Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒண்ட வந்த பிடாரி - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையை நோக்கும்போது தோன்றுகிறது - ஒரிசா, பீகார் பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சென்றவர்கள் சிங்களவர்களாகி பூர்வ தமிழ்க்குடிகளை சிறுபான்மையினர் ஆக்கிக் கோலோச்சுவதும், கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பைத் தமதாக்கி வர்ணாஸ்ரமம் போன்ற கருமாந்திரங்களை நம்மீது ஏற்றி கீழ்க்காணும் ஒளிப்படத்தில் தோழர் குறிப்பிடும் apartheid ஐ அரங்கேற்றியதும், செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அமெரிக்காவை வந்தேறிகள் கைப்பற்றியதும் உண்மையாய்த்தான் இருக்க வேண்டுமென்று.  ஆனாலும் பாலஸ்தீன நிலை பதிவு செய்யப்பட்ட, யாரும் மறுக்க முடியாத சமீபத்திய சோக வரலாறு. பாலஸ்தீனர்களிடம் கையேந்தி உள்ளே வந்த கயவன் அவர்கள் தலைக்கே விலை வைப்பது நம் கண் முன் நிகழும் கொடுமை. ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வலிமையான ஒரு கூட்டம் வேறு.
        வந்தாரை வாழ வைப்போர் எல்லோரும் வீணாய்த்தான் போவார்களோ ! இரக்கம் கொண்டவன் இரந்துதான் வாழ வேண்டுமோ ! ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுவதுதான் உலகியல்  நடைமுறையோ ! அல்லது, நாம் குறிப்பிட்ட அத்தனை அடக்குமுறையாளர்களும் ஒரே இனத்தவர் எனத் தோன்றுவதால், இது அவர்கள் இன அடையாளம் மற்றும் மரபணுக் கோளாறோ !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029xRMZ9aMjM6crRVB47FaMB3WteSryH2rqPTPwHVwYgKEbK6ivmtSDGf3W61qxWoSl&id=100083780391980&mibextid=Nif5oz

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்யான உலகும் ஆயுத பலமும் தான் இன்றைய நாளைய நிலமையை தீர்மானிக்கின்றன.ஆனால் நீதியும் நேர்மையும் என்றோ ஒரு நாள் வெற்றியடையும்.
பல உண்மைகளை சொல்லும் எழுத்துக்களுக்கு நன்றி ஐயா.....👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

மனிதநேயம் என்பது சுயநலமாக பயன்படுத்தப்படவேண்டும் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது என்பதால்தான் இன்று காஸாவில் பாலஸ்தீனியர்களைக்கும் நடக்கும் செயலை ஒரே இனத்தைத்/மதத்தை சேர்ந்தவரகள் கண்டும் காணாதது போல இருக்கிறார்கள். 

கடவுள் என இவர்கள் வழிபடுபவர் கூட பக்கச்சார்பாகத்தான் ஜசாக்கையும் இஸ்மாயிலையும் நடத்தியுள்ளார். இன்னமும் எத்தனை காலத்திற்கு இதன் பலனை அனுபவிக்கப்போகிறோமோ தெரியாது😔

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் செல்வமும் பலமும் இருந்தால் எத்தகைய தீச்செயல்களையும் செய்யலாம் என்பதாகத்தான் வலிமையான நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன........!

  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2023 at 02:39, சுப.சோமசுந்தரம் said:

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையை நோக்கும்போது தோன்றுகிறது - ஒரிசா, பீகார் பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சென்றவர்கள் சிங்களவர்களாகி பூர்வ தமிழ்க்குடிகளை சிறுபான்மையினர் ஆக்கிக் கோலோச்சுவதும், கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பைத் தமதாக்கி வர்ணாஸ்ரமம் போன்ற கருமாந்திரங்களை நம்மீது ஏற்றி கீழ்க்காணும் ஒளிப்படத்தில் தோழர் குறிப்பிடும் apartheid ஐ அரங்கேற்றியதும், செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அமெரிக்காவை வந்தேறிகள் கைப்பற்றியதும் உண்மையாய்த்தான் இருக்க வேண்டுமென்று.  ஆனாலும் பாலஸ்தீன நிலை பதிவு செய்யப்பட்ட, யாரும் மறுக்க முடியாத சமீபத்திய சோக வரலாறு. பாலஸ்தீனர்களிடம் கையேந்தி உள்ளே வந்த கயவன் அவர்கள் தலைக்கே விலை வைப்பது நம் கண் முன் நிகழும் கொடுமை. ஒடுக்குபவர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் வலிமையான ஒரு கூட்டம் வேறு.
        வந்தாரை வாழ வைப்போர் எல்லோரும் வீணாய்த்தான் போவார்களோ ! இரக்கம் கொண்டவன் இரந்துதான் வாழ வேண்டுமோ ! ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுவதுதான் உலகியல்  நடைமுறையோ ! அல்லது, நாம் குறிப்பிட்ட அத்தனை அடக்குமுறையாளர்களும் ஒரே இனத்தவர் எனத் தோன்றுவதால், இது அவர்கள் இன அடையாளம் மற்றும் மரபணுக் கோளாறோ !

