Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

 வேலணை மத்திய கல்லூரி  "இந்துக் கல்லூரியா"? யாழ் மத்திய கல்லூரியிலும் விடுதி இருக்கிறது. மச்சம் தான் அனேக நாட்கள். இலவச மதிய உணவு காலத்திலும் மச்சம் பரிமாறினோம்!

உங்களுக்கு உண்மையிலேயே விளங்காப் பிரச்சினையா அல்லது "அய்யா" பிரச்சினையா😂?

கொழும்பு இந்துக் கல்லூரியிலும் மச்சம் தான். 

  • Replies 161
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

 வேலணை மத்திய கல்லூரி  "இந்துக் கல்லூரியா"? யாழ் மத்திய கல்லூரியிலும் விடுதி இருக்கிறது. மச்சம் தான் அனேக நாட்கள். இலவச மதிய உணவு காலத்திலும் மச்சம் பரிமாறினோம்!

உங்களுக்கு உண்மையிலேயே விளங்காப் பிரச்சினையா அல்லது "அய்யா" பிரச்சினையா😂?

உங்களுக்கு இதுக்கும் மேலே புரிய வைக்க முடியாது.

பாடசாலையின் பெரும்பான்மை (மத, மொழி) மாணவர்கள் அவர்களது பெற்றோர்களால் தான் பாடசாலைக்கான கலாச்சாரம், அதிபர் தேர்வும் நடக்கும்.

அதனைத் தான் ஆரம்பத்தில் சொன்னேன், St Antony’s ல் சைவர் அதிபராக முடியாது என்று.

ரோயலில் தமிழர், முஸ்லிம் அதிபராக சந்தர்பமில்லை.

நான் ஒரு சைவனாக, அந்த (St Antony) பாடசாலை கத்தோலிக்கமா, புரட்டஸ்தாந்தா என்று தெரியாமல், அதுக்குள் அதிபராக போட்டி நடந்தால் அலப்பறை பண்ண மாட்டேன். பத்திரிகைகளை நம்ப முடியாது!

அவ்வளவுதான் விசயம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உங்களுக்கு இதுக்கும் மேலே புரிய வைக்க முடியாது.

பாடசாலையின் பெரும்பான்மை மாணவர்கள் அவர்களது பெற்றோர்களால் தான் பாடசாலைக்கான கலாச்சாரம், அதிபர் தேர்வும் நடக்கும்.

அதனைத் தான் ஆரம்பத்தில் சொன்னேன், St Antony’s ல் சைவர் அதிபராக முடியாது என்று.

நான் ஒரு சைவனாக, அந்த பாடசாலை கத்தோலிக்கமா, புரட்டஸ்தாந்தா என்று தெரியாமல், அதுக்குள் அதிபராக போட்டி நடந்தால் அலப்பறை பண்ண மாட்டேன்.

அவ்வளவுதான் விசயம்.

உங்களுக்கும் விளக்கும் எண்ணம் எனக்கு இல்லை, ஏனெனில் ஓரளவுக்குத் தான் எந்தச் செம்பையும் "வெளக்க" முடியும்😎.

ஆனால் ஏனைய வாசகர்களுக்காக: புனித அந்தோனியார், சம்பத்திரிசிரியார் கத்தோலிக்க திருச்சபையின் பாடசாலைகள் - ஒரு கத்தோலிக்க குரு தான் அங்கே rector ஆக வர முடியுமென் எழுதியிருக்கிறது. ஏன்? இன்னும் இந்த பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபையில் இருந்து நிதி வருகிறது.

அரசு எடுத்துக் கொண்ட பாடசாலைகளில் யாரும் அதிபராக வரலாம், யார் அங்கே கூடப் படிக்கிறார்கள் என்பது இதைத் தீர்மானிப்பதில்லை. வழமை போல நாதம் தனது தலைக்குள் மட்டும் வைத்திருக்கும் அரை குறை சட்ட/விதி புரிதலை அவர் சொல்கிறார்!

அவ்வளவுதான்!

அதை தானே சொல்லுறன் உங்கள் தலைக்குள் ஏறுதில்லையே.

இங்கை மட்டும் கத்தோலிக்க ரெக்டர் மாத்தேலாது எண்டுறியள்.  வேலணையில் எண்டோன்ன சாதியத்தை இழுக்கிறியள்...

என்ன நியாயம்?

