Jump to content

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆதிவாசிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   20 OCT, 2023 | 01:34 PM

image

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை (21) பயணம் செய்யவுள்ளனர்.

IMG-20231018-WA0350.jpg

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு 21,22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

IMG-20231018-WA0345.jpgIMG-20231018-WA0344.jpg

யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/167363

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கையுள்ள சில இடங்களை நம் முன்னோர் வசித்த இடமென்று  சொல்லாமல் விட்டால்ல் சரி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Maruthankerny இனிமேல் பட்டு செவ்விந்தியர், அபொர்ஜிகளுக்கு நடந்த்தது அநியாயம் எண்டு கதையுங்கோ வச்சிகிறன் கச்சேரியை🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அங்கையுள்ள சில இடங்களை நம் முன்னோர் வசித்த இடமென்று  சொல்லாமல் விட்டால்ல் சரி..

ஏதோ ஒரு திட்டத்தோட தான்.......அல்வாய் எங்கடை இடம் எண்டு சொன்னால் என்ன செய்வியள்? 🤣

அல்வாய மருவி அல்வாய் ஆனது. :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஏதோ ஒரு திட்டத்தோட தான்.......அல்வாய் எங்கடை இடம் எண்டு சொன்னால் என்ன செய்வியள்? 🤣

அல்வாய மருவி அல்வாய் ஆனது. :cool:

இந்தமாதிரி நான் யோசிக்கவிலையே..நீங்கள் சொன்னதன் பின்தான் பயமாயிருக்கு..இங்கு நிறைய அரசமரம் இருக்கு.. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கோ, வாருங்கோ, உங்க... பலாலி ஏர்போர்ட் உள்ள இடத்தில தான் புத்தர் முதலில் வந்து றங்கினவராம். அங்கின, ஓடு பாதையில ஒரு புத்தரிண்ட சிலை ஒண்டை வச்சுப்போட்டு போங்கோ... நல்லா இருப்பியள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

வாருங்கோ, வாருங்கோ, உங்க... பலாலி ஏர்போர்ட் உள்ள இடத்தில தான் புத்தர் முதலில் வந்து றங்கினவராம். அங்கின, ஓடு பாதையில ஒரு புத்தரிண்ட சிலை ஒண்டை வச்சுப்போட்டு போங்கோ... நல்லா இருப்பியள்...

உவக்வைக்கும் புத்தருக்கு என்ன லிங்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உவக்வைக்கும் புத்தருக்கு என்ன லிங்?

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டு பாருங்கோ....அவை இங்கை வந்து பார்த்து...இந்த இடம் மூதாதையர் வாழ்ந்த இடமென்றால்...கிழிஞ்சுது போ...யூ டியூப் ஒன்றில் எமது பகுதியில் வேட்டையாடி தொழில் புரிபவர்கள்  என்று வடிவாக படம் காட்டினவை...அவையைத்தான் தேடிவந்தவையோ தெரியாது...சாட்டி வெள்ளைக் கடற்கரை நிலை வரக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹியங்கனை ஆதிவாசிகள் இன்று யாழ் விஜயம்

21 OCT, 2023 | 04:31 PM
image

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்று சனிக்கிழமை (21)  விஜயம் செய்துள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான குழுவினருக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. 

இரண்டு நாட்கள் யாழில் தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/167445

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

எல்லாம் ஒண்டுக்கை ஒண்டு பாருங்கோ....அவை இங்கை வந்து பார்த்து...இந்த இடம் மூதாதையர் வாழ்ந்த இடமென்றால்...கிழிஞ்சுது போ...யூ டியூப் ஒன்றில் எமது பகுதியில் வேட்டையாடி தொழில் புரிபவர்கள்  என்று வடிவாக படம் காட்டினவை...அவையைத்தான் தேடிவந்தவையோ தெரியாது...சாட்டி வெள்ளைக் கடற்கரை நிலை வரக்கூடாது.

இல்லை இவர்கள் சிங்களவர்கள் இல்லை. பெளத்தரும் இல்லை.

எமது நிலத்தை பிடிக்கும் ஆர்வமோ, எண்ணிக்கையோ, வலுவோ இல்லாதவர்கள்.

உண்மையில் இவர்களின் இருப்பு மிக முக்கியமானது.

ஏன் என்றால் - இலங்கை சிங்கள தீவு அல்ல என்பதற்கு வாழும் சாட்சியம் இவர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் குலதெய்வம் முருகனா?நல்லூரில் மாப்பிள்ளை வீட்டுக்கும் வருவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசிகள் நயினாதீவு சென்றனர்

22 OCT, 2023 | 06:17 PM
image
 
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு, நேற்றைய தினம் சனிக்கிழமை (21)  விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்றிருந்தனர். 

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினரே யாழிற்கு விஜயம் செய்துள்ளதுடன் இவர்கள் யாழின் முக்கிய இடங்களை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_7449.jpg

IMG_7445.jpg

IMG_7447.jpg

IMG_7450.jpg

https://www.virakesari.lk/article/167522

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆதிவாசிகள் குறூப்பில பெண்பிரசையள் ஒண்டையும் காணேல்லை? 🤣

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.