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029xRMZ9aMjM6crRVB47FaMB3WteSryH2rqPTPwHVwYgKEbK6ivmtSDGf3W61qxWoSl&id=100083780391980&mibextid=Nif5oz

மன்னிக்க வேண்டும் ஐயா,

தங்கள் மத்திய கிழக்கு வரலாறு பற்றிய பார்வை மிக பிழையானதாக உள்ளது.

யூதர்கள் 2000 ஆண்டுக்கு முன்பே அந்த மண்ணில் ஜூடாயா போல தேசங்களை அமைத்து வாழ்ந்தவர்கள்.

நீதி கதைகளில் கேள்விப்படும் சாலமன் மன்னன் ஒரு யூதன். அவரின் தந்தையே டேவிட். அவர்கள் நாட்டின் பெயர் ஜூடயா. 

அவர்கள்தான் ஊர் பிடாரிகள்.

இஸ்லாம் பின்னாளில் வந்தது. ரோமர்களும், பின்னாளில் வந்த இஸ்லாமிய படை எடுப்புகளும் யூதர்களை இந்த மண்ணில் இருந்து துரத்தின.

இதற்கு ஒரே தீர்வு இஷ்மேலின் வாரிசுகளும், ஐசாக்கின் வாரிசுகளும் அருகருகே வாழும் இரு நாடுகளை உருவாக்குவதே.

👆🏼இதை மறுப்பவர்கள் பேரழிவை வரவேற்போரே.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் ஐயா,

தங்கள் மத்திய கிழக்கு வரலாறு பற்றிய பார்வை மிக பிழையானதாக உள்ளது.

யூதர்கள் 2000 ஆண்டுக்கு முன்பே அந்த மண்ணில் ஜூடாயா போல தேசங்களை அமைத்து வாழ்ந்தவர்கள்.

நன்றி கோஷான் சே.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் ஐயா,

தங்கள் மத்திய கிழக்கு வரலாறு பற்றிய பார்வை மிக பிழையானதாக உள்ளது.

யூதர்கள் 2000 ஆண்டுக்கு முன்பே அந்த மண்ணில் ஜூடாயா போல தேசங்களை அமைத்து வாழ்ந்தவர்கள்.

நீதி கதைகளில் கேள்விப்படும் சாலமன் மன்னன் ஒரு யூதன். அவரின் தந்தையே டேவிட். அவர்கள் நாட்டின் பெயர் ஜூடயா. 

அவர்கள்தான் ஊர் பிடாரிகள்.

இஸ்லாம் பின்னாளில் வந்தது. ரோமர்களும், பின்னாளில் வந்த இஸ்லாமிய படை எடுப்புகளும் யூதர்களை இந்த மண்ணில் இருந்து துரத்தின.

இதற்கு ஒரே தீர்வு இஷ்மேலின் வாரிசுகளும், ஐசாக்கின் வாரிசுகளும் அருகருகே வாழும் இரு நாடுகளை உருவாக்குவதே.

👆🏼இதை மறுப்பவர்கள் பேரழிவை வரவேற்போரே.

அதற்கு முன்பே (கி மு 6000 வருடங்கள்)  மகாபாரத்தில் கிருஷ்ணர் இவ் அகிலம் முற்றும் எமதாகும் என்று கூறியிருக்கிறார் அதன்பொருட்டு ........ நாம் முழு அகிலத்தையும் உரிமை கோர முடியாதா? 
அதில் ஏதும் முட்டுக்கட்டைகள் நடைமுறை சாத்தியமல்லாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா? 

உங்கள் கருத்தின்படி இஸ்மாயீலின் வாரிசுகளிடம் முழு நிலப்பரப்பையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது 
இடையில் வந்த ஜஸாகளின் வாரிசுகளுக்கும் (பலஸ்தீனருக்கும்) நாடு கொடுக்கவேண்டும் என்பது 
என்ன நியாயம்? சரியாக புரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இதுதான் விதண்டாவாதம்.

இப்போ பலஸ்தீன்/இஸ்ரேல் என அழைக்கப்படும் மண்ணில் யூத அரசுகள் இருந்தன என்பது தனியே இதிகாசம் சார்ந்தது மட்டும் அல்ல, அதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகளும் உளன.

அகில உலகமும் எனது என சொல்வதால் உரிமை கோர முடியாது. அகில உலகமும் உண்மையில் அவர்கள் வசம் இருந்திருப்பின் உரிமை கோரலாம்.

https://www.jns.org/archeology/judea-and-samaria/23/6/26/297934/
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

உங்கள் கருத்தின்படி இஸ்மாயீலின் வாரிசுகளிடம் முழு நிலப்பரப்பையும் கொடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது 
இடையில் வந்த ஜஸாகளின் வாரிசுகளுக்கும் (பலஸ்தீனருக்கும்) நாடு கொடுக்கவேண்டும் என்பது 
என்ன நியாயம்? சரியாக புரியவில்லை 

ஏன் என்றால் வரலாற்றில் ஒரு Time Machine இல் போய் எதையும் சாதிக்க முடியாது.