அங்கையும் மாத்தவேணும், ஒரு இஸ்லாமியர் அதிபராகலாம் எண்டு சொல்லுங்கோ!

அது நியாயம்!!

Edited by Nathamuni
Added

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அதை தானே சொல்லுறன் உங்கள் தலைக்குள் ஏறுதில்லையே.

இங்கை மட்டும் ரெக்டர் மாத்தேலாது எண்டுறியள்.  வேலணையில் எண்டோன்ன சாதியத்தை இழுக்கிறியள்...

என்ன நியாயம்?

கஷ்டப் படாதையுங்கோ! விளங்க வேண்டிய வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! நீங்கள் இப்படியே இருங்கோ!😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

கஷ்டப் படாதையுங்கோ! விளங்க வேண்டிய வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! நீங்கள் இப்படியே இருங்கோ!😂

எல்லாருக்கும் விளங்கும் உங்கள் நோக்கம்.

கத்தோலிக்க பாடசாலைகளிலும் விதியைமாத்தவேணும், ஒரு இஸ்லாமியர் அதிபராகலாம் எண்டு சொல்லுங்கோ!

அது நியாயம்!!

உதாரணம் யாழ் மத்திய கல்லூரி: அதிபர் சைவர்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு வரும் நிதியில் ஒரு பகுதி அந்த மத நிறுவனம் மூலம் வருகிறது. அத்துடன் அந்தப் பாடசாலைகள் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட்ட பொழுது எழுதப்பட்ட விதிகளின் பிரகாரம் அந்த பாடசாலைகளில் நியமிப்புகள் நடக்கின்றது.

 அப்படியான ஒரு கட்டுப்பாடு அல்லது விதி அரசாங்கத்தினால் நடத்தப்படும் மத்திய கல்லூரிகளுக்கு இல்லை. மத்திய கல்லூரிகளுக்கு வரும் அத்தனை நிதியும் மத்திய அரசாங்கத்தில் இருந்து வருகிறது, அந்த நிதியில் எந்த கத்தோலிக்க பீடமோ சைவ பீடமோ ஒரு வீதம் ஏனும் பங்காற்றவில்லை. நிலைமை எப்படி இருக்க ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் அங்கே அதிபராக வர முடியும் என்ற வாதத்தை வைப்பது வெறும் விதண்டாவாதமே.

ரோயல் யல் கல்லூரியில் அப்படி இல்லை சாகிரா கல்லூரி இருப்பது இல்லை என்று சொல்வது சாக்குப் போக்கு. நாம் அதையும் மாற்றப் போராட வேண்டும். ஆனால் அப்படி அங்கே ஒரு தமிழரும் அதிபராக வேண்டும் என்று போராடாமல் விடுவதற்குக் காரணமே இங்கே உள்ள பத்தைகளை மறைக்கத்தான்.

 இது அதிபர் நியமிப்பு பற்றிய என்னுடைய   எனது கருத்து

 ஆனால் இந்த சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம். இந்த விஷயத்தில் ஒருவரின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வது மற்றவர்களின் கடமை. உரிமைக்கும் பொறுப்புக்கும்/ கடமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும், சரஸ்வதி பூசை  நாட்களிலும் ஒரு கிறிஸ்தவ மாணவர் அது தன்னுடைய உரிமை மார் தட்டாமல்  அங்கே மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நன்று.

 இந்த சாப்பாடு சம்பந்தமான அறிவிப்பை கிறிஸ்தவ மாணவர்கள்  இலகுவாக கடந்து சென்று இருக்கலாம். இல்லை கட்டாயம் மச்சம் தான் வேண்டுமென்றால் அன்று ஒரு சைவ முட்டை சாப்பிட்டு விட்டு போகலாமே?

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புரியுதா யாழ்ப்பாணத்தில சாதி இல்லை எண்டு.. இப்ப எல்லாம் யார் சாதி பாக்கிறனுவள்.. 

நாங்கள் படிக்கேக்க சாதி மத ஏற்றத்தாழ்வு இருகோணும் நீங்கள் 20k கிட்ஸ் படிக்கேக்க எல்லாரும் ஒற்றுமையா படிப்பியளோ.. நல்ல நாயமா கிடக்கு இது.. அப்பிடி எல்லாம் விடேலாது.. 

