்வாறே நாம் அறிந்துக் கொண்டோம். இன்று இந்த அரசாங்கத்துக்கு சமூக ஊடகங்களின் மூலமாக வெளிக்கொணரப்படும் விடயங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவோ அதற்கு விடையளிக்கவோ முடியாத நிலையில் புதிய சட்டம் இயற்றி புதிய சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அடிமைப்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி செய்கிறது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடு. இந்த நாட்டிலுள்ள குடிமக்கள் தமது உரிமையை கேட்டால் அவர்களை பயங்கரவாதி என அடையாளப்படுத்தும் வேலைத்திட்டத்தை பயங்கரவாத சட்டத்தின் மூலம் ஏற்படுத்த அரசாங்கம் பார்க்கிறது.

அதேபோன்று ஜனநாயக அமைப்புக்கள் சமூக அமைப்புகள் யாவற்றையும் நாட்டி்ன் ஜனாதிபதியின் மூலம் தடையுத்தரவுகளை கொண்டு வருவதற்கான அவகாசத்யைும் அந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம் கொண்டு வர பார்க்கிறது. இவற்றை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இவற்றை கொண்டு வருவதற்கு இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகப்பெரியதொரு பொறுப்பு இருக்கின்றது. அவர் இந்த நாட்டின் பிரதமராக இருக்கின்ற போதே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. ஆகவே அந்த சூத்திரதாரிகளை அடையாளப்படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கின்றது்.

ரணில் விக்ரமசிங்க இதனை செய்வாரா அல்லது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை செய்வாரா அல்லது அரசாங்கத்தை பாதுகாப்பாரா அல்லது இந்த நாடு இனமோதலுக்குட்பட்டு எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலைமைக்கு தள்ளிவிடுவாரா என்ற  அவரின் வேலையை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆகவே செனல் 4 ஊடாக வௌிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும். அது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் கோருகின்றன. உள்நாட்டு விசாரணையில் திருப்தியடைய முடியாது். ரணில் விக்ரமசிங்க விரும்பினாலும் இந்த அரசாங்கம் ஒருபோதும்  சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது.  அந்த குற்றவாளிகளும் அந்த சூத்திரதாரிகளும் இந்த அரசாங்கத்தில் இருப்பதே அதற்கு காரணமாகும்.

https://www.virakesari.lk/article/165053

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/9/2023 at 06:21, கிருபன் said:

“நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம்”

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது.
இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.

தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பில் அவதான குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.

எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
 

http://www.samakalam.com/நல்லிணக்கத்தை-சீர்குலை/

அப்ப சிங்கள நாடு.. தமிழர் நாடு என்று இரண்டு இருக்கு என்பதை ஆளுநர் ஏற்றுக் கொள்கிறாரா. இவர் அப்ப சிங்கள நாட்டை தமிழர் நாட்டுக்குள் ஊடுருவல் செய்ய வந்துள்ளாரா..???!

ஏனெனில்.. தமிழர்களின் பாரம்பரிய பூமியில் வந்து அடாத்தாகக் குடியேறிய சிங்களவர்களுக்கும் அவர்களின் சண்டித்தனத்துக்கும் வக்காளத்து வாங்கி தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுதலிப்பதென்பது.. எப்படி இன நல்லிணக்கமாகும். இது இன இழிநிலையாக்கமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திலீபனின் ஊர்தியை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிப்பு

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் வியாழக்கிழமை (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் குறித்த நபர்கள் வியாழக்கிழமை (21) மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

380997427_1814223649016419_5468619523196

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு வியாழக்கிழமை (21) காலை எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் வியாழக்கிழமை (21) காலை குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிராக இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர் திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் குறித்த வழக்கானது வியாழக்கிழமை (21) மாலையளவில் நகர்த்தல் பிரேரணை மூலம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் குறித்த நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாரின் சமர்ப்பணத்தின்போது குறித்த நபர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதால் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இனக்கலவரங்கள் ஏற்படலாம் எனவும் அத்துடன் சாட்சிகள் வெளி மாவட்டங்களில் இருப்பதனால் சூம் தொழில்நுட்பம் மூலம் சாட்சிகளை பெற்றுக் கொள்வதாகவும் குறித்த நபர்களை பிணையில் விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தின் பின்னர் குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