இராமர் கோவிலை பாபர் இடித்தார் (என வைத்து கொண்டாலும்) இப்போ பாபர் மசூதியை உடைத்து இராமர் கோவில் கட்டுவது பிழை.

இந்த மண்ணின் வரலாறு என்ன?

1. யூத அரசு கிமு காலத்திலேயெ இருந்துள்ளது. பின்னர் விரட்டப்பட்டாலும் யூதர் அங்கே ஒரு சிறுபான்மையாக வாழ்ந்தே வந்தனர். அங்கே அவர்கள் புனித தலங்கள் இருந்தே உள்ளன. அவர்களின் spiritual home ஆக எப்போதும் இந்த நிலமே இருந்துள்ளது. இது வரலாறு.

2. ஐசக், இஸ்மாயில் கதை உண்மையோ, பொய்யோ, இஸ்லாத்திற்கு முன்பே அரபிகளும் அந்த மண்ணில் வாழ்ந்துள்ளனர்.  அதுவும் கிபி காலத்தில் அவர்கள் ஆட்சியாளராயும் இருந்துள்ளனர். இது வரலாறு.

3. 75 வருடமாக இஸ்ரேல் என்ற நாடு இருக்கிறது. பல அயல் அரபு முஸ்லிம் நாடுகள் கூட அதை ஏற்றுள்ளன. ஐநா உறுப்பினர். இஸ்லாமிய உலகின் முதன்மை நாடு சவுதி கூட கைகுலுக்கப்போகிறது. இதுவும் வரலாறு.

ஆகவே மிக முந்திய, இடைப்பட்ட, பிந்திய வரலாறை, மனித அவலத்தை கணக்கில் எடுத்தால் - two state solution ஒன்றே நியாயமான தீர்வு.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பாலஸ்தீனியர்கள் நிலம் எங்கள் கண் முன்பே பறிக்கப்பட்டு வீடு வாசல்கள் தோட்டங்களில் இருந்து துரத்தப்பட்டனர் இன்றும் இது அங்கே சிறிது சிறிதாக நடந்துகொண்டே இருக்கிறது 
சற்று மனித இயல்பு எதுவும் இல்லாத சியோனிஸ்ட் அரக்கர்களால் வலு கடடாயமாக அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்படுகிறார்கள் 

ஆதலால் அம்மண்ணில் இருந்து அதேபோல ஜூதர்களை துரத்தவேண்டும் என்று யாரும் கூறவில்லை 
குறைந்த பட்ஷம் 4 தலைமுறை இப்போ அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது 

ஒன்றில் இருவரும் இணைந்து வாழவேண்டும் அல்லது தனி தனி நாடுகளாக வாழவேண்டும் 
பாலஸ்தீனியர்கள் 4 தலைமுறையாக திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிறார்கள் 
ஐ நா மற்றும் கத்திரிக்காய் எல்லாம் எதற்காக உருவாக்க பட்டாதோ அதைக்கூட செய்வதில்லை 

இருவருவரும் அங்கு வாழவேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள் 

உங்கள் 2000 வருட முன்பு நீதிக்கதையில் இருப்பவர் ஜூதர் என்பதால் நாட்டை இரண்டாக்கவேண்டும் என்றால் அமெரிக்க கனடா அவுஸ்திரேலியா எல்லாம் முதலில் மூட்டை கட்டவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

ஆதலால் அம்மண்ணில் இருந்து அதேபோல ஜூதர்களை துரத்தவேண்டும் என்று யாரும் கூறவில்லை 
குறைந்த பட்ஷம் 4 தலைமுறை இப்போ அங்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறது 

இதைத்தான் அரபாத்தும், இஸ்ரேலும் ஏற்று கொண்டன.

ஹமாஸ் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து நீக்குவோம் என்ற கொள்கையை வைத்திருக்கும் அமைப்பு. 

இந்த கொள்கை உள்ளவரை - இந்த பிரச்சனை தீராது.

3 hours ago, Maruthankerny said:

ஒன்றில் இருவரும் இணைந்து வாழவேண்டும்

இஸ்லாமிய வாழ் நெறியும், தாராளவாத ஜனநாயக வாழ்நெறியும் ஒரு போதும் இணைந்து வாழ முடியாது.

இரு வேறு நாடுகள்தான் தீர்வு. ஆனால் இப்போ இஸ்ரேலிய பிரஜைகளாக உள்ள 2.1 மில்லியன் அரபிகள் அப்படியே தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

உங்கள் 2000 வருட முன்பு நீதிக்கதையில் இருப்பவர் ஜூதர் என்பதால் நாட்டை இரண்டாக்கவேண்டும் என்றால் அமெரிக்க கனடா அவுஸ்திரேலியா எல்லாம் முதலில் மூட்டை கட்டவேண்டும் 

திரும்ப திரும்ப சொல்ல வைக்காதீர்கள்🤣.

2000 வருடம் (அவர் யூதர்தான் - ஆல் விகுதி போடுவது இன்னொரு இனத்தின் வரலாற்றை மறுதலிக்கும் சிஙகள மனோநிலை) முந்திய வரலாற்றை மட்டும் அல்ல. 75 வருட வரலாற்றையும்தான் கணக்கில் எடுக்க வேண்டும்.

