Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பாலஸ்தீனியப் பயங்கரவாதத்தின் ஈவிரக்கமற்ற படுகொலைகள்:

 

அப்பிடியே சிங்களவர்/சோனகர் எங்கட ஊருக்குள்ளை புகுந்தால் எப்பிடிக் கொல்லுவாங்களோ - அதே மாதிரி சென்ற ஊரெலாம் கொன்று குவிச்சிருக்காங்கள்.

 

https://twitter.com/chiukwuemekalum/with_replies

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

INTERACTIVE---Gaza-human-toll-1696686056

https://www.aljazeera.com/news/2023/10/7/what-happened-in-israel-a-breakdown-of-how-the-hamas-attack-unfolded

பலஸ்தீன மக்களின் நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு அமைக்கப்பட்ட தேசமே இஸ்ரேல். தமிழரின் நிலத்தை ஆக்கிரமித்து சிங்கள தேசமாக்கி நிற்பதற்கு நிகரானது.

இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. பலஸ்தீன மக்களின் விடுதலை என்பது வேறு. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்திற்கு தீனி போட்டு வளர்த்த பெருமை அமெரிக்காவை சாரும். அது தலிபான் தொடங்கி ஐ எஸ் எஸ் வரை.

சொறீலங்கா முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை கையில் எடுத்திருப்பது தமிழர்களுக்கு எதிராக.. சிங்கள பெளத்ததிற்கு ஆதரவாக. அது கிழக்கில் மன்னாரில் ஜிகாத் என்றும்.. ஊர்காவல்படை என்றும் இயங்கிக் கொண்டிருந்தன.. இருக்கின்றன. இவற்றின் நோக்கம்.. இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதமே அன்றி.. வேறில்லை.

இதற்குள் பலஸ்தீன மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்குவது தவறான செயல். அதுவும் விடுதலை வேண்டி நின்று.. அநியாயமாக பயங்கரவாதமாக்கப்பட்டு இன அழிப்புக்கு உள்ளாகி உள்ள ஒரு இனமாக தமிழர்களில்.. ஒரு சிலர்.. இந்த உண்மையை உணராமல் இருப்பது கேவலமாகும். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நன்னிச் சோழன் said:

வழக்கம் போல முஸ்லிம்கள் இஸ்ரேலிடம் வாங்கிக்கட்டப் போயினம்... அவ்வளவுதான்.😂

பலஸ்தீன மக்கள் சுதந்திரமாக தங்கள் மண்ணில் வாழவேண்டும் என்பது மனித நேயத்தில் ஒன்று. முஸ்லீம் இனம் என்பது இரண்டாம் பட்சம்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்த பாடல் இஸ்ரேலுக்குப் பொருந்தும்!

 

 

 

 

----------------------------------------------------

31 minutes ago, குமாரசாமி said:

பலஸ்தீன மக்கள் சுதந்திரமாக தங்கள் மண்ணில் வாழவேண்டும் என்பது மனித நேயத்தில் ஒன்று. முஸ்லீம் இனம் என்பது இரண்டாம் பட்சம்.

சிறிலங்காவோடு பாலஸ்தீனம் துணை நிற்கும் என்று பாலஸ்தீன அதிபர் 2014/2015 ஆண்டுகளில் அறிவித்ததை நான் இன்னமும் மறக்கவில்லை.

மற்றது எங்கட புத்தளத்தான்களும் காத்தான்குடி முல்லாக்களும் இவங்களுக்கென்றால் வானத்துக்கும் நிலத்துக்கும் குதிப்பாங்கள். ஆனால் தமிழரை கொன்று குவித்து ரசிப்பாங்கள்.... அதனாலையும் நான் ஆதரவில்லை. (எல்லாம் சோனாக்கள் தானே?)

பாலஸ்தீனம் போராளிகள் என்டுவாங்கள், தமிழரை பயங்கரவாதிகள் என்பாங்கள்....

எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தால் அரத்தமோ?