  • கருத்துக்கள உறவுகள்

எனது உறவுகள் சிலர் ஆசிரியர்களாய் இருக்கினம்...அவர்கள் சொல்லும் கதையை கேட்டால் மண்டைக்குள்ளால் போகும் ...ஒரு சகோதரி அதிபர் தரத்தில் இருந்தும் விண்ணப்பிக்கவில்லை ...காரணம் கேட்டதற்கு தற்போது பாடசாலைகளில் சாதி, பல குழுக்களாய் பிரிந்து நான் பெரிசு ,நீ பெரிசு அடிபடுதல் ,ரவுடிசம்,அரசியல் தலையீடு போன்றவற்றால்  நிறைய தகுதி உள்ளவர்கள் ஒதுங்கி இருக்கிறார்கள்.
இங்குள்ளவர்களை கேட்டால் இவை எல்லாவற்றுக்கும், போதைப் பொருள் பாவனைக்கும் சிங்களவர் தான் காரணம் என்பார்கள் ...அப்படியானவர்களை கைது செய்தால்  தமிழர்களை அநியாயாய் கைது செய்கிறார்கள் என சப்பை கட்டுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

Privately funded Schools - தனியார் பாடசாலைகள். 

semi state funded schools - குறையாக அரசு மானியத்தில் இயங்கும் பாடசாலைகள்.

fully state funded schools - முற்றாக அரச மானியத்தில் இயங்கும் பாடசாலைகள்.

இப்படி 3 இலங்கையில் உண்டு.

ஊர்காவற்துறை பள்ளிக்கூடம் - 2ம் வகை. இதன் நிர்வாகத்தில் அரசுக்கு அடுத்து நிதி கொடுக்கும் திருச்சபைக்கும் பங்குண்டு. அதில் ஒன்று அதிபர் தேர்வு.

வேலணை மத்திய கல்லூரி - 3ம் வகை. இதில் அரசுக்கு மட்டுமே நிர்வாக அதிகாரம்.

2ம் வகை பள்ளியில் இருப்பது போல, 3ம் வகை பள்ளியில் இருக்க முடியாது. கூடாது.

ஏன்?

ஏன் என்றால் அரசு எல்லாருக்கும் பொதுவானது.  அரசு மதசார்பற்று இருக்க வேண்டும். ஆகவே சென்பற்றிரிக்ஸ் போல் வேலணை மத்திய கல்லூரி இருக்க முடியாது.

யாழ் இந்து? அது இப்போ முழுவதும் அரசமானிய கல்லூரி எனிலும், அதன் இந்து போர்ட் வரலாறை கருத்தில் எடுத்து அங்கும் இந்து ஒருவரையே போடுகிறனர்.

ஆகவே எல்லா பள்ளிகளும் ஒரே மாதிரியல்ல.

ரோயல் கல்லூரி/ டி எஸ் சேனநாயக்க - அங்கே தமிழர் அதிபராக வர முடியாமல் இருப்பது இனவாதம். ஏனெனெனில் அவையும் வேலணை மத்திய கல்லூரி போல், முழு அரச மானியத்தில் இயங்கும், என்றுமே மதம் சாராத கல்லூரி.

ஆனால் ஆனந்தா அல்லது நாலந்தாவில் வரமுடியாமல் போனால் அது இனவாதமல்ல - ஏனெனெனில் அவை யாழ் இந்து போல ஒரு குறித்த பாரம்பரியத்தில் வரும் கல்லூரிகள்.

ஆனால் இங்கே விசயம் தெரிந்தவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் - இங்கே மதத்தை விட சாதியே மேலானதா இருந்துள்ளதாக தெரிகிறது.

மத உணர்வுகளை சகிப்பது (tolerating religious sentiments) போல சாதிய சிந்தனையை சகிக்க வேண்டியதில்லை. 

இலங்கையில் எங்கே எனிலும் - சாதியால் ஒருவர் அதிபர் ஆக முடியாமல் போகுமாயின் - அதை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

ரோயல் யல் கல்லூரியில் அப்படி இல்லை சாகிரா கல்லூரி இருப்பது இல்லை என்று சொல்வது சாக்குப் போக்கு. நாம் அதையும் மாற்றப் போராட வேண்டும். ஆனால் அப்படி அங்கே ஒரு தமிழரும் அதிபராக வேண்டும் என்று போராடாமல் விடுவதற்குக் காரணமே இங்கே உள்ள பத்தைகளை மறைக்கத்தான்

👆🏼ஷொட்👍 (சாகிரா அல்ல அது முஸ்லிம் பாரம்பரியத்தில் வருவது).