இஸ்ரேல் ஐ நா தீர்மானத்தின் படி உருவாக்கப்பட்ட நாடு.மிதவாத பலஸ்தீனியர் இதை நாடாக ஏற்கிறனர்.  பல இஸ்லாமிய நாடுகளே தூதரக உறவை ஏற்படுத்தி விட்டன. இந்த தாக்குதல் இல்லாவிடில் சவுதி கூட விரைவில் செய்திருக்கும்.

அடிப்படைவாதிகளும், சில மேற்கில் வாழும் KFCக்கு வாக்களிக்கும் கோழிகளுமே இன்னமும் இஸ்ரேலினை இல்லாதொழிக்க கோருகிறன.

அமெரிக்காவில், அவுஸ்ர்ரெலியாவில் இப்படி பழங்குடிகளுக்கு என ஒரு நாடு உருவாக்கப்படவில்லை - அப்படி உருவாக்கப்பட்டிருப்பின், அந்த நாடுகள் 75 வருடமாக ஐநா உறுபுரிமை கொண்டிருப்பின், அங்கேயும் இரு நாடுகளை உருவாக்குவதே நியாயமான தீர்வாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் ஐயா,

தங்கள் மத்திய கிழக்கு வரலாறு பற்றிய பார்வை மிக பிழையானதாக உள்ளது.

யூதர்கள் 2000 ஆண்டுக்கு முன்பே அந்த மண்ணில் ஜூடாயா போல தேசங்களை அமைத்து வாழ்ந்தவர்கள்.

நீதி கதைகளில் கேள்விப்படும் சாலமன் மன்னன் ஒரு யூதன். அவரின் தந்தையே டேவிட். அவர்கள் நாட்டின் பெயர் ஜூடயா. 

அவர்கள்தான் ஊர் பிடாரிகள்.

இஸ்லாம் பின்னாளில் வந்தது. ரோமர்களும், பின்னாளில் வந்த இஸ்லாமிய படை எடுப்புகளும் யூதர்களை இந்த மண்ணில் இருந்து துரத்தின.

இதற்கு ஒரே தீர்வு இஷ்மேலின் வாரிசுகளும், ஐசாக்கின் வாரிசுகளும் அருகருகே வாழும் இரு நாடுகளை உருவாக்குவதே.

👆🏼இதை மறுப்பவர்கள் பேரழிவை வரவேற்போரே.

பைபிள் பேசுது......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

பைபிள் பேசுது......!   😂

🤣 தனியே பைபிள் மட்டும் அல்ல. குர் ஆனும் இதையே சொல்லிறது.

ஆனால் சகல மத கதையாடல்களையும் புறம் தள்ளி விட்டு - விஞ்ஞான ரீதியா அணுகினாலும் அங்கே யூத அரசுகள் இருந்தமைக்கான சான்றுகளை காணலாம்.

தெற்காசியாவில் எமது அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் - எம்மை உண்மையான வரலாற்றை அறிய விடாமல் செய்து, இடைப்பட்ட வரலாறரை மட்டும் சொல்லி - எம்மை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஆனால் சகல மத கதையாடல்களையும் புறம் தள்ளி விட்டு -

[இராமர்,ராவணன், இராமர் பாலம், இரராவணன் இலங்கையில் வாழ்ந்த இடம் போன்ற கதைகளை ]

விஞ்ஞான ரீதியா அணுகினாலும் அங்கே யூத அரசுகள் இருந்தமைக்கான சான்றுகளை காணலாம்.

தெற்காசியாவில் எமது அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் - எம்மை உண்மையான வரலாற்றை அறிய விடாமல் செய்து, இடைப்பட்ட வரலாறரை மட்டும் சொல்லி - எம்மை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.

மூளை சலவை என்றாலும் அப்படி ஒரு  மூளையை கிறங்கடித்து செயலிழக்க வைக்கும் கடுமையான மூளை சலவை  செய்து வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

இப்போ பலஸ்தீன்/இஸ்ரேல் என அழைக்கப்படும் மண்ணில் யூத அரசுகள் இருந்தன என்பது தனியே இதிகாசம் சார்ந்தது மட்டும் அல்ல, அதற்கு அகழ்வாராய்ச்சி சான்றுகளும் உளன.

51 minutes ago, goshan_che said:

ஆனால் சகல மத கதையாடல்களையும் புறம் தள்ளி விட்டு - விஞ்ஞான ரீதியா அணுகினாலும் அங்கே யூத அரசுகள் இருந்தமைக்கான சான்றுகளை காணலாம்.

யூதர் தான் இதை இராச்சியம், அரசு என்கிறர்கள்.

வெளியார் சொல்லவில்லை.

இதை சொல்லத்தான், எதோ சதி கதைகள் என்று ...

  • கருத்துக்கள உறவுகள்

 மேற்கு  யூதர் சொல்வதை  ஏற்கிறது. 