17.09.2023 அன்று மாலை திருகோணமலை – கொழும்பு ஏ6 பிரதான வீதியூடாக திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியானது சர்தாபுர பகுதியில் வைத்து தாக்கப்பட்டிருந்தது. இதன்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதுடன் வாகனத்தில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 நபர்களும் தாக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆறுபேரும் கைது செய்யப்பட்டு 18.09.2023 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

திலீபனின் ஊர்தியை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/9/2023 at 01:44, vasee said:

தமிழர்கள் கொப்பேகடுவவின் படத்திற்கு கல்லெறிய மாட்டார்கள் என கருதுகிறேன், ஆனால் பொதுவாகவே சிங்களவர்கள் இறந்தவர்களினை அவமரியாதை செய்வது ஒரு பொதுவான விடயமாகவே இருந்து வந்துள்ளது.

இதற்கு அவர்கள் கூறும் மிருகத்திலிருந்து சிங்கள இனம் தோன்றியதாக கூறும் அவர்கள் கருத்துகள் காரணமாக இருக்கலாம்.

சிங்களவர்களை பற்றி கஜேந்திரகுமாருக்கு தெரியாதிருந்திருக்கிறது என்பதனை ஏற்று கொள்ளமுடியாது.

90 களில் இஸ்ரேலிய மொசாட் அதிகாரி ஒருவர் வெளியிட்ட நூலில், இலங்கை இராணுவத்தினர் பயிற்சிக்காகவும், ஆயுத கொள்வனவிற்காகவும் இஸ்ரேல் சென்ற போது அவரது மேல் அதிகாரி அவரிடம் இலங்கை இராணுவத்தினரை குரங்குகள் என்றும் அண்மையில்தான் மரத்திலிருந்து இறங்கினவர்கள் எனவும் கூறி, அவர்களை கண்டு கொள்ளவேண்ட்டாம் எனவும், அவர்களுக்கு தேவையானதை கொடுத்தனுப்பி விடுமாறு (வாழைப்பழம்) கூறியிருந்தார், இலங்கை இராணுவத்தினர் இராடர் சாதனம் வாங்க சென்றிருந்தவர்களுக்கு, இராடர் சாதனம் என கூறி துறைமுகத்தில் எண்ணெய் கசிவுகளை சுத்தம் செய்யும் பெரிய வக்யும் கிளீனரை காட்டி ஏமாற்றியதாகவும், அந்த குறிப்பிட்ட அதிகாரி தனது சிரிப்பை அடக்கமுடியாமல் இருந்தாகவும் எழுதி இருந்தாக நினைவில் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கே சிங்களவர்களை பற்றி தெளிவாக தெரிந்துள்ளது.

இது ஒரு மற்ற இனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வில் கூறவில்லை, நாங்கள் பெருமைப்படும் சில விடயங்கள் மற்றவர்களின் பார்வையில் அசிக்கமாக தெரியும்.

 

இனத்தின் ஒரு சாரார்/கடும் போக்கானவர்கள்/இன்னும் நாகரிகம் அடையாதவர்கள் அப்படி செய்யக்கூடும். இது நமது இனத்திலும் உண்டு. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/9/2023 at 03:21, ரதி said:

புலிகள் இருக்கும் போது இப்படியான செயற்பாடுகள் இடம் பெற்றதா?...சமாதான காலத்தில் கூட இடம் பெறவில்லை ..யாருக்கு படம் காட்ட இவர் திலீபனை பயன்படுத்துகிறார்?
காவல் துறை அனுமதி தனக்கு தேவையில்லை என்று அனுமதி பெறாமலே வெளிக்கிட்டவர் ...நல்லாய் பிடித்து வெளுக்கோணும் ...திலீபனை பற்றி சொல்ல வெளிக்கிட்டவர் என்றால்,அமைதியாய் ,அடியை வாங்கி கொண்டு விளக்கப்படுத்தி இருக்க வேண்டும்.
திலீபனைப் பற்றி சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும் ..முதலில் 90ம் ஆண்டுகளுக்கு பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு வர யார் என்பதை சொல்லி கொடுங்கள் 