2 hours ago, பகிடி said:

ஆனால் இந்த சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம். இந்த விஷயத்தில் ஒருவரின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வது மற்றவர்களின் கடமை. உரிமைக்கும் பொறுப்புக்கும்/ கடமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும், சரஸ்வதி பூசை  நாட்களிலும் ஒரு கிறிஸ்தவ மாணவர் அது தன்னுடைய உரிமை மார் தட்டாமல்  அங்கே மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நன்று.

 இந்த சாப்பாடு சம்பந்தமான அறிவிப்பை கிறிஸ்தவ மாணவர்கள்  இலகுவாக கடந்து சென்று இருக்கலாம். இல்லை கட்டாயம் மச்சம் தான் வேண்டுமென்றால் அன்று ஒரு சைவ முட்டை சாப்பிட்டு விட்டு போகலாமே?

இதனோடு உடன்பட முடியவில்லை.

இந்து/ பெளத்த (பாரம்பரியத்தில் வந்த) கல்லூரிகளில் மச்சத்கை தவிர்க்கலாம்.

இஸ்லாமிய (பாரம்பரியத்தில் வந்த)  கல்லூரிகளில் பன்றியை தவிர்க்கலாம்.

ஆனால் மதச்சார்பற்ற கல்லூரிகளில் இதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

குறிப்பாக @விசுகு அண்ணை காலத்தில் இருந்து மாட்டிறைச்சி ரோல்ஸ் இருந்த இடத்தில் இப்போ வேணும் என்றே ஒரு குழு இதை பிரச்சினையாக்குவதாகவே தெரிகிறது.

மாட்டிறைச்சி கூட இல்லை - ஒட்டு மொத்தமாக மச்சத்தையிம் தடை செய்வது மறைமுக மத/சாதிய ஒதுக்கலின் தொடர்ச்சியே.

தவிரவும் - சரஸ்வதி பூசை நாளில் மச்சம் வேண்டாம் என்ற அறிவிப்பை கொடுக்கலாம். முழு வருடமும் என்றில்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அப்ப, தீபாவளிக்கு ஆடு, வருசத்துக்கு கோழி... இப்ப அப்படியா? தினமும்... 

Pizza. KFC ???

சித்திரை வருசத்துக்கு கோழியா? எங்க? சோனக தெருவிலா? நாதம் பாய் 🤣.

தினமும் பீசா, கே எவ் சி சாப்பிட்டால் - கட்டிய பென்சனை எடுக்க முன்னம் போக வேண்டி வரும்🤣.

நவ்வடேய்ஸ் அய் ஈட்  ஒலிவ், அவகாடோ, கிரில்ட் மீட், பிஷ், வெஜ்  அண்ட் சச் லைக் ஒன்லி🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

சித்திரை வருசத்துக்கு கோழியா? எங்க? சோனக தெருவிலா? நாதம் பாய் 🤣.

தினமும் பீசா, கே எவ் சி சாப்பிட்டால் - கட்டிய பென்சனை எடுக்க முன்னம் போக வேண்டி வரும்🤣.

நவ்வடேய்ஸ் அய் ஈட்  ஒலிவ், அவகாடோ, கிரில்ட் மீட், பிஷ், வெஜ்  அண்ட் சச் லைக் ஒன்லி🤣🤣🤣

வருசப்பிறப்பு எண்டால், சித்திரையே, போஸ்?

ஜனவரி சேர்ப்பிலேயே? 😁

அப்ப ஆட்டு இறைச்சியும், வெந்தயமும்... 😁 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

Privately funded Schools - தனியார் பாடசாலைகள். 

semi state funded schools - குறையாக அரசு மானியத்தில் இயங்கும் பாடசாலைகள்.

fully state funded schools - முற்றாக அரச மானியத்தில் இயங்கும் பாடசாலைகள்.

இப்படி 3 இலங்கையில் உண்டு.

ஊர்காவற்துறை பள்ளிக்கூடம் - 2ம் வகை. இதன் நிர்வாகத்தில் அரசுக்கு அடுத்து நிதி கொடுக்கும் திருச்சபைக்கும் பங்குண்டு. அதில் ஒன்று அதிபர் தேர்வு.

வேலணை மத்திய கல்லூரி - 3ம் வகை. இதில் அரசுக்கு மட்டுமே நிர்வாக அதிகாரம்.

2ம் வகை பள்ளியில் இருப்பது போல, 3ம் வகை பள்ளியில் இருக்க முடியாது. கூடாது.

