Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தினித்துக்கு ஆதரவு தெரிவித்து நியூயோர்க் சிற்றியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் ஆர்ப்பாட்டம்.

  • Replies 1.5k
  • Views 158.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

பாலஸ்தினித்துக்கு ஆதரவு தெரிவித்து நியூயோர்க் சிற்றியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் ஆர்ப்பாட்டம்.

இப்ப‌டியான‌ ஆர்பாட்ட‌ம் ஒட்டு மொத்த‌ உல‌கெங்கும் ந‌ட‌க்கனும்

பினம் தின்னி நெத்தினியா போர் குற்றவாளி என்று அறிவிக்க‌னும்

இஸ்ரேல் அதி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு ப‌ட்டிய‌லில் இணைக்க‌னும்...............

வெல்ல‌ட்டும் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் அகிம்சை போராட்ட‌ம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பாலஸ்தினித்துக்கு ஆதரவு தெரிவித்து நியூயோர்க் சிற்றியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் ஆர்ப்பாட்டம்.

நாங்களும் இதையும் இதைவிட மேலும் செய்தோம். ஆனால் பாலஸ்தீனம் கூட அதை மதிக்கவில்லை. ..😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

நாங்களும் இதையும் இதைவிட மேலும் செய்தோம். ஆனால் பாலஸ்தீனம் கூட அதை மதிக்கவில்லை. ..😭

காரணம்..... இந்தியா. 
நாம் என்னதான் இந்தியாவை கரிச்சு கொட்டினாலும்......
சர்வ தேசத்தில் இந்தியாவை எதிர்க்க எந்த நாடும் தயாரில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+

காமாஸ் - மருத்துவமனை வளாகத்திற்குள் பதுக்கிவைத்திருந்த படைக்கலன்கள் வெடித்துச் சிதறும் காட்சி.

இஸ்ரேலின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து இவ்வாறு தொடர் வெடிப்புகள் தொடர்ந்து ஒரே இடத்திலிருந்து எழுந்தவண்ணம் உள்ளன.

வழக்கமாக மசூதிக்குள் தான் முஸ்லிம்கள் ஆயுதங்களை பதுக்கிவைத்திருப்பதுண்டு. ஆனால் மருத்துவமனைக்குள்ளையுமா?!

அன்று இஸ்ரேல் உள்ளே வைத்திருக்கிறங்கள் என்று படம் போட்டுக் காட்டிய போது நான் நம்பவில்லை. ஆனால், இன்று.....

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

வழக்கமாக மசூதிக்குள் தான் முஸ்லிம்கள் ஆயுதங்களை பதுக்கிவைத்திருப்பதுண்டு. ஆனால் மருத்துவமனைக்குள்ளையுமா?!

 இலங்கையிலும் இப்படி சொல்லித்தான் தேவாலயங்களிலும் அனாதை இல்லங்களிலும் ஆலயங்களிலும் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது. அந்த வலி என்னைப்போன்றவர்களுக்கு இன்றும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்+
9 minutes ago, குமாரசாமி said:

 இலங்கையிலும் இப்படி சொல்லித்தான் தேவாலயங்களிலும் அனாதை இல்லங்களிலும் ஆலயங்களிலும் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது. அந்த வலி என்னைப்போன்றவர்களுக்கு இன்றும் உண்டு.

ஐயனே,
ஆனால், அங்கே உள்ளுக்குள் ஒன்றும் இல்லையே... இங்கே கண்ணுக்கு முன்னாலையே ஆதாரம் இருந்தும் அதை ஏற்க மறுப்பது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

ஒவ்வொரு நாளும்4 மணித்தியாலம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.(மக்கள் வெளியேறுவதற்காம்)

நீங்கள் சொல்லுவது சரி. ஆனால் பைடனின் முதல் கோரிக்கை மூன்று நாடகளுடன் பணய கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும் இருந்தது. எப்படி இருந்தாலும் பொது மக்கள் வெளியேறுவதட்கு இது ஒரு வகையில் உதவியாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 இலங்கையிலும் இப்படி சொல்லித்தான் தேவாலயங்களிலும் அனாதை இல்லங்களிலும் ஆலயங்களிலும் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது. அந்த வலி என்னைப்போன்றவர்களுக்கு இன்றும் உண்டு.

