Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல்? : அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் பணிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து இன்று தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைவாக, சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் டயானா கமகே, “நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரித்தியேக மின்தூக்கிக்கு அருகில், என் மீது அத்துமீறலொன்று மேற்கொள்ளப்பட்டது.

சுஜித் பெரேரா என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரால் நான் தாக்கப்பட்டேன்.

சுமார் ஒன்றரை – இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையொன்றை நான் சபாநாயகரிடம் கோருகிறேன்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக நான் சட்டநடவடிக்கையொன்றையும் மேற்கொள்ளவுள்ளேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பெண்கள் தொடர்பாக பாரிய பிரச்சினையுள்ளது.

சுஜித் என்ற இந்த நபர், தனது மனைவி மீதும் தாக்குதல் நடத்துபவராகத்தான் இருக்க முடியும். அநாகரீகமான நபர்கள்தான் இவ்வாறு செயற்படுவார்கள்.

நாடாளுமன்றில் ஒரு உறுப்பினர் ஒருவர் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த முடியுமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏனைய பெண்கள் தொடர்பாக எதனை பேசுவார்கள்?

இந்தவிடயம் தொடர்பாக நிச்சயமாக விசாரணையொன்று அவசியமாகும். இதற்கெதிராக நான் வீதிக்கு இறங்குவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1355059

#################   ################  ###############

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார்.

இது குறித்து குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா சபையில் விளக்கமளித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “நான் தாக்குதல் நடத்தியதாக டயனா கமகே தெரிவித்தார். அப்படி எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை.

நான் கீழே இறங்கும்போது, அவர் அநாகரீகமான வார்த்தைகளால் ரோஹண பண்டார உறுப்பினருடன் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இதன்போது நான், அவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறினேன். இதனைப் பொருட்படுத்தாத அவர் என்மீது தாக்குதல் நடத்தினார்.

நான் அப்போது அந்தத் தாக்குதலை தடுக்க மட்டும்தான் முற்பட்டேன். இதுதொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டால் டயனா கமகே எவ்வாறு செயற்பட்டார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும் என கூறினார்.

இறந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, சபைக்குள் நாம் ஒரு கருத்தை கூறினால், அதுதொடர்பாக வெளியே கதைக்கக்கூடாது.

நான் அமைதியாக மின்தூக்கி அருகில் செல்லும்போது, டயனா கமகே கடுமையான வார்த்தைகள் தூற்றிக் கொண்டிருந்தார். நான் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் நகர்ந்தபோது, அவர் என் பின்பாக வந்து அநாகரீகமான வார்த்தைகளால் என்னை தூற்றினார்.

பெண் உரிமை தொடர்பாக கதைக்கிறோம். அதேநேரம், பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் கதைக்க வேண்டும்.

நாடாளுமன்றில் நடந்த பிரச்சினையை வெளியே கொண்டு சென்றதே தவறாகும். ஆண்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்” என கூறியிருந்தார்.

https://athavannews.com/2023/1355076

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் : புதனன்று விசாரணை

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் : புதனன்று விசாரணை.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் புதன்கிழமை கூடவுள்ளது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தினுள் காரசாரமான விவாதம் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவால் தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த சமத்துவம் தொடர்பாக விசாரணை நடத்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவில் பிரதி சபாநாயகருக்கு மேலதிகமாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை குழுவில் இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தக் குழு கூடவுள்ளது.

https://athavannews.com/2023/1355262

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி உறுதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த வரைவை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, நாடாளுமன்றத்தின் ஒழுக்கம் மற்றும் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்தின் நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1355239

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றத்தில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் மரியாதை, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

IMG-4931.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

IMG-4931.jpg

கவி அருணாசலம்... நீங்கள் வரைந்த ஓவியத்தில் உள்ள கையில்,
ஒரு சீலை தலைப்பை நாசூக்காக வரைந்த, உங்கள் குசும்பை ரசித்தேன். 😂 பாவம் டயானா கமகே. 

தமிழ்நாட்டு சட்ட சபையிலும்.... ஜெயா அம்மையாரின் சீலையை உருவிய சம்பவம் நடந்தது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம்... நீங்கள் வரைந்த ஓவியத்தில் உள்ள கையில்,
ஒரு சீலை தலைப்பை நாசூக்காக வரைந்த, உங்கள் குசும்பை ரசித்தேன். 😂 பாவம் டயானா கமகே. 