ஏன்?

ஏன் என்றால் அரசு எல்லாருக்கும் பொதுவானது.  அரசு மதசார்பற்று இருக்க வேண்டும். ஆகவே சென்பற்றிரிக்ஸ் போல் வேலணை மத்திய கல்லூரி இருக்க முடியாது.

யாழ் இந்து? அது இப்போ முழுவதும் அரசமானிய கல்லூரி எனிலும், அதன் இந்து போர்ட் வரலாறை கருத்தில் எடுத்து அங்கும் இந்து ஒருவரையே போடுகிறனர்.

ஆகவே எல்லா பள்ளிகளும் ஒரே மாதிரியல்ல.

ரோயல் கல்லூரி/ டி எஸ் சேனநாயக்க - அங்கே தமிழர் அதிபராக வர முடியாமல் இருப்பது இனவாதம். ஏனெனெனில் அவையும் வேலணை மத்திய கல்லூரி போல், முழு அரச மானியத்தில் இயங்கும், என்றுமே மதம் சாராத கல்லூரி.

ஆனால் ஆனந்தா அல்லது நாலந்தாவில் வரமுடியாமல் போனால் அது இனவாதமல்ல - ஏனெனெனில் அவை யாழ் இந்து போல ஒரு குறித்த பாரம்பரியத்தில் வரும் கல்லூரிகள்.

ஆனால் இங்கே விசயம் தெரிந்தவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் - இங்கே மதத்தை விட சாதியே மேலானதா இருந்துள்ளதாக தெரிகிறது.

மத உணர்வுகளை சகிப்பது (tolerating religious sentiments) போல சாதிய சிந்தனையை சகிக்க வேண்டியதில்லை. 

இலங்கையில் எங்கே எனிலும் - சாதியால் ஒருவர் அதிபர் ஆக முடியாமல் போகுமாயின் - அதை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும்.

ஒரு தரவுக்காக சொல்கிறேன்

எனது ஆரம்ப பாடசாலையான புங்குடுதீவு மகாவித்தியாலயம் ( இன்று மத்திய கல்லூரி) நான் படித்த காலத்தில் சைவ வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். போர்க்காலத்தில் வசதி படைத்த சைவர்கள் பறந்து சென்று விட வசதி குறைந்த கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையானதால் அவர்களது வழிபாட்டுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. பக்கத்தில் சேர்ச் ஒன்று இருப்பதால் கிறிஸ்தவர்களுக்கு அது வசதியாகி விட போதல் வருதல் அதிகரிக்க அது பிரச்சினை ஆனது. தற்போது ஒரு கிறிஸ்தவர் அதிபராக வந்தமையால் அது நெருப்பாகி அந்தாளின் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று.....??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

இவை கொஞ்சம் சிக்கலான பிரச்சனைகள்தான்.

லாசப்பலில், வெள்பிளி, ஈஸ்ட்ஹாமில் நாங்கள் உரையே உருமாற்றியது போல ஒரு நிகழ்வுதான் இது.

இது அங்கே இருப்பவருக்கு விளங்காவிடினும், வந்தேறிகளாக வந்து, ஏரியா, ஏரியாவாக தமிழ் மயப்படுத்திய புலம்பெயர் சமூகமாவது இதை சுமூகமாக அணுக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

 ஆனால் இந்த சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம். இந்த விஷயத்தில் ஒருவரின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வது மற்றவர்களின் கடமை. உரிமைக்கும் பொறுப்புக்கும்/ கடமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும், சரஸ்வதி பூசை  நாட்களிலும் ஒரு கிறிஸ்தவ மாணவர் அது தன்னுடைய உரிமை மார் தட்டாமல்  அங்கே மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நன்று.

 இந்த சாப்பாடு சம்பந்தமான அறிவிப்பை கிறிஸ்தவ மாணவர்கள்  இலகுவாக கடந்து சென்று இருக்கலாம். இல்லை கட்டாயம் மச்சம் தான் வேண்டுமென்றால் அன்று ஒரு சைவ முட்டை சாப்பிட்டு விட்டு போகலாமே?

இது பிரச்சினைக்குரியது என்பது என் கருத்து.