அப்படிச்சொல்லி வீசவில்லை. தவறுதலாக வீசி விட்டொம் என்றுதான் கூறினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தை இஸ்ரேலுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்த‌து என்று ப‌ல‌ வ‌ருட‌த்துகு முத‌லே வெளிப்ப‌டையாய் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று...............

அணுகுண்டு இருந்த‌ ப‌டியால் தானே அணுகுண்டு ப‌ற்றி இஸ்ரேல் அமைச்ச‌ர் ஒருவ‌ர் வார்த்தைய‌ வெளியில் விட்ட‌வ‌ர்🙈

ஐயோ ஐயோ . யார் சொன்னது இஸ்ரேவேலிடம் அணு ஆயுதம் இல்லை என்று. முழு உலகத்தையும் அழிக்கும் அளவுக்கு அவர்களிடம் அணு ஆயுதம் உண்டு. அரபு நாடுகள் எல்லோருக்கும் அது தெரியும். அணுகுண்டு மட்டுமல்ல எல்லா ஆயுதங்களும் அமெரிக்காவில் பரீட்சிக்கப்பட்டுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. இது ஒன்றும் ரகசியம் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸுடனான மோதல்களில் மனிதாபிமான இடைநிறுத்தம் : இஸ்ரேல் அறிவிப்பு – பைடன் வரவேற்பு

Published By: RAJEEBAN    10 NOV, 2023 | 06:18 AM

image

ஹமாசுடனான மோதல்களின் போது மனிதாபிமான இடைநிறுத்தத்தை கடைப்பிடிப்பது என்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

இஸ்ரேலின் இந்த அறிவிப்பை சரியான திசையிலான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் நான் இஸ்ரேலிய தலைவர்களுடன் பேசிய பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை முதல் மோதலில் இருந்து மக்கள் வெளியேற அனுமதிப்பதற்கான இரண்டு மனிதாபிமான பாதைகள் காணப்படும் என பைடன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்காக மூலோபாய இடைநிறுத்தங்களை கடைப்பிடிக்கப்போவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் இது நிச்சயமாக யுத்தநிறுத்தமில்லை என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/168955

  • கருத்துக்கள உறவுகள்

401089914_726943286137313_55669505626193

401030819_726945386137103_66071610077232

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: அமெரிக்கா சொன்ன தகவலும்; இஸ்ரேல் பிரதமரின் விளக்கமும்

காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தரப்பில், மனிதாபிமான அடிப்படையில் வடக்கு காசாவில் அன்றாடம் 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பைடன், குறைந்தது மூன்று நாட்களுக்கு மேலாவது போர் நிறுத்தம் மேற்கொள்ளும்படி இஸ்ரேலிடம் வேண்டியுள்ளதாகக் கூறினார். அதேவேளையில் “இஸ்ரேல் நிச்சயமாக முழுமையான போர் நிறுத்தத்தை இபோதைக்கு மேற்கொள்ள வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “போர் நிறுத்தம் என்பது ஆங்காங்கே மேற்கொள்ளப்படும். ஆனால் இது மீண்டும் மீண்டும் நடக்குமா எனத் தெரியவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நாங்கள் போர் மேற்கொண்டுள்ளோம். ஆகையால் வடக்கு காசாவில் உள்ள பொது மக்கள் பத்திரமாக வெளியேறும் வகையில் சில மணி நேரங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்படும். அதுவும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே. பொது மக்களின் நலன் கருதி இது மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி ஒருமாத காலம் ஆன நிலையில் காசா உருக்குலைந்துள்ளது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அன்றாடம் 4 மணி நேரம் காசாவில் முழுமையாக தாக்குதல் நிறுத்தப்படும். இது அங்குள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரவும், நிவாரண உதவிகள் முகாம்களுக்கு சென்று சேரவும் உதவியாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தரப்பில் இதுவர 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 239 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/280840

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

காரணம்..... இந்தியா. 
நாம் என்னதான் இந்தியாவை கரிச்சு கொட்டினாலும்......
சர்வ தேசத்தில் இந்தியாவை எதிர்க்க எந்த நாடும் தயாரில்லை.