தமிழ்நாட்டு சட்ட சபையிலும்.... ஜெயா அம்மையாரின் சீலையை உருவிய சம்பவம் நடந்தது. 🙂

அந்தம்மா, அதை முதலீடா வைச்சு, முதல்வர் ஆகினாங்க!

இந்தம்மா, ஆண்மையற்றவன் என்று பொருள்படும், பொன்ன என்று திட்டினால், திட்டு வாங்கியவர், கையை நீட்டுவார் தானே! 

அக்கா, மட்டக்கிளப்பு தூசணப் பிக்கருகு றப் கொடுப்பா எண்டு உடான்சர் சொல்லுறார்.

இருந்தாலும், அக்கா, கஞ்சா வெவசாய உற்பத்திக்கு கடுமையா உழைக்கிறா என்ற படியால, அவோவை, ஆஸ்பத்திரீல படுக்க வைச்சது பிழை தான்.

இருந்தாலும், கழுத்தில கைய வைச்சு போ அங்கால, தள்ளினத்துக்கே போய் கட்டெல்லாம் போட்டுப் படுத்ததால, தள்ளினவர் பொன்ன அல்ல எண்ட முடிவுக்கு வரலாம்.

வாக்கா, பொங்காம எண்டு கூட்டிக் கொண்டு போன நம்ம சாணக்கியன் தான், ஆஸ்பத்திரீல படுக்கிற ஐடியா கொடுத்திருப்பாரோ 🤔😂🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Nathamuni said:

வாக்கா, பொங்காம எண்டு கூட்டிக் கொண்டு போன நம்ம சாணக்கியன் தான், ஆஸ்பத்திரீல படுக்கிற ஐடியா கொடுத்திருப்பாரோ 🤔😂🤣

அந்த இடத்துக்கு சாணக்கியன் சார் வந்திருக்காட்டில் நடக்கிற கதையே வேறை.....🤣 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அந்த இடத்துக்கு சாணக்கியன் சார் வந்திருக்காட்டில் நடக்கிற கதையே வேறை.....🤣 

தள்ளுப்பட்டு களைத்த டயானா செல்லத்தை கட்டித் தழுவி ஆறுதல்படுத்தும் சாணக்கியன்!! முழுமையான அடிபாட்டுக் காட்சிகள்!!

இப்படி ஒரு தமிழ் பத்திரிக்கையும் தலையங்கம் இட்டுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அந்தம்மா, அதை முதலீடா வைச்சு, முதல்வர் ஆகினாங்க!

இந்தம்மா, ஆண்மையற்றவன் என்று பொருள்படும், பொன்ன என்று திட்டினால், திட்டு வாங்கியவர், கையை நீட்டுவார் தானே! 

அக்கா, மட்டக்கிளப்பு தூசணப் பிக்கருகு றப் கொடுப்பா எண்டு உடான்சர் சொல்லுறார்.

இருந்தாலும், அக்கா, கஞ்சா வெவசாய உற்பத்திக்கு கடுமையா உழைக்கிறா என்ற படியால, அவோவை, ஆஸ்பத்திரீல படுக்க வைச்சது பிழை தான்.

இருந்தாலும், கழுத்தில கைய வைச்சு போ அங்கால, தள்ளினத்துக்கே போய் கட்டெல்லாம் போட்டுப் படுத்ததால, தள்ளினவர் பொன்ன அல்ல எண்ட முடிவுக்கு வரலாம்.

வாக்கா, பொங்காம எண்டு கூட்டிக் கொண்டு போன நம்ம சாணக்கியன் தான், ஆஸ்பத்திரீல படுக்கிற ஐடியா கொடுத்திருப்பாரோ 🤔😂🤣

டயானா கமகே.... சுவிற்சலாந்தில் வசித்து, 
வெளிநாட்டு வதிவுரிமையையும் பெற்று உள்ள பெண் கொஞ்சம்  பண்பான 
பழக்க வழக்கத்துடன்  இருக்கும் என்று பார்த்தால்.... 
"சொர்ணாக்கா"  ரேஞ்சிலை பிச்சு உதறுது. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

டயானா கமகே.... சுவிற்சலாந்தில் வசித்து, 
வெளிநாட்டு வதிவுரிமையையும் பெற்று உள்ள பெண் கொஞ்சம்  பண்பான 
பழக்க வழக்கத்துடன்  இருக்கும் இருக்கும் என்று பார்த்தால்.... 
சொர்ணாக்கா ரேஞ்சிலை பிச்சு உதறுது. 😂

சுவிற்சலாந்தில்??