இப்போதும் கேட்கிறேன், தடற்செயலாக இராச்சியம் / அரசு என்பதற்கான ஆதரங்கள் இருந்தால், அது யூதரின் மட்டும் தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. 

ஏனெனில், உ.ம். ஆக விவிலியம் சொல்லும்  இஸ்ரேல் இன் முதல் மன்னார் Saul ஐ  தோற்கடித்து, அவராகவே தன வாளால் குத்தி கொல்லும் அளவுக்கு Phillistine என்ற அமைப்பு (விவியலியம் இதில் அமைதியாக இருக்கிறது, Phillistine ஐ கொடூரமாக காட்டியும் இருக்கிறது மகாவம்சம் போல) இருந்து இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

திரும்ப திரும்ப சொல்ல வைக்காதீர்கள்🤣.

2000 வருடம் (அவர் யூதர்தான் - ஆல் விகுதி போடுவது இன்னொரு இனத்தின் வரலாற்றை மறுதலிக்கும் சிஙகள மனோநிலை) முந்திய வரலாற்றை மட்டும் அல்ல. 75 வருட வரலாற்றையும்தான் கணக்கில் எடுக்க வேண்டும்.

இஸ்ரேல் ஐ நா தீர்மானத்தின் படி உருவாக்கப்பட்ட நாடு.மிதவாத பலஸ்தீனியர் இதை நாடாக ஏற்கிறனர்.  பல இஸ்லாமிய நாடுகளே தூதரக உறவை ஏற்படுத்தி விட்டன. இந்த தாக்குதல் இல்லாவிடில் சவுதி கூட விரைவில் செய்திருக்கும்.

அடிப்படைவாதிகளும், சில மேற்கில் வாழும் KFCக்கு வாக்களிக்கும் கோழிகளுமே இன்னமும் இஸ்ரேலினை இல்லாதொழிக்க கோருகிறன.

அமெரிக்காவில், அவுஸ்ர்ரெலியாவில் இப்படி பழங்குடிகளுக்கு என ஒரு நாடு உருவாக்கப்படவில்லை - அப்படி உருவாக்கப்பட்டிருப்பின், அந்த நாடுகள் 75 வருடமாக ஐநா உறுபுரிமை கொண்டிருப்பின், அங்கேயும் இரு நாடுகளை உருவாக்குவதே நியாயமான தீர்வாக இருக்கும்.

திரும்ப திரும்ப அதைத்தானே சொல்கிறீர்கள் 
3000 வருடம் முன்பு யூதர்கள் வாழ்ந்ததுக்கு ஆதாரம் இருந்தால் அவர்களுக்கு நாடு அமைக்கலாம் என்கிறீர்கள் 
பின்பு சீமான் திரி முழுதும் வியாக்கினம் பேசினீர்கள் ....... தமிழ் நாடு மா நிலம் அரிசி நிலம் என்கிறீர்கள் 
தமிழ்நாடு எப்போ மாநிலம் ஆனது ? ஆக்கப்பட்டது?
சீமான் நாம்தான் ஆளுவோம் நீங்கள் வந்து வாழுங்கள் என்றுதான் சொல்கிறார் 

அமெரிக்க அவுஸ் கனடா எல்லாம் போதிய வரலாற்று ஆதாரம் இல்லாத காரணத்தால்தான் 
வெள்ளையர்கள் நிலத்துக்கு சொந்தமானவர்களை இனப்படுகொலை செய்துவிட்டு 
அப்படியே இருக்கிறார்களா?

நான் கிருஷ்ணரின் மகாபாரத கதை விரண்டாவாதத்தில் எழுதவில்லை 
ஏன் 2000 ஆண்டில் தொங்கவேண்டும்? அதற்கு முன் உலகு இருந்ததின் படி செய்யமுடியாதா?
என்ற மறைமுக கேள்வியுடன்தான் எழுதினேன் 

பந்தி பந்தியாக எழுதினால் உங்கள் KFC ஆனந்தபவன் ஆகிடுமா? 

நான் எங்கும் யூதர்களுக்கு நாடு தேவையில்லை என்று எழுதவில்லை ஆனால் அந்த கேடு கெட்ட பைபிளை 
வைத்து தொங்குவுதைதான் அநீதி என்கிறேன் ...... என்பதிலை அது அநீதி தான் 

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் பல திரிகளில் சொல்லி வருவது பலருக்குப் புரியவில்லையென நினைக்கிறேன் (அல்லது விதண்டாவாதம் therapeutic என்பதால் அதிலேயே நிற்கிறார்களோ தெரியவில்லை!).

இரு தேசங்கள் அமைய வேண்டுமென்பது  1947 இல் இஸ்ரேலை உருவாக்கிய ஐ.நா தீர்மானத்திலேயே சொல்லப் பட்ட விடயம். 1948 முதல் நில இழப்பு பலஸ்தீன தேசத்திற்கு ஏற்பட்டது, அடுத்தடுத்து உருவான அரபு - பலஸ்தீன தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்த நேரங்களில் தான்.

