Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

@விசுகு

கப்பித்தான் என்றாலே விசுகருக்கு -1 தான் நினைவிற்கு வருகிறதோ? 

😀

Putin னின் உக்ரேன் யுத்தம் தொடர்பாக வாய் கிழியக் கத்தியவர்கள் தற்போது பலஸ்தீனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக ஊமையானது ஏன்? 

இந்த தொடர் வம்பிழுத்தலுக்காக அது.

ஆனால் இன்று உங்களுக்கு நன்றியும் சொல்லி உள்ளேன்.  உங்கள் கண்களில் நல்லவை தெரியாதது எனக்கு ஆச்சரியமாக இல்லை 😛

  • Replies 1.5k
  • Views 157.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

Putin னின் உக்ரேன் யுத்தம் தொடர்பாக வாய் கிழியக் கத்தியவர்கள் தற்போது பலஸ்தீனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக ஊமையானது ஏன்? 

இந்த தொடர் வம்பிழுத்தலுக்காக அது.

ஆனால் இன்று உங்களுக்கு நன்றியும் சொல்லி உள்ளேன்.  உங்கள் கண்களில் நல்லவை தெரியாதது எனக்கு ஆச்சரியமாக இல்லை 😛

அவற்றையும் அவதானிதுள்ளேன் 😀

வம்பிழுத்தல் அல்ல  Frustration. அழிவுக்கும் அநீதிக்கும் எதிராக  எல்லோரும் ஒன்றாக, பாரபட்சம் அற்ற எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்  எதிர்பார்ப்பும்.  அம்புட்டுதே. 

👍

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அவற்றையும் அவதானிதுள்ளேன் 😀

வம்பிழுத்தல் அல்ல  Frustration. அழிவுக்கும் அநீதிக்கும் எதிராக  எல்லோரும் ஒன்றாக, பாரபட்சம் அற்ற எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்  எதிர்பார்ப்பும்.  அம்புட்டுதே. 

👍

வீதிக்கு மகிந்த பெயர் சூட்டாமலாவது இருந்திருந்தால்??? அம்புட்டுத்தேன்?

  • கருத்துக்கள உறவுகள்+

இதிலை செத்த யூதனுக்கு சாவு எப்பிடி தெரிஞ்சிருக்கும் என்டு பாருங்கோ....

செத்தாலும் இப்பிடி சாகக் கூடாதப்பா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு காசாவில் உணவு பொருட்கள் ஏற்றிச்சென்ற லொரி மீது தாக்குதல்: உதவி கிடைக்காமல் மக்கள் தவிப்பு

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடங்கிய போர் 4ஆவது மாதத்தை நெருங்கியுள்ளது.

இதில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

போர் காரணமாக காசா மக்கள், உணவு, தண்ணீர் மருந்து ஆகியவை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு லொரிகள் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டாலும் போதுமான அளவு கிடைக்கவில்லை.

இந்நிலையில் வடக்கு காசாவில் மக்களுக்கு உணவு பொருட்கள் ஏற்றிச் சென்ற லொரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகாமை சார்பில் உணவு, மருந்து உள்ளிட்டவைகளை ஏற்றிச்சென்ற லொரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லொரி கடுமையாக சேதமடைந்தது. இதுகுறித்து பாலஸ்தீன அகதிகள் முகமை அமைப்பு கூறும் போது வடக்கு காசாவில் மக்கள் தீவிர உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு உணவு பொருட்களுடன் லொரி ஒன்று செல்ல காத்திருந்தது.

அந்த லொரி மீது இஸ்ரேல் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்கு காசாவில் சுகாதார மருத்துவமனை ஒன்றும் அழிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகள் காசாவின் எல்லா இடங்களிலும் அவசரமாக தேவைப்படுகிறது என தெரிவித்தது.

சமீபத்தில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகாமையை சேர்ந்த ஊழியர்கள் சிலர் ஹமாஸ் அமைப்பினருக்கு உதவுவதாக கூறி அந்த முகாமைக்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காசா சிட்டியில் குவைத் ரவுண்டானா அருகே மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. காசா முழுவதும் போதிய நிவாரண பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

https://thinakkural.lk/article/290706

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரில் மனைவி, குழந்தைகளை இழந்தும் பணியில் பின்வாங்காத ‘பாலஸ்தீன பத்திரிகையாளர்’ – கௌரவிக்கும் கேரள அரசு!