இஸ்ரேல் வாழ்க!❤️‍🔥🤪

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, நன்னிச் சோழன் said:

---------------------------------------------

சிறிலங்காவோடு பாலஸ்தீனம் துணை நிற்கும் என்று பாலஸ்தீன அதிபர் 2014/2015 ஆண்டுகளில் அறிவித்ததை நான் இன்னமும் மறக்கவில்லை.

மற்றது எங்கட புத்தளத்தான்களும் காத்தான்குடி முல்லாக்களும் இவங்களுக்கென்றால் வானத்துக்கும் நிலத்துக்கும் குதிப்பாங்கள். ஆனால் தமிழரை கொன்று குவித்து ரசிப்பாங்கள்.... அதனாலையும் நான் ஆதரவில்லை. (எல்லாம் சோனாக்கள் தானே?)

பாலஸ்தீனம் போராளிகள் என்டுவாங்கள், தமிழரை பயங்கரவாதிகள் என்பாங்கள்....

எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி, அவங்களுக்கு வந்தால் அரத்தமோ?

இஸ்ரேல் வாழ்க!❤️‍🔥🤪

ஓகோ....
நீங்கள் அப்படி வருகின்றீர்களோ?
அப்படியென்றால் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் சர்வதேச நாடுகள் ஏதாவது ஒன்று உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
14 minutes ago, குமாரசாமி said:

ஓகோ....
நீங்கள் அப்படி வருகின்றீர்களோ?
அப்படியென்றால் இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் சர்வதேச நாடுகள் ஏதாவது ஒன்று உள்ளதா?

ஓம் அப்படி வாறன்😄😄

>>>ஒன்றுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பலஸ்தீன….அதென்ன அது ஆ…விடுதலை போராளிகள்….

அவர்கள் ஜேர்மனியில் இருந்து, இஸ்ரேல்- காசா எல்லையில் சமாதான சங்கீத நிகழ்வுக்கு போன பெண்ணை - என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் பாருங்கோ….

(இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும்)

முதலில் அப்பெண் உயிருடன் கடத்தப்படும் வீடியோ👇

 

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அதே பெண்ணை ஆடை களைந்து, காலை முறித்து, தலையை பிளந்து கொலை செய்தபின், காசாவின் வீதிகளில் அல்லாஹு அக்பர் கோசத்துடன் காட்சிப்படுத்தும் ….

அவர்களின் பெயர் என்ன?

ஆ…

பலஸ்தீன விடுதலை போராளிகள்…

 

 

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிகு

யாரும் இஸ்ரேல் செய்யாத கொடுமையா எண்டு உங்கட பீத்தல் சருவசட்டியை தூக்கி கொண்டு வரவேண்டாம்…..

இஸ்ரேலின் கொடுமைகளை நான் நியாயப்படுத்தவில்லை…ஆனால் 

பலஸ்தீனர்களும் அதே நாணயத்தின் மறுபக்கம்தான்.

அதே போல்….

1600 வருடமாக இருக்கும் பலஸ்தீனனுக்கு அந்த மண்ணின் மீது இருக்கும் உரிமையை போலவே 2000 வருடத்துக்கும் மேலாய் அந்த மண்ணில் இருக்கும் யூதனுக்கும் உரிமை உண்டு.

 

  • Like 4
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை பொய்களுக்கப்பால் உளவு அமைப்புகளும் இப்படியான வேலைகளை செய்வதுண்டு. அதன் மூலம் தாங்கள் நினைத்த காரியங்களை சாதிப்பதும் உண்டு.

5000 ஏவுகணைகளை சேமிக்கும் அளவிற்கு  ஹமாஸ் முன்னேறி விட்டதா? அல்லது உலக வல்லமை வாய்ந்த இஸ்ரேலிய உளவுப்படை வலிமையற்று விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லது ஈரான் விரல் சூப்பிகொண்டிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

பிகு

யாரும் இஸ்ரேல் செய்யாத கொடுமையா எண்டு உங்கட பீத்தல் சருவசட்டியை தூக்கி கொண்டு வரவேண்டாம்…..