 

 

தியாகி திலீபன் இந்தியாவுக்கு எதிராக போராடினார்.  புலிகள் இந்தியாவுக்கு எதிராக போராடினார்கள். இப்போது இவர்கள் இல்லாத நிலையில் நமது மேதாவிகள் இந்தியா தனித்தமிழ்நாடு நமக்கு பெற்றுத்தரும் என கனவு காண தொடங்கி உள்ளார்கள். இங்கு யாழ் கருத்துக்களத்திலேயே எழுந்து நின்று இந்திய தேசியகீதம் இசைக்கக்கூடிய நிலையில் உணர்ச்சிப்பிரவாகத்துடன் பலர் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) உள்ளார்கள்.

சிறிது காலத்தில் யாழ் இணையத்தில் இந்திய தேசிய கொடி பறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

இவ்வாறான நிலையில் தியாகி திலீபனை நினைவுகூறுவது காலத்தின் தேவை ஆகின்றது.  அதை செய்வது யார் என்பது ஒரு பிரச்சனையா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/9/2023 at 15:21, கிருபன் said:

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது.
இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.

இல்லாத இன நல்லிணக்கத்தை எப்படி இல்லாமல் ஆக்கமுடியுமென இவர் விளக்க வேண்டும்! எல்லோருக்கும் பொதுவான தெருவால் சென்றதால் இன நல்லிணக்கம் இல்லாமற் போய் விடுமென்றால் தமிழருக்கு சொந்தமான நிலங்களில் அவர்களுக்கு அறிமுகமில்லாத விகாரைகளை கட்டுவதாலும் அந்த மக்களின் வழிபாட்டை தடுப்பதாலும் நல்லிணக்கம் கெடாதா என்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். சரியானதை எடுத்துச்சொல்ல தெரியாவிட்டால், தைரியமில்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவேணும், எல்லாம் தெரிஞ்ச மாதிரி பாடம் எடுக்கக்கூடாது! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/9/2023 at 09:54, நியாயத்தை கதைப்போம் said:

 

இனத்தின் ஒரு சாரார்/கடும் போக்கானவர்கள்/இன்னும் நாகரிகம் அடையாதவர்கள் அப்படி செய்யக்கூடும். இது நமது இனத்திலும் உண்டு. 

உங்கள் கருத்திற்கு நன்றி,

இந்திய இலங்கை இராணுவத்தினரின் உடல்களை தமிழர்கள் எந்தவித அவமரியாதையினையும் செய்யாமல் தகுந்த முறையில் அடக்கம் செய்வதுண்டு.

வன்னிக்காடுகளில் இந்திய இராணுவம் தனது இறந்த சகாக்களை அரைகுறையாக புதைத்து விட்டு சென்று  நாலைந்து நாளில் அவை ஊதி நிலத்திலிருந்து வெளிதெரிய ஆரம்பிக்கும் போது காட்டு விலங்குகள் அவற்றினை இழுத்து சென்றுவிடும், அக்கால கட்டத்தில் பகல் பொழுதில் உணவு சமைப்பதற்காக அடுப்பு எரிக்க முடியாதநிலையில் (புகையினை வைத்து இடங்களை அடையாளம் காணமுடியும் என்பதால்) இந்த உடல்களை மீண்டும் தோண்டி எடுத்து எரிக்கப்பட்டதாக கேள்விப்பட்டுள்ளேன், அது போலவே இலங்கை இராணுவத்தினரி உடல்களையும் தகனம் செய்துள்ளார்கள், நினைவு தூபிகளை கூட சேதம் செய்வதில்லை, ஆனால் சிங்கள இராணுவத்தினால் அவ்வாறு செய்ய முடிந்திருக்கவில்லை.

அது ஒரு சாதாரண சிப்பாயிலிருந்து மொத்த படையணிக்கு பொறுப்பாகவிருந்த சரத் பொன்சேகாவாலும் முடியவில்லை.

சிங்களவர்களை இழிவுபடுத்துவது எனது நோக்கம் இல்லை, எனது அவதானிப்பின் அடிப்படையிலேயே கருத்து கூறினேன், எனது கருத்து தவறாக இருக்கலாம். 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.