06 FEB, 2024 | 11:45 AM
image

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு Wael Al-Dahdouh சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரள அரசுகௌரவிக்க  உள்ளது.

இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.  இதில் ஏராளமான ராணுவ வீரர்களும்,  பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

wael11.jpg

இதனிடையே,  கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வாயில் அல் தஹ்துத், Wael Al-Dahdouh துவக்கம் முதலே போர் தொடர்பான தகவல்களை தான் பணியாற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார். இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஏவுகணை தாக்குதலின் போது இவருடன் பணியாற்றிவந்த ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அவரிடம் இருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்பவத்தை தஹ்துத் பதிவு செய்தார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது கத்தாரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதன்பிறகும் மீண்டும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவரது தியாகத்தை போற்றும் விதமாக பல்வேறு செய்தியாளர் சங்கங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேரளா மீடியா அகாடமி ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது இந்த ஆண்டு தஹ்துத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்குவார் எனவும், இந்த விருது மற்றும் பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தஹ்துத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175693

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அமைப்பின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரிப்பு

Capture-8.jpg

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் நிறுத்தம் கொண்டு வர கட்டார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் மூன்று கட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை முன்மொழிந்தனர்.

முதல் கட்டத்தில் 19 வயதுக்குப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகள், முதியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் 1500 பாலஸ்தீன கைதிககளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

2 ஆவது கட்டத்தில் ஆண் பிணைக்கைதிகளும், 3 ஆம் கட்டத்தில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தது. அதன் பிறகு நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

Capture-1-3.jpg

ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு மாயை. அந்த அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றியை அடையும் வரை போர் தொடரும். நாங்கள் ஒரு முழுமையான வெற்றி பாதையில் இருக்கிறோம்.

காசாவின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விடமாட்டோம். காசாவின் நீண்ட காலத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் இஸ்ரேலுக்கு மட்டுமே உள்ளது என்றார்.

ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

https://thinakkural.lk/article/291054

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் ஐ.நா. அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைப்பு: வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் குற்றச்சாட்டு

காசாவில் ஐ.நா அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைத்துள்ளது என வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், ” ஐ.நா.வின் பள்ளிக்கூடம் அருகே அமைந்த இந்த சுரங்கத்திற்குள் பெரிய மின்கலன்களும் வைக்கப்பட்டு உள்ளன. மின்சாரத்திற்காக தனி அறை அமைத்து, அதன் வழியே தேவையான இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதும் தெரிந்தது. பயங்கரவாதிகள் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுரங்க வாசல் மற்றொரு புறத்தில், ஐ.நா.வின் வளாக பகுதிக்குள்ளேயே முடிகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா. பணியாளர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.

https://thinakkural.lk/article/291336

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2024 at 16:33, ஏராளன் said:

பயங்கரவாதிகளின் இந்த நியாயமற்ற கோரிக்கைகளை நிச்சயமாக இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது. இப்போது ரபா எனும் கட்சி கோடடையையும் இஸ்ரேல் நெருங்கி உள்ளது. பயங்கரவாதிகள் , பணய கைதிகள் எல்லோரும் இப்போது அங்குதான் இருக்கிறார்கள். அந்த பயங்கரவாதிகளின் முடிவுரை விரைவில் எழுதப்படும். அதன் பின்னர் நிச்சயமாக காசா மக்களுக்கு ஒரு விடிவு உண்டாகும். 

7 hours ago, ஏராளன் said:

காசாவில் ஐ.நா. அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைப்பு: வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் குற்றச்சாட்டு

காசாவில் ஐ.நா அலுவலகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைத்துள்ளது என வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், ” ஐ.நா.வின் பள்ளிக்கூடம் அருகே அமைந்த இந்த சுரங்கத்திற்குள் பெரிய மின்கலன்களும் வைக்கப்பட்டு உள்ளன. மின்சாரத்திற்காக தனி அறை அமைத்து, அதன் வழியே தேவையான இடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுவதும் தெரிந்தது. பயங்கரவாதிகள் இந்த கட்டமைப்பை பயன்படுத்தி வந்துள்ளனர்.

