Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுக்கு அனுமதி I இலங்கையின் 'தற்கொலை' முயற்சி I 'புலி'களை விழுங்கிய டிராகன் I Major Madhan I கோலா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் துரோகங்கள் ஈழத்தமிழர்களுக்கு நன்றாகப்புரியும். இப்ப சீனாவைக்காட்டி தமிழர்களைப்ப் பேய்க்காட்ட வேண்டாம். இந்தியாவின் தவறான வெளியுறவுக்கொள்கையின் தோல்வியே இன்றைய சீனாவின் சுற்றிவளைப்பு. புலிகள் இருந்தவரையில் இலங்கை இந்தியக்கடற்பரப்பில் சீனாவே,அமெரிக்காவோ யாரும் உள்நுழைய முடியவில்லை. புலிகளை அழித்து தனக்குத்தானே மண்ணை அள்ளிப்போட்டது.இந்தியா. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் தோல்வி இந்தயாவைச்சுற்றியுள்ள நாடுகளை இந்தியாவுக்கு பகைநாடுகளாக்கி வைத்திருக்கின்றன.இந்தியா வேடம் பேட வேண்டாம். இநதியாவின் வெளியுறவுக்கொள்கையை மற்றாகக் கலைத்து மலைiயாளிகளை வெளியேற்றி தமிழர்களை வெளியுறவுத்துறைக்கு புதுஇரத்தம் பாய்ச்ச வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர் மாவீரர் தின உரை 2008 விடுதலை புலிகள் தலைவர் உத்தியோகபூர்வமாகவும், இறுதியாகவும் தமிழ் மக்களிற்கும் உலகிற்கும் கூறிய தகவல்கள் என எடுக்கலாமா?

இந்த உரையில் இந்தியாவுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. 

1987 இல் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாட்டிற்கும் 2008 இல் அவரது நிலைப்பாட்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அவதானிக்க முடிகின்றதா?

இந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் கட்டுப்பட்டு இயங்க விடுதலை புலிகள் இயக்கம் அதிகளவு மசிந்து கொடுக்க முன் வந்தது எனலாமா?

மாவீரர் தின உரை 2008 இல் இந்தியா பற்றி எடுக்கப்பட்ட நிலைப்பாடு பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்த நிலைப்பாடே எதிர்காலத்திற்கான வியூகமாக எடுக்கப்படலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை அவதானிக்க 🥤🍿உடன் நானும் ரெடி 🤣
 
பிகு

🍌🩼

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலந்துரையாடல்.. ஹிந்தியா எவ்வளவு பீதியில் இருக்கிறது என்பதற்கு சாட்சி.

இதுவே ஈழத்தமிழினத்திற்கு சரியான தருணம். நாம் சீனாவோடு உறவுகளை நெருக்கங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்சியா போன்ற மேற்குலக போட்டியாளர்களோடும் நாம் உறவுகளைப் பலப்படுத்துவதோடு.. அவர்கள் மூலம் பெறக் கூடிய நம்பகத்தன்மை.. பொருண்மிய நன்மைகளை எமதாக்க வேண்டும்.

இதன் மூலம்.. எம்மை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று நினைக்கும் ஹிந்தியா.. அமெரிக்கா.. மற்றும் மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு எனியும்.. தமிழர்களை ஏமாற்றி பிழைக்க முடியாது.. தமிழர்களின் இருப்பை.. நிலத்தை பலப்படுத்தாமல்... சிங்கள பெளத்த ஆளும் வர்க்கம் இழுத்து வரும்.. சீன அச்சுறுத்தலை.. மேற்குலகுக்கு எதிரான.. அச்சுறுத்தல்களை.. சந்திக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அவர்கள் அதனை உணர மறுத்தால்.. சீன ஆதரவு என்பதை தமிழர்கள் கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை உணர்த்த வேண்டும். அதற்கான அணுகுமுறைகள்.. சீன ஆதரவு அரவணைப்பை முதலீட்டை தேடுதல் போன்றவை ஈழத்தமிழ் அரசியல்.. பொருண்மிய களத்தில் இப்போ அவசிய தேவையாக இருப்பதோடு.. ஹிந்தியா தொடர்ந்து எம்மை ஏமாற்றி வருவதை எனியும் செய்ய முடியாது என்ற செய்தியை ஹிந்தியாவுக்கு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மேசர் மதன் சீனாவால்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் காட்டிக்கொடுக்கப்பட்டன என்று தட்டை மாற்றிப்போட்டு, இந்தியாவை காப்பாற்ற நினைக்கலாம். இது tiktok இந்தியர்களிடம் எடுபடலாம், இலங்கைத் தமிழர்களிடம் அல்ல.

இன்னும்  10-15 வருட.ங்களில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் தனித்துவம் இழக்கப்பட்டு, நாடு முற்றுமுழுதாக சிங்களத்தின் கைகளுக்குப் போய் இருக்கும். அப்போது பங்களாதேஷ், மாலைதீவு, இலங்கை, பாகிஸ்தான் முற்றுமுழுதாக சீனாவின் கைகளுக்குள் சென்றிருக்கும்.