அதாவது பாலஸ்தீனத்திற்கு எம்மை விட இந்தியா தேவை 

அதாவது சுயநலம்.

அப்படி பார்த்தால் நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்க ஆயிரம் மடங்கு காரணம் மற்றும் சந்தர்ப்பம் அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் யுத்தம் விரிவடைவது தவிர்க்க முடியாத விடயமாகியுள்ளது - ஈரான்

10 NOV, 2023 | 03:27 PM
image

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசாவில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்பதால் மோதல் தவிர்க்க முடியாதபடி விரிவடையும் என ஈரான்  எச்சரித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கட்டார் வெளிவிவகார அமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் தீவிரதன்மை காரணமாக போர் விரிவடைவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என  ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்டோலஹியான் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169000

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

விரிவடையும் என இவர் எதனை  கருதுகிறார் என புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

ஐயோ ஐயோ . யார் சொன்னது இஸ்ரேவேலிடம் அணு ஆயுதம் இல்லை என்று. முழு உலகத்தையும் அழிக்கும் அளவுக்கு அவர்களிடம் அணு ஆயுதம் உண்டு. அரபு நாடுகள் எல்லோருக்கும் அது தெரியும். அணுகுண்டு மட்டுமல்ல எல்லா ஆயுதங்களும் அமெரிக்காவில் பரீட்சிக்கப்பட்டுதான் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. இது ஒன்றும் ரகசியம் இல்லை. 

பெரிய‌வ‌ரே
அது உங்க‌ளுக்கான‌ ப‌தில் கிடையாது

நெச்சி ஜ‌யாவுக்கான‌ ப‌தில்
அவ‌ர் தான் இணைப்பை இணைத்தார்

அணுகுண்டு அமெரிக்காதான் ம‌றைமுக‌மாய் இஸ்ரேலுக்கு கொடுத்த‌து என்று ப‌ல‌ வருட‌த்துக்கு முத‌லே என் காதால் கேட்டு இருக்கிறேன்

பாக்கிஸ்தான் வைத்து இருக்கும்  அணுகுண்டு மீதான‌ ச‌ந்தேக‌ம் இன்றும் ப‌ல‌ருக்கும் உண்டு..............

பாக்கிஸ்தானுக்கு ப‌க்க‌த்து நாடானா ஈரான் அணுகுண்டு செய்ய‌ தொட‌ங்க‌ அமெரிக்கா க‌டும் எதிர்ப்பு தெரிவித்த‌து.............ஆனால் இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈரான் அணுகுண்டை ச‌ர்வ‌தேச‌த்துக்கு தெரியாம‌ வைத்து இருக்கு..............பாக்கிஸ்தானை விட‌ ஈரான் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ந்த‌ நாடு...........ஈரானிய‌ர் அறிவான‌வ‌ர்க‌ள்................

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

 இலங்கையிலும் இப்படி சொல்லித்தான் தேவாலயங்களிலும் அனாதை இல்லங்களிலும் ஆலயங்களிலும் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது. அந்த வலி என்னைப்போன்றவர்களுக்கு இன்றும் உண்டு.

நவாலி  தேவாலயம் மீது 1995ம் ஆண்டு குண்டு போட்டு தேவால‌ய‌த்துக்கையே நூறுக்கும் மேல் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ள் தொட்டு சிறுவ‌ர்க‌ள் சிறுமிக‌ள் ப‌லி...........அந்த‌ தேவ‌லைய‌த்துக்கை ஆயுத‌ம் தாங்கிய‌ போராளிக‌ள் யாரும் இல்லை

ந‌வாலி தேவால‌ய‌ ப‌டு கொலைய‌ நேரில்  பார்த்த‌ இளைஞ‌ன்  பின்னாளில் த‌ன்னை போராட்ட‌த்தில் இணைத்து 2007க‌ரும்புலியா பிற‌ப்பெடுத்து எல்லாள‌ன்  ந‌ட‌வ‌டிக்கையின் போது 21 க‌ரும்புலிக‌ளுட‌ன் ( ம‌திவ‌த‌ன‌ன் ) மூச்சும் நின்று போன‌து அனுராதபுரத்தில் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்+

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலும் ஹமாஸும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளன - ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 

10 NOV, 2023 | 12:14 PM
image

ஹமாஸ் அமைப்பினால் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட  மிக மோசமான தாக்குதல் போர்க்குற்றமாகும் என ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளும் போர்க்குற்றமே என ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168970

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் பட்ட‌ ப‌ல‌ யூடுப் ச‌ண‌ல்க‌ள் முட‌க்க‌ப் ப‌ட்டு விட்ட‌ன‌.............யூடுப்பும் ஒரு சார்வாய் செய‌ல் ப‌டுது..............