இஸ்ரேலின் கொடுமைகளை நான் நியாயப்படுத்தவில்லை…ஆனால் 

பலஸ்தீனர்களும் அதே நாணயத்தின் மறுபக்கம்தான்.

அதே போல்….

1600 வருடமாக இருக்கும் பலஸ்தீனனுக்கு அந்த மண்ணின் மீது இருக்கும் உரிமையை போலவே 2000 வருடத்துக்கும் மேலாய் அந்த மண்ணில் இருக்கும் யூதனுக்கும் உரிமை உண்டு.

 

நிச்சயமாக காஸ்ஸா பகுதி மீண்டும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்ததில் பலனை இப்போது இஸ்ரேல் அனுபவிக்கிறது. அங்குள்ள பலஸ்தீனியர்களுக்கு (காசா மற்றும் மேட்கு கரை) சுயாட்சி கொடுத்தாலும் பாதுகாப்பு, நிதி, வெளி விவகாரம் எல்லாம் இஸ்ரேல் வைத்துக்கொள்ளும். நிச்சயமாக இது நடக்கபோகின்றது. இஸ்ரவேல் இனி எந்த நாடடையும் பார்த்துகொண்டிராது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல்: காசா தாக்குதலை தடுக்கத் தவறிய மொசாட் - உளவுத்துறை கூறும் விளக்கம்

ஹமாஸ் -இஸ்ரேல்

பட மூலாதாரம்,ISRAEL DEFENCE FORCES

படக்குறிப்பு,

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இஸ்ரேல் தான் மிகவும் விரிவான மற்றும் அதிக நிதியளிக்கப்பட்ட உளவு அமைப்பைக் கொண்டுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
  • 12 நிமிடங்களுக்கு முன்னர்

"இது எப்படி நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை."

இவ்வளவு பெரிய பலம் இருந்தும், இஸ்ரேலிய உளவுத்துறை இந்தத் தாக்குதல் வருவதை எப்படி கவனிக்கத் தவறியது என பிபிசி செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் கேட்ட கேள்விக்கு, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த பதில் இதுதான்.

ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் உள்ள பலமான எல்லையைக் கடக்க முடிந்ததுள்ளது. அதேபாேல, ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

இஸ்ரேலிய உள்நாட்டு உளவுத்துறையான ஷின் பெட்(Shin Bet), அந்நாட்டின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாட் (Mossad) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அனைத்து அமைப்புகளுக்கும் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது.

அல்லது, ஒரு வேளை அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் இஸ்ரேல்தான் மிகவும் விரிவான மற்றும் அதிக நிதியளிக்கப்பட்ட உளவு அமைப்பைக் கொண்டுள்ளது.

 
ஹமாஸ் -இஸ்ரேல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.

இஸ்ரேல் உளவுத்துறை தவறியது எங்கே?

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட், பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களுக்கு உள்ளும், லெபனான், சிரியா மற்றும் பிற இடங்களிலும் தனக்குத் தகவல் தரும் உளவாளிகளைக் கொண்டுள்ளது.

கடந்த காலங்களில், ஆயுதமேந்திய குழுக்களுடைய தலைவர்களின் அனைத்து செயல்பாட்டுகளையும் முழுமையாக அறிந்து, அவர்களைக் குறித்த நேரத்தில் படுகொலை செய்ததுள்ளது இஸ்ரேல்.

சில நேரங்களில், தன்னுடைய உளவாளிகள் மூலம் கார்களில் ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்தி, ட்ரோன் தாக்குதல்கள் மூலம் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில், இஸ்ரேல் உளவு அமைப்பின் உதவியோடு, அந்நாட்டின் பாதுகாப்புப் படை 'வெடிக்கும்' மொபைல் போன்களை கூட பயன்படுத்தித் தனது திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

தரையில், காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றமான எல்லையில் கேமராக்கள், தரை-மோஷன் சென்சார்கள் மற்றும் வழக்கமான ராணுவ ரோந்துகள் உள்ளன.