அப்போது, இலங்கைத் தமிழர்களைக் காட்டி சிங்களம்த்தைப் பூச்சாண்டி காட்டும் நிலையில் இலங்கை இருக்கப்போவதில்லை.   பாவம் இந்தியா. 😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இதுவே ஈழத்தமிழினத்திற்கு சரியான தருணம். நாம் சீனாவோடு உறவுகளை நெருக்கங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்சியா போன்ற மேற்குலக போட்டியாளர்களோடும் நாம் உறவுகளைப் பலப்படுத்துவதோடு.. அவர்கள் மூலம் பெறக் கூடிய நம்பகத்தன்மை.. பொருண்மிய நன்மைகளை எமதாக்க வேண்டும்.

இங்கு நாம் என்றால் யார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பா?

நாடு கடந்த தமிழீழ அரசா?

வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களா?

வெளிநாட்டு தமிழ் பிரபலங்களா?

சீனா, ரஷ்யா கணக்கில் இலங்கை

தமிழர்கள் எங்கே வைக்கப்பட்டு உள்ளார்கள்?

இவை இலங்கை அரசின் நலன்களுக்கு எதிராக என்றாவது செயற்படும் என எதிர்பார்க்கின்றீர்களா?

நடைமுறை சாத்தியமான விடயங்களை அலசி பார்க்கலாமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கு இலங்கை சம்பந்தமாக ஒரு மண்ணாங்கட்டி நிகழ்ச்சி நிரலும் இல்லை என்றே தோன்றுகிறது.

காரணம்...

2009 க்கு முதல் நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும்.
இல்லையேல்
2009க்கு பின்னராவது நல்ல முடிவை எடுத்திருக்க வேண்டும்....அதாவது இலங்கையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அரிசிக்கும் பருப்பிற்கும் கிந்தியன நம்பி நடுத்தெருவில் நிண்டதுதான் மிச்சம்.. ஒழுங்கான தமிழ்நாட்டு அரசு இருந்திருந்தால்  மலையக தமிழரையாவது கண்கலங்காமல் பார்த்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்தியாவுக்கு இலங்கை சம்பந்தமாக ஒரு மண்ணாங்கட்டி நிகழ்ச்சி நிரலும் இல்லை என்றே தோன்றுகிறது.

நான் இந்தியாவுக்கு உலகில் தன் வகிபாகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற தெளிவு கூட இருக்கிறதா என யோசிப்பேன்.

இந்தியா முதலில் தன்னை அடுத்த வல்லரசாக, இந்த நூற்றாண்டு இந்திய நூற்றாண்டு என கனவு காண்பதை விட வேண்டும்.

ஜெய்சங்கர் உலக மேடைகளில் பேசுவதை கேட்டு சங்கிகள் பரவசம் அடையலாம், ஆனால் யதார்த்தம் வேறு.

மேற்கின் முகவரா? சீனாவின் அடிமையா என்பதுதான் இந்தியாவின் முன் உள்ள கேள்வி.

நானும் ரவுடிதான் மேற்கு, சீனாவுக்கு நாமும் நிகர் என கிளம்பினால் - சைனாவின் அடிமையாவதிலேயே முடியும். இப்போ அயலில் சீனா கொடுக்கும் நெருக்கம் மாறி மாறி நடக்கும். ஒருக்கா சீனாவின் கை ஓங்கும், பின் இந்தியாவின் கை ஓங்கும்.

முன்பு மத்திய ஆசியாவில் ரஸ்ய பேரரசும், பிரிட்டிஷ் பேரரசும் ஆடிய The Great Game எனப்படும் இராஜதந்திர கண்ணாமூச்சி ஆட்டம் போல. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நம்ம கருத்தும் அதே ....................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

நம்ம கருத்தும் அதே ....................

வாவ்…பெரும்ஸ். கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

வாவ்…பெரும்ஸ். கண்டது சந்தோசம்.

பாஸ்வேர்ட் மறந்து விட்டது கொஞ்சமுதல்தான் நிழலியரிடம் வாட்சப்பில் பிடிக்க எதையோ தூசு தட்டிக்கொண்டு இருகிறன் றி செட் பண்ணி அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னது மட்டும் அல்லாது உடனே அனுப்பி விட்டார் .

5 hours ago, Kapithan said:

மேசர் மதன் சீனாவால்தான் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் காட்டிக்கொடுக்கப்பட்டன என்று தட்டை மாற்றிப்போட்டு, இந்தியாவை காப்பாற்ற நினைக்கலாம். இது tiktok இந்தியர்களிடம் எடுபடலாம், இலங்கைத் தமிழர்களிடம் அல்ல.

