Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, suvy said:

நல்லா இருக்கு கதை......இரண்டு தோனியில் கால் வைத்து பயணம் செய்யலாம் என்று நினைத்திருக்க ஜஸ்ட் மிஸ்ஸாயிட்டுது.......!  😂

வருகைக்கு நன்றி அண்ணா

9 hours ago, Kavi arunasalam said:

IMG-4647.jpg

தலைப்பு நல்லாத்தான் இருக்கு அட்டைபடம் உட்பட. ஆனாலும் என்னை ஓடுகாலி எண்டு மறைமுகமா நீங்கள் திட்டுரமாதிரி இருக்கு😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னை ஓடுகாலி எண்டு மறைமுகமா நீங்கள் திட்டுரமாதிரி இருக்கு😀

என்ன இப்படி சொல்லிட்டீங்கள். வாத்தியார் மகளை அப்படிச் சொல்வேனா? கதையின் நாயகியைத்தான் சொன்னேன். உங்கள் கதையின் நாயகி அப்படி ஒரு கரெக்டர். “சுயநலம்", “அவள் அப்படித்தான்” என்றெல்லாம் தலைப்பிடலாம் என்று யோசித்தேன். திடீரென “ஓடுகாலி” புகுந்து விட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரவி தயாளன் இல்லை என்றால் என்ன இன்னொண்டு மாட்டுப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, Kavi arunasalam said:

என்ன இப்படி சொல்லிட்டீங்கள். வாத்தியார் மகளை அப்படிச் சொல்வேனா? கதையின் நாயகியைத்தான் சொன்னேன். உங்கள் கதையின் நாயகி அப்படி ஒரு கரெக்டர். “சுயநலம்", “அவள் அப்படித்தான்” என்றெல்லாம் தலைப்பிடலாம் என்று யோசித்தேன். திடீரென “ஓடுகாலி” புகுந்து விட்டது.  

நன்றி அண்ணா 😀

10 hours ago, P.S.பிரபா said:

“நானும் பெண்தான்.. “

ரவியின் கொடுமைகளிலிருந்து பிரிந்தாலும் ஊராரின் ஏளனப் பார்வையிலிருந்து தப்பிக்கவும், தாயிடமோ அல்லது சகோதரரிடமோ  மனம் விட்டு பேசி எனது உணர்வுகளை விளங்கப்படுத்த முடியாலும், தயாளனின் கடந்த கால வாழ்க்கையினை அறிந்து ஏற்பட்ட அனுதாபத்தினாலும் எடுத்தது ஒரு முடிவு.. ஏனெனில் நானும் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் உடைய பெண்தான். 

மகனின் போக்கும்..பின் குற்றவுணர்வாலும் தயாளனிடம் கதைத்து முடிவு எடுக்கத் தெரியாத நிலையும் உரிய ஆலோசனையை பெற முறையான உதவியை நாடாமல் வாழ்க்கையை இழந்தது.. இந்த மாதிரி நிலை ஒரு ஆணுக்கும் வரலாம். 

உணர்வுகள் என்பது ஆண் பெண் இருவருக்குமே உள்ளது. பெண் என்பதற்காக தவறான முடிவுகளை எடுக்ககூடாது என எதிர்பார்க்க முடியுமா?? இல்லைத்தானே.. 

“நானும் பெண்தான்” என்ற தலைப்புடன் கதை வந்தால் கட்டாயம் பெண்ணில் அனுதாபத்தை வரவழைக்கும் கதையாக அல்லது பெண் என்பவள் எப்பொழுதும் தவறே செய்யக்கூடாது என்ற எண்ணத்தை தரும் கதையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பது எனது எண்ணம்.

@மெசொபொத்தேமியா சுமேரியர்சுமோ அக்கா!! ஆகையால் நானும் பெண்தான் தலைப்பும் பிரச்சனையாக இல்லை. 

மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

6 hours ago, கிருபன் said:

ஒற்றைப் பார்வையில் எழுதப்பட்டதால் கதை திருகும் என்று நினைத்தேன்! அப்படித்தான் வந்திருக்கு!

மாட்டை மட்டும் அவுக்காமல் கண்டுகளையும் சேர்த்து அவிட்டுக் கொண்டால் வரும் சிக்கலை கதை சொல்கின்றது! 

“பெண்மடி” என்று தலைப்பை வைக்கலாம்😃

கருத்துக்கும் தலைப்புக்கும் நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/10/2023 at 14:24, ஈழப்பிரியன் said:

தயாளனை சந்தைக்குள் சந்தித்த போதே ஏதோ பொறிபறக்க போகுது என்று எண்ணினேன்.

இப்போதுள்ள சந்ததிக்கு இவைபற்றி நிறையவே புரிந்துணர்வு உள்ளது.