 
காசா தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை தவிர்க்கத் தவறியது எப்படி?

பட மூலாதாரம்,REUTERS

இந்தத் தாக்குதலில் நடந்த ஊடுருவலைத் தடுக்க, முள்கம்பி வேலி ஒரு தடையாக இருந்திருக்கக்கூடும்.

ஆனால், ஹமாஸின் ஆயுதமேந்திய குழுவினர் வெறுமனே புல்டோசர் மூலமும், கம்பியில் துளைகளை வெட்டியும் தரை வழியாக நுழைந்துள்ளனர். அதேபோல, சிலர் கடலில் இருந்தும், பாராகிளைடர் மூலம் வான் வழியிலும் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

இஸ்ரேலின் இத்தனை காண்காணிப்புக்கு இடையில், ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை குவித்து வைத்து சுடுவதற்கும், இஸ்ரேலின் மீது இத்தகைய தாக்குதலை நிகழ்த்துவதற்கும், ஹமாஸ் அசாதாரணமாகச் செயல்பட்டு, ஒருங்கிணைந்து இந்தச் சிக்கலான தாக்குதலுக்கு தங்களைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும்.

 

இஸ்ரேலுக்கு தற்போது எது முக்கியம்?

காசா தாக்குதலை இஸ்ரேல் உளவுத்துறை தவிர்க்கத் தவறியது எப்படி?

பட மூலாதாரம்,REUTERS

கடந்த 1973ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த யோம் கிப்பூர் போரின் 50வது ஆண்டு நினைவு நாளில், மற்றுமொரு திடீர் தாக்குதல் எப்படி நடந்தது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களிடம் கேள்வி கேட்பதில் ஆச்சரியமில்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இஸ்ரேலிய அதிகாரிகள், இதுகுறித்து விரிவான விசாரணையைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்த விசாரணை பல ஆண்டுகள் தொடரும் என்றும் கூறினர்.

இந்த விசாரணையைத் தாண்டி, இஸ்ரேலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் உள்ளன.

இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் பல சமூகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதமேந்திய குழுக்களை அகற்றி, அதன் தெற்கு எல்லைகளின் ஊடுருவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இஸ்ரேலுக்கு தற்போது மிக முக்கியமான வேலையாக இருக்கும்.

 
ஹமாஸ் -இஸ்ரேல்
படக்குறிப்பு,

ஆயுதமேந்திய மீட்புப் பணி மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சிறைபிடிக்கப்பட்ட தனது சொந்த குடிமக்களின் பிரச்னையை இஸ்ரேல் தீர்க்க வேண்டும்.

ஆயுதமேந்திய மீட்புப் பணி மூலமாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ சிறைப்பிடிக்கப்பட்ட தனது சொந்த குடிமக்களின் பிரச்னையை இஸ்ரேல் தீர்க்க வேண்டும்.

இஸ்ரேல் மீது ஏவப்படும் அனைத்து ராக்கெட்டுகளுக்கான ஏவுதளங்களையும் கண்டுபிடித்து, அவற்றை அகற்ற முயலும். ஆனால், இது கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணி. ஏனென்றால், இதுவரை ஏவப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தும், எந்த இடத்திலிருந்தும் தடம் தெரியாமல் ஏவக்கூடியவை.

ஒருவேளை இஸ்ரேலுக்கு மிகப் பெரிய கவலை இதுவாக இருக்கலாம்: "ஹமாஸின் ஆயுதப் போராட்ட அழைப்பிற்கு மற்றவர்கள் பதிலளித்து செயலாற்றுவதை எப்படி நிறுத்துவது, மேற்குக் கரைப் பகுதியில் பரவும் இந்த மோதலை எப்படித் தவிர்ப்பது, லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் ஹெஸ்பொல்லாவின் அதிக ஆயுதம் ஏந்திய குழுவினரை எப்படி ஈர்ப்பது?"

https://www.bbc.com/tamil/articles/c0401j5lgdko

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

அதே பெண்ணை ஆடை களைந்து, காலை முறித்து, தலையை பிளந்து கொலை செய்தபின், காசாவின் வீதிகளில் அல்லாஹு அக்பர் கோசத்துடன் காட்சிப்படுத்தும் ….