இப்படி, ஒருவர் சம்பந்தப் படாத மத அனுட்டாங்களை (உ+ம் - மாமிசத் தவிர்ப்பு) கடைப்பிடிக்கும் படி பொது நிறுவனங்கள் விதி இயற்றுவதை அனுமதிக்கக் கூடாது. பெயரிலேயே இருப்பது போல, பொது நிறுவனங்கள் எல்லாருக்கும் பொதுவானவை, இங்கே ஒரு குழு - அது பெரும்பான்மையாக இருந்தாலும் கூட- தன் அனுட்டானங்களை விதிமுறைகள் மூலம் அமல்படுத்த அனுமதித்தால், எங்கே எல்லைக் கோட்டை வரைவீர்கள்? சரஸ்வதி பூசை நாட்களில் மட்டுமன்றி ஏனைய இந்து விரத நாட்களிலும் மாமிசத் தவிர்ப்பு கோரும் நிலை வரும் போது கோடு கீறுவீர்களா?

இன்னொரு முக்கியமான கேள்வி:  இந்தப் பாடசாலையைப் பொறுத்தவரை ஏன் இப்போது இது அவசியம்? இவ்வளவு காலமும் பக்கத்தில் இருப்பவன் மச்சம் சாப்பிடும் போது மணக்கவில்லையா?  அல்லது இது வரை மச்சம் காரணமாக உள்ளே வந்து மாணவர்களைக் கடித்த நாய்கள் ஊரிலேயே இருக்கவில்லையா😂? இப்போது ஏன்?

என் ஊகம், இங்கே நடப்பது, அமெரிக்காவில் சொல்வது போல  testing the water அல்லது pushing the envelop பாணி வேலை !

இதையெல்லாம், சகித்துக் கடந்து போனால், அவர்களும் இது போன்ற பொது நிறுவனங்களை மத/சாதி மயப்படுத்தும் காரியங்களை செய்து கொண்டே போவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

இப்படி, ஒருவர் சம்பந்தப் படாத மத அனுட்டாங்களை (உ+ம் - மாமிசத் தவிர்ப்பு) கடைப்பிடிக்கும் படி பொது நிறுவனங்கள் விதி இயற்றுவதை அனுமதிக்கக் கூடாது. பெயரிலேயே இருப்பது போல, பொது நிறுவனங்கள் எல்லாருக்கும் பொதுவானவை, இங்கே ஒரு குழு - அது பெரும்பான்மையாக இருந்தாலும் கூட- தன் அனுட்டானங்களை விதிமுறைகள் மூலம் அமல்படுத்த அனுமதித்தால், எங்கே எல்லைக் கோட்டை வரைவீர்கள்? சரஸ்வதி பூசை நாட்களில் மட்டுமன்றி ஏனைய இந்து விரத நாட்களிலும் மாமிசத் தவிர்ப்பு கோரும் நிலை வரும் போது கோடு கீறுவீர்களா?

நியாயமான கேள்வி

4 minutes ago, Justin said:

அல்லது இது வரை மச்சம் காரணமாக உள்ளே வந்து மாணவர்களைக் கடித்த நாய்கள் ஊரிலேயே இருக்கவில்லையா😂?

பகிடி என்னவெண்டால்…ஊரில் அதிகம் நாய் படுத்து கிடப்பது எண்டால் அது சைவச்சாப்பாடு மட்டுமே புழங்கும் கோயில் வெளிவீதியில்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஒரு தரவுக்காக சொல்கிறேன்

எனது ஆரம்ப பாடசாலையான புங்குடுதீவு மகாவித்தியாலயம் ( இன்று மத்திய கல்லூரி) நான் படித்த காலத்தில் சைவ வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். போர்க்காலத்தில் வசதி படைத்த சைவர்கள் பறந்து சென்று விட வசதி குறைந்த கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையானதால் அவர்களது வழிபாட்டுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. பக்கத்தில் சேர்ச் ஒன்று இருப்பதால் கிறிஸ்தவர்களுக்கு அது வசதியாகி விட போதல் வருதல் அதிகரிக்க அது பிரச்சினை ஆனது. தற்போது ஒரு கிறிஸ்தவர் அதிபராக வந்தமையால் அது நெருப்பாகி அந்தாளின் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று.....??

பாடசாலை மச்சம் கொண்டு வராதீங்க எண்டு சொல்ல, அதை பத்தி மட்டுமே கதைக்க முனையாமல், அதிபர் கிறிஸ்தவர், சாதீயம்.... என்று திரியை வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போக முனைந்ததால், தான், எனக்கும், ஒருவருக்கும் விவாதம் நடந்தது.