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

பெரிய‌வ‌ரே
அது உங்க‌ளுக்கான‌ ப‌தில் கிடையாது

நெச்சி ஜ‌யாவுக்கான‌ ப‌தில்
அவ‌ர் தான் இணைப்பை இணைத்தார்

அணுகுண்டு அமெரிக்காதான் ம‌றைமுக‌மாய் இஸ்ரேலுக்கு கொடுத்த‌து என்று ப‌ல‌ வருட‌த்துக்கு முத‌லே என் காதால் கேட்டு இருக்கிறேன்

பாக்கிஸ்தான் வைத்து இருக்கும்  அணுகுண்டு மீதான‌ ச‌ந்தேக‌ம் இன்றும் ப‌ல‌ருக்கும் உண்டு..............

பாக்கிஸ்தானுக்கு ப‌க்க‌த்து நாடானா ஈரான் அணுகுண்டு செய்ய‌ தொட‌ங்க‌ அமெரிக்கா க‌டும் எதிர்ப்பு தெரிவித்த‌து.............ஆனால் இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈரான் அணுகுண்டை ச‌ர்வ‌தேச‌த்துக்கு தெரியாம‌ வைத்து இருக்கு..............பாக்கிஸ்தானை விட‌ ஈரான் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ந்த‌ நாடு...........ஈரானிய‌ர் அறிவான‌வ‌ர்க‌ள்................

 மன்னித்து கொள்ளுங்கள். ஈரானிடம் அணு குண்டு இருந்திருந்தால் இஸ்ரேல் மீது நிச்சயமாக போட்டிருப்பார்கள்.

நீங்கள் சரியாக கணித்தீர்கள் எண்டால் எந்த ஒரு நாடும் மேட்கு நாடுகளிடம் இருந்துதான் தொழில் நுட்பத்தை கற்றார்களே அன்றி அவர்களாகவே எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மேற்கத்திய நாட்டினர் தங்கள் நாட்டிட்குள்தான் கேட்கிறார்கள் வேறு எங்கும் போவதில்லை. ஆனால் மற்ற நாட்டினால் எல்லோரும் மேட்கு நாட்டில் கற்றவர்கள்தான். இப்போது கிழக்கு ஐரோப்பிய , சீன போன்ற நாடுகளிலும் கேட்கிறார்கள்.

 ஈரான் நாட்டினர் அறிவாளிகள்தான். ஆனால் ஞானம் இல்லாதவர்கள். அது பயங்கரவாதத்துக்கு மட்டுமே பயன்படும். அங்கு ஒரு நல்ல நோக்கமும் கிடையாது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Cruso said:

நீங்கள் சரியாக கணித்தீர்கள் எண்டால் எந்த ஒரு நாடும் மேட்கு நாடுகளிடம் இருந்துதான் தொழில் நுட்பத்தை கற்றார்களே அன்றி அவர்களாகவே எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

அப்படியென்றால் வெள்ளைக்காரன்களின் வருகைக்கு முன்னரான தமிழர் சரித்திரங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்ற அர்த்தம் உருவாகுகின்றது.:cool:

ramanatha-swamy-temple-in-tamil.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அப்படியென்றால் வெள்ளைக்காரன்களின் வருகைக்கு முன்னரான தமிழர் சரித்திரங்கள் உங்களுக்கு தெரியவில்லை என்ற அர்த்தம் உருவாகுகின்றது.:cool:

ramanatha-swamy-temple-in-tamil.jpg

உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லைதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Cruso said:

உங்களுக்கு தெரிந்த அளவுக்கு எனக்கு தெரியவில்லைதான். 

துவக்கும் தோட்டாவும் புதிய நோய்களையும் கண்டு பிடிப்பது மேலைத்தேய வியாபாரம்.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.