சுரங்க வாசல் மற்றொரு புறத்தில், ஐ.நா.வின் வளாக பகுதிக்குள்ளேயே முடிகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா. பணியாளர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.

https://thinakkural.lk/article/291336

இந்த பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கு UNRAW எனும் அமைப்பின் முழு ஆதரவும் இருந்துள்ளது. அவர்களை நடத்தும் பாடசாலைகள், வைத்திய சாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள் எல்லாமே பயங்கரவாதிகளின் கட்டுபாடிலதான். ஐக்கிய நாடுகள் சபை இதட்கு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் மக்களை கை விட்டு ஓடிய வர்கள் அங்கு செய்யும் வேலை இதுதான். உயர் மடடத்தினருக்கு பணம் மட்டுமே நோக்கம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஃபாவில் இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் பலி - இரண்டு பணயக்கைதிகளை விடுவித்ததாக இஸ்ரேல் தெரிவிப்பு

Published By: RAJEEBAN   12 FEB, 2024 | 10:49 AM

image

ரஃபாவில்  மேற்கொண்ட நடவடிக்கையின் போது இரண்டு பணயக்கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ள அதேவேளை அந்த நகரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

rafa_atta.jpg

இஸ்ரேலின் விமானதாக்குதலினால் உயிரிழந்த 20 பாலஸ்தீனியர்களின் உடல்கள் குவைத் மருத்துவமனையில் உள்ளன என ரொய்ட்டருக்கு  தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அதிகாரிகள் 12 உடல்கள் ஐரோப்பிய மருத்துவமனையிலும் ஐந்து உடல்கள் அபுயூசுவ் அல் நசார் மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குண்டுவீச்சினால்  இரண்டு மசூதிகளும் பலவீடுகளும் சேதமடைந்துள்ளன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

rafa_atta_2.jpg

இதேவளை காசாவின் தென்பகுதியில் உள்ள ரஃபாவில்  மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவர்மீட்கப்பட்டுள்ளனர்  என தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்கள் இஸ்ரேலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/176167

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன அகதிகள் நிரம்பிய ரபாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரிப்பு

படை நடவடிக்கை திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் எச்சரிக்கை

damithFebruary 12, 2024
16-2-2.jpg

பலஸ்தீன அகதிகளால் நிரம்பி வழியும் தெற்கு காசா நகரான ரபா மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கும் நிலையில் அதற்கு சர்வதேச அளவில் கடும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

“இந்தப் பகுதியில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக” பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரூன் சுட்டிக்காட்டி இருப்பதோடு, இது பொதுமக்களிடையே பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஹங்கே ப்ருயின்ஸ் ஸ்லொட் எச்சரித்துள்ளார்.

ரபா மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் சவூதி அரேபியா மற்றும் ஓமான் எச்சரித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அந்தப் பகுதியில் இன்னும் தனது படை நடவடிக்கையை முன்னேடுக்காத பிரதான நகராக இருக்கும் ரபா மீது தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் இராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்தே தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் ரபா நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரபாவின் கிழக்கில் உள்ள அடைக்கலம் பெற்ற மக்கள் வசித்த வீடு ஒன்றின் மீது கடந்த சனிக்கிழமை (10) இரவு இஸ்ரேல் நடத்திய செல் தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

ரபாவில் திட்டமிட்ட வகையில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் தனி நபர்கள் இலக்கு வைக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது வரை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் தலைவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரபா நகரில் மக்கள் ஒழுங்கை குழப்பும் வகையிலேயே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர். ரபா நகரில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் நகரின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிஸ் திணைக்களம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரபா மீதான படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலையை வெளியிட்டுள்ளன.