London!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சுவிற்சலாந்தில்??

London!!!

நான் எங்கோ வாசித்ததில் அவர் சுவிற்சலாந்து என்று இருந்த நினைவு. 
அது தவறு என்று இப்போ தெரிந்தது.
விக்கிபீடியாவிலும்  லண்டன் என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

👉 https://en.wikipedia.org/wiki/Diana_Gamage 👈

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

நான் எங்கோ வாசித்ததில் அவர் சுவிற்சலாந்து என்று இருந்த நினைவு. 
அது தவறு என்று இப்போ தெரிந்தது.
விக்கிபீடியாவிலும்  லண்டன் என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

👉 https://en.wikipedia.org/wiki/Diana_Gamage 👈

சுவிஸ் பா(ர்)ட்டி, கீதா குமாரசிங்க(ம்)

கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயப்படுத்திக் கொள்பவர்களைத்தான் சாணக்கியர்கள் என்று அழைப்பர்.

சாணக்கியன் எம் பி பெயருக்கு ஏற்றாப்போல் இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இந்தம்மா, ஆண்மையற்றவன் என்று பொருள்படும், பொன்ன என்று திட்டினால், திட்டு வாங்கியவர், கையை நீட்டுவார் தானே! 

அப்படி சொன்னால் நீட்ட வேண்டியது கையை அல்ல……

மானநஸ்ட வழக்கு பத்திரத்தை🤣🤣🤣.

9 hours ago, Nathamuni said:

அக்கா, மட்டக்கிளப்பு தூசணப் பிக்கருகு றப் கொடுப்பா எண்டு உடான்சர் சொல்லுறார்.

நான் என்ன வீகே இராமசாமியா? வெ.ஆ மூர்த்தியா ?  இப்படி டபிள் மீனிங்ல கதைக்க🤣.

டஃப் (tough) கொடுப்பா எண்டுதான் சொன்னான். ரஃப் (rough) கொடுப்பா என்றல்ல🤣.

6 hours ago, தமிழ் சிறி said:

நான் எங்கோ வாசித்ததில் அவர் சுவிற்சலாந்து என்று இருந்த நினைவு. 
அது தவறு என்று இப்போ தெரிந்தது.
விக்கிபீடியாவிலும்  லண்டன் என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள்.

👉 https://en.wikipedia.org/wiki/Diana_Gamage 👈

வாய் இந்தளவு நீளேகிளயே லண்டன் எண்டு கண்டுபிடிச்சிருக்க எல்லே வேணும்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

வாய் இந்தளவு நீளேகிளயே லண்டன் எண்டு கண்டுபிடிச்சிருக்க எல்லே வேணும்🤣

லண்டன்லை என்ன மாதிரி எல்லாருக்கும் வாய் நீளமோ?🤣 எண்டாலும் பொது வெளியிலை ஆணோ பெண்ணோ வாயடக்கம் முக்கியம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

லண்டன்லை என்ன மாதிரி எல்லாருக்கும் வாய் நீளமோ?🤣 எண்டாலும் பொது வெளியிலை ஆணோ பெண்ணோ வாயடக்கம் முக்கியம். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?😎

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.  

👆🏼💯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of road and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

வாய் இந்தளவு நீளேகிளயே லண்டன் எண்டு கண்டுபிடிச்சிருக்க எல்லே வேணும்🤣

லண்டன் ஆட்களில்...  பொண்ணுங்க  வாய்தான் நீளம் என்பது எனது அபிப்பிராயம். 😂
ஆம்பிளை பசங்க ஓகே. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and smiling

May be an image of 6 people and text that says 'அமைச்சரை தாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டயனா! Aඅ BREAKING NEWS'

  • கருத்துக்கள உறவுகள்

393734149_3519283028402193_8111845980402

இந்த அம்மாவை பலாத்காரம் செய்யிற மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

டயானா கமகே மீதான தாக்குதல்: குழு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறது

பாராளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு, இன்று சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, நவம்பர் 6ஆம் திகதி சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையிலான குழு இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது. இதில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பெண் எம்.பி.க்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டதுடன், அவர்களும் நவம்பர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைகள் முடிந்து அடுத்த அமர்வின் போது குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் சபையின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதால், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது என்றார்.

https://thinakkural.lk/article/278559

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.