1993 முதல் இரு நாடுகளை உருவாக்குவதற்கான roadmap உருவாக்கப் பட்டு அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தொடர்ந்து பலஸ்தீன அதிகாரசபை நிலைத்திருக்க நிதி/அரசியல் ஆதரவு மூலம் உதவின. காசா, 2007 இல் ஹமாசைத் தேர்வு செய்து, அப்பாஸ் பிரிவைத் தூக்கியெறிந்தது முதல் எல்லாம் மந்த கதியில் தான் நகர்கிறது.

எனினும், ஒபாமா ஆட்சியில் கொடுக்கப் பட்ட நெருக்கடியால், இஸ்ரேல் மேற்குக் கரையில்  புதிய யூதக் குடியேற்றங்களை உருவாக்குவதைக் கூட தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது, 2010 வரை இது அமலில் இருந்தது. கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்ளவும் ஒபாமா நிர்வாகம் மறுத்து விட்டது. பின்னர்  வந்த  ட்ரம்ப், அமெரிக்க தூதரகத்தை கிழக்கு ஜெருசலேமுக்கு மாற்றி, அதை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார்.

எனவே, இரு தேசங்கள் உருவாக வேண்டுமென உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இஸ்ரேல் பிரஜைகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இஸ்ரேல் தேர்தல்களில் வெளிப்பட்டிருக்கிறது.

மறு பக்கம்: ஆயுதம் வைத்திருக்கும் பலஸ்தீனக் குழுக்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, இஸ்ரேல் இல்லாமல் போக வேண்டுமென பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள்.

எனவே, பைபிளில் இருப்பது முக்கியமல்ல, ஆனால் தொல்லியல் சான்றுகள் முக்கியம். தீர்வு எதுவென ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டு விட்டது. அதை ஏற்றுக் கொள்ளாத தரப்புத் தான் மாற வேண்டியிருக்கிறது. 

பி.கு: மேலே தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டுமென்ற கோசமும், மத்திய கிழக்கில் இரு தேசங்கள் உருவாக வேண்டுமென்பதும் முடிச்சுப் போடப் பட்டிருக்கிறது, ஆனால் முடிச்சின் வலிமை முழங்கால் மொட்டந்தலை முடிச்சை விட பலவீனமாக இருக்கிறது😂. மதராஸ் ஏற்கனவே வெவ்வேறு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப் பட்டு விட்டது. அங்கே 1950 இற்கு முன்னர் வாழ்ந்த வேற்று மொழி பேசியோரின் வாரிசுகள் தமிழராக தமிழ் நாட்டில் வாழ்ந்தால், அடையாளப் படுத்தினால் (self-identify), அவர்கள் "தூய தமிழர்" அல்ல என்று சீமான் உட்பட எவரும் சொல்ல அதிகாரம் இல்லை! எனவே, சீமானின் பிரச்சினை இனத்தூய்மை வாதம், தேசிய வாதம் அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

யூதர் தான் இதை இராச்சியம், அரசு என்கிறர்கள்.

வெளியார் சொல்லவில்லை.

இதை சொல்லத்தான், எதோ சதி கதைகள் என்று ...

ஓம் யூதேயா என்ற பெயரில் இருந்தது யூதரின் இராச்சியம் இல்லைதான்🤣.  

உங்களின் கேள்விக்கு ஏலவே பதில் தரப்பட்டுள்ளது இன்னொரு திரியில்.

மேற்கு மட்டும் அல்ல, ரஸ்யாவும் எப்போதும் அந்த மண்ணில் யூதர்களுக்கு உரிய மரபுரிமையை ஏற்கிறது. அதனால்தான் ஐ நா தீர்மானத்தின் படி இஸ்ரேலை அங்கே மீள நிறுவ ரஸ்யாவும் ஒத்துழைத்தது. நேற்றும் இதை புட்டின் சுட்டினார்.

உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் சொல்லவா? பலஸ்தீன மிதவாதிகள் கூட யூதர் அந்த மண்ணில் இருந்ததை மறுதலிப்பதில்லை.

நீங்கள்தான் ஆப்ரகாம் யூதனில்லை, செங்குட்டுவன் தமிழன் இல்லை, ஜின்சிஸ்கான் மங்கோலியன் இல்லை, ஜின்னா பாகிஸ்தானி இல்லை என சொல்லுகிறீர்கள். இதை சதி கொள்கை என கூட சொல்ல முடியாது. இது வெறும் விதண்டாவாதம்.

4 hours ago, Maruthankerny said:

பின்பு சீமான் திரி முழுதும் வியாக்கினம் பேசினீர்கள் ....... தமிழ் நாடு மா நிலம் அரிசி நிலம் என்கிறீர்கள் 
தமிழ்நாடு எப்போ மாநிலம் ஆனது ? ஆக்கப்பட்டது?
சீமான் நாம்தான் ஆளுவோம் நீங்கள் வந்து வாழுங்கள் என்றுதான் சொல்கிறார் 

உங்களுக்கு நான் சொல்லுவது விளங்கவில்லை.