எனினும் ரபாவில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு ‘பாதுகாப்பான வழி’ ஏற்படுத்தப்படும் என்று நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஏ.பி.சி. நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரபா நகருக்கு இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தும் தனது திட்டத்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்.

“பொதுமக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி நாம் இதனைச் செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

காசா பகுதியின் எல்லையாக இருக்கும் ரபாவில் அந்தப் பகுதியின் 2.4 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் அந்த நகர் மீது தாக்குதல் தொடுத்தால் மக்கள் அங்கிருந்து வெளியேற இடம் இல்லாத நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.

‘புதைகுழி தான் மிச்சம்’

இந்நிலையில் எகிப்துடனான ரபா எல்லை வேலியில் இருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் தனது கடைசி அடைக்கலமாக பல டஜன் கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்னவே இஸ்ரேலிய தாக்குதல்களால் பல முறை இடம்பெயர்ந்த நிலையிலேயே இங்கு வந்துள்ளனர்.

காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான 14 கிலோமீற்றர் நீண்ட எல்லையான பிலடொல்பி இடைவழி நிலப்பகுதியை ஒட்டியே சலேஹ் ரசைனா என்பவரும் கூடாரம் அமைத்துள்ளார். அவர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பித்தது தொடக்கம் ஆறு முறை இடம்பெயர்ந்துள்ளார்.

பாதுகாப்பான இடம் ஒன்றை தேடிய பயணத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் உடல் மற்றும் உள ரீதியில் பலவீனம் அடைந்துள்ளனர்.

“நான் ஜபலியாவில் இருந்து (வடக்கு காசா) வந்தேன். வடக்கு காசாவில் இருந்து தெற்கு வரை காசா நகர், டெயிர் அல் பலாஹ், கான் யூனிஸ் வரை இடம்பெயர்ந்து இப்போது ரபாவுக்கு வந்திருக்கிறேன். நாம் வந்த சில நாட்களிலேயே இங்கு தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறது” என்று 42 வயதாகும் நான்கு குழந்தைகளின் தந்தையான ரசைனா, மிடில் ஈஸ்ட் ஐ செய்தி இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

ரபாவில் தற்போது 610,000 சிறுவர்கள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் சிக்கி இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு குறிப்பிடுகிறது. இந்த நிலப்பகுதி காசாவின் மொத்த நிலப் பரப்பில் ஐந்தில் ஒன்றுக்கும் குறைவான இடம் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“நான் இனியும் வேறு எங்கும் போகப்போவதில்லை. நான் ஏற்கனவே ஆறு தடவைகள் இடம்பெயர்ந்து விட்டே. எம்மால் அடைய முடியுமான கடைசி இடம் இது தான்” என்றார் ரசைனா.

“நாம் எகிப்துடனான எல்லைக்கு வந்தது இது பாதுகாப்பான இடம் என்று நம்பியாகும். இஸ்ரேலால் துரத்த முடியுமான கடைசி இடம் இது தான். இப்போது அவர்களால் மேலும் துரத்த முடியாது. எம்மாலும் இனி நகர முடியாது. இங்கிருந்து எம்மால் புதைகுழிக்குத் தான் செல்ல முடியும். இது எமது கடைசி இருப்பிடம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ரபாவில் இராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு பற்றி கடும் கவலை அடைவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கமரூன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். “போரை உடன் நிறுத்தி உதவிகளை வழங்குவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது, தொடர்ந்து நீடித்த மற்றும் நிலையான போர் நிறுத்தம் ஒன்றை நோக்கிச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், ரபாவின் நிலைமை பெரும் கவலை அளிப்பதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ஸ்லொட் குறிப்பிட்டுள்ளார். “காசாவின் பொதுமக்கள் பலரும் தெற்கிற்கு தப்பிச் சென்றிருக்கிறார்கள். அவ்வாறான மக்கள் நெரிசல் கொண்ட பகுதி ஒன்றில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றினால் பெரும் உயிரிழப்புகள் மாத்திரமன்றி ஏற்படும் பாரிய மனிதாபிமான பேரழிவை எவ்வாறு பார்ப்பது என்பது கடினமாக உள்ளது. இது நியாயப்படுத்த முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலிய கொடிய தாக்குதலால் தப்பிச் சென்றிருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள காசாவின் ரபா நகரை இலக்கு வைப்பதற்கு எதிராக” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடனடி போர் நிறுத்தம் ஒன்றும் அந்த அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