 

காபிர் பெண்களை கைதிகளாக பிடித்து அல்லாஹு அக்பர் கோசத்துடன் என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு மதரீதியாக அறிவுறுத்தபட்டுள்ளது.

4 hours ago, Cruso said:

நிச்சயமாக காஸ்ஸா பகுதி மீண்டும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்ததில் பலனை இப்போது இஸ்ரேல் அனுபவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் தலையில் பேரிடி! ஹமாஸ்க்கு ஆதரவு-லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் சரமாரி 'ஏவுகணை' தாக்குதல்!

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை, காஸா பகுதிகளில் இருந்து ஹமாஸ் ஜிஹாதிகள் இஸ்ரேலை நிலைகுலைய வைத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவது அந்நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான வரலாற்று கால யுத்தம் இப்போதும் நீடிக்கிறது. இஸ்ரேல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் இயக்கம் அதிதீவிர தாக்குதலை நேற்று காலை தொடங்கியது. கடல், தரை, வான்வழி என மும்முனை தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய வீரர்களையும் பொதுமக்கள்- சுற்றுலா பயணிகளையும் ஹமாஸ் இயக்கத்தினர் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாங்கள் கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவ வாகனங்களை பாலஸ்தீனர்கள் தீயிட்டு எரித்து கொண்டாடி வருகின்றனர்.

Hezbollah join the fight with Hamas- Rockets fired from Lebanon on Israel

சர்வதேச நிலை: இஸ்ரேல் மீதான இத்தகைய அதிரடியான ஹாமாஸ் தாக்குதல் அந்நாட்டையே நிலைகுலைய வைத்துவிட்டது. சர்வதேச நாடுகள் இஸ்ரேல் பக்கம் நின்று ஆதரவு குரல் எழுப்புகின்றன. ஆனால் துருக்கி, லெபனான், ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து ஹமாஸ் பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு கரம் நீள்கிறது.

ஹமாஸ் இயக்க அழைப்பு: ஹமாஸ் இயக்கமும் அனைத்து அரபு நாடுகளின் ஆயுத குழுக்களும் தங்களுடன் இணையவும் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று இஸ்ரேலுக்கு எதிரான போரில் லெபனானின் ஹிஸ்புல் தீவிரவாதிகள் இணைந்துள்ளனர். இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரும் ஹமாஸ் இயக்க ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாக லெபனான் ஹிஸ்புல் தீவிரவாதிகள் அறிவித்திருந்தனர்.

ஹிஸ்புல்லாவின் இஸ்ரேல் மீதான தாக்குதல்: அத்துடன் லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களையும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலடி தருவதற்காக லெபனான் எல்லையில் பெரும் எண்ணிக்கையில் படைகளைக் குவித்து வருகிறது இஸ்ரேல். லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளி நிலைகளை இலக்கு வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கும் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா: லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் உருவானதே, இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராகத்தான். இப்போது ஹமாஸ் இயக்கம், இஸ்ரேலை 'வேட்டையாடு'வதால் கொண்டாட்டத்துடன் ஹிஸ்புல்லா இயக்கமும் கைகோர்த்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத்தின் பின்னணியில் ஈரான் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/international/hezbollah-join-the-fight-with-hamas-rockets-fired-from-lebanon-on-israel-546125.html?story=3

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவிலிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள்

Published By: RAJEEBAN

08 OCT, 2023 | 07:28 AM
image
 

காசாவின் மீதான பழிவாங்கும் தாக்குதலிற்கு முன்னதாக அங்கிருந்து மக்களை தப்பியோடுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கின் மீது தொடர்ச்சியான விமானதாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.