தமிழ் நாட்டில் தமிழ் சாதிக்கு ஒரு மாநிலம், 600 ஆண்டுக்கு முன் வந்த தெலுங்கு சாதிக்கு அதில் இருந்து பிரிந்து இன்னொரு மாநிலம் என்ற நிலை இல்லை. இரு பகுதியும் இதை கேட்கவில்லை. ஒரே மாநிலமாக இரு பகுதியிம் இருக்கும் போது இருபகுதிக்கும் ஆளும் உரிமை இருக்க வேண்டும். இங்கே 600 ஆண்டுக்கு முதல் வந்தவனை ஆளும் உரிமை இல்லை என கலைக்க முடியாது.

ஆனால் இங்கே  அப்படி அல்ல.

ஐ நா சபையே ஒரு அரபு/இஸ்லாமிய இன்னொரு யூத நாடு என இரு நாடுகள் இருக்க வேண்டும் என தீர்மானித்த பின், அவர்களை தனி தனியாக தத்தம் நாடுகளை ஆள விடுவதே முறை.

ஆனால் ஹமாஸ் அதை ஏற்காது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

அமெரிக்க அவுஸ் கனடா எல்லாம் போதிய வரலாற்று ஆதாரம் இல்லாத காரணத்தால்தான் 
வெள்ளையர்கள் நிலத்துக்கு சொந்தமானவர்களை இனப்படுகொலை செய்துவிட்டு 
அப்படியே இருக்கிறார்களா?

இந்த இனங்களுக்கு அநீதி நடந்தது, நடக்கிறது என்பதால், இன்னொரு இனமான யூதருக்கும் அதுவே நடக்க வேண்டும் என்பது குதர்க்க மனோநிலை.

4 hours ago, Maruthankerny said:

ஏன் 2000 ஆண்டில் தொங்கவேண்டும்?

மீண்டும் தனியே 2000 ஆண்டில் மட்டும் நீங்கள்தான் தொங்குகிறீர்கள்.

நான் கடைசி 75 ஆண்டில் அங்கே ஒரு நாடு உருவாகி விட்டதையும். அதில் 10 மில்லியன் பிரஜைகள் உள்ளதையும் கூடவே கணக்கில் எடுங்கள் என்கிறேன்.

4 hours ago, Maruthankerny said:

பந்தி பந்தியாக எழுதினால் உங்கள் KFC ஆனந்தபவன் ஆகிடுமா? 

இல்லை போண்டாக்கள் சைவ கடைக்கு வாக்களிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

நான் எங்கும் யூதர்களுக்கு நாடு தேவையில்லை என்று எழுதவில்லை ஆனால் அந்த கேடு கெட்ட பைபிளை 
வைத்து தொங்குவுதைதான் அநீதி என்கிறேன் ...... என்பதிலை அது அநீதி தான் 

நான் எங்கே பைபிளில் தொங்கினேன்? பைபிள் யேசுவின் பின்பு உருவான ஒரு நம்பிக்கை சேர் ஆவணம். அதற்கு அப்பாலும் ஆதாரம் உண்டு.

நிற்க - நீங்கள் ஏன் அப்போ யூதருக்கு நாடு வேண்டும் என சொல்கிறீர்கள்? நீங்கள் இப்படி சொல்ல அடிப்படை என்ன?

எந்த அடிப்படையில் எனிலும் - யூதர் அங்கே ஒரு நாட்டுக்கு பாத்திரமானவர் என்றால் - அதைத்தானே நானும் சொல்கிறேன்.

பைபிளில் தொங்கினால் என்ன, குர் ஆனில் தொங்கினால் என்ன, கீதையில் தொங்கினால் என்ன - யூதருக்கு நாடு வேணும் என்பதன் நியாயப்பாட்டை நீங்கள் ஏற்கிறீர்கள்தானே? பிறகு ஏன் சும்மா arguments for arguments sake?

இஸ்ரேல் மேற்கின் செல்லபிள்ளை என்பதாலா🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

எதன் அடிப்படையில்?  என்றால் நீதியின் அடிப்படையில்தான் 
கொலம்பஸுடன் வந்த ஐரோப்பியர்கள் செவ் இந்தியரை கொலைசெய்தார்கள் என்பதால் 
இன்று ஐரோப்பா எந்த திசையில் இருக்குறது என்று கூட தெரியாத ஒரு அமெரிக்கனை 
இங்கிருந்து வெளியேற சொன்னால் அவன் எங்கு போவான். முடிந்தவைகள் முடிந்துபோனவை 
அவைகள் இனி எழுதவும் வாசிக்கவும் பொழுதுபோக்கும் மட்டுமே உதவும் 

இப்போது நடப்பதும் (இனி நடக்க போவதும்) அதனால் பாதிக்கும் என்பதால் அதை நீதியின் படி செய்தலே 
முறைமை. அதன் அடிப்படியில் யூதர்கள் 4 தலைமுறையாக அங்கே வாழ்கிறார்கள் அவர்களுக்கு நாடு வேண்டும் என்பவர்களுக்கு எம் கண் முன்னேயே கொலை கொள்ளை அடடூழியம் செய்து விரட்டி அடிக்கப்படும் பலஸ்தீனியர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்பது தோன்றவில்லை என்பதில்தான் இங்கே முரண்பாடு. 