பழசுகள் தான் இன்னமும் ஊரையே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் நாட்டில் உள்ள சந்ததிக்கு நிறைய புரிந்துணர்வு வந்தாலும் அங்கிருந்து வரும்பளர் உள்ளபடியேதான் இருக்கின்றனர்.

19 minutes ago, ஈழப்பிரியன் said:

ரவி தயாளன் இல்லை என்றால் என்ன இன்னொண்டு மாட்டுப்படும்.

அந்த அளவு போகமாட்டார்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையை வாசித்து முடித்தேன்...உண்மைக் கதை போல் தெரிகிறது ...தலைப்புக்கும் ,கதைக்கும் சம்மந்தம் இல்லை ...தலைப்பு அந்த பெண்ணுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது போல் உள்ளது ..."அலை பாயும் பேதை மனம் " அப்படி ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ரதி said:

கதையை வாசித்து முடித்தேன்...உண்மைக் கதை போல் தெரிகிறது ...தலைப்புக்கும் ,கதைக்கும் சம்மந்தம் இல்லை ...தலைப்பு அந்த பெண்ணுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பது போல் உள்ளது ..."அலை பாயும் பேதை மனம் " அப்படி ஏதாவது தலைப்பு வைத்திருக்கலாம் 
 
வருகைக்கும் கருத்துக்கும் தலைப்புக்கும் நன்றி ரதி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சமும் எதிர்பாராத கதை முடிவு…!

மனம் ஒரு குரங்கு என்று பெயர் வைத்திருக்கலாம்..! எனினும் ஒரு பெண்ணின் மனதில் இந்தக் கதையின் முடிவு உருவானதென்பது, உங்கள் விரிந்த மனதைப் பறை சாற்றுகின்றது என்றே கருதுகின்றேன்! வாழ்த்துக்கள், சுமே…!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புங்கையூரன் said:

கொஞ்சமும் எதிர்பாராத கதை முடிவு…!

மனம் ஒரு குரங்கு என்று பெயர் வைத்திருக்கலாம்..! எனினும் ஒரு பெண்ணின் மனதில் இந்தக் கதையின் முடிவு உருவானதென்பது, உங்கள் விரிந்த மனதைப் பறை சாற்றுகின்றது என்றே கருதுகின்றேன்! வாழ்த்துக்கள், சுமே…!

நன்றி கருத்துக்கும் வருகைக்கும் தலைப்புக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கதை.  இரண்டாம் பகம் வசிக்கும் போதே கதை இபப்டித்தான் செல்கிறது என்று ஊகிக்க முடிந்தாலும் முடிவை வாசிக்கும் ஆர்வம் இருந்தது.  வாழ்த்துக்கள்.
தலைப்பில் உடன்பாடு இல்லை.  பெண்கள் என்றால் இப்படித்த்தான் /பொதுவானது என்ற தோற்றப்பாட்டை உருவாகிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, Sabesh said:

நல்ல கதை.  இரண்டாம் பகம் வசிக்கும் போதே கதை இபப்டித்தான் செல்கிறது என்று ஊகிக்க முடிந்தாலும் முடிவை வாசிக்கும் ஆர்வம் இருந்தது.  வாழ்த்துக்கள்.
தலைப்பில் உடன்பாடு இல்லை.  பெண்கள் என்றால் இப்படித்த்தான் /பொதுவானது என்ற தோற்றப்பாட்டை உருவாகிக்கிறது

நன்றி சபேஸ்  வருகைக்கும் கருத்துக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடந்த கதை போல இருக்கே?!
ஒருவரை திருமணம் செய்து வெளிநாடு சென்ற பின் விவாகரத்துச் செய்து காதலனை அங்கே அழைத்த கதைகள் கேள்விப்பட்டுள்ளேன். இது புதுசா இருக்கே!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/10/2023 at 17:20, ஏராளன் said:

நடந்த கதை போல இருக்கே?!
ஒருவரை திருமணம் செய்து வெளிநாடு சென்ற பின் விவாகரத்துச் செய்து காதலனை அங்கே அழைத்த கதைகள் கேள்விப்பட்டுள்ளேன். இது புதுசா இருக்கே!!

வெளிநாட்டில இப்பிடி கேள்விப்படாததெல்லாம் கனக்க நடக்குது. வருகைக்கு நன்றி. 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல ஏதிர்பாக்காத திருப்பமுள்ள கதை👍

இதை சர்வசாதரணமாக தாய்லாந்து இந்தோனேசியா பெண்கள் செய்கின்றார்கள் 😎

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/11/2023 at 11:15, உடையார் said:

நல்ல ஏதிர்பாக்காத திருப்பமுள்ள கதை👍

இதை சர்வசாதரணமாக தாய்லாந்து இந்தோனேசியா பெண்கள் செய்கின்றார்கள் 😎

ஓ மற்றநாட்டவரும் இப்படித்தானா ??? வருகைக்கு நன்றி உடையார்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.