இதுவரை 230 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1000 பேர் வரை காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளதாக்கின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நகரத்தின் மத்திக்கு சென்று தற்காலிக தங்குமிடங்களில் தங்குமாறு இஸ்ரேலிய இராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதுபல குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஐநாவின் தற்காலிக தங்குமிடங்களிற்கு செல்கின்றன.

இஸ்ரேல் தொடர்ச்சியான பாரிய விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/166344

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 480 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது?

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

7 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.

இந்த பதில் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல், ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருப்பவர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

இஸ்ரேலிய படைகளுக்கும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் ஆய்ஹதக்குழுவினரும் இடையே குறைந்தது 22 இஸ்ரேல் இடங்களில் துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த வன்முறையிலேயே மிக மோசமான வன்முறையை நிகழ்த்தி, பணயக் கைதிகள் எல்லையைத் தாண்டி காசாவிற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸின் தரை, வான் மற்றும் கடல் தாக்குதலைத் தொடர்ந்து குறைந்தது 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். அதோடு கூடுதலாக 3,000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பதிலடி தாக்குதல்களுடன் இஸ்ரேல் பதிலடி கொடுத்ததில் 230க்கும் மேற்பட்ட காசா மக்களும் கொல்லப்பட்டதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உள்பட அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இருபதே நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலின் பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. இதில், 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 740 பேர் காயமடைந்திருப்பதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

 
இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்

"அத்துடன், இது ஒரு போர், இந்த போரில் நாங்கள் வெல்வோம். எங்கள் எதிரிகள் அவர்கள் இதுவரை அறிந்திராத பெரும் விலையை கொடுக்க நேரிடும்" என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, காசா பகுதியில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், பல ஆயிரம் ரிசர்வ் படை வீரர்களையும் இஸ்ரேல் ராணுவம் பணிக்கு அழைத்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் காசா பகுதியில் பறந்து குண்டு மழை பொழிந்தன. இதனால், காசா பகுதியில் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிகின்றன. ஹமாஸ் இயக்கத்தின் 17 ராணுவ முகாம்களையும், 4 மண்டல தலைமை அலுவலகங்களையும் குறிவைத்து குண்டுவீசியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதேவேளையில், காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் 161 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

இஸ்ரேல் மீது பாலத்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எந்த வித காரணமும் இன்றி நடத்தும் தாக்குதல்களை அமெரிக்கா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறினார்.

"பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. நாங்கள் இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடன் உறுதியாக நிற்கிறோம், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த இஸ்ரேலியர்களுக்காக எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்."

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாச்சி ஹானெக்பியுடன் பேசியதாகவும், "எங்கள் இஸ்ரேலிய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது" என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES

பாலத்தீன தாக்குதலுக்கு இரான் ஆதரவு

இரானின் தலைவர் அலி கமேனியின் ஆலோசகர், இஸ்ரேல் மீதான பாலத்தீனியர்களின் தாக்குதலை ஆதரிப்பதாக எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன.

"பாலத்தீன போராளிகளை நாங்கள் வாழ்த்துகிறோம்" என்று ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக ISNA செய்தி நிறுவனம் கூறுகிறது.

"பாலத்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை நாங்கள் பாலத்தீன போராளிகளுக்கு துணை நிற்போம்" என்று அவர் கூறினார்.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா ஆதரவு

லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, காஸாவின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், "பாலத்தீன ஆயுதக் குழுவினரின் தலைமையுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும்" கூறியுள்ளது.

அது ஹமாஸ் தாக்குதல்களை "இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதில் மற்றும் இஸ்ரேலுடன் இயல்புநிலைக்கு வர விரும்புவோருக்கான ஒரு செய்தி" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆயுதக் குழு இஸ்ரேலின் முக்கிய எதிர்ப்பாளராகத் திகழ்ந்து வருவதாகவும், 2006 இல் அந்நாட்டுடன் போருக்குச் சென்றது என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானின் இராணுவ மற்றும் நிதி உதவியை நம்பிச் செயல்பட்டு வருகிறது.