பாடசாலை மாணவருக்கு சொன்ன விடயத்தினுள் மட்டுமே கருத்தாடினால், பிரச்சணை இல்லையே.

அதிபர் கிறித்தவராயின், சைவ சாப்பாடு மட்டுமா, போடு மச்சத்தினை என்று சொன்னால் தானே, வில்லங்கம். இது அப்படி இல்லையே...

அதிபர், தெரிவு, சாதியம் குறித்து தனி திரி திறந்து, விவாதித்தால், பொருத்தமாக இருக்கும். இது வேறு தலைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

என் ஊகம், இங்கே நடப்பது, அமெரிக்காவில் சொல்வது போல  testing the water அல்லது pushing the envelop பாணி வேலை !

நீங்கள் சொல்வது சரி போலத்தான் படுகிறது. நான் அறிந்த வரைக்கும் இந்த பிரச்சனையை கிளறிக்கொண்டு இருப்பவர்களுக்கு சொறிந்து விடுபவர்களில் ஒருவர் உதயன் சரவணபவன் 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

பாடசாலை மச்சம் கொண்டு வராதீங்க எண்டு சொல்ல, அதை பத்தி மட்டுமே கதைக்க முனையாமல், அதிபர் கிறிஸ்தவர், சாதீயம்.... என்று திரியை வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போக முனைந்ததால், தான், எனக்கும், ஒருவருக்கும் விவாதம் நடந்தது.

பாடசாலை மாணவருக்கு சொன்ன விடயத்தினுள் மட்டுமே கருத்தாடினால், பிரச்சணை இல்லையே.

அதிபர் கிறித்தவராயின், சைவ சாப்பாடு மட்டுமா, போடு மச்சத்தினை என்று சொன்னால் தானே, வில்லங்கம். இது அப்படி இல்லையே...

அதிபர், தெரிவு, சாதியம் குறித்து தனி திரி திறந்து, விவாதித்தால், பொருத்தமாக இருக்கும். இது வேறு தலைப்பு.

என்ன நாதம் இது…

இந்த பிரச்சினையே…சாதிய, சமய பிண்ணனியில் அமைந்த முன்னைய பிரசைனையின் தொடர்ச்சி என உறவுகள் எல்லாம் பொறுப்பாக கருத்தாடிகொண்டிருக்க இடையில் புகுந்து நாய், பூனை, நரி எண்டு ஜோக்கடித்து விட்டு, இப்ப தனி திரி திறக்க சொல்லுறியள்.

Taking out of context ற்கு ஒரு அளவே இல்லையா!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

பாடசாலை மச்சம் கொண்டு வராதீங்க எண்டு சொல்ல, அதை பத்தி மட்டுமே கதைக்க முனையாமல், அதிபர் கிறிஸ்தவர், சாதீயம்.... என்று திரியை வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போக முனைந்ததால், தான், எனக்கும், ஒருவருக்கும் விவாதம் நடந்தது.

நானும் இதே கருத்தையே பதிவு செய்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

என்ன நாதம் இது…

இந்த பிரச்சினையே…சாதிய, சமய பிண்ணனியில் அமைந்த முன்னைய பிரசைனையின் தொடர்ச்சி என உறவுகள் எல்லாம் பொறுப்பாக கருத்தாடிகொண்டிருக்க இடையில் புகுந்து நாய், பூனை, நரி எண்டு ஜோக்கடித்து விட்டு, இப்ப தனி திரி திறக்க சொல்லுறியள்.

Taking out of context ற்கு ஒரு அளவே இல்லையா!

காலையில் இருந்து ரொம்பத்தான் குழம்பிப் போய் இருக்கிறீர்கள்.

ஓணாண்டியார் சொன்னமாதிரி... பத்திரகாளி அடியோ?

இன்று போய், ரெஸ்ட் எடுத்து, நாளை வாருங்கோ... 🤣😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ஓணாண்டியார் சொன்னமாதிரி... பத்திரகாளி அடியோ?

🤣 நான் கனவில எப்பாலும் ஒருக்கா வாங்கிறது, @பாலபத்ர ஓணாண்டி  நிஜத்தில டெய்லி சாப்பாட்டுக்கு பின் மூணு வாட்டி🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலனைக்கும் kayts க்கும் இடையில் இருந்ததால் வேலனை சென்றலில் சேர்த்த  நாலும் கரையேறாததால், என்னை பின்னால் இழுத்துக்கொண்டு போய் Anthony ல் சேர்ந்துவிட்டார்.நான்  படித்த காலத்தில் ரெட்ணகிளி என்ற குடும்பஸ்தரே அதிபராக இருந்தார். 