மறுபுறம் தமது நிலப்பகுதியில் பலஸ்தீனர்களின் பாரிய இடம்பெயர்வொன்றுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று எகிப்து ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது. தமது நிலத்தில் இருந்து துரருத்தும் இஸ்ரேல் மீண்டும் தமது நிலத்திற்கு திரும்புவதற்கு அனுமதிக்காது என்று பலஸ்தீனர்கள் அஞ்சுகின்றனர்.

ரபா தவிர காசாவின் மற்ற பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் நேற்றுக் காலை உக்கிர வான் தாக்குதல்கள் நீடித்ததாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 112 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 28,176 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 67,784 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை ஒருவாரத்திற்கு முன் உதவி கேட்டு தொலைபேசியில் அழைத்த 6 வயது சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதேபோன்று அவர்களை மீட்க அனுப்பப்பட்ட அம்புலன்ஸ் குழுவினர்களின் உடல்கள் காசா நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக பலஸ்தீன மீட்புக் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
https://www.thinakaran.lk/2024/02/12/world/41778/பலஸ்தீன-அகதிகள்-நிரம்பிய/

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

குறைந்த பட்ச்சம் அவர்களிடம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தால் நிச்சயமாக இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணங்கலாம். இல்லாவிட்ட்தால் அழிவுகளை நிறுத்த முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுரங்கப் பாதைக்குள் ஹமாஸ்தலைவர் - வீடியோவொன்றை வெளியிட்டது இஸ்ரேல்

Published By: RAJEEBAN   14 FEB, 2024 | 12:42 PM

image

ஹமாஸ்அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கான்யூனிசில் 

சுரங்கப் பாதையொன்றிற்குள் காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ என தெரிவித்து இஸ்ரேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் தனது குடும்பத்தினருடன் காணப்படும் வீடியோ ஒன்றையே இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

hamas_leader11.jpg

ஒக்டோபர் பத்தாம் திகதி ஹமாஸ் அமைப்பின் சிசிடிவியில் பதியப்பட்ட இந்த வீடியோ சமீபத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு கிடைத்துள்ளது என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சுரங்கப்பாதை ஊடாக அவர் இவ்வாறே தனது குடும்பத்தினருடன் தப்பி ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த பாதுகாப்பான தங்குமிடத்திற்கு சென்றார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் காணப்படுபவர் ஹமாஸ் அமைப்பின் தலைவரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என்  அவர் உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றப்படும்வரை தேடுதல் வேட்டை முடிவடையாது.  நாங்கள் அவரை கைதுசெய்வது குறித்து உறுதியாக உள்ளோம் நிச்சயம் கைதுசெய்வோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹமாஸ் தலைவர் மறைந்திருந்த சுரங்கப் பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் காணப்படும் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

GGPf5n7WAAAQKVX.jpg

சின்வரின் முக்கிய பதுங்குமிடம் அது அவர் அங்கு சமீபநாட்களில் காணப்பட்டார் என இஸ்ரேலிய இராணுவவீரர் ஒருவர் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார், படுக்கையறைகள் சமையலறைகள் போன்றவற்றையும் அந்த வீடியோ காண்பிக்கின்றது.

மில்லியன் கணக்கில் டொலர்களையும் அங்கு காணமுடிந்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் வருவது தெரிந்ததும் அவர்கள் தப்பிவிட்டனர் என  இஸ்ரேலிய படைவீரர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176351

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

நாங்கள் வருவது தெரிந்ததும் அவர்கள் தப்பிவிட்டனர் என  இஸ்ரேலிய படைவீரர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலால் அவர்கள் தப்ப முன் பிடிக்க முடியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்+

கமாஸை பயங்கரவாத இயக்கமில்லை என்று ஐநா அறிவித்துள்ளது...