 
இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காசாவை விட்டு இஸ்ரேல் வெளியேறிய பிறகு நடந்த மோதல்கள்

  • ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.
  • ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.
  • ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.
  • டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
  • நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.
  • ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
  • மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.
  • மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
  • ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.
  • ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
  • அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c16755442elo

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, நன்னிச் சோழன் said:

சிறிலங்காவோடு பாலஸ்தீனம் துணை நிற்கும் என்று பாலஸ்தீன அதிபர் 2014/2015 ஆண்டுகளில் அறிவித்ததை நான் இன்னமும் மறக்கவில்லை.

அதே பாலஸ்தீனம்.. ஈழப் போராளிகளுக்கு ஆரம்ப காலத்தில்.. லெபனானிலும்.. பாலஸ்தீனத்திலும் பயிற்சி கொடுத்ததையும் மறக்கக் கூடாது. 

அரபாத்தின் இந்த முடிவுக்கு.. ஹிந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோகம் தான் காரணம் என்பது தெரிந்தும்...???! பாலஸ்தீன மக்களை குறை சொல்வது என்ன நியாயம்..??!

ஹிந்தியா தமிழீழத்துக்கு எதிராக முன்னெடுத்த சர்வதேச அளவிலான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய வல்லமையற்றிருந்ததன் தாக்கமே.. பாலஸ்தீனம்.. கியூபா போன்ற நாடுகளின் மக்களின் ஆதரவை நாம் இழந்ததற்கு காரணம். 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

70,80 களில், அரபாத் இருக்கும் வரை மேற்கு கரையிலும் இருந்த மதச்சார்பற்ற பலஸ்தீன தேசிய விடுதலை அமைப்பும்,

ஈரானின் போஷணையில் உருவாகிய, காசாவை விட்டு அரபாத்தின் படைகளையே வன்முறையால் அகற்றிய ஹமாசும் ஒன்றல்ல. 

தான் ஐஎஸ், தலிபானுக்கு சற்றும் குறையாத ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதை நேற்று ஹமாஸ் ஐயம் திரிபற நிறுவியுள்ளது.

70 களின் பலஸ்தீன போராளிகளையும், ஹமாசையும் ஒன்று என கூறுவது, புலிகளையும், ஈ என் டி எல் எவ் வையும் ஒன்று என கூறுவது போன்றது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

அதே பாலஸ்தீனம்.. ஈழப் போராளிகளுக்கு ஆரம்ப காலத்தில்.. லெபனானிலும்.. பாலஸ்தீனத்திலும் பயிற்சி கொடுத்ததையும் மறக்கக் கூடாது. 

அரபாத்தின் இந்த முடிவுக்கு.. ஹிந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோகம் தான் காரணம் என்பது தெரிந்தும்...???! பாலஸ்தீன மக்களை குறை சொல்வது என்ன நியாயம்..??!

ஹிந்தியா தமிழீழத்துக்கு எதிராக முன்னெடுத்த சர்வதேச அளவிலான பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கக் கூடிய வல்லமையற்றிருந்ததன் தாக்கமே.. பாலஸ்தீனம்.. கியூபா போன்ற நாடுகளின் மக்களின் ஆதரவை நாம் இழந்ததற்கு காரணம். 

முசல்மான்கள் தங்களுக்கு லாபமில்லாமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள். தமிழர்போராட்டத்தில் முசல்மான்கள் செய்ததுகளையும் மறக்க வேண்டாம், முசல்மான் நாடுகள் செய்ததுகளையும் மறக்கமுடியுமா. 