இந்த கருத்துக்காகவே இங்கு அவசரமாய் பதில் எழுத வேண்டிய தேவை  கடைசியாக அவுசுக்கு பக்கத்தில் முழ்கடிக்க பட்ட கப்பல் இடம் காட்டி  கொடுக்க பட்டது  சீனா வேதான் அதை தவிர வேறு ஒன்றும் இல்லை .வந்ததும் மட்டுக்கு வேலை கொடுக்கிறான் என்று மட்டுக்கள் பொறுமை இழக்கும் முன் ஓடி செல்வது மேல் என்று நினைக்கிறேன் ..........................நிறைய பாதியில் நிற்குது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை முன்பகுதி இந்திய அமெரிக்க அரசுகள் பின்பகுதி சீனன் ஆக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

இந்த கருத்துக்காகவே இங்கு அவசரமாய் வர வேண்டிய தேவை கடைசியாக அவுசுக்கு பக்கத்தில் முழ்கடிக்க பட்ட கப்பல் இடம் காட்டி  கொடுக்க பட்டது  சீனா வேதான் அதை தவிர வேறு ஒன்றும் இல்லை .

சரி, உங்கள் வழிக்கே வருவோம். 

விடுதலைப்போராட்டத்தை இந்தியா, EU, USA, Japan, china  இசுரேல்..... ....என எல்லோரும் எங்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தால்,

எங்கே நாங்கள் தவறிழைத்தோம்........?

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சரி, உங்கள் வழிக்கே வருவோம். 

விடுதலைப்போராட்டத்தை இந்தியா, EU, USA, Japan, china  இசுரேல்..... ....என எல்லோரும் எங்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தால்,

எங்கே நாங்கள் தவறிழைத்தோம்........?

இப்பத்தான் உள்ளே வந்தேன் அதுக்குள் ........................கடைசியாக மூழ்கடிக்க பட்ட அந்த இரண்டு கப்பல்கள் பற்றித்தான் கதை கடைசி கப்பல் கதை இன்னும் புதிர்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

சரி, உங்கள் வழிக்கே வருவோம். 

விடுதலைப்போராட்டத்தை இந்தியா, EU, USA, Japan, china  இசுரேல்..... ....என எல்லோரும் எங்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தால்,

எங்கே நாங்கள் தவறிழைத்தோம்........?

வந்தும் வராததுமாய் கொஞ்சம் பொறுங்க இரண்டு நாள். பகிடிக்குத்தான் குழப்படி பயல்  நானில்லா பள்ளிகூடம் எப்படி இருக்கெண்டு பார்த்து விட்டு பதில் சொல்கிறேன் .

😀😃

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

வந்தும் வராததுமாய் கொஞ்சம் பொறுங்க இரண்டு நாள். பகிடிக்குத்தான் குழப்படி பயல்  நானில்லா பள்ளிகூடம் எப்படி இருக்கெண்டு பார்த்து விட்டு பதில் சொல்கிறேன் .

😀😃

வணக்கம் பெருமாள் கன காலத்திற்கு பின்பு கண்டது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நிறைய பாதியில் நிற்குது

என்ன வேலையா? அல்லது சமையலா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன வேலையா? அல்லது சமையலா?

அனுபவஸ்த்தர் வேறு எங்கு சமையலில்தானுங்க 😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பெருமாள் கன காலத்திற்கு பின்பு கண்டது மகிழ்ச்சி.

நன்றி அண்ணா .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2023 at 18:56, nedukkalapoovan said:

இந்தக் கலந்துரையாடல்.. ஹிந்தியா எவ்வளவு பீதியில் இருக்கிறது என்பதற்கு சாட்சி.

இதுவே ஈழத்தமிழினத்திற்கு சரியான தருணம். நாம் சீனாவோடு உறவுகளை நெருக்கங்களை அதிகரிக்க வேண்டும். ரஷ்சியா போன்ற மேற்குலக போட்டியாளர்களோடும் நாம் உறவுகளைப் பலப்படுத்துவதோடு.. அவர்கள் மூலம் பெறக் கூடிய நம்பகத்தன்மை.. பொருண்மிய நன்மைகளை எமதாக்க வேண்டும்.

தமிழர்கள் இந்தியாவுடன் மட்டும் பேசுவதை விடுத்து சீனாவுடன் சமாந்தரமான அரசியல்செய்ய வேண்டும். எமக்கு யார் குற்றியும் அரிசியாக வேண்டும். உலகமகா யுத்தத்தின் போது யூதர்கள் 2 அணிகளிலும் இணைந்து போரிட்டார்கள். யார் வென்றாலும் அவர்களின் இலக்கு தங்களுக்கான தனிநாடு ஒன்றைப் பெற்றுக் கொள்வதே 2 அணிகளிலும் இருந்த யூதர்களின் நிலைப்பாடாகவும் இருந்தது.நாமும் 2 அணிகளிடமும் சமாந்தரமாக பேசினால் என்ன?அதுவும் சீனா எங்களைத் தேடி வரும்பொழுது நாங்கள் அதனை எமக்குச்சாதமாகப் பாவிக்க வேண்டும். 

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.