அப்ப இனி கமாஸிற்கு பரந்துபட்ட திறந்த ஆதரவு கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நன்னிச் சோழன் said:

கமாஸை பயங்கரவாத இயக்கமில்லை என்று ஐநா அறிவித்துள்ளது...

அப்ப இனி கமாஸிற்கு பரந்துபட்ட திறந்த ஆதரவு கிடைக்கும்!

இது புதிய செய்தியோ, ஆச்சரியமான தகவலோ அல்ல.

"...Asked about the feasibility of Israel’s military goal to eliminate Hamas and disallow the terrorist group from having any governing say in Gaza, Griffiths responded “Hamas is not a terrorist group for us, as you know, it is a political movement.

https://www.jpost.com/israel-hamas-war/article-787084

ஐ.நா சபை அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிடுவதில்லை. அந்த வேலை தனித் தனியான நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அரசிய அமைப்புகளுக்கும் உரிய பணி. ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பு என பட்டியலிட்டால், ஐ.நாவின் எந்த அமைப்பும் தங்கள் பணியைச் செய்ய முடியாது, இது ஒரு சட்டம் சார்ந்த விடயம் என்று நினைக்கிறேன். இதை வைத்துக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாத இயக்கமா இல்லையா என்று நாடுகள் தீர்மானிக்க மாட்டா!

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Justin said:

https://www.un.org/securitycouncil/sanctions/1267/aq_sanctions_list/summaries

இல்லை இல்லை. ஐநா கூட சில அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என்று பட்டியலிட்டுள்ளது... 

ஆனால் இதற்குள் புலிகளுமில்லை, கமாஸுமில்லை. அந்தக்காலத்திலிருந்தே தான் இரு அமைப்புகளுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் - ஹமாஸ் பணயக்கைதிகளை வைத்திருப்பதாக தெரிவிப்பு

Published By: RAJEEBAN   15 FEB, 2024 | 05:04 PM

image

இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர் மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர்.

nasser_hos1.jpg

இஸ்ரேலிய படையினர் கான்யூனிசில் உள்ள நாசெர்மருத்துமவமனைக்குள் நுழைந்துள்ளனர்.

நாசெர் மருத்துவமனைக்குள் துல்லிய மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர்  தெரிவித்துள்ளனர்.

தென்காசாவில் உள்ள நாசெர் மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை தடுத்துவைத்திருந்தனர் என்ற தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் போல தோன்றுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

நோயாளிகளை  மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக வெளியேற்றியுள்ள இஸ்ரேலிய இராணுவம் கட்டிடத்தின் சில பகுதிகளை புல்டோசர்களை பயன்படுத்தி தரைமட்டமாக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தின் மத்தியில் நாசெர் மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/176467

ரபா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால் பெரும் மனித பேரழிவுக்குள்ளாகப் போகின்றது என்பதை புரிந்தும் கூட, எந்த ஒரு இஸ்லாமிய / முஸ்லிம் நாடுகளும் அவர்களை தற்காலிகமாகவேனும் அகதிகளாக ஏற்க முன்வருகின்றது இல்லை. அருகில் இருக்கும் எகிப்து கூட அவர்களை ஏற்கத் தயாரில்லை.

இது தான் இஸ்லாமியர்களின் 'ஒற்றுமை'. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

இதற்கான காரணத்தை கோசான் குறிப்பிட்ட நினைவு: "மத்திய கிழக்கின் பாரிஸ்" என்று ஒரு காலத்தில் அழைக்கப் பட்ட லெபனான், பலஸ்தீன அகதிகளை ஏற்றுக் கொண்டது. அங்கே வேரூன்றி வாழ்ந்த பலஸ்தீன வழி மக்கள், இஸ்ரேல்/மேற்கு எதிர்ப்பு வன்முறையை ஆதரித்து ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் உருவாக வழி வகுத்தார்கள். இன்று லெபனானின் அரச இராணுவம் கூட ஹிஸ்புல்லாவின் பகுதிக்குள் செல்ல முடியாதளவு லெபனான் சீரழிந்து கிடக்கிறது.