இஸ்ரேல்/ பலஸ்தீன போர்களில் நான் எப்போதுமே பலஸதீன சார்பு எடுக்கறனான், ஆனால் அவர்களின் அநாகரீக போக்கைபார்த்தபின் சிங்களப்படைகளை பார்த்தமாதிரி உள்ளது. இறந்த உடல்களக்எஉ மேல் நின்று அல்லாகு அக்பர் என்று கத்தும் கூட்டத்தைவிட இசுரேல் எவ்வளவோ மேல் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Cruso said:

நிச்சயமாக காஸ்ஸா பகுதி மீண்டும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்ததில் பலனை இப்போது இஸ்ரேல் அனுபவிக்கிறது. அங்குள்ள பலஸ்தீனியர்களுக்கு (காசா மற்றும் மேட்கு கரை) சுயாட்சி கொடுத்தாலும் பாதுகாப்பு, நிதி, வெளி விவகாரம் எல்லாம் இஸ்ரேல் வைத்துக்கொள்ளும். நிச்சயமாக இது நடக்கபோகின்றது. இஸ்ரவேல் இனி எந்த நாடடையும் பார்த்துகொண்டிராது. 

இதைத்தான் இஸ்ரேலில் உள்ள அடிப்படைவாத சயோனிஸ்டுகளும் விரும்பினார்கள்.

ஈரானின் நலனுக்காக பலஸ்தீனத்தை பலியிடும், இஸ்ரேலை வரைபடத்தில் இருந்தே அகற்றுவோம் என எக்காளமிடும் ஹாமாஸ்சுடன் பேச வேண்டும், பலஸ்தீனியர்களுக்கு ஒரு சமாந்திரமான நாட்டை கொடுக்க வேண்டும் என பேசும் மிதவாத இஸ்ரேலிய குரல்கள் இனி பல வருடம் எடுபடாது.

காசாவை விட்டு இஸ்ரேல் தன்னிச்சையாக வெளியேறியது - அங்கே ஆயுதம் பதுக்க, திட்டமிட, தாக்க ஏதுநிலையை உருவாக்கியது என்பது இப்போ கண்கூடு ஆகியுள்ளது.

அதேபோல் உக்ரேன்-ரஸ்யா போரில் நடுநிலை எடுத்த இஸ்ரேல் ரஸ்யா பற்றி நல்ல பாடம் படித்துள்ளது.

மேற்கு நாடுகள் எல்லாம் உடனடியாக கண்டிக்க, லெவரோவ் பட்டும் படாமல் இருதரப்பும் மோதலை தவிர்க்க வேண்டும் என ஒரு அறிக்கை விட்டு, கிழக்கு ஜெருசலேம் உடன் கூடிய பலஸ்தீனிய தனியரசு அமைய வேண்டும் என கூறியுள்ளார்.

இது நியாயமான கோரிக்கைதான். ஆனா இந்த நேரத்தில், இஸ்ரேலின் நட்பு சக்தி இப்படி சொல்ல கூடாது.

உக்ரேன் போரில் புட்டினை கோவப்படுத்தாமல் நடந்த, முன்னாள் பிரதமரை மொஸ்கோ வரை அனுப்பிய இஸ்ரேலுக்கு நல்ல படிப்பினை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலனாய்வில் கோட்டைவிட்டதா மொஸாட்?  எல்லைகளை இறுக்கமாக வைத்திருக்கவேண்டிய இஸ்ரேல் படைகளும் தூங்கிவிட்டன. இவையே ஹமாஸ் ஊடுருவித் தாக்குதல் செய்ய உதவிவிட்டது. 

இந்தத் தாக்குதல் மூலம் ஹாஸா பகுதி முழுவதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படும். பலஸ்தீனியர்கள் இனி ஹாஸாவில் இருக்கமுடியாது போகும் போலத் தோன்றுகின்றது.

எனக்கு சஹ்ரான் குழுவினர் எப்படி ஈஸ்டர் படுகொலைகளைச் செய்தார்களோ, அதுபோல இதுவும் இஸ்ரேலியர்களை ஒன்றிணைக்க மறைமுகமாகவும் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது. 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.