மேலே ஒருவர் வந்து பினாத்தி இருக்கிறார் .... அராபாத்தை கவுஸ் அரெஸ்டில் வைத்தே கொன்றபோது 93இல் சமாதானம் செய்தவர்கள் எல்லோரும் குழந்தைகள்? அவர்கள்தான் பின்பு வந்து புலிகள் விட்ட பிழைகளை திருத்தி தமிழ்ஈழம் அமைக்கும் முன்னணி தளபதிகள். செத்த பாம்புக்கு பல்லு தீட்டும் வீண் வேலைக்கு நாங்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அமெரிக்க ஐரோப்பாவுக்கு ஒரு நீதி ஆப்ரிக்க ரஸ்யாவுக்கு ஒரு நீதி கிறிஸதவர்களுக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு ஒரு நீதி என்று புத்துக்குள் தலை ஓட்டி வாழ பழகவில்லை 
முயற்சி செய்தேன் முடியவில்லை. இப்போதுகூட காசா மக்களுக்கு நடக்கும் அநீதிகளை பார்க்க இரத்த கொதிப்பே வருகிறது. மற்றவர்கள் போல ஏன் அவர்கள் சாகட்டும் என்று எண்ணிவிட்டு என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கலாமே  என்று என் மூளை சொல்கிறது .... முடியவில்லை. 

250  பேரை கொன்றவன் தீவிரவாதி என்று உலகமே கூச்சலிடுது 
ஒரு கொஸ்பிடலை குண்டுபோட்டே அதிலும் அதிகமானவர்களை கொன்றவனுக்கு 
அப்பாவிகளை கொல்வதுக்கு உரிமை இருக்கிறது என்கிறது. 

 "இஸ்ரேல் மேற்கின் செல்லபிள்ளை என்பதாலா🤣"

புரியவில்லை !

அநீதியின் வாழ்விடம் என்பதால் மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

நியாயம் இருபக்கமும் உள்ளது.

அநீதியும் இரு பக்கமும் உள்ளது.

எமது பிரச்சனை போல் அல்ல. இங்கே தீர்வு கூட என்ன என்ற தெளிவு இருக்கிறது.

அதை ஏற்கும்படி இரு தரப்பையிம் “பிடிச்சு தள்ளத்தான்” யாரும் தயார் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

மேலே ஒருவர் வந்து பினாத்தி இருக்கிறார் .... அராபாத்தை கவுஸ் அரெஸ்டில் வைத்தே கொன்றபோது 93இல் சமாதானம் செய்தவர்கள் எல்லோரும் குழந்தைகள்? அவர்கள்தான் பின்பு வந்து புலிகள் விட்ட பிழைகளை திருத்தி தமிழ்ஈழம் அமைக்கும் முன்னணி தளபதிகள். செத்த பாம்புக்கு பல்லு தீட்டும் வீண் வேலைக்கு நாங்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அமெரிக்க ஐரோப்பாவுக்கு ஒரு நீதி ஆப்ரிக்க ரஸ்யாவுக்கு ஒரு நீதி கிறிஸதவர்களுக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு ஒரு நீதி என்று புத்துக்குள் தலை ஓட்டி வாழ பழகவில்லை 
முயற்சி செய்தேன் முடியவில்லை. இப்போதுகூட காசா மக்களுக்கு நடக்கும் அநீதிகளை பார்க்க இரத்த கொதிப்பே வருகிறது. மற்றவர்கள் போல ஏன் அவர்கள் சாகட்டும் என்று எண்ணிவிட்டு என் வேலையை பார்த்துக்கொண்டிருக்கலாமே  என்று என் மூளை சொல்கிறது .... முடியவில்லை. 

250  பேரை கொன்றவன் தீவிரவாதி என்று உலகமே கூச்சலிடுது 
ஒரு கொஸ்பிடலை குண்டுபோட்டே அதிலும் அதிகமானவர்களை கொன்றவனுக்கு 
அப்பாவிகளை கொல்வதுக்கு உரிமை இருக்கிறது என்கிறது. 

😂அப்பிடியோ மருதர்? எப்போது இப்படி சமரசமற்ற மனிதாபிமானியாகவும், அநீதி கண்டு கொதிப்பவராகவும் மாறினீர்கள்?

ஏனெனில், "முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப் பட்டார்கள், அதனாலும் சிங்களவனின் குண்டுக்கு பெருமளவில் பலியானார்கள்" என்று நான் எழுதிய போது, உங்கள் பதிலில் மனிதாபிமானம் ஒழுகவில்லையே? உங்கள் துலங்கல் நினைவில் இல்லா விடில்  நினைவூட்ட ரெடியாக இருக்கிறேன் - அறியத் தாருங்கள்!

உங்கள் போன்ற கருத்தாளர்களின் பலஸ்தீன அனுதாபம் மட்டுமல்ல, உலக நீதி பற்றிய கருத்துக்களுக்கும் அடிப்படை மேற்கு வெறுப்பு என்ற உணர்வும், அந்த உணர்வுக்கு தீனி போடும் இணைய வழிச் சதிக்கதைகளும் மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.