இந்த நிலையைக் கண்டு பயந்து தான் எகிப்து, ஜோர்தான், அமீரகம் ஆகிய எல்லா அரபு நாடுகளும் பலஸ்தீன மக்களை செற்றிலாக அனுமதிப்பதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

ரபா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால் பெரும் மனித பேரழிவுக்குள்ளாகப் போகின்றது என்பதை புரிந்தும் கூட, எந்த ஒரு இஸ்லாமிய / முஸ்லிம் நாடுகளும் அவர்களை தற்காலிகமாகவேனும் அகதிகளாக ஏற்க முன்வருகின்றது இல்லை. அருகில் இருக்கும் எகிப்து கூட அவர்களை ஏற்கத் தயாரில்லை.

இது தான் இஸ்லாமியர்களின் 'ஒற்றுமை'. 

இல்லையெனில் இத்தனை இஸ்லாமிய/முஸ்லிம் நாடுகளின் நடுவே இஸ்ரேல் இருக்கமுடியுமா,??  இது தான் இஸ்ரேலின் உண்மையான பலம். 

  • கருத்துக்கள உறவுகள்+

OMG🙀🙀

திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத "ஒரு திரிப்பம்"

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நத்தனியாகு பங்குனி வரை கமாசுக்கு காலக்கெடு கொடுத்து இருக்கிறாராம் பணயகைதிகளை விடுவதற்கு.  

  • கருத்துக்கள உறவுகள்

Never forget or forgive. 1. Haifa Massacre 1937 2. Al-Quds Massacre 1937 3. Haifa Massacre 1938 4. Balad Al-Sheikh Massacre 1939 5. Haifa Massacre 1939 6. Haifa Massacre 1947 7. Abbasiya Massacre 1947 8. Al-Khisas Massacre 1947 9. Bab Al-Amud Massacre 1947 10. Al-Quds Massacre 1947 11. Sheikh Bureik Massacre 1947 12. Deir Yassin Massacre 1948 13. Jaffa Massacre 1948 14. Tantura Massacre 1948 15. Al-Quds Massacre 1953 16. Khan Yunis Massacre 1956 17. Al-Quds Massacre 1967 18. Sabra and Shatila Massacre 1982 19. Al-Aqsa Massacre 1990 20. Ibrahimi Mosque Massacre 1994 21. Jenin Refugee Camp Massacre 2002 22. Gaza Massacre 2008-2009 23. Gaza Massacre 2012 24. Gaza Massacre 2014 25. Gaza Massacre 2018-2019 26. Gaza Massacre 2021 27. Gaza Holocaust 2023-present

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு சபை தீர்மானம் - மூன்றாவது தடவையாக வீட்டோ பயன்படுத்தியது அமெரிக்கா

Published By: RAJEEBAN   21 FEB, 2024 | 11:36 AM

image

காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர்  உடனடியுத்தநிறுதத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மூன்றாவது தடவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனடி யுத்தநிறுத்தம் பணயக்கைகதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைகளை  பாதிக்கும் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

அல்ஜீரியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா மாத்திரமே வாக்களித்துள்ளது - பிரிட்டன் வாக்களிப்பை தவிர்த்துள்ள அதேவேளை 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

அமெரிக்காவின் நேசநாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன பாலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவையே பிரதானமான விடயம் என இந்த நாடுகள் தெரிவித்;துள்ளன.

30,000த்திற்கும் மேற்பட்டமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 2மில்லியன் மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ள வேளையில் உடனடி யுத்தநிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியமைக்கு எதிராக பரந்துபட்ட கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாலஸ்தீனியர்களிள் வாழ்வதற்கான உரிமைக்கு இந்த நகல் தீர்மானத்தை ஆதரிப்பது முக்கியம் என ஐநாவிற்கான அல்ஜீரிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

உடனடி யுத்த நிறுத்தத்தை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது பாலஸ்தீன மக்கள் மீது சுமத்தப்பட்ட கொடுரமான வன்முறைக்கு  கூட்டுதண்டனைக்கு ஒப்புதல் அளிப்பதாகும் எனவும்  அல்ஜீரியா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/176930

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.