அந்தாளில செரியான கோபம் எனக்கு  கடைசிவரை சரஸ்வதி பூசை செய்யவிடவேயில்லை 

புக்கை,வடை,மோதகம்  ஏன் கிடைக்க வேண்டிய  ஒரு நாள் லீவைக்கூட அந்தாள் கெடுத்துப்போட்டுது. 😪

  • கருத்துக்கள உறவுகள்

வேலணை மத்திய கல்லூரியின் பழைய அதிபர் ஓய்வு பெறப் போகிறார் என்றதும் அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டது.தரம் 1 தகுதியான ஒருவரைத்தவிர வேறு ஒருவரும் விண்ணப்பிக்க வில்லை. அவர் உண்மையில் ஊருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் விண்ணப்பித்தார். அவர் வேலைணையின் அயற் கிராமத்தைச் சேர்ந்தவர்.அவர் சென் அன்ரனிசில் கல்விகற்ற போதிலும் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுடன் நல்ல தொடர்புகளைப் பேணிவந்தவர்.அவரது மனைவியும் பிள்ளைகளும் சைவ சமய பாரம்பரியத்தையே கடைப்பிடிக்கின்றனர்..அந்தப்பாடசாலையில் படித்த பல சைவர்கள் தகுதியிருந்தும் விண்ணப்பிக்கவில்வல.நகரப்;பாடசாலைகளிலேயே அதிபராக இருக்கின்றனர். ஏன் யாழ் இந்துவின் அதிபர் கூட வேலணையின் அயற்கிராமமாகிய புளியங்கூடலைச்சேர்ந்தவர். மேலும் வேலைணை மத்திய கல்லூரியில் ஓரு சிவன் கோவிலும் உண்டு. திருக்கேதீஸ்வரத்தின் திருவிழாக்களில் ஒன்றை வேலணை மத்திய கல்லூரியே செய்து வருகின்றது.பழைய அதிபர் ஓய்வு பெற்றதும் தறகாலிகமாக ஒரு ஆசிரியர் அதிபர் பொறுப்பை ஏற்று நடத்தினார். அவர் தரம்1 தகுதிவாய்ந்தவர். அல்ல. ஆனால் அவரைத் தொடர்ந்தும் அதிபராக்க வேண்டும் என்று எண்ணிய சிலர் மதப்பிரச்சினைய காரணமாக்கி எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டத்தில் பங்கு கொண்டோரும் தெரிந்தவர்கள் அழைக்கின்றார்கள் என்று முகத்துக்காக போய் நின்றார்களே ஒழிய விருப்பத்துடன் போகவில்லை. பெரும்பாலானவர்கள் இந்த எதிர்ப்பை விரும்பவில்லை. மேலும்  1990 பாரிய இடப்பெயர்வுக்குப் பின்பெருமபாலான சைவர்கள் நகர்ப்புறப் பாடசாலைகளுக்குப் போய்விட வசதி குறைந்த வசவர்களும் கணிசமான கிறிஜ்தவப்பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்ந்தார்கள். அதைச்சிலர் மதப்பிரச்சினையாக்கினார்கள். ஆனால் இறுதியில் பெரும்பாலான மக்கள் ஆதரவுடன் அந்தக் கிறிஸ்தவ அதிபர் திருநீற்றுக் குறியுடன் பதவியேற்றார்.சென் அன்ரனிஸில் கிறிஸ்தவர்தான் அதிபராகலாம் என்று யாப்பு அல்லது எழுதப்படாத விதி இருக்கலாம்.அதே போல்யாழ் இந்துவுக்கும் இருக்கலாம்.  சேென் அன்ரனிசில் வேலணை மத்திய கல்லூரியிலேயே அரசரட்ணம் என்ற கிறிஸ்தவர் அதிபராக இருந்த வரலாறு இருக்கிறது.ஆகவே அங்கே நடந்தது வேறுவிதமான அரசியல். சென்ற் அன்ரனிசில் படித்த தனிநாயகம் அடிகளார்தான் சமயத்தை விட தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகத்தமிழராய்ச்சி மாநாட்டுக்கு அடித்தளம் இட்டவர் என்பதும் குறிப்பிட வேண்டியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.